Tuesday 18 January 2022

விண்ணகத்தில் அன்னை மரியாள் மற்றும் புனிதர்கள் பகுதி --16

 விண்ணகத்தில் அன்னை மரியாள் மற்றும் புனிதர்கள் 

பகுதி --16

************

உத்தரிக்கிற ஸ்தலம்:-

ஒரு மனிதன் விண்ணகம் செல்ல வேண்டுமென்றால் அவன் மாசற்றவனாக, தூயவனாக இருக்கவேண்டும்.

பாவத்தோடு மரிக்கும் ஒரு மனிதன் விண்ணகம் செல்லமுடியாது என்று நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

1யோவான் 5:16சொல்கிறது ‘’...சாவுக்குரிய பாவமும் உண்டு....’’ இந்த பாவம் ஒரு மனிதனின் ஆன்மாவை சாவுக்குள் வீழ்த்துகின்றது.

ஆனால் ஒரு மனிதனை சாவுக்குள் வீழ்த்தாத பாவமும் உண்டு அதுதான் அற்பபாவம் .அது சாவான பாவம் அல்ல 

''1 யோவான் 5:17 தீச்செயல் அனைத்துமே பாவம்; ஆனால் எல்லாப் பாவமுமே சாவுக்குரியவை அல்ல'.

'' இனி 1யோவான் 5:16 வசனத்தின் தொடக்கத்தை வாசிப்போம் 

''பாவம் செய்வோர் சாவுக்குரிய பாவம் செய்யவில்லை என்று கண்டால், அவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்ய வேண்டும். கடவுளும் அவர்களுக்கு வாழ்வு அருள்வார்.''

‘’

இங்கே ஒரு மனிதன் சாவுக்கேதுவான பாவம் செய்யாமல் வெறும் அற்பபாவம் மட்டும் செய்யும்போது அவனுக்காக இன்னொருவர் செபித்தால் அந்த செபத்தின் வழியாக அந்த பாவி மன்னிப்பை பெற்று வாழ்வு பெறுகின்றான்.

இங்கே அவன் வாழ்வு பெறுவது அந்த பாவியின் சொந்த செயலால் அல்ல மாறாக பிறருடைய செபத்தின் வழியாகத்தான்.

''யோவான் 4:37 நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள்.

38 இவ்வாறு "விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர்" என்னும் கூற்று உண்மையாயிற்று" என்றார்

இந்நிலையில் சாவுக்குரிய பாவம் செய்யாமல் வெறும் அற்ப பாவங்கள் செய்த ஒருவர் அந்த பாவத்தோடு இறந்து போகின்றார்.இந்த அற்பப் பாவங்களால் அவர் ஆன்மா கறைபடிந்து மாசற்ற நிலையை இழந்து நிற்கிறது.

இந்த பாவ கறைகளோடு அவரால் நேரடியாக விண்ணகம் செல்ல முடியுமா?முடியாது.ஆனால் இந்த பாவம் அவரது ஆன்மாவுக்கு ஆன்மீக சாவை வருத்தி வைப்பதில்லை.அப்படியானால் இந்த ஆன்மாவின் நிலை என்ன?

இந்த சூழ்நிலையில் இயேசுவால் உருவாக்கப்பட்டு[மத்தேயு:16:18-19],

தூய ஆவியால் வழிநடத்தபடுகின்ற[யோவான் 16:12-13], 

கத்தோலிக்க திருச்சபை

‘’உத்தரிக்கிற ஸ்தலம்’’

என்ற ஆன்மீக சுத்திகரிப்பு ஸ்தலத்தை குறித்த உண்மையை வெளிபடுத்துகின்றது.

‘’செக்கரியா 13: 8 நாட்டு மக்களுள் மூன்றில் இரு பங்கினர் வெட்டுண்டு மாள்வர்; மூன்றில் ஒரு பங்கினரே எஞ்சியிருப்பர்', என்கிறார் ஆண்டவர்.

9 இந்த மூன்றில் ஒரு பங்கினரையும் வெள்ளியை நெருப்பில் இட்டுத் தூய்மைப்படுத்துவது போல் தூய்மைப்படுத்துவேன்; பொன்னைப் புடமிடுவதுபோல் புடமிடுவேன்; அவர்கள் என் பெயரை நினைத்து மன்றாடுவார்கள்; நானும் அவர்கள் மன்றாட்டிற்குச் செவி கொடுப்பேன்; 'இவர்கள் என் மக்கள்' என்பேன் நான், 'ஆண்டவர் எங்கள் கடவுள்' என்பார்கள் அவர்கள்."

இதேபோல் மாபெரும் துன்பங்கள் வேதனைகள் என்ற நெருப்பினால் அற்பபாவத்தோடு இறந்து போகின்றவரின் ஆன்மாக்கள் சுத்திகரிக்க படுகின்ற ஆன்மீக நிலை தான் உத்தரிக்கிற ஸ்தலம் 

''1 கொரிந் 3 : 13 ஆனால், அவரவருடைய வேலைப்பாடு தெரிந்துவிடும்; தீர்ப்பு நாள் அதைத் தெளிவுப்படுத்தும். அந்நாள் நெருப்பு மயமாய் வெளிப்படும். அந்நெருப்பு அவரவருடைய வேலை எத்தகையது என்பதைக் காட்டும்.

14 ஒருவர் கட்டியது நிலைத்து நின்றால் அதற்கான கூலியை அவர் பெறுவார்.

15 ஒருவர் கட்டியது தீக்கிரையாகுமானால் அவர் இழப்புக்குள்ளாவார். ஆனால் நெருப்பில் அகப்பட்டுத் தப்பியவர்போல் அவர் மீட்கப்படுவார்''.

இந்த ஆன்மாக்களுக்காக இவ்வுலகில் வாழ்பவரால் ஒப்புகொடுக்கபடும் செபங்களாலும் ,திவ்ய பலிகளாலும் புண்ணிய அறச்செயல்களாலும்,அவர்களுடைய இந்த மாபெரும் துன்பங்களையும் வேதனைகளையும் குறைக்கமுடியும்.

''1யோவான்5:16.......அவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்ய வேண்டும். கடவுளும் அவர்களுக்கு வாழ்வு அருள்வார்''

உத்தரிக்கிற ஸ்தலத்தில் தூய்மைபடுத்துவதின் வழியாக ஒரு ஆன்மா பரிசுத்த வெண்மையை தரித்து கொள்கிறது

‘’திருவெளிப்பாடு 3:5 வெற்றிபெற்றோர் இவ்வாறு வெண்ணாடை அணிவிக்கப்பெறுவர். வாழ்வின் நூலிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கிவிட மாட்டேன். மாறாக, என் தந்தை முன்னிலையிலும் அவருடைய வானதூதர்கள் முன்னிலையிலும் அவர்களின் பெயர்களை அறிக்கையிடுவேன்''

இவர்கள் பரிசுத்தம் என்ற வெண்ணாடை தரிக்கபட்டவர்கள் மோட்சம் சேரத் தகுதியானவர்கள்.இவர்கள் தான் நிறைவுபெற்ற நேர்மையாளர்களின் ஆவிகள் இத்தகைய நிறைவுபெற்ற நேர்மையாளர்களின் ஆவிகளை தான் எபிரேயர் 12:23-ல் வாசித்தோம்.

இவ்வாறு உத்தரிக்கிற ஸ்தலம் என்பது அற்பபாவத்தோடு இறக்கும் ஒருவரின் ஆன்மா சுத்திகரிக்கப்படும் உலை.

அந்த துன்ப வேதனை என்ற தீச்சூளையில் சுத்திகரிகப்பட்ட பின்பு ஆன்மாக்கள் மோட்சம் அடைகின்றனர் என்பது தான் உண்மை,

ஆகவே மரித்த ஆன்மாக்களுக்காக திருப்பலி ஒப்புகொடுப்பது,செபிப்பது,தானதர்மங்கள் செய்வது போன்றவைகளை அதிகமாக செய்திட மறவாதீர்கள்

No comments:

Post a Comment