Saturday, 30 May 2026

 ஒரு விவசாயி ஒரு செத்த பன்றியைத் தூக்கி ஒரு பாழ்ங்கிணற்றுக்குள் போட்டார். அடுத்த சில நிமிடங்களில், எழுபது முதல் எண்பது எலிகள் அந்தப் பன்றியைத் தின்பதற்காக கிணற்றுக்குள் குதித்தன. 

ஆரம்பத்தில் எல்லாம் எளிதாகத் தெரிந்தது.

உணவைக் கண்டதும் அவை அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு பாய்ந்தன. ஆனால், பன்றியை உண்டு முடித்த பிறகுதான் அவற்றுக்கு ஒரு அதிர்ச்சியான உண்மை புரிந்தது... 

அந்தக் கிணற்றின் சுவர்கள் மிகவும் உயரமாகவும், வழுவழுப்பாகவும் இருந்தன. தப்பித்து வெளியேற வழியே இல்லை.

மெல்ல மெல்ல உணவு தீர்ந்தது.

பசி அதிகரித்தது.

அந்தக் கிணறு ஒரு போர்க்களமாக மாறியது.

உயிர்பிழைக்க வேண்டும் என்ற வெறியில், அந்த எலிகள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்ளத் தொடங்கின. ஒன்றை ஒன்று கொன்று, உயிருடன் தின்னத் தொடங்கின.

சில நாட்களுக்குப் பிறகு, அந்தக் கிணற்றில் ஒரே ஒரு எலி மட்டுமே மிஞ்சியது.

அதன் கண்கள் ரத்தத்தைப் போல சிவந்திருந்தன. 

அப்போது அந்த விவசாயி ஒரு கயிற்றைக் கீழே இறக்கி, அந்த எலியை மேலே தூக்கி, மீண்டும் வயல்வெளிக்குள்ளேயே விட்டார்.

அந்த விவசாயிக்கு அந்த எலி மீது பரிதாபம் ஏற்பட்டதா?

நிச்சயமாக இல்லை.

பெரும்பாலான மக்களுக்குப் புரியாத ஒரு ரகசியம் அந்த விவசாயிக்குத் தெரிந்திருந்தது...

அந்த எலி இப்போது தன் இனத்தையே தின்று பழகிவிட்டது. அது இனி ஒருபோதும் தானியங்களைத் தேடிப் போகாது. மாறாக, மற்ற எலிகளையே வேட்டையாடித் தின்னும்.

இதுதான் "பிரித்தாளும் சூழ்ச்சி" (Divide and Rule) என்பதன் உண்மையான அர்த்தம். 

நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை:

உச்சியில் இருப்பவர்கள் ஒருபோதும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதில்லை.

அதற்குப் பதிலாக, கீழே இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் வெறுக்கவும், சண்டையிடவும், அழித்துக் கொள்ளவும் தேவையான சூழலை அவர்கள் உருவாக்குகிறார்கள். 

உண்மையான சூத்திரதாரிகள் பின்னால் அமர்ந்து இந்த வேடிக்கையைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

எப்போது இரண்டு பேர் தங்களுக்குள் சண்டையிடுகிறார்களோ, அதன் லாபம் எப்போதும் மூன்றாவதாக ஒருவனுக்கே போய்ச் சேரும்... 

திரைக்குப் பின்னால் இருந்து ஆட்டத்தை ஆட்டுவிப்பவனுக்கே அந்த வெற்றி.

இந்த சதியை நன்றாக புரிந்துகொள்ளுங்கள்.

இதை நீங்கள் உணரவில்லை என்றால்... நீங்களும் ஏற்கனவே ஒரு கிணற்றுக்குள் தான் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

வரலாறு தன்னை மீண்டும் தோற்றுவிக்க

 

🙏வரலாறு தன்னை மீண்டும் தோற்றுவிக்கும்


வரலாறு என்பது நடந்து முடிந்த சம்பவங்களை தற்போது காணப்படுகின்ற பல்வேறு தரப்பட்ட சாட்சியங்களின் பின்னணியில் உய்த்துணர்ந்து
நறுவு கின்ற அறிவியலாகக் காணப்படுகின்றது.
அந்தவகையில் இலங்கையின் வரலாற்றை
தொகுத்துரைக்கின்ற நூல்களாக மகாவம்சம் (பெரிய)
சூளவம்சம் (சிறிய) என இரு நூல்கள் ஆதாரமாக
அமைகின்றன.
அந்தவகையில் இலங்கையின் வரலாற்று மாந்தர்களின் தொடக்கமாக விஜயன் மற்றும் அவரது தோழர்களின் வருகையில் அதைத் தொடர்ந்து அவர்கள் வந்து இறங்கிய இடம் அவர்கள் சந்தித்தமுதல் இலங்கைப் பெண் அதை தொடர்ந்தான சம்பவங்கள் என நீண்டுசெல்லும்
வரலாற்றில் அவ்வாறு வந்தவர்கள் வந்து இறங்கிய இடம் அவர்கள் சந்தித்த பெண் தொடர்பாக நிலவி வருகின்றகருத்துக்களை இடப்பெயர் ஆய்வு எனும் பொறிமுறையைப் பின்பற்றி பல்வேறு சான்றாதாரங்களுடன் நிறுவுவதற்கு நூலாசிரியர் ஜெகன் அவர்கள் எடுத்திருக்கின்ற இந்த முயற்சியை மனதார பாராட்டுகிறேன்.
இவர் இதற்கும் முன்னரும் “உலக ஆரம்பமும் மன்னார்
மாவட்டமும் என்னும் வரலாற்று நூலை வெளியீடு செய்திருந்தார் தொழில் முறை பத்திரிகையாளராக இருக்கின்றபடியினால் அவர் சந்திக்கின்றவர்களிடமிருந்தும் அவர் பயணிக்கின்ற இடங்களில் கண்டுணர்ந்ததின் அடிப்படையிலும் தான் யாத்த நூலின் மையக் கருத்தை தர்க்கபூர்வமாக நிறுவுவதற்கு முயன்றுள்ளார்.
குறிப்பாக தான் வாழ்கின்ற அவருக்கு மிகவும் பரிட்சையமான பிரதேசத்தின் இடப்பெயர்களையும் கம்பராமாயணம் போன்ற வரலாற்று இலக்கியங்களின்
பின்னணியில் சீர்தூக்கி ஒப்பு நோக்கி நிறுவ முயன்றுள்ளமை மிகவும் சிறப்பானதுடன் இதனைத் தொடர்ந்து வருகின்றவர்களுக்கு ஆய்வுக்கான
களமாகவும் இது விரிகின்றது. வரலாற்றை புறந்தள்ளிய மானிட வாழ்வு வரலாற்றில் நிலைத்திருக்காது என்பதற்கு அமைய மன்னார் மாவட்டத்தில்
மாதோட்ட பிரதேசம் இலங்கையின் வரலாற்றில் மிகவும் சிறப்பான ஒரு இடத்தை புவியியல் ரீதியாக பெற்றிருக்கின்றது.
இதற்கூடாகவே இலங்கைக்கான வருகையை எல்லோரும் மேற்கொண்டுள்ளனர் என்பது
தெளிவு. அதிலும் இன்று நீரில் மூழ்கி கிடக்கின்ற கட்டுக்கரை பிரதேசம் திருக்கேதீஸ்வரத்தை அண்டிய மாந்தை பிரதேசம் என்பன அக்காலத்தில் சிறப்புற விளங்கிய பிரதேசங்களாக இருந்திருக்கின்றன. வரலாற்றின் போக்கில் பயணிக்கின்ற போது பெரிதும் மாற்றத்தை சந்திக்காது.
இன்றுவரை காணப்படுகின்றது இடப்பெயர்கள் என்பதை பிரித்தானியரின் வருடாந்த ஆண்டறிக்கைகளை பார்க்கின்றபோது அதிசயப்படத்தக்க ஒன்றாகும். காலங்கள் பல கடந்து ஓடினாலும் வாய்மொழியாக வருகின்ற பெயர்கள் அன்றும் இன்றும் என்றும் வழங்கி வரும் இது வரலாற்றில் சிறிதும் மாறாதது என்பது மட்டுமல்ல இலக்கியங்களிலும் அவ்வாறே உள்ளது என்பதை தனது ஆய்வுக்கு வழிகாட்டியாக வைத்திருப்பத காலத்திற்கு பொருத்தமானதாகும் ஏனெனில் தொல்லியல் சான்றுகள் உட்பட ஏனைய சான்றுகள் காலத்திடம் அழிவடைந்தும் பல்வேறு விதமான வியாக்கியானங்கள்
மற்றும் வாதப் பிரதிவாதங்களுக்கு ஊடாக சொல்ல வேண்டியிருக்கிறது.
ஆனால் இடப்பெயர் ஆய்வு அப்படி அல்ல. அவை வழிவழியாகவே அதே பொருளில் அதே கருத்தில் அமைந்திருக்கின்றன.
எனினும் வட்டார வழக்கு மற்றும் பிரதேச மொழி ஆளுமை போன்றவற்றினால் சிறிய
சிதைவுகளுக்கு உட்பட்டாலும் அதன் வேர்கள் மற்றும் பொருள் விளக்கங்கள் அவ்வாறே உள்ளன.
எனவே இடப்பெயர் ஆய்வின் மூலம் நூலின் மையக்கருத்தை நிறுவுகிறார் நூலாசிரியரின் இந்த முயற்சியை பாராட்டுவதோடு இவர் இன்னும் இத்துறையில் பல நூல்களைப் படைக்க வேண்டும். இதனை தொடக்கப் புள்ளியாகக் கொண்டு இன்னும் பலரின் வருகையையும் விரும்பி என்னுரையை நிறைவு செய்கின்றேன்
'வரலாறு தன்னை மீண்டும் தோற்றுவிக்கும் உலகில்'
மாணிக்கவாசகர் சிறிஸ் கந்தகுமார்

அரசியல் மேடைகளில் ஈழத்தமிழர் 01

 அரசியல் மேடைகளில் ஈழத்தமிழர் 01 


அரசியல் மேடைகளில் ஈழத்தமிழர் பாசமும், மாவீரர் தியாகமும் பேசி, புலம் பெயர் தமிழர்களின் கோடிக்கணக்கான பணத்தைச் சுருட்டி வரும் ஒரு பிம்பத்தின் பின்னால், இத்தனை கொடூரமான துரோகங்களும், கொலைகளும் ஒளிந்திருக்கின்றனவா என்ற அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது நாம் தமிழர் கட்சியின் ஆரம்பகால வரலாறு.

மேடைகளில் "ஆமைக்கறி சாப்பிட்டேன்", "புலிகளோடு இருந்தேன்" என்று சீமான் கட்டவிழ்த்து விடும் கதைகளுக்கு நடுவே, நிஜமாகவே களத்தில் நின்று போராடிய ஒரு 'உண்மையான புலி வீரன்' எப்படி சதி செய்து வீழ்த்தப்பட்டார்? அதன் பின்னால் இருக்கும் அயோக்கியத்தனம் என்ன? என்பதைத் தோலுரித்துக் காட்டவேண்டிய கட்டாயத்தில் உள்ளது ஈழத் தமிழ் சமுதாயம். 

யார் இந்த உண்மையான புலி வீரன் சுப. முத்துக்குமார்?

திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த சுப. முத்துக்குமார், வெறும் 18 வயதிலேயே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது ஈர்ப்பு கொண்டு, இலங்கை சென்று 4 ஆண்டுகள் கடுமையான ராணுவப் பயிற்சி பெற்றவர்.பல சண்டைக்களங்களை கண்டவர். 

புதுக்கோட்டை பாவாணன் வீட்டில் தங்கி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மணமேல்குடி போன்ற கடலோரப் பகுதிகளில் இருந்து பெட்ரோல், டீசல், ரத்தம், உணவு, மருந்துகளைத் தன் உயிரைப் பணையம் வைத்து கடல் மார்க்கமாக ஈழத்திற்குத் தடையின்றி அனுப்பியவர்.

1994 ஆகஸ்ட் 15-ல் வேலூர் கோட்டை முகாமில் இருந்த 80 புலிகளைத் தப்ப வைக்க, 90 அடி சுரங்கம் தோண்டிக் கொடுத்ததில் முத்துக்குமாரின் பங்கு அளப்பரியது. ஆபத்தான அகழியில் இருந்து 28 போராளிகளைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்தார்.

1995-ல் சென்னை மத்திய சிறையில் இருந்து தப்பிய, பிரபாகரனின் முக்கிய மெய்க்காப்பாளரான 'ரோமியோ' உள்ளிட்ட 5 புலிகளைப் பாதுகாப்பாக ஈழத்திற்குக் கொண்டு சேர்த்தவர் இந்த முத்துக்குமார் தான்.

இறுதிக்கட்டப் போரின் போது கூட, தன் கார் விபத்துக்குள்ளான நிலையிலும், உயிரைக் கொடுத்து ஈழத்திற்கு பெருமளவான மருந்துகளையும் உபகரணங்களையும் அனுப்பி வைத்தார் முத்துக்குமார்.

ஈழப்போரும் முடிவடைந்தநு.

ஈழப் போர் முடிவடைந்த நிலையில், 'காங்கிரஸ் எதிர்ப்பு' என்ற முழக்கத்தோடு சீமான் களம் இறங்கியபோது, முத்துக்குமாரும் அதில் தன்னை இணைத்துக் கொண்டார். ஆனால், இங்கே தான் பார்ப்பன லாபியின் சதி அரங்கேறியது.

கட்சியில் தலமை ஒருங்கிணைப்பாளராக முத்துக்குமாரே இருந்தார். 

ஆனால் கட்சி எப்படி ஆரம்பித்தது என்ற மறைக்கப்பட்ட உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.

சி.பா. ஆதித்தனார் தொடங்கிய "நாம் தமிழர்" என்ற கட்சியின் பெயரை, சிவந்தி ஆதித்தனிடமிருந்து சீமானுக்கு வாங்கிக் கொடுத்ததே துக்ளக் சோ மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி தான். இவர்கள் இருவரும் தீவிர தமிழின மற்றும் புலி எதிர்ப்பாளர்கள் என்பது ஊரறிந்த ரகசியம்.

மத்திய உளவுத்துறைக்கும் பார்ப்பன கும்பலுக்கும் அடிபணியும் ஒரு 'கைப்பாவை' மட்டுமே தமிழகத்தில் தேவைப்பட்டது. அந்த இடத்தில் சீமான் கச்சிதமாகப் பொருந்தினார். 

ஆனால், கட்சியில் முத்துக்குமார் போன்ற ஒரிஜினல் புலிகள் இருக்கும் வரை, புலம் பெயர் தமிழர்களை ஏமாற்றிப் பணம் பறிக்க முடியாது என்பதையும், தமிழர்களை அடுத்தகட்டத்துக்கு நகர்வதை தடுக்க முடியாது என்பதையும் சீமானும், மத்திய உளவுத்துறையும் உணர்ந்தனர்.

கட்சியில் முத்துக்குமாரின் செல்வாக்கு உயர்ந்தது, சீமானுக்கும் அவனது அள்ளு சில்லுகளுக்கும் பொறுக்கவில்லை. மீண்டும் முத்துக்குமார் வளர்ந்தால் நமக்குத் தொல்லை என்று நினைத்து, பழைய கடத்தல் வழக்குகளைத் தூசி தட்டினர். 

அதுவும் வேலைக்காகாத போது, மத்திய உளவுத்துறையின் ஆசியோடு, இயக்கப் பகைமை கொண்ட ஆட்களை வைத்து சுப. முத்துக்குமார் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

முத்துக்குமார் கொலை வழக்கில் அவரோடு இருந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், இரண்டே வருடங்களில் அந்த வழக்கு ஒன்றுமில்லாமல் போனது. தன் கட்சியின் முக்கியத் தூணாக இருந்த முத்துக்குமாரின் கொலைக்கு, சீமான் ஒரு மேல்முறையீடு கூட செய்யவில்லை.

இந்த அசிங்கமான அரசியல் மற்றும் கொலையின் பின்னணி முழுமையாகத் தெரிந்ததால்தான், அப்போதே கட்சியின் 17 முக்கிய நிர்வாகிகள் சீமானை 'அயோக்கியன்' என்று காறி உமிழ்ந்துவிட்டு கட்சியை விட்டு வெளியேறினர்.

முத்துக்குமாரைக் கொன்றதோடு இவர்களின் வெறி அடங்கவில்லை. முத்துக்குமாரின் சொத்துக்களையும், புலம் பெயர் தமிழர்களிடம் இருந்து வரும் கோடிக்கணக்கான பணத்தையும் முழுமையாகக் கைப்பற்ற சீமானும் அவனது அல்லக்கைகளும் அசிங்கமான திட்டங்களைத் தீட்டினர்.

முத்துக்குமாரின் மனைவி மாதரசியை (அப்போது இளம் வயதுப் பெண்) எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று 25 வயது வித்தியாசம் பாராமல் சீமான் முயன்றான். ஆனால், பெண் வீட்டார் அதற்கு சம்மதிக்கவில்லை.

உடனே, சீமான் தன் அசிங்கமான தொடர்புகளை மறைக்கவும், அந்தப் பெண்ணின் வசமிருந்த அதிகாரத்தைக் கைப்பற்றவும் தன் விசுவாசமான அல்லக்கை 'சாட்டை' துரைமுருகனுக்கு மாதரசியைத் திருமணம் செய்து வைத்தான்.

இதன் மூலம் முத்துக்குமாரின் மனைவி 'சாட்டை'யின் மனைவியாக்கப்பட்டார். முத்துக்குமார் வகித்த கட்சியின் முக்கியப் பதவியை 'சாட்டை' துரைமுருகன் எடுத்துக் கொண்டான்.

சிங்கள அரசு பாலச்சந்திரனைச் சுட்டுக் கொன்றதைப் போல, போராளியின் வாரிசு நாளை வளர்ந்து வந்து அமைப்பைக் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காக, முத்துக்குமாரின் வாரிசு கருவிலேயே அழிக்கப்பட்டது. (பாதிக்கப்பட்ட நடிகை விஜயலட்சுமியைப் பலமுறை கருக்கலைப்பு செய்ய வைத்த காமுகன் சீமானுக்கு இது ஒன்றும் புதியதல்ல).

மேலும், மக்கள் யாரும் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்திவிடக் கூடாது என்பதற்காக ஈழத்தில் மாவீரர் துயிலுமில்லங்களைச் சிங்கள ராணுவம் இடித்ததைப் போல, சுப. முத்துக்குமாரின் கல்லறையையும் இடித்து நொருக்கி, தடம் தெரியாமல் அழித்தது இந்த சீமான் - பார்ப்பனக் கும்பல்.

ஈழத்து மண்ணில் மாபெரும் விடுதலைப் போரை வழிநடத்திய தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மட்டும் இன்று உயிருடன் இருந்திருந்தால், தமிழ்நாட்டின் தார்மீக அரசியல் களத்தை வழிநடத்தும் பொறுப்பை சுப. முத்துக்குமார் போன்ற ஒரு மெய்யான களப் போராளியிடம் தான் ஒப்படைத்திருப்பார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 

உயிரைப் பணையம் வைத்து ஆயுதம் கடத்திய, சிறை உடைத்த, தலைவரின் மெய்க்காப்பாளரையே மீட்டெடுத்த ஒரு நிஜமான புலியின் கைகளில்தான் ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிர்காலமும், இளைஞர்களின் நல்வாழ்வும் பாதுகாப்பாக இருந்திருக்கும். 

அதை விடுத்து, வெற்று மேடைப் பேச்சையே முதலீடாகக் கொண்ட ஒரு சினிமாக்காரனிடம் ஒட்டுமொத்த இனத்தின் தலைவிதியையும் தலைவர் நிச்சயம் ஒப்படைத்திருக்க மாட்டார்.

களத்தில் நின்ற சுப. முத்துக்குமார் உள்ளிட்ட உண்மையான புலிகள் அனைவரும் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டனர், இனி தங்களை எவரும் கேள்வி கேட்க முடியாது என்று உறுதி செய்த பின்னரே, சீமானின் அண்டப்புழுகுகளும் ஆகாசப்புழுகுகளும் கட்டுப்பாடின்றி வெளிவரத் தொடங்கின. 

முத்துக்குமார் என்ற ஒரிஜினல் புலி உயிரோடு இருந்திருந்தால், சீமானின் 'ஆமைக்கறி', 'பூனைக்கறி' கதைகளுக்கு முறையாக பச்சமட்டையால் பதில் கொடுக்கப்பட்டிருக்கும்.

முத்துக்குமாரின் மர்ம மரணமும், அவரது மனைவியையும் பதவியையும் சாட்டை துரைமுருகன் ஆட்டையப் போட்ட அசிங்கமும், ஆர்.எஸ்.எஸ் - பார்ப்பன லாபியின் பின்னணியும் வெளிச்சத்திற்கு வந்ததன் மூலம், சீமானின் பின்னால் இருக்கும் "பார்ப்பனக் குடுமி" இன்று உலகத் தமிழர்களின் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது.

முக முத்துவிற்கு அஞ்சலி செலுத்தத் தெரிந்த சீமானுக்கு, நாம் தமிழர் கட்சியின் உண்மையான பலமாக இருந்த விடுதலைப்புலி மாவீரன் சுப. முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்த மனமில்லை. அவரைத் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்து வருகிறான்.

ஆனால், தமிழர்கள் முட்டாள்கள் அல்ல. ஈழத்தமிழர்களின் குருதியையும், கண்ணீரையும் காசாக்கிப் பிழைப்பு நடத்தும் இந்த வியாபாரக் கும்பலின் தராதரமும், சீமான் என்பவன் யார் என்ற கசப்பான உண்மையும் இன்று தமிழக மக்களுக்கு முழுமையாகத் தெரிந்துவிட்டது. 

அதனால்தான், தேர்தல் களம் தோறும் மக்கள் அவனை எங்கு வைக்க வேண்டுமோ, அங்குதான் வைத்திருக்கிறார்கள். 

மாவீரர்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தி, அடுத்தவன் மனைவியையும் பதவியையும் ஆட்டையப் போடும் இந்த அயோக்கியர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. 

அறிவார்ந்த சமூகமும் தமிழுணர்வு கொண்ட மக்களும் இந்த பார்ப்பனக் கைக்கூலிக் கயவர்களை என்றென்றும் புறக்கணித்தே தீரும்!