Sunday, 23 January 2022

கள் இறக்கும் (கள்ளுச் சீவும்) தொழில்

கள் இறக்கும் (கள்ளுச் சீவும்) தொழில் 

அருண் சித்தார்த் ஆகிய நான் யாழ்ப்பாணத்தில் கள் இறக்கும் (கள்ளுச் சீவும்) தொழில் புரிந்த பாட்டன்களின் பேரனாவேன். எனது குலத்தை “நளவர்” என்றார்கள். எனது பாட்டன் ‘கள்’ இறக்கும் தொழில் புரிந்த ஒரேயொரு காரணத்துக்காக நான் யாழ் மேட்டுக்குடி சமூகத்தால் தாழ்த்தப்பட்டவனானேன்.  கள்ளுச் சீவும் சீவல் தொழிலாளியின் பேரன் எனும் காரணத்துக்காக தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகள் என்னை தமக்குச் சரிசமமாக அமர்த்தி பேச மறுத்தனர். எனது திறமைகளை சிறுமைப்படுத்தினர். நின்று கொண்டு கைகட்டி, வாய் பொத்திப் பேசத் தயாரில்லாதவருக்கு தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இடம் இல்லையென்றனர்.. 2015 ஆம் ஆண்டு இன்றைக்கு 7 வருடங்களுக்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுமந்திரன் முன்னிலையில் TILKO தனியார் விடுதியில் இடம்பெற்ற ஒரு அரசியல் கருத்தரங்கில் எனது சாதியைக் குறிப்பிட்டு என்னை அவமானப்படுத்தினர். அன்று நான் கண்ணீர் மல்க அச்சபையைவிட்டு தலைகுனிந்து வெளியேறினேன். 

ஆனால் 2019 ஜனாதிபதி தேர்தல் சமயம் யாழ் வந்த பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ முன்னிலையில் JETWING தனியார் விடுதியில் யாழ்ப்பாணத்தின் பிரபலமான தனவந்தர்கள், மேட்டுக்குடிகள், புத்திஜீவிகள் கைகட்டி வாய்பொத்தி அவரது அழைப்பிற்காக காத்திருந்த போது அங்கு சென்ற என்னை மட்டும் உடனும் அழைத்து தனக்குச் சரிசமமாக என்னை அமர்த்தி கதை பேசினார்.

அன்றிலிருந்து இன்றுவரை அவர் என்னை நிற்க வைத்துப் பேசுவதில்லை. என்னைக் கண்டால் தனது மைந்தனைப் போல வாஞ்சையுடன் அருகில் அழைத்து தனக்குச் சமமாக இருக்கையில் அமர்த்தியே கதை கேட்பார். கற்றோரையும் மற்றோரையும் நிகரெனக் கொள்பவனே ஆட்சியாளன். 

“அழியாத துயர் என் குலத்தின் துயர். ஆற்றாது அழுத கண்ணீர் யுகயுகங்களைத் தன்னந்தனியாக கடந்து செல்லும். தனக்கான வாளையும் வஞ்சினத்தையும் அது கண்டடையும் . இன்று நான் என் இனத்தவர்க்கு, ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டவர்க்கு வாக்களிக்கிறேன். “உங்கள் வஞ்சத்தை நான் தீர்ப்பேன்.” எமக்கான சாம்ராஜ்யத்தை நாமே உருவாக்கிக் கொள்வோம். ஒடுக்கப்படும் தாழ்த்தப்படுபவர்களே ஒன்று சேருவோம்.

——- அருண் சித்தார்த் 

“ பார்த்தா , இது என் அறைகூவல். நீ வீரனென்றால் என்னுடன் விற்போருக்கு வா”என்றான் கர்ணன். 

கிருபர் கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் வந்தார். “இளைஞனே இவன் சந்திரகுலத்தவன். குருவம்சத்து பாண்டுவின் மைந்தன். யாதவ அரசி குந்தியின் மகன். நீ யார்? உன் பெயர் என்ன? உன் குலம் என்ன? என்றார்.

“நான் குதிரைச்சூதன் அதிரதனின் மகன் வசுஷேணன் “ என்றான் கர்ணன்.

பந்தலில் இருந்து தாவிக் களத்தில் குதித்த பீமன் அங்கே நின்றிருந்த வீரனொருவனிடமிருந்த குதிரைச் சவுக்கை பிடுங்கியபடி கர்ணனை நோக்கிச் சென்று அதை அவன் முகத்தை நோக்கி வீசினான். “சூதன் மகனே , போ ! உன் இடம் குதிரைக் கொட்டில். உன் படைக்கலம் சவுக்கு. சென்று உன் பணியைச் செய். ஷத்ரியர்களுடன் போருக்கு வராதே இழிபிறவியே ! உன்மேல் குதிரை மலம் நாறுகிறது அற்பா. சென்று நீராடி வா. இப்பிறவி முழுக்க மும்முறை நீராடு அடுத்த பிறவியில் வில்லுடன் வா. இப்போது வெளியேறிப் போ. என்றான்

குருகுலத்து ஆசிரியர் துரோணாச்சாரியார் முன்னே வந்தார்.

“ சீ .. நீசா.! நாணமில்லையா உனக்கு? குலமும் கல்வியும் இல்லாத வீண்மகனாகிய நீ எத்துணிவில் களம் புகுந்தாய்? எந்த நம்பிக்கையில் ஷத்ரியனை நோக்கி அறை கூவினாய்? இழிகுலத்தவனே.! என்றார்.

கர்ணனின் கைகள் சரிந்தன. அவன் தலை முதன்முறையாக குனிந்தது. இமைகள் இருமுறை அதிர விழிநீர்த்துளிகள் ஒளியுடன் சொட்டின. அவன் வெளியேறுவதற்காகத் திரும்பினான்.

“கர்ணா நில் “ என்று துரியோதனன் உரக்கக் கூவினான்.

“பிதாமகரே ! குருநாதரே ! இவன் மாவீரன். சிம்மம் தன் வல்லமையாலேயே காட்டரசனாகிறது. இவன் நுழையமுடியாத எந்தச் சமர்களமும் இப்புவியில் இருக்க முடியாது. இதோ இங்கேயே இவனுக்கு நான் மண்ணுரிமை அளிக்கிறேன். “அமைச்சரே என்று திரும்பினான் துரியோதனன். விதுரர் எழுந்து அருகே வந்து இளவரசே என்றார். “இவனை இக்கணமே நான் மன்னனாக்க விழைகிறேன்.” என்றான் துரியோதனன்.

“அங்கநாட்டரசன் சத்யகர்மன் கப்பம் முடங்கினான் அரசே “என்றார் விதுரர்.

“மூவேதியரும், குலமூதாதையரும் , கங்கை நீரும், அரிசியும், மலரும், மணிமுடியும் இப்போதே இங்கே வரட்டும்.” என்றான் துரியோதனன். 

அரண்மனைக் கருவூலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட மணிமுடியை துரியோதனன் எடுத்து கர்ணனின் தலையில் வைத்தான். “ இவன் இன்று முதல் என் தமையன். வசுஷேணனாகிய கர்ணன் , இதோ மண்ணும் விண்ணும் சான்றுரைக்க அங்க நாட்டுக்கு அரசனாக மணிசூடுகின்றான். தேவர்கள் அருள்க! குலதெய்வங்கள் அருள்க !” என்று கூவினான் துரியோதனன்.

அப்போது குதிரைக்கொட்டிலுக்குச் செல்லும் பாதை வழியாக குதிரைச்சாணம் படிந்த அழுக்கு உடையும் கையில் சவுக்குமாக அதிரதன் பதறியபடி ஓடி வந்தான். 

“யார் அது “ என்று பீஷ்மர் கேட்டார்.

“இவர் என் தந்தை அங்க நாட்டு ரதமோட்டியான அதிரதர்” என்றான் கர்ணன். “தந்தையே இந்நாளில் உங்கள் மைந்தனை வாழ்த்துங்கள், என்று கூறியபடி கர்ணன் நெற்றியும் , மார்பும் , தோள்களும் புழுதியில் பட அவர் முன் விழுந்து அவரது புழுதியும் , சேறும் படிந்த முதிய கால்களை வணங்கினான். “பிதாமகரே , என்றும் நான் இவரது மைந்தனாகவே அறியப்படுவேன். இவரது பாவ புண்ணியங்களுக்கே மரபுரிமை கொள்வேன்.” என்றான் கர்ணன்.

“பிடரி மயிர் சூடிய நாய் சிம்மமாகாது சுயோதனா.” என்று துரியோதனனைப் பார்த்து பீமன் கூவினான். 

“இந்தச் சொற்களுக்காக என்றோ ஒருநாள் நீயும் உன் உடன் பிறந்தாரும் களத்தில் குருதியை அளிப்பீர்கள்.” என்றான் துரியோதனன் சினத்துடன்.

தருமனிடன் திரும்பிய பீமன் “கிளம்புங்கள் மூத்தவரே, அர்ஜுனா வா , இனி நாம் இங்கிருக்க வேண்டியதில்லை.”எனக் கூறி அவர்களுடன் வெளியேறினான். 

தலைகுனிந்து சென்று கொண்டிருந்த அர்ஜுனனிடம், “ பார்த்தா இன்று அந்த முதுசூதன் சம்மட்டியுடன் களத்துக்கு வந்த போது , கர்ணனின் இடத்தில் என்னை வைத்து நடித்துக் கொண்டிருந்த நான் ஆழத்தில் கூனிச் சுருங்கினேன். ஆனால் அவன் ஒருகணம் கூட அவரை நிராகரிக்கவில்லை. அந்தப் பேரவையில் அவன் பாத்தூளியை தலையிலணியச் சற்றும் தயங்கவில்லை. அஸ்தினபுரியின் இளவரசனாகவும், அங்க நாட்டின் அரசனாகவும் அறிவிக்கப்பட்டவன் சூதனின் மைந்தனாகத் தன்னை முன் வைத்தான். அக்கணத்தில் விண்ணில் தேவர்கள் அவன் மேல் மலர் சொரிந்து விட்டார்கள்.”

“ தன் அறத்தால் இச்சூதன் மகன் நம்மை நிரந்தரமாக வென்று செல்வான் தம்பி”

என்றான் தருமன்.

එදා දෙමළ ජාතික දේශපාලකයන් මා අඩු කුලේ බව පවසමින් කොන් කර දමන ලදී. සමහර අවස්ථා වල ප්‍රසිද්ධියේම මාගේ කුලය ඈදාගනිමින් අවමන් කරද්දී මා අසරණව බිම බලාගෙන ගිය අවස්ථා ඇත. යාපනයේ බහුතරය මේ ඔවුන් කියනා කුලයෙන් හීනයැයි සම්මත පිරිසයි.

එදා 2015 ජනාධිපතිවරණ සමයේ ඔහු නැවතීස සිටි හෝටලයේදී මා එහි සිටිනවා දුටු මහින්ද රාජපක්ෂ නම් ඒ සොදුරු මිනිසා මා ලගට කැදවා ඔහු අසලින් වාඩිකරවාගෙන ඔහු සමග ආහාර ගැනීමට ආරාධනා කරන ලදී. කුලය නිසා එදා යාපනයේ දෙමළ දේශපාලකයන් එක වේදිකාවකටවත් නග්ගවා නොගත් මා හට එය ඉතා සංවේදී මොහොතකි.

පසුගිය දින අත්‍යවශ්‍ය කටයුත්තකට පාර්ලිමේන්තුවට ගිය අවස්ථාවේ මා එහි ඉන්නවා දුටු වර්ථමාන අග්‍රාමාත්‍ය මහින්ද රාජපක්ෂ මැතිතුමා මා ලගට කැදවා මා හා සුහදවා සාකච්ඡා කරන ලදී. මේ ඒ අවස්ථාවේ ලබාගත් ජායාරූපයකි. 

යාපනයේ වර්ථමානයේ අති බහුතරයක් වූ උපතින් කුල හීන යැයි හදුන්වන ජනයා බුදු වදන අනුව "උපතින් වසලයෙක් හෝ බ්‍රාහ්මණයෙක් නොවන බවත් ක්‍රියාවෙන් පමණක් එය වන බවත්" යන පාඨය අනුගමය කරමින් ඔවුන්ගේ ජීවන තත්වය උසස් කිරීමටත් එකම රටක් තුල සිංහල දෙමළ හා අනෙකුත් ජාතීන්ට සාමකාමීව ජීවත්විය හැකි පරිසරයක් තැනීමට මාගේ ඉදිරි ජීවිතයේ සම්පූණ කාලයම වැය කරමි. - අරුන් සිද්ධාර්ථ්

கவிஞர் கண்ணதாசனின் வனவாசம் [1965]

 கவிஞர் கண்ணதாசனின் வனவாசம் [1965]


கவிஞர் கண்ணதாசனின் வனவாசம் படித்து முடித்தேன்,விறுவிறுப்பான எழுத்து நடையில் கவிஞர் தன் சுயவரலாற்றை தன்னை அவன் என்னும் கதாபாத்திரமாக குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். படித்ததில் எழுந்த ஆச்சரியங்கள் சொல்லில் அடங்காதது, கருணாநிதியின் நயவஞ்சகத்தை மனிதர் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார். கவிஞர் ஒரு அப்பாவி, வெகுளித்தனமாக இருந்திருக்கிறார் என்பது அவர் தன் வாழ்வின் இக்கட்டான சூழ்நிலையையும் அவமானங்களையும் பட்டவர்த்தனமாக உரைப்பதிலிருந்தே நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

வனவாசம் ஒரு தன்வரலாற்று நூல் ,எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த முத்தையா என்னும் கண்ணதாசன் தன் 17ஆம் வயதில் சிறுகூடல்பட்டியில் இருந்து தன் வீட்டைப் பிரிந்து சென்னைக்கு வேலை தேடி பேருந்தில் ஏறியது முதல் அவர் சமையலாளுக்கு எடுபிடியாகி, அஜாக்ஸ் நிறுவனத்தில் கடைநிலை ஊழியனாகி, பத்துக்கும் மேற்பட்ட சிறு பத்திரிக்கைகளில் அச்சுக்கோர்ப்பவராக,கதை எழுதுபவராக, கவிதை எழுதுபவராக பணியாற்றி நிரந்தர வருமானம் வேண்டி  பத்துக்கும் மேற்பட்ட சிறு பத்திரிக்கைகளில் ஆசிரியராக பணியாற்றிய நீண்ட காலங்கள், அவர் மெல்ல படிப்படியாக வளர்ந்து கன்னியின் காதலி [1949] படத்தின் கலங்காதிரு மனமே பாடல்   எழுதி சினிமாவில் கவிஞராகியது, தன் 22ஆம் வயதில் இன்னொரு வீட்டிற்கு தன் சொந்தப் பெற்றோரால் இவன் எங்கே உருப்படப்போகிறான்? என்று தத்துக் கொடுக்கப்பட்டுச் சென்றது, அதன் பின்னர் அவருக்கு புதிய உறவினர் பார்த்து வைத்த சுமாரான அழகுடைய பெண்ணுடன் முதல் திருமணமானது, இரண்டாவதாக அழகிய பெண்ணை இவர் விரும்பி சேர்த்துக்கொண்டது, இல்லறஜோதி படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதியது. அவர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அண்ணாதுரை மீதான ஆர்வக்கோளாறில் கலந்து கொண்டு ஒன்றரை வருடங்கள் சிறை தண்டனை பெற்று திருச்சி சிறை சென்றது [அதில் அண்ணாத்துரைம் கருணாநிதி உள்ளிட்டோர் லாவகமாக தப்பித்தது] , ஐந்து மாதத்தில் ஒரு நல்ல நீதிபதியின் கருணையால் கடுஞ்சிறை மீண்டது,

அதன் பின்னர் பல தொடர் ஜீவ மரணப் போராட்டங்களுக்கிடையில் மீண்டும் திரைப்படங்களுக்கு கதாசிரியராகி, இயக்குனராகி,அரைகுறை நாத்திகனாகி, படத் தயாரிப்பாளராகி  மாலையிட்ட மங்கை, சிவகங்கை சீமை, கவலை இல்லாத மனிதன்,வானம்பாடி, ரத்தத்திலகம், கருப்புப்பணம் என்று  ஐந்து படங்கள் தயாரித்து ரூபாய் 7லட்சம் கடன்காரரானது, அந்தக் கடன்களைப் சினிமாவில் பாடல்கள் எழுதியே அடைத்தது  , அரை குறை அரசியல்வாதியாக இருந்தவர் கட்சிக்குள் நடக்கும் உள்கட்சி அரசியலால்  சுமார் 14 வருடங்கள் பொருமை காத்து நொந்துபோய் இனி பொறுப்பதற்கில்லை என்று சம்பத் அவர்களுடன் இணைந்து ராஜினாமாக் கடிதம்  தந்து வெளியேறுவது வரை நாம் கவிஞருடனே பயணிக்கிறோம். கவிஞர் அந்த முக்கியமான தினத்தின் பின்னர் அமைந்த தன் புனர் ஜென்ம வாழ்க்கை வரலாற்றை மனவாசம் என்று எழுத முடிவெடித்திருப்பதாக இதில் சொல்லியிருந்தார்,அதன் பின்னர் மனவாசமும் வெளியாயிற்று,அதையும் படித்து விட்டு எழுதுவேன்.

தன் வாழ்வின் கடினமான தருணங்களில் எத்தனை சிறு உதவி செய்திருந்தாலும் அவர்களை குறிப்பிட்டு மனதார நன்றி கூறியிருக்கிறார் கவிஞர்.  அதில் ஒரு நெகிழ்ச்சியூட்டும் சம்பவம் இங்கே,

அப்போது சென்னை மிண்ட் சாலையில் சாய்பாபா புத்தகாலயம் என்னும் பதிப்பாளர் இருந்திருக்கிறார், அவர் பஞ்சத்திலிருக்கும் துவக்கநிலை கதாசிரியர்கள், கவிஞர்களின் பசி பட்டினியை ,அவர்களின் படைப்புகளின் கைப்பிரதிகளை எடைக்கு எடுத்துக்கொண்டு பணம் தந்து பிரசுரித்ததன் மூலம் தீர்த்தும் வந்திருக்கிறார்.

அப்போது கவிஞருக்கு புதிய வேலைக்குச் சேர சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் செல்ல 30 ரூபாய் அவசரத் தேவை, அதற்கு சென்னையில் யாரிடமும் கடன் கிடைக்காத நிலை, மூன்று நாட்கள் வெறும் டீ மட்டுமே குடித்து நாட்டுப்புறக் கலைஞர்கள் பற்றிய கதைகளை கைப்பிரதிகளாக பல பக்கங்கள் எழுதி நானூறு கிராம்களுக்கு அதை எடை போட்டு அதை 50 ரூபாய்க்கு அவர் விற்பனை செய்ததைச் சுவை படச் சொல்கிறார்,

கவிஞர் மேலும் , அண்ணாத்துரை முதலியார் மீது இவர் வைத்த நம்பிக்கை, அவர் மீது ஈடுபாடு வரக்காரணமான நெகிழ்ச்சியான சம்பவங்கள், அண்ணாத்துரை, இ.வி.கே.சம்பத் உள்ளிட்ட கழகத்தின் நிஜமான அபிமானிகளுக்கு செய்த பச்சை துரோகங்களை நெஞ்சம் கொதிக்கச் சொல்லியிருக்கிறார் கவிஞர். பெரியாரின் மூத்த சகோதரரின் மகனான இ.வி.கே.சம்பத் தான் திமுக என்ற கட்சியில் அண்ணாதுரையையும் விட பலம் பொருந்தியவராக இருந்திருக்கிறார். என்பதைக் கேட்கும் போது நமக்கு வியப்பு மேலிடுகிறது.இவரது மகன் தான் இன்று நாம் காங்கிரஸில் பார்க்கும் இவிகே எஸ் இளங்கோவன்.இவரது சகோதரர்  இனியன் சம்பத்,இவரது மனைவி சுலோச்சனா சம்பத்.

அது தவிர திமுக என்னும் கட்சிக்குள் அப்பொழுது மெல்ல நுழைந்த சினிமா நடிகர்கள் ஆதிக்கத்தையும் கவிஞர் அடியோடு வெறுத்தே வந்திருக்கிறார், கருணாநிதியுடன் தோழமை கொண்டது போல எம்.ஜி.ஆருடன் அவர் தோழமை கொள்ளவில்லை. தன் தென்றல் பத்திரிக்கையில் நடிகர்களை கூத்தாடிகள் என்றே சாடி எழுதியும் வந்திருக்கிறார்.

இ.வி.கே.சம்பத் , திமுக  கட்சியில் கருணாநிதிக்கு பூதாகரமான முக்கியத்துவம் அளிக்கப்படுவதைக் கண்டித்து கட்சியை உடைக்க எத்தனித்த தருணங்கள், அவர் நுங்கம்பாக்கத்தில் இருந்த மூன்று நாள் உண்ணாவிரதம், அண்ணாதுரை அப்போது அழது ஆர்பாட்டம் செய்து உண்ணாவிரதத்தை கைவிடச் செய்தது, கருணாநிதிக்கு சாதகமாக திமு கழகத்துக்குள்ளே திரண்ட நடிகர்கள்  கூட்டம், அவர்களின் பின்னே திரண்ட ஸ்டண்ட்மேன்கள், மதுரையைச் சேர்ந்த கைத்தடிகள், கொலைக்கு அஞ்சாத கூலிகள், அவர்களைக் கொண்டு கருணாநிதி ஆடிய ஆட்டங்கள், திருச்சி பொதுக்கூட்டத்தில் கவிஞர் பேசுகையில், கருணாநிதி கைக்கூலி ஒருவனை ஏவி விட்டு அவரை செருப்பால் கன்னத்தில் அறைய எத்தனித்தது, கவிஞர் அதிலிருந்து தப்பித்தது, எனப் படிக்கப் படிக்க சுவாரஸ்யம்.கூடும் ,  நடிகர்களில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் , எம்.ஜி.ஆர் , எம்,ஆர்.ராதா என யார் பெயரையுமே கவிஞர் குறிப்பிட்டு எங்கேயுமே சொல்லவில்லை .

கருணாநிதிக்கு கவிஞரின் மீது உரசல் வரக் காரணமான சம்பவம் என்று எதைச் சொல்லுகிறார் தெரியுமா? கவிஞர் அப்போது இரண்டாம் திருமணம் செய்து கொண்டாராம், உடனே அதைக் கண்டித்த கருணாநிதி,கவிஞரின் பெயரிட்ட உறுப்பினர் பேட்ஜை பறித்துக்கொண்டாராம். அது தவிர கவிஞரை திமுக மாநாட்டில் கலந்து கொள்ளவும் தடை விதித்தாராம்,இது எப்படி இருக்கிறது பாருங்கள்?!!!

கவிஞர் தான் புகழுக்கு ஆசைப்பட்டு அரசியலில் விழுந்தேன் என்பதை ஒத்துக்கொள்கிறார். அவர் எந்த சூழ்நிலையிலும் பயப்பட்டதில்ல என்பதை நாம் பல சம்பவங்கள் மூலம் அறிய வருகிறோம், புகழ் கிடைக்கும் என்ற நப்பாசையில் தான் தென்றல் என்னும் 12 பக்கங்கள் கொண்ட மாதப்பத்திரிக்கையை பல வருடகாலங்கள் மிகுந்த நஷ்டத்தில் நடத்தி வந்திருக்கிறார். அதில் அண்ணாவைப் பற்றி புகழாரம் சூட்டி கட்டுரைகள் பலவும் எழுதி வந்திருக்கிறார். அண்ணாதுரையின் பெயரையே தன் 9 மகன்களில் ஒருவருக்குச் சூட்டி அழகு பார்த்திருக்கிறார்.கவிஞருக்கு 5 மகள்களும் உண்டு,15 பிள்ளைச்செல்வங்களில் விசாலி கண்ணதாசனும்,கலைவானனும் வள்ளியம்மை என்னும் மனைவிக்கு பிறந்தவர்கள்.

கவிஞர், இ.வி,கே.சம்பத்தை மட்டுமே தன்னலமில்லா பிறவி,கைக்காசை போட்டு கட்சி நடத்தியவர் என்கிறார். அவரின் பின்னே திரண்ட தொண்டர்கள் அத்தனை ஆதரவாளர்களையும் அவர் அப்படியே பார்க்கிறார். கருணாநிதி, அன்பழகன் பொன்றோர் ஆதாயம் கருதியே அரசியலுக்குள் நுழைந்தவர்கள் என்கிறார். அதிலும் அன்பழகன் ஓரிடத்தில் சம்பத்தைப் பார்த்து நீங்கள் அடிப்படையிலேயே செல்வந்தர், உங்களுக்கு அரசியல் என்பது சேவை, எங்களுக்கு இது தான் தொழில், ஆகவே மாபெரும் மாற்றுக்கட்சியாக திமுக உருவெடுக்கையில் அதை உடைத்துவிடவேண்டாம் என நெக்குருகி  கெஞ்சுகிறார்.மேலும் கவிஞர் v.p.ராமன் என்னும் வழக்கறிஞர் மற்றும் பழுத்த அரசியல்வாதியையும் மிகவும் நன்றி கூறுகிறார்,அவரின் 7 லட்சம் ரூபாய் கடனால் பாதிக்கப்பட்ட பொழுது கவிஞர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளிலிருந்து தன்னைக் காத்ததைக் குறிப்பிடுகிறார்.இவர் இப்போதைய நடிகர் மோகன்ராமின் அப்பா.

கவிஞர் சென்னை மேயர் தேர்தலுக்கு அப்படி உழைக்கிறார், பொதுகூட்டம் பலவற்றுக்கும் தன் பாடல் எழுதும் பிழைப்பை விட்டுவிட்டுப் போய் பேசுகிறார், ஆனால் எல்லாம் பாராட்டுக்களையும் கருணாநிதி மற்றும் உப கோஷ்டியினரே அண்ணாதுரையிடமிருந்து பெற்றுக்கொள்கின்றனர்,அதிலும் அன்று சீரணி அரங்கத்தில் வைத்து கருணாநிதிக்கு அண்ணாத்துரை மோதிரம் அணிவித்து விட்டு தம்பிக்காக பல கடைகள் ஏறி வாங்கிய மோதிரம், என் மனைவிக்கு கூட இப்படி தேடி வாங்கியதில்லை, என்று உச்சி முகர்ந்து பாராட்ட , கூட்டம் முடிந்ததும், கவிஞர் அண்ணாவைப் பார்த்து இப்படி செய்து விட்டீர்களே அண்ணா? எனப் பொரும, அவர்,அதற்கென்ன ?!!! அடுத்து எத்தனையோ பொதுக்கூட்டம் வருகிறது, நீயும் கருணாநிதி வாங்கி வந்தது போல மோதிரம் வாங்கிக் கொடு, அதை சபையில் நான் உனக்கு அணிவிக்கிறேன் என்கிறார், அதைக்கேட்டதும் கவிஞருக்கு மிகவும் அருவருப்பு பீடிக்கிறது.

கவிஞர் ஒரு கட்டத்துக்குப் பின் அண்ணாதுரை, கருணாநிதி உள்ளிட்ட கழக கண்மணிகள் எழுதிய கதை, கவிதை, கட்டுரை, எழுச்சி உரை என எதையும் படித்ததில்லை என்கிறார், அவர்களின் தட்டையான மொழி எங்கே தன்னையும் பீடித்துக்கொள்ளுமோ?!!! என்று அஞ்சியே அவ்வாறு செய்ததாகச் சொல்லுகிறார்.

கவிஞர், கருணாநிதி, மற்றும் ஒரு முக்கியஸ்தர்,மூவரும் ஒன்றாகச் சென்று ராயப்பேட்டையில் ஒரு பிராத்தலுக்குச் செல்கின்றனர், தலா 50 என 150 ரூபாய் அங்கே பெண்ணின் அப்பாவான தரகனிடம் தரப்படுகிறது, அங்கே வேலை அமோகமாக முடிந்தவுடன்.கருணாநிதி மட்டும் துண்டை தலையில் கட்டிக்கொண்டு கோதாவில் இறங்கி, உன் பெண் என்னுடன் சரியாக ஒத்துழைக்கவில்லை,அவள் அளித்த சேவையில் திருப்தியில்லை,பணம் திருப்பித் தருகிறாயா? இல்லை போலீசைக் கூப்பிடவா? என்று ரகளை செய்ய அவன் பணம் 150ஐ அழுதபடி திருப்பித் தந்ததைக் குறிப்பிடுகிறார்.

மேலும் அண்ணாத்துரைக்கும் இளம்பெண்கள் தான் பலவீனம் என்று கவிஞர் குறிப்பிடுகிறார், தன் வேலைக்காரி கதையில் ஒரு பெண் மீசை,தலைப்பாகை அணிந்து ஆணாக  வருவது போலவே ,அவர் நிஜவாழ்விலும் இளம்பெண்களை ஆண்வேடம் இட்டுத் தருவித்து சுகிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் என கவிஞர் சொல்லுகிறார். வேறு யாராவது இதையெல்லாம் எழுதி இருந்தால் அச்செய்திக்கு முக்கியத்துவம் சிறிதும் இருந்திருக்காது. மஞ்சள் பத்திரிக்கையில் வரும்  கிசு கிசுக்கள் போலவே பல்லிளித்திருக்கும். ஆனால், கண்ணதாசன் தி.மு.க தலைவர்களின் நடத்தையை வனவாசம் புத்தகமாக 1965ஆம் ஆண்டு முதல் பதிப்பில் அம்பலப்படுத்திய போது சம்பந்தப்பட்டவர்களே வாயை திறக்கவில்லை என்பதோடு, கண்ணதாசன் தன்னுடைய நடத்தைகள் குறித்தும் மிக பகிரங்கமாகவே எழுதியிருக்கிறார் என்பது நடந்தவற்றிற்கு மேலும் வலுவூட்டுகிறது.

மேலும் முக்கியமாக கருணாநிதிக்கு இருந்த அகம்பாவத்தை இப்படி குறிப்பிடுகிறார், கவிஞரின் எழுத்து நடை மீது பொறாமை கொண்ட கருணாநிதி, இது என்ன இப்படி மொன்னையாக எழுதுகிறாய்,இந்தா இதைப்படி! படித்து விட்டு உன் எழுத்தை சீரமை என்று 2 புத்தகங்களை தூக்கிப் போடுகிறார், அது வாழமுடியாதவர்கள் என்னும் ஒர் புத்தகம் ,கருணாநிதி ஒரு இன்ஸெஸ்ட் எழுத்தாளராகவும் இருந்திருக்கிறார் என விளக்குகிறது அந்த சம்பவம் [incest writer] அவர் எழுதிய அந்த புத்தகத்தின் கதையின் சாராம்சம் இங்கே.

தன்னுடைய எழுத்துக்களை அவன் படிப்பதில்லை என்பதிலே அவனுடைய நண்பர் கருணாநிதிக்கு அசாத்தியக் கோபம் வரும்.

ஒருநாள் அவர் புதிதாக வெளியாகி இருந்த தனது இரண்டு புத்தகங்களை எடுத்து அவன் முன்னால் போட்டு “இதையெல்லாம் படியய்யா” என்றார்.

ஒரு புத்தகத்தை விரித்தான்.

நல்ல பண்பாடுள்ள கதை அது!

“வாழமுடியாதவர்கள்” என்ற தலைப்பில் வெளியாகி இருந்தது. கதையென்ன தெரியுமா??

படிக்காதவர்களும் படித்துப் பயன்பெற வேண்டிய புண்ணிய கதையல்லவா! விபரமாகவே சொல்கிறேன்.

மனைவியை இழந்த ஒரு போலிஸ்காரன், வறுமை தவழ்ந்து விளையடும் சின்னஞ்சிறு வீடு அவனது குடியிருப்பு. மாண்டு போன அவன் மனைவி சும்மா போகக்கூடாதென்று ஒரு மகளைவிட்டுப் போயிருந்தாள். கதையின் ஆரம்பத்திலேயே அந்த மகள், தளதளவென்று வளர்ந்து பளபளவென்று மெருகேறிக் கவர்ச்சிப் பாவையாக விளங்குகிறாள். சின்னஞ்சிறிய வீட்டில் தன்னந்தனியாக இருக்குமவள் திருமணத்திற்காகக் காத்துக்கிடக்கிறாள். இரவுகள் வந்துபோகின்றன. திருமணம் வரவில்லை. ஒவ்வோர் இரவிலும், தந்தையும் மகளும் மட்டுமே அந்த வீட்டில் துயில்கின்றனர். தந்தை மகளையே மனைவியாக்கிக் கொள்கிறான். அவன் அந்தப் புத்தகத்தை படித்து முடித்தான்.

தமிழ் சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பற்றிய பயம் அவன் நெஞ்சில் சூழ்ந்தது. அடுத்தடுத்து ‘குமரிக் கோட்டம்’, ‘ரோமாபுரி ராணிகள்’ ‘கபோதிபுரக் காதல்’ முதலிய நூல்களைப் படித்தான். அந்த நூல்களில் பலரிடம் கெட்ட ஒருத்தியைப் பளபளப்பாக வர்ணித்திருப்பார் கட்சியின் மூத்த தலைவர்…

ஓடிப்போனவள் கதியும், உருப்படாதவன் வாழ்க்கைச் சித்திரமும், ஆட்டங்கண்ட கிழவனுக்கு எழுந்த ஆசையும், அந்தி நேரத்துச் சுந்தரியின் தளுக்கும், நிரம்பி வழிந்த கழகப் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்பனையாயின.

– பக்144/148 வனவாசம், கண்ணதாசன்.

வனவாசம் மொத்த பக்கங்கள்-310

விலை-150 ரூபாய்

எல்லா முக்கிய புத்தகக் கடையிலும் கிடைக்கும்

‘காளி எழுந்தாள்’ நாட்டிய நாடகம்!

 ‘காளி எழுந்தாள்’ நாட்டிய நாடகம்!

அண்மையில் நோர்வே நாட்டில் நான் வழங்கிய பரதநாட்டிய நிகழ்ச்சிகள் பற்றிய ஒரு பதிவினை முகநூலில்  இட்டிருந்தேன். இது லண்டனில் நான் தயாரித்து மேடையேற்றிய  ஒரு நாட்டிய நிகழ்வு பற்றிய பதிவாகும்.  

ஈழத்துக் கவிஞர்களான குறிஞ்சித் தென்னவன் அவர்களின் ‘குன்றுதோறும் ஏறிடுவாள்’ கவிதையையும் பேராசிரியர் சிவசேகரம் அவர்கள் எழுதிய ‘காளி’ என்ற கவிதையையும் இணைத்து ஒரு நாட்டிய நாடக வடிவமாக எனது மாணவிகளைக் கொண்டு நான் தயாரித்து 1992ஆம் ஆண்டு மேடையேற்றியதுதான் ‘காளி எழுந்தாள்’.  

அப்போது நான் லண்டனில் பிறென்ற் தமிழ்ச் சங்கம் நடாத்தும் தமிழ்ப் பாடசாலையில் பரதநாட்டிய ஆசிரியையாகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். 1992இல் இச் சங்கம் நடத்திய விழாவிற்காகத்தான் முதன்முதலாக ‘காளி எழுந்தாள்’ நாட்டிய நாடகத்தைத் தயாரித்தேன்.  

இலங்கையில் 1981இல் பாரதியார் நூற்றாண்டையொட்டி பாரதியாரின் பெண் விடுதலைப் பாடல்கள்  சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அதனுடன் ஈழத்துக் கவிஞர் குறிஞ்சித் தென்னவன் எழுதிய ‘குன்றுதோறும் ஏறிடுவாள் எங்கள் மலைப்பெண்ணாள்” என்ற எமது தேயிலைத் தோட்டங்களில் பெண்கள் படும் அவலங்களைக் கூறும் பாடலையும் இணைத்து அதற்கு நாட்டிய அமைப்புச் செய்து நான் ஆடியிருந்தேன். இந்த நிகழ்ச்சி தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் சார்பில் க. பாலேந்திரா மேடையேற்றிய நிகழ்வின் ஒரு அங்கமாக ‘நர்த்தனக் கோலம்’ என்ற தலைப்பில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. பின்னர் வேறு சில இடங்களிலும் ‘நர்த்தனக் கோலம்’ நிகழ்ச்சியை வழங்கியிருந்தேன்.

1983 காலப்பகுதியில் லண்டனில் நானும் பாலேந்திராவும் வசிக்க ஆரம்பித்த போது 83 இனக்கலவரத்தைத் தொடர்ந்து இங்கு நடைபெற்ற எழுச்சி விழாக்களில் ‘குன்று தோறும் ஏறிடுவாள்” பாடலுக்கு நான் நடனமாடினேன்.

பின்னர் பிறென்ற் தமிழ்ப் பாடசாலையில் நான் நடனம் பயிற்றுவிக்க ஆரம்பித்தபோது முற்றுமுழுதாக எமது தேயிலைத் தோட்டங்களில் கொழுந்தெடுக்கும் பெண்களின் அவலங்களை விளக்குவதாகவும் அவர்களின் எழுச்சி பற்றியதாகவும் ஒரு நாட்டிய நாடகத்தைத் தயாரிக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. குறிஞ்சித் தென்னவனின் கவிதையுடன் வேறு எந்தக் கவிதைகளை இணைக்கலாம் என்று நான் யோசித்தபோது பாலேந்திரா எனக்கு சிவசேகரம் அவர்களின் ‘காளி’ கவிதையை எடுத்துத் தந்தார். இது அவர் தென்னாபிரிக்க மக்கள் எழுச்சிக்கு வாழ்த்துத் தெரிவித்து எழுதிய கவிதை. இதில் வரும்

‘வாயு அசைந்தது சூறை பிறந்தது 

சீறி எழுந்ததுவே

ஆழி விரிந்தது  அலைகள் வளர்ந்தன

முகில்கள் நனைந்தனவே

மேனி நடுங்கிய பூமி அதிர்ந்தது

மலைகள் சரிந்தனவே

தீயுமெழுந்தது சுடர்கள் பரந்தன

பொறிகள் பறந்தனவே

வானமெரிந்திட மின்னல் படர்ந்தது

இடிகள் முழங்கினவே

காலன் நடுங்கினன் காளி எழுந்தனள்

கருநிற மேனியளே

கூவி எழுந்தனள் லோகம் அதிர்ந்தது

ஊழி பிறந்ததுவே’

என்ற வரிகளைச் சேர்க்கலாம் என்று நினைத்தேன். 

குறிஞ்சித் தென்னவனின் கவிதை வரிகளுக்கு யாழ்ப்பாணத்தில் எனக்கு இசைக்கலைஞர் போல் திலகநாயகம் அவர்கள் இசையமைத்துத் தந்திருந்தார். அவரே எனது நடன நிகழ்ச்சிகளுக்குப் பாடியுமிருந்தார்.

சிவசேகரம் அவர்களின் ‘காளி’ கவிதை வரிகளுக்கு நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க லண்டனில் நிர்மலா அவர்கள் இசையமைத்துத் தந்தார். நடன நிகழ்ச்சி என்றபடியால் நிறைய ஸ்வரக் கோர்வைகள் எல்லாம் போட்டுத் தந்தார். நான் ஜதிகள் எல்லாம் போட்டு  நடன வடிவமைப்புச் செய்து எனது மாணவிகளுக்குப் பழக்கினேன். 

தேயிலைத் தோட்டத்தில் பெண்களைக் கடுமையாக வேலை வாங்கும் கங்காணி பாத்திரத்திற்கு ஒரு மாணவி நடனமாடுவதைவிட ஒரு இளைஞன் நடனமாடினால் நன்றாக இருக்கும் என்று கருதி, பாலேந்திரா தயாரிக்கும் சிறுவர் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீஜனனன் என்ற இளையவரைக் கங்காணியாக நடனமாட வைத்தேன். அவருக்கு நடன அசைவுகள் பழக்க எனக்குக் கூடிய நேரம் எடுத்தது. 

‘வாயு அசைந்தது’ வரிகளுக்கு வெண்நிற உடைகளுடன் மாணவிகள் காற்றைப் போல மேடை முழுவதும் சுழன்று அசைந்து ஆடினர். அதே போல ‘ஆழி விரிந்தது’ வரிகள் வரும்போது நீல நிறத்திலும், ‘தீயுமெழுந்தது’ வரிகளுக்கு செம்மஞ்சள் நிறத்திலும் ஆடைகள் அணிந்து மாணவிகள் ஆடினர். பலே பாணியில் அமைந்த அசைவுகளையும் சேர்த்திருந்தேன்.  காளியின் நடனத்திற்கு பரதநாட்டியத்துடன் நாட்டுக்கூத்தினையும் இணைத்திருந்தேன்.  இந்த நாட்டிய நாடக மேடையேற்றத்திற்கு பாலேந்திரா பொருத்தமான ஒளியமைப்பைச் செய்திருந்தார். ஸ்ரீஜனனி, P. கிருத்திகா,  ரேகா, விஜிதா, தனுஜா, றஜிதா, சுஜிதா, R. கிருத்திகா, ரதிகா இவர்களுடன் இன்னும் பல மாணவிகளும் பங்குபற்றியிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் எமது சிறுவர் நாடகங்களிலும் நடித்துள்ளனர். 

P. கிருத்திகா, தனுஜா ஆகியோர் தமது பிள்ளைகளையும் இப்போது எமது லண்டன் தமிழ் நாடகப் பள்ளியில் இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வித்தியாசமான இந்த நாட்டிய நாடகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 92-93 காலப் பகுதியில் லண்டனில் வேறு இடங்களிலும் மேடையேறியது. பின்னர் 28.05.1994 அன்று நடைபெற்ற எமது நாடக விழாவிலும் பாலேந்திரா நெறியாள்கை செய்த இரண்டு நாடகங்கள், மற்றும்  ‘கானசாகரம்’ ஈழத்து மெல்லிசை நிகழ்ச்சியுடன் ‘காளி எழுந்தாள்’ நாட்டிய நாடகமும் மேடையேறியது. 

தொடர்ந்தும் இப்படியான வித்தியாசமான நாட்டிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்க எனக்கு ஆசை இருந்தபோதும் முழுநேரத் தொழில் புரிந்துகொண்டு, அத்தோடு வேறு பல துறைகளிலும்  ஈடுபட்டுக்கொண்டிருந்த என்னால் நடனம் பயிற்றுவிப்பதைத் தொடர முடியாமல் போய்விட்டது. ஆனால் எமது சிறுவர் -இளையோர் நாடகங்கள் பலவற்றில் வரும் நடனப் பகுதிகளைத் தொடர்ந்து வடிவமைத்துப் பழக்குவது எனக்கு மன நிறைவைத் தருகிறது.     

Tuesday, 18 January 2022

மலையக அரசியலில் எனக்கு போதனை தேவையில்லை !

 மலையக  அரசியலில்  எனக்கு போதனை தேவையில்லை !


நான் மலையக அரசியல் தொடர்பில் எனது பதிவுகள் தொடர்பில் எழும் எதிர் விமர்சனங்கள் பலவற்றுக்கு சும்மா விட்டுவிடுவதின் காரணம் யாதெனில் நான் அடிப்படையில்  மலையக மக்களின்  அந்த வாழ்க்கைக்குள் எந்த பிறழ்வும் இல்லாமல் அப்படியே வாழ்ந்தவன் அதைவிட ஈழப்போராட்டத்தில் அப்போதே அதாவது எனது 19வது  வயதில் இணைந்துகொண்டவன் எனக்கும் நிறைய ஆசைகள் இருந்தன அதாவது மலையக மக்கள் பேரினவாதத்தின் பிடியிலிருந்தும் அடிப்படை உரிமைகளிலும் ஏனைய சமூகங்கள் போல வாழ வேண்டும் என்பதாகும். நான் ஒரு சாதாரண தோட்டத் தொழிலாளியின் மகன் என்ற நினைப்பும் பக்கத்து வீட்டில் சமைக்கும்  கறியும் சோறும் அதற்கு அப்பால் வீட்டில் விளக்கு எறிய எண்ணையை கூட பரிமாறிக்கொள்ளும் ஒரு இன குழுமத்தின் ஒரு பிள்ளை அவ்வளவுதான், இங்கே நான் சொல்லவருவது எனது அப்பா அப்படியிருந்தார் எனது பரம்பரை எப்படியிருந்தது என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. ஈழப்போராட்டத்தில் ஈரோஸ் இயக்கம் 14 நாடாளுமனற உறுப்பினர்களை  வெற்றிக்கொண்டு பின்னர் மலையகத்துக்கு ஒரு உறுப்பினரை தெரிவு செய்ய முற்பட்டபோது நான் நான்கு வருட சிறைவாழ்வை முடித்து வெளியே வந்தேன் என்னையே அவர்கள் அந்த பதவிக்கு தெரிவு செய்து இருந்தனர்" சங்கர் ராஜி என்ற ஈழப்போராட்டத்தின்  முன்னோடி பலஸ்தீனத்தில் கமாண்டோ  பயிற்சி பெற்றவர் யாசீர் அராபாத்துடன்  நெருங்கிய உறவை கொண்டவர் ( இவரும்  மலையகத்தின் ஒரு இரத்த உறவு கொண்டவர்தான் ) எனது விடுதலைக்கு முன்னர் கேட்ட ஒரே கேள்வி நீங்கள் நாடாளுமன்றுக்கு  வாருங்கள் தோழர்" எனது பதில் நான் அதற்கு உரியவன் கிடையாது  என்பதாகும் எனவே  நான்  உட்பட தோழர்கள் ஒரு பொதுமகனான  ஆசிரியர் மலையப்பன்  இராமலிங்கம்  அவர்களை தெரிவுசெய்தோம் 

 நாடாளுமன்ற  உறுப்பினர்  ஆனார்" எனவே என்னிடம்  மலையக அரசியல் தொடர்பில் மேலதிக விளக்கம் சொல்ல முற்படுவது  வேதனைக்குரியது என்றே சொல்கின்றேன். மலையக அரசியலை தீர்மானிக்க வேண்டியவர்கள் கோட்டு சூட்டுப்போட்ட  முதலாளிகள்  அல்லர்" ஜனநாயக  அரசியல் மட்டுமல்ல ஆயுதம் ஏந்திய  போராட்டத்துக்குள்ளும் நான்  இருந்து இருக்கின்றேன்  இதற்கு  அப்பால் ஒரு பத்திரிகையாளன் .  கேள்விகள்  தொடருமெனில் பதிவும் தொடரும்.

நீலப் பொருளாதாரமும் மீனவர் இன அழிப்பும்

 நீலப் பொருளாதாரமும் மீனவர் இன அழிப்பும்

 

தனியார்மயம் ஒன்றிய அரசு மீனவர்கள்

fishermen 600நீலப் பொருளாதாராம் என்பது கடலுக்குள்ளும் மற்றும் சமுத்திரங்களுக்குள்ளும் மீன்பிடிப்பு, கடல் அலையில் இருந்து மின்சாரம் எடுத்தல், கடலுக்கு அடியில் உள்ள கனிம வளங்களைச் சுரங்கம் தோண்டி எடுத்தல் கடல் தாவர உயிரினங்களில் இருந்தும் மருந்துப் பொருட்களைத் தயாரிக்க அனுமதி அளித்தல் உள்ளிட்ட 13 வகை தொழில் திட்டங்கள் உலகெங்கும் தொடங்கப்பட்டுள்ளன.


இதில் கடலுக்குள்ளே செயற்கையாக பாத்திகள் கட்டியும் கூண்டு வைத்தும் மீன் குஞ்சுகளை வளர்த்து ஏற்றுமதியாக்கும் திட்டமும் உள்ளது. இதனால் மீனவரல்லாத சமூகங்கள் முக்கியமாக பெரும் நிலவுடமையாளர்கள், கார்ப்பரேட்டுகள் மீன்பிடிக்க இறங்கியுள்ளன. அவர்களுக்கு மானியமும் அளிக்கப்பட்டு உள்ளது.



 

இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது பாரம்பரிய மீனவர்களுக்கு மீன்பிடிப்பு ஒரு தொழில் மட்டுமின்றி அது அவர்களின் பிரிக்க முடியாத வாழ்வியல் பண்பாடாகும். மீனவர்கள் என்பது பிறப்பினால் அல்ல, அவர்களின் தொழிலின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதாலும் தொன்மையான குடிமக்கள் என்பதாலும் இவர்கள் இந்தியாவில் சிறப்பானதும் முக்கியமானதுமான இடத்தைப் பெறுகிறார்கள்.


சிறிய அளவிலான மீனவர்கள், பிற மீனவர்கள் ஆகியோர் அனைவரையும் மீன் பிடிப்பிலிருந்தும் கடற்கரையிலிருந்தும் வெளியேற்றுவதுதான் நீலப் பொருளாதாரத்தின் நோக்கமாகும்.



 

வெளியேற்றிவிட்டுக் கடல் வளங்களையும் கடற்கரைகளையும் முழுக்கவே பன்னாட்டுக் கம்பெனிகள், கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்ப்பதுதான் நீலப் பொருளாதாரம். இதை நீலப் புரட்சி என்றும் பிரதமர் நரேந்திர மோடி வர்ணித்தார். அந்த நீலப் பொருளாதாரத் திட்டங்கள்தான் கார்ப்பரேட்டுகளின் பெருங்கனவாகும்.


உலகளவில் கடல், கடற்கரைகள், நீர்நிலைகள், மலைகள், கனிம வளங்கள் போன்ற இயற்கை வளங்களை தொழில் திட்டங்களுக்காகச் சுரண்டுவது என்ற நிலை மாறிவிட்டது. இதற்கு அடுத்த நிலையாக இயற்கை வளங்களையே மூலதனமாக்கி கொள்ளை இலாபம் அடிப்பது என்ற போக்க வேகமாக வளர்ந்து வருகிறது.



 

இதற்காக நீலப் பொருளாதார திட்டம் என்ற பெயரில் பிரம்மாண்டமான திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே கடலர் மீன் மற்றும் பிற உயிரினங்கள் வளர்ப்பு என்ற கொள்கையானது கொண்டு வரப்பட உள்ளது. இக்கொள்கையின் முன்வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இக்கொள்கையானது அதிகாரப் பூர்வமாகவே கடலை வணிக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கிறது. ஏன் இந்த நிலை ஏற்பட்டது?


எதற்காக நீலப் பொருளாதாரமும் தேசிய கடல் மின் வளர்ப்பு (தே.மீ.வ) கொள்கையும் கொண்டு வரப்பட்டுள்ளது? இவற்றின் பின்புலமுள்ள அரசியல் காரணிகள் என்ன? இங்கு இவற்றின் பின்புலத்திலுள்ள அரசியல் பொருளாதார காரணிகளை அறிந்த பின்னர், தே.மீ.க. வளர்ப்பு கொள்கையின் முக்கிய அம்சங்களை மட்டும் காண்போம்.



 

நாம் வாழ்கின்ற சமூக அமைப்பு முதலாளிய சமூக அமைப்பாகும். 24 மணிநேரமும் நம்மை அறியாமல் சுவாசிப்பது போலவே இலாபம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது இச்சமூக அமைப்பின் அடிப்படைத்தன்மையாகும். முதலாளிய உற்பத்தி தொடங்கிய சென்ற நூற்றாண்டுகளிலிருந்தே சந்தைக்கான பிரச்சனைகள் தொடங்கியது.


முதலாளிய உற்பத்தி முறையில் தேவைக்காக அன்றி இலாபத்திற்காக மட்டுமே உற்பத்தி செய்து குவிப்பது அதன் ஒருங்கிணைந்த அம்சம். அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகளை விற்க உள்நாட்டில் சந்தைகள் கிடைக்காமல் அவை தேங்கத் தொடங்கியது.


அது உலகப் பொருளாதார நெருக்கடியாக வெடித்தது. இந்நெருக்கடிகளைத் தீர்க்க நாடுகளின் சந்தைகளை பிடிக்கப் போய் அது முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களாக முடிந்தது அனைவரும் அறிந்த விசயமே.


இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், மீண்டும் சந்தைக்கான பிரச்சனை தலை தூக்கியபோது அது வளரும் நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஏற்றத்தாழ்வான வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் தீர்த்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் மூலமாக தீர்க்கப்படாமல் சந்தைப் பிரச்சினை நீடித்ததால் வளரும் நாடுகள் மீது புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கைகள் திணிக்கப்பட்டன.


இந்தியச் சூழல்


இந்தியாவைப் பொருத்தவரை, புதிய தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பின்னர், அந்நிய மூலதனம் வெள்ளமாகப் புகுந்து நாட்டையே சூறையாடுவதாகவும் நாடு காலனி நாடாக மாறுவதாகவும் போராட்டக் குரல்கள் எழுந்தன. ஆனால் நடந்ததோ அதற்கு எதிர்மாறானது.


இந்திய ஆளும் வர்க்கங்கள் புதிய தாராளவாதக் கொள்கைகளை தங்களின் நலன்களுக்கேற்பப் பயன்படுத்தி வளர்ந்தன.



 

இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்தியா மூலதனமிட்டு தொழில்கள் தொடங்கியது. அது மட்டுமின்றி ஆயுதங்களையும் இந்நிய அரசு ஏற்றுமதி செய்து வருகிறது.


ஏகாதிபத்திய நாடுகள் இயற்கை வளங்களையே மூலதனமாக கையாளத் தொடங்கியபோது இந்தியாவும் அந்த வரிசையில் சேர்ந்து கொண்டது.


மூலதனமான இயற்கையும், விளைவுகளும்


முதலில் நீர்வளத்தை வணிகமயமாக்கி அதை பெரும் மூலதனமாக்கிக் கொள்ளை இலாபம் ஈட்டி வருவதைத் தொடர்ந்து மணல், கனிம வளங்கள், வளங்கள், கடற்கரை என்ற வரிசையில் தற்போது கடலை மூலதனமாக்கிக் கூறுபோடத் தொடங்கியுள்ளனர்.


இயற்கையை மூலதனமாக்கி அது முதலீடு செய்யப்படும்போது கிடைக்கும் இலாபத்தைக் கொண்டு இயற்கையை மீண்டும் மறுமுதலீடு செய்து அதைப் பெருக்க முடியாது. அதாவது மூலதனம்  இலாபம்  மறுமுதலீடு  இலாபம் மறுமுதலீடு என்று இடைவிடாது தொடரும் இந்த சுழற்சியில் இயற்கையை மீண்டும் மீண்டும் மறுமுதலீடு செய்ய முடியாது. ஏனெனில் இயற்கை என்பது அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி அல்ல. இயற்கையை மூலதனமாக்கிச் சுரண்டப்படும்போது ஏற்படும் பேரிடர்கள் நமது கற்பனைக்கெட்டாதவை.


தொழில் நுட்பம்தான் தீர்வா?


இயற்கை மூலதனமாக்கப்படும்போது ஏற்படும் கடும் பாதிப்புகளுக்குத் தீர்வாக ஆளும் வர்க்கங்கள் தொழில்நுட்பங்களை முன்வைக்கிறார்கள். உதாரணமாக கார்ப்பரேட்டுகள் முன்வைக்கும் பசுமை தொழில்நுட்பமும் சரி, பூமி சூடேற்றத்திற்குக் காரணமாக உள்ள கால நிலைமாற்றத்திற்கும் தீர்வாக முன்வைக்கப்படும் தொழில்நுட்பமும் சரி அறிவியல் பூர்வமற்றது. சுற்றுச்சூழல் நெருக்கடியையும் அதனால் ஏற்படும் பேரிடர்களையும் ஒருபோதும் தொழில்நுட்பம் தடுக்காது. அது தீர்வும் ஆகாது. பசிக்குத் தீர்வாக மரபணு மாற்ற விதைகளை தொழில்நுட்பத்தை வைக்கிறார்கள்.


ஆனால் கடலைச் சுரண்டுவதினால் ஏற்படும் சூழலியல் நெருக்கடிகளுக்குத் தீர்வாக அவர்கள் தொழில்நுட்பத்தை வைக்க முடிவில்லை. அது முடியாது என்பதை உணர்ந்துள்ளனர்.


(கடலை) கொள்ளையடிப்பதற்கு ஒரு கொள்கை


தற்போது முன்வைக்கப்பட்டுள்ள தேசியகடல் மீன் வளர்ப்பு கொள்கை முன்வரைவின் முகப்புரையில் (தே.மு.வ) கொள்கையின் இலக்காக தேசத்தின் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்காகக் கடல் உணவு உற்பத்தியை நிலைத்த வகையில் உறுதிப்படுத்துவது, அதன் மூலமாகக் கடற்கரை சமூகத்தினர் கூடுதல் வருவாய்க்கும் இவர்களை தொழில் முனைவோராவதற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாகும்.


தே.மீ.வ கொள்கை முன்வைக்கும் மூல உத்தியானது (strategy) நிலைத்த முறையிலும் பொறுப்பான முறையிலும் கடல் உணவ உற்பத்தியை அதிகரிப்பது என்றும், சமூக பொருளாதார வளர்ச்சியையும், உணவு, ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பையும் பாலின சமூகத்துவத்தையும் உறுதிப்படுத்துவதாகக் கூறுகிறது.



 

கொள்கையின் இலக்கம் நோக்கமும் நல்ல நோக்கத்தைக் கொண்டதாக இருப்பது சரிதான். ஆனால் கொள்கையின் தொலைநோக்கும் (vision), செயல் பணியும் (Mission) அதற்கு எதிர்மாறாக உள்ளது மட்டுமின்றி, இது போன்ற நல்லெண்ண மூடுதிரையை விலக்கி உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்துவிடுகிறது.


கடல் பண்ணை உணவு உற்பத்தியின் வளர்ச்சி குழந்தைப் பருவத்தில் இருக்கிறது என்றும் அவற்றுக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்றும் கூறி கடல் மீன் மற்றும் பிற விலங்குகள் வளர்ப்பதற்கான தொழில்நுட்பங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை வணிகமயமாக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறது. கடல் மீன் மற்றம் இதர விலங்குகள் உற்பத்தியானது மற்ற நாடுகளில் வளர்ந்து வருவதாகவும் கூறுகிறது.


கொள்கை குறித்த விளக்கம்


கடல் மீன் மற்றும் பிற உயிரினங்கள் வளர்ப்பு என்பது இறால் வளர்ப்பின் சிறப்புப் பகுதியாகும். இதில் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கடல்வாழ் தாவரங்களையும் உயிரினங்களையும் கடலிலும் அலைகள் உள்ள பிற நீர்நிலைகளிலும் வளர்ப்பதும் அடங்கும்.


குஞ்சு பொறிப்பகம் போன்ற வசதிகளுடன் கடல் நீரைப் பயன்படுத்துவதற்காக கடற்கரையில் வசதிகளை ஏற்படுத்துவதும் இதில் அடங்கம் என்று விளக்கமளித்துள்ளது. இதில் பொருளாதார ரீதியாக முக்கியத்தும் வாய்ந்த கடல் வாழ் தாவரங்களையும் உயிரினங்களையும் செயற்கை முறையில் வளர்ப்பது என்பது கார்ப்பரேட்டுகளின் நலனுக்கானது என்பது மறைவானது அல்ல, வெளிப்படையானதாக உள்ளது.



 

கடல் மீன் வளர்ப்பில் 1) செய்கையாக மீன் பிடிப்பு, 2) மீன் பிடிப்பு, 3) அழிந்து வரக்கூடிய அபாயகரமான நிலையிலுள்ள கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பது, 4) கடல் உணவு அல்லாத இனங்களான கடல்பாசி, கடல் புற்கள், உயிரியல் எரிசக்தி, உயிரியல் இரசாயனப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பண்ணையில் வைத்து உற்பத்தி செய்வது மற்றும் கடல் வாழ் ஆடம்பர வண்ண மீன்கள் மற்றும் முத்து சிப்பிகள் போன்றவற்றை பண்ணை முறையில் வளர்ப்பதும் விவரிக்கப்பட்டுள்ளது.


மீனவ விவசாயி ஒரு இன அழிப்பு


இதில் முக்கியமானதும் அபாயகரமானதுமான விசயம் என்னவெனில், தேசிய கடல் மீன் வளர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவரையும் மீனவ விவசாயிகளாக அழைக்கலாம் என்று குறிப்பிடுகிறது. மீனவ விவசாயிகள் என்பது மீனவரல்லாத மற்ற சமூகத்தினரை மீன்பிடிக்க அனுமதிக்கும் பதமாகும். இதன் மூலம் மீனவர்கள் யார் என்ற கேள்வி எழுப்பி மீனவர்கள் இனத்தையே அழிப்பதாகும்.


இன்னொரு பக்கம் மீனவர் அல்லாத பிற சமூகத்தினரை மீன்பிடிக்க அனுமதிப்பதால் பெரும் கார்ப்பரேட்டுகள் நிலவுடையாளர்கள், விவசாயிகள், தொழிலதிபர்கள், கம்பெனிகள் இதில் இறங்குவார்கள். இதனால் மீனவர்களுக்கும் பிற சமூகத்தினரும் பெரும் மோதல்கள் ஏற்படலாம்.


இறுதியில் பணபலம், அதிகார பலம் உள்ள பிற சமூகத்தினரிடம் கார்ப்பரேட்டுகளிடமும் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக உள்ள மீனவர்கள் தோற்க நேரிடலாம்.


இதனையடுத்து மீனவர்கள் பிழைப்பு தேடி வேறு வேலைகளுக்குச் செல்ல நிர்பந்திக்கப்படுவர். ஆக மீனவர் இனத்தின் அழிப்பு என்பதே மீனவ விவசாயி என்ற வார்த்தையின் உள்ளார்ந்த பொருளாகும்.



 

மீனவரல்லாத மற்ற சமூகத்தினருக்கு மீன்பிடிப்பில் இறங்குவதை ஊக்குவிக்க மானியத்தையும் வழங்கி வருகிறது அரசு என்பது குறிப்பிடத்தக்கது.


கற்பிக்கப்படும் நியாயங்கள்


நாட்டின் ஊட்டச்சத்துத் தேவைக்கு பாரம்பரிய முறையில் பிடிக்கப்படும் மீன் இனங்கள் போதவில்லை. அது குறைந்து வருவதற்கு மாற்றாக செயற்கையான முறையில் கடல் மீன் வளர்ப்பு தேவைப்படுவதாகவும், அது வேகமான முறையில் வளர்ந்து வருவதாகவும் கூறுகிறது.


உள்நாட்டு குட்டைகளிலும் நீர் நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் இறால் உற்பத்தி 1951இல் 0.75 மில்லியன் டன்களாக இருந்தது. 2017இல் 4.9 மில்லியன் டன்களாக வளர்ந்து இவ்வரிசையில் இந்தியா, உலக நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதே போல கடல் சார்ந்த இறால் உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாக 0.5 மில்லியன் டன்களாக அதிகரித்து வருகிறது.


கடல்மீன் வளர்ப்பில் இறால் உற்பத்தியானது மிக வேகமாக வளர்ந்து வரும் துறை என்று குறிப்பிடுகிறது. 2016இல் கடல் மீன் வளர்ப்பு 28.7 மில்லியன் டன்கள் மீன் உணவை அளித்தது. இது உலகின் மீன் உணவு உற்பத்தியில் 35.8 விழுக்காடாகும். மொத்த கடல் மீன் வளர்ப்பு உற்பத்தியில் கடல்பாசி உள்ளிட்டு 58.7 மில்லியன் டன்களாகும். இது உலக உற்பத்தியில் 53.4 விழுக்காடாகும்.


இதுவரை கண்ட விபரங்கள் கடல் மீன் வளர்ப்பு எவ்வளவு இலாபம் கொழிக்கும் தொழிலாக வளர்ந்து வருகிறது என்பதற்கு சான்றாகும். இதுவே கடலும் சமுத்திரங்களும் மூலதனமாக மாற்றப்படுவதற்கான முக்கிய காரணமாகும். இந்நிலையில், இந்தியா 2030க்குள் 18 மில்லியன் டன்கள் மீன்கள் உற்பத்தி செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தற்போது 10 மில்லியன் டன்கள் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. கூடுதல் 8 மில்லியன் டன்கள் முழுமையான அளவில் இறால் தொழிற்சாலைகளின் உற்பத்தியிலிருந்தே எடுக்கப்பட உள்ளது. எனவே கடலும், உள்நாட்டின் நீர்நிலைகளும் வேட்டையாடப்படுவது உறுதிப்படுத்தப்படுகிறது.


இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் கூடுதல் தேவையானது இறால் உள்ளிட்ட கடல் மீன் வளர்ப்பின் மூலமாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். அது ஒன்றே ஒரே வழியாக உள்ளது என்று கூறுகிறது. இங்கு சமூகத்தின் வளர்ச்சிக்கு முதலாளியம் ஒன்றே தீர்வு என்று ஆணும் வர்க்கங்கள் கூறி வருவதை வலியுறுத்துவதாக உள்ளது.


கடலை கூறுபோடும் திட்டம் (Marine Spatial Plans - MSP)


கொள்கை (7.3)ல் மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, மாநில அரசுகள் கடலின் இடத்தைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். அதாவது கடலை பகுதி பகுதியாகப் பிரித்து கடலில் கூண்டு வைத்து மீன் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள், இறால் வளர்ப்பது, மூங்கில் பாத்தி கட்டி கடல்பாசி வளர்ப்பது போன்ற திட்டங்களை மேற்கொள்ளப்பட வேண்டும். கடலை தனித் தனிப் பகுதியாகக் கூறுபோடும் திட்டம் இது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


குத்தகை விடுவதற்கான கொள்கை


உள்நாட்டு நீர்நிலைகளில் பாத்திகட்டி மீன்வளர்ப்பு, இறால் வளர்ப்பு உள்ளட்டவற்றை அந்தந்த ஊர்களின் உள்நாட்டு அரசாங்கங்கள் மேற்கொள்ளும். கடல்களை குத்தகைக்கு விடுவதை கடற்கரை மாநில அரசுகள் மேற்கொள்ளும். இதற்கான அதிகாரங்கள் முறையே மாநில அரசுகளுக்கும் ஊராட்சி அரசாங்கங்களுக்கும் அளிக்கப்படும்.


கடல்பாசி வளர்ப்பில் (9.6) முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் அடையாளங் காணப்பட்டு, அவற்றுக்கான தொழில்நுட்பம் அமல்படுத்தப்படும். அதன் மூலம் உணவுக்கானதும் அது அல்லாததுமான கடல்பாசி வகைகள் வளர்க்கப்படும்.


குஞ்சுகளும் உணவுகளும்


நோய் எதிர்ப்பு குஞ்சுகளுக்கான வங்கிகளும் உருவாக்கப்படும். இதற்கும் நோய் எதிர்ப்பு பூச்சிக்கொல்லி எதிர்ப்பு உள்ளடக்கத்துடன் மரபணு மாற்றியமைக்கப்பட்ட விதைகளுக்கும், ஹார்மோன் ஊசி போடப்பட்ட பிராய்லர் கோழி குஞ்சுகளுக்கும் எந்தவித வேறுபாடுகளும் இல்லை. இவ்வகை மீன்கள் வளர்ந்து மற்ற இயற்கை மீன் இனங்களுக்கு மத்தியில் பரவினால் விபரீத விளைவுகள் ஏற்படும். இது தனியே ஆய்வு செய்யப்பட வேண்டிய விசயம்.


உணவைப் பொருத்தவரையில் செத்த மீன் குஞ்சுகளை உணவாகப் பயன்படுத்துவது கைவிடப்பட்டு அதற்குப் பதிலாக தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்கள் பயன்படுத்தப்படும்.


இறந்த மீன்களைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு உயிரினங்களையோ தாவரங்களையோ பயன்படுத்தினாலும் அவை நிலத்தில் ஊடுருவி நிலத்தடி நீரைப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.


நிதி மற்றும் காப்பீடு


கடலில் கூண்டு கட்டி மீன் மற்றும் பிற உயிரினங்களை வளர்ப்பதை ஊக்குவிக்க நபார்டு நிறுவனம் நிதி உதவியும் மானியமும் அளித்து ஊக்குவிக்கிறது. அந்த நிறுவனம்தான் மீனவ விவசாயிகளுக்கு மானியமும் அளித்து வருகிறது என்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


கடலில் கூண்டு வைத்து மீன் மற்றும் பிற உயிரினங்கள் வளர்ப்பது ஆபத்து மிகுந்ததாகும். புயல், சூறாவளி போன்ற இயற்கைப் பேரிடர்களால் கூண்டுகள் உடைந்து விடும் அல்லது அலையில் அடித்துச் செல்லப்படும் அபாயம் உண்டு என்பதால் இதுவரை எந்த நிறுவனமும் காப்பீடு அளிப்பதற்கு முன்வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.


இறுதியாக கொள்கையில் குறிப்பிடப்படும் முக்கிய அம்சங்களே கடலும் உள்நாட்டு நீர்நிலைகளும் இலாபத்திற்காகச் சூறையாடப்படப் போகிறது என்பதை தெளிவாக்குகிறது. இது கடல், கடற்கரை மற்றும் மீனவர்களை அழிக்கும் கொள்கையாகும்.


இப்புவியின் பிரமாண்டமான கூழல் அமைப்பான கடலுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள போராகும். இதை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

விண்ணகத்தில் அன்னை மரியாள் மற்றும் புனிதர்கள் பகுதி --16

 விண்ணகத்தில் அன்னை மரியாள் மற்றும் புனிதர்கள் 

பகுதி --16

************


உத்தரிக்கிற ஸ்தலம்:-

ஒரு மனிதன் விண்ணகம் செல்ல வேண்டுமென்றால் அவன் மாசற்றவனாக, தூயவனாக இருக்கவேண்டும்.

பாவத்தோடு மரிக்கும் ஒரு மனிதன் விண்ணகம் செல்லமுடியாது என்று நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

1யோவான் 5:16சொல்கிறது ‘’...சாவுக்குரிய பாவமும் உண்டு....’’ இந்த பாவம் ஒரு மனிதனின் ஆன்மாவை சாவுக்குள் வீழ்த்துகின்றது.

ஆனால் ஒரு மனிதனை சாவுக்குள் வீழ்த்தாத பாவமும் உண்டு அதுதான் அற்பபாவம் .அது சாவான பாவம் அல்ல 

''1 யோவான் 5:17 தீச்செயல் அனைத்துமே பாவம்; ஆனால் எல்லாப் பாவமுமே சாவுக்குரியவை அல்ல'.

'' இனி 1யோவான் 5:16 வசனத்தின் தொடக்கத்தை வாசிப்போம் 

''பாவம் செய்வோர் சாவுக்குரிய பாவம் செய்யவில்லை என்று கண்டால், அவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்ய வேண்டும். கடவுளும் அவர்களுக்கு வாழ்வு அருள்வார்.''

‘’

இங்கே ஒரு மனிதன் சாவுக்கேதுவான பாவம் செய்யாமல் வெறும் அற்பபாவம் மட்டும் செய்யும்போது அவனுக்காக இன்னொருவர் செபித்தால் அந்த செபத்தின் வழியாக அந்த பாவி மன்னிப்பை பெற்று வாழ்வு பெறுகின்றான்.

இங்கே அவன் வாழ்வு பெறுவது அந்த பாவியின் சொந்த செயலால் அல்ல மாறாக பிறருடைய செபத்தின் வழியாகத்தான்.

''யோவான் 4:37 நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள்.

38 இவ்வாறு "விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர்" என்னும் கூற்று உண்மையாயிற்று" என்றார்

இந்நிலையில் சாவுக்குரிய பாவம் செய்யாமல் வெறும் அற்ப பாவங்கள் செய்த ஒருவர் அந்த பாவத்தோடு இறந்து போகின்றார்.இந்த அற்பப் பாவங்களால் அவர் ஆன்மா கறைபடிந்து மாசற்ற நிலையை இழந்து நிற்கிறது.

இந்த பாவ கறைகளோடு அவரால் நேரடியாக விண்ணகம் செல்ல முடியுமா?முடியாது.ஆனால் இந்த பாவம் அவரது ஆன்மாவுக்கு ஆன்மீக சாவை வருத்தி வைப்பதில்லை.அப்படியானால் இந்த ஆன்மாவின் நிலை என்ன?

இந்த சூழ்நிலையில் இயேசுவால் உருவாக்கப்பட்டு[மத்தேயு:16:18-19],

தூய ஆவியால் வழிநடத்தபடுகின்ற[யோவான் 16:12-13], 

கத்தோலிக்க திருச்சபை

‘’உத்தரிக்கிற ஸ்தலம்’’

என்ற ஆன்மீக சுத்திகரிப்பு ஸ்தலத்தை குறித்த உண்மையை வெளிபடுத்துகின்றது.

‘’செக்கரியா 13: 8 நாட்டு மக்களுள் மூன்றில் இரு பங்கினர் வெட்டுண்டு மாள்வர்; மூன்றில் ஒரு பங்கினரே எஞ்சியிருப்பர்', என்கிறார் ஆண்டவர்.

9 இந்த மூன்றில் ஒரு பங்கினரையும் வெள்ளியை நெருப்பில் இட்டுத் தூய்மைப்படுத்துவது போல் தூய்மைப்படுத்துவேன்; பொன்னைப் புடமிடுவதுபோல் புடமிடுவேன்; அவர்கள் என் பெயரை நினைத்து மன்றாடுவார்கள்; நானும் அவர்கள் மன்றாட்டிற்குச் செவி கொடுப்பேன்; 'இவர்கள் என் மக்கள்' என்பேன் நான், 'ஆண்டவர் எங்கள் கடவுள்' என்பார்கள் அவர்கள்."

இதேபோல் மாபெரும் துன்பங்கள் வேதனைகள் என்ற நெருப்பினால் அற்பபாவத்தோடு இறந்து போகின்றவரின் ஆன்மாக்கள் சுத்திகரிக்க படுகின்ற ஆன்மீக நிலை தான் உத்தரிக்கிற ஸ்தலம் 

''1 கொரிந் 3 : 13 ஆனால், அவரவருடைய வேலைப்பாடு தெரிந்துவிடும்; தீர்ப்பு நாள் அதைத் தெளிவுப்படுத்தும். அந்நாள் நெருப்பு மயமாய் வெளிப்படும். அந்நெருப்பு அவரவருடைய வேலை எத்தகையது என்பதைக் காட்டும்.

14 ஒருவர் கட்டியது நிலைத்து நின்றால் அதற்கான கூலியை அவர் பெறுவார்.

15 ஒருவர் கட்டியது தீக்கிரையாகுமானால் அவர் இழப்புக்குள்ளாவார். ஆனால் நெருப்பில் அகப்பட்டுத் தப்பியவர்போல் அவர் மீட்கப்படுவார்''.

இந்த ஆன்மாக்களுக்காக இவ்வுலகில் வாழ்பவரால் ஒப்புகொடுக்கபடும் செபங்களாலும் ,திவ்ய பலிகளாலும் புண்ணிய அறச்செயல்களாலும்,அவர்களுடைய இந்த மாபெரும் துன்பங்களையும் வேதனைகளையும் குறைக்கமுடியும்.

''1யோவான்5:16.......அவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்ய வேண்டும். கடவுளும் அவர்களுக்கு வாழ்வு அருள்வார்''

உத்தரிக்கிற ஸ்தலத்தில் தூய்மைபடுத்துவதின் வழியாக ஒரு ஆன்மா பரிசுத்த வெண்மையை தரித்து கொள்கிறது

‘’திருவெளிப்பாடு 3:5 வெற்றிபெற்றோர் இவ்வாறு வெண்ணாடை அணிவிக்கப்பெறுவர். வாழ்வின் நூலிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கிவிட மாட்டேன். மாறாக, என் தந்தை முன்னிலையிலும் அவருடைய வானதூதர்கள் முன்னிலையிலும் அவர்களின் பெயர்களை அறிக்கையிடுவேன்''

இவர்கள் பரிசுத்தம் என்ற வெண்ணாடை தரிக்கபட்டவர்கள் மோட்சம் சேரத் தகுதியானவர்கள்.இவர்கள் தான் நிறைவுபெற்ற நேர்மையாளர்களின் ஆவிகள் இத்தகைய நிறைவுபெற்ற நேர்மையாளர்களின் ஆவிகளை தான் எபிரேயர் 12:23-ல் வாசித்தோம்.

இவ்வாறு உத்தரிக்கிற ஸ்தலம் என்பது அற்பபாவத்தோடு இறக்கும் ஒருவரின் ஆன்மா சுத்திகரிக்கப்படும் உலை.

அந்த துன்ப வேதனை என்ற தீச்சூளையில் சுத்திகரிகப்பட்ட பின்பு ஆன்மாக்கள் மோட்சம் அடைகின்றனர் என்பது தான் உண்மை,

ஆகவே மரித்த ஆன்மாக்களுக்காக திருப்பலி ஒப்புகொடுப்பது,செபிப்பது,தானதர்மங்கள் செய்வது போன்றவைகளை அதிகமாக செய்திட மறவாதீர்கள்

************

உத்தரிக்கிற ஸ்தலம்:-

ஒரு மனிதன் விண்ணகம் செல்ல வேண்டுமென்றால் அவன் மாசற்றவனாக, தூயவனாக இருக்கவேண்டும்.

பாவத்தோடு மரிக்கும் ஒரு மனிதன் விண்ணகம் செல்லமுடியாது என்று நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

1யோவான் 5:16சொல்கிறது ‘’...சாவுக்குரிய பாவமும் உண்டு....’’ இந்த பாவம் ஒரு மனிதனின் ஆன்மாவை சாவுக்குள் வீழ்த்துகின்றது.

ஆனால் ஒரு மனிதனை சாவுக்குள் வீழ்த்தாத பாவமும் உண்டு அதுதான் அற்பபாவம் .அது சாவான பாவம் அல்ல 

''1 யோவான் 5:17 தீச்செயல் அனைத்துமே பாவம்; ஆனால் எல்லாப் பாவமுமே சாவுக்குரியவை அல்ல'.

'' இனி 1யோவான் 5:16 வசனத்தின் தொடக்கத்தை வாசிப்போம் 

''பாவம் செய்வோர் சாவுக்குரிய பாவம் செய்யவில்லை என்று கண்டால், அவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்ய வேண்டும். கடவுளும் அவர்களுக்கு வாழ்வு அருள்வார்.''

‘’

இங்கே ஒரு மனிதன் சாவுக்கேதுவான பாவம் செய்யாமல் வெறும் அற்பபாவம் மட்டும் செய்யும்போது அவனுக்காக இன்னொருவர் செபித்தால் அந்த செபத்தின் வழியாக அந்த பாவி மன்னிப்பை பெற்று வாழ்வு பெறுகின்றான்.

இங்கே அவன் வாழ்வு பெறுவது அந்த பாவியின் சொந்த செயலால் அல்ல மாறாக பிறருடைய செபத்தின் வழியாகத்தான்.

''யோவான் 4:37 நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள்.

38 இவ்வாறு "விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர்" என்னும் கூற்று உண்மையாயிற்று" என்றார்

இந்நிலையில் சாவுக்குரிய பாவம் செய்யாமல் வெறும் அற்ப பாவங்கள் செய்த ஒருவர் அந்த பாவத்தோடு இறந்து போகின்றார்.இந்த அற்பப் பாவங்களால் அவர் ஆன்மா கறைபடிந்து மாசற்ற நிலையை இழந்து நிற்கிறது.

இந்த பாவ கறைகளோடு அவரால் நேரடியாக விண்ணகம் செல்ல முடியுமா?முடியாது.ஆனால் இந்த பாவம் அவரது ஆன்மாவுக்கு ஆன்மீக சாவை வருத்தி வைப்பதில்லை.அப்படியானால் இந்த ஆன்மாவின் நிலை என்ன?

இந்த சூழ்நிலையில் இயேசுவால் உருவாக்கப்பட்டு[மத்தேயு:16:18-19],

தூய ஆவியால் வழிநடத்தபடுகின்ற[யோவான் 16:12-13], 

கத்தோலிக்க திருச்சபை

‘’உத்தரிக்கிற ஸ்தலம்’’

என்ற ஆன்மீக சுத்திகரிப்பு ஸ்தலத்தை குறித்த உண்மையை வெளிபடுத்துகின்றது.

‘’செக்கரியா 13: 8 நாட்டு மக்களுள் மூன்றில் இரு பங்கினர் வெட்டுண்டு மாள்வர்; மூன்றில் ஒரு பங்கினரே எஞ்சியிருப்பர்', என்கிறார் ஆண்டவர்.

9 இந்த மூன்றில் ஒரு பங்கினரையும் வெள்ளியை நெருப்பில் இட்டுத் தூய்மைப்படுத்துவது போல் தூய்மைப்படுத்துவேன்; பொன்னைப் புடமிடுவதுபோல் புடமிடுவேன்; அவர்கள் என் பெயரை நினைத்து மன்றாடுவார்கள்; நானும் அவர்கள் மன்றாட்டிற்குச் செவி கொடுப்பேன்; 'இவர்கள் என் மக்கள்' என்பேன் நான், 'ஆண்டவர் எங்கள் கடவுள்' என்பார்கள் அவர்கள்."

இதேபோல் மாபெரும் துன்பங்கள் வேதனைகள் என்ற நெருப்பினால் அற்பபாவத்தோடு இறந்து போகின்றவரின் ஆன்மாக்கள் சுத்திகரிக்க படுகின்ற ஆன்மீக நிலை தான் உத்தரிக்கிற ஸ்தலம் 

''1 கொரிந் 3 : 13 ஆனால், அவரவருடைய வேலைப்பாடு தெரிந்துவிடும்; தீர்ப்பு நாள் அதைத் தெளிவுப்படுத்தும். அந்நாள் நெருப்பு மயமாய் வெளிப்படும். அந்நெருப்பு அவரவருடைய வேலை எத்தகையது என்பதைக் காட்டும்.

14 ஒருவர் கட்டியது நிலைத்து நின்றால் அதற்கான கூலியை அவர் பெறுவார்.

15 ஒருவர் கட்டியது தீக்கிரையாகுமானால் அவர் இழப்புக்குள்ளாவார். ஆனால் நெருப்பில் அகப்பட்டுத் தப்பியவர்போல் அவர் மீட்கப்படுவார்''.

இந்த ஆன்மாக்களுக்காக இவ்வுலகில் வாழ்பவரால் ஒப்புகொடுக்கபடும் செபங்களாலும் ,திவ்ய பலிகளாலும் புண்ணிய அறச்செயல்களாலும்,அவர்களுடைய இந்த மாபெரும் துன்பங்களையும் வேதனைகளையும் குறைக்கமுடியும்.

''1யோவான்5:16.......அவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்ய வேண்டும். கடவுளும் அவர்களுக்கு வாழ்வு அருள்வார்''

உத்தரிக்கிற ஸ்தலத்தில் தூய்மைபடுத்துவதின் வழியாக ஒரு ஆன்மா பரிசுத்த வெண்மையை தரித்து கொள்கிறது

‘’திருவெளிப்பாடு 3:5 வெற்றிபெற்றோர் இவ்வாறு வெண்ணாடை அணிவிக்கப்பெறுவர். வாழ்வின் நூலிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கிவிட மாட்டேன். மாறாக, என் தந்தை முன்னிலையிலும் அவருடைய வானதூதர்கள் முன்னிலையிலும் அவர்களின் பெயர்களை அறிக்கையிடுவேன்''

இவர்கள் பரிசுத்தம் என்ற வெண்ணாடை தரிக்கபட்டவர்கள் மோட்சம் சேரத் தகுதியானவர்கள்.இவர்கள் தான் நிறைவுபெற்ற நேர்மையாளர்களின் ஆவிகள் இத்தகைய நிறைவுபெற்ற நேர்மையாளர்களின் ஆவிகளை தான் எபிரேயர் 12:23-ல் வாசித்தோம்.

இவ்வாறு உத்தரிக்கிற ஸ்தலம் என்பது அற்பபாவத்தோடு இறக்கும் ஒருவரின் ஆன்மா சுத்திகரிக்கப்படும் உலை.

அந்த துன்ப வேதனை என்ற தீச்சூளையில் சுத்திகரிகப்பட்ட பின்பு ஆன்மாக்கள் மோட்சம் அடைகின்றனர் என்பது தான் உண்மை,

ஆகவே மரித்த ஆன்மாக்களுக்காக திருப்பலி ஒப்புகொடுப்பது,செபிப்பது,தானதர்மங்கள் செய்வது போன்றவைகளை அதிகமாக செய்திட மறவாதீர்கள்

தாஜ் மஹால்

 தாஜ் மஹால்: ஷாஜஹானால் 3 முறை அடக்கம் செய்யப்பட்ட மும்தாஜ் - ஒரு முகலாய காதல் வரலாறு


(உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், 24வது கட்டுரை இது)


ஷாஜகானின் உயரம் சற்று குறைவாக இருந்தாலும், அவர் பருமனான உடல் மற்றும் பரந்த தோள்கள் பெற்றவர். இளவரசராக இருந்த வரை, தந்தை ஜஹாங்கீர், தாத்தா அக்பர் போன்று மீசையை மட்டுமே வைத்திருந்தார். அரசரான பிறகு தாடி வளர்க்கத் தொடங்கினார்.


ஷாஜகானின் ஆட்சிக் காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தின் பெருமை அதிகம் வெளிப்பட்டது. அவர் தனது தந்தையைப் போல அடிக்கடி மனநிலை மாறும் தன்மை கொண்டவரில்லை. அவர் மென்மையாகவும், கண்ணியமாகவும் பேசுபவர், எப்போதும் முறையான மொழியில் பேசினார்.


முகலாயர்களைப் பற்றிய புத்தகமான 'எம்பரர்ஸ் ஆஃப் த பீகாக் த்ரோன்- த சாகா ஆஃப் தி கிரேட் முகல்ஸ்' என்ற புத்தகத்தை எழுதிய ஆபிரகாம் இரலி, "சுய கட்டுப்பாடு ஷாஜகானுக்கு மிக உயர்ந்த குணமாக இருந்தது. இது மது மீதான அவரது அணுகுமுறையில் பிரதிபலிக்கிறது. 24 வயதில், அதுவும் முதன்முதலாக மதுவை சுவைக்க தந்தை வற்புறுத்தியபோது அதையும் சுவைத்தார். அடுத்த ஆறு வருடங்கள் அரிதாகவே அருந்தினார். 1620-ம் ஆண்டு தெற்கு நோக்கிப் பயணத்தை மேற்கொண்டபோது முழுவதுமாக அந்தப் பழக்கத்தைக் கை விட்டு, மொத்த மதுபான இருப்பையும் சம்பல் ஆற்றில் ஊற்றினார்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


ஷாஜஹான் ஒரு பழமைவாத முஸ்லிமாக வாழ்ந்தாலும், அவர் ஒரு துறவி போல வாழவில்லை. புகழுக்கும் பெருமைக்கும் அவரது தந்தை ஜஹாங்கீரைப் போலவே இவரும் மிகவும் ஆசைப்பட்டார். இத்தாலிய வரலாற்றாசிரியர் நிக்கோலாவோ மனூச்சி, "ஷாஜஹான் அரண்மனையிலிருந்து தனது கவனத்தைத் திசைதிருப்ப இசை மற்றும் நடனத்தை நாடினார். அவர் பலவிதமான இசைக்கருவிகள் மற்றும் கவிதைகள் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரே நன்றாகப் பாடுவார். கஞ்சன் என்றழைக்கப்படும் நடனப் பெண்களின் குழு ஒன்று எப்போதும் தயாராக இருந்தது," என்று எழுதுகிறார்.


ஷாஜஹானின் அராஜகங்கள் குறித்த பல கதைகள் உலவினாலும் அவரது மனைவி மும்தாஜ் மஹல் உயிருடன் இருக்கும் வரை, அவர் முழுவதுமாக அவருக்கான அர்ப்பணிப்புடன் இருந்தார். அவருடைய மற்ற மனைவிகளுக்குக் கூட அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் இல்லை.


சும்மா இருப்பதற்கே

சும்மா இருப்பதற்கே 


ஒரு மனிதன் குன்றின் உச்சியின் மேல் நின்று கொண்டிருந்தான்.

அந்த பக்கமாக சென்று கொண்டிருந்த மூன்று வழிப் போக்கர்கள் அதை கண்டார்கள்.

அவர்களில் ஒருவன், "அவன் வளர்த்த பிராணி எதையோ காணமல் போக்கி விட்டான் போலிருக்கிறது. அதை மேலே இருந்து தேடிப் பார்க்கிறான் போல் தோன்றுகிறது," என்றான், தன் தோழர்களிடம்.

"இல்லையில்லை, அவன் காற்று வாங்குகிறான். பார்த்தால் தெரியவில்லையா?" என்றான், மூன்றாவது ஆள்.

மூன்று பேரும் தங்கள் தங்கள் யூகத்தைப் பலமாக வற்புறுத்தி பேசினார்கள்.

கடைசியில் ஒருவன், " அவனையே கேட்டு விடுவோம். விவாதம் எதற்கு?" என்றான்.

மற்றவர்கள் அதற்கு ஒப்புக் கொண்டார்கள். மூவரும் குன்றின் உச்சிக்கு சென்றார்கள்.

உச்சியை அடைந்ததும், முதலாமவன் கேட்டான்; நீங்கள் வளர்த்து வந்த பிரியமான பிராணியை இழந்து விட்டீர்கள் அல்லவா?   அதைத்தானே இங்கிருந்து தேடுகிறீர்கள்?"

" இல்லை. எதுவும் காணாமல் போகவில்லை," என்றான், அவன்.

உடனே இரண்டாமவன் மகிழ்ச்சியுடன், " உங்கள் நண்பரைத்தானே தேடுகிறீர்கள்?" என்றான்.

அதற்கு அவன், "இல்லை. நான் என் நண்பனைத தேடிப் பார்க்க இங்கு நிற்கவில்லை," என்றான்.

அதைக் கேட்ட மூன்றாவது ஆளுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டு விட்டது. " காற்று வாங்கத்தானே இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?" என்று உற்சாகமாக கேட்டான்.

" இல்லை ஐயா, நான் காற்று வாங்க இங்கே நிற்க வில்லை," என்றான், அவன்!

மூவருக்கும் ஒரே வியப்பு. " அப்படியானால் எதற்காக இங்கே நிற்கிறீர்கள்?" என்று மூவரும் கேட்டார்கள்.

அதற்கு அவன் சொன்னான் "சும்மா!"

சொல்லும் பொருளுமற்றுச் சும்மா இருப்பதற்கே 

அல்லும் பகலுமெனக்கு ஆசை பராபரமே"

-தாயுமானவர்.

13 ஆம் திருத்தம்

13 ஆம் திருத்தத்தினை ஆரம்ப புள்ளி


13 ஆம் திருத்தத்தினை ஆரம்ப புள்ளியாகவும்/ இடைக்கால தீர்வாக ஏற்றுகொள்ளும்  தமிழ் தரப்புகள்  மாகாணசபையில் உள்ள காணி அதிகாரங்கள் ஊடக காணி அபகரிப்பை தடுக்க முடியும் என வாதிடுகிறார்கள்  

ஆனால் 13 ஆம் திருத்தத்தின் கீழ் அரசகாணிகள் தொடர்பில் மாகாணசபைகளுக்கு  குறிப்பிடத்தக்க எந்த அதிகாரம் எதுவும் இல்லை. 

அரச காணிவழங்கல் தொடர்பில் மாகாண சபை கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்பதனைத் தவிர மத்திய அரசாங்கத்திடமே அரச காணிகள் மீதான முழுமையான கட்டுப்பாட்டை 13ஆம் திருத்தம் வழங்குகின்றது.

அரச காணிகள் தொடர்பில் இருக்கும் இந்த பெயரளவு அதிகாரங்கள் கூட மகாவலிஅதிகார சபை சட்டத்தின் கீழ் வரும் திட்டங்களின் காணிகள் தொடர்பில் மாகாணசபைக்கு இல்லை

நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திலிருந்த  2017 ஆம் ஆண்டு தை மாதம்  கொக்கிளாய்,கருநாட்டுக்கேணி கரையோரப் பகுதியில் அரச காணியில் அடாத்தாக குடியிருந்தனர் எனக் கூறி இரண்டு சிங்கள மீனவர்களுக்கு எதிராக கரைத்துரைப்பற்று பிரதேச செயலகத்தினால் அரச காணி மீளப் பெறுதல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது  

வழக்கை விசாரித்த முல்லைத்தீவு மாவட்ட  நீதவான் நீதிமன்றம் மேற்படி இரண்டு சிங்கள மீனவர்களையும் காணிகளை விட்டு வெளியேறுமாறு  2018 ஆம் ஆண்டு தை மாதம் கட்டளை வழங்கியது. 

அதன் பின்னர் காணிகளில் அடாத்தாக குடியிருந்த இரு சிங்கள மீனவர்களும் உயர் நீதிமன்றிற்கு அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்தனர்.  ஆனால்   குறித்த  வழக்கை எடுத்துக் கொள்ள  உயர் நீதிமன்றம் மறுத்து கட்டளையிட்டது.

ஆனால் 2018 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின்  மாகாவலி அதிகார சபை மேற்படி இரண்டு சிங்கள மீனவர்களுக்கும் காணி அனுமதிப் பாத்திரத்தை வழங்கி அவர்களின் சட்டப்பூரவமற்ற காணி அபகரிப்பை சட்டப்பூரவமாக்கி இருந்தது 

மேற்படி நடவடிக்கையானது மத்திய அரசாங்கத்தின் சட்டமான அரச காணி  சட்டத்தின் கீழ் உரிய தமிழ் அரச அதிகாரிகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் நீதிமன்றத் தீர்ப்புக்களையும் கேலிக்குரியதாக்கி இருந்தது 

அதாவது அரச காணியில் அடாத்தாக குடியேற்றப்பட்ட குடியமர்ந்த ஒருவரை நீதிமன்றம் மூலம் வெளியேற்றிய பின்னர் அதனை மீறி நல்லாட்சி அரசாங்கத்தின் மகாவலி அதிகார சபை அந்நபர்களுக்கு காணி உரிமத்தினை வழங்கி இருந்தது 

இந்த  சம்பவதின் மூலம்  இலங்கையின் விசித்திரமான சட்டக் கட்டமைப்பில் மகாவலி அதிகாரசபைக்குள்ள எல்லையற்ற அதிகாரங்களை  சட்ட ரீதியாக விளங்கிக் கொள்ள முடியும் . அதே போல 13 ஆம் திருத்தத்தின் ஊடக மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் காணி அதிகாரங்கத்தின் பலவீனங்களையும்  அரசியல் ரீதியாகவும்  விளங்கிக் கொள்ள உதவும். 

இந்நிலையில் 13 ஆம் திருத்தத்தினை ஆரம்ப புள்ளியாகவும்/ இடைக்கால தீர்வாக ஏற்றுகொள்ளும் தரப்புகள் மாகாணசபை ஊடக காணி அபகரிப்பை தடுக்க முடியும் என ஏதன் அடிப்படையில்  கதை சொல்லுகின்றார்கள் என தெரியவில்ல 

விஞ்ஞானப் பொங்கலாகவும் மாறுமா...? தைப் பொங்கல்.

 விஞ்ஞானப் பொங்கலாகவும் மாறுமா...? தைப் பொங்கல்.


அனைத்து உறவுகளுக்கும் எனது இனிய தைப் பொங்கல் திருநாள் வாழ்த்துகள். நாம் அனைவரும் இணைந்து இந்த வருடத்தின் முதல் நாளை கொண்டாடுவோம் தமிழர் புதுவருட நாளாக கொண்டாடுவோம்.

இயற்கை எமக்கு கொடுத்த சூரியனுக்கு நன்றி தெரிவிப்பதும் எமது உணவு உற்பத்தியிற்கு ஆதாரமாக எம்முடன் வாழும் எமது கால் நடைகளுக்கு மரியாதை செலுத்துவதற்குமான நாளாக தைப் பொங்கல் கொண்டாப்படுகின்றது. 

உணவை உற்பத்தி செய்யும் உழைப்பாளர்கள் இயற்கையிற்கு நன்றி செலுத்தும் விழாவாக நாளாக தைப் பொங்கல் தமிழராலும் கொண்டாப்பகின்றது.

எமது அறுவடையில் கிடைத்த தானியங்களை வைத்து வெண் பொங்கல் என்று ஆரம்பித்து இன்று சக்கரைப் பொங்கலாகவும் இனிதிருப்பதே இந்த தைத்திருநாள்.

அறுவடையின் பின்பு எமது மகிழ்வை திருப்த்தியை நன்றியை தெரிவிக்கும் ஒரு நாளாக கூடி கும்மாளம் அடித்து கொண்டாடும் ஒரு விழாதான் இந்தத் தைத்திருநாள்.

அறுவடை நடைபெற்று முடிந்த உடன் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக உழவர்களால் அவர் சார்ந்து வாழ்பவர்களால் உணவு உற்பத்தியாளர்களால் கொண்டாப்படும் திருநாளாக இது தெற்காசிய நாடுகளில் பருவ காலத்திற்கு ஏற்ப கொண்டாடப்படுகின்றது.

இதே மாதிரியாக உலகின் வெவ்வேறு பகுதிகளிலும் அவரவர்களின் பருநிலைகளுக்கு ஏற்ப அறுவடையைக் கொண்டாடும் தினங்கள் கொண்டாடப்பட்டும் வருகின்றன.

எங்கெங்கும் வெவ்வேறு தினங்களில் இது கொண்டாடினாலும் ஒரு விடயத்தில் எல்லோரும் ஒன்றுபட்டு இருப்பதை நாம் காண முடியும்.

அதுதான் பூமியின் இருப்பிற்கு அதில் வாழும் உயிரினங்கள் மரங்கள் ஏனைய ஜந்துக்களின் வாழ்விற்கும் ஆதாரமாக இருப்பது அதற்கான ஒரே இயற்கை சக்தியை ஆற்றலை வழங்கும் சூரியனே என்பதாகும்.

இதனை உணர்ந்த மனித குலம் சூரியனுக்கு நன்றி செலுத்தியே இந்த விழாவை முன்னெடுக்கின்றனர்.

வாழ்க்கைச் சுழற்சியில்.... பூமிச் சுழற்சியில் ஒரு வருடத்திற்கான முதல் நாளாக இது எமக்கு எம் தாயகத்திற்கு அமைவதினால் இதனை நாம் தமிழ் புதுவருடம் என்று கற்பிதம் செய்கின்றோம். வருடத்தின் ஆரம்ப நாளை புத்தாண்டு நாள் என்று கொண்டாடுவதில் அர்த்தங்கள் நிறையவே உள்ளன.

அதனால் தமிழர் ஆகிய நாங்கள் தைப் பொங்கல் உழவர் தினம் தமிழ்ப் புத்தாண்டு என்று பலதுமாக இணைந்து கொண்டாகின்றோம்.

ஐதரன்(H) அணுக்களால் ஆன இன்னொரு வடிவ அணுக்கள் அதி உயர் காற்றழுத்தம் அதி உயர் வெப்பத்தில் இணைந்து(Fusion) ஹீலியத்தை(He) உருவாக்கும் போது வெளியிடப்படும் மிக மிக அதிக சக்தியை... ஆற்றலை.... சூரியன் எங்களுக்கு வழங்கி இந்த பிரபஞ்சத்தின் வாழ்தலுக்கான ஆதாரமாக இருக்கின்றது. 

எமது மூதாதையருக்கு சூரியனில் நடைபெறும் விஞ்ஞானம் தெரிந்திராவிட்டாலும் இந்த சூரியனே ஏதோ ஒரு வழியில் எம் உயர் வாழ்தலுக்கான சக்தியை ஆற்றலை வழங்குகின்றது என்பதை புரிந்து கொண்டுள்ளனர்.

{குவான்டம் விஞ்ஞானம் தெரிந்தவர்கள் இதனை வாசிக்கவும்..... எமது மூதாதையருக்கு சூரியனில் H(ஐதரசன்) ம்,  3H(or T) (H3, மூன்று ஐதரசன், Tritium) உம் இணைந்து He( 4He)(ஹீலியம்)ஐ உருக்வாகி வெளியிடப்படும் சத்திதான் சூரியன் வழங்கும் சக்திக்கான காரணம் என்ற விஞ்ஞானம் தெரிந்திராவிட்டாலும் இந்த சூரியனே ஏதோ ஒரு வழியில் எம் உயர் வாழ்தலுக்கான சக்தியை ஆற்றலை வழங்குகின்றது என்பதை புரிந்து கொண்டுள்ளனர். இன்னும் துல்லியமாக கூறுவதாயின்..... சூரியனில் ஏகப்பட்ட விடையங்கள் இயற்கையாகவே நடக்கிறது . ஒன்றறை கோடி (C) சென்ரிகிறேட் வெப்பநிலையில் இருபத்தையாயிரம் கோடி காற்று அழுத்தத்தில் Hydrogen  ( H )  + Hydrogen  ( H )  (ஹைட்ரஜன் ) இணைவால் மற்றும் டியூட்ரியும் 2H + ட்ரிடியம் 3H  ( Deuterium2H  . Tritium 3H  ) ஓன்று சேர்வதால்  ஈலியம் He  (Helium) ஹீலியமும் + சக்தியும் கிடைக்கிறது }

கிரேக்க தத்துவ ஞானிகளும்... ஏனைய விஞ்ஞானிகளும் பஞ்சாங்கம் பார்க்கும் சோதிடர்களும் எமக்கும் அப்பால் ஏதோ ஒரு சக்தி இருக்கின்றது என்று நம்புகின்றவர்களும் இந்த சூரியனே எமது ஆதாரம் என்று நம்புவதை மறுக்கவில்லை.

இயற்கையை நாசம் செய்யும் மனித குலத்தால் அல்லது வேறுவிதமாகவோ... விண்கற்களாலோ இந்த பூமிப் பந்தின் ஆயுள் காலம் மிகக் குறைவானதாகி பூமி இல்லாமல் போகலாம். 

ஆனால் அதற்கு பின்னாலும் இந்த சூரியன் இருக்கத்தான் போகின்றது அது வழங்கும் சக்தி காலப் போக்கில் இல்லாமல் போகலாம் என்பது கோடான கோடி வருடங்களைத் தாண்டித்தான் ஏற்படலாம் என்கின்றது விஞ்ஞானம். 

ஆனால் எந்த இயற்கைச் சமநிலை மாற்றமும் சூரியனை அதன் இயலபான வாழும் காலத்தை(Age of Sun: 4.5 Billion years) மாற்றயமைக்க மாட்டாது என்பதே விஞ்ஞானம் அதனை மெஞ்ஞானமும் வழி மொழிகின்றது.

அந்த வகையில் யாரும் அசைக்க முடியாத சக்தியாக உயர்ந்த சக்தியாக ஆற்றலாக கவனிக்கப்படும் பொருளாக வணக்கத்திற்குரிய பொருளாக சூரியன் இருப்பதில் நிறையவே அர்தங்கள் உண்டு

அது வழங்கும் சக்தி... ஆற்றல்.. இல்லையேல் இந்த பூமிப் பந்தில் எந்த உயிரினங்களும் வாழ முடியாது.

H, 2H உம் 3H உம் சேர்ந்து He உருவாகும் போது வெளிவிடும் சக்தியே சூரியனால் வழங்கப்படுவதில் உள்ள மிகச் சிறப்பு இந்த சேருதலில் சக்தி வெளியிடுவதில் எந்த கழிவுகளும் உருவாகி சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் செயற்பாடுகள் நடைபெறுவதில்லை என்பதாகும்.

தற்போது மனித குல வாழ்விற்காக பூமியில் உருவாக்கப்படும் மின்சாரம் தொடக்கம் எல்லாவற்றிலும் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் விடயங்கள் அளவு ரீதியில் வித்தியாசப்பட்டாலும் இருக்கின்றன. இவை கட்டுக்கடங்காது ஒரு ஒழுங்கிற்கு அப்பால் மீறப்படும் போது ஏற்படும் விளைவுகளே பூமியின் வாழ் காலத்தை குறுகிக் கொண்டு வருகின்றது.

இவற்றையெல்லாம் மீறி சூரியன் நிமிர்ந்துதான் நிற்கினறான். காரணம் அவன் வழங்கும் சக்திகான அணுக்களின் இணைப்பில் ஏந்த மாசும் ஏற்படாமல் இருப்பதுவே முக்கிய காரணம்.

இதனாலே மனித குலம் தற்போது சூரியனில் நடைபெறும் சக்தி உருவாக்க முறையை பூமியில் உருவாக்கி சக்தியை பெற்றால் பூமி மாசுபடுவதில் இருந்து எம்மை காப்பாற்றி இந்த பூமிப் பந்iதின் வாழ் காலத்தை எண்ணற்ற ஆண்டுகளாக மாற்றலாம் என்று முயற்சிக்கின்றார்கள்.

அதாவது பூமியில் அங்காங்கே சிறிய சிறிய சூரியன்களை உருவாக்குதல் என்று தொழில் நுட்ப பரீட்சாத்த வேலைகளை செய்கின்னர். இதுவரையில் சீனாவும் கொரியாவும் இதில் ஆரம்ப கட்ட வெற்றிகளை கண்டிருந்தாலும் அவர்கள் இதனைப் மக்களுக்கான பயன்பாட்டிற்கு கொண்டுவருதற்கு இன்று பல ஆண்டுகள் உழைக்க வேண்டும்.

பாரிய பொருள் செலவாகும் இதே மாதிரியான ஒரு திட்டத்தை உலகில் உள்ள 30 இற்கு மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்குலதற்கான வேலைகளை கடந்த 10 வருடங்களாக பிரான்ஸ் பரிசோதைக் கூடம் அமைத்து செயற்பட்டு வருகின்றனர். இது ஆரம்பி நிலையில்தான் உள்ளது.

இந்த முயற்சிகள் வெற்றி பெறும் என்று விஞ்ஞானம் கூறுகின்றது..... நம்புகின்றது. அது எதிர் காலத்தில் நிறைவேறினால் கிராமத்திற்கு ஒன்றாக ஏன் வீட்டிற்கு ஒன்றாக செயற்கை சூரியன்கள் இருக்கும் சூழல் ஏற்படும். அப்போது எனது பொங்கல் தைப் பொங்கல் எமது பெரியவரான இயற்கைச் சூரியனும் இந்த செயற்கைச் சூரியனுக்கும் என்றாகிப் போகும் காலம் வந்துவிடும்.

அப்போது நாம் இரு பானை வைத்து முற்றத்திலும்.. முகட்டிலும்.... அல்லது விட்டத்தில் இயற்கைச் சூரியனுக்கும் செயற்கைச் சூரியனுக்கும் பொங்கல்களை பொங்குவோம். கொண்டாடுவோம்

அதுவரை இந்த பூமிப் பந்தின் வாழ் காலத்தை தாங்கிப் பிடிக்க இயற்கையை மாசுபடுத்தாத பாதுகாக்கும் செயற்பாட்டில் மனித குலம் ஈடபடவேண்டும்.

நாம் சூரியனுக்கு செலுத்தும் நன்றி... வணக்கம்... இந்த சுற்றுச் சூழலை மாசுகபடுத்தாத இயற்கையை அனுசரித்த வாழ்கை முறையினூடும் வாழப் பழகுவதே ஆகும்.

இயற்கைப் பொங்கலாக இருக்கும் இந்தப் பொங்கல் விஞ்ஞானாத்தின் வளர்ச்சியினால் விஞ்ஞானப் பொங்கலாகவும் இணைந்து பயணிக்கும் நிலைக்கு எதிர்காலம் அமையுமோ என்பதே தற்போதைய கேள்வியாக விஞ்ஞான வளர்ச்சி பார்க்கப்படுகின்றது.

நமக்குத் தெரியாத உண்மைகள்...!

  நமக்குத் தெரியாத உண்மைகள்...!


சித்திரை 1

ஆடி 1

ஐப்பசி 1

தை 1

இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?

"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு" என்று  சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.

என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை... என்றுதான் சொல்ல வேண்டும்.

வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....

ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!

பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...

அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...

இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!

சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?

சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)

அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1". ஆடி பிறப்பு (solstice). 

மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)

மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை 1". பொங்கள். (solistice)

இந்த வானியல் மாற்றங்களையும்,  அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும்  நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...

சித்திரை (equinox) - தமிழ் புத்தாண்டு.

ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு.

ஐப்பசி (equinox)- தீபாவளி.

தை (winter solstice) - பொங்கல்.

இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...

நமது முன்னோர்கள்  "தன்னிகரற்ற" மாபெரும் அறிவாளிகள் . மிகவும் மகத்தானவர்கள்.

🌷 சித்திரை 1 மட்டுமே, தமிழ் புத்தாண்டு.... 

🙏 கு பண்பரசு

மரியாளுக்கு மரியாதை ஒரு விவிலிய பார்வை பகுதி -- 6

 மரியாளுக்கு மரியாதை ஒரு விவிலிய பார்வை பகுதி -- 6

************

மரியாளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் அடுத்த
நற்செய்திப் பகுதியை எடுத்துக் கொள்வோம் (மத் 12:46-50). A இதுவும் மரியாளுக்கு எதிரானது அல்ல. மாறாக, அவளுக்கு ஏன் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்கு மேலும் வலு
சேர்ப்பதாகவே அமைந்தள்ளது. யார் என் தாய்? என்று
கேட்டதோடு, இயேசு நின்று விடவில்லை. தொடர்ந்து,விண்ணகத்திலுள்ள
தந்தையின்திருவுளத்தை
நிறைவேற்றுபவரே,சகோதரரும்
சகோதரியும் தாயும்ஆவார்" என்றும் அவர் கூறுகிறார். அதன் பொருள் என்ன? என்னைப் பெற்றெடுத்ததால் மரியாள் எனக்குத் தாயல்ல. அதற்கு முன்பே, தந்தையின் திருவுளத்திற்கு இதோ உமது அடிமை. உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்" என்று தன்னை கையளித்த பொழுதே, அவள் எனக்குத் தாயாகி விட்டாள்" என்று இயேசு கூறுவதாகத்தானே பொருள்! இந்த இரு முறைகளிலும் இயேசுவுக்குத் தாயாகும் பாக்கியம் மரியாளுக்கு மட்டுமே உண்டு. சீடர்கள் கடவுளின் திருவுளத்திற்கு ஏற்றபடி வாழ்ந்தால், இயேசுவின் தாயாகவோ, சகோதர சகோதரியாகவோ மாற முடியும். ஆனால் யாரும் இயேசுவைப் பெற்றெடுத்த தாயாக மாறி விட முடியாது. மாதாவின் இந்த இரண்டு தாய்மைகளையும் பற்றி புனித அகுஸ்தினார் அழகாகக் குறிப்பிடுகிறார்: இயேசுவை உதரத்தில் கருத்தாங்கும் முன்பே, மரியாள் அவரை தன் இதயத்தில் கருவாக்கினார்". மட்டும்,
புனித எலிசபெத்தும், இதனால்தான் இயேசுவைப் பெற்றெடுக்கும்
முன்னரே, மரியாளை ஆண்டவரின் தாய்" என்று அழைக்கிறாள். பொதுவாக, குழந்தையைப் பெற்றெடுத்த பின்தானே, ஒரு பெண்ணை தாயென அழைக்க முடியும்? நடைமுறை பழக்கங்கள் மரியாளின் விக்ஷயத்தில் மாறுகின்றன. மற்றொரு கோணத்தில் பார்த்தால், இது மரியாளின் தாய்மையின் இரகசியத்தை சுட்டிக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது. மரியாள் மனித முறையினால் தாயாகவில்லை. கடவுளின் விருப்பத்திற்கு " ஆம்" என்று சொன்னதால்தான் தாய்மையை அடைந்தாள், அவளைப் போல, யாரெல்லாம் ஆண்டவரின் வார்த்தைக்கு ஆம்" என்று பதில் சொல்லி, அதன்படி வாழ்கிறார்களோ, அவர்களெல்லாம் முடியும் என்று, மரியாளின் தாய்மையைத்தான் இயேசு மறைமுகமாக எடுத்துக் காட்டுகிறார். என்றும் இப்பகுதியைப் புரிந்து கொள்ளலாம். இவ்வாறு தன்னைப் பெற்றெடுத்த தாயை, தன் சீடர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக முன்நிறுத்துகிறார். மரியாளை முன்னிறுத்தி அது நடைமுறை சாத்தியம்தான் என்று அடித்துச் சொல்கிறார்.
(தொடரும்)

மெஹ்தி திபாஜ்

 மெஹ்தி திபாஜ்


ஈரானில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட ‘மெஹ்தி திபாஜ்’ தேச துரோகக் குற்றம் இழைத்ததாக சிறையில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். நீதிமன்றத்தில் அவர் அளித்த வாக்குமூலமே மரண வாக்குமூலமானது...

“தான் பின்பற்றும் மதத்தை மனிதனே தெரிந்து கொள்கிறான்; ஆனால்

தன்னை பின்பற்றும் கிறிஸ்தவனை கிறிஸ்துவே தெரிந்து கொள்கிறார்.

கிறிஸ்தவன் என்றால் கிறிஸ்துவினுடையவன் என்று பொருள்.

கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை விடுவதைக் காட்டிலும் சுவாசத்தை விடுவது அதிசிறந்தது. ஏனென்றால் கிறிஸ்துவை தொடர்பவனுக்கு சாவும் ஆதாயமே. கிறிஸ்துவும் தமது மரணத்தினால் அநேக மக்களை ஆதாயப்படுத்துனார். மரணத்திலும் குருவை தொடர்பவனே சிறந்த சீடன்.

இவ்வுலகின் கோடி ஜனம் கொடும் வெறியோடு என்னை எதிர்த்தாலும், நானே வெற்றியாளன்! ஏனென்றால் மரணத்தையே வென்றவர் எனது பட்சமாய் இருக்கிறார்.

நான் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறேன். அற்புதமான கிரியைகளை என் வாழ்வில் நடத்தி தமது நேச நிழலில் என்னை பாதுகாத்த கிறிஸ்துவோடு கடந்த 45 வருடங்களாக பயணித்து வருகிறேன்.

‘தானியேலையும் அவனது தோழர்களையும் பாதுகாத்த அதே கர்த்தர் இந்த 9 ஆண்டுகால சிதைக்கும் சிறையில் என்னை காத்தார். ‘ஒரு கன்னத்தில் அடிப்பவனுக்கு மறு கன்னத்தை காட்டு’ எனும் உன்னத சித்தாந்தத்தை சித்திரவதை நடுவில் கற்றுத் தந்தார்.

“எல்லா தீர்க்கர்களிலும் இயேசு ஒருவரே உயிரோடு எழுந்தார். இன்றும் நம்முடைய பாவங்களை மன்னிக்கும் இரட்சகராக ஜீவிக்கிறார். எனது வாழ்வை அவர் கரத்தில் தந்துவிட்டேன்.

அவரிடம் சரணடைந்து விட்ட எனக்கு,

வாழ்வு என்பது இயேசுவுக்காக வாழும் வாய்ப்பு

சாவு என்பது இயேசுவுடன் வாழும் வாய்ப்பு”

மேற்குல இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பாஸ்டர்.

மெஹ்தி திபாஜ்’ அவர்கள் கிறிஸ்தவ நூல்கள் மற்றும் வானொலி நிகழ்ச்சிகளை பார்சி மொழியில் மொழிபெயர்த்தார். இஸ்லாமிய நம்பிக்கைகளை மறுதலித்தார் எனும் குற்றத்தின் அடிப்படையில் 1985 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

ஈரானில் அரசியல் மற்றும் மத தலைவர்களின் நிர்பந்தத்தினால் கிறிஸ்தவர்கள் கொலை தண்டனைக்கு ஆளாக்கப்படுவது சகஜம். அவர் சிறையில் இருக்கும் போது அன்னாரது மனைவி அசீஸ் வேறொரு இஸ்லாமியரை மறுமணம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார்.

இரண்டு ஆண்டு காலம் கைகால்களை அசைக்க முடியாத துவாரத்திற்குள் அடைத்து வைக்கப்படிருந்த பாஸ்டர் ‘மெஹ்தி திபாஜ்’க்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.

இந்த அவல சங்கதியை உலகறிந்ததும், உலக நாடுகளின் அழுத்தம் ஈரானில் மேல் விழுந்தது. வேறுவழியின்றி ஈரான் அரசாங்கம் அவரை விடுதலை செய்தது.

விடுதலை செய்யப்பட்ட அவர் சிலநாட்களிலேயே பூங்கா ஒன்றில் இறந்து கிடந்தார். மதத் தலைவர்கள் சிலர் அவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது.

தந்தையை இழந்து தவிக்கும் பாஸ்டர் மெஹ்தி அவர்களின் நான்கு பிள்ளைகளும் கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை இழக்காமல் நெருக்கத்திலும் சாட்சியாய் வாழ்ந்து வருகிறார்கள்.

(அ)நீதிமன்றத்தில் பாஸ்டர் மெஹ்தி அவர்கள் மொழிந்த வைர வரிகளை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

“இயேசு கிறிஸ்துவிடம் சரணடைந்து விட்ட எனக்கு,

வாழ்வு என்பது இயேசுவுக்காக வாழும் வாய்ப்பு;

சாவு என்பது இயேசுவுடன் வாழும் வாய்ப்பு”