சும்மா இருப்பதற்கே
ஒரு மனிதன் குன்றின் உச்சியின் மேல் நின்று கொண்டிருந்தான்.
அந்த பக்கமாக சென்று கொண்டிருந்த மூன்று வழிப் போக்கர்கள் அதை கண்டார்கள்.
அவர்களில் ஒருவன், "அவன் வளர்த்த பிராணி எதையோ காணமல் போக்கி விட்டான் போலிருக்கிறது. அதை மேலே இருந்து தேடிப் பார்க்கிறான் போல் தோன்றுகிறது," என்றான், தன் தோழர்களிடம்.
"இல்லையில்லை, அவன் காற்று வாங்குகிறான். பார்த்தால் தெரியவில்லையா?" என்றான், மூன்றாவது ஆள்.
மூன்று பேரும் தங்கள் தங்கள் யூகத்தைப் பலமாக வற்புறுத்தி பேசினார்கள்.
கடைசியில் ஒருவன், " அவனையே கேட்டு விடுவோம். விவாதம் எதற்கு?" என்றான்.
மற்றவர்கள் அதற்கு ஒப்புக் கொண்டார்கள். மூவரும் குன்றின் உச்சிக்கு சென்றார்கள்.
உச்சியை அடைந்ததும், முதலாமவன் கேட்டான்; நீங்கள் வளர்த்து வந்த பிரியமான பிராணியை இழந்து விட்டீர்கள் அல்லவா? அதைத்தானே இங்கிருந்து தேடுகிறீர்கள்?"
" இல்லை. எதுவும் காணாமல் போகவில்லை," என்றான், அவன்.
உடனே இரண்டாமவன் மகிழ்ச்சியுடன், " உங்கள் நண்பரைத்தானே தேடுகிறீர்கள்?" என்றான்.
அதற்கு அவன், "இல்லை. நான் என் நண்பனைத தேடிப் பார்க்க இங்கு நிற்கவில்லை," என்றான்.
அதைக் கேட்ட மூன்றாவது ஆளுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டு விட்டது. " காற்று வாங்கத்தானே இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?" என்று உற்சாகமாக கேட்டான்.
" இல்லை ஐயா, நான் காற்று வாங்க இங்கே நிற்க வில்லை," என்றான், அவன்!
மூவருக்கும் ஒரே வியப்பு. " அப்படியானால் எதற்காக இங்கே நிற்கிறீர்கள்?" என்று மூவரும் கேட்டார்கள்.
அதற்கு அவன் சொன்னான் "சும்மா!"
சொல்லும் பொருளுமற்றுச் சும்மா இருப்பதற்கே
அல்லும் பகலுமெனக்கு ஆசை பராபரமே"
-தாயுமானவர்.
No comments:
Post a Comment