Tuesday 18 January 2022

தாஜ் மஹால்

 தாஜ் மஹால்: ஷாஜஹானால் 3 முறை அடக்கம் செய்யப்பட்ட மும்தாஜ் - ஒரு முகலாய காதல் வரலாறு


(உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், 24வது கட்டுரை இது)


ஷாஜகானின் உயரம் சற்று குறைவாக இருந்தாலும், அவர் பருமனான உடல் மற்றும் பரந்த தோள்கள் பெற்றவர். இளவரசராக இருந்த வரை, தந்தை ஜஹாங்கீர், தாத்தா அக்பர் போன்று மீசையை மட்டுமே வைத்திருந்தார். அரசரான பிறகு தாடி வளர்க்கத் தொடங்கினார்.


ஷாஜகானின் ஆட்சிக் காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தின் பெருமை அதிகம் வெளிப்பட்டது. அவர் தனது தந்தையைப் போல அடிக்கடி மனநிலை மாறும் தன்மை கொண்டவரில்லை. அவர் மென்மையாகவும், கண்ணியமாகவும் பேசுபவர், எப்போதும் முறையான மொழியில் பேசினார்.


முகலாயர்களைப் பற்றிய புத்தகமான 'எம்பரர்ஸ் ஆஃப் த பீகாக் த்ரோன்- த சாகா ஆஃப் தி கிரேட் முகல்ஸ்' என்ற புத்தகத்தை எழுதிய ஆபிரகாம் இரலி, "சுய கட்டுப்பாடு ஷாஜகானுக்கு மிக உயர்ந்த குணமாக இருந்தது. இது மது மீதான அவரது அணுகுமுறையில் பிரதிபலிக்கிறது. 24 வயதில், அதுவும் முதன்முதலாக மதுவை சுவைக்க தந்தை வற்புறுத்தியபோது அதையும் சுவைத்தார். அடுத்த ஆறு வருடங்கள் அரிதாகவே அருந்தினார். 1620-ம் ஆண்டு தெற்கு நோக்கிப் பயணத்தை மேற்கொண்டபோது முழுவதுமாக அந்தப் பழக்கத்தைக் கை விட்டு, மொத்த மதுபான இருப்பையும் சம்பல் ஆற்றில் ஊற்றினார்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


ஷாஜஹான் ஒரு பழமைவாத முஸ்லிமாக வாழ்ந்தாலும், அவர் ஒரு துறவி போல வாழவில்லை. புகழுக்கும் பெருமைக்கும் அவரது தந்தை ஜஹாங்கீரைப் போலவே இவரும் மிகவும் ஆசைப்பட்டார். இத்தாலிய வரலாற்றாசிரியர் நிக்கோலாவோ மனூச்சி, "ஷாஜஹான் அரண்மனையிலிருந்து தனது கவனத்தைத் திசைதிருப்ப இசை மற்றும் நடனத்தை நாடினார். அவர் பலவிதமான இசைக்கருவிகள் மற்றும் கவிதைகள் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரே நன்றாகப் பாடுவார். கஞ்சன் என்றழைக்கப்படும் நடனப் பெண்களின் குழு ஒன்று எப்போதும் தயாராக இருந்தது," என்று எழுதுகிறார்.


ஷாஜஹானின் அராஜகங்கள் குறித்த பல கதைகள் உலவினாலும் அவரது மனைவி மும்தாஜ் மஹல் உயிருடன் இருக்கும் வரை, அவர் முழுவதுமாக அவருக்கான அர்ப்பணிப்புடன் இருந்தார். அவருடைய மற்ற மனைவிகளுக்குக் கூட அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் இல்லை.


No comments:

Post a Comment