கோவையில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் பொழுது இரவு 2 மணிக்கு தீராத வயிற்று வலி. கிட்னியில் கல் என்று தெரியும் இருந்தாலும் இரவு என்ன செய்வது என்று நான் தங்கியிருந்த வீட்டின் மாடிப்படியில் உட்கார்ந்திருந்தேன்.
பக்கத்து வீட்டுப்பாட்டி சலம் கழிக்க வந்தார். ஏன் இங்க உட்கார்ந்திருக்க என்று விவரம் கேட்டார். என் வேதனையைக் குறிப்பிட்டேன். உடனே பொங்கலுக்குக் காப்பு கட்டியிருந்த கொத்தில் பூளைப்பூவை மட்டும் உருகி சுடுநீரில் காய்ச்சி வடித்துக் கொடுத்தார்.
“இந்தா இதக்குடி . அரை மணி நேரத்துல சரியாகிடும்” என்று கொடுத்தார். கால் மணி நேரத்திலேயே வலி குறைந்தது. காலையில் ஸ்கேன் செய்து பார்த்தேன் 8mm கல் இருந்தது.
மருத்துவர் ஆபரேசன் பன்ன வேண்டுமென்று தற்போதைக்கு மாத்திரை சாப்பிடுமாறு கூறினார். நான் மாத்திரை வாங்கவே இல்லை. பூளைப்பூ வைத்தியத்தைத் தொடர்ந்தால் என்ன என்று மனதிற்குத் தோன்றியது.
தினமும் குடிக்குமளவு தண்ணீரை எடுத்து அதில் கைப்பிடிப் பூளைப்பூவைப் போட்டு காய்ச்சிப் 6 அல்லது 7 நாள் குடித்திருப்பேன். வலி சுத்தமாகக் காணாமல் போயிருந்தது. மறுபடியும் ஸ்கேன் செய்து பார்த்தேன் 3mm மட்டும் இருந்தது.
மறுபடியும் 5 நாட்கள் தொடர்ந்தேன். சிறுநீரகக் கல் இல்லாமல் போனது. பாட்டியின் வழி காட்டுதலால் ஆபரேசனில் இருந்து தப்பித்தேன். அதிலிருந்து வாரம் ஒருமுறை பூளைப்பூவில் கருப்பட்டி போட்டு டீ போல வைத்துக் குடித்துக் கொள்வேன்.பிறகு தான் தோன்றியது. காப்புக் கட்டுவதென்பது தற்காப்பிற்காகத்தான் என்று.
முக்கிய குறிப்பு- மூன்று நாளில் கல் கரையுமா ?.நிச்சயமாக கல் கரைந்திடும் .ஆனால் கல்லின் அளவு எட்டு மிலி மீட்டருக்குள் இருக்க வேண்டும்.
தமிழ் மக்கள் கூட்டணியின் அரசியலுக்கு பின்னால் இந்தியாவின் வழிநடத்தல் இல்லை. எமக்கு சாி என தொிந்தவற்றை மட்டும் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். சில தவறான அணுகுமுறைகளினால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடனான கூட்டிணைவு முயற்சி தோல்வியில் முடிந்திருக்கின்றது என வடமாகாண முன்னாள் முதலமைச்சா் க.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளாா்.
தமிழ் மக்கள் கூட்டணிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான கூட்டை உருவாக்க அண்மையில் முயற்சிக்கப்பட்ட நிலையில் அந்த முயற்சிகள் தோல்வியடைந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பாக இன்று மாலை ஊடகங்களுக்கு முன்னாள் முதலமைச்சர் விளக்கமளித்தார். இதன்போது பேசிய அவர்,
தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தின் இன்றைய காலகட்டத்தில் ஒத்த கருத்துடையவர்கள் ஒருமித்துப் பயணிக்க வேண்டும் என்பதில் நான் குறியாக இருக்கின்றேன். அதனால்தான் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகித்து
வெற்றிகரமாக “எழுக தமிழ்” கூட்டங்களை நடத்திய கட்சிகளையும், அரசாங்கத்திற்கு எமது அரசியல் முன்மொழிவுகளை எம்முடன் இணைந்து கையளித்தவர்களையும் ஒன்றுபட்டு செயலாற்றுமாறு வலியுறுத்தி வந்தேன்.
வடக்கு கிழக்கில் இன்று ஏராளமான தமிழ், முஸ்லிம், சிங்கள கட்சிகள் செயற்பட்டு வருகின்றன. எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் மாகாணசபை அதிகாரமும் எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்பு சார் இனப்படுகொலை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு போதுமானதில்லை. எனினும் இவற்றுக்கு எதிராக காத்திரமான எதிர்ப்பு நடவடிக்கைகளை உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மேற்கொள்வதற்கு எமது ஒன்றுபட்ட பலம் அவசியமானதாக இருக்கின்றது.
மறுபுறத்தில், தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் மாகாண சபை அதிகாரமும் தவறானவர்கள் கைகளுக்கு செல்கின்றபோது அவற்றை அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகளுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் பாரிய ஆபத்தும் இருக்கின்றது.
இதனால் தான் ஒரே சிந்தனை மற்றும் ஒரே கருத்துள்ள தமிழ் மக்கள் பேரவையில் உள்ள தமிழ் கட்சிகள் ஐக்கியப்பட்டு ஒரு கூட்டணியை அமைத்து தேர்தல்களில் பலமான ஒரு அணியாக போட்டியிடவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திவந்தேன். அதேசமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சி ரீதியாக உடைக்கும் வகையில் நாங்கள் செயற்படப்போவதில்லை என்றும் கூறியிருந்தேன்.
தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையே நான் எதிர்பார்க்கும் இந்த கொள்கை ரீதியான ஒத்திசைவு அதிகம் இருந்து வந்தாலும் கடந்த காலங்களில் “எழுக தமிழ்” கூட்டங்களை நடத்தியமை அரசியல் யாப்பு முன்யோசனைகளை அரசாங்கத்திற்கு கையளித்தமை போன்ற நிகழ்வுகளை ஒன்று சேர்ந்து வெற்றிகரமாக நடத்தியிருந்தாலும் இந்தக் கட்சிகள் தேர்தல்களிலும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என்று விரும்பினேன். இந்த அடிப்படையில் தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இந்த கூட்டணியில் இருக்கவேண்டும் என்று பெரிதும் விரும்பினேன்.
ஆனால், தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் எமக்கும் இடையே கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் ஏற்பட்ட முரண்பாடுகள், இந்த கட்சிகள் இரண்டும் ஒன்றாக என்னுடன் இணைந்து எதிரான பிரதான சவால்களாக இருந்து வருகின்றன. அத்துடன் எமது தமிழ் மக்கள் கூட்டணி இந்தியாவின் சொல்லைக் கேட்டு செயற்படுவதாகவும் இந்தியா தம்மை இந்த கூட்டணிக்குள் இணைக்கக்கூடாது என்று சொல்லியிருப்பதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பகிரங்கமாக கூறி இருந்தது.
இது முற்றிலும் தவறு. எனது அரசியலில் இதை செய், இதை செய்யாதே என்று இந்தியா இன்றுவரை எந்த சந்தர்ப்பத்திலும் அறிவுறுத்தியதோ, ஆலோசனை சொன்னதோ கிடையாது. எது சரி என்று நினைப்பதையே நான் இன்றுவரை செய்துவந்துள்ளேன். இனியும் செய்வேன். ஆனால், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நாம் விரும்பும் ஒரு தீர்வினை அடைவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பும் ஆதரவும் எமக்கு அவசியம் என்றும் அதனை இந்தியா செய்யும் என்றும் நான் நம்புகின்றேன்.
என்னைப் பொறுத்தவரையில் மக்களின் பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் தான் முக்கியம். எனது கட்சியின் அடையாளமோ, எனது பிம்பமோ எனக்கு முக்கியமானவை அல்ல. அதனால்தான் ஏன் ஒரு கூட்டமைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தியும் மக்கள் அதனைத் தான் விரும்புகின்றார்கள் என்பதை வலியுறுத்தியும் சில வாரங்களுக்கு முன்னர் தம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு அந்தரங்கக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தேன். இதில் பல விடயங்களை நான் குறிப்பிட்டிருந்தேன்.
முக்கியமாக ஏனைய கட்சிகளை உள்வாங்கி ஒற்றுமையாக செயற்படுவதற்கு ஒரு வாய்ப்பாக அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தயாராக இருப்பதாகவும் ஒரு கொள்கை அடிப்படையில் சரியான பாதையில் செல்வதற்கு ஒரு இறுக்கமான புரிந்துணர்வு உடன்படிக்கையை தயாரித்து நாம் செயற்பட வேண்டும் என்றும் நான் கூறியிருந்தேன்.
தம்பி கஜேந்திரகுமாரை நேரடியாகச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறும் கேட்டிருந்தேன். இந்தியா எம்மை அவர்களுடன் சேர வேண்டாம் என்று கூறியிருந்தால் நான் ஏன் சைக்கிள் சின்னத்தில் தேர்தலைச் சந்திக்க முன்வர வேண்டும்?
ஆனால் இன்றுவரை தம்பி கஜேந்திரகுமார் எனது கடிதத்துக்கு நேரடியாக பதில் அளிக்கவில்லை. ஆனால், காலைக்கதிர் பத்திரிகைக்கு வழங்கிய ஒரு பேட்டியில் நான் அனுப்பிய கடிதம் பற்றிக் குறிப்பிட்டு எனது யோசனைகளை நிராகரிப்பதாக அவர் கூறியிருந்ததை பார்த்தேன்.
பின்னர் கொழும்பு தமிழ் சங்கத்தில் அண்மையில் நடந்த ஒரு நிகழ்வில் “விக்னேஸ்வரன் ஐயாவுடன்” மட்டுமே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணையும் என்று தம்பி கஜேந்திரகுமார் கூறியிருந்தார். தம்பி பிரபாகரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்கிய தீர்க்கதரிசனமான முயற்சியில் இருந்து நாம் பாடங்களைக் கற்று எவ்வாறு தொடர்ந்து முன்நகர்ந்து செல்லவேண்டும் என்று தம்பி கஜேந்திரகுமாருடன் நேரடியாகப் பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எதிர்பார்த்திருந்தேன்.
இந்தநிலையில் தான், பரந்த கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சிகளில் தமிழ் மக்கள் தேசிய முன்னணியையும் கொண்டுவருவதற்குத் தான் அனுசரணை வழங்குவதாகக் கூறி எனக்கும் தம்பி கஜேந்திரகுமாருக்கும் நன்கு அறிமுகமான பேராசிரியர் முருகர் குணசிங்கம் அவர்கள் முன்வந்தார். அதனை நான் ஏற்றுக்கொண்டேன். பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கும் ஒரு முயற்சியாக தமிழ் மக்கள் கூட்டணிக்கும் தமிழ் மக்கள் தேசிய முன்னணிக்கும் இடையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய அவர் முயற்சித்தார்.
இந்த சந்திப்பு நேற்று திங்கட்கிழமை நடைபெறுவதாக ஏற்பாடாகி இருந்தது. எமக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கையீனங்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு சந்திப்பாகவே இது அமையவிருந்ததால் எந்த முன்நிபந்தனைகளும் எமக்கு இடையே இருக்கவில்லை.
ஆனால், கட்சியை இந்த கூட்டணியில் இணைக்காது இருப்பதற்கு நான் சம்மதம் தெரிவித்துவிட்டதாகக் கூறியே நண்பர் பேராசிரியர் முருகர் குணசிங்கம் தம்மிடம் கூறியதாகவும் அந்த அடிப்படையிலேயே சந்திப்புக்கு இணக்கம் தெரிவித்ததாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பேராசிரியர் முருகர் குணசிங்கம் கடந்த ஞாயிறுக்கிழமை சந்தித்தபோது அவருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. இது எனக்கு தெரிவிக்கப்பட்டது.
அப்படி எந்த ஒரு இணக்கத்தையும் நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை என்று விளக்கியபோது நடக்க ஏற்பாடாகி இருந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டது. இந்த விடயத்தில் நான் யாரையும் குறைகூற விரும்பவில்லை.
நல்ல ஒரு நோக்கத்துக்காகவும் எமது மக்களின் நன்மைக்காகவுமே இந்த சந்திப்பு முயற்சி ஏற்பாடாகி இருந்தது. ஆனால், தவறான அணுகுமுறைகளினால் இது சாத்தியமாகாமல் போயுள்ளது. தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் ஏனைய கட்சிகளில் இருந்து விலகி எமது கொள்கைகளை ஏற்று செயற்படவிரும்புபவர்களையும் இணைத்து செயற்படுவதே எமது நோக்கம்.
இந்த முயற்சியில் கட்சி நலன்களை முன்னிறுத்தி எந்த முன்நிபந்தனைகளையும் விதிக்காமல் எமது மக்களின் இன்றைய அவல நிலையைக் கவனத்தில் கொண்டு தான் கட்சிகள் செயற்படவேண்டும்.
அதேவேளை, எதிர்காலத்தில் தவறுகள் விடுவதில்லை என்றும் தமிழ் மக்களின் அபிலாஷைகளே எமது மூச்சு என்ற பிரக்ஞையின் அடிப்படையிலும் பரஸ்பர நம்பிக்கை, அதேசமயம் இறுக்கமான ஒழுக்கவிதிகளுடன் தான் நாம் செயற்படவேண்டும். இந்த முயற்சியில் எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை. ஆனால் அதேசமயம் முன்னேற்றமும் காணப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடைய அரசியல் வரலாற்றை எடுத்துப் பாருங்கள். சுமந்திரன் எங்கேயாவது எப்போதாவது தீர்க்கமான ஒரு கருத்தினை தெரிவித்ததாக சரித்திரம் இருக்கிறதா? என EROS கட்சியின் தலைவர் பிரபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் கட்சியின் மகளிர் அணித் தலைவியை அறிமுகப்படுத்தும் ஊடக மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்து பேசிய அவர்,
சுமந்திரனுடைய கடந்த கால வரலாற்றில், யாழ்ப்பாணத்தில் ஒரு கதை, கொழும்பில் இன்னொரு கதை, முல்லைத்தீவில் ஒரு கதை, அன்னிய நாடு லண்டனில் ஒரு கதை, அவுஸ்திரேலியாவில் ஒரு கதை, லண்டனில் ஏன் மக்கள் உடனடியாக வெளியேறு என்று சொல்லி அடிக்க போனவர்கள்? அவுஸ்திரேலியாவில் சுமந்திரன் அவர்களை காலில் போடும் செருப்பால் தூக்கி எறிந்து அவுஸ்திரேலியா மண்ணை விட்டு வெளியேறுமாறு சொல்லி மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஏன் கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தல் தொடர்பான உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தூதுவராக வந்த சுமந்திரனை ஏன் அந்த மக்கள் ஓட வைத்தார்கள்? கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் ஒரு சரியான ஆளாக இருந்திருந்தால் ஒரு தீர்வு பொதியினை கொண்டு வரப் போகும் ரயில் அந்த தீர்வு பகுதி நிலைநிறுத்த முடியாமல் போய்விட்டால் நான் பதவி விலகுவேன் என்று கூறியிருந்தார்.
நான் இப்பொழுது ராஜினாமா கடிதம் எழுதிக் கொண்டே இருக்கின்றேன் பத்து பனிரெண்டு வருடங்களாக எழுதிக் கொண்டு இருக்கின்றார். இன்னும் மூன்று மாதங்களில் ஒரு தேர்தல் வரப் போகிறது. அந்தத் தேர்தல் வரும்வரை எழுதிக் கொண்டே இருக்கிறார் போலும். தேர்தல் நெருங்கும் சமயம் அல்லது பாராளுமன்றம் கலைக்கும் பொழுது இந்த கடிதத்தை அவர் கொடுப்பார். மக்கள் நினைப்பார்கள் எங்களுடைய சுமந்திரன் தீர்வு பொதியினை வைக்காமல் ராஜினாமா செய்துவிட்டார் என்று. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களே நான் ஒன்றை மட்டும் உங்களிடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நாங்கள் மட்டுமல்ல போராளி வடகிழக்கு மலையகத்தில் உள்ள அனைவருமே போராளி. போராட்டத்தில் எல்லோரும் அடிபட்டவர்கள். எல்லாரும் போராட்டத்தை ஆதரித்தவர்கள்.
போராளியை மட்டும் பயங்கரவாதி என்று சொல்லவில்லை இந்த பேரினவாதிகள். ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பயங்கரவாதி என்று சொன்னவர்கள். ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் புலி என்று கூறியவர்கள். ஒட்டுமொத்த தமிழருக்கும் விடுதலை தொடர்பான அபிலாசை இருக்கிறது.
இந்த எண்ணங்கள் கருத்துக்கள் அனைத்தையும் திணித்தவர்கள் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர். இன்று இந்த அந்நிய சக்திகளுக்கு தாரைவார்த்துக் கொடுத்து விட்டு நீங்கள் என்று எங்களுக்கு கதை கூறிக் கொண்டு இருக்கின்றீர்கள்.
கௌரவ பாராளுமன்ற சுமந்திரன் அவர்களே உங்களுடைய கதையினை நிறுத்த வேண்டும். பூச்சாண்டி கதை சொல்லுவதெல்லாம் நிறுத்தப்பட வேண்டும். உங்களுடைய அரசியலுக்காக இந்த அப்பாவி மக்களை பகடைக்காய்களாக்க வேண்டாம். உங்களுடைய அரசியல் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வந்தாச்சு. ஒட்டுமொத்தமான தமிழ் மக்களும் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். நீங்கள் அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு சாலச் சிறந்தது.
நாங்கள் கூறுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் ஒட்டுமொத்தமான தமிழ் மக்களுடைய ஆதங்கமும். அது தமிழ் மக்களுடைய உணர்வு. அது அவர்களுடைய வெளிப்பாடும் கூட. தமிழ் மக்கள் தற்பொழுது ஏமாந்து ஏமாந்து ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள்.
சாதாரண கூலித் தொழில் செய்யும் பணி தொடக்கம் புத்திஜீவி வரைக்கும் இன்றைக்கும் மாற்றம் ஒன்று வருமா என்னுடைய பிள்ளை நல்ல தொழிலினை பெற்றுக் கொள்ளுமா. இப்பொழுது ஒவ்வொரு மாற்றத்தை நோக்கி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நான் கேட்டுக் கொள்வது. மக்களை ஏமாற்றாதீர்கள். எங்கள் அரசியலில் இருந்து ஒதுங்குங்கள் அதுவே எங்கள் கட்சி உங்களுக்குக் கூறும் ஒரே ஒரு வார்த்தை என்றார்.
இவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்.. ஆண்டவர் எனக்கு தந்த தாலந்தை விலை பேச மாட்டேன்.. என்று ஒவ்வொருவரும் ஒழுங்காக ஊனமின்றி நடந்து செல்ல அவர் கண்டுபிடித்த போலியோ சொட்டும் மருந்தும் ஒரு காரணம் .
Dr.Jonas Salk, இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த யூதர்...!!
சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு??
இவர் POLIO தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு கடவுள் தந்த தாலந்தை விலைபேச மாட்டேன் என்று Pattern Right, வாங்க மறுத்து விட்டார்(அதாவது கண்டுபிடிப்பு உரிமம். சினிமா படம் copyrights வாங்குவது போல்..) இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருப்பார். ஆனால் அப்படி செய்திருந்தால், பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய் வாய் பட்டு இறந்திருப்பார்கள்! பேட்டி ஒன்றில் ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு, ஆண்டவர் படைத்த சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா என்று கேட்டார், இந்த மாமனிதர்!
பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்... போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரென்று கூட தெரிந்து கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை..!
நான் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில், விமான சர க்குகளை X Ray கருவி மூலமாக பரி சோதிக்கும் வேலைக்காக Heathrow Gargo Terminale இணைத்துக் கொள்ள ப்பட்டேன், அந்த ஆண்டுதான் சீனாவில் இருந்து, தக்காளிப்பழ பெட்டிகளுக்குள் ஒழிந்திருந்து இங்கிலாந்து நாட்டுக்குள் உள்ளே நுழைந்த இளைஞர் சிலர், சடலாம இறக்கப்பட்டனர். அதனை நேரடியாக பார்த்த நான் அதிர்ந்துபோனேன். அதேபோல 1996 ஐப்பசி மாதம் இரு சகோதர்கள் இந்தியாவில் இருந்து திருட்டுத்தனமாக ஒரு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் சக்கரம் அமைந்துள்ள பகுதியில் ஒளிந்திருந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்தனர்.. 22 வயதான பர்தீப் சைனி மற்றும் அவரது சகோதரர் 19 வயதான விஜய் ஆகிய இருவருமே, போயிங் 747 ரக ராட்சத விமானத்தில் திருட்டுப் பயணம் மேற்கொண்டவர்கள். 40,000 அடி உயரத்தில், -60C வெப்பநிலையில் சுவாஸிக்க ஆக்ஸிஜன் கூட அரிதான அந்த குட்டி அறையில் இந்த இரு இளைஞர்களும் சாகச பயணம் மேற் கொண்டனர்.இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து லண்டனின் ஹீத்ரோ வரையான இந்த 11 மணி நேர சாகச பயணத்தில் பர்தீப் வெற்றி கண்டாலும் அவரது சகோதரர் விஜய் மரணமடைந்தார். விமானம் தரையிறங்கி சில மணி நேரங்களில் ஓடு
தளத்தில் காலூன்றிய பர்தீப் குழப் பத்தில் இருந்துள்ளார். அவரை மீட்ட அங்குள்ள ஊழியர்கள் உடன டியாக மருத்துவமனைக்கு அனு ப்பிவைத்துள்ளனர்.தொடர்ந்து தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவரை தடுப்பு காவல் முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங் கேயே தமது சகோதரர் விஜய் இற ந்த தகவலை அதிகாரிகள் தெரிவி த்துள்ளனர்.அந்த கொடூரமான நிலையில் விஜய் தாக்குப்பிடிக்க முடியா மல் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. விமானம் தரையிறங்க சக்கரங்களுக்கான பெட்டி திறக்கும்போது, தரையில் இருந்து 2,000 அடி உயரத்தில் இருந்து விஜயின் சடலம் விமானத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. பின்னர் 5 நாட்கள் கடந்த பின்னரே ரிச்மண்ட், சர்ரே பகுதியில் இருந்து விஜய்யின் சடலத்தை மீட்டுள்ளனர். பர்தீப் கூட விமானம் புறப்பட்டு சில நிமிடங் களில் மயக்க நிலைக்கு சென்றுள்ளதாக அப்போது தெரிவித்திருந்தார். தற்போது வெம்ப்லி, வடக்கு லண்டன் பகுதியில் குடியிருக்கும் பர்தீப் சைனி நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின்னரே பிரித்தானியாவில் குடியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.மட்டுமின்றி, திருமணம் செய்து கொண்டு, இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான பர்தீப் சைனி, அவர் திருட்டுத்தனமாக நுழைந்த அதே ஹீத்ரோ விமான நிலையத்திலேயே சாரதியாக பணியாற்றி வருகிறார் நான் அடிக்கடி லண்டன் செல்லும்போதெல்லாம அவரைப்பற்றி எனது சக விமான நிலைய பணியாளர்களிடம் விசாரி ப்பதுண்டு, சில நேரங்களில் சில மனிதர்கள் தம் வாழ்வின் வசந்தங் களுக்காக, இறைப்பையே சாகசமாக சந்திப்பதும் உண்டு என நினைத்து என் புறுவங்கள் சற்றே நிமிர்ந்தன! அன்புடன் பேசாலைதாஸ்
கல்முனை கற்றுத்தரும் பாடம்! பேசாலைதாஸ் கல்முனை பிரதேச சபையை தரம் உயர்த்தகோரி பிக்குகள் நடத்திய போராட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனையாகி ன்றது! முதலில் நான் இதை மனோகனேசன் அவர்களின் கூற்றுடன் ஆர ம்பிக்கின்றேன் அவர் ஊடகங்களுக்கு சொல்வது இதுவே! "ஞானசார தேரர், தற்போது கல்முனை தமிழர் தரப்பு உண்ணாவிரதத்தை முதற்கட் டமாக கருதி முடித்து வைக்கிறேன் என எனக்கு தொலைபேசியில் தெரி வித்தார்"நல்லது, நன்றி, செய்யுங்கள்" என்றேன். அம்பாறை மாவட்ட, முஸ்லிம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் தரப்பின் பிடிவாத மும், தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தரப்பின் இயலா மையும் இந்த பிரச்சினையை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது என்ற உண்மையை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். வேறு ஒரு தளம் என அமைச்சர் குறிப்பிடுவது பெள்த்த பிக்குகள் மட்டம்! அவர் அதை ஒரு வேண்டாத கோணத்தில் நோக்கலாம், ஆனால் எனது பார்வை வேறு ஒரு கோணத்தில் நகர்கி ன்றது. தேச ஒருமைப்பாடு, நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில் இந்த நகர்வு, அவரது அமைச்சைப்பொறுத்தவரை நல்லதே என நினைக்கி ன்றேன். ஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப்பின்னர், பெளத்த பிக்குகளிடம், தமிழ்ர் மீதான பார்வை கொஞ்சம் மாறுதல் அடைந்துள்ளது, அதாவது முஸ்லிம் மக்களைவிட, தமிழர்கள் ஆபத்தானவர்கள் அல்ல என்பதே அந்த சிந்தனை நகர்வு! தமிழர்களுக்கு பல பிரச்சனை உள்ளது அது தீர்த்துவைக்கப்படவேண்டிய ஒரு விடயம் என்பது பலதரப்பாலும் ஆமோ திக்கப்பட்ட விடயம், ஆனால் அந்த பிரச்சனையை வைத்துக்கொண்டு, சிங்கள அரசியல்வாதிக,ள் மலிமான அரசியல் விளம்பரங்களை நடத்தி அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற துடித்ததின் விளைவே, தமிழர் விடு தலை போராட்டாம் எழுச்சிபெற காரனம் ஆகியது. அந்த போராட்டம் கூர்ப்படைந்து தனி நாட்டு கோரிக்கைக்கு வழி சமைத்தது. தற்கால உலகமயமாதல் கோட்பாட்டுக்கு சற்றும் ஒத்துவராத இந்த தனி நாட்டு போராட்டம் சர்வதேச அரங்கில் சந்தேக கண்கொண்டு பார்க்கப்பட்ட தோடு, அதனை அழிக்கவும் வழிகாட்டியது, இறுதியில் முள்ளிவாய்க் கால் துயரத்துடன் முடிவைந்தது! தமிழ் விடுதலை ஆயுதபோராட்டம் முடிவடை ந்து, ஜனநாயகவழிமுறைக்குள் தீர்வுகாணஅது தள்ளப்பட்டுள்ளது! ஆனால் தற்போதுள்ள முஸ்லிம் பயங்கரவாதம் இந்த புலிகளின் போரா ட்டத்தைவிட பயங்கரமானது, அதாவது விடுதலைபுலிகளின் போராட்டம் தமிழர் சுயபாதுகாப்பு அல்லது தமிழர் தாமே தமது பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு தனி நாடு என்ற எல்லைக்குள் சுருக்கப்பட ஒரு விடயம்! ஆனால் முஸ்லிம் பயங்கரவாதம் என்பது சர்வதேச ஒழுங்கமைவில் ஒரு சர்வதேச இஸ்லாம சாம்ராட்சியத்தை ஸ்தாபிப்பதே ISIS அமைப்பின் முக்கிய நோக்கம்! இது சர்வேதசத்திற்கே ஒரு அச்சுருத்தலான விடயம் என்பதோடு, இலங்கையின் இறைமைக்கே ஆபத்தானது என்று இப்போது சிங்களம் உணரதளைப்பட்டுள்ளது இதில் ஒரு விடயம் குறிப்பிட்டாகவேண்டும், அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் நகர்வு, அதாவது ஒற் றையாட்சிக்குள் சுமூகமான தீர்வு என்பது சிங்கள மக்களையும், ஆட்சிb யாளர்களையும், பிக்குமார்களையும் சந்தோசப்படவைத்துள்ளது என்றே கூறவேண்டியுள்ளது, எனவேதான் அத்ரலி தேரோ மற்றும் ஞானசார தேரர் போன்றவர்கள், பிரபாகரன் இருந்திருந்தால், இலங்கையின் இறமைக்கு சர்வதேச மட்டத்தில் இருந்து அச்சுருத்தல் வந்திருக்காது என வெளிப்படையாக கூறுகின்றார்கள். இன்னும் தொடரும்,,,,,, பேசாலைதாஸ் இன்னொரு விடயத்தையும் இங்கே அவதானிக்க முடிகின்றது, அதாவது தமது இனத்தின் அரசியல்வாதிகளின் சுயநல மும், அதிகாரவேட்கையும், கிழக்கு முஸ்லிம் மக்களுக்கு ஆயுதம் கொடு த்து, அவர்களின் தீவிரவாதத்துக்கு துணைபோனார்கள், என்ற விடயமும் பெளத்த பிக்குகள் உணரத்தலைப்பட்டுள்ளனர், ஞானசார தேரர் இப்ப டிச் சொல்கின்றார், அதாவது தமிழரும் சிங்களவரும் ஒருமித்து பயணம் செய்யவேண்டியுள்ளது என்கின்றார், இதில் ஒரு சூட்சுமம் இருக்கின்றது, அதாவது முஸ்லிம் மக்களை அரசியலில் இருந்து மெல்ல கழற்றிவிடு வதே இக்கூற்றின் அடிஆழம்! இதுவரை காலமும் தமிழ் தேசியவாதத்தையும், தாயக கோட்பாட்டையும் பலவீனப்படுத்த, முஸ்லிம் மக்களையும், கிழ க்கு பிராந்திய பிரதேசவேறுபாடையும், முஸ்லிம் மக்களைக்கொண்டு சிங்களம், அதனை நிறைவேற்றியது, அதன் எதிர்வினையாக, கிணறு வெட்ட, பூதம் கிழம்பிய கதையாக சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத பூதம், கிழக்கில் இருந்து உதயமாகியுள்ளது: இப்போது பெளத்த பிக்குகளுக்குள் எழுந்துள்ள விழிப்புணர்வு, சிங்கள இனத்தை காப்பாற்றவேண்டுமானால், இலங்கை என்ற நாட்டுபற்றை வளர்க்கவேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது, இது இனவாதத்தை சற்று பின்தள்ளி, நாட்டுப்பற்றை முன்வைக்கின்றது, இந்த செல்நெறி இலங்கையில் புதிய அரசியல் கலாச்சாரத்திற்கான தோற்றமாக உணரமுடிகின்றது, இந்த அடிப்படையில், மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு இந்த சொல்லாடல்கள் இப்போது அதிகமாக புரள்கின்றது, இதுவரவேற்கவேண்டியவிடயம்! மதநல்லிணக்கம் என்று பேசும் போது, இந்துவும் பெளத்தமும், ஒரே அடிமட்டத்தில் இருந்து வந்தவை, புத்தர் ஒரு இந்து!எனவே பெளத்தமும் இந்துவும் ஒரே பார்வையில் பார்க்கப்படலாம், தமிழ ர்கள் பெளத்தத்தை வழிபடுவ்தில் தவ்று ஏதும் இல்லை. உண்மையை சொல்லப்போனால், பெளத்தம் பிறந்தது இந்தியாவில்! அசோக சக்கர வர்த்தியால் தமிழர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற இந்த பெளத்தம், பார்ப்பணர்களின் இந்துத்துவ கடும் எதிர்ப்பினால், சாதுவான தார்மீக சிந்தனை கொண்ட பெளத்த மதம் இந்தியாவில் இருந்துவிரட்டப்பட்டு, தென்கிழக்கு ஆசியா, சீனாவுக்குள் புகுந்து, அங்குள்ள மக்களை தெய்வ ங்களாக மாற்றி, சீனா,சிங்கப்பூர்,கொங்கொங், கொரியா,யப்பான் போன்ற வளமான நாடுகள் உதயமாக இந்த பெளத்தம் துணை நின்று ள்ளது என்பதே வரலாற்று உண்மை! இன்னும் தொடரும் பேசாலைதாஸ்
ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின் மூக்கு கண்ணாடியை தவறுதலாக கீழே போட்டு உடைத்து விட்டது. அவள் அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி விட்டார்.... அன்று இரவு முழுவதும் அந்த பெண் தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார் செய்து, அடுத்த நாள் தன் தந்தையிடம் கொடுத்தாள். அதை பிரித்து பார்த்த அவர் அதில் ஒன்றும் இல்லாததை பார்த்து மீண்டும் கோபமுற்றார். யாருக்காவது பரிசு கொடுக்கணும்னா அதில் எதாவது பொருள் வைத்து கொடுக்கனும்மா நீ வெறும் பெட்டியை கொடுப்பது தவறு என்று கண்டித்தார். அந்த குழந்தை சிரித்து கொண்டே ஆர்வத்துடன் சொன்னது நான் இரவு முழுவதும் 1000 முத்தங்களை அந்த பெட்டிக்குள்ள கொடுத்து, மூடி தான் உங்களிடம் தந்தேன் என்றாள். அதைக் கேட்ட அவரது தந்தை அந்த குழந்தையை இறுக்கி அணைத்து மன்னிச்சிக்கோமா உன் அன்பு புரியாமல் உன்னை திட்டிட்டேன் என்றார். அவர் தன் தலையனை அடியில் அந்த பெட்டியை வைத்து கொண்டார். எப்போது எல்லாம் அவர் மனம் வருத்தமடைகிறதோ அப்போது எல்லாம் தன் மகளின் அன்பு முத்தத்தை அந்த பெட்டியை திறந்து எடுத்து கொண்டார். பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு.
Sunday, 16 June 2019
பேசாலை உதயன் ஆசிரியரின் பாராளமன்ற உறுப்பிணர் ரிசாட் பற்றிய காணொளி மீதான ஒரு விமர்சனம்!பேசாலைதாஸ்
உதயன் அவர்கள் அன்மையில் பாராளமன்ற உறுப்பிணர் ரிசாட் பற்றி ஒரு காணொளி பதிவில், ரிசாட் பற்றிய அவ ரது தனிமனித நற்பண்பு பற்றி சிலாகித்து இருந்தார், அதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது, மன்னார் புலம் பெயர் மக்களின் சங் கம் தொடர்பாக, வெளிநாட்டில் இருந்து உதவி தொகை அனுப்புவ தில் பரிய சிக்கல் எழுந்த போது, அமைச்சராக இருந்த அவரை தாராபுர த்தில் சந்தித்து, வெளிநாட்டில் இருந்து வறிய பல்கலைக்கழக மாணவர்களு க்கு உதவிப்பணம் அனுப்புவ தில் எழுந்த சிக்கல்பற்றி விபரித்த போது, அவர் எனக்கு அந்த சிக்கலை தீர்ப் பதாக வாக்குறுதி தந்தார் அவரும் எனது நண்பர்தான்! பிரச்சனை என்ன வென்றால் அவரின் மீதான குற்ற சாட்டு அவரது அரசியல் நடவடிக்கை பற்றியதாகும அவரது அரசியல் மாற்றுக்கருத்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கிம் மீது அவர் மேற்கொண்ட தனி மனித பழிவாங்கலை சொல்லலாம், குமாரி என்ற சிங்கள பெண்ணின் தற்கொலை ஹக்கிமுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையில் இருந்த தகாத உறவில் எழுந்தது என்று அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார், அதனைவிட அவர் தமிழ் தேசியவாத சிந்தனையை சிதறடிக்கும் வடக்கு கிழக்கு இணைப்பை கடுமையாக எதிர்த்தவர், கிழக்கிலே துரிதமாக தனது கட்சியை வளர்க்கும் நோக்கில் அவரால் வகுக்கப்பட்ட வியுகம் இது! கிழக்கிலே அம்பாரை காத்தான்குடி போன்ற பகுதியில் தனது அர சியல் செல்வாக்கிற்காக முஸ்லிம் இளைஞர்களின் தீவிரவாத்த்தை தமக்கு சாதகமாக்கிக்கொண்டவ்ர்களில் ஹிஸ்புல்லாவுக்கு நிகராக இவரும் இருந்துள்ளார். கிழக்கிலே முஸ்லிம் ஊர்காவல் படை மற்றும் ஜிஹாத் போன்ற இராணுவ ஆயுதகுழுவைன் செயல்பாடுகளை மனமார வரவேற்றவர்கள் இவர்கள்! அவரது அரசியல் மாற்றுக்கருத்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கிம் மீது அவர் மேற்கொண்ட தனிமனித பழிவாங்கலை சொல்லலாம், குமாரி என்ற சிங்கள பெண்ணின் தற் கொலை ஹக்கிமுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையில் இருந்த தகாத உறவில் எழுந்தது என்று அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார், அதனை விட அவர் தமிழ் தேசியவாத சிந்தனையை சிதறடிக்கும் வடக்கு கிழக்கு இணைப்பை கடுமையாக எதிர்த்தவர், கிழக்கிலே துரிதமாக தனது கட்சியை வளர்க்கும் நோக்கில் அவரால் வகுக்கப்பட்ட வியுகம் இது! கிழக்கிலே அம்பாரை காத்தான்குடி போன்ற பகுதியில் தனது அரசியல் செல்வாக்கிற்காக முஸ்லிம் இளைஞர்களின் தீவிரவாத்த்தை தமக்கு சாதகமாக்கிக்கொண்டவ்ர்களில் ஹிஸ்புல்லாவுக்கு நிகராக இவரும் இருந்துள்ளார். கிழக்கிலே முஸ்லிம் ஊர்காவல் படை மற்றும் ஜிஹாத் போன்ற இராணுவ ஆயுதகுழுவைன் செயல்பாடுகளை மனமார வரவேற் றவர்கள் இவர்கள்! முஸ்லிம் ஊர்காவல்படை, ஜிஹாத் இராணுவ கூலிப்படையால் ஆயிர மாயிரம் எம் தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்! கொலை செய்ய ப்பட்டனர், அந்த ஆயுத கும்பல்களுக்கு அடைக்கலமாக இருந்த இடம் காத்தான்குடி பள்ளி வாசல்! ஆயுதங்கள், கொலைவால்கள் மறைத்து வைக்கப்பட்ட இடங்கள் புனித பள்ளி வாசல்கள்! இதற்கு ஹிஸ்புல்லா வின் காணொளி சாட்சியாக இருக்கின்றது! இவர்களது அடாவடிதனத்தை அடக்குவதற்காகவே புலிகள் காத்தான்குடி பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தினார்கள் அதனை தொடர்ந்து வடக்கில் உள்ள முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கு தமிழ் இராணுவ துணைக்குழு மூலமாக பேராபத்து ஏற்பட்டு தமிழ் முஸ் லிம் இனமுறுகள் உச்சகட்டம் அடையும் என்ற நோக்கில் தான் முற்பாது காப்பாக முஸ்லிம்கள் வடக்கில் இருந்து அகற்றப்பட்டனர்! இந்த வெளி யேற்றத்தை தமது அரசியல் பரபுரை கையில் எடுத்தவ்ர்தான் இந்த ரிசாட் என்ற அரசியல்வாதி, இவரது அரசியல் பரபுரையில் தமிழ் விரோ தமே சிங்கள வெறுப்பைவிட மோசமாக இருந்தது, மன்னாரிலும் தனது வாக்கு வங்கியை பலப்படுத்த பெருந்தொகை காணிகளை கையகப் படுத்தி, முஸ்லிம் மக்களுக்கு வீட்டுதிட்டம் கொடுத்தது உதயனுக்கு தெரி ந்திருக்கும்! மன்னார் மாவட்டம் முழுவதுமே ரிசாட்டுக்கும் ஹிஸ்புல்லா வுக்கும் சொந்தமான தீவு என்றால் அது மிகையாகது! இந்த கானி விவகாரமாக, மன்னார் ஆயர் இராயப்பு விடம் ரிசாட் முரண்பட்ட விடையம் யாவ்ரும் அறிந்ததே! வில்பத்துகாட் டில் கைவைத்து சிங்கள பிக்குளிடம் முரண்பட்டவிடைய்மும் யாவரும் அறிந்ததே! அவர் அமைச்சராக மாறிய போது, அதனால் வேலைவாய்ப் புகள் பெற்றது மன்னார் முஸ்லிம்களே! ஏதோ எழும்பு துண்டை வீசி எறிவது போல, சம்பளம் குறைந்த சதோசா, சமூர்த்தி, இரயில் தண்டாவ ளையம் செப்பணிடும் வேலைகள்தான் ஒரு சில தமிழர்களுக்கு கண் துடைப்பாக கொடுக்கப்பட்டது! படிப்பறிவிலாத முஸ்லிம்கள் அவரது திணைக்களத்தில், கோட்டும் சூட்டுமாக திரிவைத நீங்கள் அவதானி க்கலாம்! எட்டாம் வகுப்பு கூட படிக்கத ஒரு முஸ்லிம் நபரை அரசாங்க கூட்டுத்தாபன தலைவராக்கிய பெருமை ரிசாட்டையே சாரும்! அரசியல் பரப்புரைகளில் புலிகளுக்கு எதிராக சொல் லும்போது, தான் சொப்பிங் பையோடு அகதியாக கல்பிட்டிக்கு சென்ற தாக அவரே சாட்சியம் அளித்துள்ளார்! அகதியாக சொபிங் பையோடு வந்தவர் எப்படி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரனா உருவாகினார், அதுவும் இந்த பத்து பதினைந்து ஆண்டுகளுக்குள்? சூது, வட்டி இதனால் வரும் பணம் முஸ்லிம் மதத்தை பொறுத்தவரை ஹராம்! அப்படியானல் ரிசாட் வெளிநாட்டில் வேலை செய்துன் உழைத்தவரா? அப்படி உழத் தாலும் நினைத்து பார்க்கமுடியாத பணம் சேகரிக்க முடியாது! இவரது பணம், சொத்து, காணி எல்லாமே ஊழலாலும், அராபிய சேக்குகளாலும், சவுதி மன்னராலும் வந்த பணமே! இதுவே பெளத்த பிக்குகளின் கண் ணை குடைந்தவிடயம்! இவர் மீது பொலிஸ் புலன்விசாரனை நடத்தி இருக்கவேண்டும்! ஆனால் அரசாங்கம் இவரை காப்பாற்றும் விதத்தில் பாராளமன்ற தெரிவு குழுவை அமைத்து கண்கட்டி வித்தை செய்துள்ளது! நான் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவன் அல்ல ஆனால் முஸ்லிம் அரசியல் தலைமகள் இனியாவது தமிழ் விரோத அரசியல் பரப்புகளை கைவிட்டு, சிறுபான்மை இனம் யாவும் ஒன்றாக இனைந்து ஒரே பலமாக திகழும் போது, அந்த பலம் இல்லாமல் தெற்கிலே எந்த சிங்கள கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத ஒரு அரசி யல் செல்நெறியை இலங்க சிறுபான்மை இனம் முன்வரவேண்டும், அமைச்சுகளுக்கும் சலுகைகளுக்கும் விலை போனால், முஸ்லிம் இருப்பு இலங்கையில் கேள்விக்குறியாக அமையும் எனவே ரிசாட் அவர்கள் செய்யவேண்டியது, வடக்கும் கிழக்கும் இணைந்தே இருக்கவேண்டும், தமிழ் தேசிய கூட்டமைப்போடு தம்மையும் இணைத்து சிறுபன்மையின் அரசுர பலத்தை நிரூபிக்கவேண்டும்! அதற்கு ஏற்றவாறு முஸ்லிம் தலை மகள் பொறுப்போடு, இன் முரண்பாடுகளை உருவாக்கக் கூடுய பேச்சு கள், அரசியல் கொள்கை பரப்புகள், தேர்தல்கள விளம்பரங்களை முஸ் லிம் தமிழ் மக்கள் என்ற சிந்தனையோடு, சிங்கள பெரும்பான்மையை சீண்டாத அதேவேளை மதி நுட்பத்துடன் சிறுபான்மை பலத்தோடு பெரும்பான்மையின் அகங்காரத்தை அடக்க முயலவேண்டும் இதற்கு உதாரனமாக ஹக்கீம் அவர்கள்து உரையை கீழே தருகின்றேன். சிறுபான்மை காடெருமைகள் ஒன்றாக திரண்டால்,,,சீறும் சிங்கங்களை அடக்கிவைக்கலாம்! இதுவே எனது எண்ணம் அன்புடன் பேசாலைதாஸ்
அன்மையில் இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் குண்டுவெடிப்புகளுக்கு பிறகு இஸ்லாத்தின் மார்க்கம் என்ன சொல்கின்றது, அதற்குள் இருக்கும் பல பிரிவுகள், உள் முரண்பாடுகள் பற்றியும் பயங்கர வாதாம், அடிப்படைவாதம் இப்படி பல வாதப்பிரதி வாதங்கள் இஸ்லாத்துக் குள்ளும் வெளியிலும் அலசப்பட்டது, அதில் ஒரு இஸ்லாமிய வழிமுறைதான் வஹாபிஸம் எனும் ஒரு பிரிவு, இந்த வஹா பிஸம் பற்றி எனக்கு தெரிந்த சில தகவல்களை இப்போது சிலாகிப்பது ஒரு புதிய புரிதலுக்கு வழிவகுக்கும் என நான் நினைக்கின்றேன்! வஹா பிஸம் என்றால் என்ன என்பதை நாம் விளங் கிக்கொள்வோம்! வஹா பிஸம் யார் இந்த வஹ்ஹாபிகள்?
குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்று வோம் என்று சொல்லுகிறவர்களைப் பார்த்து அல்லது தவ்ஹீத்வாதிகள் என்று பேசுபவர்களைப் பார்த்து வஹ்ஹாபிகள் என்று கூறப்படும் போது இந்த பெயர் எப்படி வந்தது இதன் அர்த்தமென்ன என நாம் தெரிந்திருப் பது மிகவும் அவசியமாகும். இந்த பெயரின் அர்த்தமென்ன? இந்தப் பெயர் அல்லாஹ்வுடைய நாமங்களில் ஒன்றாகும். வஹ்ஹாப் (வள்ளல்) (குர்ஆன் 3:8,38:9,38:35) 'வஹ்ஹாபி' என்றால் 'அல்வஹ்ஹாப்' என்ற அல்லாஹ்வின் பெயருடன் இணைக்கப்பட்டு அல்லாஹ்வைச் சேர்ந்த வன் என்று பொருள் படும். இந்த பெயர் எப்படி தவ்ஹீத்வாதிகளை குறிக்கும் சொல்லாக மாறிb யது? முஹம்மது பின் அப்துல் வஹ்ஹா ப்(ரஹ்) (அப்துல் வஹ்ஹாபுடைய மகன் முஹம்மத்) என்பவர் மிகப் பெரிய அறிஞர். சவூதியில் ரியாத்தை சேர்ந்தவர். இந்த காலப்பகுதியில் இமாம் அவர்கள் தோன்றிய காலப்பகு தியாகும். இவர்தான்இஸ்லாமிய உலகில் அடிப்படைக் கொள்கையில் மிகப் பெரிய சரியான மாற்றத்தை ஏற் படுத்தியவர். இதுவே எனது புரிதலாக உள்ளது.
காலம் செல்ல செல்ல மக்கள் சரியான கொள்கைகளிலிருந்து மாற்ற மடைந்துக் கொண்டே இருப்பார்கள். ஆக முஹம்மது நபி (ஸல்) அவர்களோடு இறைத்தூதுத்துவோம் முற்றுப் பெற் றால் வரலாற்றிலே அவர்களுக்குப் பின்னால் ஏற்ப்படுகின்ற சீர் கேடுகளை யார் சீர்ப்படுத்துவது யார் சமூகத்தை வழிநடத்துவது அல்லாஹ் ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஏதோ அடி ப்படையில் ஒரு சீர்த்திருத்தவாதியை ஏற்ப் படுத்திக் கொண்டே தான் இருக்கிறான் என்பது சில முஸ்லிம்களின் கொள்கையாகின்றது. இது இஸ்லாமிய வரலாற்று ரீதியான உண்மை. இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் அவர்களுடைய காலத்தில் இஸ்லாத் தின் தூணாக விளங்கினார்கள். அவர்களின் காலப்பகுதியில் அடிப் படைக் கொள்கை சம்பந்தமாக நிறைய குழப்பங்கள் தோன்றிய போது இமாமவர்கள் அதற்கு முகம் கொடுத்து சரியான இஸ்லாத்தை நிறு வினார்கள். அதற்கு முன்பு முஹம்மது நபி (ஸல்) மரணத்திற்குப் பின்னால் அபுபக்கர் (ரலி) அவர்கள் இந்த இஸ்லாத்தில் பல மாற்றங் களை புகுத்தினார். இந்த அடிப்படையில் இவரை ஒரு சீர்த்திருத்தவா தியாக இறைவன் உருவாக்கினான் என்பது இஸ்லாமியரின் கருத்து. இது இமாம் அவர்களின் ஏற்பாடாகும். இமாவர்கள் பிறந்தது ஹிஜ்ரி 1115ல் நஜ்தியிலே(இன்றைய புதிய பெயர் ரியாத்) உள்ள அல் உயைனா என்ற ஊரில் பிறந்தார். அது இப்போது ரியாத்திலிருந்து வடமேற்கில் 70 கிலோ மீட்டர்க்கு அப்பால் இருக்கிறது. அவர்கள் பிறந்த காலப்பகுதி எப்படி இருந்தது என்றால், இருளான காலப்பகுதியாக இருந்தது. மக்களிடம் பழைய அறியாமைக் கால பழக்கவழக்க ங்களைப் பின்பற்றிக் கொண்டிருந்தனர். குறிப்பாக ஹிஜ்ரி 900க்குப் பிறகு உலகளாவிய இஸ்லாமிய உலகம் உறங் கிக் கொண்டு இருந்தது. எல்லா விஷயங்களிலும் அறிவுத்துறையில், அரசியல்துறையில், பொரு ளதாரத்துறையில் ஏனைய மார்க்கத்துறையில் அனைத்திலும் விழ்ச்சி யில் இருந்த சமூகத்தை தட்டி எழுப்பியவர் ஒருவர் இருப்பாரெ ன்றால் அவர்தான் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப்(ரஹ்) அவர்கள் தான். வெறும்(இணைவைப்பை) ஷிர்க்கை மட்டும் விமர்சிக்கவில்லை அனை த்து துறைகளிலும் தனது கவனத்தை செலுத்தினார்கள். கப்றுகளை,குகைகளை, மரங்களை வணங்கக்கூடியவர்களாக அக்கால மக்கள் இருந்தனர். அதே போன்றுசூனியம் தலைதூக்கியிருந்தது போதை வஸ்துக்களின் பிடியில் மக்கள் இருந்தனர். இக்காலக்கட்டத்தில்பிறந்த இமாமவர்கள் சிறுவயதி லேயே ஒரு தேர்ச்சியுள்ள நுணுக்கமான ஆற்றல் உள்ளவராக வளர்கி றார் சிறுவயதிலேயே குர்ஆனை மனனம் செய்திருந்தார் அவருடைய தந்தையும் ஒரு பெரிய காரி(நீதிபதி) குர்ஆனைமனனம் செய்துயிருந்த மார்க்க அறிஞர். முதலில் இமாமவர்கள் தனது தந்தையிடம் கல்வி பயின்றார்கள். சிறுவயதி லேயே நிறைய விஷயங்களைதந்தையிடம் கற்றுக் கொண்டார்கள் இந்த சூழலில் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் அவர்கள் தனது 13 ஆம் வயதில் ஹஜ் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். அவர்களுடைய தந்தை யும் அனுமதிஅளித்து ஹஜ்க்கு அனுப்பி வைக்கிறார். அக்காலங்களில் ஹஜ் செய்வதென்றால் மிகவும் சிரமான காரியம்.நீண்டபயணம் செய்ய வேண் டும். ஆனால் இமாமவர்கள் இதுபோன்ற பயணங்களின் ஊடாக சரியான இஸ்லா த்தை கற்றுக் கொண்டார்கள். அக்காலத்தில் மக்காவிலே நான்கு மிகாரபுகள் (தொழுகைக் காக இமாம் நிற்கும் இடம்) கஃபாதுல்லாவை வளைத்து இருந்தது. எந்த அளவுக்கு அந்த சமகால மக்களிடம் மார்க்கத்தைப்பற்றிய தெளிவி ல்லை யென்றால் நான்கு மத்ஹபுகளுக்கும் தனிதனியாக தொழகை இடங்கள் இருந்தன. ஒரு வக்து தொழகையை நான்கு தடவை நிறை வேற் றப்படும். அதாவது ஹஜ் வந்த ஹாஜிகளை ஹனபி,ஷாபி, மாலிக்கி, ஹம்பலி என்று நான்கு பிரிவுகளாக பிரித்து தனி தனி பிரிவினரின் இமாம்களோடு தொழுகை நடக்கும்.
இந்த சூழலில் இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் 13ம் வயதில் ஹஜ்க்கு வந்திருந்த போது மக்காவில் காஃபாவில் ஒரு உலமா இஸ்லாமிய பயான்(சொற்பொழிவு) நடத்திக் கொண்டி ருந்தார்.ஆழமானஅறிவுள்ள அழைப்பாளரான அவர் சிறந்த முறையில் ஹதீஸ் குர்ஆன் அடிப்படையில் பயான் செய்து கொண்டி ருந்தார். அந்த சொற்பொழிவாள் ஈர்க்கப்பட்டு முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் முழுபயானை யும் கேட்கிறார்கள். அழகான பேச்சாக இருக்கிறது ஆனால் பேச்சை முடித்து விட்டுஎழுந்திருக்கும் போது யா காஃபதுல்லாஹ் என்று எழுந்திரிக்கிறார். ஹதீஸ் குர்ஆன் அடிப்படையில் பேசிய அவர்கூட சரியான இஸ்லாத்தை விளங்காமல் யாஅல்லாஹ் என்றுஅழைப்பதற்கு பதில் யா காஃபதுல்லாஹ் என்று அழைக்கிறார். இதனைக் கண்ட அப்துல் வஹ்ஹாப்அவர்கள் மிக நுணுக்கமாக இவர் பெரிய அறிஞராக இருக்கிறாரே இவரிடம் எப்படி அவர் செய்த தவறைசுட்டிக்காட்டுவது என்று யோசித்துக் கொண்டே அவரிடம் சென்று உங்களிடத்தில் நான் எனக்கு தெரிந்தசின்ன சின்ன அல்குர்ஆன் வசனங்களை ஓதி காட்டுகிறேன் நான் சரியாக ஓதுகி றேனா என்பதை நீங்கள் சரிபார்த்துச் சொல்லுங்கள் என்று சொன்னா ர்கள். ஏனென்றால் அப்துல் வஹ்ஹாப் அவர்கள் அப்போது சிறுவர். உடனே அந்த அழைப்பாளர் தாராளமாக நான் சரிபார்த்து சொல்கிறேன் என்றவுடன் சரி நான் குல் அவூதுபி(B)ரப்பி(B)ன்னாஸ் சூரத்துன்னாஸி ருந்து தொடங்கி ஒவ்வொன்றாக ஓதி காண்பிக்கிறேன் நீங்கள் தவறு இருந்தால் சரி பண்ணுங்கள் என்றார். அவரும் சரி ஒதுங்கள் என்றார் உடனே இமாமவர்கள் சூரத்துன்னாஸ், சூரத்துல் ஃபலக்,இக்லாஸ், தப்பத், அந்நஸ்ர், இப்படி ஒவ்வொன்றாக ஓத தொடங்கி இந்த சூரத்துல் குரைஷ்என்ற சூரா வந்தவுடன் நாம் எப்படி ஓதுவோம் லிஈலா(F)பி குரைஷ் ஈலா(F)பிஹிம் ரிஹ்ல(த்) தஷ் ஷி(த்)தாயி வஸ்ஸை(F)ப் (F)பல்யஃ(B)புதூ ர(B)ப்ப ஹாதல்(B)பைத் என்றுதான் தொடராக ஓதுவோம் அவர்கள் எப்படி ஓதினார்கள் என்றால் ர(B)ப்ப ஹாத என்பதை விட்டுவிட்டு (F)பல்யஃ(B)புதூ (B)பைத் என்று ஓதினார்கள் உடனே அதனை உலமா சுட்டி காட்டீனார்கள் (F)பல்யஃ (B)புதூ (B)பைத் என்றால் என்ன அந்த வீட்டை அவர்கள் வணங்கட்டும் என்று பொருள். (F)பல்யஃ(B)புதூ ர(B)ப்ப ஹாதல்(B)பைத் என்றால் இந்த வீட்டின் இரட்சகன் எவனோ அவனை வணங்கட்டும் என்று பொருள். அல்லாஹ் இந்த வசனத்தில் என்ன சொல்கிறான் காஃபாவை யாரும் வணங்க வேண்டாம் அதை எவன் படைத்தானோ அவனை வணங் கட்டும் என்று சூரத்துல் குரைஸில் அல்லாஹ் சொல்லுகிறான். எனவே தான் இஸ்லாத்தை விளங்கிய எந்த முஸ்லிமும் காஃபாவை வணங்குவ தில்லை இமாமவர்கள் (F)பல்யஃ (B)புதூ (B)பைத் இந்த வீட்டை வணங்க ட்டும் என்று வேண்டுமென்றே ஓதி னார் உடனே அந்த உலமா தவறாக ஓதுகிறாய் அது எப்படி வீட்டை வணங் குவது காஃபாவை வணங்கக் கூடாது என்கிறார். உடனே இமாமவர்கள் உங்களுடைய செயலில் அப்ப டித்தானே பார்த்தேன் நீங்கள் எழுந்திருக்கும் போது யா காஃபதுல்லாஹ் என்று எழுந்தீர்களே அதுமட்டும் சரியா என்று கேட்டார்கள். உடனே அவர் அன்றுதான் அவர் தன்னுடைய தவறை உணர்ந்து சரியாக விளங்கிக் கொண்டார். முஹம்மது இப்னு அப்துல் வஹாப் அவர்கள் ஒரு சாதாரண அறிஞர் அல்ல. இமாமவர்கள் குர்ஆன் தப்ஸீரில்எராளமான விளக்கங்கள் எழுதியுள்ளார்கள் .கல்வி கற்பதற்காக மக்காவை அடுத்து மதீனாவுக்குசென்றார்கள். மதீனாவில் சில வருடங்கள் கல்வி கற்றார்கள். பிறகு (பஷார) ஈராக் நாட்டிற்கு சென்று கல்விகற்றார்கள். அக்காலங்களில் பண்பாட்டில் கல்வியில் ஈராக் சிறந்து விளங்கியது ஈராக்கில் கல்வி கற்றுமுடித்து விட்டு லக்ஷா (இன்றைய பாலஸ்தீனின் உள்ள காஸா) சென்று அங்குள்ள மார்க்க அறிஞர்களிடமும் கல்வி கற்றாப் ர்கள்.இவ்வாறு பல நாடுகளில் சுற்றுப் பயணங்களில் வாயிலாக இமாமவர்கள் நிறைய விஷயங்களை கற்றுக்கொண் டார்கள். மார்க்கத்திற்கு விரோதமான பல நாடுகளில் நிவவிய நூதனபழக்கவழக்கங்களையும் தெரிந்துக் கொண் டார்கள். இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையிருந்து விலகிவாழ்ந்ததை அனுபவப் பூர்வமாக கண்கூடாக பார்த்து தெரிந்துக் கொண்டார்கள். தனது 25ஆவது வயதில்கல்வி சுற்றுலா முடித்துக் கொண்டு தன்னுடைய தந்தையிடத்தில் வந்தார்கள். ஆனால் அவருடைய தந்தைஉயைனா என்ற இடத்திலிருந்து ஹிஜ்ரத்(நாடு துறந்து) செய்து ஹுரைனிலா என்கிற ஊரில் இருந்தார்கள். ஏனென்றால் உயைனா பகுதியில் இருந்த அதிகார வர்க்கத்திடம் மார்க்க விஷயமாக முரண்பட்டுசென்றிருந்தார். ஹுரைனிலா என்ற பகுதியில் இருந்து கொண்டு தான் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் தனது முதல் அழைப்புப் பணியை தொடங்கினார்கள். சரியான இஸ்லாத்தை சொன்னவுடன் பிரச்சனை ஆரம்பிக்கிறது. நபிமார்கள் வரலாற்றிலேயே இதனை நாம் பார்க்கலாம். ஆரம்பத்தில் தவ்ஹீதை சொல்லும்போது பிரச்சனைகள் ஏற்ப்பட்டன. அதே போல இமாமவர்கள் பிரச்சாரம் செய்த ஹீரைனிலா பகுதியில் பிரச்சனை ஆரம்பிக்கிறது. உடனடியாக அந்த பகுதியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் அவர்களுக்கு ஏற்ப்படுகிறது மறுபடியும் ஹுரைனிலா என்ற ஊரிலிரு ந்து தனது சொந்த ஊரான உயைனாவிற்கு வந்தார்கள். உயைனாவிலுள்ள அமீர் (ஆட்சியாளர்) அவர்களோடு இமாமவ ர்களுக்கு நல்ல நெருக்கம் ஏற்படுகிறது. அமீரின் உதவியோடு தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்தார்கள். அந்த பகுதியில் (ரியாத்தில்) ஒரு மரம் இருந்தது அது பிள்ளை தரும் மரம்,என்று நம்பிக் கொண்டிருந்தனர். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் அந்த மரத்திடம் வந்து பிரார்திப்பார்கள். அதேபோன்று ஸயித் இப்னு கத்தாப் என்ற பெயருள்ள சஹாபி, உமர் (ரலி) அவர்களின் சகோதரர் ஆவார் யமாமா யுத்தம் நடந்தபோது(யமாமா என்பது ரியாத்திற்கு அருகிலிருந்த ஒரு ஊர்) அதிலே கலந்து கொண்டு இறைவழியில் ஸாயித் இப்னு கத்தாப் அவர்கள் வீரமரணம் அடைந்தார்கள். இவர்களை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அப்பகுதி மக்கள் தர்ஹா கட்டி பெரிய மினராவை எழுப்பி வணங்கிக் கொண்டிருந்தனர். அதேபோன்று மிரர் இப்னு அஸ்வர் என்ற பெயருடைய சஹாபிக்கும் கப்ர் கட்டி வைத்திருந்தனர். இமாமவர்கள் தொடர் பிரச்சாரத்தின் மூலமாக மனமாற்றத்தை ஏற்ப்படுத்தி அமீரிடம், இந்த தர்ஹாக்களை உடைக்க வேண்டும் ஆதரவு தாருங்கள் என்று கேட்டார்கள். ஆனால் அமீர் (அப்பகுதி ஆட்சியாளர்) மறுத்துவிட்டார். அல்ஜீபைலா என்கிற அந்த தர்ஹாவுக்கு அருகில் இருக்கின்ற மக்கள் என்னை சும்மா விடமாட்டார்கள் அதனால் வேண்டாம் என்றார். இமாமவர்கள் நான் இன்னும் அவர்களிடம் பிரச்சாரம் செய்து சரியான இஸ்லாத்தை சொல்லி சம்மதிக்க வைக்கிறேன் என்று சொன்னார்கள். ஷிர்க்கினால் ஏற்படும் பாரதூரமான கேடுகளை விளக்கி அமீர் அவர்களையும் சம்மதிக்க வைத்து, அமீருடைய 600 படைவீரர் களோடு இமாமவர்கள் அந்த தர்ஹாவை உடைக்க சென்றபோது, ஜீபைலா பகுதியில் அறியாமை பழக்க வழக்கங்களில் பிடிவாதமாக இருந்த மக்கள் ஒடி வந்து இமாமவர்களை தாக்க வந்தபோது, அமீரின் படையைக் கண்டு பின்வாங்கினார்கள். இப்போது யார் உடைப்பது எல்லோரும் தயங்கினார்கள் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் ஆழமான பிராச்சரம் செய்தி ரந்தும் மக்களிடம் ஊசலாட்டம் இருந்தது. யாரும் உடைக்க தயாராகவில்லை கப்ரிலே கைவைத்தால் ஏதாவது நடந்து விடுமொ என்று பயந்தார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய சொந்த மறுமகன் அலி (ரலி) அவர்களை அனுப்பினார்கள். மண்ணை விட்டு ஒரு ஜான் அளவுக்கு உயரமாக எங்கு கப்ர் கட்டப்பட்டு இருந்தாலும் உடைத்து விட்டு வாருங்கள் என்று அவர்களுடைய காலத்தில் கட்டளை பிறப்பித்தா ர்கள். அலி(ரலி) அவர்களும் அனைத்து கப்ர்களையும் உடைத்தெறிந்தார்கள். இந்த முன்மாதிரியை இமாம் அவர்கள் சொல்லிக் காட்டிவிட்டு, சரி நான் உடைக்கிறேன். நான் முதலில் ஆரம்பிக்கிறேன் என்று சொல்லிவிட்டு உடைத்தார்கள். அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதை கவனித்த மக்கள் அனைவரும் சேர்ந்து உடைத்தார்கள். இமாமவர்கள் இதோடு முடங்கி விடாமல் அந்த பிள்ளை தரும் மரத்தையும் வெட்டிச் சாய்த்தார்கள். இவர்கள் செய்த சீர்திருத்த பணி மற்ற பகுதிகளுக்கும் பரவியது. ஆனால் இமாமவர்களால் உயைனாவிலும் இருக்க முடியவில்லை. ஏனென்றால் உயைனா பகுதியை அட்சி செய்த அமீர் அல் அக்ஸாவில் இருக்கின்ற அமீரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தார். அக்ஸா பகுதியிலுள்ள அமீர் இவருக்கு செய்தி ஒன்று அனுப்பி னார். முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவர் நமது பகுதியில் புதிய விஷயங்களை சொல்லிக் கொண்டு திரிகிறார் கப்ர்களையெல்லாம் உடைக்குமாறு சொல்கிறார் எனவே இவரை கொன்றுவிடுங்கள் என்று கட்டளை இடுகிறார். உயைனா பகுதி அமீர் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களை கூப்பிட்டு சொன்னார்கள், எனக்கு உங்களை கொன்றுவிடுமாறு கட்டளை வந்திருக்கிறது ஆனால் உங்களை கொல்ல விரும்பவில்லை. உங்களுடைய சீர்திருத்த பணிகளைப் பற்றி எனக்குத் தெரியும் நீங்கள் தயவுசெய்து இந்த ஊரைவிட்டு சென்று விடுங்கள் என்றார். இமாமவர்கள் அவரை பார்த்து கேட்டார்கள் நீங்கள் யாருக்கு பயப்படுகிறீர்கள் நான் கொண்டு வந்திருக்கிற இந்த கொள்கை லாஇலாஹ இல்லல்லாஹ்வின் அசல் தன்மையாகும். அது சொல்லுகிற கொள்கையாகும் இந்த கொள்கையை நான் சொல்வதற்கு நீங்கள் எனக்கு உதவி செய்தால் உங்களின் ஆட்சியை அல்லாஹ் திடப்படுத்துவான். உங்க ளுக்கு கண்ணியத்தை தருவான். சகல வசதிகளையும் தருவான். அல்லாஹ் bவுக்கு மட்டும் பயப்படுங்கள் எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டா ர்கள். ஆனால் அமீர் அவர்களோ முடியாது பாலஸ்தீன பெரிய அமீர் படை யோடு வந்தால் என்னால் சமாளிக்க முடியாது போராட முடியாது தயவு செய்து போய்விடுங்கள் என்றார். தனது சொந்த ஊரைவிட்டே இமாமவர்கள் ஹிஜ்ரத் போக வேண்டிய சூழல். என்னதான் அந்த ஆட்சியாளர், இமாமை ஊரைவிட்டு வெளியேற்ற முற்பட்டபோதும், இமாமவர்களின் சத்தி யப் பணியைக் கண்டதன் விளைவாக, அவரைப் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, பக்கத்து ஊரான அஃத்திரையா என்கிற பகுதிக்கு அனுப்பி வைக்கிறார். அஃத்தி ரையா என்பதும் ரியாத்தை சேர்ந்தது தான். அக்காலத்தில் சவூதி பல குட்டி பிரதேசங்களாக பிரிந்து கிடந்தது. முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் அஃத்திரையாவுக்குள் முதன்முறையாக நுழைகிறார்கள். இமாம வர்களுக்கு எதிரிகள் இருந்த அளவுக்கு ஆதரவாளர்களும் இருந்தனர். அஃத்திரையா பகுதியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் இமாமவர்களுக்கு அடை க்கலம் கொடுத்தனர். அஃத்திரையா பகுதியை முஹம்மத் இப்னு சவூத் என்பவர் ஆட்சி செய்து கொண்டு இருந்தார். இவருடைய பரம்பரையை சேர்ந்தவர்களைத்தான் சவூதியா என்று சொல்கிறோம். சவூதி நாட்டையும் இவர்களுடைய பெயரைச் சொல்லித்தான் அழைக்கிறோம். முஹம்மது இப்னு சவூதிடம் இமாமவர்களின் ஆதரவளர்கள் குழு ஒன்று சென்று, உயைனாவில் இமாம் அவர்கள் ஏற்படுத்திய ஏகத்துவ எழுச்சியை எடுத்துரைத்து, நமது பகுதியில் இவர் பிரச்சாரம் செய்தால் இறைவனின் உதவி கொண்டு சீர்திருத்தம் ஏற்படலாம். எனவே இமாமுக்கு நீங்கள் அடைக்கலம் கொடுத்து ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர். முஹம்மது இப்னு சவூத் அவர்களும் இந்த பணியின் அவசியத்தை உணர்ந்திருந்ததால் இமாமுடைய ஆதரவா ளர்களின் கோரிக்கையை ஏற்று, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களை நேரடியாக அழைத்துப் பேசி இருவரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் மன்னரிடம், நான் கொண்டு வந்திருக்கிற இந்த கொள்கையை சரியான முறையில் பிரச்சாரம் செய்ய நீங்கள் உதவி செய்யுங்கள். அல்லாஹ் உங்களுடைய ஆட்சியை உறுதிப்படுத்துவான், உங்களுக்கு வெற்றியைத் தருவான், உங்களுடைய ஆட்சியை அல்லாஹ் விரிவாக்கி தருவான், உங்களை கண்ணியப்படுத்துவான் என்றார்கள். மன்னரும் அதற்கு சரி நான் உங்களுடைய பணிகளுக்கு தோள் கொடுக்கிறேன். நான் உங்களோடு இருக்கிறேன், உங்களுக்கு முழு உதவியும் செய்கிறேன். ஆனால் அல்லாஹ் ஏகத்துவ மாற்றத்தை இந்த பகுதியில் உருவாக்கி நீங்கள் பெரிய அந்தஸ்த்தை அடைந்தால் இந்த ஊரை விட்டும் செல்லக்கூடாது. இதற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும் என்று நிபந்தனையிட்டார். இமாமவர்களும் அதனை ஏற்றுக் கொண்டார்கள். இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு மன்னர் இமாமவர்களை அரசாங்க பிரதிநிதியாக்கி தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இஸ்லாமிய பிராச்சரத்தை முழுவீச்சில் செய்ய அனுமதி கொடு த்து முழு ஒத்துழைப்பையும் பூரண சுதந்திரத்தையும் வழங்கினார். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், நான்கு கலீஃபாக்கள் ஆட்சிக்காலத்திலும் எவ்வாறு ஆன்மீக தலைமையும் அரசியல் தலைமையும் ஒன்றாக இருந்து இணைந்து செயல்பட்டதோ அதே சூழல் மறுபடியும் ஏற்பட் டது. ஆன்மீக தலைமையும் அரசியல் தலைமையும் ஒன்றிணைந்ததால் இமாமவர்களின் பிரச்சாரம் சூடுபிடித்து முழு வீச்சில் நடக்கிறது. முஹம்மது இப்னு சவூத் அவர்களின் ஆட்சியும் விரிவடைந்து கொண்டே சென்றது. மன்னர் சவூத் மக்கா, மதீனா மற்றும் சிதறிக்கிடந்த மற்ற சிற்றரசுகளையும் கைப்பற்றி இன்றைய சவூதி நிலப்பரப்பைக் கடந்து ஈராக் வரை வெற்றி பெற்றுக்கொண்டே செல்கிறார். இமாமவர்களும் மன்னருக்கு ஈடு கொடுத்து, அழைப்புப் பணி மட்டும் செய்யாமல் மன்னரின் சிறந்த போர்ப்படை தளபதியாகவும் இருந்தார்கள். படைவீரர்களுக்கு பயிற்சியளிப்பது, வெற்றி பெற்ற பகுதிகளில் கவர்னர்களை நியமிப்பது, மக்களை எகத்துவ கொள்கை யின் மூலம் ஒரே குடையின் கீழ் ஒன்று படுத்துவது, ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்குமிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி இஸ்லாமிய ஆட்சியை பலப்படுத்துவது என்று பம்பரமாக சுழன்று முழு அரேபியாவிலும் இஸ்லா மிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்கள். இதனைக் கண்ட அன்றைய வல்லரசுகளான பிரித்தானியா மற்றும் பிரெஞ்சு ஆட்சியாளர்கள், கஃலீபாக்கள் காலத்திய தூய இஸ்லாமிய அரசியல் முறைப்படி நடக்கின்ற ஆட்சியை பரவவிட்டால் நமக்குதான் முதல் ஆபத்து என்பதை உணர்ந்து, பிரான்ஸின் மறைமுக அடிமையாக கிடந்த உஸ்மானிய சம்ராஜ்ஜியத்தின் 2 வது சுல்தானிடம், முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் பிராச்சரத்தையும் அதற்கு துணைபுரிகின்ற ஆட்சியாளர்களையும் இப்படியே விட்டு வைத்தீர்கள் என்றால் உஸ்மானிய சாம்ராஜ்ஜியம் அவர்களால் வீழ்த்தப்படும், துருக் கியை வஹ்ஹாபிகள் கைப்பற்றி விடுவார்கள். அதனால் நீங்கள் முந்திக் கொண்டு சவூதியை கைப்பற்றுங்கள் என்று கட்டளையிட்டார்கள். துருக்கிய ஆட்சியாளரும் அதனை வேதவாக்காக ஏற்றுக்கொண்டு சவூதியின் மீது படையெடுத்தார். சவூதியில் நடந்த பல போர்களுக்கு பிறகு ஹிஜ்ரி 1240ல் இமாமவர்கள் உருவாக்கி வைத்திருந்த இஸ்லாமிய அரசமைப்பு முற்றாக அழிக்கப்பட்டது. ஆனால் இமாமவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஏகத்துவ புரட்சியை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பின்னாட்களில் வாளால் சாதிக்கமுடியாததை இந்த கொள்கை சாதித்தது. ஆம், சூஃபிஸ கொள்கை கொண்ட துருக்கியர்கள் தோற்கடிக்கப்பட்டு விரட்டிய டிக்கப்பட்டனர். இமாமவர்களை பெருங்கூட்டம் ஒன்று எவ்வாறு ஆதரித்ததோ அவ்வாறே பெருங்கூட்டம் ஒன்று அவர்களை எதிர்க்கவும் செய்தது. இதை இமாமவர்கள் வாழ்ந்த சமகாலத்தின் வரலாற்றுப் புத்தக ங்களை படித்தால் இன்னும் உங்களுக்கு தெளிவாக விளங்கும். அவர்கள் காலத்து இஸ்லாமிய சமூகம் ஷிர்க்கிலும் மூடநம்பி க்கையிலும் மூழ்கி போய் இருந்தது. சவூதியில் மாத்திரமல்ல முழு இஸ்லாமிய உலகமும் இதே நிலையில்தான் இருந்தது. அரபு நாடுகளை ஆய்வு செய்த மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய அறிஞர்கள் அனைவரும் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தை மிக மிக மோசமான கால கட்டம் என்றே குறிப்பிடுகி ன்றனர். அந்தளவுக்கு முஸ்லிம்கள் மாற்றுக் கலாச்சாரத்தை பின்பற்றி வாழ்ந்திருக்கிறார்கள். சமகாலத்தில் வாழ்ந்த மாற்று மத அறிஞர் ஒருவர் - ‘சூஃபிசத்தை பின்பற்றிய உஸ்மானிய சாம்ராஜ்யம் மட்டும் இடையூறு செய்யாமல் இருந்திருந்தால், இமாமவர்கள் விட்டுச்சென்ற புரட்சிகர சமூகப் பணி தொடர்ந்து சீராக நடந்து இன்று அசைக்க முடியாத பெரிய வல்லரசாக இஸ்லாமிய சமூகத்தின் கட்டமைப்பு இருந்திருக்கும்’ என்று எழுதுகிறார். துருக்கியரினால் பின்பற்றப்பட்ட சூபிஸிச இஸ்லாம் கோட்பாடு கடவுளை, இருத்தல்வாத கண்கொண்டு நோக்கியது அந்த சூபிஸ கோட்பாடானது என்னைப்பொறுத்தவரிஅ என்னை கவர்ந்த ஓருர் கோட்பாடு, ஆனால் இமாம அவர்கள் ஏற்படுத்திய ஏகத்துவ கோட்பாடான வஹாபிஸ்சத்துக்கு எதிராக இருக்கின்றது. வஹாபிசம் அல்லாஹாக ஒருவனே ஏக கடவுள் என்பதையும், அதை பின்பற்றும் ஒரு இஸ்லாம் அரசு உருவாகவேண்டும் அதற்கு தற்போதுள்ள சவுதி அரசு வாய்ப்பற்றது என கருதி இஸ்லாமிய தனி அரசை உருவாக்க வஹாபிஸம் தூண்டுவதினால் இந்த வஹாபிஸமும் வஹாபிஸ் கொட்பாடுகளை கடைப்பிடிகும், தெவ்ஹித்கள் மீண்டும் இஸ்லாமிய ஆட்சியை இமாம் காடிய வழியில் நிறுவ முற்படுகின்றனர் தவறு என்னவென்றால் அதனை கிறிஸ்தவ அமெரிக்க எதிர்ப்புணர்வாக மக்களிடையே பரப்பி இஸ்லாமியத்தில் அடிப்படைவாதத்தி தீவிரமாக்கி பின்னர் பயங்க சேயல் மூலமாக இஸ்லாம் அரசையும் இஸ்லாமியத்தை பரப்ப நினைப்பதே இந்த வஹாஆபிஸம் என்று தம்மை அழைத்துக்கொள்பவர்கள் செய்யும் செயலாகும் எனவே இஸ்லாம் ம்று சீர்திருத்தம் செய்யவேண்டிய அவசியம் அதற்கு உண்டு, அந்த அந்த நாட்டின் அரசியல் க்லாச்சாரங்களுக்கு ஈடு கொடுத்து தனது தனித்துவத்தை விட்டு கொடுத்து இஸ்லாம் இயங்க வேண்டும் அதைத்தான் இலன்கையில் உள்ள அனைவரும் எதிர்பார்க்கின்றனர்