Sunday, 21 June 2026

கண்ணதாசன் கையாண்ட சங்க இலக்கியங்கள்

 கண்ணதாசன் கையாண்ட சங்க இலக்கியங்கள்

ஐங்குறுநூறுகண்ணதாசன்சங்க இலக்கியங்கள்திரை இசைப்பாடல்

இலக்கியங்களை வெகு திறமையாக திரைப் பாடலில் கையாண்டிருக்கிறார் கண்ணதாசன். பண்டைக் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் என்றும் அழியாத தமிழ் இலக்கியங்களை இயற்றி பல நல்ல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் ஆகும்.


சங்க இலக்கியத்துக்கு முந்தியதாகத் தமிழில் கிடைத்த இலக்கண  நூல் தொல்காப்பியம் மட்டுமே.

சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் பழந்தமிழகத்தின் வரலாற்றுக் களஞ்சியமாகத் திகழ்கின்றன. பண்டைத்தமிழ் அறிஞர்கள் இலக்கியங்களை அகம், புறம் என இரு வகையாகப் பிரித்தனர். 


அகத்துறை இலக்கியம் காதலைப் பற்றியும் புறத்துறை இலக்கியம் பிறவற்றையும் குறிக்கும் என்ற அடிப்படையில் இலக்கியங்கள் பாகுபாடு செய்யப்பட்டன.கார்காலம்


சங்க இலக்கியத்தின் உயிர்நாடியாக விளங்குபவை காதலும் வீரமுமே ஆகும். சங்க இலக்கியப் பாடல்கள் ஒரு ஒழுங்குமுறையாகத் தொகுக்கப்பட்டு எட்டுத் தொகை, பத்துப்பாட்டு என இரு பிரிவாக அமைந்துள்ளன.


சங்க இலக்கியங்களில் முல்லைப் பாடல்கள் கார்கால வரவையும், காதல் தலைவனது வரவையும் கார்காலத்து வருணனையினையும் எடுத்து இயம்புகின்றன.தலைவி கார்காலத்து வருணனை படித்து படித்து இன்புற்றதாகவும்

ஒரு அற்புதமான பாடல் அதனுடைய விளக்கத்துடன் அதன் நயத்தைப் பார்க்க இருக்கின்றோம்.ஐங்குறுநூறு

பாடியவர் – பேயனார், Poetry


திணை – முல்லை

துறை – குறித்த பருவம் வரவும் தலை மகன் வந்திலனாக ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. பருவம் கண்டு கிழத்தி உரைத்த பத்து பகுதியில் ஆறாவது பாடல்


உள்ளார்கொல்லோ தோழி! வெள் இதழ்ப்

பகல் மதி உருவின் பகன்றை மா மலர்

வெண் கொடி ஈங்கைப் பைம் புதல் அணியும்

அரும் பனி அளைஇய கூதிர்

ஒருங்கு இவண் உறைதல், தெளித்து அகன்றோரே?


– ஐங்குறு நூறு 456 ஆவது பாடல்

பாடலின் விளக்கம்


தோழி அவர் என்னை நினைக்கமாட்டாரோ பகலில் தோன்றும் நிலாவைப் போல பகன்றைப் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. வெண்ணிற ஈங்கை மலரின் கொடி புதரில் படர்ந்து கிடக்கிறது. பனி பொழியும் குளிர் காலம் இது. இத்தகைய காலத்தில் உன்னோடு சேர்ந்திருப்பேன் என்று என்னை தெளிய வைத்துவிட்டுச் சென்றவர் நினைக்கமாட்டாரோ?


முல்லை நிலத்தின் உரிப்பொருள் இருத்தலும் இருத்தல் நிமித்தமாம். பொருள் தேடி பிரிந்து சென்ற தலைவன் வரும் வரை காத்து இருத்தல். என்பது இலக்கணம். அந்த வகையில் சூரிய ஒளி வந்தவுடன் நிலவு தெரியாது. ஆனால் பகலில் தோன்றும் நிலவு என்கிற சொல்லை பகன்றைப் பூக்களுக்குச் சொல்லுதல் அழகு.


மயக்கம் எனது தாயகம்


தேன் மிகுதியாக உடைய, பனிக்காலத்தில் மலரும் பகன்றை மலர் வெண்மையான இதழ்களையும், பகலில் தோன்றும் திங்கள் போலும் உருவத்தினையும் கொண்டது. இதன் மணம் கள்ளின் மணம் போன்றிருத்தலால், இதனை இல்லத்தார் விரும்பிச் சூடுவதில்லை; முறுக்கிய ஆடையை ஒத்து விளங்கும். இந்த அழகான நிகழ்வை கவியரசு கண்ணதாசன் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த ‘குங்குமம்’ படத்தில் பயன்படுத்தியிருப்பார்.

அந்த பாடல் இதோ…


மயக்கம் எனது தாயகம்

மௌனம் எனது தாய்மொழி

கலக்கம் எனது காவியம்

நான் கண்ணீர் வரைந்த ஓவியம்



பகலில் தோன்றும் நிலவு

கண் பார்வைக்கு மறைந்த அழகு

திரை மூடிய சிலை நான்

துன்பச் சிறையில் மலைந்த மலர் நான்

தலைவி தலைவனை நினைத்து பாடிய ஐங்குறுநூறு பாடலை திரைப்படத்தில் கொலைப்பலி சுமத்தப்பட்ட தலைவன் தன் நிலை குறித்துப் பாடுவதாக அமைத்து சங்க இலக்கியத்தை எடுத்தாண்டு இலக்கியப் பங்களிப்பு செய்திருக்கின்றார்

அன்புடன் பேசாலைதாஸ்

அழுகுணிச் சித்தரும், கவியரசரும்!

அழுகுணிச் சித்தரும், கவியரசரும்!

வேதாந்தம், வைத்தியம், யோகம், ஞானம் முதலான பல நிலைகளில் பாடியுள்ளவர் அழுகண் சித்தர். அழுகண் சித்தர் பாடல் 200, ஞான சூத்திரம் 23 ஆகிய இரண்டு நூல்கள் படைத்தவர்.  அழுகணிச் சித்தர் என்றும் அழுகுணிச் சித்தர் என்றும் வழங்கப் பெற்றவர்.  இந்தச் சித்தர்தான்  ஊரைப் பார்த்து , உலகையும் பார்த்து , தன்னையேப் பார்த்தும்  இப்படி அழுதாராம்.

 பையூரிலே யிருந்து பாழூரிலே பிறந்து   

   மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்  

    மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்   

   பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா.          

    - பாழாய் முடியாதோ.

நம்ம கவியரசர் பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறதா ?

திரைப்படம்: காட்டு ரோஜா

 பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்

 இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

 இசை: கே.வி. மகாதேவன்

ஆண்டு: 1963

எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?

அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா! 

எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?

அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!


உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்

உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்

கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்!

கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்!

கண்ணூரில் தவழ்ந்திருந்தேன் கையூரில் வளர்ந்திருந்தேன்

காலூரில் நடந்து வந்தேன் காளையூர் வந்துவிட்டேன்!


வேலூரைப் பார்த்து விட்டேன் விழியூரில் கலந்து விட்டேன்

பாலூறும் பருவம் என்னும் பட்டினத்தில் குடிபுகுந்தேன்!


எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?

அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!


காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்

காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்

கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்!

கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்!


பள்ளத்தூர் தன்னில் என்னை பரிதவிக்க விட்டு விட்டு

மேட்டூரில் அந்த மங்கை மேலேறி நின்று கொண்டாள்!


கீழுரில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் இல்லையடா

மேலூரு போவதற்கும் வேளை வரவில்லையடா!


எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?

அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!

அன்புடன் பேசாலைதாஸ் 


புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் என்பது என்ன? சில அடிப்படைத் தகவல்கள்


பிரித்தானியாவின் தற்போதைய தலைப்புச் செய்தியாகியுள்ளது புதிய பிரெக்சிட் ஒப்பந்தம்.

இந்த புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் என்பது என்ன என்பதைக் குறித்த சில அடிப்படை விடயங்களை மட்டும் பார்க்கலாம்.

Brexit என்பது என்ன?

அதாவது, முன்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தது பிரித்தானியா. பின்னர், பொருளாதாரம், புலம்பெயர்தல், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவு என பல்வேறு காரணங்களால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என பிரித்தானியா முடிவு செய்தது. அப்படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதைத்தான் பிரெக்சிட் என்கிறோம். ’Britain' மற்றும் 'exit' என்னும் இரு வார்த்தைகள் இணைந்து உருவான புது வார்த்தையே Brexit.

பிரெக்சிட் ஒப்பந்தத்தால் பிரித்தானியாவில் ஏற்பட்ட பிரச்சினை

2020ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 31ஆம் திகதி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது பிரித்தானியா.

ஆனால், அதைத் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது பிரித்தானியா. ஒருபக்கம், பிரான்ஸ் தரப்பு படகுகள் எங்கள் கடல் பகுதியில் மீன் பிடிக்கக்கூடது என பிரித்தானியா கூற, அப்படியானால், உங்கள் மீன்கள் முதலான சரக்குகளை எங்கள் துறைமுகம் வழியாக கொண்டு செல்ல கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்போம் என பிரான்ஸ் கூற, அடிக்கடி இருநாடுகளும் முட்டிக்கொண்டன.

புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் என்பது என்ன? சில அடிப்படைத் தகவல்கள் | What Is The New Brexit Deal

இன்னொருபக்கம், பிரித்தானியா எதிர்பாராத ஒரு பெரிய பிரச்சினையை சந்திக்கவேண்டிவந்தது. அது இவ்வளவு பெரிய பிரச்சினையாக இருக்கும் என பிரித்தானியா தரப்பு நினைத்துப் பார்த்திருக்கும் என்பது கூட சந்தேகமே.

அதாவது, பிரித்தானியாவின் மேப், அல்லது வரைபடத்தைப் பார்க்கும்போது, அதில் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய பகுதிகள் இருப்பதைக் காணலாம்.

அதில், இந்த வட அயர்லாந்துக்கும் பிரித்தானியாவின் முக்கிய நிலப்பரப்புக்கும் இடையில், அயர்லாந்துக் குடியரசு என்றொரு பகுதி உள்ளது. ஆக, இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் பகுதிகளிலிருந்து வட அயர்லாந்துக்கு சரக்குகள் அனுப்பவேண்டுமானால், அவை அயர்லாந்துக் குடியரசு வழியாகத்தான் செல்லவேண்டும்.

புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் என்பது என்ன? சில அடிப்படைத் தகவல்கள் | What Is The New Brexit Deal


பிரச்சினை என்னவென்றால், அயர்லாந்துக் குடியரசு, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதி. ஆகவே, ஐரோப்பிய ஒன்றிய விதிகள் அயர்லாந்துக்கு பொருந்தும். எனவே, எளிதாக பொருட்களை வட அயர்லாந்துக்கு கொண்டுசெல்ல அல்லது அனுப்பமுடியாத ஒரு நிலை ஏற்பட்டது.

குறிப்பாக, மாமிசம் போன்ற பொருட்களை வட அயர்லாந்துக்கு அனுப்புவதில் பெரும் பிரச்சினை இருந்துவருகிறது.

புதிய பிரெக்சிட் ஒப்பந்தம்

தற்போது, ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் இந்த வட அயர்லாந்து பிரச்சினைக்காகத்தான் புதிய ஒப்பந்தம் ஒன்றை முன்வைத்துள்ளன. இன்னொரு வகையில் சொன்னால், பிரித்தானியா முன்வைத்துள்ள திட்டத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் சம்மதம் தெரிவித்துள்ளது.

அந்த ஒப்பந்தம், புதிய வட அயர்

அதன்படி, இனி வட அயர்லாந்துக்கு பொருட்கள் கொண்டு செல்வது சற்று எளிதாகும். அயர்லாந்துக் குடியரசுக்கு செல்லும் பொருட்கள், வட அயர்லாந்துக்குச் செல்லும் பொருட்களுக்கென தனித்தனி விதிகள் கொண்டுவரப்பட உள்ளன.

பிரெக்சிட் ஆதரவாளர்கள் இன்னமும் இந்த ஒப்பந்தத்துக்கும் எதிர்ப்புதான் தெரிவிக்கிறார்கள் என்றாலும், அமைச்சர்கள் முதலானோர் இத்திட்டத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் என்பது என்ன? சில அடிப்படைத் தகவல்கள் | What Is The New Brexit Deal

Credit: PA



 

Friday, 5 June 2026

அனாத்மா

                                                           அனாத்மா  


புத்தரின் "அனாத்மா" (Anatta) கொள்கை🏵️

🪷"மனமே ஆத்மாவை நிர்மாணிக்கிறது. மனம் மறையும் போது ஆத்மா மறைந்துவிடுகிறது."🪷

       🌸இந்த தத்துவத்தின் விளக்கம்:🌸

இந்த வாசகம் பொதுவாக 🪷அத்வைதம்🪷 அல்லது 🪷புத்த மதச் சிந்தனைகளின்🪷 சாரத்தைக் கொண்டுள்ளது. இதன் ஆழமான அர்த்தங்களை இப்படிப் பார்க்கலாம்:

 1.மனமும் ஆத்மாவும்:

   நமது விழிப்புணர்வு நிலையில், நாம் நம்மை ஒரு தனிப்பட்ட நபராக (ஆத்மாவாக அல்லது 'நான்' என்ற உணர்வாக) கருதுகிறோம். இந்த 'நான்' என்ற பிம்பத்தை உருவாக்குவது நமது "மனம்" தான். எண்ணங்கள், ஆசைகள் மற்றும் நினைவுகளின் தொகுப்பான மனமே, "நான் இருக்கிறேன்" என்கிற தனித்துவமான ஆத்ம உணர்வை வடிவமைக்கிறது.

 2. நிர்மாணித்தல் (கட்டுதல்):

   மனம் உள்ளவரைதான் "இது என் ஆத்மா", "இது என் உயிர்" என்கிற பிரிவினை இருக்கிறது. ஒரு சிற்பி சிலையைச் செதுக்குவது போல, மனம் தனது கற்பனைகள் மற்றும் அனுபவங்கள் மூலம் ஆத்மா என்ற ஒரு கருத்தை நமக்குள் நிலைநிறுத்துகிறது.

 3. மனம் மறைதல்:

   ஆழ்ந்த தியானத்திலோ அல்லது ஞானம் பெற்ற நிலையிலோ மனம் அடங்கும்போது (எண்ணங்கள் அற்ற நிலை), அங்கு 'நான்' என்கிற தனித்தன்மையும் கரைந்து போகிறது. ஒரு நதி கடலில் கலக்கும்போது அதன் தனிப்பெயர் மறைவது போல, மனம் ஒடுங்கும்போது தனிப்பட்ட ஆத்மா என்கிற உணர்வும் மறைந்துவிடுகிறது.

 4. உண்மை நிலை:

   மனம் மறையும்போது எஞ்சுவது எதுவோ, அதுவே எல்லையற்ற பேரறிவு அல்லது பிரபஞ்சப் பெருவெளி. இதைத்தான் "ஆத்மா மறைந்துவிடுகிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அதாவது, "தனித்த ஆத்மா" என்ற பொய்மை நீங்கி, "ஒன்றே அனைத்தும்" என்ற மெய்மை பிறக்கிறது.

   🏵️"நான்" என்ற எண்ணம் இருக்கும் வரைதான் "ஆத்மா" என்ற ஒரு தனிப்பொருள் இருக்கிறது. அந்த எண்ணமே இல்லாத நிலையில், நீங்களும் பிரபஞ்சமும் வேறல்ல.🏵️

🏵️புத்தரின் "அனாத்மா" (Anatta) கொள்கை🏵️

🪷ஆன்மத் துணை என்று எவருமில்லை; ஏனெனில், முதலாவதாக எங்கும் நிலையான ஆன்மா என்று ஒன்றே இல்லை.🪷

புத்தரின்

அனாத்மா' (Anatta) கொள்கையின்படி, இவ்வுலகில் நிலையான அல்லது மாறாத ஆன்மா என்று எதுவுமில்லை. அனைத்தும் மாற்றத்திற்கு உட்பட்டது. ஆன்மாவே நிலையற்றது எனும்போது, ஒரு நிலையான 'ஆன்மத் துணை' (Soulmate) என்பதும் ஒரு மாயையே ஆகும்.

      🌸மனித மனம் மாயைகளை பற்றிக்கொள்ளும்போதே துயரம் தொடங்குகிறது. அந்த மாயைகளில் மிக ஆழமானது, "நமக்கென்று நிரந்தரமாக ஒருவர் இருக்கிறார்" என்கிற "ஆத்மார்த்தமான துணை (Soulmate) என்ற பிம்பம்.

 புத்தரின்'ஆன்மத் துணை' என்ற கருத்தை உடைத்தெறிந்தால் என்னவாகும்?

உலகில் உள்ள அனைத்தும் கணத்திற்கு கணம் மாறிக்கொண்டே இருக்கிறது என்றால், 'நான்' என்கிற பிம்பமே நிலையற்றது (அனாத்மா) என்றால், அங்கு 'நிலையான ஆன்மத் துணை' என்பதற்கு எப்படி இடமிருக்க முடியும்?

தனிமை, மாற்றம் மற்றும் சூன்யத்தைக் கண்டு அஞ்சுவதால், மனித மனம் ஒரு நிரந்தரமான நிச்சயத்தன்மையை தேடுகிறது. அந்த அச்சமே "பற்றுதலை' உருவாக்குகிறது; அந்தப் பற்றுதலே "துயரத்திற்கு" காரணமாகிறது.

    புத்தர் போதித்த அன்பு

புத்தர் அன்பை நிராகரிக்கவில்லை, அல்லது அன்பில் குளிர்ச்சியாக இருக்கச் சொல்லவில்லை. அவர் அன்பிற்குள் ""விழிப்புணர்வோடு"" இருக்கக் கற்றுக்கொடுத்தார். 

    அன்பு என்பது : உடைமை உணர்வு (Possession), சார்ந்திருத்தல் (Dependency), மற்றும் உளவியல் ரீதியான உரிமை கோருதல் இல்லாதது.

 உண்மையான அன்பு என்பது, உங்களை முழுமையாக்கிக் கொள்ள இன்னொருவர் தேவை என்ற எண்ணம் மறையும்போதுதான் தொடங்குகிறது. விழிப்புணர்வும் விடுதலையும்

ஒருவர் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்கிறாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு தங்களை உணர்ச்சிப்பூர்வமாக 'காப்பாற்ற' ஒருவரைத் தேடுவதை நிறுத்திக்கொள்வார். அதற்குப் பதிலாக, அன்பு என்பது: பகிர்வு (Sharing) தருணத்தில் இருத்தல் (Presence) கருணை (Compassion)

  மற்றும் சுதந்திரம் (Freedom)

ஆக மாறுகிறது.

 நாம் மற்றொருவரிடம் தேடும் அந்த 'முழுமை', உண்மையில் நமக்குள் இருப்பதை உணர்வதே ஆகும்.