Tuesday 18 January 2022

13 ஆம் திருத்தம்

13 ஆம் திருத்தத்தினை ஆரம்ப புள்ளி


13 ஆம் திருத்தத்தினை ஆரம்ப புள்ளியாகவும்/ இடைக்கால தீர்வாக ஏற்றுகொள்ளும்  தமிழ் தரப்புகள்  மாகாணசபையில் உள்ள காணி அதிகாரங்கள் ஊடக காணி அபகரிப்பை தடுக்க முடியும் என வாதிடுகிறார்கள்  

ஆனால் 13 ஆம் திருத்தத்தின் கீழ் அரசகாணிகள் தொடர்பில் மாகாணசபைகளுக்கு  குறிப்பிடத்தக்க எந்த அதிகாரம் எதுவும் இல்லை. 

அரச காணிவழங்கல் தொடர்பில் மாகாண சபை கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்பதனைத் தவிர மத்திய அரசாங்கத்திடமே அரச காணிகள் மீதான முழுமையான கட்டுப்பாட்டை 13ஆம் திருத்தம் வழங்குகின்றது.

அரச காணிகள் தொடர்பில் இருக்கும் இந்த பெயரளவு அதிகாரங்கள் கூட மகாவலிஅதிகார சபை சட்டத்தின் கீழ் வரும் திட்டங்களின் காணிகள் தொடர்பில் மாகாணசபைக்கு இல்லை

நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திலிருந்த  2017 ஆம் ஆண்டு தை மாதம்  கொக்கிளாய்,கருநாட்டுக்கேணி கரையோரப் பகுதியில் அரச காணியில் அடாத்தாக குடியிருந்தனர் எனக் கூறி இரண்டு சிங்கள மீனவர்களுக்கு எதிராக கரைத்துரைப்பற்று பிரதேச செயலகத்தினால் அரச காணி மீளப் பெறுதல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது  

வழக்கை விசாரித்த முல்லைத்தீவு மாவட்ட  நீதவான் நீதிமன்றம் மேற்படி இரண்டு சிங்கள மீனவர்களையும் காணிகளை விட்டு வெளியேறுமாறு  2018 ஆம் ஆண்டு தை மாதம் கட்டளை வழங்கியது. 

அதன் பின்னர் காணிகளில் அடாத்தாக குடியிருந்த இரு சிங்கள மீனவர்களும் உயர் நீதிமன்றிற்கு அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்தனர்.  ஆனால்   குறித்த  வழக்கை எடுத்துக் கொள்ள  உயர் நீதிமன்றம் மறுத்து கட்டளையிட்டது.

ஆனால் 2018 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின்  மாகாவலி அதிகார சபை மேற்படி இரண்டு சிங்கள மீனவர்களுக்கும் காணி அனுமதிப் பாத்திரத்தை வழங்கி அவர்களின் சட்டப்பூரவமற்ற காணி அபகரிப்பை சட்டப்பூரவமாக்கி இருந்தது 

மேற்படி நடவடிக்கையானது மத்திய அரசாங்கத்தின் சட்டமான அரச காணி  சட்டத்தின் கீழ் உரிய தமிழ் அரச அதிகாரிகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் நீதிமன்றத் தீர்ப்புக்களையும் கேலிக்குரியதாக்கி இருந்தது 

அதாவது அரச காணியில் அடாத்தாக குடியேற்றப்பட்ட குடியமர்ந்த ஒருவரை நீதிமன்றம் மூலம் வெளியேற்றிய பின்னர் அதனை மீறி நல்லாட்சி அரசாங்கத்தின் மகாவலி அதிகார சபை அந்நபர்களுக்கு காணி உரிமத்தினை வழங்கி இருந்தது 

இந்த  சம்பவதின் மூலம்  இலங்கையின் விசித்திரமான சட்டக் கட்டமைப்பில் மகாவலி அதிகாரசபைக்குள்ள எல்லையற்ற அதிகாரங்களை  சட்ட ரீதியாக விளங்கிக் கொள்ள முடியும் . அதே போல 13 ஆம் திருத்தத்தின் ஊடக மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் காணி அதிகாரங்கத்தின் பலவீனங்களையும்  அரசியல் ரீதியாகவும்  விளங்கிக் கொள்ள உதவும். 

இந்நிலையில் 13 ஆம் திருத்தத்தினை ஆரம்ப புள்ளியாகவும்/ இடைக்கால தீர்வாக ஏற்றுகொள்ளும் தரப்புகள் மாகாணசபை ஊடக காணி அபகரிப்பை தடுக்க முடியும் என ஏதன் அடிப்படையில்  கதை சொல்லுகின்றார்கள் என தெரியவில்ல 

No comments:

Post a Comment