Sunday 23 January 2022

கள் இறக்கும் (கள்ளுச் சீவும்) தொழில்

கள் இறக்கும் (கள்ளுச் சீவும்) தொழில் 

அருண் சித்தார்த் ஆகிய நான் யாழ்ப்பாணத்தில் கள் இறக்கும் (கள்ளுச் சீவும்) தொழில் புரிந்த பாட்டன்களின் பேரனாவேன். எனது குலத்தை “நளவர்” என்றார்கள். எனது பாட்டன் ‘கள்’ இறக்கும் தொழில் புரிந்த ஒரேயொரு காரணத்துக்காக நான் யாழ் மேட்டுக்குடி சமூகத்தால் தாழ்த்தப்பட்டவனானேன்.  கள்ளுச் சீவும் சீவல் தொழிலாளியின் பேரன் எனும் காரணத்துக்காக தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகள் என்னை தமக்குச் சரிசமமாக அமர்த்தி பேச மறுத்தனர். எனது திறமைகளை சிறுமைப்படுத்தினர். நின்று கொண்டு கைகட்டி, வாய் பொத்திப் பேசத் தயாரில்லாதவருக்கு தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இடம் இல்லையென்றனர்.. 2015 ஆம் ஆண்டு இன்றைக்கு 7 வருடங்களுக்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுமந்திரன் முன்னிலையில் TILKO தனியார் விடுதியில் இடம்பெற்ற ஒரு அரசியல் கருத்தரங்கில் எனது சாதியைக் குறிப்பிட்டு என்னை அவமானப்படுத்தினர். அன்று நான் கண்ணீர் மல்க அச்சபையைவிட்டு தலைகுனிந்து வெளியேறினேன். 

ஆனால் 2019 ஜனாதிபதி தேர்தல் சமயம் யாழ் வந்த பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ முன்னிலையில் JETWING தனியார் விடுதியில் யாழ்ப்பாணத்தின் பிரபலமான தனவந்தர்கள், மேட்டுக்குடிகள், புத்திஜீவிகள் கைகட்டி வாய்பொத்தி அவரது அழைப்பிற்காக காத்திருந்த போது அங்கு சென்ற என்னை மட்டும் உடனும் அழைத்து தனக்குச் சரிசமமாக என்னை அமர்த்தி கதை பேசினார்.

அன்றிலிருந்து இன்றுவரை அவர் என்னை நிற்க வைத்துப் பேசுவதில்லை. என்னைக் கண்டால் தனது மைந்தனைப் போல வாஞ்சையுடன் அருகில் அழைத்து தனக்குச் சமமாக இருக்கையில் அமர்த்தியே கதை கேட்பார். கற்றோரையும் மற்றோரையும் நிகரெனக் கொள்பவனே ஆட்சியாளன். 

“அழியாத துயர் என் குலத்தின் துயர். ஆற்றாது அழுத கண்ணீர் யுகயுகங்களைத் தன்னந்தனியாக கடந்து செல்லும். தனக்கான வாளையும் வஞ்சினத்தையும் அது கண்டடையும் . இன்று நான் என் இனத்தவர்க்கு, ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டவர்க்கு வாக்களிக்கிறேன். “உங்கள் வஞ்சத்தை நான் தீர்ப்பேன்.” எமக்கான சாம்ராஜ்யத்தை நாமே உருவாக்கிக் கொள்வோம். ஒடுக்கப்படும் தாழ்த்தப்படுபவர்களே ஒன்று சேருவோம்.

——- அருண் சித்தார்த் 

“ பார்த்தா , இது என் அறைகூவல். நீ வீரனென்றால் என்னுடன் விற்போருக்கு வா”என்றான் கர்ணன். 

கிருபர் கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் வந்தார். “இளைஞனே இவன் சந்திரகுலத்தவன். குருவம்சத்து பாண்டுவின் மைந்தன். யாதவ அரசி குந்தியின் மகன். நீ யார்? உன் பெயர் என்ன? உன் குலம் என்ன? என்றார்.

“நான் குதிரைச்சூதன் அதிரதனின் மகன் வசுஷேணன் “ என்றான் கர்ணன்.

பந்தலில் இருந்து தாவிக் களத்தில் குதித்த பீமன் அங்கே நின்றிருந்த வீரனொருவனிடமிருந்த குதிரைச் சவுக்கை பிடுங்கியபடி கர்ணனை நோக்கிச் சென்று அதை அவன் முகத்தை நோக்கி வீசினான். “சூதன் மகனே , போ ! உன் இடம் குதிரைக் கொட்டில். உன் படைக்கலம் சவுக்கு. சென்று உன் பணியைச் செய். ஷத்ரியர்களுடன் போருக்கு வராதே இழிபிறவியே ! உன்மேல் குதிரை மலம் நாறுகிறது அற்பா. சென்று நீராடி வா. இப்பிறவி முழுக்க மும்முறை நீராடு அடுத்த பிறவியில் வில்லுடன் வா. இப்போது வெளியேறிப் போ. என்றான்

குருகுலத்து ஆசிரியர் துரோணாச்சாரியார் முன்னே வந்தார்.

“ சீ .. நீசா.! நாணமில்லையா உனக்கு? குலமும் கல்வியும் இல்லாத வீண்மகனாகிய நீ எத்துணிவில் களம் புகுந்தாய்? எந்த நம்பிக்கையில் ஷத்ரியனை நோக்கி அறை கூவினாய்? இழிகுலத்தவனே.! என்றார்.

கர்ணனின் கைகள் சரிந்தன. அவன் தலை முதன்முறையாக குனிந்தது. இமைகள் இருமுறை அதிர விழிநீர்த்துளிகள் ஒளியுடன் சொட்டின. அவன் வெளியேறுவதற்காகத் திரும்பினான்.

“கர்ணா நில் “ என்று துரியோதனன் உரக்கக் கூவினான்.

“பிதாமகரே ! குருநாதரே ! இவன் மாவீரன். சிம்மம் தன் வல்லமையாலேயே காட்டரசனாகிறது. இவன் நுழையமுடியாத எந்தச் சமர்களமும் இப்புவியில் இருக்க முடியாது. இதோ இங்கேயே இவனுக்கு நான் மண்ணுரிமை அளிக்கிறேன். “அமைச்சரே என்று திரும்பினான் துரியோதனன். விதுரர் எழுந்து அருகே வந்து இளவரசே என்றார். “இவனை இக்கணமே நான் மன்னனாக்க விழைகிறேன்.” என்றான் துரியோதனன்.

“அங்கநாட்டரசன் சத்யகர்மன் கப்பம் முடங்கினான் அரசே “என்றார் விதுரர்.

“மூவேதியரும், குலமூதாதையரும் , கங்கை நீரும், அரிசியும், மலரும், மணிமுடியும் இப்போதே இங்கே வரட்டும்.” என்றான் துரியோதனன். 

அரண்மனைக் கருவூலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட மணிமுடியை துரியோதனன் எடுத்து கர்ணனின் தலையில் வைத்தான். “ இவன் இன்று முதல் என் தமையன். வசுஷேணனாகிய கர்ணன் , இதோ மண்ணும் விண்ணும் சான்றுரைக்க அங்க நாட்டுக்கு அரசனாக மணிசூடுகின்றான். தேவர்கள் அருள்க! குலதெய்வங்கள் அருள்க !” என்று கூவினான் துரியோதனன்.

அப்போது குதிரைக்கொட்டிலுக்குச் செல்லும் பாதை வழியாக குதிரைச்சாணம் படிந்த அழுக்கு உடையும் கையில் சவுக்குமாக அதிரதன் பதறியபடி ஓடி வந்தான். 

“யார் அது “ என்று பீஷ்மர் கேட்டார்.

“இவர் என் தந்தை அங்க நாட்டு ரதமோட்டியான அதிரதர்” என்றான் கர்ணன். “தந்தையே இந்நாளில் உங்கள் மைந்தனை வாழ்த்துங்கள், என்று கூறியபடி கர்ணன் நெற்றியும் , மார்பும் , தோள்களும் புழுதியில் பட அவர் முன் விழுந்து அவரது புழுதியும் , சேறும் படிந்த முதிய கால்களை வணங்கினான். “பிதாமகரே , என்றும் நான் இவரது மைந்தனாகவே அறியப்படுவேன். இவரது பாவ புண்ணியங்களுக்கே மரபுரிமை கொள்வேன்.” என்றான் கர்ணன்.

“பிடரி மயிர் சூடிய நாய் சிம்மமாகாது சுயோதனா.” என்று துரியோதனனைப் பார்த்து பீமன் கூவினான். 

“இந்தச் சொற்களுக்காக என்றோ ஒருநாள் நீயும் உன் உடன் பிறந்தாரும் களத்தில் குருதியை அளிப்பீர்கள்.” என்றான் துரியோதனன் சினத்துடன்.

தருமனிடன் திரும்பிய பீமன் “கிளம்புங்கள் மூத்தவரே, அர்ஜுனா வா , இனி நாம் இங்கிருக்க வேண்டியதில்லை.”எனக் கூறி அவர்களுடன் வெளியேறினான். 

தலைகுனிந்து சென்று கொண்டிருந்த அர்ஜுனனிடம், “ பார்த்தா இன்று அந்த முதுசூதன் சம்மட்டியுடன் களத்துக்கு வந்த போது , கர்ணனின் இடத்தில் என்னை வைத்து நடித்துக் கொண்டிருந்த நான் ஆழத்தில் கூனிச் சுருங்கினேன். ஆனால் அவன் ஒருகணம் கூட அவரை நிராகரிக்கவில்லை. அந்தப் பேரவையில் அவன் பாத்தூளியை தலையிலணியச் சற்றும் தயங்கவில்லை. அஸ்தினபுரியின் இளவரசனாகவும், அங்க நாட்டின் அரசனாகவும் அறிவிக்கப்பட்டவன் சூதனின் மைந்தனாகத் தன்னை முன் வைத்தான். அக்கணத்தில் விண்ணில் தேவர்கள் அவன் மேல் மலர் சொரிந்து விட்டார்கள்.”

“ தன் அறத்தால் இச்சூதன் மகன் நம்மை நிரந்தரமாக வென்று செல்வான் தம்பி”

என்றான் தருமன்.

එදා දෙමළ ජාතික දේශපාලකයන් මා අඩු කුලේ බව පවසමින් කොන් කර දමන ලදී. සමහර අවස්ථා වල ප්‍රසිද්ධියේම මාගේ කුලය ඈදාගනිමින් අවමන් කරද්දී මා අසරණව බිම බලාගෙන ගිය අවස්ථා ඇත. යාපනයේ බහුතරය මේ ඔවුන් කියනා කුලයෙන් හීනයැයි සම්මත පිරිසයි.

එදා 2015 ජනාධිපතිවරණ සමයේ ඔහු නැවතීස සිටි හෝටලයේදී මා එහි සිටිනවා දුටු මහින්ද රාජපක්ෂ නම් ඒ සොදුරු මිනිසා මා ලගට කැදවා ඔහු අසලින් වාඩිකරවාගෙන ඔහු සමග ආහාර ගැනීමට ආරාධනා කරන ලදී. කුලය නිසා එදා යාපනයේ දෙමළ දේශපාලකයන් එක වේදිකාවකටවත් නග්ගවා නොගත් මා හට එය ඉතා සංවේදී මොහොතකි.

පසුගිය දින අත්‍යවශ්‍ය කටයුත්තකට පාර්ලිමේන්තුවට ගිය අවස්ථාවේ මා එහි ඉන්නවා දුටු වර්ථමාන අග්‍රාමාත්‍ය මහින්ද රාජපක්ෂ මැතිතුමා මා ලගට කැදවා මා හා සුහදවා සාකච්ඡා කරන ලදී. මේ ඒ අවස්ථාවේ ලබාගත් ජායාරූපයකි. 

යාපනයේ වර්ථමානයේ අති බහුතරයක් වූ උපතින් කුල හීන යැයි හදුන්වන ජනයා බුදු වදන අනුව "උපතින් වසලයෙක් හෝ බ්‍රාහ්මණයෙක් නොවන බවත් ක්‍රියාවෙන් පමණක් එය වන බවත්" යන පාඨය අනුගමය කරමින් ඔවුන්ගේ ජීවන තත්වය උසස් කිරීමටත් එකම රටක් තුල සිංහල දෙමළ හා අනෙකුත් ජාතීන්ට සාමකාමීව ජීවත්විය හැකි පරිසරයක් තැනීමට මාගේ ඉදිරි ජීවිතයේ සම්පූණ කාලයම වැය කරමි. - අරුන් සිද්ධාර්ථ්

No comments:

Post a Comment