Tuesday 9 July 2019

சுமந்திரன் எங்கேயாவது எப்போதாவது தீர்க்கமான ஒரு கருத்தினை தெரிவித்ததாக சரித்திரம் இருக்கிறதா?

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடைய அரசியல் வரலாற்றை எடுத்துப் பாருங்கள். சுமந்திரன் எங்கேயாவது எப்போதாவது தீர்க்கமான ஒரு கருத்தினை தெரிவித்ததாக சரித்திரம் இருக்கிறதா? என EROS கட்சியின் தலைவர் பிரபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் கட்சியின் மகளிர் அணித் தலைவியை அறிமுகப்படுத்தும் ஊடக மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்து பேசிய அவர்,

சுமந்திரனுடைய கடந்த கால வரலாற்றில், யாழ்ப்பாணத்தில் ஒரு கதை, கொழும்பில் இன்னொரு கதை, முல்லைத்தீவில் ஒரு கதை, அன்னிய நாடு லண்டனில் ஒரு கதை, அவுஸ்திரேலியாவில் ஒரு கதை, லண்டனில் ஏன் மக்கள் உடனடியாக வெளியேறு என்று சொல்லி அடிக்க போனவர்கள்? அவுஸ்திரேலியாவில் சுமந்திரன் அவர்களை காலில் போடும் செருப்பால் தூக்கி எறிந்து அவுஸ்திரேலியா மண்ணை விட்டு வெளியேறுமாறு சொல்லி மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஏன் கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தல் தொடர்பான உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தூதுவராக வந்த சுமந்திரனை ஏன் அந்த மக்கள் ஓட வைத்தார்கள்? கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் ஒரு சரியான ஆளாக இருந்திருந்தால் ஒரு தீர்வு பொதியினை கொண்டு வரப் போகும் ரயில் அந்த தீர்வு பகுதி நிலைநிறுத்த முடியாமல் போய்விட்டால் நான் பதவி விலகுவேன் என்று கூறியிருந்தார்.

நான் இப்பொழுது ராஜினாமா கடிதம் எழுதிக் கொண்டே இருக்கின்றேன் பத்து பனிரெண்டு வருடங்களாக எழுதிக் கொண்டு இருக்கின்றார். இன்னும் மூன்று மாதங்களில் ஒரு தேர்தல் வரப் போகிறது. அந்தத் தேர்தல் வரும்வரை எழுதிக் கொண்டே இருக்கிறார் போலும். தேர்தல் நெருங்கும் சமயம் அல்லது பாராளுமன்றம் கலைக்கும் பொழுது இந்த கடிதத்தை அவர் கொடுப்பார். மக்கள் நினைப்பார்கள் எங்களுடைய சுமந்திரன் தீர்வு பொதியினை வைக்காமல் ராஜினாமா செய்துவிட்டார் என்று. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களே நான் ஒன்றை மட்டும் உங்களிடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நாங்கள் மட்டுமல்ல போராளி வடகிழக்கு மலையகத்தில் உள்ள அனைவருமே போராளி. போராட்டத்தில் எல்லோரும் அடிபட்டவர்கள். எல்லாரும் போராட்டத்தை ஆதரித்தவர்கள்.

போராளியை மட்டும் பயங்கரவாதி என்று சொல்லவில்லை இந்த பேரினவாதிகள். ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பயங்கரவாதி என்று சொன்னவர்கள். ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் புலி என்று கூறியவர்கள். ஒட்டுமொத்த தமிழருக்கும் விடுதலை தொடர்பான அபிலாசை இருக்கிறது.

இந்த எண்ணங்கள் கருத்துக்கள் அனைத்தையும் திணித்தவர்கள் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர். இன்று இந்த அந்நிய சக்திகளுக்கு தாரைவார்த்துக் கொடுத்து விட்டு நீங்கள் என்று எங்களுக்கு கதை கூறிக் கொண்டு இருக்கின்றீர்கள்.

கௌரவ பாராளுமன்ற சுமந்திரன் அவர்களே உங்களுடைய கதையினை நிறுத்த வேண்டும். பூச்சாண்டி கதை சொல்லுவதெல்லாம் நிறுத்தப்பட வேண்டும். உங்களுடைய அரசியலுக்காக இந்த அப்பாவி மக்களை பகடைக்காய்களாக்க வேண்டாம். உங்களுடைய அரசியல் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வந்தாச்சு. ஒட்டுமொத்தமான தமிழ் மக்களும் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். நீங்கள் அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு சாலச் சிறந்தது.

நாங்கள் கூறுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் ஒட்டுமொத்தமான தமிழ் மக்களுடைய ஆதங்கமும். அது தமிழ் மக்களுடைய உணர்வு. அது அவர்களுடைய வெளிப்பாடும் கூட. தமிழ் மக்கள் தற்பொழுது ஏமாந்து ஏமாந்து ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள்.

சாதாரண கூலித் தொழில் செய்யும் பணி தொடக்கம் புத்திஜீவி வரைக்கும் இன்றைக்கும் மாற்றம் ஒன்று வருமா என்னுடைய பிள்ளை நல்ல தொழிலினை பெற்றுக் கொள்ளுமா. இப்பொழுது ஒவ்வொரு மாற்றத்தை நோக்கி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நான் கேட்டுக் கொள்வது. மக்களை ஏமாற்றாதீர்கள். எங்கள் அரசியலில் இருந்து ஒதுங்குங்கள் அதுவே எங்கள் கட்சி உங்களுக்குக் கூறும் ஒரே ஒரு வார்த்தை என்றார்.

No comments:

Post a Comment