Thursday 7 February 2019

யாழ் உதைபந்தாட்ட வரலாற்றில் சிறப்பு மிக்க ஒரு வீரரை பற்றிய பதிவு


யாழ் உதைபந்தாட்ட வரலாற்றில் சிறப்பு மிக்க ஒரு வீரரை பற்றிய பதிவு
கட்டுரை: பாலசிங்கம் பிரான்சிஸ்
1943 இல் யாழப்பாணம் உதைபந்தாட்ட சங்கம் (லீக்) ஆரம்பிக்ப்பட்ட காலம் தொட்டு இன்று வரை உதைபந்தாட்டத்தில் பங்கு கொள்ளும் கழகங்களில் இரண்டு கழகங்களே உள்ளன. அதல் ஒன்று நாவாந்துறை சென் நீக்கிலஸ் உதைபந்தாட்ட கழகம். மற்றொண்டு பாசையு+ர் சென் அன்ரனிஸ் உதைபந்தாட்ட கழகமாகும். இக்கழகத்தில் நாவாந்துறை சென் நீக்கிலஸ் விளையாட்டு கழகத்தில் எனக்கு தெரிந்த காலத்தில் சிறந்த விளையாட்டு வீரராக விளங்கிய மதிப்புக்குரிய திரு. முத்துராசா ஜெயரெட்ணம் அவர்களைப்பற்றிய கட்டுரையை எழுதுவதில் பெருமை கொள்ளுகின்றேன்.
எனக்கு உதைபந்தாட்ட அறிவு தெரிய வந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் மிகச்சிறந்த கழகங்களாக நாவாந்துறை சென் நீக்கிலஸ் உதைபந்தாட்ட கழகம், நாவாந்துறை சென் மேரிஸ் உதைபந்தாட்ட கழகம், பாசையு+ர் சென் அன்ரனிஸ் உதைபந்தாட்ட கழகம மற்றும் குருநகர் பாடும் மீன் விளையாட்டு கழகம் ஆகியன சிறந்த கழகங்களாக விளங்கியமையை யாவரும் அறிவார்கள். இதில் திரு ஜெயரெட்ணம் அவர்கள் சென் நீக்கிலஸ் உதைபந்தாட்ட கழகத்தில் மிகச்சிறந்த வீரராக திகழ்தமையை நான் கண்டும், கேட்டும் மகிழ்ந்துள்ளேன். அவ்வேளையில் என் வயதும், அதற்கு குறைந்த வயதுடைய இளைஞர்களும் உதைபந்தாட்டத்தில் ஆவல் கொள்வதற்கு திரு. ஜெயரெட்ணம் அவர்களின் விளையாட்டு வடிவமும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது.
திரு. ஜெயரெட்ணம் அவர்கள் மைதானத்துக்குள் விளையாட இறங்கினால் அவர் எந்த நிலையில் (Pழளைளழn) நின்று விளையாடுவார் என்பதனை எதிர்த்தரப்பு வீரர்களால் ஊகிக்க முடியாது, அப்படி அவரின் விளையாட்டு ஆளுமை முழு மைதானத்தையும் ஆக்கிரமித்தாக இருப்பதனை கண்டு வியந்துள்ளேன். அதே போல் திரு.nஜேயரெட்ணம் அவர்களிடம் என்னை கவர்ந்த இன்னுமொரு திறமை என்னவென்றால் அவரின் கால்கள் இரண்டுமே பந்தை கட்டுப்பாட்டுக்குள் (டீயடட ஊழவெசழட) வைத்திருக்கும் திறமையும், அந்த கட்டுப்பாட்டோடு எதிரணியின் பின் கழ வீரர்களை லாவகமாக தாண்டி சென்று பந்தை கோல்களாக்கும் அழகும் தான்.
இதே காலப்பகுதியில் யாழ் முஸ்லிம மக்களிடையில் அதி வேகமாக இரண்டு கழகங்கள் தங்களுக்;;குள் வளர்ந்து கொண்டிருந்தது. அதில் ஒன்று டைகர். வி.கழகம் மற்றொண்று சம்சுங் விளையாட்டு கழகம். இந்த இரண்டு கழகங்களுக்கிடையிலும் யாழ் ஓஸ்மேனியா கல்லுரியின் ஜின்னா மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் டைகர் விளையாட்டு கழகத்தில் சென் நீக்கிலஸ் கழகத்தை சேர்ந்த சில வீரர்களும், சம்சுங் வி. கழகத்தில் சென் நீக்கிலஸ் கழகத்தை சேர்ந்த திரு. ஜெயரெட்ணம் அவர்களும் விளையாடுவர்கள்.
இதில் டைகர் வி. கழகத்தில் மதிப்புக்குரிய ஜேக்கப் இளம்சிங்கம் அவர்களும் விளையாடினார்.திரு. ஜேக்கப் இளஞ்சிங்கம் அவர்களுக்கும், திரு. ஜெயரெட்ணம் அவர்களுக்கும் கடும் போட்டியும், இரண்டு வீரர்களின் இரசிகர்கள் எழுப்பும் குரலொலி அந்த மைதானத்திலிருந்து அதிக துhரம் கேட்டுக்கொண்டிருப்பதை மறக்கவே முடியாது. பிற்காலத்தில் இந்த இரண்டு கழகங்களும் ஒன்றாக இணைந்து யாழ் முஸ்லிம் உதைபந்தாட்ட கழகமாக மாற்றம் பெற்று மிகச்சிறந்து விளங்கிய மேற் சொல்லப்பட்ட நாலு கழகங்களுக்கும் பெரும் சவாலாக விளங்கியமையை உதைபந்தாட்ட இரசிகர்களுக்கு தெரிந்திருக்கும்.
திரு. முத்துராசா ஜெயரெட்ணம் அவர்களிடம் ஒரு விளையாட்டு வீரனுக்கான பண்புகள் நிறைந்திருந்தமையும், அந்த பண்புகளை அவர் கடைப்பிடித்த தன்மையும் அவரை அதிக இரசிகர்கள் விரும்பியமைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். ஆரம்ப உதைபந்தாட்ட விதிமுறைக்கு எல்லா வீரர்களும் பாதணிகள் (டீழழவள) அணியவேண்டிய தேவை இருக்கவில்லை. இந்த சட்டத்தை தனக்கு சாதகமா பயன் படுத்தி திரு. ஜெரெட்ணம் அவர்கள் பாதணிகள் பாவிக்காமல் விளையாடியமை குறிப்பிட தக்கது. அவர் உதைபந்தாட்ட போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் காலப்பகுதி வந்த வேளையில் முழு வீரர்களும் பாதணிகள் உபயோகப்படுத்த வேண்டுமென்ற கட்டாய சட்டம் ஏற்பட்டபோது பாதணிகளை அணிந்து என்னாலும் சிறப்பாக விளையாட முடியும் என்று நிருபித்து ஓய்வு பெற்ற வீரர் திரு. ஜெயரெட்ணம் அவர்கள் என்பதனையும் பதிவு செய்வதில் பெருமிதம் கொள்ளுகின்றேன்.
மேற்கூறியவைகளையும் கடந்து நான் விளையாடிய காலத்தில் திரு. ஜேக்கப் இளஞ்சிகம் மாமா (நான் மாமா என்றே அழைப்பது வழக்கம்;)
திரு. ஜேயரெட்ணம், இருவரும் என் தந்தையாருடன் சேர்ந்து என்
சிறப்பான விளையாட்டை பாராட்டுவதும், அதே வேளை என் தவறுகளை சுட்டிக்காட்டுவதும் அவர்களின் விளையாட்டு பண்புகளின் மகுடமாக இன்றும் எண்ணிக்கொள்வேன். இந்த வழிநடத்தல் என் விளையாட்டின் சிறப்புக்கு காரணங்களாக அமைந்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி பாராட்டி இன்னுமொரு வீரரின் கட்டுரையுடன் சந்திக்கும் வரை விடைபெறுகின்றேன்.
நன்றிகள்.

No comments:

Post a Comment