Wednesday 28 October 2020

கம்பன் வீட்டு கட்டுத்தறி

 Extraordinary Film Actor...!

நடிக்கும் போது எதாவது ஒரு பொருளை கையில் கொடுங்கப்பா... என்பாராம் நடிகர் திலகம்..!
காரணம் அந்த பொருள்களையும் தன்னுடன் நடிக்க வைத்து.. பார்வையாளர்களை பிரமிக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.. தோளில் போட்டிருக்கும் அங்கவஸ்திரம் முதற்கொண்டு கையில் பிடித்திருக்கும் வாக்கிங் ஸ்டிக் வரை அவருடன் நடித்திருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம்... எந்த ஒரு நடிகருக்கும் அமைந்திடாத ஒரு சிறப்பு அது...!
பல படங்களில் யூத் கெட் அப்... ஓல்டு கெட் அப் என்று டபுள் பர்ஃபாமென்ஸ் பண்ணியிருப்பார்... ஆனால் ஒரே ரோல்தான்.. பாபு, உயர்ந்த மனிதன், அந்தமான் காதலி போன்று ஏராளமான படங்கள் இருக்கிறது..!
உதாரணத்திற்கு அவரது உடமைகளுடன் நடித்த வாக்கிங் ஸ்டிக்கை எடுத்துக் கொள்வோம்... எத்தனையோ நடிகர்கள் வாக்கிங் ஸ்டிக்கை கையில் வைத்திருப்பார்கள்.. ஆனால் அந்த வாக்கிங் ஸ்டிக் நடிகர் திலகம் கைகளுக்கு வந்தபோது அது ஊன்று கோல் போல் இல்லாது நடிகர்திலகத்தின் எக்ஸ்ட்ராடினரி சப்போர்ட்டிங் கேரக்டர் போல் ஆகி விடுகிறது...!
இதுதான் சிவாஜி ஸ்பெஷல்... உயர்ந்த மனிதன் படத்தின் ஓல்டு கெட்அப் சிவாஜிக்கு பக்கத்துணையாக வந்த ஊன்று கோலுக்கும் ஓல்டு கெட் அப் போட்டுக் கொள்ளும்... எங்க ஊர் ராஜா... சிவாஜி கையில் வைத்திருக்கும் ஊன்று கோலுக்கு ஒரு ஜமீன் அந்தஸ்து கிடைத்திருக்கும்... அவன்தான் மனிதன் படத்தில் யூத் கெட்அப்பிலும் சில காட்சிகளில் ஸ்டிக் வைத்திருப்பார்.. அது ஒருவகை ஸ்டைல் லுக்... ராமன் எத்தனை ராமனடியில் அது ஊன்றுகோலாக இல்லாமல் ஒரு சவுக்குக் குச்சியாக ஒருவித பரிமாணத்தில் இருக்கும்
திரிசூலம் படத்தில் கூட மூன்றாம் சிவாஜி... ப்யூர் வொய்ட் ட்ரெஸ்ஸில் ஒரு வெள்ளை ஸ்டிக் உடன் வருவார்.. ஒரு பத்து நிமிட காட்சி அது... அந்த கைத்தடி அவர் கையில் சுழன்றாடும் லாவகம் "கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்" என்ற முதுமொழிக்கேற்ப.. "சிவாஜி கையில் ஸ்டிக்கும் கூடசதிராடும்"...!
ஊன்று கோல் மட்டுமா? அவன்தான் மனிதனில் தோளில் அமர்ந்த வெண்புறா... உனக்காக நானில் அவர் அமர்ந்து பாடல் பாடிய குதிரை... தங்கமலை ரகசியத்தில் அமர்ந்து வந்த யானை... முதல் மரியாதையில் அவர் கூடவே நடித்துப் பழகிய சிட்டுக் குருவிகள்... இப்படி எத்தனையோ ஜீவன்கள்.. ஜீவனோடு நடிகர் திலகத்தை பார்த்து நடிப்பை கற்றுக் கொண்டன... அதற்கென தனியே ஒரு கட்டுரை எழுதலாம்...!
நான் ஊன்று கோலோடு மட்டுமே சுழல்கிறேன்.. வியட்நாம் வீடு படத்தில் அவர் ஊன்றுகோல் பிடித்திருக்கும் பாங்கு... வெரி ஸ்பெஷல்.. ஒரு ஓய்வுபெற்ற தனியார் நிறுவன அதிகாரி தனது தனது அறுபதை நெருங்கும் வயதில் தனது மூன்றாம் கால் என சொல்லப்படும் ஊன்று கோலை எப்படி பயன்படுத்துவார் என்பற்கு இந்தப்படம் ஒரு சாட்சி... ஒரு பணக்கார கப்பல் முதலாளி ஊன்றுகோலை எப்படி பயன்படுத்துவார் என்பற்கு ராஜபார்ட் ரங்கதுரையில் வரும் ஒரு காட்சி சாட்சி..
சிறந்த உதாரணங்கள்... ஆலயமணியில் சட்டி சுட்டதடா பாடலில் இரண்டு ஸ்டிக்களுடன் பாடல்... பாலும் பழமும் படத்தில் போனால் போகட்டும் போடா பாடலில் ஒரு ஸ்டிக்.. இப்படி பாடல் காட்சிகளில் கூட அவர் ஸோலோவாக இல்லாமல் ஸ்டிக்குடன் நடித்திருப்பார்.. தன் கையில் உள்ள ஸ்டிக்கையும் நடிக்க வைத்திருப்பார்...!
அவர்தான் சிவாஜி...! அவர்தான் ஒரு எக்ஸ்ட்ராடினரி நடிகர்...!!

No comments:

Post a Comment