Tuesday 18 January 2022

மரியாளுக்கு மரியாதை ஒரு விவிலிய பார்வை பகுதி -- 6

 மரியாளுக்கு மரியாதை ஒரு விவிலிய பார்வை பகுதி -- 6

************

மரியாளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் அடுத்த
நற்செய்திப் பகுதியை எடுத்துக் கொள்வோம் (மத் 12:46-50). A இதுவும் மரியாளுக்கு எதிரானது அல்ல. மாறாக, அவளுக்கு ஏன் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்கு மேலும் வலு
சேர்ப்பதாகவே அமைந்தள்ளது. யார் என் தாய்? என்று
கேட்டதோடு, இயேசு நின்று விடவில்லை. தொடர்ந்து,விண்ணகத்திலுள்ள
தந்தையின்திருவுளத்தை
நிறைவேற்றுபவரே,சகோதரரும்
சகோதரியும் தாயும்ஆவார்" என்றும் அவர் கூறுகிறார். அதன் பொருள் என்ன? என்னைப் பெற்றெடுத்ததால் மரியாள் எனக்குத் தாயல்ல. அதற்கு முன்பே, தந்தையின் திருவுளத்திற்கு இதோ உமது அடிமை. உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்" என்று தன்னை கையளித்த பொழுதே, அவள் எனக்குத் தாயாகி விட்டாள்" என்று இயேசு கூறுவதாகத்தானே பொருள்! இந்த இரு முறைகளிலும் இயேசுவுக்குத் தாயாகும் பாக்கியம் மரியாளுக்கு மட்டுமே உண்டு. சீடர்கள் கடவுளின் திருவுளத்திற்கு ஏற்றபடி வாழ்ந்தால், இயேசுவின் தாயாகவோ, சகோதர சகோதரியாகவோ மாற முடியும். ஆனால் யாரும் இயேசுவைப் பெற்றெடுத்த தாயாக மாறி விட முடியாது. மாதாவின் இந்த இரண்டு தாய்மைகளையும் பற்றி புனித அகுஸ்தினார் அழகாகக் குறிப்பிடுகிறார்: இயேசுவை உதரத்தில் கருத்தாங்கும் முன்பே, மரியாள் அவரை தன் இதயத்தில் கருவாக்கினார்". மட்டும்,
புனித எலிசபெத்தும், இதனால்தான் இயேசுவைப் பெற்றெடுக்கும்
முன்னரே, மரியாளை ஆண்டவரின் தாய்" என்று அழைக்கிறாள். பொதுவாக, குழந்தையைப் பெற்றெடுத்த பின்தானே, ஒரு பெண்ணை தாயென அழைக்க முடியும்? நடைமுறை பழக்கங்கள் மரியாளின் விக்ஷயத்தில் மாறுகின்றன. மற்றொரு கோணத்தில் பார்த்தால், இது மரியாளின் தாய்மையின் இரகசியத்தை சுட்டிக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது. மரியாள் மனித முறையினால் தாயாகவில்லை. கடவுளின் விருப்பத்திற்கு " ஆம்" என்று சொன்னதால்தான் தாய்மையை அடைந்தாள், அவளைப் போல, யாரெல்லாம் ஆண்டவரின் வார்த்தைக்கு ஆம்" என்று பதில் சொல்லி, அதன்படி வாழ்கிறார்களோ, அவர்களெல்லாம் முடியும் என்று, மரியாளின் தாய்மையைத்தான் இயேசு மறைமுகமாக எடுத்துக் காட்டுகிறார். என்றும் இப்பகுதியைப் புரிந்து கொள்ளலாம். இவ்வாறு தன்னைப் பெற்றெடுத்த தாயை, தன் சீடர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக முன்நிறுத்துகிறார். மரியாளை முன்னிறுத்தி அது நடைமுறை சாத்தியம்தான் என்று அடித்துச் சொல்கிறார்.
(தொடரும்)

No comments:

Post a Comment