Monday 25 February 2019

சொர்க்கமும் நரகமும்

சொர்க்கமும் நரகமும் ❤️
புத்தர் தன் சீடர்களிடம் சொல்வார்," மெல்ல நடங்கள். ஒவ்வோர் அடியையும் விழிப்போடு வையுங்கள். " நீங்கள் ஒவ்வோர் அடியையும் விழிப்போடு எடுத்து வைத்தால் , நீங்கள் மெதுவாக நடந்தே ஆக வேண்டும்.நீங்கள் ஓடினால், அவசரப் பட்டால் , நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள மறந்து போவீர்கள். அதனால் புத்தர் மெதுவாக நடக்கிறார்.
மிக மெதுவாக நடக்க முயலுங்கள். பிறகு நீங்கள் வியந்து போவீர்கள். ஒரு புதிய தரமான விழிப்பு உடலில் ஏற்படத் துவங்கும். மெல்ல சாப்பிடுங்கள். நீங்கள் வியந்து போவீர்கள். அதில் ஒரு பெரிய ஓய்வு இருக்கிறது. எல்லாவற்றையும் மெதுவாக செய்யுங்கள். முதலில் உடல் முற்றிலும் ஓய்வு பெற வேண்டும், ஒரு சின்ன குழந்தையை போல். பிறகு தான் மனதோடு துவக்க வேண்டும்.
உங்கள் மதம் என்று அழைக்கப் படுபவை யெல்லாம் உங்களைப் பதற்றப் படுத்தி இருக்கின்றன. காரணம் அவை உங்களுக்குள் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தி இருக்கின்றன. என்னுடைய முயற்சி இங்கே உங்கள் குற்ற உணர்ச்சியையும், பயத்தையும் தூக்கிப் போடுவது தான். நான் சொல்ல விரும்புவது எல்லாம் நரகமென்று ஒன்றில்லை, சொர்க்கமென்று ஒன்றில்லை என்பதைத் தான். அதனால் நரகத்தைக் கண்டு அஞ்சாதீர்கள். சொர்க்கத்திற்காக பேராசைப் படாதீர்கள். எல்லாமே இந்த தருணத்தில் இருக்கிறது. இந்தத் தருணத்தை நீங்கள் நரகமாகவோ, சொர்க்கமாகவோ மாற்ற முடியும். அது நிச்சயம் சாத்தியம். ஆனால் வேறு எங்கும் சொர்க்கம் என்றோ , நரகம் என்றோ இல்லை. நீங்கள் பதற்றத்தோடு இருக்கும் போது அது நரகம். நீங்கள் ஓய்வாக இருக்கும் போது அது சொர்க்கம். முழு ஓய்வு தான் விண்ணுலகம்.
❤️ ஓஷோ ❤️

Sunday 24 February 2019

இல்லற_நீதி

இல்லற_நீதி
Image may contain: one or more people, people standing and text
கணவன்_மனைவிக்கு கட்டாயம் அவசியமான பதிவு...!
தகராறு இல்லாத குடும்பம் இல்லை.. வீட்டுக்கு வீடு வாசப் படி.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை..
யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால் அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை..
ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலையென்றால்
பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை..
காதலித்து கல்யாணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போட்டதுண்டு
பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் பேரன்பு பெருக்கெடுப்பதுண்டு
அன்பிருந்தும் பணமிருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களும் உண்டு
சந்ததி இருக்கும் குடும்பங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டபடுவதுண்டு
அமெரிக்காவில் பகல் என்றால் இந்தியாவில் இருட்டு
பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை
ஆக அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும் தான் கஷ்டப் படுவது போலவும் பிரமை வேண்டாம்
கணவர் வீட்டுக்கு வரும் போதே பிர்ச்சனையோடு வரக் கூடாது
மனைவியும் அவரை கேள்விகுறிகளோடே வர வேற்க கூடாது..
கணவர் எதையும் அடித்து சொல்ல கூடாது
மனைவி எதையும் இடித்து பேச கூடாது
"நீங்க வாங்கின காய்கறி மகா மட்டம் "என்று மனைவி சொன்னால்.."எந்த நாய் சொன்னது?" என்று கணவன் பதில் சொன்னால் தான் பிரச்சனை.. தன் தவறை ஒத்துக் கொண்டு.."சரி இனி பார்த்து வாங்குகிறேன்" என்று சொல்லி விட்டால் முடிந்தது
"நீ செய்த சாப்பாடு சகிக்கலை" என்று கணவன் சொன்னால்..
"எனக்கு தெரிந்த லட்சணம் இவ்ளோதான் ..நீங்க உங்க அம்மா வீட்டுக்கு போய் சாப்பிடுங்க" என்று மனைவி பதில் சொன்னால் தான் பூகம்பம் ஆரம்பம்.."இன்னிக்கு உடம்பு முடில..நாளைக்கு நன்றாக சமைக்கிறேன்" என்று சொன்னால் அன்பு வெள்ளம் தான்...
மனைவி புது புடவை உடுத்தினால் "இந்த புடவை நன்றாக இருக்கு.. அழகா இருக்கே" என்று சொல்லணும்
கணவன் வெளியிலிருந்து வரும் போது" ஏன் இப்படி வியர்த்திருக்கிறது.. எளச்சு போய்ட்டீங்களே" என்று அக்கறையோடு மனைவியும் விசாரிக்க வேண்டும்..
மனைவியைக் கணவன் "அம்மா" என்று அழைக்கணும்
கணவனை மனைவி "அப்பா" என்று அழைக்கணும்
தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால் கணவனுக்கு நிம்மதி
தன் தாய் வீட்டை கணவன் பெருமையாக கூறினால் மனைவிக்கு நிம்மதி
BedRoom இல் Board Room இல் பேசுவது போல் பேசக் கூடாது..
பகலில் நடக்கும் எந்த வாக்குவாதமும் அன்று இரவிற்குள் சரி செய்யப் பட்டு சேர்ந்து விட வேண்டும்..
முக்கியமாக கணவனும் மனைவியும் சிந்திக்க வேண்டிய விஷயம்.. வார்த்தைகளில் ஜாக்கிரதை
எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் சொல்லைக் கொட்டி விட்டால் பொறுக்க முடியாது
முள்ளால குத்தின காயம் ஆறிடும்
சொல்லால குத்தினா ஆறவே ஆறாது..
ஒருவரையொருவர் அனுசரித்து போனால் உலகையே தனக்குள் அடக்கி கொள்ள முடியும்
இரண்டு கைத் தட்டினால் தான் ஓசை என்பார்கள்.. ஒருவர் கோபம் கொள்ளும் போது இன்னொருவர் விட்டு கொடுக்க வேண்டும்..
"பெண்டாட்டி தானே சொல்லிவிட்டு போகிறாள் ".என்றும்.."கணவன் தானே ..பேசட்டும்" என்றும் விட்டுக் கொடுத்து விட்டால் உள்ளம் துடிக்காது..உடல் வலிக்காது..ஊர் சிரிக்காது..
வாழ்க_இல்லறம்

தற்கொலை செய்ய நினைப்பவர் ஒரு முறை பாருங்கள் தன்னம்பிக்கை

📚#தற்கொலை செய்ய நினைப்பவர் ஒரு முறை பாருங்கள் தன்னம்பிக்கை📚
📖
200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ”யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.
கூடியிருந்த அனைவரும் தமக்குப் பிடிக்குமென கையைத் தூக்கினர்.
பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன். ஆனால், அதற்கு முன்” எனச்சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார்.
பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?”
என்றார்கள்.
அனைவரும் கையைத் தூக்கினர். அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்.
அனைவரும் இப்போதும் கைகளைத் தூக்கினர்.
அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை
. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும், தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் .
நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை.
நீங்கள் தனித்துவமானவர்.
இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும்.
அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை.
ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்...
ஏதற்கும் தற்கொலை ￰முடிவில்லை.
K.MANOJ

#உலகிலேயே_அதிக_அறிவுத்திறன்_கொண்ட_தமிழகச்_சிறுமி….!!


உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…!! தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர்.
அதுவும் 24 மணிநேரத்தில். தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார். தன் 11வயதில், 25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு Final Year மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் (HOD’s), முதல்வர்களுக்கு Seminar வகுப்புகளை நடத்தியவர்.
இவரது திறமையை அறிந்த Indian Overseas Bank நிர்வாகம் சர்வதேச தலைமையகத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த போது விசாலினிக்கு வயது 12 தான்.
அங்கு உலக அளவிலான IOB GM தலைமையிலான IT Professional களுக்கு 1/2 மணி நேரம் வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். ஆனால் விசாலினியோ 2 மணி நேரம் பாடம் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தாள்.தன் சொந்த முயற்சியால் மட்டுமே, உலகின் பல்வேறு நாட்டு அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற விசாலினி,
ஓர் இந்தியர்.
அதுவும் தமிழர். ஆம்! உண்மை தான். தமிழனின் மூளை தரணியையே வெல்கிறது
HCL நிறுவனம் The Pride of India – Visalini என பாராட்டிய போது அவருக்கு வயது 11.TEDx சர்வதேச மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய விசாலினி 11 வயதில், The Youngest TEDx Speaker என்ற பட்டமும் பெற்றார். London, World Records University, Dean தாமஸ் பெய்னிடம் பாராட்டு பெற்றார் விசாலினி.
Times Now English News நிறுவனமோ ஒருபடி மேலாக விசாலினியின் வீட்டிற்கே வந்து 2 நாட்கள் தங்கி அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, The Amazing Indian – Visalini என அரை மணி நேர Documentry படத்தை ஒளிபரப்பியது.
நியூ சவுத் வேல்ஸை தலைமையிடமாகக் கொண்டு, காமன் வெல்த் ஆப் ஆஸ்திரேலியாவால் தொடங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் முன்னணிச் செய்தி நிறுவனமான SBS ஆஸ்திரேலியா.
உலகின் 74 மொழிகளில் 174 நாடுகளில் விசாலினியின் அரைமணி நேர பேட்டியை ஒலிபரப்பி கௌரவப் படுத்திய போது விசாலினிக்கு
வயது 13 தான்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் விசாலினியின் தந்தைக்கு வந்தது
ஒரு தொலைபேசி அழைப்பு … எமது நாட்டு கௌரவ பிரதமர் உங்களது மகளை சந்திக்க விரும்புகிறார் என்று.
பிரதமரைக் கண்ட விசாலினி, எழுந்து நின்று தமிழில் வணக்கம் என்று சொல்ல, பதிலுக்கு தமிழிலேயே வணக்கம்.என்றார் பிரதமர் மோடி.
விசாலினியுடன் உரையாடிய போது, இந்தச் சிறுவயதில் நீ செய்துள்ள சாதனைகளே, இந்திய நாட்டிற்கான சேவைதான் என்று நெகிழ்ந்து பாராட்டினார்.*
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கருணாகரனோ, விசாலினி இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் முக்கியப் பங்காற்றுவார் என்று பெருமை பொங்க வாழ்த்தினார்.
உலக அளவில் பாராட்டு பெற்றுள்ள விசாலினிக்கு, தான் இன்னும் தமிழக முதல்வரின் பாராட்டைப் பெற வில்லையே என்பது மிகப்பெரிய ஆதங்கம்.
உங்களுக்குத் தெரியுமா, சாதாரண மனிதர்களின் அறிவுத்திறன் 90 முதல் 110 வரை இருக்கும். கணனி ஜாம்பவான் பில்கேட்ஸுக்கு IQ level 160. ஆனால் விசாலினியின் IQ level 225. உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டவர் என்ற உலக சாதனை படைத்த விசாலினி,
நம் இந்தியாவின் தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். உலகிலேயே இல்லை இப்படி ஒரு குழந்தை என்று சாதித்துக் கொண்டிருக்கும் விசாலினியின் தந்தை ஓர் எலக்ட்ரீசியன். தாத்தாவோ வெல்டராக இருந்து, பின் தமிழாசிரியராக ஆனவர்.
இந்தத் தமிழ்மகள் பெருமையை தரணி எங்கும் பறைசாற்றுங்கள்.

மனதை அனுபவி

மனதை அனுபவி நான் எனது மனதுடன் சலித்து போய் விட்டேன். தியானம் செய்வதற்கும், விழிப்புணர்வுடன் இருப்பதற்கும் எல்லாமும் செய்து பார்த்து விட்டேன். ஆனால் அதை என்னால் உணரவே முடிய வில்லை. முதல்படி – மனதை நிறுத்த முயற்சி செய்யாதே. சலனம் அதன் இயல்பு. அதை நிறுத்த முயற்சி செய்தால் உனக்கு பைத்தியம் பிடித்து விடும். ஒரு மரம் இலை விடுவதை நிறுத்துவதைப் போன்றது இது.. மரத்துக்கு பைத்தியம் பிடித்துவிடும். மரத்துக்கு இலைதான் இயல்பு. நீ மனவயப்பட்ட ஒருவன், நீ இதயப்பூர்வமான மனிதனாக மாற முயற்சி செய்தால் தேவையில்லாமல் உனக்கு நீயே தொந்தரவுகளை உருவாக்கிக் கொள்வாய். ஏனெனில் மனதிலிருந்து நகர்ந்து செல்வதற்கு வழிகள் உள்ளன. உன்னை இதயபூர்வமான ஒருவனாக கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையில்லை. அது உன்னுடைய இயல்புக்கு மாறானது. உனது இயல்புடன் ஒன்றிவிடுவதற்கு, உனது இயல்பை பின்பற்றுவதற்கு கற்றுக் கொள். இயல்பாக இருப்பதுதான் மத்தன்மை. உனது இயல்புடன் லயப்படுவதுதான் மிக முக்கியமானதேவை. அதனால் உனது சிந்தனையை நிறுத்த முயற்சி செய்யாதே. அது மிகவும் சரியானதே. இரண்டாவது படி – மனம் தனது வேலையை செய்வதை அனுபவி. மனது வேலை செய்வதை நிறுத்துவதற்கு முயலாதே. அதை அனுபவி. அதனுடன் விளையாடு. அது மிக அழகான விளையாட்டு. அதனுடன் விளையாடு, அதை அனுபவி, அதை விரும்பு, அதைப் பற்றி விழிப்புடன் இரு, அதை பற்றி கவனம் கொள். மனதின் எண்ண ஓட்டத்தை பார். அவை எப்படி ஓடுகிறது, எப்படி ஒன்று ஒன்றுக்கு அழைத்துச் செல்கிறது என்று பார். ஒன்று ஒன்றை எப்படி இழுக்கிறது என்று பார். அது ஒரு அதிசயம். ஒரு சிறிய எண்ணம் எங்கோ இழுத்துச் செல்வதை கவனி. ஆரம்பித்த இடத்துக்கும், முடியும் இடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததை பார். ஒரு நாய் குரைக்கும், உனது எண்ண ஓட்டம் தூண்டப்படுகிறது. நாய் மறக்கப்பட்டு விடுகிறது, அழகான நாய் ஒன்றை வைத்திருக்கும் உனது நண்பனின் ஞாபகம் வருகிறது. பின் நீ அங்கு இல்லை. நண்பன் மறந்து போய் அவனின் அழகான மனைவி நினைவுக்கு வருகிறாள், பின் வேறொரு பெண்……. நீ எங்கே போய் முடியப் போகிறாய் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அது ஒரு நாய் குரைப்பதில் ஆரம்பிக்கிறது. கவனி, எண்ணங்களின் தொடர்பை பார். எண்ணங்களின் சங்கிலியை பார். எளிதாக எடுத்துக் கொள், ஓய்வாக இரு. விழிப்புணர்வு உன்னுள் வரும், அது மறைமுகமாக வரும். விழிப்புடன் இருப்பது ஒரு முயற்சி அல்ல. அதைத்தான் நீ செய்து கொண்டிருக்கிறாய். விழிப்புணர்வு அடைய முயற்சி செய்து கொண்டிருக்கிறாய். உனது மனம் உன்னை திசை திருப்புகிறது, அதனால் உனக்கு கோபம் வருகிறது. இந்த கேடுகெட்ட மனம் தொடர்ந்து உளறிக் கொண்டேயிருப்பதை நீ உணர்கிறாய். நீ அமைதியாக இருக்க முயற்சி செய்கிறாய், ஆனால் இந்த மனம் அதற்கு அனுமதிப்பதேயில்லை. அதனால் நீ மனதிடம் ஆத்திரம் கொள்கிறாய். அது நல்லதல்ல. இது உன்னை இரண்டாக பிரித்துவிடும். நீயும் உன் மனமும் என இரண்டாக பிரிந்து இருப்பீர்கள். எல்லா பிளவுகளும் தற்கொலைக்கான முயற்சியே. ஏனெனில் உனது சக்தி தேவையின்றி வீணாகிறது. நம்முடன் நாமே சண்டையிட்டுக் கொள்ளும் அளவு நம்மிடம் சக்தி இல்லை. அதே சக்தியை நாம் சந்தோஷத்துக்கு செலவிட வேண்டும். சண்டையிடுதல் உன்னை அழித்துவிடும். சண்டையிட வேண்டிய அவசியம் இல்லை – அன்பு செய். எல்லா அழிவு சக்திகளும் அன்பு சக்தியாக மாற வேண்டும். அனுபவித்துப்பார் விரைவில் எல்லா விஷயங்களும் மாற ஆரம்பிக்கும். ஓஷோ

Thursday 21 February 2019

Blind

ஒருவன் மிகவும் அழகான ஒரு பெண்ணை மணமுடித்தான். அவள் மீது அளவு கடந்த பாசத்தையும் காட்டினான்.
இவ்வாறிருக்க ஒரு நாள் அவள் ஒரு தோல் நோய்க்கு ஆளானாள். அதனால் அவளது அழகு படிப்படியாக குறைவடையத் தொடங்கியது. அவ்வேளை அவளது கணவன் ஒரு பயணமொன்றை மேற்கொண்டிருந்தான்.
அவன் திரும்பி வரும் போது ஒரு விபத்துக்குள்ளாகி அவனது கண் பார்வையை இழந்தான்.
ஆனால் எவ்வித பிரச்சினையும் இன்றி அவர்களது மண வாழ்வு தொடர்ந்தது.
நாற்கள் செல்லச் செல்ல மனைவி தனது அழகும் படிப்படியாக குறைவடைந்து செல்வதை உணர்ந்தாள். ஆனால் குருடனான கணவனுக்கோ இது ஒன்றும் தெரியாது. இருவரும் அவர்களிருவரினதும் அன்பில் எவ்வித வேறுபாடும் மாற்றமும் காட்டாது வாழ்ந்தனர்.
அவன் அவளை அதிகமாக நேசித்தான் அவளுடன் அன்பாக நடந்து கொண்டான். அவளும் அவனுடன் அவ்வாறு தான் இருந்தாள். அப்படியிருக்க ஒரு நாள் அவள் இறந்துவிட்டாள்.
அவளது மரணம் அவனை மிகவும் வேதனைப்படுத்தியது.
தன் அன்பு மனைவியின் இறுதி கிரிகைகளை நிறைவேற்றி அவளை அடக்கம் செய்த பின் அவன் தனி மனிதனாக அவ்விடத்தை விட்டு வீடு திரும்பினான்.
அவன் திரும்பி வரும் போது அவனுக்கு பின்னாலிருந்து ஒரு மனிதர் அவனை அழைத்து
"எவ்வாறு நீ தனியே நடந்து செல்கிறாய்? இது வரைக்காலமும் நீ உன் மனைவியின் உதவியுடன் அல்லவா நடந்தாய்? எனக் கேட்டான்.
அதற்கு அவன்
நான் குருடன் இல்லை. எனது மனைவி நோய் வாய்பட்டுள்ளாள் என்பதை நான் அறிந்தால் அவள் மனம் காயப்படக் கூடும் என்பதால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்தேன்.
அவள் சிறந்ததொரு மனைவியாக இருந்தாள். அவள் பின்னடைவதற்கு ஒரு காரணமாக இருக்க பயப்பட்டேன்.
அதனால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்து இதற்கு முன் எவ்வளவு பாசமாக நடந்து கொண்டேனோ அவ்வாறே இது வரையும் அவளுடன் வாழ்ந்தேன்" எனப் பதிலளித்தான்.
பிறரின் குறைகள் எங்கள் கண்களுக்கு தென்படாமல் இருக்க சில வேளைகளில் நாமும் குருடன் போன்று பாசாங்கு காட்டுவது அவசியம்...
- See more at: http://www.manithan.com/news/20170414126403#sthash.RCNs3W8h.dpuf

teacher in Austrela Yasotha

Wednesday 20 February 2019

Converted Hindu girl burnt alive by Hindu lunatics

இந்து இளம் பெண் உயிரோடு தீவைத்து எரிப்பு!

கிறிஸ்தவ சபைகளுக்கு சென்ற‌தாலே இந்து இளம் பெண் உயிரோடு தீவைத்து எரிப்பு! மோடியின் இந்துத்துவ வெறியர்களின் கொடூரம்!
https://youtu.be/-f87pySMXR8

Tuesday 19 February 2019

Shelli Bharathy

நீ பூச்சிகளை கவனித்திருக்கிறாயா

நீ பூச்சிகளை கவனித்திருக்கிறாயா 
நீ பூச்சிகளை கவனித்திருக்கிறாயா நீ ஒரு பூச்சியை வெளியே தள்ளினால், உடனே அது திரும்பி உன்னை நோக்கியே ஓடி வரும். அது ஒரு மிக வித்தியாதமான செயல். இந்த முழு உலகமும் அதற்கு இருக்க அது வேறு எங்கும் போகாது. அது சவால் விடுகிறது. யார் நீ ஒரு சிறு பூச்சி, கரப்பான் பூச்சி அதை தள்ளி விட்டு விட்டு என்ன நடக்கிறது என்று பார். அது உடனே மிகுந்த வேகத்துடன் திரும்பி வரும்.
உன்னுடைய மனதும் இதையேதான் செய்யும். உண்மையில் கரப்பான்பூச்சியின் மனமும் உன்னுடைய மனமும் வேறு வேறல்ல. அவற்றின் அடிப்படை கட்டமைப்பு ஒன்றுதான். அவற்றின் மனம் ஒரு சிறிய மாடல் போன்றது, சிறிய அளவிலானது. உன்னுடையது கொஞ்சம் பெரியது. ஆனால் உன்னிடமுள்ள அதே திறமைகள் அவற்றிடமும் உள்ளது.
உன்னுடைய மனதிலுள்ள விஷயத்தை எடுத்து வெளியே வீச முயற்சி செய்யும் போது, அது திரும்பவும் உன்னிடமே வேகமாக ஓடி வரும். நீ முயற்சி செய்து பார். குரங்கைப் பற்றி எதுவும் நினைக்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டு ஐந்து நிமிடங்கள் உட்கார்ந்து என்ன நடக்கிறதென்று பார். உலகிலுள்ள அத்தனை குரங்குகளுக்கும் உன் மேல் ஆர்வம் வரும். நான் குரங்குகளைப் பற்றி நினைக்கப்போவதில்லை என்று நீ அவற்றிடம் சொல்ல வேண்டியதில்லை. உன் அறையில் அந்த எண்ணத்துடன் உட்கார்ந்தாலே போதும். அது எல்லா குரங்குகளுக்கும் பரப்பப் பட்டு விடும். நீ எங்கே
என்ன செய்து கொண்டிருந்தாலும் அவை அங்கே இருக்கும். ஐந்து நிமிடங்கள் முடிந்துவிட்டது. இனி நீ இங்கே இருக்க விரும்பினாலும் சரி, போக விரும்பினாலும் சரி, அது உன்னை பொறுத்தது என்று நீ கூறும் அந்த கணமே அவை யாவும் போய்விடும். ஆனால் நீ போ என்று சொல்லி அவை போவது அவற்றின் பெருமைக்கு இழுக்கு. ஒவ்வொரு எண்ணமும் ஒவ்வொரு உணர்ச்சியும் ஒவ்வொரு உணர்வும் அதற்கான தான் என்ற ஆணவத்தைக் கொண்டுள்ளது போலத் தோன்றுகிறது. அதனால் அதை எதிர்த்து போரிடும் மக்கள் யாரும் வெற்றி பெறுவதில்லை. சண்டையிடாதே, வெறுமனே கவனி. அவை அங்கிருப்பதால் எந்த தீங்கும் இல்லை.
நீ உன்னை கோபத்துடன் அடையாளப்படுத்திக் கொள்ளாத வரை தனிபட்ட கோபம் மட்டும் எந்த தீமையையும் செய்து விட முடியாது. நீ அதனுடன் அடையாளப்படுத்திக் கொண்டு விட்டால் பின் நீ மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய எதையாவது செய்யக் கூடும். கோபம் மட்டும் எதையும் செய்துவிட முடியாது. அது சக்தியற்றது, அது வெறுமனே ஒரு எண்ணம்தான். அது அங்கேயே இருக்கட்டும், கவனி, மகிழ்வுடன் கவனி. உன்னுடைய பங்களிப்பு இல்லாமல் அதனால் எத்தனை நேரம் இருக்க முடிகிறது என்று பார். ஒரு சில வினாடிகளுக்கு மேல் அதனால் தாக்கு பிடிக்க முடியாது. அது போய் விடும்.
தியானம் ஒரு கவனமாக மலர வேண்டும், பின் ஒரு நாளின் 24 மணி நேரமும் கவனிப்பது சாத்தியமாகும். தூங்கப் போகும் போது கூட கவனி. தூக்கம் உன்னை ஆட் கொள்ளும் கடைசி விநாடி வரை கவனமாகப் பார். இருள் அடர்ந்து கொண்டே போகும், உடல் தளர்வடையும், நீ விழிப்பிலிருந்து தூக்கத்தினுள் விழும் ஒரு கட்டம் வரும் அந்த கணம் வரை பார். பின் காலையில் முதல் விஷயமாக,
தூக்கத்திலிருந்து எழுந்து விட்டோம் என நீ உணர்ந்த கணமே கவனிக்க ஆரம்பித்து விடு. பின் விரைவிலேயே தூக்கத்தில் நீ இருக்கும் போது கூட கவனிக்க ஆரம்பித்து விடுவாய்.
கவனித்துப் பாரத்துக் கொண்டிருப்பது என்பது இரவும் பகலும் உன்னுள் எரிந்து கொண்டிருக்கும் ஒரு தீபமாகட்டும்.
இதுதான் உண்மையான ஆணித்தரமான தியானமாகும். மற்ற எல்லாமே தியானம் என்ற பெயரில், நீ ஏதோ ஆன்மீக சம்பந்தமானது செய்து கொண்டிருக்கிறாய் என உன்னை ஏமாற்றும், நீ விளையாட கொடுக்கப்பட்ட ஒரு பொம்மைதான். இந்த உண்மையான தியானத்தில் நீ தவிர்க்க இயலாததையும் தாண்டி வந்து விடுவாய். பொய்யான யாவும் காணாமல் போய்விடும்.
ஆனால் பிரபஞ்சத்தில் உள்ள யாவும் பொய்யானது ல்ல. எது பொய்யானது இல்லையோ அது தவிர்க்க இயலாதது. தவிர்க்க இயலாததை நீ என்ன செய்யப் போகிறாய். நீ அதைப் பற்றி நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாய். அந்த தவிர்க்க இயலாதது தான் தியானம்.
தவிர்க்க முடியாததை பார்த்துக் கொண்டே இருந்தாயானால் பொய்யானது தானாகவே கரைந்து போய் விடுவதை தெளிவாக காண்பாய். உனது பொய்யான கனவுகளின், ஆசை மேகத்தின் பின்னால் மறைந்து இருந்த உண்மையான விஷயம் இப்போது தெளிவாக, மேலும் அதிக தெளிவுடன் உன் முன் நிற்பதை காண்பாய்.

Friday 15 February 2019

தாரா வளர்ப்பில் சாதிக்கும் இளம்பெண்

தாரா வளர்ப்பில் சாதிக்கும் இளம்பெண்
                                                 யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பை சேர்ந்த இளம் பெண்ணான ஸ்ராலினி ராஜேந்திரம் இன்று ஒரு வெற்றிகரமான தொழில் முயற்சியாளராக விளங்குகிறார். இதன்மூலம் எம் பெண்க ளுக்கே ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். வியாபார முகாமைத்துவம் படித்துள்ள இவர் இன்று சுவடிகள் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஆக பணியாற்றுகிறார். அதேவேளை, சீர் பயோ (ளுநநச டீழை) என்கிற நிறுவனத்தை நிறுவி அதனூடாக தாரா வளர்ப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார்.

இன்று 300 க்கும் மேற்பட்டதாராக்களைவளர்ந்துவரும் ஸ்ராலினியுடன் பேசியபோத
2016 ஆம் ஆண்டு சித்திரை மாதம் மலேசியப் பயணத்தின் போது தான் என் தொழில் முயற்சிக்கான முதல் விதை நாட்டப்பட்டது. அங்கு பல புதிய வர்த்தக முயற்சிகள் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. வெற்றிகரமான முதலீட்டாளர்களையும் சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தது. இங்கே எப்படி பரவலாக கோழி இறைச்சி விற்கப்படுகிறதோ அதே போல் அங்கே உள்ள பெரும்பாலான கடைகளில் தாரா இறைச்சி விற்கப் படுகிறது. தாரா இறைச்சியின் சுவையும், போசணைப் பெறுமானமும் நன்றாகவே இருந்தன. தாரா இறைச்சி ஏன் எங்கள் பகுதிகளில் இல்லை என எனக்குள்ளே கேள்வி தோன்றியது. அதனை ஏன் சிறு தொழில் முயற் சியாக ஆரம்பிக்கக் கூடாது என்று யோசித்தேன்.
எனக்கு சுவடிகள் நிறுவனத்தை சேர்ந்த வைத்தியர் நடராஜா பிரபுவும், கணேசமூர்த்தி ஸ்ரீபவனும் சரியானதொரு வழிகாட்டிகளாக இருந்தா ர்கள். அவர்களின் ஆலோசனையின் பேரில் 2016 ஆனி மாதம் ஐந்து சோடி தாராக்களுடன் தாராப் பண்ணையை கொக்குவில் பொற்பதி பிரதேசத்தில் ஆரம்பித்தேன். எனக்கு இந்த தொழில் முயற்சி பெரும் சவால் நிறைந்ததாகவும் இருந்தது. ஏனெனில், எமது மக்கள் தாரா இறை ச்சி, முட்டைகளை பெரும்பாலும் உணவுத் தேவைக்கு பயன்படுத்தாத சூழலே இருந்தது. மக்களுக்கு தாரா இறைச்சி மற்றும் முட்டை நல்ல போசனைப் பெறுமானங்கள் நிறைந்தது என விழிப்பூட்ட துண்டுப் பிரசு ரங்கள் மூலம் முயற்சித்தோம். அது நல்ல பலனை அளித்தது. கிட்டுப் பூங்காவில் நடந்த சிறுகைத்தொழில் கண்காட்சியிலும் காட்சிக் கூட மொன்றை அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்ட முடிந்தது.
இப்போது ஓரளவு தாரா இறைச்சி நுகர்வு எம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. தாரா முட்டைகளை அழகுசாதன தேவைக்காக இங்கே அதிகம் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக தாராக்கள் குறித்து எம்மக்களிடையே சில கருத்துக்கள் உண்டு. ஒன்று, தாரா முட்டை சரியான வெடுக்கு என்று சொல்வார்கள். அவர்கள் சொல்கிற அளவுக்கு தாரா முட்டை வெடுக்கு கிடையாது.
இரண்டாவது, தாராக்கள் வளர்ப்பதற்கு குளம் அல்லது நீர்நிலை ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும் என்பது. நான் கோழிக் கூடுகள் போன்ற நிலக் கூடுகளுக்குள் வைத்து தான் கடந்த ஒன்றரை வருடங்களாக தாரா வளர்த்து வருகிறேன். எந்த பிரச்சினையும் இல்லாமல் வளர்ந்து வருகிறது. நீர்நிலை அவசியமல்ல. இருந்தால் நல்லது.
மூன்றாவது தாராக்களுக்கு சாப்பாட்டு செலவு கூடுதலாக இருக்கும் என்பது. நான் பெரிதாக எந்த செலவும் இல்லாமல் தான் தாரா வளர்த்து வருகிறேன். மூன்று திருமண மண்டபங்களில் ஓடர் கொடுத்துள்ளேன். அங்கே வீணாகும் சாப்பாடுகளை வாங்கி வந்து தான் தாராக்களுக்கு உணவாக கொடுக்கிறேன். இது தவிர அசோலாக்களையும், மண்புழுக்களையும் வளர்த்து தாராக்களுக்கு உணவாக்கி வருகிறேன்.
தாராக்களை மூன்று நிலைகளில் விற்பனை செய்து வருகிறேன். தாராக் குஞ்சு ஒருசோடி 450 ரூபாய்க்கும், 3 மாதம் நிரம்பிய தாராக்கள் ஒரு சோடி - 1400 ரூபாய்க்கும், பெரிய தாராக்கள் 3500 ரூபாய்க்கும் விற்று வருகிறேன். என் போன்ற தாரா வளர்க்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு தாரா வளர்ப்பு முறைகளை சொல்லிக் கொடுக்கவும் ஆர்வமாக இருக்கிறேன். ஏற்கனவே சில இடங்களில் என்னிடம் தாரா வாங்கி வளர்ப்பை சிலர் ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கும் சந்தை வாய்ப்பை நானே ஏற்படுத்திக் கொடுக்கிறேன்.
தாரா வளர்ப்பு மட்டுமல்ல தாரா முட்டை மா என்கிற சத்து மாவையும் உற்பத்தி செய்து வருகிறேன். வல்லாரையும் வளர்த்து விற்பனை செய்து வருகிறேன். அத்தோடு கத்தாழை நாற்றுக்களையும் விற்பனை செய்கிறேன். முருங்கை கன்றுகளை வளர்க்கும் நோக்கமும் எதிர்காலத்தில் இருக்கிறது. இவையெல்லாவற்றையும் தாண்டி சுவடி அமைப்பின் கல்வி நிறுவனமூடாக சின்னம் சிறார்களுக்கு ஆங்கில மொழியையும் கற்பித்து வருகிறேன், என்றார்.
இன்று வேலையில்லா பட்டதாரிகள் பலர் அரசாங்க வேலைக்கு மட்டுமே விண்ணப்பித்துவிட்டு காத்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் முற்றுமுழுதாக தன் உழைப்பை நம்பி புதிய முயற்சிகளை செய்யும் இளையோரை ஊக்குவிக்க வேண்டியது அனைவரதும் கடமையாகும். வறுமையான தச்சுத் தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்த ஸ்ராலினி இன்று இளம் வயதிலேயே இந்த நிலைக்கு முன்னேறி இருப்பது ஏனையவர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.

Saturday 9 February 2019

மன்னார் நலன்புரிச்சங்க கலந்துறையாடல்!

மன்னார் நலன்புரிச்சங்க கலந்துறையாடல்!

                                                                        மன்னார் நலன்புரிச்சங்கத்தின் அவசர கலந்துறையாடல் 2019 மாசி 9 திகதி மாலை 06.00 மணியளவில், Shultun மியுஸியத்தில் செயலாளரினால் கூட்டப்பட்டது, அண்மைக்காலமாக மன்னார் நலன் புரிச்சங்க அங்கத்தவர்கள், நிர்வாகிகள்  செயல்திறன் அற்று செயல்படுவது குறித்து ஆராய்வதற்காக கூட்டப்படது, ஆரம் பத்தில் சிறிய செபத்துடன் ஆரம்பமான இக்கலந்துறையாடலில், கடந்த வாரம் விளையாட்டு கழகம் நடாத்திய போட்டியில், உணவகம் நடத்துவ தில் பாரிய சிக்கல் ஏன் உருவானது என சபையில் அதிருப்திகள் தெரிவி க்கப்பட்டது, 

                                                 அதற்கான பின்னடைவுக்கு குணா தானே காரனம் என்பதை ஒத்துக்கொண்டு, வருத்தம் தெரிவித்தார், பின்னர் பொருளா ளர் வங்கி கணக்கை ஆய்வு செய்து,  பணவரவு ஏதாவது வந்ததா? அமல்ராஜ் கேள்வி கேட்டு, பொருளாள்ர் தன் கடமையில் இருந்து தவறுகி ன்றார் என சுட்டிக்காடினார், சென்ற விளையாடு போடியில் நடத்தப்பட்ட உணவகத்தில் இருந்து, 1000 குரோணர் கிடைக்கப்படது எனவும், விளை யாட்டு போட்டியில் வென்ற பரிசு தொகை 500 குரோணரும்  மன்னார் நலன்புரிக்கு கொடுக்கப்பட்டது என அவர் கூறினார்.எதிர்காலத்தில் கணக்கில் அதிக சிரத்தை எடுக்கும் படி, கண்டிப்பாக எடுத்து கூறப்ப ட்டது. 

                                                  ஏன் செயலாளர் அறிக்கை கொண்டுவரவில்லை என அமல்ராஜ் காரசாரமாக கேள்வி, எழுப்பினார், அத்ற்கு செயலாளர் இது கூட்டம் அல்ல எனவும், நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலைபற்றி ஆய்வு செய்வதற்கான ஒரு அவசர கலந்துறையாடல் என செயலாளரினல் விளக்கம் அளிக்கப்பட்டது, தொடர்ந்து நாம் இயங்கு வதா இல்லையா என இன்று முடிவு எடுக்கவேண்டும் என அமல்ராஜ் வாதிட்டபொழுது மீண்டும் புத்துணர்வுடன் செயல்படுவோம் 

                                                                    பொருளாளர், செயலாளர்கள் தனிப்பட்ட ரீதியில் பொறுப்புடையவர்கள் என்றாலும், நிர்வாகிகள் ஒன்றிணைந்து பொறுப்புகளை பகிர்ந்து செய்வதி னால், திறம்பட இயங்கமுடியும் என வும் எல்லோரும் எல்லாத்திற்கும் பொறுப்புடையவர்கள் என்ற கூட்டு பொறுப்பு தத்துவத்துடன் செயல்படுவோம் என ஜெயந்தன் சிறந்த கரு த்தை முன்வைத்தார், 

                                                       அது ஏற்றுக்கொள்லப்பட்டது, விரைவில் பொது கூட்டம்  எதிர்வரும் 27 திகதி ஏப்ரல் நடத்துவது எனவும், அதில், பதவிகள், பொறுப்புகள் பற்றி விவாதிக்கவேண்டும் எனவும், ஆவணி 24 திகதி அல்லது 31 திகதி ஒன்று கூடல் நடத்துவது பறிய முடிவுகள் எடுக்கபடவே ண்டும் என தெரிவிக்கப்பட்டது,  Whatsup குழு ஒன்று உருவாக்கி அதன் மூலம் தொடர்புகளை விரவு படுத்தவேண்டும் என்ற அறிவுரை செயலா ளருக்கு வழங்கப்பட்டது! 

                                         மன்னாரில் எமது அமைப்பின் வழியாக பயணைந்த பயணாளிகளிடம் இருந்து, ஒத்துழைப்பு கோரவேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்படது, அது தொடர்பாக மன்னாருக்கு உடனடியாக அழைப்பு விடுவிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது! கடந்தவருடம் நானாட்டான் பாடசாலை கட்டிடத்துக்கு தனிப்பட்ட ரீதியில் பணம் சேகரித்து கொடுக் கவேண்டும் என முடிவு செய்யப்பட்டது அதனை அதனை அனுப்பிவை க்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அத்துடன் கலந்துறையாடல் இனிதே கலைந்தது 

Friday 8 February 2019

இருக்குமிடத்தில் இருந்து கொண்டால், எல்லாம் செளக்கியமே!

இருக்குமிடத்தில் இருந்து கொண்டால், எல்லாம் செளக்கியமே! பேசாலைதாஸ்

வாழ்வில் சலித்துக்கொண்டவர்கள் நிறையப்பேரை நான் பார்த்திருக்கின்றேன், என்னடா வாழ்க்கை என்று நானும் கூட சலித்துக்கொண்டதுண்டு, இந்த சலிப்புத்தன்மை ஏற்படுவதற்கு அடிப்படைக்காரனம், நமது எண்ணத்தில் உண்டாகும் அதிருப்தி அற்றதன்மை தான். எமது எதிர்பார்ப்புகள் ஏக்கங்களாக மாறுகின்றபோது, வாழ்வில் சலிப்பு தன்மை ஏற்படுகின்றது,  கிடைக்கின்ற வாழ்வில் நிறைவுகண்டு, திருப்தியுடன் வாழப்பழகிவிட்டால், எந்தவித சலிப்புத்தன்மையும் வாழ்வில் ஏற்படாது, ஒரு காட்டில், காட்டு லீலிப்புஸ்பங்கள் அழகாக மலர்ந்தது, காடு முழுவதும் நறுமணமாய் கமழ்ந்தது,  இந்த காட்டு லீலிப்புஸ்பங்களுடன், காகம் ஒன்று, தவறான எண்ணங்களையும், சிந்தனைகளையும் விதைத்தது, காகம் அந்த அழகான காட்டு லீல்லிகளுக்கு சொன்னது, நீங்கள் எவ்வளவு அழகாக பூத்துக்குழுங்கி, நறுமணம் வீசுகின்றீர்கள், இருந்தும் அதனால் என்ன பயன்? வெறும் காட்டுக்குள்ளேயே உங்கள் அழகும், வாசமும் வீணாகிப்போகின்றது, காட்டில் பூத்து குழுங்குவதைவிட, இளவரசியின் தோட்டத்தில் நீங்கள் இருந்தால், உங்களின் செல்வாக்கும், மகிமையும் நாடே போற்றும் என்று சொன்னது அந்த காகம்,  அதுவரையும், மனதில் மகிழ்ச்சியோடு மலர்ந்த லீலி மலர்கள், மனம் வாடத்தோடங்கியது, சீக்கிரமாக மலர் வதனம் கெட்டு, கருகி, வெறும் குப்பை மேடாகிவிட்டது,  கொஞ்ச நாட்களித்து, அதே காகம் அந்த லீலி மலர்களிடம் கேட்டது,  உங்களுக்கு என்ன நடந்தது? ஏன் கருகி குப்பைமேடாகிவிட்டீர்கள் என்று கேட்டது, அதற்கு அந்த மலர்கள், சலிப்போடு சொன்னது, காட்டில் மலர்ந்து என்ன பயன்? அரசியின் அந்தப்புரத்தில் மலர்ந்தாளவு, மாட்சிமையோடும், மன மகிழ்வாய் வாழ்ந்து மலர்ந்திருக்கலாம், எல்லாம் விதிப்பயன் என சலிப்போடு சொன்ன மலர்கள், காகத்திடம் ஒரு உதவிகேட்டது, எங்கள் வாழ்வுமலர, மகிழ்சியாக வாழ, எங்களை உன் அலகினால் காவிக்கொண்டு, அரண்மனையின் அந்தபுரத்துக்கொள் போட்டுவிடு, நாங்கள் எப்படியோ பிழத்துக்கொள்வோம் என மன்றாட்டமாக கேட்டது, காகமும் அதற்கு ஒத்துக்கொண்டு, தன் அலகினால் அவைகள கொத்திக்கொண்டு, நீண்டதூரம், மலைகளை, கற்பாறைகளை கடந்து உயரப்பறந்தது. திடீரென்று காற்று உரமாக வீசவே, அதைசமாளிக்க முடியாத காகம், தன் அலகில், கொத்தியிருந்த, அந்த லீலிகிழங்குகளைகீழே வீசி எறிந்தது.அந்தோ பாவம்,அந்த லீலிக்கிழங்கள் ஒரு பாறையின் மீது விழுந்து நொருங்கியது! லீலிமலர்களின் நினைப்பே அதன் பிழைப்பைக்கெடுத்து, அன்பின் பேசாலைதாஸ்øøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøø

Thursday 7 February 2019

யாழ் உதைபந்தாட்ட வரலாற்றில் சிறப்பு மிக்க ஒரு வீரரை பற்றிய பதிவு


யாழ் உதைபந்தாட்ட வரலாற்றில் சிறப்பு மிக்க ஒரு வீரரை பற்றிய பதிவு
கட்டுரை: பாலசிங்கம் பிரான்சிஸ்
1943 இல் யாழப்பாணம் உதைபந்தாட்ட சங்கம் (லீக்) ஆரம்பிக்ப்பட்ட காலம் தொட்டு இன்று வரை உதைபந்தாட்டத்தில் பங்கு கொள்ளும் கழகங்களில் இரண்டு கழகங்களே உள்ளன. அதல் ஒன்று நாவாந்துறை சென் நீக்கிலஸ் உதைபந்தாட்ட கழகம். மற்றொண்டு பாசையு+ர் சென் அன்ரனிஸ் உதைபந்தாட்ட கழகமாகும். இக்கழகத்தில் நாவாந்துறை சென் நீக்கிலஸ் விளையாட்டு கழகத்தில் எனக்கு தெரிந்த காலத்தில் சிறந்த விளையாட்டு வீரராக விளங்கிய மதிப்புக்குரிய திரு. முத்துராசா ஜெயரெட்ணம் அவர்களைப்பற்றிய கட்டுரையை எழுதுவதில் பெருமை கொள்ளுகின்றேன்.
எனக்கு உதைபந்தாட்ட அறிவு தெரிய வந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் மிகச்சிறந்த கழகங்களாக நாவாந்துறை சென் நீக்கிலஸ் உதைபந்தாட்ட கழகம், நாவாந்துறை சென் மேரிஸ் உதைபந்தாட்ட கழகம், பாசையு+ர் சென் அன்ரனிஸ் உதைபந்தாட்ட கழகம மற்றும் குருநகர் பாடும் மீன் விளையாட்டு கழகம் ஆகியன சிறந்த கழகங்களாக விளங்கியமையை யாவரும் அறிவார்கள். இதில் திரு ஜெயரெட்ணம் அவர்கள் சென் நீக்கிலஸ் உதைபந்தாட்ட கழகத்தில் மிகச்சிறந்த வீரராக திகழ்தமையை நான் கண்டும், கேட்டும் மகிழ்ந்துள்ளேன். அவ்வேளையில் என் வயதும், அதற்கு குறைந்த வயதுடைய இளைஞர்களும் உதைபந்தாட்டத்தில் ஆவல் கொள்வதற்கு திரு. ஜெயரெட்ணம் அவர்களின் விளையாட்டு வடிவமும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது.
திரு. ஜெயரெட்ணம் அவர்கள் மைதானத்துக்குள் விளையாட இறங்கினால் அவர் எந்த நிலையில் (Pழளைளழn) நின்று விளையாடுவார் என்பதனை எதிர்த்தரப்பு வீரர்களால் ஊகிக்க முடியாது, அப்படி அவரின் விளையாட்டு ஆளுமை முழு மைதானத்தையும் ஆக்கிரமித்தாக இருப்பதனை கண்டு வியந்துள்ளேன். அதே போல் திரு.nஜேயரெட்ணம் அவர்களிடம் என்னை கவர்ந்த இன்னுமொரு திறமை என்னவென்றால் அவரின் கால்கள் இரண்டுமே பந்தை கட்டுப்பாட்டுக்குள் (டீயடட ஊழவெசழட) வைத்திருக்கும் திறமையும், அந்த கட்டுப்பாட்டோடு எதிரணியின் பின் கழ வீரர்களை லாவகமாக தாண்டி சென்று பந்தை கோல்களாக்கும் அழகும் தான்.
இதே காலப்பகுதியில் யாழ் முஸ்லிம மக்களிடையில் அதி வேகமாக இரண்டு கழகங்கள் தங்களுக்;;குள் வளர்ந்து கொண்டிருந்தது. அதில் ஒன்று டைகர். வி.கழகம் மற்றொண்று சம்சுங் விளையாட்டு கழகம். இந்த இரண்டு கழகங்களுக்கிடையிலும் யாழ் ஓஸ்மேனியா கல்லுரியின் ஜின்னா மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் டைகர் விளையாட்டு கழகத்தில் சென் நீக்கிலஸ் கழகத்தை சேர்ந்த சில வீரர்களும், சம்சுங் வி. கழகத்தில் சென் நீக்கிலஸ் கழகத்தை சேர்ந்த திரு. ஜெயரெட்ணம் அவர்களும் விளையாடுவர்கள்.
இதில் டைகர் வி. கழகத்தில் மதிப்புக்குரிய ஜேக்கப் இளம்சிங்கம் அவர்களும் விளையாடினார்.திரு. ஜேக்கப் இளஞ்சிங்கம் அவர்களுக்கும், திரு. ஜெயரெட்ணம் அவர்களுக்கும் கடும் போட்டியும், இரண்டு வீரர்களின் இரசிகர்கள் எழுப்பும் குரலொலி அந்த மைதானத்திலிருந்து அதிக துhரம் கேட்டுக்கொண்டிருப்பதை மறக்கவே முடியாது. பிற்காலத்தில் இந்த இரண்டு கழகங்களும் ஒன்றாக இணைந்து யாழ் முஸ்லிம் உதைபந்தாட்ட கழகமாக மாற்றம் பெற்று மிகச்சிறந்து விளங்கிய மேற் சொல்லப்பட்ட நாலு கழகங்களுக்கும் பெரும் சவாலாக விளங்கியமையை உதைபந்தாட்ட இரசிகர்களுக்கு தெரிந்திருக்கும்.
திரு. முத்துராசா ஜெயரெட்ணம் அவர்களிடம் ஒரு விளையாட்டு வீரனுக்கான பண்புகள் நிறைந்திருந்தமையும், அந்த பண்புகளை அவர் கடைப்பிடித்த தன்மையும் அவரை அதிக இரசிகர்கள் விரும்பியமைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். ஆரம்ப உதைபந்தாட்ட விதிமுறைக்கு எல்லா வீரர்களும் பாதணிகள் (டீழழவள) அணியவேண்டிய தேவை இருக்கவில்லை. இந்த சட்டத்தை தனக்கு சாதகமா பயன் படுத்தி திரு. ஜெரெட்ணம் அவர்கள் பாதணிகள் பாவிக்காமல் விளையாடியமை குறிப்பிட தக்கது. அவர் உதைபந்தாட்ட போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் காலப்பகுதி வந்த வேளையில் முழு வீரர்களும் பாதணிகள் உபயோகப்படுத்த வேண்டுமென்ற கட்டாய சட்டம் ஏற்பட்டபோது பாதணிகளை அணிந்து என்னாலும் சிறப்பாக விளையாட முடியும் என்று நிருபித்து ஓய்வு பெற்ற வீரர் திரு. ஜெயரெட்ணம் அவர்கள் என்பதனையும் பதிவு செய்வதில் பெருமிதம் கொள்ளுகின்றேன்.
மேற்கூறியவைகளையும் கடந்து நான் விளையாடிய காலத்தில் திரு. ஜேக்கப் இளஞ்சிகம் மாமா (நான் மாமா என்றே அழைப்பது வழக்கம்;)
திரு. ஜேயரெட்ணம், இருவரும் என் தந்தையாருடன் சேர்ந்து என்
சிறப்பான விளையாட்டை பாராட்டுவதும், அதே வேளை என் தவறுகளை சுட்டிக்காட்டுவதும் அவர்களின் விளையாட்டு பண்புகளின் மகுடமாக இன்றும் எண்ணிக்கொள்வேன். இந்த வழிநடத்தல் என் விளையாட்டின் சிறப்புக்கு காரணங்களாக அமைந்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி பாராட்டி இன்னுமொரு வீரரின் கட்டுரையுடன் சந்திக்கும் வரை விடைபெறுகின்றேன்.
நன்றிகள்.

Oshoவில் ஈடுபாடு எப்படி வந்தது?

Oshoவில் ஈடுபாடு
எப்படி வந்தது?
என் நண்பரின் கேள்வி.
வித்தியாசமான கோணங்களில்,எதிர்பாரத அதிர்வலைகள், மடையென வந்த யதார்த்த சிந்தனைகள் என்னை ஓஷோவுடன் இணைத்தது " என்றேன்.
எப்படி?
காதலுக்கும் காமத்துக்கும் வித்தியாசம் புரியாமல் மனம் போன போக்கில் திரிந்தவனை, இதுதான் என்று பிடரியில் அடித்து பொறி கலங்க புரிய வைத்தவன் ஓஷோ.
எல்லா துக்கங்களையும் ஜீரணித்து நடைபிணமான என்னை, வாழ்வே ஒரு கொண்டாட்டம் என்று என்னையும் குதியாட்டம் போட வைத்தவன் ஓஷோ.
நான் யார்? என்று தேடியலைந்த என்னை தலையில் தட்டி எல்லாமும் நீ, நீயோ எல்லாம் என்று சிந்தனையை தூண்டியவன்.
Sex, காமம் என்றாலே தகாத வார்த்தைகள் என்றெண்ணி வளர்த்தப்பட்ட என்னன, காமமின்றி ஏது படைப்பு, நீ ஏது, நான் ஏது, ஜீவராசிகள் ஏது என்று காமம் ஒரு புனிதம் என்று என் அறியாமைத் திரையை எரித்தவன் ஓஷோ.
பெண்கள் மீது வருவதே காதல் என்று பிதற்றித் திரிந்த இந்த பித்தனை, காதல் என்பது பிரபஞ்ச தோற்றங்கள் அனைத்திலும்(பாரதி கூற்றுப்படி நிற்பதுவே, நடப்பதுவே) உண்டு என்று என் மனம் விரிந்து விரிந்து பிரபஞ்ச காதலனாக மாற்றியவன் ஓஷோ.
இசையும், உன்னை மறந்து ஆடும் நடனமும் தெய்வீகக் கதவை தட்டும் என்று உணர்த்திய மாயாஜாலக்காரன்.
மரணமும் ஒரு கொண்டாட்டமே என்று மரணத்தையே நேசிக்க வைத்த பித்தன்.
பயத்தை கேள்வி கேள் என்று வித்தியாசமான கோணத்தில் பயத்தை வேரறுத்த ஆன்மீக மருத்துவன்.
புத்தன் என்றால் என்னவென்று ஆராய்ந்து கொண்டிருந்த என்னை,
நீயே புத்தன்தான் என்று ஓங்கி அறைந்தவன் அவன்.
எங்கெங்கு காணினும் சக்தியடா என்ற பாரதி முழக்கத்தை போல, எல்லாமே தெய்வீகம் தான் இப்பிரபஞ்சத்திலே என்னையே தெய்வமாக உணரச்செய்த ஜாலக்காரன்.
Be at the moment என்று தறிகெட்டு ஓடிய மனமெனும் முரட்டு குதிரையை அடக்கும் வித்தையை கற்று கொடுத்த சித்தன்.
காமம் என்பது வெறும் புணர்ச்சியல்ல, அது தெய்வீகத்தை உணரக்கூடிய அற்புத திறவுகோல் என்று எல்லோரையும் அலறவைத்த அற்புத மனிதன்.
மூச்சை தியானமாக்கி உன்னுள் நீயே தொலைந்து போ என்று விரட்டிய அரக்கன் அவன்.
சுருக்கமாக, எண்ணங்களே வாழ்வாக என்னுள் நானே வழி தெரியாமல்,என்னையே நானே புரிந்து கொள்ளாமல் திகைத்த போது, வா இங்கே என்று என்னோடு ஆத்மார்த்தமாக கலந்து, நீயே சிவம், நீயே எல்லாம் என்று ஞானமெனும் குளத்தில் முங்கி முங்கி எடுத்து புனிதமாக்கிய ஆசான் அவன்.
வெற்றுப்படகாக என்னை மாற்றி, எண்ணமற்ற நிலைக்கு தரதரவென்று இழுத்துச் சென்ற மூர்க்கன் அவன்.
கடந்ததை மற, எதிர்காலத்தை துற, இந்தக் கணம் வாழ் என்ற சூத்திரத்தை புரிய வைத்த சூத்திரதாரி அவன்.
என்னுள் மூழ்க மூழ்க என்னை நானே தொலைக்க தொலைக்க, தொலைந்து போ என்று ஆசீர்வதித்தவன் அவன்.
ஒரு கணத்தில், இருட்டை வெளிச்சம் துரத்துவது போல, உன் கடந்தகால கர்மவினைகள் தொலையும் என்று நம்பிக்கை ஊட்டியவன் அவன்.
வாழ்வையும், அதன் நிகழ்வுகளையும் பார்வையாளனாக அனுபவி என்று நிதர்சனத்தை புரிய வைத்தவன் அவன்.
ஜென்னையும், சூஃபியைும் அறிமுகப்படுத்தி அறிவில் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவன் அவன்.

ஒரு தாயின் அர்ப்பணம்

ஒரு தாயின் அர்ப்பணம் பற்றிய நெகிழ்வான
கதை இது.
பூமி அதிர்ச்சிக்குப் பேர் போன
நாடு ஜப்பான்.அங்கு கடுமையான
சேதங்களோடு நடந்து முடிந்த
ஒரு பூமி அதிர்ச்சியின் பின்னர், தொண்டர்கள்
குழுவொன்று ஒர் இளம் பெண்ணின் இடிந்து போன
வீட்டின் சிதைபாடுகளை நோக்கி நடக்கிறார்கள்.
சிதிலங்களின் நடுவே அந்தப்பெண்ணின் சடலம்
தென்படுகிறது.ஆனால் அந்த சடலம் ஏனைய
சடலங்களிலிருந்து வித்தியாசமாக
இருக்கிறது.அது ஒரு பிரார்த்தனைக்காக
மண்டியிட்டிருப்பது போன்று முழந்தாளிட்ட
வண்ணம் முன்னோக்கி வளைந்திருக்கிறத
ு.அவளது இரு கைகளையும்
தாங்கி நின்றிருக்கிறது சுருட்டிய துணிக்குவியல்
ஒன்று.இடிந்து விழுந்த வீடு அவள் முதுகிலும்
தலையிலும் ஆழமான காயங்களை ஏற்படுத்திய
வண்ணம் சரிந்திருக்கிறது.
மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் தொண்டர் அணியின்
தலைவர் சுவரினூடே உள்ள குறுகலான
இடைவெளிக்கூடாக தனது கைகளை விட்டு அந்தப்
பெண்ணின் உடலைத் தொட்டுப்பார்க்க
ிறார்.சிலசமயம் அந்தப் பெண் உயிரோடிருக்கலாம்
என்று மனதில் ஒரு நம்பிக்கை.ஆனால்
குளிர்ந்து விறைத்திருந்த சடலம் அவள் நிச்சயமாக
இறந்து விட்டிருப்பதை ஊர்ஜிதம் செய்கிறது.
தொண்டர் அணி அடுத்த இடிந்து விழுந்திருக்கும்
கட்டடத்தை நோக்கி நடக்கிறது.குழுத்தலைவரின்
உள்ளத்தில் ஓர் உள்ளுணர்வு. சொல்ல
முடியாதவொரு சக்தி மீண்டும் அந்த
வீட்டை நோக்கி அவரை உந்தித் தள்ளுகிறது.திரு
ம்பவும் அவர் மண்டியிட்டு,குறுகலான
வெடிப்புக்கூடே அந்தப்பெண்ணுக்கு அடியில்
இருக்கும் அந்தத் துணிக்குவியலை கைகளால்
தடவிப்பார்க்கிறார்.திடீரென’
இங்கே ஒரு குழந்தை,குழந்தை’ என அவர் துக்கம்
மகிழ்வும் கலந்த உணர்ச்சிப்பெருக்கில் வீரிடுகிறார்.
தொண்டர்
அணி ஒருங்கிணைந்து வேலை செய்கிறது.சடலத்
தை சுற்றியிருந்த இடிந்து விழுந்த
சிதைவுகளை மிகக்கவனமாக அகற்றுகிறார்கள்
.தாயின் சடலத்திணடியில் இன்னும் உறக்கம்
கலையாத மூன்று மாதப் பிஞ்சுக்
குழந்தை ,பூப்போட்ட ஒரு போர்வைத்துணிக்குள்
பொதிந்து கிடக்கிறது.
தன் மகனைக் காப்பாற்றுவதற்காய் தாய் கொடுத்த
விலை தான் இந்த அர்ப்பணம்.குழுத்தலைவர் அந்த
பூவைக்கையில் எடுத்த போதும் அதன்
அமைதியான உறக்கம் கலையவில்லை.
குழந்தையின் உடல் நிலையைச் சோதிப்பதற்காக
மருத்துவர் அவசரமாக வருவிக்கப்படுகி
றார்.குழந்தையைச் சுற்றியிருந்த
பூத்துணியை திறந்த போது அதற்குள் ஒர் செல்
தொலைபேசி இருக்கிறது.அதன் முகப்பில்
ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் –
” If you can survive, you must remember that I love
you.”( “உன்னால் வாழ முடிந்தால்,நான்
உன்னோடு மிகுந்த அன்போடிருக்கிறேன்
என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள
வேண்டும்”).
அந்த செல் மெசேஜை ஒருவர் மாற்றி ஒருவர்
வாசிக்கிறார்கள்.வாசித்த ஒவ்வொருவரது உள்ளமும்
விம்மியழுகிறது.

Saturday 2 February 2019

தந்த்ரா யுக்திகள்

கவனித்தல் என்பது
ஒரே ஒரு விஷயத்திற்குத் தனிப்பட்டுக் கவனம் கொடுப்பது
விழிப்புணர்வு என்பது
கவனம் கொடுப்பது அல்ல
அது கவனமாய் இருப்பது
அது எல்லாவற்றையும் பற்றி உணர்வோடு இருப்பது மட்டுமே
விழிப்புணர்வு என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கியது
கவனித்தல் என்பது தனிப்பட்டது
மெது மெதுவாக உன்னுடைய கவனித்தலை விழிப்புணர்வாக மாற்றிக் கொள்ள முடியும்
உன்னால் உனது மூச்சை தளர்வாக
எந்த முயற்சியும் இல்லாமல்
சந்தோஷமாக அனுபவிக்கும்போது
நீ விழிப்புணர்வை அடைந்து விட்டாய்
நம்மால் எல்லோரையும் சந்தேகப்பட முடியும்
ஆனால்
நாம் ஒருபோதும் நமது மனதை சந்தேகப் படுவதில்லை
நீ எதையாவது சந்தேகப்பட போகிறாய் என்றால்
முதலில் உன்னுடைய சொந்த மனதை சந்தேகப்படு
மேலும் உன் மனம் எதையாவது சொல்லும் போதெல்லாம்
இரண்டு முறை யோசி
இறந்த காலமே உன் மனதை உருவாக்குகிறது
உன் மனதை ஆட்சி செய்கிறது
மனம் உனக்கு மிகவும் நெருக்கமானது
இடைவெளி மிகவும் குறைவு
ஆகவே மனதோடு உன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறாய்
நீ வெறும் எளிமையான வெகுளியான ஜீவனாகவேப் பிறந்தாய்
இந்த சமுதாயம்தான் உனக்கு மனதைக் கொடுத்தது
அதன்பின் வாழ்க்கை இந்த மனத்தோடு சேர்த்துக் கொண்டே வந்தது
மனம் அதனுடைய போக்கிலேயே உன்னைத் தள்ளிக் கொண்டே போகிறது
உன்னுடைய இறந்த காலம் உன் ஒவ்வொரு நிகழ் கால
கணத்தையும் கட்டுப் படுத்துகிறது
அதனால் நீ நிகழ் காலத்தை திறந்த நிலையில் புதுவிதமாக அணுக முடியவில்லை
இறந்த காலமும் மனமும் நிகழ் காலத்தை அழித்துக் கொண்டே இருக்கும்
நீ மனமற்ற நிலையை அடையும் கணத்திலேயே
இறந்த காலம் மறைந்து போகிறது
உன்னுடைய மனம் ஒரு வெங்காயம் போன்றது
முடிவில் ஒன்றுமில்லாத சூன்யம்தான் மிஞ்சும் 🍂
🍁 ஓஷோ
தந்த்ரா யுக்திகள் 

மனமே சாத்தான்


மனமே சாத்தான்   பேசாலைதாஸ்
அறிவுக் கனியை உண்ணக் கூடாது என்பது ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இடப்பட்ட உத்தரவு
ஆனால்
அதை சுவைக்க அவர்களுக்கு ஆசை
அது இயல்பு தானே
எது கூடாது என்று தடுக்கப் பட்டாலும்
அதன் மீது ஆசை எழுவது இயல்பு
மனம் அப்படித்தான் செயல் படும்
மனதிடம் இன்னொரு தந்திரமும் உண்டு
அது உங்களைத் தூண்டிவிடும்
பொறுப்பை யார் தலையிலாவது சுமத்தத் தான் அது தந்திரம் செய்யும்
எப்போது எது தடுக்கப் பட்டாலும்
அதன் மீது மனதிற்கு ஆர்வம் வந்து விடும்
அது ஒரு அழைப்பு போல
ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இயல்பாகவே கனியை சுவைக்க ஆசை ஏற்பட்டு விட்டது
அங்கே வேறு யாரும் இல்லை
ஆனால் கதை என்ன சொல்கிறது......???
சாத்தான் தூண்டி விட்டான் என்கிறது
இது தான் யார் மீதாவது பொறுப்பைத் தள்ளி விடும் மனதின் தந்திரம்
சாத்தான் ஒரு பலிகடா தான்
அந்த சாத்தான் மனதின் கண்டுபிடிப்பு
சாத்தான் தூண்டினான்
மயக்கி ஏமாற்றி விட்டான்
என்று சொல்லி விட்டால்
நீங்கள் பாவியல்ல என்று தப்பி விடலாமல்லவா..???
ஆனால் கவர்ச்சி ஏற்பட்டதென்னவோ
தடுக்கப் பட்டதனால்தான்
மனம் செய்த தந்திரம் கதையை மாற்றி விட்டது
ஆனால் கதை அழகானது
மனமே சாத்தான்
தந்திரத்திற்கான பழைய குறியீடு தான் பாம்பு
மனமே பாம்பு

Connection!
ல்லா நஸ்ருதீன் தன் கடையில் யாராவது ஏதாவது வாங்க வருவாரா என்று பார்த்துக் காத்திருந்தார்
ஒரு ஆள் வந்தான்
முல்லா தன் கடையில் என்னென்னவெல்லாம் விற்பனைக்கு உள்ளன என்று பேச ஆரம்பித்தவர் பேசிக்கொண்டே இருந்தார்
வந்தவன் ஒரு வார்த்தை சொல்லவும் சந்தர்ப்பம் தரவில்லை
கைவீச்சில் அந்த ஆளை ஒரு நாற்காலியில் உட்கார சொல்லி விட்டு டெலிபோனை எடுத்து
"அப்படியா ஒரு கோடிதானே...!!! வாங்கிக்கொள்" என்றார்
வந்தவனால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை
"பொறு...பொறு...
டெலிபோனுக்கு கனெக்ஷன் கொடுக்க டெலிபோன் கம்பெனியிலிருந்து தான் நான் வந்திருக்கிறேன்" என்றான்
டெலிபோனுக்குக் கனெக்ஷனே கொடுக்கவில்லை
ஒரு கோடியாவது ஒன்றாவது
பம்மாத்துப் பண்ணினார்
தொடர்புகள் அறுந்துவிட்ட உணர்வு வந்துவிட்டதா....???
சரிதான்
அந்தத் தொடர்புகளே மயக்கங்களாகத்தானே இருந்து விட்டன....?!?
தொடர்பே இல்லை
ஆனால், பிரார்த்தனைகளைச் சொல்லி நேரடியான லைனில் கடவுளோடு பேசிக்கொண்டு இருந்து விட்டீர்கள்
திடீரென நான் வந்து உன் டெலிபோனுக்கு இன்னும் கனெக்ஷனே கொடுக்கவில்லை என்பதை உணர வைத்து விட்டேன்
யாரிடம் நீ பேசிக் கொண்டிருக்கிறாய்....???
கனெக்ஷன் தராத டெலிபோனில் பிரார்த்தனைகளைக் கொட்டிக் கொண்டிருக்கிறாய்
வாழ்வோடு தொடர்புடையவனாகிக் கொள்
ஒரே வழி உனக்குள் போவதுதான்
ஏனென்றால்
உன்னுடைய அந்த மையத்தில்தான் உன் தொடர்பு இருக்கிறது
பிரபஞ்சத்திலிருந்து நீ பிரிந்துவிட்டவனல்லன்
பிரபஞ்சத்தோடான உனது தொடர்பே பிரக்ஞை
அதை உன்னால் பார்க்க முடியாது
அதனால்
மிகவும் எச்சரிக்கையோடு, கவனிப்போடு
சாட்சியாக நின்றிக்கும் உணர்வோடு
ஆழத்துக்கு - அடி ஆழத்துக்குப் போகும்போது
அந்த கனெக்ஷனை கண்டுபிடித்து விடுவாய்
புத்த நிலைதான் அந்த கனெக்ஷன்

Rail Journy
முதன் முதலாக ரயிலில் பிரயாணம் ஒரு கிராமத்துவாசி
தான் கொண்டு வந்த மூட்டைகளை தன் தலையில்
சுமந்து கொண்டு பிரயாணம் 
செய்தானாம்
கீழே வைத்தால் ரயிலுக்கு அதிக பாரமாக இருக்கும் என்று இப்படி செய்தானாம்
ரயில் அவனையும் அவனது மூட்டைகளையும் சேர்த்துதான் சுமக்கிறது
அவன் அந்த மூட்டையை தலையில் வைத்தாலும்
தரையில் வைத்தாலும்
ரயிலுக்கு எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பது அவனுக்கு தெரியவில்லை
அதுபோலவே
உன்னுடைய மனமும்
தேவையற்ற சுமை
நாள் முழுவதும் அந்த சுமையை
சுமந்து கொண்டு திரிகிறாய்
தேவையற்ற சமயத்தில்
மனதை கொஞ்சம் இறக்கி வைக்க தெரிந்து கொள்
ஒரு நிமிட நேரம் நீ அதை கீழே இறக்கி வைக்க முடியுமானால்
உன்னுடைய முழு வாழ்க்கையும்
மாற்றப் பட்டு விடும்
அப்போது நீ பாரமின்றி இருப்பதை உணர்வாய்
பாரமின்றி இருத்தல் உனக்கு சிறகுகள் கிடைப்பது போல
அதன் மூலம் நீ இந்த வானத்துக்கும்
சொர்க்கத்துக்கும் பறக்கலாம்
ஆன்மிக வாழ்வில் நீ பாரமற்றவனாக பறந்து கொண்டும்
ஒரு நதியைப் போல் ஓடிக் கொண்டும் இருக்கலாம்

Intution


ஓஷோவிடம் எல்லோரும் கேட்கும் கேள்வி
உங்களுக்கு ஜாதகத்திலும்... மதத்திலும்...
நம்பிக்கை உண்டா...??? என்பதுதான்
அதற்கு அவர் கூறும் பதில் -
" கிடையாது."
ஆனால் ...
அது என்னவென்று எனக்குத் தெரியும் என்பதுதான்...
ஓஷோ சிறுவனாக இருந்த போது
ஒரு ஜோசியர் அவரைப் பார்த்து
" நீ ஒரு புத்தனாக ஆவாய் என்றார்"
அதைச் சொன்ன ஜோசியரின் கண்களை ஆழ்ந்து பார்த்தார் ஓஷோ...
அப்போது அவரின் கண்கள் மூலமாக ஓஷோவுக்கு ஒரு விவரம் சொன்னது
பிறகு ஓஷோ அவரிடம் நீங்கள் என்னுடைய வருங்காலத்தைப் பற்றி சொல்ல வந்திருக்கிறீர்கள்...
அதற்கு முன்பாக நான் உங்கள் வருங்காலத்தைச் சொல்கிறேன் என்றார்
அதற்கு அவர்
" என்ன என் வருங்காலத்தைப் பற்றி நீ சொல்லப்
போகிறாயா....???
" ஆமாம் நீங்கள் விரைவில் ஒரு புத்த பிட்சுவாக மாறப் போகிறீர்கள் "
அவர் சிரித்துக் கொண்டே
" அது நடக்காது
ஏனெனில் அந்த எண்ணம் சிறிது கூட என்னிடம் கிடையாது"
அதற்கு ஓஷோ நான் பந்தயம் கட்டுகிறேன்
அது நடக்கும்
அவர் சரி எவ்வளவு பணம் பந்தயம் கட்டப் போகிறாய்...???
அதற்கு ஓஷோ பந்தயம் முக்கியமல்ல
நான் ஜெயித்தால் பணம் உங்களிடமிருந்து எனக்கு வரப் போகிறது...
நான் தோற்றால் எதையும் நான் இழக்கப் போவதில்லை
ஏனெனில்
என்னிடம் எதுவும் கிடையாது...
பிறகு அந்த ஜோசியர்
சரி இந்த சவாலை நான் ஏற்றுக் கொள்கிறேன்...
அப்படி நான் புத்த பிட்சுவாக மாறினால் ...
இந்த வைரம் பதித்த தங்கத்தால் ஆன விலை உயர்ந்த கடிகாரத்தைப்பரிசாக அளிப்பேன்
ஓஷோவுக்கு ஜாதகத்தில் நம்பிக்கையே இல்லை...
அது 100 க்கு 99 சதவீதம் முட்டாள்தனமானது
ஒரு சதவீதம்தான் உண்மையானது
அந்த ஒரு சதவீதத்தை அறிய ஒருவர் ஆழ்ந்த... தீர்க்கமான...
நுண்ணறிவும்...
ஒரு ஞானியின் தன்மையும் வேண்டும்
ஏனெனில் ஒருவரது வருங்காலம்
அவரது மனத்தில் ஆழத்தில் பதிந்து இருக்கிறது
என்று பின் நாட்களில் கூறுகிறார் ஓஷோ
ஓஷோவுக்கு சுமார் பதினான்கு வயது இருக்கும்போது
அவர் தன் தாத்தாவோடு வாரணாசிக்கு சென்று கொண்டிருந்தார்
அப்பொழுது வாரணாசிக்கும் சாரநாத்துக்கும்
இடையில் ஒரு கோவிலின் வாசலில்
ஒரு வயோதிக புத்த பிட்சு பலரோடு சேர்ந்து உட்கார்ந்து இருந்ததை ஓஷோ பார்த்தார்
நேரே அவரிடம் சென்று
ஓஷோ பெரியவரே
என்னை அடையாளம் தெரிகிறதா..??? என்றார்
அதற்கு அவர் நான் உன்னைப் பார்த்ததே இல்லையே என்றார்
ஓஷோ அவரிடம்
ஆமாம், இப்பொழுது அது கஷ்டம்தான்
சரி எங்கே அந்தக் கடிகாரம் என்றார்..???
அவர் மிகவும் ஆனந்தப்பட்டு கண்ணீர் வழிய அதை தன்
அங்கியிலிருந்து எடுத்து
ஓஷோவிடம் கொடுத்து அவரை வணங்கினார்
உடனே ஓஷோ அவரிடம் நீங்கள் ஒரு சந்நியாசி
சிறுவனாகிய என்னை நீங்கள் எப்படி வணங்கலாம்
அதற்கு அந்த ஜோசியர் நீ என்னை விட
மனதளவில் பெரியவன்
நான் உன்னை வணங்கத்தான் வேண்டும்
அது சரி எனக்கு ஒன்றை மட்டும் சொல்
நான் எவ்வளவோ பேருக்கு ஜோசியம் சொல்லி இருக்கிறேன்
ஆனால் என்னையே என்னால் கணிக்க முடியவில்லை...!!!
நீ எப்படி அதைச் செய்தாய்.....???
அதை மட்டும் தயவு செய்து எனக்குச் சொல் என்றார்
ஓஷோ - அது உள் உணர்வு
( Intution) அதை விளக்க முடியாது என்றார் 

கலீல் ஜிப்ரான் கவிதைகள்
துறவி
மலைகளுக்கு அப்பால் இருந்த 
துறவியின் குடிலில்
நான் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்

அப்போது ஒரு திருடன்
நொண்டியபடி தலை கவிழ்ந்து சோகத்துடன்
அவரை நாடி வந்தான்
"முனிவரே..!!!
எனக்கு நிம்மதி தாருங்கள்
உங்களால் மட்டுமே முடியும்
என் பாவங்கள் என்னை அழுத்துகின்றன.."
"வருந்தாதே..!!!
என் பாவங்களும் என்னை அழுத்துகின்றன.."
"ஆனால்
நான் ஒரு திருடன்.. கொள்ளைக்காரன்..!!!"
"நானும் திருடன் தான்
கொள்ளைக்காரன் தான்..!!!"
"நான் ஒரு கொலைகாரன்
என் கையில் பலரின் ரத்தம் தோய்ந்திருக்கிறது..!!!"
"நானும் கொலைகாரன் தான்
என் கையிலும் பலரின் ரத்தக் கறை..!!!"
"நான் எண்ணிலடங்கா
குற்றங்களைப் புரிந்துள்ளேன்..!!!"
"நானும் செய்துள்ளேன்..!!!"
திருடன் எழுந்து நின்றான்
புரிந்து கொள்ள முடியாத
ஒரு பார்வை அவனிடம்
திரும்பி நடந்தான்
நிமிர்ந்த ஒரு துள்ளலுடன்
நான் துறவியிடம் கேட்டேன்
"நீங்கள் செய்யாத குற்றங்களையெல்லாம்
செய்ததாய் ஏன் சொன்னீர்கள்..???
அவன் உங்கள் மேல்
நம்பிக்கையிழந்து போகிறான் பாருங்கள்..!!!"
துறவி சிரித்துக் கொண்டே கூறினார்
"அவன் நம்பிக்கையிழந்து போவது உண்மை தான்
ஆனால்
நிம்மதி அடைந்து போகிறான்..!!!"
நான் அப்போது தான் கவனித்தேன்
திருடனின் உற்சாகமான பாடல் ஒலி
பள்ளத்தாக்கில் வழிந்து நிறைந்து கொண்டிருந்தது

சுவாமி விவேகானந்தர் 
 சகோதரா.....!!!
நீ ஏன் அழுகுகிறாய்..???
உனக்கு மரணம் இல்லை
நோய் இல்லை
துன்பம் இல்லை
உனக்கு துரதிர்ஷ்டம் இல்லை
நீ ஏன் அழ வேண்டும்..???
மாறுதலோ, மரணமோ உனக்கு இல்லை
இருக்கின்ற ஒரே பொருள் நீயே
உன் ஆன்மாவாக இரு 🔥
💥 சுவாமி விவேகானந்தர் 💥