Saturday 2 February 2019

மனமே சாத்தான்


மனமே சாத்தான்   பேசாலைதாஸ்
அறிவுக் கனியை உண்ணக் கூடாது என்பது ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இடப்பட்ட உத்தரவு
ஆனால்
அதை சுவைக்க அவர்களுக்கு ஆசை
அது இயல்பு தானே
எது கூடாது என்று தடுக்கப் பட்டாலும்
அதன் மீது ஆசை எழுவது இயல்பு
மனம் அப்படித்தான் செயல் படும்
மனதிடம் இன்னொரு தந்திரமும் உண்டு
அது உங்களைத் தூண்டிவிடும்
பொறுப்பை யார் தலையிலாவது சுமத்தத் தான் அது தந்திரம் செய்யும்
எப்போது எது தடுக்கப் பட்டாலும்
அதன் மீது மனதிற்கு ஆர்வம் வந்து விடும்
அது ஒரு அழைப்பு போல
ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இயல்பாகவே கனியை சுவைக்க ஆசை ஏற்பட்டு விட்டது
அங்கே வேறு யாரும் இல்லை
ஆனால் கதை என்ன சொல்கிறது......???
சாத்தான் தூண்டி விட்டான் என்கிறது
இது தான் யார் மீதாவது பொறுப்பைத் தள்ளி விடும் மனதின் தந்திரம்
சாத்தான் ஒரு பலிகடா தான்
அந்த சாத்தான் மனதின் கண்டுபிடிப்பு
சாத்தான் தூண்டினான்
மயக்கி ஏமாற்றி விட்டான்
என்று சொல்லி விட்டால்
நீங்கள் பாவியல்ல என்று தப்பி விடலாமல்லவா..???
ஆனால் கவர்ச்சி ஏற்பட்டதென்னவோ
தடுக்கப் பட்டதனால்தான்
மனம் செய்த தந்திரம் கதையை மாற்றி விட்டது
ஆனால் கதை அழகானது
மனமே சாத்தான்
தந்திரத்திற்கான பழைய குறியீடு தான் பாம்பு
மனமே பாம்பு

Connection!
ல்லா நஸ்ருதீன் தன் கடையில் யாராவது ஏதாவது வாங்க வருவாரா என்று பார்த்துக் காத்திருந்தார்
ஒரு ஆள் வந்தான்
முல்லா தன் கடையில் என்னென்னவெல்லாம் விற்பனைக்கு உள்ளன என்று பேச ஆரம்பித்தவர் பேசிக்கொண்டே இருந்தார்
வந்தவன் ஒரு வார்த்தை சொல்லவும் சந்தர்ப்பம் தரவில்லை
கைவீச்சில் அந்த ஆளை ஒரு நாற்காலியில் உட்கார சொல்லி விட்டு டெலிபோனை எடுத்து
"அப்படியா ஒரு கோடிதானே...!!! வாங்கிக்கொள்" என்றார்
வந்தவனால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை
"பொறு...பொறு...
டெலிபோனுக்கு கனெக்ஷன் கொடுக்க டெலிபோன் கம்பெனியிலிருந்து தான் நான் வந்திருக்கிறேன்" என்றான்
டெலிபோனுக்குக் கனெக்ஷனே கொடுக்கவில்லை
ஒரு கோடியாவது ஒன்றாவது
பம்மாத்துப் பண்ணினார்
தொடர்புகள் அறுந்துவிட்ட உணர்வு வந்துவிட்டதா....???
சரிதான்
அந்தத் தொடர்புகளே மயக்கங்களாகத்தானே இருந்து விட்டன....?!?
தொடர்பே இல்லை
ஆனால், பிரார்த்தனைகளைச் சொல்லி நேரடியான லைனில் கடவுளோடு பேசிக்கொண்டு இருந்து விட்டீர்கள்
திடீரென நான் வந்து உன் டெலிபோனுக்கு இன்னும் கனெக்ஷனே கொடுக்கவில்லை என்பதை உணர வைத்து விட்டேன்
யாரிடம் நீ பேசிக் கொண்டிருக்கிறாய்....???
கனெக்ஷன் தராத டெலிபோனில் பிரார்த்தனைகளைக் கொட்டிக் கொண்டிருக்கிறாய்
வாழ்வோடு தொடர்புடையவனாகிக் கொள்
ஒரே வழி உனக்குள் போவதுதான்
ஏனென்றால்
உன்னுடைய அந்த மையத்தில்தான் உன் தொடர்பு இருக்கிறது
பிரபஞ்சத்திலிருந்து நீ பிரிந்துவிட்டவனல்லன்
பிரபஞ்சத்தோடான உனது தொடர்பே பிரக்ஞை
அதை உன்னால் பார்க்க முடியாது
அதனால்
மிகவும் எச்சரிக்கையோடு, கவனிப்போடு
சாட்சியாக நின்றிக்கும் உணர்வோடு
ஆழத்துக்கு - அடி ஆழத்துக்குப் போகும்போது
அந்த கனெக்ஷனை கண்டுபிடித்து விடுவாய்
புத்த நிலைதான் அந்த கனெக்ஷன்

Rail Journy
முதன் முதலாக ரயிலில் பிரயாணம் ஒரு கிராமத்துவாசி
தான் கொண்டு வந்த மூட்டைகளை தன் தலையில்
சுமந்து கொண்டு பிரயாணம் 
செய்தானாம்
கீழே வைத்தால் ரயிலுக்கு அதிக பாரமாக இருக்கும் என்று இப்படி செய்தானாம்
ரயில் அவனையும் அவனது மூட்டைகளையும் சேர்த்துதான் சுமக்கிறது
அவன் அந்த மூட்டையை தலையில் வைத்தாலும்
தரையில் வைத்தாலும்
ரயிலுக்கு எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பது அவனுக்கு தெரியவில்லை
அதுபோலவே
உன்னுடைய மனமும்
தேவையற்ற சுமை
நாள் முழுவதும் அந்த சுமையை
சுமந்து கொண்டு திரிகிறாய்
தேவையற்ற சமயத்தில்
மனதை கொஞ்சம் இறக்கி வைக்க தெரிந்து கொள்
ஒரு நிமிட நேரம் நீ அதை கீழே இறக்கி வைக்க முடியுமானால்
உன்னுடைய முழு வாழ்க்கையும்
மாற்றப் பட்டு விடும்
அப்போது நீ பாரமின்றி இருப்பதை உணர்வாய்
பாரமின்றி இருத்தல் உனக்கு சிறகுகள் கிடைப்பது போல
அதன் மூலம் நீ இந்த வானத்துக்கும்
சொர்க்கத்துக்கும் பறக்கலாம்
ஆன்மிக வாழ்வில் நீ பாரமற்றவனாக பறந்து கொண்டும்
ஒரு நதியைப் போல் ஓடிக் கொண்டும் இருக்கலாம்

Intution


ஓஷோவிடம் எல்லோரும் கேட்கும் கேள்வி
உங்களுக்கு ஜாதகத்திலும்... மதத்திலும்...
நம்பிக்கை உண்டா...??? என்பதுதான்
அதற்கு அவர் கூறும் பதில் -
" கிடையாது."
ஆனால் ...
அது என்னவென்று எனக்குத் தெரியும் என்பதுதான்...
ஓஷோ சிறுவனாக இருந்த போது
ஒரு ஜோசியர் அவரைப் பார்த்து
" நீ ஒரு புத்தனாக ஆவாய் என்றார்"
அதைச் சொன்ன ஜோசியரின் கண்களை ஆழ்ந்து பார்த்தார் ஓஷோ...
அப்போது அவரின் கண்கள் மூலமாக ஓஷோவுக்கு ஒரு விவரம் சொன்னது
பிறகு ஓஷோ அவரிடம் நீங்கள் என்னுடைய வருங்காலத்தைப் பற்றி சொல்ல வந்திருக்கிறீர்கள்...
அதற்கு முன்பாக நான் உங்கள் வருங்காலத்தைச் சொல்கிறேன் என்றார்
அதற்கு அவர்
" என்ன என் வருங்காலத்தைப் பற்றி நீ சொல்லப்
போகிறாயா....???
" ஆமாம் நீங்கள் விரைவில் ஒரு புத்த பிட்சுவாக மாறப் போகிறீர்கள் "
அவர் சிரித்துக் கொண்டே
" அது நடக்காது
ஏனெனில் அந்த எண்ணம் சிறிது கூட என்னிடம் கிடையாது"
அதற்கு ஓஷோ நான் பந்தயம் கட்டுகிறேன்
அது நடக்கும்
அவர் சரி எவ்வளவு பணம் பந்தயம் கட்டப் போகிறாய்...???
அதற்கு ஓஷோ பந்தயம் முக்கியமல்ல
நான் ஜெயித்தால் பணம் உங்களிடமிருந்து எனக்கு வரப் போகிறது...
நான் தோற்றால் எதையும் நான் இழக்கப் போவதில்லை
ஏனெனில்
என்னிடம் எதுவும் கிடையாது...
பிறகு அந்த ஜோசியர்
சரி இந்த சவாலை நான் ஏற்றுக் கொள்கிறேன்...
அப்படி நான் புத்த பிட்சுவாக மாறினால் ...
இந்த வைரம் பதித்த தங்கத்தால் ஆன விலை உயர்ந்த கடிகாரத்தைப்பரிசாக அளிப்பேன்
ஓஷோவுக்கு ஜாதகத்தில் நம்பிக்கையே இல்லை...
அது 100 க்கு 99 சதவீதம் முட்டாள்தனமானது
ஒரு சதவீதம்தான் உண்மையானது
அந்த ஒரு சதவீதத்தை அறிய ஒருவர் ஆழ்ந்த... தீர்க்கமான...
நுண்ணறிவும்...
ஒரு ஞானியின் தன்மையும் வேண்டும்
ஏனெனில் ஒருவரது வருங்காலம்
அவரது மனத்தில் ஆழத்தில் பதிந்து இருக்கிறது
என்று பின் நாட்களில் கூறுகிறார் ஓஷோ
ஓஷோவுக்கு சுமார் பதினான்கு வயது இருக்கும்போது
அவர் தன் தாத்தாவோடு வாரணாசிக்கு சென்று கொண்டிருந்தார்
அப்பொழுது வாரணாசிக்கும் சாரநாத்துக்கும்
இடையில் ஒரு கோவிலின் வாசலில்
ஒரு வயோதிக புத்த பிட்சு பலரோடு சேர்ந்து உட்கார்ந்து இருந்ததை ஓஷோ பார்த்தார்
நேரே அவரிடம் சென்று
ஓஷோ பெரியவரே
என்னை அடையாளம் தெரிகிறதா..??? என்றார்
அதற்கு அவர் நான் உன்னைப் பார்த்ததே இல்லையே என்றார்
ஓஷோ அவரிடம்
ஆமாம், இப்பொழுது அது கஷ்டம்தான்
சரி எங்கே அந்தக் கடிகாரம் என்றார்..???
அவர் மிகவும் ஆனந்தப்பட்டு கண்ணீர் வழிய அதை தன்
அங்கியிலிருந்து எடுத்து
ஓஷோவிடம் கொடுத்து அவரை வணங்கினார்
உடனே ஓஷோ அவரிடம் நீங்கள் ஒரு சந்நியாசி
சிறுவனாகிய என்னை நீங்கள் எப்படி வணங்கலாம்
அதற்கு அந்த ஜோசியர் நீ என்னை விட
மனதளவில் பெரியவன்
நான் உன்னை வணங்கத்தான் வேண்டும்
அது சரி எனக்கு ஒன்றை மட்டும் சொல்
நான் எவ்வளவோ பேருக்கு ஜோசியம் சொல்லி இருக்கிறேன்
ஆனால் என்னையே என்னால் கணிக்க முடியவில்லை...!!!
நீ எப்படி அதைச் செய்தாய்.....???
அதை மட்டும் தயவு செய்து எனக்குச் சொல் என்றார்
ஓஷோ - அது உள் உணர்வு
( Intution) அதை விளக்க முடியாது என்றார் 

கலீல் ஜிப்ரான் கவிதைகள்
துறவி
மலைகளுக்கு அப்பால் இருந்த 
துறவியின் குடிலில்
நான் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்

அப்போது ஒரு திருடன்
நொண்டியபடி தலை கவிழ்ந்து சோகத்துடன்
அவரை நாடி வந்தான்
"முனிவரே..!!!
எனக்கு நிம்மதி தாருங்கள்
உங்களால் மட்டுமே முடியும்
என் பாவங்கள் என்னை அழுத்துகின்றன.."
"வருந்தாதே..!!!
என் பாவங்களும் என்னை அழுத்துகின்றன.."
"ஆனால்
நான் ஒரு திருடன்.. கொள்ளைக்காரன்..!!!"
"நானும் திருடன் தான்
கொள்ளைக்காரன் தான்..!!!"
"நான் ஒரு கொலைகாரன்
என் கையில் பலரின் ரத்தம் தோய்ந்திருக்கிறது..!!!"
"நானும் கொலைகாரன் தான்
என் கையிலும் பலரின் ரத்தக் கறை..!!!"
"நான் எண்ணிலடங்கா
குற்றங்களைப் புரிந்துள்ளேன்..!!!"
"நானும் செய்துள்ளேன்..!!!"
திருடன் எழுந்து நின்றான்
புரிந்து கொள்ள முடியாத
ஒரு பார்வை அவனிடம்
திரும்பி நடந்தான்
நிமிர்ந்த ஒரு துள்ளலுடன்
நான் துறவியிடம் கேட்டேன்
"நீங்கள் செய்யாத குற்றங்களையெல்லாம்
செய்ததாய் ஏன் சொன்னீர்கள்..???
அவன் உங்கள் மேல்
நம்பிக்கையிழந்து போகிறான் பாருங்கள்..!!!"
துறவி சிரித்துக் கொண்டே கூறினார்
"அவன் நம்பிக்கையிழந்து போவது உண்மை தான்
ஆனால்
நிம்மதி அடைந்து போகிறான்..!!!"
நான் அப்போது தான் கவனித்தேன்
திருடனின் உற்சாகமான பாடல் ஒலி
பள்ளத்தாக்கில் வழிந்து நிறைந்து கொண்டிருந்தது

சுவாமி விவேகானந்தர் 
 சகோதரா.....!!!
நீ ஏன் அழுகுகிறாய்..???
உனக்கு மரணம் இல்லை
நோய் இல்லை
துன்பம் இல்லை
உனக்கு துரதிர்ஷ்டம் இல்லை
நீ ஏன் அழ வேண்டும்..???
மாறுதலோ, மரணமோ உனக்கு இல்லை
இருக்கின்ற ஒரே பொருள் நீயே
உன் ஆன்மாவாக இரு 🔥
💥 சுவாமி விவேகானந்தர் 💥

No comments:

Post a Comment