Tuesday 22 December 2020

இந்திய மீனவர்களையும், இந்திய இழுவை படகுகளையும் சிறைப்பிடியுங்கள்! கடற்றொழில் அமைச்சர் கெளரவ டக்ளஸ் தேவானந்தா!

இந்திய மீனவர்களையும், இந்திய இழுவை படகுகளையும் சிறைப்பிடியுங்கள்!  கடற்றொழில் அமைச்சர் கெளரவ டக்ளஸ் தேவானந்தா!


                                    என் உறவுகளே! கடந்த பொதுத்தேர்தலில், கடற்றொழில் அமைச்சர் கெளரவ டக்ளஸ் அவர்களை பேசாலை கிராமத்துக்கு வருகை தந்து, எமது மக்களின் வாழ்வாதரமான மீன்பிடி சம்பந்தமாகவும், டின்மீன் தொழிற்சாலை மீள்திறப்பு விடயமாகவும், துறைமுகம் தொடர்பாகாவும், நவீன சந்தை தொடர்பாகவும், உங்கள் வாயால், எமது மக்களுக்கு உறுதி மொழி தந்தால், எமது கிராமத்தில் குறைந்தது 1000 வாக்குகளை சேகரிக்க முடியும், அத்தோடு மீன்பிடி கிராமமான வங்காலை, தலைமன்னார், தாழ் வுபாடு, பள்ளிமுனை வாக்காள பெருமக்களையும் கவரமுடியும், என அவ ரிடம் எடுத்து சொன்னேன்.


ஆரம்பத்தில் அவர் தாமதித்தார் இருந்த போதும், எனது அண்ணன் செல்வம் பீரிஸ் அவர்களை அவரிடம் தூதனுப்பி, அவரை பேசாலைக்கு வரவழைத்தேன். திரு, செல்வம் பீரிஸ் வீட்டில் நடத்தபட்ட கூட்டத்தில், மேலே சொல்லப்பட்ட விடயங்களை செய்துதருவாதாக அமைச்சார் வாயாலே சொல்லவைத்தேன். எனது ஊடகமான தேன் தமிழ் ஓசை வழியாக அமைச்சர் அவர்களுக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுத்தோம். எமது ஊர்மக்களின் எதிர்ப்பை மீறி இதனை நான் செய்தேன்.

இந்திய இழுவைப்படகு சம்பந்தமாக அமைச்சர் அவர்கள், காத்திரமான சில செயல்பாடுகளை செய்வார் என நான் பேசாலை மக்களுக்கு தேர்தல் காலத்தில் எடுத்துக்கூறினேன்.  எனது உறவுகள் அதை நம்பவில்லை, வாக்கும் அளிக்கவில்லை. இருந்தபோதும், அமைச்சர் அவர்கள் பேசாலை மக்களுக்கு சொன்னது போல பேசாலையில் துறைமுகம் அமையும், அதற்கான உறுதிமொழியை, பாராளமன்ற வரவு செலவு திட்டத்தில் எடுத்துக்கூறியுள்ளார். அதேபோல இந்திய இழுவை படகு விடயமாக இரண்டு நாடுகளுக்கிடையே உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இது போதாதென்று முல்லைதீவில் நடந்த கூட்டம், ஒன்றில் கூறுகையில், தான் பாராளமன்றத்தில், மன்னார் பாராளமன்ற உறுப்பிணர் சார்ள் நிமலனாத னிடம்  இந்திய இழுவைபடகுக்கு எதிரான போராட்டஙக்ளை நடத்துங்கள், முடிந்தால் இந்திய படகுகளை கைப்பற்றிவாருங்கள் என, உத்தியோகபற்றற்ற ஒரு கோரிக்கையை அவர் விடுத்துள்ளார். எனவே பேசாலை மக்களே, தொப்புள் கொடி உறவு, தமிழ் தேசிய உறவுகள் என்று பாராமல், எமது மண்ணையும், நமது வாழ்வாதார கடல் வளங்களையும்   நாசமாக்கும், கொள்ளையடிப்பதையும் எவர் செய்தாலும், அதை தடுத்து நிறுத்தி, அவர்களை சிறைப்பிடித்து, சட்டத்துக்கு முன் நிறுத்துவோம்.  பேசாலை மீனவர்கள் முன்பு இப்படியான சிறை பிடிப்பை மேற்கொண்டார்கள், தற்போது கடல் தொழில் அமைச்சரே சொல்வதினால், துணிந்து இந்திய மீனவர்களையும், இந்திய இழுவை படகுகளையும் சிறைப்பிடிப்போம், எமது கடல் வளத்தை நாமே பாதுகாப்போம்   அன்புடன் பேசாலைதாஸ் 





No comments:

Post a Comment