Tuesday 18 January 2022

விஞ்ஞானப் பொங்கலாகவும் மாறுமா...? தைப் பொங்கல்.

 விஞ்ஞானப் பொங்கலாகவும் மாறுமா...? தைப் பொங்கல்.


அனைத்து உறவுகளுக்கும் எனது இனிய தைப் பொங்கல் திருநாள் வாழ்த்துகள். நாம் அனைவரும் இணைந்து இந்த வருடத்தின் முதல் நாளை கொண்டாடுவோம் தமிழர் புதுவருட நாளாக கொண்டாடுவோம்.

இயற்கை எமக்கு கொடுத்த சூரியனுக்கு நன்றி தெரிவிப்பதும் எமது உணவு உற்பத்தியிற்கு ஆதாரமாக எம்முடன் வாழும் எமது கால் நடைகளுக்கு மரியாதை செலுத்துவதற்குமான நாளாக தைப் பொங்கல் கொண்டாப்படுகின்றது. 

உணவை உற்பத்தி செய்யும் உழைப்பாளர்கள் இயற்கையிற்கு நன்றி செலுத்தும் விழாவாக நாளாக தைப் பொங்கல் தமிழராலும் கொண்டாப்பகின்றது.

எமது அறுவடையில் கிடைத்த தானியங்களை வைத்து வெண் பொங்கல் என்று ஆரம்பித்து இன்று சக்கரைப் பொங்கலாகவும் இனிதிருப்பதே இந்த தைத்திருநாள்.

அறுவடையின் பின்பு எமது மகிழ்வை திருப்த்தியை நன்றியை தெரிவிக்கும் ஒரு நாளாக கூடி கும்மாளம் அடித்து கொண்டாடும் ஒரு விழாதான் இந்தத் தைத்திருநாள்.

அறுவடை நடைபெற்று முடிந்த உடன் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக உழவர்களால் அவர் சார்ந்து வாழ்பவர்களால் உணவு உற்பத்தியாளர்களால் கொண்டாப்படும் திருநாளாக இது தெற்காசிய நாடுகளில் பருவ காலத்திற்கு ஏற்ப கொண்டாடப்படுகின்றது.

இதே மாதிரியாக உலகின் வெவ்வேறு பகுதிகளிலும் அவரவர்களின் பருநிலைகளுக்கு ஏற்ப அறுவடையைக் கொண்டாடும் தினங்கள் கொண்டாடப்பட்டும் வருகின்றன.

எங்கெங்கும் வெவ்வேறு தினங்களில் இது கொண்டாடினாலும் ஒரு விடயத்தில் எல்லோரும் ஒன்றுபட்டு இருப்பதை நாம் காண முடியும்.

அதுதான் பூமியின் இருப்பிற்கு அதில் வாழும் உயிரினங்கள் மரங்கள் ஏனைய ஜந்துக்களின் வாழ்விற்கும் ஆதாரமாக இருப்பது அதற்கான ஒரே இயற்கை சக்தியை ஆற்றலை வழங்கும் சூரியனே என்பதாகும்.

இதனை உணர்ந்த மனித குலம் சூரியனுக்கு நன்றி செலுத்தியே இந்த விழாவை முன்னெடுக்கின்றனர்.

வாழ்க்கைச் சுழற்சியில்.... பூமிச் சுழற்சியில் ஒரு வருடத்திற்கான முதல் நாளாக இது எமக்கு எம் தாயகத்திற்கு அமைவதினால் இதனை நாம் தமிழ் புதுவருடம் என்று கற்பிதம் செய்கின்றோம். வருடத்தின் ஆரம்ப நாளை புத்தாண்டு நாள் என்று கொண்டாடுவதில் அர்த்தங்கள் நிறையவே உள்ளன.

அதனால் தமிழர் ஆகிய நாங்கள் தைப் பொங்கல் உழவர் தினம் தமிழ்ப் புத்தாண்டு என்று பலதுமாக இணைந்து கொண்டாகின்றோம்.

ஐதரன்(H) அணுக்களால் ஆன இன்னொரு வடிவ அணுக்கள் அதி உயர் காற்றழுத்தம் அதி உயர் வெப்பத்தில் இணைந்து(Fusion) ஹீலியத்தை(He) உருவாக்கும் போது வெளியிடப்படும் மிக மிக அதிக சக்தியை... ஆற்றலை.... சூரியன் எங்களுக்கு வழங்கி இந்த பிரபஞ்சத்தின் வாழ்தலுக்கான ஆதாரமாக இருக்கின்றது. 

எமது மூதாதையருக்கு சூரியனில் நடைபெறும் விஞ்ஞானம் தெரிந்திராவிட்டாலும் இந்த சூரியனே ஏதோ ஒரு வழியில் எம் உயர் வாழ்தலுக்கான சக்தியை ஆற்றலை வழங்குகின்றது என்பதை புரிந்து கொண்டுள்ளனர்.

{குவான்டம் விஞ்ஞானம் தெரிந்தவர்கள் இதனை வாசிக்கவும்..... எமது மூதாதையருக்கு சூரியனில் H(ஐதரசன்) ம்,  3H(or T) (H3, மூன்று ஐதரசன், Tritium) உம் இணைந்து He( 4He)(ஹீலியம்)ஐ உருக்வாகி வெளியிடப்படும் சத்திதான் சூரியன் வழங்கும் சக்திக்கான காரணம் என்ற விஞ்ஞானம் தெரிந்திராவிட்டாலும் இந்த சூரியனே ஏதோ ஒரு வழியில் எம் உயர் வாழ்தலுக்கான சக்தியை ஆற்றலை வழங்குகின்றது என்பதை புரிந்து கொண்டுள்ளனர். இன்னும் துல்லியமாக கூறுவதாயின்..... சூரியனில் ஏகப்பட்ட விடையங்கள் இயற்கையாகவே நடக்கிறது . ஒன்றறை கோடி (C) சென்ரிகிறேட் வெப்பநிலையில் இருபத்தையாயிரம் கோடி காற்று அழுத்தத்தில் Hydrogen  ( H )  + Hydrogen  ( H )  (ஹைட்ரஜன் ) இணைவால் மற்றும் டியூட்ரியும் 2H + ட்ரிடியம் 3H  ( Deuterium2H  . Tritium 3H  ) ஓன்று சேர்வதால்  ஈலியம் He  (Helium) ஹீலியமும் + சக்தியும் கிடைக்கிறது }

கிரேக்க தத்துவ ஞானிகளும்... ஏனைய விஞ்ஞானிகளும் பஞ்சாங்கம் பார்க்கும் சோதிடர்களும் எமக்கும் அப்பால் ஏதோ ஒரு சக்தி இருக்கின்றது என்று நம்புகின்றவர்களும் இந்த சூரியனே எமது ஆதாரம் என்று நம்புவதை மறுக்கவில்லை.

இயற்கையை நாசம் செய்யும் மனித குலத்தால் அல்லது வேறுவிதமாகவோ... விண்கற்களாலோ இந்த பூமிப் பந்தின் ஆயுள் காலம் மிகக் குறைவானதாகி பூமி இல்லாமல் போகலாம். 

ஆனால் அதற்கு பின்னாலும் இந்த சூரியன் இருக்கத்தான் போகின்றது அது வழங்கும் சக்தி காலப் போக்கில் இல்லாமல் போகலாம் என்பது கோடான கோடி வருடங்களைத் தாண்டித்தான் ஏற்படலாம் என்கின்றது விஞ்ஞானம். 

ஆனால் எந்த இயற்கைச் சமநிலை மாற்றமும் சூரியனை அதன் இயலபான வாழும் காலத்தை(Age of Sun: 4.5 Billion years) மாற்றயமைக்க மாட்டாது என்பதே விஞ்ஞானம் அதனை மெஞ்ஞானமும் வழி மொழிகின்றது.

அந்த வகையில் யாரும் அசைக்க முடியாத சக்தியாக உயர்ந்த சக்தியாக ஆற்றலாக கவனிக்கப்படும் பொருளாக வணக்கத்திற்குரிய பொருளாக சூரியன் இருப்பதில் நிறையவே அர்தங்கள் உண்டு

அது வழங்கும் சக்தி... ஆற்றல்.. இல்லையேல் இந்த பூமிப் பந்தில் எந்த உயிரினங்களும் வாழ முடியாது.

H, 2H உம் 3H உம் சேர்ந்து He உருவாகும் போது வெளிவிடும் சக்தியே சூரியனால் வழங்கப்படுவதில் உள்ள மிகச் சிறப்பு இந்த சேருதலில் சக்தி வெளியிடுவதில் எந்த கழிவுகளும் உருவாகி சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் செயற்பாடுகள் நடைபெறுவதில்லை என்பதாகும்.

தற்போது மனித குல வாழ்விற்காக பூமியில் உருவாக்கப்படும் மின்சாரம் தொடக்கம் எல்லாவற்றிலும் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் விடயங்கள் அளவு ரீதியில் வித்தியாசப்பட்டாலும் இருக்கின்றன. இவை கட்டுக்கடங்காது ஒரு ஒழுங்கிற்கு அப்பால் மீறப்படும் போது ஏற்படும் விளைவுகளே பூமியின் வாழ் காலத்தை குறுகிக் கொண்டு வருகின்றது.

இவற்றையெல்லாம் மீறி சூரியன் நிமிர்ந்துதான் நிற்கினறான். காரணம் அவன் வழங்கும் சக்திகான அணுக்களின் இணைப்பில் ஏந்த மாசும் ஏற்படாமல் இருப்பதுவே முக்கிய காரணம்.

இதனாலே மனித குலம் தற்போது சூரியனில் நடைபெறும் சக்தி உருவாக்க முறையை பூமியில் உருவாக்கி சக்தியை பெற்றால் பூமி மாசுபடுவதில் இருந்து எம்மை காப்பாற்றி இந்த பூமிப் பந்iதின் வாழ் காலத்தை எண்ணற்ற ஆண்டுகளாக மாற்றலாம் என்று முயற்சிக்கின்றார்கள்.

அதாவது பூமியில் அங்காங்கே சிறிய சிறிய சூரியன்களை உருவாக்குதல் என்று தொழில் நுட்ப பரீட்சாத்த வேலைகளை செய்கின்னர். இதுவரையில் சீனாவும் கொரியாவும் இதில் ஆரம்ப கட்ட வெற்றிகளை கண்டிருந்தாலும் அவர்கள் இதனைப் மக்களுக்கான பயன்பாட்டிற்கு கொண்டுவருதற்கு இன்று பல ஆண்டுகள் உழைக்க வேண்டும்.

பாரிய பொருள் செலவாகும் இதே மாதிரியான ஒரு திட்டத்தை உலகில் உள்ள 30 இற்கு மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்குலதற்கான வேலைகளை கடந்த 10 வருடங்களாக பிரான்ஸ் பரிசோதைக் கூடம் அமைத்து செயற்பட்டு வருகின்றனர். இது ஆரம்பி நிலையில்தான் உள்ளது.

இந்த முயற்சிகள் வெற்றி பெறும் என்று விஞ்ஞானம் கூறுகின்றது..... நம்புகின்றது. அது எதிர் காலத்தில் நிறைவேறினால் கிராமத்திற்கு ஒன்றாக ஏன் வீட்டிற்கு ஒன்றாக செயற்கை சூரியன்கள் இருக்கும் சூழல் ஏற்படும். அப்போது எனது பொங்கல் தைப் பொங்கல் எமது பெரியவரான இயற்கைச் சூரியனும் இந்த செயற்கைச் சூரியனுக்கும் என்றாகிப் போகும் காலம் வந்துவிடும்.

அப்போது நாம் இரு பானை வைத்து முற்றத்திலும்.. முகட்டிலும்.... அல்லது விட்டத்தில் இயற்கைச் சூரியனுக்கும் செயற்கைச் சூரியனுக்கும் பொங்கல்களை பொங்குவோம். கொண்டாடுவோம்

அதுவரை இந்த பூமிப் பந்தின் வாழ் காலத்தை தாங்கிப் பிடிக்க இயற்கையை மாசுபடுத்தாத பாதுகாக்கும் செயற்பாட்டில் மனித குலம் ஈடபடவேண்டும்.

நாம் சூரியனுக்கு செலுத்தும் நன்றி... வணக்கம்... இந்த சுற்றுச் சூழலை மாசுகபடுத்தாத இயற்கையை அனுசரித்த வாழ்கை முறையினூடும் வாழப் பழகுவதே ஆகும்.

இயற்கைப் பொங்கலாக இருக்கும் இந்தப் பொங்கல் விஞ்ஞானாத்தின் வளர்ச்சியினால் விஞ்ஞானப் பொங்கலாகவும் இணைந்து பயணிக்கும் நிலைக்கு எதிர்காலம் அமையுமோ என்பதே தற்போதைய கேள்வியாக விஞ்ஞான வளர்ச்சி பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment