பிராஸர்பினா என்பவள் ரோமானிய புராண கதைகளில் வசந்த கால தெய்வமாகவும் பாதாள உலக ராணியாகவும் வணங்கப்படுகிறார்.
பிராஸர்பினாவை பாதாள கடவுள் கடத்தி செல்லும் பிரபல புராணக்கதை அங்கு இன்னும் மைய கருவாக பல ஆக்கபூர்வமான கலைகளில் பயன்படுத்தப்படுகிறது. அந்த கதையில் வரும் கால மாற்றத்தால் அவள் மறுமலர்ச்சியின் தேவியாகவும் கருதப்படுகிறார்.
Dante_Gabriel_Rossetti_-_Proserpine
இவள் கதை கிரேக்க புராணங்களில் வரும் பூமி கடவுளான டிமிடெரின் மகளான பெரிசிஃபோனை(Persephone) தழுவியது. கிரேக்கத்திலிருந்து தழுவிய இந்த இறைவி பின்னாளில் ரோமானிய கலை இலக்கியத்தில் முக்கிய மறுமலர்ச்சியை தோற்றுவித்தாள்.
கி.பி.205 ஆம் ஆண்டில் தான் பிராஸர்பினா கடவுள் ரோமானியருக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அவளுக்கு தாயாக ஏற்கனவே கிரேக்கத்தில் இருக்கும் டிமிட்டெரிக்கு இணையான ரோமனின் புவிக்கடவுளான சீரிஸ்(Ceres) இருந்தார்.
விவசாய துவக்கத்தின் போதும் பிராஸர்பினா வணங்குவதால் விளைச்சல் பெரும் என்பது அவர்களிடம் இன்றளவும் நிலவும் நம்பிக்கை.
பிராஸர்பினாவின் கோவில் புராதன நகரமான மால்டா என்ற இடத்தில் இருந்தது. 1613-ல் இக்கோவிலின் மிச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது சில மிதமிஞ்சிய பளிங்கு பொறிக்கப்பட்ட கற்துண்டுகள் மட்டுமே அங்கு உள்ளன.
யுவதி பிராஸர்பினாவின் கடத்தல்
பாதாள உலகத்தின் கடவுளான புளுட்டோ மீது காதல் இறைவியான புதன்(Venus) தன் மகன் குபிட்(Amor இந்து புராணங்களில் மன்மதன்) ஐ அனுப்பி காதல் அம்பினை பாய செய்கிறார்.
பிராஸர்பினா சிசிலி என்ற இடத்தில் தன் தோழிகளோடு ஆனந்தமாக பூப்பறித்துக் கொண்டிருந்தாள். அதுசமயம் எட்னா எரிமலையிலிருந்து தனது நான்கு கருப்பு நிற குதிரைகளோடு வெளியே வந்தார்.
மோக கணை ஏந்திய அவர் அழகான பாவை போன்ற பெண்ணை கண்டதும் விரைந்து அவளை அபகரித்து தன்னை திருமணம் செய்துக் கொண்டு பாதாள உலகில் வாழுமாறு வற்புறுத்தினர். பாவை பிராஸர்பினா எவ்வளவு மறுத்தும் அவளை கட்டாய படுத்தி பாதாள உலகிற்கு தூக்கி சென்றார்.
Aachen_Raub_von_Proserpina.jpg
நடந்தவற்றை அறியாத அவள் தாய் சீரிஸ் வீணான முறையில் பூமியின் ஒவ்வொரு மூலையிலும் சென்று தேடுகிறாள். பாதாள உலகத்தில் தன் மகள் கதறும் ஒலியை அவளால் கேட்க முடியவில்லை. அங்கு பிராஸர்பினா அவள் அனுமதியை மீறி கற்பழிக்கப்பட்டாள்.
546px-El_rapto_de_Proserpina
எங்கு தேடியும் மகளைக் காணவில்லை, இறுதியில் சீரிஸ்க்கு தென்பட்டது ஒரு வளையம், அந்த வளையம் பிராஸர்பினாவின் தோழிகளின் கண்ணீரால் உருவாகியிருந்தது.
விரக்தியடைந்த பூமாதேவி கோபமடைந்து சாபமிட்டதால் சிசிலியில் காய்கறிகளும் பழங்களும் வளர்ச்சியடைவதை நிறுத்திவிட்டன.
அவள் மீண்டும் ஒலிம்பஸ் மலைக்கு(Mount Olympus) செல்ல மறுத்து புவியெங்கும் நடக்க துவங்கினாள், அவள் பாதம் பட்ட இடமெல்லாம் பாலைவனமாக மாறி கொண்டே வந்தன.
நடப்பதை கண்டு வருத்தமடைந்த வியாழன்(Jupiter) இதற்கெல்லாம் காரணமான தன் தம்பி புளூட்டோவை நிறுத்த எண்ணினான்.
Abbate_-_Rape_of_Proserpine_hi-res.jpg
உடனே அவர்கள் தாய் மெர்குரி(Mercury) எனப்படும் வெள்ளியை அழைத்து புளூட்டோவை நிறுத்துமாறு சொன்னார். நிலைமையை புரிந்து கொண்ட புளுட்டோ அவளை விடுவிக்கும் முன் ஒரு திட்டம் செய்தான். பிராஸர்பினாவை நெருங்கி ஆறு மாதுளை பழங்களை அளித்தான், அவளும் சாப்பிட்டாள்.
பாதாள உலகம் மரணித்தவர்களின் உலகம்.அதை சேர்ந்தவற்றை உட்கொண்டால் புவியின் பரப்பில் வாழ முடியாது.இதனால் அவள் ஆறு மாதம் பாதாள உலகில் வாழ வேண்டியது அவசியம்.
பாதாள உலகிலிருந்து வெளியே வந்த பிராஸர்பினாவை பூமித்தாய் சீரிஸ் கண்டதும் அந்த தேசம் எங்கும் பூத்துக் குலுங்க ஆரம்பித்தது, மரங்களில் பச்சை இலைகள் செழிக்க துவங்கின,வயல்களில் தானியங்கள் வளம் பெற்றது.
FredericLeighton-TheReturnofPerspephone(1891).jpg
வசந்த கால காற்று அந்த நிலமெங்கும் வீசியது.இந்த நிகழ்விலிருந்து பிராஸர்பினா நிலத்தில் வாழும் ஆறு மாதங்களின் தொடக்கத்தில் வசந்த காலமும் தொடங்கும், இதனை புராண ரோமனியர்கள் விழாவாக கொண்டாடினர்.அவள் தாய் இல்லாத இடத்தில் தன் மகளை தேடியதே முட்டாள்கள் தினமாக கொண்டப்படுகிறது என்றொரு கூற்றும் உண்டு.
முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவது ஏன்?
இந்தியாவில் மன்மதனை சிவன் நெற்றி கண்ணால் எரித்த தினத்தை இதற்கு ஒப்பிடலாம், ஹோலி பண்டிகையாகவும் சித்திரை விழாவாகவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.அதாவது இங்கு வசந்த கால துவக்கத்தின் அடையாளம்.
பிராஸர்பினா திரும்ப பாதாள உலகம் நோக்கி செல்வது குளிர் காலத்தின் துவக்கமாகிறது.அப்போது நிலங்கள் தரிசாகும்,இலைகள் வெளிர்க்கும்.அந்த ஆறு மாதம் அவள் பாதாள உலகின் ராணியாக வாழ்வாள்.
1024px-Luca_Giordano_016.jpg
சில சமயம் அவளுக்கு மூன்று பழங்கள் மட்டுமே அளிக்கப்பட்டன எனவும் சொல்லப்படுகிறது, அவள் பூமியில் மூன்று மாதங்கள் மட்டுமே வசிப்பாள்.
வசந்த காலமான அப்போது பயிர்கள் நல்ல விளைச்சலைத் தரும், பாதாளம் சென்றதும் பனிக்காலம் தொடங்கி விளைநிலங்கள் வெறித்துவிடும்.
ஆர்ஃபியஸ் அவனின் ஆசை மனைவி யூரிடைஸ் உயிரிழந்ததும் பாதாளம் வந்து மீட்டு செல்லும் கதையிலும் பிராஸர்பினா பங்கு இருக்கும்,அவளே அப்போது பாதாள உலக தேவியாக இருப்பாள்.
ரோமானிய மரபுப்படி திருமணம் ஆகாத கன்னி பெண்கள் பிராஸர்பினாவின் கற்பு நெறியை போற்றி வணங்க வேண்டும்.அதே சமயம் திருமணம் ஆன பெண்கள் சீரிஸின் தாய்மையையும் அர்ப்பணிப்பையும் வாழ்வாக அமைத்து அருள் பெறவேண்டும்.
கலைப்பணி
பிராஸர்பினா கடத்தல் பல ஒவியங்களாவும் சிலை வடிவங்களாகவும் ரோம நாகரிக்கத்தில் புத்துணர்வை தந்தது. எண்ணற்ற இலக்கிய படைப்புகளும் கவிதைகளும் இச்சூழ்லை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.
ஒரு கவிஞர் பிராஸர்பினாவின் கதை மோசமான சம்பவத்திற்க்கு பின்னான மலர்ச்சியான வாழ்வை எடுத்து கூறுவதாக சொன்னார்.பெர்னினி என்ற சிலை வடிவமைப்பாளரின் பிராஸர்பினாவின் கற்பழிப்பு சிலை புகஸ் வாய்ந்தது.
அச்சிலையின் வடிவமும் நுணுக்கமும் பலவாறு விமர்சனங்களை பெற்றது. முக்கியமாக அவள் தொடையில் அழுத்தமாக விரல் பதிந்திருப்பது போன்ற வேலைப்பாடு அக்கதையின் சாராம்சத்தை வெளிப்படுத்தியது.இதை அவர் உருவாக்கிய போது அவருக்கு 23 வயதே.
Pomarancio-வின் சுவரோவியம், D.G.Rossetti, J.Heintz, Rubens,A. Dürer,Dell’Abbate,Parrish போன்ற பல நாட்டு புகழ் வாய்ந்த ஓவியர்கள் பிராஸர்பினா கடத்தல் சம்பவத்தை ஓவியமாக தீட்டியுள்ளனர்.
Frescoes on ceiling in Hall of Pluto and Proserpina.jpg
Goethe இன் பிராஸர்பினா,Swinburne இன் பிராஸர்பினா கீர்த்தனை மற்றும் பிராஸர்பினா தோட்டம் போன்ற கவிதை இலக்கியங்கள் எழுதப்பட்டுள்ளது. கனடா பாடகி கேட் மெக்கரிகில்(Kate McGarrigle) தான் சாகும் முன் இவரை பற்றிய பாடலை தன இறுதியாக எழுதினார்.
Pluto and Proserpina
Pluto and Proserpina
அன்றைய கிரேக்கர்களின் விண்ணியல் முறைகளால் அவர்கள் அப்போதே கிரகங்களை பற்றி அறிந்து வைத்திருந்தார்கள். இப்போது விண்ணில் இருக்கும் கோள்களுக்கு கிரேக்க கடவுள்களின் பெயர்களே வைக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக பக்கத்து கிரகமான மார்ஸ் என்பது கிரேக்க போர் கடவுளின் பெயர்.அதுபோல வீனஸ்(புதன்) காதல் கடவுளின் பெயர்,ஜூபிடர் வானத்தின் கடவுள்.
1853 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறுகோள் அல்லது விண்கல்லுக்கு 26 பிராஸர்பினா என்ற பெயர் சூட்டப்பட்டது.
ஜெர்மனியில் உள்ள கிராண்ட் கார்டன் என்னும் பூங்காவில் உள்ள பிராஸர்பினா சிலை அழிவு காலத்தின் அழகாக(Time Ravages Beauty) கருதப்படுகிறது.
No comments:
Post a Comment