கிருஷ்ண கான சபா .பெயரெல்லாம் பெரிதாகத் தான் இருக்கிறது.அப்போதைய சென்னையில் அது கீற்றுக்கொட்டகை தான்.பனகல் பார்க் அருகே ஒரு ஓரத்தில் ஒளிந்துகொண்டிருந்த அந்த நாடக அரங்கம் அன்று பரபரப்பானது.காரணம் ஒரு பிரபலம் நாடகம் பார்க்க ஒப்புதல் தந்திருக்கிறது.நாடகத்தின் பெயர் கவிஞனின் காதலி.ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருப்பது மக்கள் திலகத்தை.அன்று அவர் புரட்சி நடிகர்.நாடகத்தின் ஹீரோ பிற்காலத்தில் அமைச்சராக இருந்த திருச்சி சௌந்தரராஜன்.அவர் தான் மெனக்கெட்டு எம்.ஜி.ஆரை அழைத்திருந்தார்.
Friday, 30 October 2020
வாலி
Wednesday, 28 October 2020
கம்பன் வீட்டு கட்டுத்தறி
Extraordinary Film Actor...!
Tuesday, 27 October 2020
காலங்களில் அவள் வசந்தம்!
காலங்களில் அவள் வசந்தம்! பேசாலைதாஸ்
சுடரொளி அதுதான் அவளின் பெயர், ஆனால் சுடர், சுடர் என்று பள்ளித் தோழிகள் அன்போடு அழைத்ததால் அதுவே அவளது வழமையான பெயராகி விட்டது. பெயர் மட்டுமல்ல சுடொ ரொளி, அவள் அழகே பெரும் சுடொரொளி தான்! கிரேக்கம் மற்றும் ரோமானிய இதிகாச கதைகளில், வசந்தகால தெய்வ மாகவும், பாதாள உலக ராணியாகவும், மறுமலர்ச்சி யின் தேவதையாகவும் வர்ணிக்கப்படும், பிராஸர்பீனா(Proserpine) என்ற பேரழகு மங்கை யை போல, சுடர் அந்த ஊரெல்லாம் பவணி வந்தாள். ஆமாம் சர்பீனா என்று அவளை நான் என் மனதுக்குள்ளே ஓதிக்கொள்வேன். பிராஸர்பீனா என்ற கிரேக்க பெயரைத் தான், நான் சர்பீனா என சுருக்கிக்கொண்டேன்.
கண்கவர் பேரழகியாக என் சர்பீனா, அதுதான் சுடரொளி, அவள் பேரழகி யாக இருந்தாளும், அவளுக்கு, தான் பேரழகி என்ற கர்வம், கொஞ்சம் கூட கிடையாது, பணக்கார வீட்டுபிள்ளைகள், சாம்மாட்டியார் பிள்ளைகள், வாத்தியார் வீட்டு பெண்பிள்ளைகள், அழகற்றவர்களாக இருந்தாலும், ஆடை அலங்காரத்தால் தம்மைத்தாமே அலங்கரித்து, காகம் அன்னநடை நடக்கப்போய், தன்நடையும் கெடுத்துக்கொணடது போல , ஏதோ ஒரு பக்கமாக, தங்கள் பின்புறத்தை அசைத்தாட்டிக்கொண்டு, செருக் கோடு செல்லும் சிருங்காரங்களுக்கு மத்தியில், சுடர் சுடர் தான்! அவள் சுண்டு விரல் அழகுக்கே எந்த அழகியும் சமம் இல்லை.
எனக்கும் அவள் மீது கொள்ளை ஆசை, ஆனாலும் என் ஆவலை, என் உள்ளக்கிடைக்களை, எனக்குள்ளே அடக்கி வாசித்தேன், ஒரு பக்கத்தாளம் போல, சுடர் தன் தோழிகளுடன், மாந்தோப்பு, நல்லதண்ணி கிணறு இப்படியே அந்த கிராமம் முழுவது சுற்றித்திரிந்தாள், ஒரு அழகு வண்ணத்தேர்போல, அந்த சுடரொளி தேவதை யாருக்கு மயங்கப்போகி ன்றாளோ? என்று கிராமத்து இளவட்டங்கள் ஏங்கி நின்றபோது தான், அந்த சம்பவம் நடந்தது, பிராஸர்பீனா என்ற கிரேக்கத்து அழகு தேவதைக்கு நடந்தது போல அவளுக்கும் அது நடந்தது.
அதற்கு முன், பிராஸர்பீனா கதையில் வரும் அந்த சம்பவம் இதுதான். கிரேக்கத்தின் காதல் தேவதை வீனஸ் ( Venus புதன்) அவள், பிராஸர்பீனா என்ற அழகுதேவதையின் அழகு மிது, பொறாமையும், எரிச்சலும் கொண்டாள், அவளை பழிவாங்க, பாதாள உலகத்தின் கடவுளான புளுட்டோ மீது, காதல் இறைவியான புதன்(Venus) தன் மகன் குபிட்( Cubid அவர்தான், நம்ம மன்மதன்) அனுப்பி காதல் அம்பினை புளுட்டோ மீது எய்யச்சொல்கின்றாள். பிராஸர்பினா, சிசிலி என்ற இடத்தில் தன் தோழிகளோடு ஆனந்தமாக பூப் பறித்துக் கொண்டிருந்தாள். அதுசமயம் எட்னா எரிமலையிலிருந்து தனது நான்கு கருப்பு நிற குதிரைகளோடு வெளியே வந்தார் புளூட்டோ.மோக கணையால் எய்யப்பட்ட அவர், அழகான பாவை போன்ற பிரஸர்பீனாவை கண்டதும் விரைந்து அவளை அபகரித்து தன்னை திருமணம் செய்துக் கொண்டு பாதாள உலகில் வாழுமாறு வற்புறுத்தினர். பாவை பிராஸர்பினா எவ்வளவு மறுத்தும் அவளை கட்டாய படுத்தி பாதாள உலகிற்கு தூக்கி சென்றார் பூளுட்டோ. கிரேக்க கதையில் வரும் சம்பவம் போல, சுடரையும், ரெலோ என்ற ஆயுத கும்பலின், ஒரு தளபதி கடத்தி சென்றுவிட்டான்.
சுடரொளி கடத்தப்பட்டது யாரால், எங்கே இருக்கின்றாள், என்று யாருக்கும் விபரம் தெரியாது, சுடர் இல்லாத அந்த கிராமமே மயனமா கியது, அங்குள்ள இளம் பெண்களுக்கெல்லாம், ஏதோ ஒரு அச்சம் மனங்களில் கவ்விக்கொண்டது, சுடரின் தாய், தன் மகளை தேடி, காடு வனாந்தரம் எல்லாம் தேடி அலைந்தாள், காணாமல் போன தன் பிள்ளைகளை எண்ணி, இன்றுவரை ஏங்கித்தவிக்கும் அம்மாக்கள் போல அவளும் இருந்தாள் அன்று, அவளின் துயரைகண்டு இயற்கையே விரக்தியுற்றது.
பிரஸ்பீனாவுக்கு நடந்தவற்றை அறியாத, அவள் தாய் சீரிஸ், பூமியின் ஒவ்வொரு மூலையிலும் சென்று தேடுகிறாள். பாதாள உலகத்தில் தன் மகள் கதறும் ஒலியை அவளால் கேட்க முடிய வில்லை. அங்கு பிராஸர்பினா அவள் அனுமதியை மீறி கற்பழிக்கப்பட் டாள். எங்கு தேடியும் மகளைக் காணவில்லை, விரக்தியடைந்த பூமாதேவி கோபமடைந்து சாபமிட்டதால் சிசிலியில் காய்கறிகளும் பழங்களும் வளர்ச்சியடைவதை நிறுத்திவிட்டன. அவள் மீண்டும் ஒலிம்பஸ் மலைக்கு(Mount Olympus) செல்ல மறுத்து புவியெங்கும் நடக்க துவங்கினாள், அவள் பாதம் பட்ட இடமெல்லாம் பாலைவனமாக மாறி கொண்டே வந்தன.
கிரேக்க கதையில் வருவதைப்போலவே, சுடரின் வாழ்விலும் நடந்தது. ரெலோ இயக்கத்தால் கடத்தப்பட்ட சுடர், அவளின் விருப்பத்துக்கு மாறாக, கடத்தி சென்ற இயக்க தளபதிக்கு, மணைவியாகி ஒரு குழந்தைக்கு தாயுமாகிவிட்டாள். இயக்கத்தின் முகாமில் அடைபட்டு கிடந்த சுடர் பலவித போராட்டங்கள் சிலரின் கோரிக்கையால், தன் தாயரை சந்திக்க அனுமதிக்கப்பட்டாள்.
பிரஸபீனாவின் தாயான பூமிக்கடவுள் சீரிஸ்(Ceres) தன் மகளின் பிரிவினால் சோகம் அடைவதினால் மரங்கள் பசுமை இழந்து, இலைகள் சொரிந்து கடுங்குளிரினால் உலகம் வாடத்தொடங்கியது, நடப்பதை கண்டு வருத்தமடைந்த வியாழன்(Jupiter) இதற்கெல்லாம் காரணமான தன் தம்பி புளூட்டோவின் அடாத்தான செயல்களை நிறுத்த சொல்லி போராடினான்..வியாழபகவான் தன் தாய் மெர்குரி(Mercury) எனப்படும் வெள்ளியை அழைத்து புளூட்டோவை நிறுத்துமாறு சொன்னார். நிலைமையை புரிந்து கொண்ட புளுட்டோ அவளை விடுவிக்க ஏற்பாடு செய்தான்.
நிலைமையை புரிந்து கொண்ட புளுட்டோ அவளை விடுவிக்கும்
முன் ஒரு திட்டம் செய்தான். பிராஸர்பினாவை நெருங்கி ஆறு மாதுளை பழங்களை அளித்தான், அவளும் சாப்பிட்டாள். பாதாள உலகம் மரணித்தவர்களின் உலகம்.அதை சேர்ந்தவற்றை உட்கொண்டால் புவியின் பரப்பில் வாழ முடியாது.இதனால் அவள் ஆறு மாதம் பாதாள உலகில் வாழ வேண்டியது அவசியம் ஏற்பட்டது.
கிரேக்க கதயில் வருவதைப்போலவே, இயக்க சக போராளிகளின் ஹர்த்தால், மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தாய்மார்களின் போராட்டம், சமூக ஆர்வலர்களின் கண்டன கூக்குரல்கள், சமூக ஊடகங்களின் அழுத்தம் காரனமாக, பலவந்தமாக தன் மனைவியாக்கப்பட்ட சுடரை ஆறு மாதம் அவள் தன் தாயோடும், ஆறு மாதம் தன்னோடு வாழவேண்டும் என்ற ஒப்பந்த்த அடிப்படையில் சுடர் விடுவிக்கப்பட்டாள். சுடர் தன் தாயோடு வாழும் அந்த காலம் அவளுக்கு வசந்த காலமாக மாறியது. மக்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
பாதாள உலகிலிருந்து வெளியே வந்த பிராஸர்பினாவை பூமித்தாய் சீரிஸ் கண்டதும் அந்த தேசம் எங்கும் பூத்துக் குலுங்க ஆரம்பித்தது, மரங்களில் பச்சை இலைகள் செழிக்க துவங்கின,வயல்களில் தானியங்கள் வளம் பெற்றது. வசந்த கால காற்று அந்த நிலமெங்கும் வீசியது.இந்த நிகழ்விலிருந்து பிராஸர்பினா நிலத்தில் வாழும் ஆறு மாதங்களின் தொடக்கத்தில் வசந்த காலமும் தொடங்கும், இதனை புராண ரோமனியர்கள் விழாவாக கொண்டாடினர்.
யாவும் உண்மை கலந்த கற்பனையே!
பேசாலைதாஸ்
ஆணும் பெண்ணும் சமம் அல்ல...
ஆணும் பெண்ணும் சமம் அல்ல...
Monday, 26 October 2020
சர்வதேசம் கைவிட்ட மேற்கு சஹாரா மக்களின் சுயநிர்ணய உரிமை
சர்வதேசம் கைவிட்ட மேற்கு சஹாரா மக்களின் சுயநிர்ணய உரிமை
மொரோக்கொவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியின் எல்லையில், நீண்ட மதில் சுவர் கட்டப்பட்டது. பெர்லின் மதில் பற்றி உலகம் அறிந்த அளவுக்கு, "மேற்கு சஹாரா மதில்" பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவு. (Moroccan Wall) பொலிசாரியொவின் தனிநாடு விடுதலைப் போராட்டத்தை தனிமைப் படுத்துவதற்கு மதில் உதவியது போல, ஐ.நா. தலையீடும் உதவியது. "நாங்கள் சர்வதேச சமூகத்திடம், ஐ.நா. விடம் முறையிட்டால், அவர்கள் வந்து காப்பாற்றி தமிழினத்திற்கு விடுதலை வாங்கித் தருவார்கள்..." என்று அரைவேக்காட்டுத்தனமாக அரசியல் பேசும் பலரை பார்த்திருப்போம். ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகத்தால் காட்டிக் கொடுக்கப்பட்ட, மேற்கு சஹாரா பிரச்சினையில் இருந்து, நாம் படிப்பதற்கு நிறைய உள்ளன.
2010 ம் ஆண்டு நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பற்றிய தகவல்களுக்கு, நான் முன்னர் எழுதிய பதிவைப் பார்க்கவும்: "மேற்கு சஹாரா" மக்களின் போராட்டம் நசுக்கப் படுகின்றது
இயேசுவின் தாகம் கம்யூனிச தாயகம்
இயேசுவின் தாகம் கம்யூனிச தாயகம்
லெனின் அல்லது ஸ்டாலின் காலத்தில், கூட்டுத்துவ (collective) சமூக அமைப்பின் கட்டுமானம் பற்றி அறிந்திருப்பீர்கள். தனித் தனியாக விவசாயம் செய்து வந்த மக்கள், தம்மிடமிருந்த மாடுகளையும், விவசாய உபகரணங்களையும் கூட்டுத்துவ பண்ணைகளிடம் ஒப்படைக்க நிர்ப்பந்திக்கப் பட்டார்கள் என்றும் படித்திருப்பீர்கள். உலகின் முதலாவது கிறிஸ்தவர்களும், அத்தகைய பொருளாதார அமைப்பை உருவாக்கினார்கள். ஒரு கிறிஸ்தவர் தன்னிடம் உள்ள சொத்துக்களை, கம்யூன் அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். அவை பின்னர், கம்யூன் உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவான சொத்துக்களாக மாற்றப்படும். வயல்களும், விவசாய உபகரணங்களும் கிறிஸ்தவ கம்யூனுக்கு பொதுவானவை. கம்யூன் உறுப்பினர்கள் வயலில் கூடி வேலை செய்து, விளைச்சலை சமமாக பகிர்ந்து கொண்டார்கள். ஆதி கிறிஸ்தவர்களின் கம்யூனிச சமுதாயம் பற்றி விபரமான தகவல்கள் கிடைக்கவில்லை. அவர்களுக்கு போட்டியாக உருவான, அப்போஸ்தலர் புனித பவுலை பின்பற்றிய கிறிஸ்தவர்கள், எபியோனி கிறிஸ்தவர்களை வேட்டையாடி கொன்றதுடன், அவர்களது நூல்களையும் ஒன்று விடாமல் எரித்து விட்டனர்.
அனேகமாக, எபியோனி கிறிஸ்தவர்களின் நம்பிக்கை பெருமளவில் பரவாமைக்கு, அவர்களின் யூத கலாச்சாரம் ஒரு காரணமாக இருக்கலாம். யூத மதமானது, இந்து மதம் போன்று பிறப்பினால் மட்டுமே தீர்மானிக்கப் படுகின்றது. ஆனால், கிறிஸ்தவம் அப்படி அல்ல. எந்த மதத்தை சேர்ந்தவரும், எந்த இனத்தை சேர்ந்தவரும், எந்த மொழியை பேசுபவரும் கிறிஸ்தவராக மதம் மாற முடியும். எபியோனி கிறிஸ்தவர்கள் அந்தக் கொள்கை கொண்டவர்கள் தான். ஆனால், அவர்களால் அப்போஸ்தலர் பவுலின் குழுவினருடன் போட்டி போட முடியவில்லை.
புனித பவுல் தானாகவே பல சுவிஷேங்களை எழுதினார். அவற்றில் எபியோனிகளை சிறுமைப் படுத்தும் கருத்துக்களும், கூடவே சில பிற்போக்கான கருத்துக்களும் எழுதப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, பவுல் கொரிந்தியருக்கு எழுதிய கடிதத்தில், உயர்வு, தாழ்வான சமுதாய அமைப்பையும், பெண் அடக்குமுறையையும் ஏற்றுக் கொள்வது தெளிவாகும். "ஆண்டவர் கிறிஸ்துவின் தலைவராகவும், கிறிஸ்து ஆண்களின் தலைவராகவும், கணவன் மனைவின் தலைவனாகவும் இருக்கின்றான்..." என்று அந்தக் கடிதத்தில் எழுதப் பட்டிருந்தது. இஸ்ரேலில் வாழ்ந்த எபியோனி கிறிஸ்தவர்கள், இயேசுவின் பெயரால் வர்க்க பாகுபாடுகள் அற்ற, சமதர்ம சமுதாயத்தை உருவாக்கினார்கள். கிரேக்க நாட்டில் வாழ்ந்த, பவுலின் செயற்பாடு அதற்கு முற்றிலும் முரணாக அமைந்திருந்தது. கிரேக்க சமுதாயத்தில் நிலவிய வர்க்க ஏற்றத் தாழ்வை ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல, அடிமைகளின் விடுதலைக்காகவும் எதுவும் செய்யவில்லை.
நமது நாடுகளில், உயர் சாதியினர், தாழ்த்தப்பட்ட சாதியினருடன் சமமாக அமர்ந்து உணவருந்த மறுப்பதைப் போல, பணக்கார கிறிஸ்தவர்கள் தனியாக உணவருந்த சென்றார்கள். அப்போஸ்தலர் பவுலும், அவரது குழுவினரும், வழக்கத்தில் இருந்த சமூகக் கட்டமைப்பை மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக கருதவில்லை. அதற்கு அவர்கள் கூறிய காரணம்: "உலகம் விரைவில் அழிந்து விடும்...கிறிஸ்துவின் வருகையினால் புதிய உலகம் தோன்றும்." நமது காலத்திலும், பல கிறிஸ்தவ மத அடிப்படைவாத சபைகள், "உலகம் அழியப் போகின்றது" என்று பயமுறுத்திக் கொண்டு திரிவது எமக்குத் தெரியும். அடிப்படையில் இது ஒரு சமூகப் புரட்சிக்கு எதிரான பிரச்சார நடவடிக்கையாகவே அமைந்துள்ளது. அதனால் தான், இன்றைய முதலாளித்துவ ஊடகங்களும் உலகம் அழியப் போகின்றது என்ற கட்டுக்கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பரப்பி வருகின்றன.
கம்யூனிச சித்தாந்தம் பற்றிய அறிவு, திடீரென வானத்தில் இருந்து விழவில்லை. பண்டைய கால சமுதாய அமைப்புகளை ஆராய்ந்து தான் அத்தகைய முடிவுக்கு வந்தனர். அந்த அறிஞர்கள் திரட்டிய தகவல்களில், ஆதி கால கிறிஸ்தவர்களான எபியோனிகள் பற்றிய ஆய்வும் அடங்குகின்றது. இந்த தகவல்கள் எமக்கு புதுசாக இருப்பதற்கு காரணம், அப்போஸ்தலர் பவுல் தோற்றுவித்த வர்க்க அடிப்படையிலான கிறிஸ்தவ சமுதாயம். வெற்றி பெற்றவர்கள் வரலாற்றை மாற்றி எழுதினார்கள். ரோம சாம்ராஜ்யத்தால் அடக்கியொடுக்கப் பட்ட, இஸ்ரேல் என்ற மாகாணத்தை சேர்ந்த யூத சிறுபான்மை இனத்துடனான பகை, புதிய மதத்தில் எதிரொலித்தது. கிரேக்க கிறிஸ்தவர்கள், யூதர்களுடனான தொடர்பை முற்றாக அறுத்தெறிய விரும்பினார்கள். அவர்கள் தமது இரட்சகரை யேஷுவா (இயேசு) என்ற யூதப் பெயரில் அழைப்பதை தவிர்ப்பதற்காக, "கிறிஸ்து" என்ற புதிய பெயரை அடிக்கடி உச்சரித்தார்கள். கிறிஸ்து என்பது, மேசியா என்ற யூதச் சொல்லின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். மேலும் அந்தச் சொல் ch (க்) என்ற லத்தீன் உச்சரிப்பில் எழுதப் பட்டது. ரோம சாம்ராஜ்யம், தன்னால் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட ஒருவரின் மதத்தை தனது ஏகாதிபத்திய நலன்களுக்கு சார்பாக மாற்றிக் கொண்டது. "வரலாறு நெடுகிலும் இருந்த அனைத்து சமுதாயங்களிலும், வர்க்கப் போராட்டம் நடந்துள்ளது," என்ற கார்ல் மார்க்சின் கூற்றை, கிறிஸ்தவ மதத்தின் வரலாறும் மெய்ப்பிக்கின்றது.
வத்திக்கான்: பாசிஸ்டுகளின் முதலீட்டு வங்கி
வத்திக்கான்: பாசிஸ்டுகளின் முதலீட்டு வங்கி
20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இத்தாலியில் ஆட்சியை பிடித்த முசோலினி தலைமையிலான பாசிஸ்டுகள், வத்திக்கானின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளை இத்தாலியுடன் சேர்த்துக் கொண்டார்கள். அதற்கு பதிலாக, இன்றுள்ள வத்திக்கான் நகரின் சுதந்திரம் அங்கீகரிக்கப் பட்டது. அதாவது இரண்டு அரசியல் சக்திகளும், ஒருவரின் சுதந்திரத்தை மற்றவர் அங்கீகரித்தார்கள். வத்திக்கானுக்கும் பாசிஸ்டுகளுக்கும் இடையிலான உறவுகள் அவ்வாறு தான் ஆரம்பமாகின. இந்த நெருக்கத்திற்கு இன்னொரு காரணமும் உண்டு. வத்திக்கானுக்கும், பாசிஸ்டுகளுக்கும் கம்யூனிஸ்டுகளை கண்டால் பிடிக்காது. அன்று இத்தாலி இருந்த நிலையில், கம்யூனிஸ்டுகளின் வளர்ச்சி வேகமாக அதிகரித்துக் கொண்டிருந்தது. அதனை தடுப்பது அவசியம் என்று நினைத்தார்கள். கம்யூனிசத்தை வர விடாமல் தடுப்பதற்காக, வத்திக்கான் உலகம் முழுவதும் தோன்றிய பாசிச சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டமை ஒன்றும் புதினமல்ல. சோஷலிச கிழக்கு ஐரோப்பாவின் ஒரேயொரு கத்தோலிக்க நாடான போலந்தில் சதி செய்து குழம்ப நிலையை ஏற்படுத்தி, அதன் மூலம் "கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்கு" வழிவகுத்ததும் உலகம் அறிந்த விடயங்கள்.
கிரேக்க புராணக் கதைகள்
கற்பின் பெருமை கூறும் கிரேக்க புராணக் கதைகள்
நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்!
நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 18
(பதினெட்டாம் பாகம்)
"பெலோப்பெனோஸ் நாட்டிற்கு எகிப்தியர்கள் எவ்வாறு வந்தார்கள்? இந்த கிரேக்கப் பகுதியில் எவ்வாறு அரசர்களானார்கள்?" - ஹெரோடொதுஸ் (வரலாறு, VI.55)
ஐரோப்பியர்கள், தமது நாகரீகம் பிறந்த இடம் என்று பெருமைப் படும், கிரேக்கத்தில் வாழ்ந்த ஹெரோடொதுஸ் என்பவர் தான், முதன் முறையாக கிரேக்கர்களின் வரலாற்றை விரிவாக எழுதி வைத்தார். இன்றைக்கு ஐரோப்பிய நாகரீகம் பற்றி ஆராயும் சரித்திர ஆசிரியர்கள், ஹெரோடொதுஸ் எழுதிய குறிப்புகளை அடிக்கடி மேற்கோள் காட்டுவதுண்டு. அவர் எழுதியவை எல்லாம் உண்மைகள் அல்ல. பல நாடுகளை, மக்களை பற்றிய தவறான தகவல்களும் அவரது எழுத்துக்களில் காணப்படுகின்றன. அனேகமாக, பிற இனங்களின் நாகரிக முன்னேற்றத்தை கண்டு பொறாமை கொண்ட ஒருவரின் கருத்துக்களாகவே அவை தெரிகின்றன. ஆயினும், பண்டைய கால ஐரோப்பா பற்றி மட்டுமல்ல, மத்திய கிழக்கு, எகிப்து போன்ற நாடுகளை பற்றி அவரது குறிப்புகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. அந்த வகையில், கிரேக்கத்தின் பெலோப்போனோஸ் பகுதியில், எகிப்தியர்கள் (கறுப்பினத்தவர்) வாழ்ந்து வந்ததை ஹெரோடொதுஸ் எழுதிய சரித்திரத்தில் இருந்து தெரிகின்றது. நான் ஒரு சுற்றுலா பயணியாக கிரீஸ் நாட்டிற்கு சென்றிருந்த பொழுது, ஏதென்ஸ் நகர அருங்காட்சியகத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கே, சுருளான தலைமுடியுடன் ஆப்பிரிக்க கறுப்பின தோற்றத்தை கொண்ட ஒரு பெண்ணின் சிலை ஒன்று இருந்தது. அதைத் தவிர, அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களில், கறுப்பின மக்கள் போன்று தோற்றம் கொண்டவர்களின் ஓவியங்கள் காணப்பட்டன. ஆகவே, ஒரு காலத்தில் இன்றைய கிரேக்கப் பகுதிகளில் கறுப்பின மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும்.
இன்றைய எகிப்துக்கும், கிரீஸுக்கும் நடுவில் கிரேட்டா (Creta) தீவு அமைந்துள்ளது. அந்த தீவை ஆண்ட மீனோ அரச வம்சத்தினர், அந்தப் பிராந்தியத்தில் வல்லமை மிக்க கடற்படையை கொண்டிருந்தனர். கிரேக்க நாடு அவர்களுக்கு அடங்கி திறை செலுத்திக் கொண்டிருந்தது. இறுதியில் இயற்கைப் பேரழிவு, கிரேக்கப் படையெடுப்புகள் காரணமாக, கிரேட்டாவின் மீனோ நாகரீகம் அழிந்து விட்டது. அதன் பிறகு தான் கிரேக்க நாகரீகம் ஆரம்பமாகியது. இதிலே கவனிக்கப் பட வேண்டிய விடயம், கிரேட்டா நாட்டவர்கள் கிரேக்க இனத்தவர் அல்ல. அவர்கள் தனியான மொழியை பேசினார்கள். எகிப்துடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்தனர். ஆகவே அவர்கள் பண்டைய எகிப்தில் இருந்து குடியேறிய இனமாக இருக்கலாம். கிரேட்டா அரச வம்சமான மீனோ என்ற பெயர், தமிழ்ச் சொல்லான மீனில் இருந்து வந்திருக்கலாம் என, பேராசிரியர் முனைவர் க.ப. அறவாணன் ஒரு நூலில் எழுதியிருக்கிறார். அதனை நிரூபிப்பது போல, அண்மையில் ஆராயப்பட்ட கல்வெட்டு ஒன்றில், "மீனு ரொஜா" (மீன் ராஜா) என்று மன்னரின் பெயர் குறிப்பிடப் பட்டிருந்தமை கண்டுபிடிக்கப் பட்டது.
ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும், வட இந்தியாவிலும், சீனாவிலும், வெள்ளையினத்தவர்கள் பெருமளவில் குடியேற ஆரம்பித்த காலம் அதிகமில்லை. எப்படியும், மூவாயிரம் அல்லது ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் தான் அந்த குடியேற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். அனேகமாக, இன்று நடைபெறும் குடிசனப் பரம்பல் போன்று, தனி நபர்களாக, சிறு குழுக்களாக வந்து குடியேறினார்கள். கறுப்பினத்தவரின் நாடுகளில், மன்னர்களுக்கு விசுவாசமான கூலிப் படைகளாக இருந்துள்ளனர். அவ்வாறு இராணுவத்தில் சேவையாற்றிய வெள்ளையின ஆண்கள், உள்ளூர் பெண்களை மணம் முடித்து அங்கேயே தங்கி விட்டனர். உள்ளூர் மக்களின் மொழிகளை பேசக் கற்றுக் கொண்டனர். அந்தக் காலங்களில், இன்றிருப்பதைப் போன்ற இன/மத துவேஷங்கள் இருக்கவில்லை. அந்நியர்களாக இருந்தாலும், குடியேறிய நாட்டின் மொழியை பேசி, அந்நாட்டு மக்களைப் போன்றே வாழ்வதற்கு தடையேதும் இருக்கவில்லை. அதனால் தான், இன்றைக்கு வெள்ளை நிறம் கொண்ட மக்கள், பல்வேறு மொழிகளை பேசுகின்றனர். அரபு மொழி பேசும் நாடுகளில் குடியேறியவர்கள் அரபி பேசினார்கள். சமஸ்கிருதம் பேசும் இந்திய நாடுகளில் குடியேறியவர்கள், சமஸ்கிருதம் (இன்று உருது அல்லது ஹிந்தி) பேசினார்கள்.
வெள்ளையின மக்கள், கறுப்பின அரசர்களின் கூலிப் படைகளாக இருந்ததால், இராணுவ அறிவு கைவரப் பெற்றவர்களாக இருந்தனர். கறுப்பினத்தவரின் சாம்ராஜ்யங்கள் வீழ்ந்து கொண்டிருந்த காலங்களில், புதிதாக தோன்றிய ராஜ்யங்களில் வெள்ளையின அல்லது கலப்பின மக்களின் ஆதிக்கம் அதிகரித்தது. அவர்கள் மத்தியில் இருந்து புதிய அரச வம்சங்கள் தோன்றவாரம்பித்தன. உண்மையில், அவர்களின் தோல் நிறம் மட்டுமே வெள்ளையாக இருந்தது. ஆனால், அவர்களின் மொழியும், கலாச்சாரமும் மாறுபட்டிருந்தது.
உதாரணத்திற்கு, லைபீரியா என்ற நாட்டில் பெருமளவு அமெரிக்க கருப்பர்கள் குடியேறியுள்ளனர். ஆனால், அவர்களுக்கும், சுற்றவர உள்ள பிற ஆப்பிரிக்க இனங்களுக்கும் இடையில் தோல் நிறத்தில் மட்டுமே ஒற்றுமையுண்டு. மற்றும்படி, அவர்களது மொழி, கலாச்சாரம், நடையுடை பாவனை யாவும் அமெரிக்கர்களை போன்றிருக்கும். அவ்வாறு தான், பண்டைய கிரேக்கத்தை சேர்ந்த வெள்ளையர்கள், எகிப்தியரிடம் இருந்து நாகரீகத்தை கற்றுக் கொண்டனர். அவ்வாறு நாகரீகமடைந்த வெள்ளையர்கள், தமது அயலில் வாழ்ந்த பிற வெள்ளை இனங்களை "காட்டுமிராண்டிகள்" என்று அழைத்தார்கள். வட ஈராக்கில் தோன்றிய மித்தானி என்ற நாட்டை பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அங்கு அரச கரும மொழியாக சமஸ்கிருதம் போன்ற ஒரு மொழி அல்லது, புராதன இந்திய மொழி கோலோச்சியது. நமக்கு நன்கு அறிமுகமான இந்து மத தெய்வங்கள், புராணக் கதைகள் என்பன, இன்றைய ஈராக், துருக்கி ஆகிய நாடுகளில் தோன்றியிருக்க வேண்டும். அதற்கான சாத்தியப்பாடுகளை நாம் விரிவாக ஆராய்வோம்.
விநாயகர் என்ற இந்து தெய்வத்திற்கு, கணபதி, கணேஷ் என்ற பெயர்கள் உண்டு. கணபதி என்றால், இராணுவ தளபதி என்ற பொருள் படும். மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு, வெள்ளையின மக்கள், இராணுவ மயமாக்கப்பட்ட சமுதாயமாகவே வாழ்ந்து வந்தனர். ஸ்பார்ட்டா (தென் கிரேக்கம்), ஹதூசா (மத்திய துருக்கி) போன்ற இடங்களில் தோன்றிய ஆதி கால வெள்ளையின நாகரீகங்கள், முழுக்க முழுக்க இராணுவ அடிப்படையைக் கொண்டிருந்தது. ஆண்கள் சிறு வயதிலேயே இராணுவத்தில் சேர்ந்து விட வேண்டும். அவர்களது வாழ்நாளில் பெரும் பகுதியை இராணுவ முகாம்களில் கழிக்க வேண்டும். அந்த நகர-தேசங்களின் வளங்கள் முழுவதும் இராணுவத்தை பராமரிப்பதிலேயே செலவிடப் பட்டன. அவ்வாறான இராணுவவாத கொள்கை கொண்ட சமுதாயத்தில், "கணபதி" என்ற தெய்வத்தை வழிபட்டிருக்க கூடிய சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு.
"கணேஷ்" என்ற பெயரில் ஒரு பண்டைய நகரம் இருந்தது. ( Kanesh, http://en.wikipedia.org/wiki/Kültepe) இன்றைய துருக்கி நாட்டில், Kayseri எனும் நகரத்தில் இருந்து சிறிது தூரத்தில் அது உள்ளது. கணேஷ் நகரம் பாபிலோனியருடன் வர்த்தக தொடர்பு கொண்டிருந்ததால், அதன் முக்கியத்துவம் வெளிநாடுகளிலும் உணரப் பட்டது. கணேஷ் நகரில் வாழ்ந்த மக்கள் வழிபட்ட தெய்வங்களுக்கு வாகனமாக விலங்கினங்கள் இருந்துள்ளன. எலி, மாடு, மயில் போன்ற விலங்கினங்களை வாகனங்களாக கொண்ட இந்து மத கடவுளரை இது நினைவுபடுத்துகின்றது. கணேஷ் நகரில் வாழ்ந்த மக்கள், ஹித்தித் அல்லது ஹத்தி இனத்தவர் எனத் தெரிகின்றது. ஏதோ காரணத்தால் கணேஷ் நகரம் கைவிடப் பட்டு, ஹதூசா என்ற புதிய நகரம் உதயமாகியது. அவர்கள் அங்கிருந்த படியே ஒரு சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டார்கள்.
இன்றைய துருக்கி பகுதிகளில் வாழ்ந்த வெள்ளயின ஹித்தித் மக்களுக்கும், இன்றைய ஈராக்கில் வாழ்ந்த அசிரியர்களுக்கும் இடையில் அடிக்கடி போர் மூண்டன. அவை எல்லாம் அரசியல் ஆதிக்கத்திற்கான போர்களே அன்றி, இன மேலாண்மைப் போர்களல்ல. அவர்களுக்கு சவாலாக விளங்கிய அசிரிய பேரரசன் ஒருவனின் பெயர் "நரம் சின்". இந்தப் பெயர், விஷ்ணு புராணத்தில் வரும் நரசிம்மன் என்ற மன்னனை நினைவு படுத்துகின்றது அல்லவா? அசிரியர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்களால் தோற்கடிக்கப் பட்ட நாடுகளில் பல அழிவுகளை உண்டாக்கினார்கள். அதனால், அவர்களால் பாதிக்கப்பட்ட பிற இனங்கள் அசிரியர்களை கொடியவர்களாக கருதியிருக்க வாய்ப்புண்டு. அனேகமாக, இந்து மத புராணங்களில் வில்லன்களாக சித்தரிக்கப்படும் "அசுரர்கள்" என்ற சொல் அங்கிருந்து தோன்றி இருக்கலாம். ஏனெனில், அசிரியர்களின் தலைநகரத்தின் பெயர் "அசுரா"!
அசிரியர்களின் சாம்ராஜ்யத்தில் பல்லின மக்கள் வாழ்ந்தனர். அந்தக் காலத்திலேயே பிரஜைகள் மதித்து நடக்க வேண்டிய சட்டங்கள் உருவாக்கப் பட்டிருந்தன என்பது ஒரு சிறப்பம்சம். இருந்தாலும் சில சட்டங்கள் பிற்போக்கானவையாக இருந்தன. உதாரணத்திற்கு, பெண்கள் வெளியே போகும் பொழுது, உடலையும், முகத்தையும் மூடும் பர்தா (அல்லது பூர்க்கா) என்ற ஆடை அணிந்திருக்க வேண்டும். குறிப்பாக குடும்பப் பெண்களுக்கு அது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. விலை மாதுக்கள் மட்டுமே முகத்தை மூடாமல் ஆடை அணிந்திருக்க வேண்டும். (The Code of the Assyrians, http://www.fordham.edu/halsall/ancient/1075assyriancode.asp) இந்த வழக்கம் பிற்காலத்தில், பல இஸ்லாமிய நாடுகளில் பின்பற்றப் பட்டு வந்தமை அனைவரும் அறிந்ததே. ஆனால், 19 ம் நூற்றாண்டு வரையில் கூட, வட இந்தியாவை சேர்ந்த இந்துப் பெண்களும், கிரேக்கத்தை சேர்ந்த கிறிஸ்தவ பெண்களும், முகத்தை மூடி பர்தா அணிந்து தான் வெளியே சென்றனர்.
கற்பு என்ற ஒழுக்க நெறி கூட, மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்த கலாச்சாரம் தான். பெரியாரும், திராவிட இயக்க அறிஞர்களும் இதனை வலியுறுத்தி வந்தனர். நான் முன்பு ஒரு தடவை எழுதியது போல (பார்க்க: கோயிலில் பாலியல் தொழில்) தமிழர்களும் ஒரு காலத்தில் தாய்வழிச் சமுதாயமாக இருந்தனர். மத்திய கிழக்கில் மாறிக் கொண்டு வந்த ஆணாதிக்க சமுதாய அமைப்பு, தமிழர் மத்தியிலும் பரவியது. திராவிட கொள்கையாளர்கள், அதனை ஆரியர்கள் புகுத்தினார்கள் என்று நம்புகின்றனர். ஆனால் யார் அந்த ஆரியர்கள்? தமது கலாச்சாரம், மொழி என்பனவற்றை அவர்களால் எவ்வாறு எம்மீது திணிக்க முடிந்தது ?
உண்மையில், நாங்கள் தான் அந்த ஆரியர்கள்! அங்கிலேயரின் காலனிய ஆட்சிக் காலத்தில், நாங்கள் ஆங்கில மொழி பேசவும், ஆங்கிலேயரை போன்ற நடை, உடை, பாவனைகளை கற்றுக் கொள்ளவில்லையா? அதே போன்று, நாங்களாகவே ஆரியரின் மதத்தை, கலாச்சாரத்தை பின்பற்ற தொடங்கினோம்! அந்தக் கருதுகோளை நிரூபிக்கும் ஆதாரங்கள் சரித்திரத்தில் நிறைய உள்ளன. தமிழகத்தை ஆண்ட பல்லவர்கள், ஈரானில் இருந்து வந்த வெள்ளை இனத்தவர்கள். அவர்கள் தமது ஈரானிய (ஆரிய) கலாச்சாரத்தை கொண்டு வந்து புகுத்தி இருப்பார்கள். ராஜராஜ சோழன் காலத்தில் சைவ மதத்துடன், ஆரிய மயமாக்கலும் விரைவாக பரவியது.
பண்டைய காலத்து வரலாற்றை தேட வேண்டுமானால், அலெக்சாண்டரின் படையெடுப்புகளில் இருந்து ஆரம்பிக்கலாம். உலகம் முழுவதும் வென்ற அலெக்சாண்டர் இந்தியாவில் தோற்று திரும்பினான். இந்த வரலாறு ஒரு பாதி மட்டுமே உண்மை. இன்னொரு பாதிக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வட-மேற்கு இந்தியாவில் சில பகுதிகளை அலெக்சாண்டரின் படைகள் கைப்பற்றின. இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய பகுதிகளில், உள்ளூர் பெண்களை மணம் முடித்துக் கொண்டு, அலெக்சாண்டரின் கிரேக்க படையினர் தங்கி விட்டார்கள். பிற்காலத்தில் அங்கே பல வெள்ளையின ராஜ்ஜியங்கள் தோன்றின. அவர்கள் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் தமது ராஜ்ஜிய எல்லைகளை விஸ்தரித்தார்கள். அவர்கள் மூலம் கிரேக்கர்களின் கலாச்சாரம், இந்தியாவில் பரவி இருக்கலாம் அல்லவா? கிரேக்க கலாச்சாரம் என்றால் என்ன?
கிரேக்கர்களின் புராணக் கதைகளில், "மெடூசா" என்ற அரக்கி பற்றிய கதை பிரபலமானது. தலையில் பாம்புகள் நெளியும், விகாரமான தோற்றம் கொண்ட சூனியக் கிழவி போன்ற மெடூசாவின் கதையை, குழந்தைகளை பயமுறுத்த சொல்லப் படுவதுண்டு. அந்தக் கதையின் படி, மெடூசா ஒரு காலத்தில், கிரேக்க நாட்டின் பேரழகியாக இருந்தவள். அவளை மணம் முடிப்பதற்கு எத்தனையோ ஆண்கள் போட்டி போட்டார்கள். ஏதென்ஸ் நகர தேவதையான அதினாவின் கோயிலுக்கு, மெடூசா வழிபட செல்வது வழக்கம். ஒரு நாள், யாருமற்ற நேரத்தில் அங்கு வந்த பொசெய்டொன், மெடூசாவை கோயிலில் வைத்தே பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கினான். தனது கோயிலிலேயே இவ்வாறான அக்கிரமம் நடந்ததால், அதினா கோபமுற்றாள். ஆனால், பொசெய்டொன் கிரேக்கர்களின் சமுத்திரக் கடவுள். அதனால் அவனை தண்டிக்க முடியாது. பாதிக்கப்பட்ட பெண்ணான மெடூசா மீது பழி போடப்பட்டது. தெய்வ சந்நிதானத்தில் கற்பிழந்த மெடூசா, அந்தக் கணமே விகாரமான வயோதிப மாதுவாக மாற வேண்டுமென சபிக்கப் பட்டாள்.
"சேலையில் முள் விழுந்தாலும், முள்ளில் சேலை விழுந்தாலும் நஷ்டம் சேலைக்கு தான்..." என்று பெண்ணின் கற்பை பத்திரமாக பாதுகாக்கக் கோரும், பிற்போக்கான இந்தியக் கலாச்சாரம் உங்கள் மனக்கண்ணில் வரலாம். கிரேக்கர்கள் மத்தியிலும் அதே மாதிரியான கலாச்சாரம் இருந்ததை மெடூசா கதை மூலம் அறிய முடிகின்றது. ஹோமர் எழுதிய காவியமான "ஒடிசி"யிலும், ஒரு திருமணமான பெண், கணவன் கடல் கடந்து சென்று வருடக் கணக்காக திரும்பி வரா விட்டாலும், சோரம் போகாமல் கற்பெனும் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று போதிக்கின்றது. ஹோமர் எழுதிய ஒடிசி எனும் காவியத்தில், பல இடங்கள் இராமாயணத்தை நினைவூட்டுகின்றன. ஒடிசி காவியத்தில், த்ரோய் நாட்டவரால் கடத்திச் செல்லப்பட்ட கிரேக்க அரசியை மீட்பதற்காக பெரும் போர் நடந்தது. இராமாயணத்தில் இலங்காபுரியை சேர்ந்த இராவணனால் கடத்தப் பட்ட சீதையை மீட்பதற்காக போர் நடந்தது. "யாராலும் வளைக்க முடியாத வில்லை வளைத்த கதை", இராமாயணத்திலும், ஓடிசியிலும் ஒரே மாதிரி சொல்லப் படுகின்றது.
த்ரொய் நாட்டுடன் போருக்கு சென்ற ஓடிசியின் கப்பல், திரும்பி வரும் வழியில் திசை மாறி கடலில் தத்தளிக்கின்றது. பத்தாண்டுகளுக்கும் மேலாக பல புதிய நாடுகளை கண்டு, அங்கெல்லாம் தீரச் செயல்களை செய்து களைத்த ஒடிசி, இறுதியில் தாயகம் திரும்புகின்றான். வீடு வந்து சேர்ந்த பின்னர், தனது மனைவி இத்தனை வருடங்களாக கற்புடன் இருந்தவளா என்று சோதிப்பதற்காக ஒரு பரீட்சை வைக்கிறான். இது சீதையின் கற்பை சோதித்த இராமனின் கதையை நினைவுபடுத்துகின்றது. இதே நேரம், ஒடிசி கண்டுபிடித்த நாடுகளில் எல்லாம், பல பெண்களுடன் உறவு கொள்கிறான். இந்தக் காவியத்தை எழுதிய ஹோமருக்கு, அது தவறாக தெரியவில்லை. அதாவது, வெளிநாடு சென்ற ஆண் எத்தனை பெண்களோடு உறவு வைத்துக் கொண்டாலும் அதில் தவறில்லை. ஆனால், கணவன் வெளிநாட்டுக்கு சென்றதால் தொடர்புகள் அறுந்து விட்ட நிலையிலும், அவனை பல வருடங்களாக பிரிந்து வாழ்ந்தாலும், தனிமையில் வாடும் மனைவி, வேறெந்த ஆண் மகனையும் மனத்தால் கூட தீண்டக் கூடாது. அதுவே பெண்களை மகிமைப் படுத்தும் கற்பெனும் ஒழுக்க நெறி. கிரேக்க புராணக் கதைகள் போதிக்கும் நீதி நெறியும் அது தான்.இந்திய புராணங்களையும், கிரேக்க புராணங்களையும் ஒப்பிட்டால், இது போன்ற பல ஒற்றுமைகளை கண்டுபிடிக்கலாம். இவ்வாறு "கற்பின் சிறப்பை" எடுத்துக் கூறும் கிரேக்க கதைகள் பல உள்ளன.
கிரேக்கர்களின் ஒர்பெயுஸ் (Orpheus), எயுரிடிசே (Eurydice) என்ற புராணக்கதையும், இந்தியர்களின் சத்தியவான்-சாவித்திரி கதையும் ஒரே மாதிரி அமைந்துள்ளன. பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்த ஒபெயுஸ் ஒரு சிறந்த இசைக் கலைஞன். அவன் யாழ் இசைத்துப் பாடினால் மயங்காதவர் எவருமில்லை. ஒபெயுஸ், எயுரிடிசே என்ற அழகிய நங்கையை காதல் திருமணம் செய்து கொண்டான். துரதிர்ஷ்டவசமாக அவர்களது மணவாழ்க்கை அதிக காலம் நீடிக்கவில்லை. சத்தியவான், சாவித்திரி கதையிலும் அவர்களின் மணவாழ்க்கை சில வருடங்களே நீடித்தது. எயுரிடிசே காமுகன் ஒருவனால் கானகத்தில் விரட்டப்பட்டு, பாம்பு கடித்து இறந்து போகிறாள். அவளது உயிர் மாண்டவர் வாழும், (எமலோகமான) பாதாள லோகத்திற்கு செல்கின்றது. சத்தியவான் கானகத்தில் கனி பறிக்க சென்ற வேளை உயிர் பிரிகிறது. மனைவியின் இழப்பை தாங்க முடியாத ஒர்பெயுஸ், எமலோகத்திற்கு சென்று உயிரை மீட்டு வருவதாக சூளுரைக்கிறான். யாரும் துணியாத காரியமாக, பாதாள லோகம் நோக்கிச் செல்கிறான்.
கணவனின் இழப்பை ஏற்றுக் கொள்ளாத சாவித்திரி, சத்தியவானின் உயிரை கவர்ந்து செல்லும் எமதர்மனை பின்தொடர்ந்து செல்கிறாள். கிரேக்க பாதாள லோகத்தில், அதன் அதிபதியான ஹாடெஸின் (எமதர்மன்) காவல் நாய்கள் (எருமை வாகனம்?) ஒர்பெயுசை மேற்கொண்டு செல்ல விடாது தடுக்கின்றன. அதனால் வாசலில் உட்கார்ந்து கொள்ளும் ஒர்பெயுஸ், யாழ் எடுத்து கல்லும் கரையும் வண்ணம் சோக கானத்தை இசைக்கிறான். அவனது இசை காலனையும் கரைய வைக்கிறது. இசையினால் இளகிய ஹாடெஸ், எயுரிடிசேயை உயிருடன் மீட்டுச் செல்லலாம் என வரம் கொடுக்கிறான். ஆனால் ஒரு நிபந்தனை. ஒர்பெயுஸ் திரும்பிப் பாராமல் நடந்து செல்ல வேண்டும். அவன் மனைவி அவனைத் தொடர்ந்து வருவாள். ஒரு கணம் கூட திரும்பிப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால், அவன் மனைவி மீண்டும் எமலோகத்திற்கே திரும்பி விடுவாள். நிபந்தனைக்கு சம்மதிக்கும் ஒர்பெயுஸ், தனது மனைவியை கூட்டிச் செல்கிறாள். வழி நெடுகிலும், அவள் தன்னை பின்தொடர்ந்து வருகின்றாளா என்ற சந்தேகம் வருகின்றது. ஒர்பெயுஸ் பூலோகத்தை வந்தடையும் நேரத்தில், சந்தேகம் வலுக்கவே திரும்பிப் பார்க்கிறான். அந்த நிமிடமே எயுரிடிசே மீண்டும் எமலோகத்திற்கு திரும்பிச் சென்று விடுகிறாள். கடும்பிரயத்தனத்திற்கு மத்தியில் மனைவியின் உயிரை மீட்டு வந்து பறிகொடுத்த ஒர்பெயுஸ், எமலோகம் சென்று திரும்பிய அனுபவத்தை பாடி பொழுதைப் போக்கினான். கிரேக்க மக்கள் மத்தியில் ஒர்பெயுஸ் - எயுரிடிசே கதை காலத்தால் அழியாத காவியமாகி விட்டது.
"சத்தியவான்-சாவித்திரி-எமதர்மன்" கதை, வட இந்தியர்களுடையது. வட இந்தியர்களும், ஈரானியர்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கும் ஐரோப்பிய இனமான கிரேக்கர்களுக்கும் பொதுவான மூதாதையர் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் ஒரே மாதிரியான புராணக் கதைகளை கேள்விப்பட முடிகின்றது. இந்த மக்கள் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வாழ்ந்தாலும், ஒருவருக்கொருவர் புரியாத மொழிகளைப் பேசினாலும், சில பாரம்பரிய பிணைப்புகள் அவர்களை பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதனை இந்த கதையில் இருந்து புரிந்து கொள்ளலாம். இது நவீன கால தேசியவாத கற்பிதங்களை தகர்க்கின்றது. மனிதர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுவதால், வெவ்வேறு இனங்களை சேர்ந்தவர்கள் என்று அர்த்தம் இல்லை. ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் காலத்திற்கு, இடத்திற்கு ஏற்றவாறு வேறு வேறு மொழிகளை பேசி வருகின்றனர். அது தான் உலக நியதி.
இந்து மத கடவுளரும், இந்திய புராணக் கதைகளும், அசுரர்கள் பற்றிய கதைகளும், சமஸ்கிருதத்திற்கு முந்திய புராதன இந்திய மொழியும்; ஈராக், துருக்கி போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் தோன்றியிருக்கலாம் என்பதை பார்த்தோம். நாங்கள் இன்னும் கொஞ்சம் கிட்ட வந்தால், அதாவது இந்தியாவுக்கு அருகாமையில் உள்ள ஈரானுக்குள் நுழைந்தால், இதை விட ஆச்சரியமான தகவல்கள் கிடைக்கும். இந்திய இந்துக்கள் எம தர்மனை கடவுள் ஸ்தானத்தில் வைத்து மதிப்பதில்லை. எமனை அச்சத்திற்குரிய மரண தேவதையாக உருவகிக்கின்றனர். இது அனேகமாக, கிரேக்க கலாச்சாரத்தின் பாதிப்பின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம். கிரேக்கர்களின் மரண தேவதையான ஹாடெஸ், எமனைப் போன்ற பாதாள லோகத்தின் அதிபதி ஆகும். ஆனால், எம தர்மனுக்கு ஒரு வரலாறு உண்டு. ஈரானில், எம தர்மன் ஒரு தேசத்தை ஸ்தாபித்த அரசனாக போற்றப் படுகிறான். ஆதி கால ஈரானிய அரசர்கள், எமனின் பெயர் வருமாறு பதவிப் பெயரை சூட்டிக் கொள்வது வழக்கமாக இருந்தது. அது மட்டுமல்ல, ஈரானியரின் புராதன தலைநகரமும் எமனின் பெயரால் சிறப்புற்று விளங்கியது. சில நேரம், கற்பனையை விட நிஜம் எம்மை ஆச்சரியக் கடலுக்குள் மூழ்கடித்து விடும்.
கியூபிட்
ஆபத்தில் தள்ளிய அழகு:முன்னொரு காலத்தில் ரோமின் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆண்டு வந்த ராஜாவுக்கு 3 மிகவும் அழகான மகள்கள், அவர்களில் பேரழகியாக இருந்தவள் சைக் (Psyche). சைக் என்பதற்குத் தமிழில் ஆன்மா எனப் பொருள். இவளை அனைவரும் அழகின் கடவுளான வீனஸின் மறு உருவமாகவே பார்த்தனர். காலப் போக்கில் பலரும் வீனஸை மறந்து வாழும் கடவுளாகவே சைக்கை வழிப்பட்டனர். இதனால் ஆத்திரமும், பொறாமையும் அடைந்த வீனஸ், அவள் அழகைக் கண்டு வியக்கும் எவருக்கும் அவள் மீது காதல் வராதபடி செய்து விடுகிறார். தனது மற்ற இரு மகள்களுக்கும் திருமணம் ஆன பிறகும் மூன்றாவது மகளுக்கு மட்டும் திருமண வரன் ஏதும் வராததால் கவலையடைந்த சைக்கின் தந்தை ஒளியின் கடவுளான புளூடோவிடம் சென்று வேண்ட, “உன் மகளை மலையின் உச்சியில் தனியாக விட்டு விட்டு வா” என்று கடவுள் உத்தரவிட்டதைக் கேட்டு சைக்கின் தந்தையும் வலுக்கட்டாயமாக அவளை அழைத்துச் சென்று மலையின் விளிம்பில் நிக்க வைத்து விட்டு வருகிறார்.இந்தச் சந்தர்ப்பத்தை பயன் படுத்த நினைத்த வினஸ் தனது மகன் கியூபிட்டை அழைத்து இந்த உலகிலேயே மிகவும் கொடூரமான, பார்க்கவே பயங்கரமாக இருக்கும் பாம்பு உடல் கொண்ட ஒரு அரக்கனுக்கு இவள் மேல் காதல் வரும்படி செய்துவிடு என்று உத்தரவிடுகிறார். தாயின் கட்டளையை ஏற்று கியூபிட்டும் சைக் தனியாக நின்று கொண்டிருக்கும் மலையின் விளிம்பிற்குச் செல்கிறான். திடீரென்று மேற்கில் இருந்து வீசிய தென்றல் சைக்கை அப்படியே காற்றில் தூக்கிச் செல்கிறது. காற்றில் மிதந்தவாறே சில தூரம் பயணித்த பிறகு ஒரு பிரம்மாண்டமான கோட்டையின் வாசலில் அவளைக் கீழே இறக்குகிறது. அந்தக் கோட்டையை பார்த்து வியந்தபடியே நின்று கொண்டிருந்த சைக்கிற்கு ஒரு அசரீரி கேட்கிறது, “இனி இதுதான் உன் வீடு, உள்ளே செல்” என்று அந்தக் குரல் சொல்லியது.மர்ம காதலன்:அந்தக் கோட்டை முழுவதும் விலை மதிக்க முடியாத போருட்களால் உருவாகி இருப்பதைக் கண்டு சைக் வியந்து போகிறாள். நடக்கும் தரை முழுவதும் தங்கத்தால் இழைக்கப்பட்டு, சுவர்கள் எல்லாம் வைரம், வைடூரியம், ரூபி, எமரால்ட் போன்ற விலையுர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. அப்போது ஒரு அறை அவள் கண்ணில் படுகிறது, மீண்டும் அசரீரி ஒலிக்கிறது, உள்ளே செல் என்று. அதைக் கேட்டு சைக்கும் உள்ளே சென்றால் அறை முழுவதும் இருள் சூழ்ந்து துளி வெளிச்சம் கூட இல்லாமல் இருந்தது. அந்த இருளில் யாரோ தன்னை தொடுவதை சைக் உணர்கிறாள். அந்த உணர்வை வைத்தே தன்னை தொடுவது ஒரு ஆண் என்பது அவளுக்குத் தெரிகிறது, அந்த ஆண் அவளிடம் “நான் உன்னை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறேன், உனக்கு எந்தக் குறையும் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாகப் பார்த்து கோள்வேன் உனக்கு என் மேல் நம்பிக்கை இருந்தால் நான் சொல்வதை நம்பு, அதே சமயம் என்றுமே நான் யார் என்பதை நீ தெரிந்து கொள்ள முயலக் கூடாது, மேலும் என் முகத்தைப் பார்க்கவும் நீ என்றுமே ஆசைப் படக்கூடாது” என்று மிகவும் கவர்ச்சிகரமான அந்தக் குரலுக்கு சைக்கும் சற்றும் யோசிக்காமல் ஒப்புக் கொள்கிறாள். தினமும் இரவில் மட்டும் சைக்குடன் நேரத்தை அந்த இருட்டு அறையிலேயே கழித்துவிட்டு காலைச் சூரியன் உதயமாகுவதற்கு முன்பே ஜன்னலின் வழியாக வெளியே செல்வதே சைக்கின் காதலனது வழக்கம். இப்படியே பல நாட்கள் கழிகிறது பின்பு ஒரு நாள் சைக் கர்ப்பமாகிறாள், தனது கணவன் யார் என்றே தெரியாத நிலையில் எப்படி ஒரு குழந்தைக்கு தாய் ஆவது என்ற கவலையில் அவளை அந்தக் கர்ப்ப செய்தி ஆழ்த்துகிறது. சைக்கின் இந்தப் பிரம்மாண்டமான வாழ்க்கையைப் பார்த்து பொறாமை அடைந்த அவள் சகோதரிகள் இருவரும் ஏற்கனவே குழப்பத்தில் உள்ள சைக்கை மேலும் பயமுறுத்துகிறார்கள். “ஒரு வேளை நீ யாருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாயோ அவர் மிகவும் பயங்கரமான ஒரு பாம்பாக இருந்தால் என்ன செய்வாய் நீ?” என்று அவளை தங்களது பேச்சால் தூண்டி தனது கணவனின் பேச்சை மீறிச் செயல்பட தூண்டுகிறார்கள்.சத்தியத்தை மீறியதால் கணவனைப் பிரியும் சைக்:தனது சகோதரிகளின் பேச்சைக் கேட்ட சைக்கும் அடுத்த நாள் விடிவதற்கு முன் கையில் ஒரு விளக்கை எடுத்துக் கொண்டு ஒரு வேளை அவர்கள் சொன்னது போல் கொடூரமான ஒரு அரக்கனாக இருந்தால் என்ன செய்வது என்கிற பயத்தோடு அறையினுள் நுழைகிறாள். விளக்கை உயர்த்தி தனது கணவனின் முகத்தை வெளிச்சத்தில் பார்த்து உறைகிறாள். இந்த உலகிலேயே மிகவும் அழகான ஆண் என்று சொல்லும் அளவிற்கு கியூபிட் படுத்திருப்பதை பார்க்கிறாள். அந்த மகிழ்ச்சியில் கை நழுவ, அந்த விளக்கில் இருந்த எண்ணெய் கியூபிட்டின் மேல் பட்டு காயத்தை ஏற்படுத்துகிறது. அதனால் தூக்கத்தில் இருந்து விழித்த கியூபிட் “நீ என் வார்த்தையை மீறிவிட்டாய், இனி என்னால் உன்னுடன் வாழ முடியாது” என்று கோவத்துடன் ஜன்னல் வழியாகப் பறந்து செல்கிறான். தனது தாயின் பேச்சைக் கேட்டு சைக்கிற்கு ஒரு அரக்கன் மீது காதல் வரச் செய்ய சென்ற கியூபிட் அவளது அழகில் மயங்கி அந்த அம்பில் தன்னை தானே குத்தி சைக்கின் மீது காதல் வயப்படுகிறான்.தனது கணவனிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் அவருடன் சேர்ந்து விட வேண்டும் என்ற முடிவு எடுத்து சைக், கியூபிட்டை தேடி செல்கிறாள். வழியில் கியூபிட்டின் தாய் அவளைத் தடுத்து “உனக்கு என் மகனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் நான் வைக்கும் சில சோதனைகளில் நீ தேர்ச்சி பெற வேண்டும்” என்று நிபந்தனை போடுகிறார். அதற்கு சைக்கும் ஒப்புக் கொள்கிறாள்.காதலை நிரூபிக்க 3 பரீட்சைகள்:முதலாவதாக ஒரு பல வகையான விதைகள் ஒன்றாகக் கலந்து மலை போல் உயர்ந்திருக்கும் ஒரு குவியலை காட்டி இன்று இரவுக்குள் இதில் இருக்கும் ஐந்து வகையான விதைகளையும் தனி தனியே பிரிக்க வேண்டும் என்று சொல்கிறார், சற்றும் சாத்தியம் இல்லாத அந்த முயற்சியில் சைக் படும் கஷ்டத்தைப் பார்த்த ஒரு எறும்பு கூட்டம் அதை அவளுக்குப் பிரித்து தருகிறது. இதனால் முதல் பரீட்சையில் சைக் வெற்றி பெறுகிறாள். அடுத்ததாக மிகவும் முரட்டுத் தனமான தங்க ரோமங்களை உடைய ஆட்டின் உடலில் இருந்து அந்தத் தங்கத்தை எடுத்து வருமாறு சொல்கிறார். அங்கும் ஆற்றின் கடவுள் அவளுக்கு உதவி செய்து ஆட்டின் தங்க ரோமங்களை அவளுக்குத் தருகிறார், இதனால் இரண்டாவது பரீட்சையிலும் சைக் தேருகிறாள்.இறுதியாக மரண உலகம் என்று சொல்லப்படும் பாதாளத்திற்குச் சென்று இறப்பின் ராணியிடமிருந்து சிறிது அழகை ஒரு பெட்டியில் வாங்கி வர வேண்டும் என்று வீனஸ் சொல்கிறார். எப்படி அங்குச் செல்வது என்று சைக் தவித்து நிற்கும் நிலையில் மீண்டும் அசரீரி ஒலிக்கிறது, சில கேக் துண்டுகளையும், வெள்ளி நாணயங்களையும் எடுத்துக் கொண்டு இந்தத் திசையில் செல் என்கிறது. அதன்படி சைக்கும் செல்ல மரண உலகமான பாதாள உலகத்தின் நுழைவாயிலைப் பாதுகாக்கும் மூன்று தலை நாய்களுக்கு கேக் துண்டை கொடுத்து அதைக் கடந்து உள்ளே செல்கிறாள். பின்னர் அங்கிருக்கும் ஆற்றைக் கடக்க படகோட்டியிடம் வெள்ளி நாணயங்களைக் கொடுத்து மரணத்தின் ராணியிடமிருந்து அழகைப் பெட்டிக்குள் வைத்து மிகவும் பத்திரமாக கொண்டு வருகிறாள்.முடிவில்லா உறக்கம்:வினஸின் கோட்டை அருகே வந்த சைக் அந்தப் பெட்டிக்குள் இருக்கும் அழகைத் தானும் கொஞ்சம் எடுத்துக் கொள்வோம் என்கிற ஆசையோடு பெட்டியை திறக்கிறாள், ஆனால் அந்தப் பெட்டிக்குள் முடிவில்லா தூக்கம் மட்டுமே இருக்கிறது, அதனால் மயங்கி விழுந்த சைக் ஆழ்ந்த உறக்கம் செல்கிறாள். அந்த நேரத்தில் காயங்கள் குணமடைந்து தான் செய்தது தவறு என்பதை உணர்ந்த கியூபிட் மீண்டும் தனது மனைவியான சைக்குடன் சேர்ந்து வாழ முடிவு செய்து அங்கு வந்த கியூபிட் கர்ப்பவதியான தனது மனைவி மயங்கி விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். பின்னர் கடவுள்களின் அமரத்துவத்திற்குக் காரணமான அமிழ்தத்தை சைக்கிற்கு கொடுத்து அவளைத் தூக்கத்தில் இருந்து மீட்கிறான். பின்னர் அனைத்துக் கடவுள்களின் ஆசியுடன் இவர்கள் இருவரது திருமணம் மிகப் பிரம்மாண்டமாக நடக்கிறது.இவர்கள் இருவருக்கும் அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது, அதற்கு ‘பிளெஷர்’ (Pleasure) எனப் பெயரிடுகிறார்கள். கியூபிட் அன்பு மற்றும் ஆசையின் வடிவமாக, சைக் ஆன்மாவின் வடிவமாக, இவர்களின் மகள் பிளேஷர் அதனால் கிடைக்கும் இன்பத்தின் வடிவமாகப் பார்க்கப்பட்டு, இந்த மூன்றும் சேர்ந்ததே காதலாகி உலகில் உள்ள அனைவரது காதல் வாழ்க்கைக்கும் காரணமாக அமைந்துள்ளது."
யுவதி பிராஸர்பினாவும் பாதாள கடவுளும்
பிராஸர்பினா என்பவள் ரோமானிய புராண கதைகளில் வசந்த கால தெய்வமாகவும் பாதாள உலக ராணியாகவும் வணங்கப்படுகிறார்.
பிராஸர்பினாவை பாதாள கடவுள் கடத்தி செல்லும் பிரபல புராணக்கதை அங்கு இன்னும் மைய கருவாக பல ஆக்கபூர்வமான கலைகளில் பயன்படுத்தப்படுகிறது. அந்த கதையில் வரும் கால மாற்றத்தால் அவள் மறுமலர்ச்சியின் தேவியாகவும் கருதப்படுகிறார்.
Dante_Gabriel_Rossetti_-_Proserpine
இவள் கதை கிரேக்க புராணங்களில் வரும் பூமி கடவுளான டிமிடெரின் மகளான பெரிசிஃபோனை(Persephone) தழுவியது. கிரேக்கத்திலிருந்து தழுவிய இந்த இறைவி பின்னாளில் ரோமானிய கலை இலக்கியத்தில் முக்கிய மறுமலர்ச்சியை தோற்றுவித்தாள்.
கி.பி.205 ஆம் ஆண்டில் தான் பிராஸர்பினா கடவுள் ரோமானியருக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அவளுக்கு தாயாக ஏற்கனவே கிரேக்கத்தில் இருக்கும் டிமிட்டெரிக்கு இணையான ரோமனின் புவிக்கடவுளான சீரிஸ்(Ceres) இருந்தார்.
விவசாய துவக்கத்தின் போதும் பிராஸர்பினா வணங்குவதால் விளைச்சல் பெரும் என்பது அவர்களிடம் இன்றளவும் நிலவும் நம்பிக்கை.
பிராஸர்பினாவின் கோவில் புராதன நகரமான மால்டா என்ற இடத்தில் இருந்தது. 1613-ல் இக்கோவிலின் மிச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது சில மிதமிஞ்சிய பளிங்கு பொறிக்கப்பட்ட கற்துண்டுகள் மட்டுமே அங்கு உள்ளன.
யுவதி பிராஸர்பினாவின் கடத்தல்
பாதாள உலகத்தின் கடவுளான புளுட்டோ மீது காதல் இறைவியான புதன்(Venus) தன் மகன் குபிட்(Amor இந்து புராணங்களில் மன்மதன்) ஐ அனுப்பி காதல் அம்பினை பாய செய்கிறார்.
பிராஸர்பினா சிசிலி என்ற இடத்தில் தன் தோழிகளோடு ஆனந்தமாக பூப்பறித்துக் கொண்டிருந்தாள். அதுசமயம் எட்னா எரிமலையிலிருந்து தனது நான்கு கருப்பு நிற குதிரைகளோடு வெளியே வந்தார்.
மோக கணை ஏந்திய அவர் அழகான பாவை போன்ற பெண்ணை கண்டதும் விரைந்து அவளை அபகரித்து தன்னை திருமணம் செய்துக் கொண்டு பாதாள உலகில் வாழுமாறு வற்புறுத்தினர். பாவை பிராஸர்பினா எவ்வளவு மறுத்தும் அவளை கட்டாய படுத்தி பாதாள உலகிற்கு தூக்கி சென்றார்.
Aachen_Raub_von_Proserpina.jpg
நடந்தவற்றை அறியாத அவள் தாய் சீரிஸ் வீணான முறையில் பூமியின் ஒவ்வொரு மூலையிலும் சென்று தேடுகிறாள். பாதாள உலகத்தில் தன் மகள் கதறும் ஒலியை அவளால் கேட்க முடியவில்லை. அங்கு பிராஸர்பினா அவள் அனுமதியை மீறி கற்பழிக்கப்பட்டாள்.
546px-El_rapto_de_Proserpina
எங்கு தேடியும் மகளைக் காணவில்லை, இறுதியில் சீரிஸ்க்கு தென்பட்டது ஒரு வளையம், அந்த வளையம் பிராஸர்பினாவின் தோழிகளின் கண்ணீரால் உருவாகியிருந்தது.
விரக்தியடைந்த பூமாதேவி கோபமடைந்து சாபமிட்டதால் சிசிலியில் காய்கறிகளும் பழங்களும் வளர்ச்சியடைவதை நிறுத்திவிட்டன.
அவள் மீண்டும் ஒலிம்பஸ் மலைக்கு(Mount Olympus) செல்ல மறுத்து புவியெங்கும் நடக்க துவங்கினாள், அவள் பாதம் பட்ட இடமெல்லாம் பாலைவனமாக மாறி கொண்டே வந்தன.
நடப்பதை கண்டு வருத்தமடைந்த வியாழன்(Jupiter) இதற்கெல்லாம் காரணமான தன் தம்பி புளூட்டோவை நிறுத்த எண்ணினான்.
Abbate_-_Rape_of_Proserpine_hi-res.jpg
உடனே அவர்கள் தாய் மெர்குரி(Mercury) எனப்படும் வெள்ளியை அழைத்து புளூட்டோவை நிறுத்துமாறு சொன்னார். நிலைமையை புரிந்து கொண்ட புளுட்டோ அவளை விடுவிக்கும் முன் ஒரு திட்டம் செய்தான். பிராஸர்பினாவை நெருங்கி ஆறு மாதுளை பழங்களை அளித்தான், அவளும் சாப்பிட்டாள்.
பாதாள உலகம் மரணித்தவர்களின் உலகம்.அதை சேர்ந்தவற்றை உட்கொண்டால் புவியின் பரப்பில் வாழ முடியாது.இதனால் அவள் ஆறு மாதம் பாதாள உலகில் வாழ வேண்டியது அவசியம்.
பாதாள உலகிலிருந்து வெளியே வந்த பிராஸர்பினாவை பூமித்தாய் சீரிஸ் கண்டதும் அந்த தேசம் எங்கும் பூத்துக் குலுங்க ஆரம்பித்தது, மரங்களில் பச்சை இலைகள் செழிக்க துவங்கின,வயல்களில் தானியங்கள் வளம் பெற்றது.
FredericLeighton-TheReturnofPerspephone(1891).jpg
வசந்த கால காற்று அந்த நிலமெங்கும் வீசியது.இந்த நிகழ்விலிருந்து பிராஸர்பினா நிலத்தில் வாழும் ஆறு மாதங்களின் தொடக்கத்தில் வசந்த காலமும் தொடங்கும், இதனை புராண ரோமனியர்கள் விழாவாக கொண்டாடினர்.அவள் தாய் இல்லாத இடத்தில் தன் மகளை தேடியதே முட்டாள்கள் தினமாக கொண்டப்படுகிறது என்றொரு கூற்றும் உண்டு.
முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவது ஏன்?
இந்தியாவில் மன்மதனை சிவன் நெற்றி கண்ணால் எரித்த தினத்தை இதற்கு ஒப்பிடலாம், ஹோலி பண்டிகையாகவும் சித்திரை விழாவாகவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.அதாவது இங்கு வசந்த கால துவக்கத்தின் அடையாளம்.
பிராஸர்பினா திரும்ப பாதாள உலகம் நோக்கி செல்வது குளிர் காலத்தின் துவக்கமாகிறது.அப்போது நிலங்கள் தரிசாகும்,இலைகள் வெளிர்க்கும்.அந்த ஆறு மாதம் அவள் பாதாள உலகின் ராணியாக வாழ்வாள்.
1024px-Luca_Giordano_016.jpg
சில சமயம் அவளுக்கு மூன்று பழங்கள் மட்டுமே அளிக்கப்பட்டன எனவும் சொல்லப்படுகிறது, அவள் பூமியில் மூன்று மாதங்கள் மட்டுமே வசிப்பாள்.
வசந்த காலமான அப்போது பயிர்கள் நல்ல விளைச்சலைத் தரும், பாதாளம் சென்றதும் பனிக்காலம் தொடங்கி விளைநிலங்கள் வெறித்துவிடும்.
ஆர்ஃபியஸ் அவனின் ஆசை மனைவி யூரிடைஸ் உயிரிழந்ததும் பாதாளம் வந்து மீட்டு செல்லும் கதையிலும் பிராஸர்பினா பங்கு இருக்கும்,அவளே அப்போது பாதாள உலக தேவியாக இருப்பாள்.
ரோமானிய மரபுப்படி திருமணம் ஆகாத கன்னி பெண்கள் பிராஸர்பினாவின் கற்பு நெறியை போற்றி வணங்க வேண்டும்.அதே சமயம் திருமணம் ஆன பெண்கள் சீரிஸின் தாய்மையையும் அர்ப்பணிப்பையும் வாழ்வாக அமைத்து அருள் பெறவேண்டும்.
கலைப்பணி
பிராஸர்பினா கடத்தல் பல ஒவியங்களாவும் சிலை வடிவங்களாகவும் ரோம நாகரிக்கத்தில் புத்துணர்வை தந்தது. எண்ணற்ற இலக்கிய படைப்புகளும் கவிதைகளும் இச்சூழ்லை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.
ஒரு கவிஞர் பிராஸர்பினாவின் கதை மோசமான சம்பவத்திற்க்கு பின்னான மலர்ச்சியான வாழ்வை எடுத்து கூறுவதாக சொன்னார்.பெர்னினி என்ற சிலை வடிவமைப்பாளரின் பிராஸர்பினாவின் கற்பழிப்பு சிலை புகஸ் வாய்ந்தது.
அச்சிலையின் வடிவமும் நுணுக்கமும் பலவாறு விமர்சனங்களை பெற்றது. முக்கியமாக அவள் தொடையில் அழுத்தமாக விரல் பதிந்திருப்பது போன்ற வேலைப்பாடு அக்கதையின் சாராம்சத்தை வெளிப்படுத்தியது.இதை அவர் உருவாக்கிய போது அவருக்கு 23 வயதே.
Pomarancio-வின் சுவரோவியம், D.G.Rossetti, J.Heintz, Rubens,A. Dürer,Dell’Abbate,Parrish போன்ற பல நாட்டு புகழ் வாய்ந்த ஓவியர்கள் பிராஸர்பினா கடத்தல் சம்பவத்தை ஓவியமாக தீட்டியுள்ளனர்.
Frescoes on ceiling in Hall of Pluto and Proserpina.jpg
Goethe இன் பிராஸர்பினா,Swinburne இன் பிராஸர்பினா கீர்த்தனை மற்றும் பிராஸர்பினா தோட்டம் போன்ற கவிதை இலக்கியங்கள் எழுதப்பட்டுள்ளது. கனடா பாடகி கேட் மெக்கரிகில்(Kate McGarrigle) தான் சாகும் முன் இவரை பற்றிய பாடலை தன இறுதியாக எழுதினார்.
Pluto and Proserpina
Pluto and Proserpina
அன்றைய கிரேக்கர்களின் விண்ணியல் முறைகளால் அவர்கள் அப்போதே கிரகங்களை பற்றி அறிந்து வைத்திருந்தார்கள். இப்போது விண்ணில் இருக்கும் கோள்களுக்கு கிரேக்க கடவுள்களின் பெயர்களே வைக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக பக்கத்து கிரகமான மார்ஸ் என்பது கிரேக்க போர் கடவுளின் பெயர்.அதுபோல வீனஸ்(புதன்) காதல் கடவுளின் பெயர்,ஜூபிடர் வானத்தின் கடவுள்.
1853 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறுகோள் அல்லது விண்கல்லுக்கு 26 பிராஸர்பினா என்ற பெயர் சூட்டப்பட்டது.
ஜெர்மனியில் உள்ள கிராண்ட் கார்டன் என்னும் பூங்காவில் உள்ள பிராஸர்பினா சிலை அழிவு காலத்தின் அழகாக(Time Ravages Beauty) கருதப்படுகிறது.








