Tuesday 18 January 2022

மலையக அரசியலில் எனக்கு போதனை தேவையில்லை !

 மலையக  அரசியலில்  எனக்கு போதனை தேவையில்லை !


நான் மலையக அரசியல் தொடர்பில் எனது பதிவுகள் தொடர்பில் எழும் எதிர் விமர்சனங்கள் பலவற்றுக்கு சும்மா விட்டுவிடுவதின் காரணம் யாதெனில் நான் அடிப்படையில்  மலையக மக்களின்  அந்த வாழ்க்கைக்குள் எந்த பிறழ்வும் இல்லாமல் அப்படியே வாழ்ந்தவன் அதைவிட ஈழப்போராட்டத்தில் அப்போதே அதாவது எனது 19வது  வயதில் இணைந்துகொண்டவன் எனக்கும் நிறைய ஆசைகள் இருந்தன அதாவது மலையக மக்கள் பேரினவாதத்தின் பிடியிலிருந்தும் அடிப்படை உரிமைகளிலும் ஏனைய சமூகங்கள் போல வாழ வேண்டும் என்பதாகும். நான் ஒரு சாதாரண தோட்டத் தொழிலாளியின் மகன் என்ற நினைப்பும் பக்கத்து வீட்டில் சமைக்கும்  கறியும் சோறும் அதற்கு அப்பால் வீட்டில் விளக்கு எறிய எண்ணையை கூட பரிமாறிக்கொள்ளும் ஒரு இன குழுமத்தின் ஒரு பிள்ளை அவ்வளவுதான், இங்கே நான் சொல்லவருவது எனது அப்பா அப்படியிருந்தார் எனது பரம்பரை எப்படியிருந்தது என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. ஈழப்போராட்டத்தில் ஈரோஸ் இயக்கம் 14 நாடாளுமனற உறுப்பினர்களை  வெற்றிக்கொண்டு பின்னர் மலையகத்துக்கு ஒரு உறுப்பினரை தெரிவு செய்ய முற்பட்டபோது நான் நான்கு வருட சிறைவாழ்வை முடித்து வெளியே வந்தேன் என்னையே அவர்கள் அந்த பதவிக்கு தெரிவு செய்து இருந்தனர்" சங்கர் ராஜி என்ற ஈழப்போராட்டத்தின்  முன்னோடி பலஸ்தீனத்தில் கமாண்டோ  பயிற்சி பெற்றவர் யாசீர் அராபாத்துடன்  நெருங்கிய உறவை கொண்டவர் ( இவரும்  மலையகத்தின் ஒரு இரத்த உறவு கொண்டவர்தான் ) எனது விடுதலைக்கு முன்னர் கேட்ட ஒரே கேள்வி நீங்கள் நாடாளுமன்றுக்கு  வாருங்கள் தோழர்" எனது பதில் நான் அதற்கு உரியவன் கிடையாது  என்பதாகும் எனவே  நான்  உட்பட தோழர்கள் ஒரு பொதுமகனான  ஆசிரியர் மலையப்பன்  இராமலிங்கம்  அவர்களை தெரிவுசெய்தோம் 

 நாடாளுமன்ற  உறுப்பினர்  ஆனார்" எனவே என்னிடம்  மலையக அரசியல் தொடர்பில் மேலதிக விளக்கம் சொல்ல முற்படுவது  வேதனைக்குரியது என்றே சொல்கின்றேன். மலையக அரசியலை தீர்மானிக்க வேண்டியவர்கள் கோட்டு சூட்டுப்போட்ட  முதலாளிகள்  அல்லர்" ஜனநாயக  அரசியல் மட்டுமல்ல ஆயுதம் ஏந்திய  போராட்டத்துக்குள்ளும் நான்  இருந்து இருக்கின்றேன்  இதற்கு  அப்பால் ஒரு பத்திரிகையாளன் .  கேள்விகள்  தொடருமெனில் பதிவும் தொடரும்.

No comments:

Post a Comment