Monday, 26 October 2020

வத்திக்கான்: பாசிஸ்டுகளின் முதலீட்டு வங்கி

வத்திக்கான்: பாசிஸ்டுகளின் முதலீட்டு வங்கி


வத்திக்கான் உலகிலேயே மிகவும் சிறிய "நாடு". அதனை நாடென்று அழைக்க முடியுமா என்பதே சந்தேகம். ஏனெனில், ரோம் நகரத்தில் ஒரு சிறிய பிரிவு தான் வத்திக்கான். அப்படியானால் அதனை எதற்காக தனி நாடு என்று அழைக்கிறார்கள். அதற்கு சரித்திரப் பின்னணி உண்டு. 20 ம் நூற்றாண்டு வரையில், அது உண்மையிலேயே ஒரு தனியான நாடு தான். ரோம் நகரமும், அதனை சுற்றியுள்ள மத்திய இத்தாலியின் சில பகுதிகளும் வத்திக்கானின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.

20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இத்தாலியில் ஆட்சியை பிடித்த முசோலினி தலைமையிலான பாசிஸ்டுகள், வத்திக்கானின் ஆட்சிக்குட்பட்ட  பகுதிகளை இத்தாலியுடன் சேர்த்துக் கொண்டார்கள். அதற்கு பதிலாக, இன்றுள்ள வத்திக்கான் நகரின் சுதந்திரம் அங்கீகரிக்கப் பட்டது. அதாவது இரண்டு அரசியல் சக்திகளும், ஒருவரின் சுதந்திரத்தை மற்றவர் அங்கீகரித்தார்கள். வத்திக்கானுக்கும் பாசிஸ்டுகளுக்கும் இடையிலான உறவுகள் அவ்வாறு தான் ஆரம்பமாகின. இந்த நெருக்கத்திற்கு இன்னொரு காரணமும் உண்டு. வத்திக்கானுக்கும், பாசிஸ்டுகளுக்கும் கம்யூனிஸ்டுகளை கண்டால் பிடிக்காது. அன்று இத்தாலி இருந்த நிலையில், கம்யூனிஸ்டுகளின் வளர்ச்சி வேகமாக அதிகரித்துக் கொண்டிருந்தது. அதனை தடுப்பது அவசியம் என்று நினைத்தார்கள். கம்யூனிசத்தை வர விடாமல் தடுப்பதற்காக, வத்திக்கான் உலகம் முழுவதும் தோன்றிய  பாசிச சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டமை ஒன்றும் புதினமல்ல. சோஷலிச கிழக்கு ஐரோப்பாவின் ஒரேயொரு கத்தோலிக்க நாடான போலந்தில் சதி செய்து குழம்ப நிலையை ஏற்படுத்தி, அதன் மூலம் "கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்கு" வழிவகுத்ததும் உலகம் அறிந்த விடயங்கள். 

முசோலினி, வத்திக்கானின் சுதந்திரத்தை மட்டும் அங்கீகரிக்கவில்லை. பாசிஸ்டுகள் இத்தாலி மக்களிடம் இருந்தும், எத்தியோப்பியா போன்ற காலனிகளிடம் இருந்தும் கொள்ளையடித்த பெருந்தொகை பணத்தை, பாதுகாப்பாக வத்திக்கானிடம் கொடுத்து வைத்தார்கள். இரண்டாம் உலகப்போரில் பாசிஸ்டுகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், அந்தப் பணம் வத்திக்கானிடம் பத்திரமாக இருந்தது. அதனை அவர்கள் என்ன செய்தார்கள்? பிற ஐரோப்பிய நகரங்களில், அசையா சொத்துக்களில் முதலீடு செய்தார்கள். இலண்டன், பாரிஸ் போன்ற நகரங்களில் மிகவும் செலவு பிடிக்கும் மாவட்டங்களில் உள்ள ஆடம்பர வீடுகளின், அடுக்குமாடி கட்டிடங்களின் உரிமையாளர் வத்திக்கான் என்றால் நம்புவீர்களா? பிரிட்டனில் வெளியாகும் கார்டியன் பத்திரிகை, அது சம்பந்தமான விபரங்களை வெளியிட்டுள்ளது.(How the Vatican built a secret property empire using Mussolini's millions)  

வத்திக்கான் வசம் இருக்கும் முசோலினியின் பணத்தின், இன்றைய மதிப்பு 680 மில்லியன் யூரோக்கள். அதில் ஒரு பகுதி வீட்டு மனைகளில் முதலீடு செய்யப் படுகின்றது. வத்திக்கானுக்கு விசுவாசமான வங்கியாளர்கள் அதனை நிர்வகித்து வருகின்றனர். அனேகமாக அவை வத்திக்கானுக்கு சொந்தமான பினாமி முதலீட்டு நிறுவனங்களாக இருக்கும். Paolo Mennini, மற்றும்  John Varley ஆகியோர் வத்திக்கானுக்கு விசுவாசமான குறிப்பிடத் தக்க முக்கியமான வங்கியாளர்கள் ஆவர். பிரிட்டனின் கத்தோலிக்க வங்கியாளரான John Varley, பிரிட்டிஷ் காலனிய நாடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வைத்திருக்கும்  Barclays வங்கியின் தலைமை நிர்வாகி ஆவர். இந்த முதலீடுகளில் கிடைக்கும் இலாபம் எங்கே போகின்றது என்பன போன்ற விபரங்கள் யாருக்கும் தெரியாது. வத்திக்கானும், அதனோடு சம்பந்தப் பட்ட நிறுவனங்களும் இரகசியமாக வைத்திருக்கின்றன. அந்த நிறுவனங்களின் கணக்கு வழக்குகள் எதுவும் பகிரங்கப் படுத்தப் படுவதில்லை. சுதந்திரமான கணக்காளர் எவரையும் பரிசோதிக்க அனுமதிப்பதில்லை.  

வத்திக்கானுக்கு சொந்தமான மூலதனம், பல நாடுகளுக்கு  கைமாறியுள்ளது. 1930 ம் ஆண்டு, பாசிஸ்டுகளின் பணம், லக்சம்பேர்க் நாட்டை சேர்ந்த வங்கி ஒன்றின் கணக்கில் வைக்கப் பட்டிருந்தது. இரண்டாம் உலகப்போர் தொடங்கியதும், அங்கிருந்து "போரில் நடுநிலை வகித்த" சுவிட்சர்லாந்துக்கு மாற்றப் பட்டது. அதில் ஒரு பகுதி, பின்னர்  அமெரிக்க வங்கிகளிலும் வைப்பிலிடப் பட்டது. லக்சம்பேர்க், சுவிட்சர்லாந்து என்பன, சர்வதேச கறுப்புப் பணத்தை கவரும் நோக்குடன், வரிச் சலுகை வழங்கும் நாடுகள் என்பது குறிப்பிடத் தக்கது. முசோலினியின் பணம் வத்திக்கானிடம் இருப்பது, ஏற்கனவே தெரிந்த விடயம் தான். இது சம்பந்தமான விபரங்கள், ஏற்கனவே பல நூல்களில் வெளியாகி உள்ளன. இதை விட, "மதக் கடமைகளுக்கான நிறுவனம்" (IOR) என்ற பெயரில் வத்திக்கானின் உத்தியோகபூர்வ வங்கி ஒன்று இயங்கி வருகின்றது. அதன் நிலையான சொத்தின் மதிப்பு  6 கோடி யூரோக்களுக்கு மேல் தேறும். அந்த வங்கியின் நிர்வாகி  Paolo Cipriani, தாங்கள் "மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றும், கருப்பு பணத்தை பதுக்கி வைக்கும் நாடுகளுடன் தொடர்பு வைப்பதில்லை..." என்று கூறுகின்றார். ஆனால் உண்மை என்ன என்பது கர்த்தருக்கு மட்டுமே தெரியும். அந்த வங்கியில் முப்பத்தி ஐயாயிரம் கணக்குகள் இருப்பதாகவும், அவை யாவும் உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க பங்குத் தந்தைகள் போன்றோருக்கு சொந்தமானவை என்றும் கூறுகின்றனர். 

வத்திக்கானின் வங்கியானது உலகிலேயே மிகவும் இரகசியமான வங்கி ஆகும். வத்திக்கானின் வங்கி நிர்வாகிகளில் ஒருவர், 1982 ம் ஆண்டு பாலம் ஒன்றின் கீழ் பிணமாக கண்டெடுக்கப் பட்டார். அது ஒரு கொலையா அல்லது தற்கொலையா என்ற மர்மம் இன்னும் துலங்கவில்லை. வத்திக்கான், சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடுகின்றது என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது. வத்திக்கான் வங்கி, கிரிமினல்களின் கறுப்புப் பணத்தை வெளுப்பதற்கு உதவுகின்றது என்ற சந்தேகம் ஏற்கனவே இருந்து வருகின்றது. ஏற்கனவே அந்த சந்தேகம் காரணமாக, 23 மில்லியன் யூரோ பெறுமதியான பங்குகள், நீதி அமைச்சின் உத்தரவின் பேரில் முடக்கி வைக்கப் பட்டுள்ளது. அமெரிக்க வங்கியான JP Morgan Chase,  வத்திக்கானின் கணக்கு ஒன்றை மூடி வைத்துள்ளது. போதுமான தகவல்கள் இல்லாத, சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டின் பேரில் அந்த கணக்கு முடக்கப் பட்டது. 

 

கிரேக்க புராணக் கதைகள்

கற்பின் பெருமை கூறும் கிரேக்க புராணக் கதைகள்

நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! 

நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 18



(பதினெட்டாம் பாகம்)


"பெலோப்பெனோஸ் நாட்டிற்கு எகிப்தியர்கள் எவ்வாறு வந்தார்கள்? இந்த கிரேக்கப் பகுதியில் எவ்வாறு அரசர்களானார்கள்?" - ஹெரோடொதுஸ் (வரலாறு, VI.55) 


 ஐரோப்பியர்கள், தமது நாகரீகம் பிறந்த இடம் என்று பெருமைப் படும், கிரேக்கத்தில் வாழ்ந்த ஹெரோடொதுஸ் என்பவர் தான், முதன் முறையாக கிரேக்கர்களின் வரலாற்றை விரிவாக எழுதி வைத்தார். இன்றைக்கு ஐரோப்பிய நாகரீகம் பற்றி ஆராயும் சரித்திர ஆசிரியர்கள், ஹெரோடொதுஸ் எழுதிய குறிப்புகளை அடிக்கடி மேற்கோள் காட்டுவதுண்டு. அவர் எழுதியவை எல்லாம் உண்மைகள் அல்ல. பல நாடுகளை, மக்களை பற்றிய தவறான தகவல்களும் அவரது எழுத்துக்களில் காணப்படுகின்றன. அனேகமாக, பிற இனங்களின் நாகரிக முன்னேற்றத்தை கண்டு பொறாமை கொண்ட ஒருவரின் கருத்துக்களாகவே அவை தெரிகின்றன. ஆயினும், பண்டைய கால ஐரோப்பா பற்றி மட்டுமல்ல, மத்திய கிழக்கு, எகிப்து போன்ற நாடுகளை பற்றி அவரது குறிப்புகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. அந்த வகையில், கிரேக்கத்தின் பெலோப்போனோஸ் பகுதியில், எகிப்தியர்கள் (கறுப்பினத்தவர்) வாழ்ந்து வந்ததை ஹெரோடொதுஸ் எழுதிய சரித்திரத்தில் இருந்து தெரிகின்றது. நான் ஒரு சுற்றுலா பயணியாக கிரீஸ் நாட்டிற்கு சென்றிருந்த பொழுது, ஏதென்ஸ் நகர அருங்காட்சியகத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கே, சுருளான தலைமுடியுடன் ஆப்பிரிக்க கறுப்பின தோற்றத்தை கொண்ட ஒரு பெண்ணின் சிலை ஒன்று இருந்தது. அதைத் தவிர, அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களில், கறுப்பின மக்கள் போன்று தோற்றம் கொண்டவர்களின் ஓவியங்கள் காணப்பட்டன. ஆகவே, ஒரு காலத்தில் இன்றைய கிரேக்கப் பகுதிகளில் கறுப்பின மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும்.


இன்றைய எகிப்துக்கும், கிரீஸுக்கும் நடுவில் கிரேட்டா  (Creta) தீவு அமைந்துள்ளது.  அந்த தீவை ஆண்ட மீனோ அரச வம்சத்தினர், அந்தப் பிராந்தியத்தில் வல்லமை மிக்க கடற்படையை கொண்டிருந்தனர். கிரேக்க நாடு அவர்களுக்கு அடங்கி திறை செலுத்திக் கொண்டிருந்தது. இறுதியில் இயற்கைப் பேரழிவு, கிரேக்கப் படையெடுப்புகள் காரணமாக, கிரேட்டாவின் மீனோ நாகரீகம் அழிந்து விட்டது. அதன் பிறகு தான் கிரேக்க நாகரீகம் ஆரம்பமாகியது. இதிலே கவனிக்கப் பட வேண்டிய விடயம், கிரேட்டா நாட்டவர்கள் கிரேக்க இனத்தவர் அல்ல. அவர்கள் தனியான மொழியை பேசினார்கள். எகிப்துடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்தனர். ஆகவே அவர்கள் பண்டைய எகிப்தில் இருந்து குடியேறிய இனமாக இருக்கலாம். கிரேட்டா அரச வம்சமான மீனோ என்ற பெயர், தமிழ்ச் சொல்லான மீனில் இருந்து வந்திருக்கலாம் என, பேராசிரியர் முனைவர் க.ப. அறவாணன் ஒரு நூலில் எழுதியிருக்கிறார். அதனை நிரூபிப்பது போல, அண்மையில் ஆராயப்பட்ட கல்வெட்டு ஒன்றில், "மீனு ரொஜா" (மீன் ராஜா) என்று மன்னரின் பெயர் குறிப்பிடப் பட்டிருந்தமை கண்டுபிடிக்கப் பட்டது.


ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும், வட இந்தியாவிலும், சீனாவிலும், வெள்ளையினத்தவர்கள் பெருமளவில் குடியேற ஆரம்பித்த காலம் அதிகமில்லை. எப்படியும், மூவாயிரம் அல்லது ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் தான் அந்த குடியேற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். அனேகமாக, இன்று நடைபெறும் குடிசனப் பரம்பல் போன்று, தனி நபர்களாக, சிறு குழுக்களாக வந்து குடியேறினார்கள். கறுப்பினத்தவரின் நாடுகளில், மன்னர்களுக்கு விசுவாசமான கூலிப் படைகளாக இருந்துள்ளனர். அவ்வாறு இராணுவத்தில் சேவையாற்றிய வெள்ளையின ஆண்கள், உள்ளூர் பெண்களை மணம் முடித்து அங்கேயே தங்கி விட்டனர். உள்ளூர் மக்களின் மொழிகளை பேசக் கற்றுக் கொண்டனர். அந்தக் காலங்களில், இன்றிருப்பதைப் போன்ற இன/மத துவேஷங்கள் இருக்கவில்லை. அந்நியர்களாக இருந்தாலும், குடியேறிய நாட்டின் மொழியை பேசி, அந்நாட்டு மக்களைப் போன்றே வாழ்வதற்கு தடையேதும் இருக்கவில்லை. அதனால் தான், இன்றைக்கு வெள்ளை நிறம் கொண்ட மக்கள், பல்வேறு மொழிகளை பேசுகின்றனர். அரபு மொழி பேசும் நாடுகளில் குடியேறியவர்கள் அரபி பேசினார்கள். சமஸ்கிருதம் பேசும் இந்திய நாடுகளில் குடியேறியவர்கள், சமஸ்கிருதம் (இன்று உருது அல்லது ஹிந்தி) பேசினார்கள்.


வெள்ளையின மக்கள், கறுப்பின அரசர்களின் கூலிப் படைகளாக இருந்ததால், இராணுவ அறிவு கைவரப் பெற்றவர்களாக இருந்தனர். கறுப்பினத்தவரின் சாம்ராஜ்யங்கள் வீழ்ந்து கொண்டிருந்த காலங்களில், புதிதாக தோன்றிய ராஜ்யங்களில் வெள்ளையின அல்லது கலப்பின மக்களின் ஆதிக்கம் அதிகரித்தது. அவர்கள் மத்தியில் இருந்து புதிய அரச வம்சங்கள் தோன்றவாரம்பித்தன. உண்மையில், அவர்களின் தோல் நிறம் மட்டுமே வெள்ளையாக இருந்தது. ஆனால், அவர்களின் மொழியும், கலாச்சாரமும் மாறுபட்டிருந்தது.


உதாரணத்திற்கு, லைபீரியா என்ற நாட்டில் பெருமளவு அமெரிக்க கருப்பர்கள் குடியேறியுள்ளனர். ஆனால், அவர்களுக்கும், சுற்றவர உள்ள பிற ஆப்பிரிக்க இனங்களுக்கும் இடையில் தோல் நிறத்தில் மட்டுமே ஒற்றுமையுண்டு. மற்றும்படி, அவர்களது மொழி, கலாச்சாரம், நடையுடை பாவனை யாவும் அமெரிக்கர்களை போன்றிருக்கும். அவ்வாறு தான், பண்டைய கிரேக்கத்தை சேர்ந்த வெள்ளையர்கள், எகிப்தியரிடம் இருந்து நாகரீகத்தை கற்றுக் கொண்டனர். அவ்வாறு நாகரீகமடைந்த வெள்ளையர்கள், தமது அயலில் வாழ்ந்த பிற வெள்ளை இனங்களை "காட்டுமிராண்டிகள்" என்று அழைத்தார்கள். வட ஈராக்கில் தோன்றிய மித்தானி என்ற நாட்டை பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அங்கு அரச கரும மொழியாக சமஸ்கிருதம் போன்ற ஒரு மொழி அல்லது, புராதன இந்திய மொழி கோலோச்சியது. நமக்கு நன்கு அறிமுகமான இந்து மத தெய்வங்கள், புராணக் கதைகள் என்பன, இன்றைய ஈராக், துருக்கி ஆகிய நாடுகளில் தோன்றியிருக்க வேண்டும். அதற்கான சாத்தியப்பாடுகளை நாம் விரிவாக ஆராய்வோம்.


விநாயகர் என்ற இந்து தெய்வத்திற்கு, கணபதி, கணேஷ் என்ற பெயர்கள் உண்டு. கணபதி என்றால், இராணுவ தளபதி என்ற பொருள் படும். மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு, வெள்ளையின மக்கள், இராணுவ மயமாக்கப்பட்ட சமுதாயமாகவே வாழ்ந்து வந்தனர். ஸ்பார்ட்டா (தென் கிரேக்கம்), ஹதூசா (மத்திய துருக்கி) போன்ற இடங்களில் தோன்றிய ஆதி கால வெள்ளையின நாகரீகங்கள், முழுக்க முழுக்க இராணுவ அடிப்படையைக் கொண்டிருந்தது. ஆண்கள் சிறு வயதிலேயே இராணுவத்தில் சேர்ந்து விட வேண்டும். அவர்களது வாழ்நாளில் பெரும் பகுதியை இராணுவ முகாம்களில் கழிக்க வேண்டும். அந்த நகர-தேசங்களின் வளங்கள் முழுவதும் இராணுவத்தை பராமரிப்பதிலேயே செலவிடப் பட்டன. அவ்வாறான இராணுவவாத கொள்கை கொண்ட சமுதாயத்தில், "கணபதி" என்ற தெய்வத்தை  வழிபட்டிருக்க கூடிய சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு. 


"கணேஷ்" என்ற பெயரில் ஒரு பண்டைய நகரம் இருந்தது. ( Kanesh, http://en.wikipedia.org/wiki/Kültepe) இன்றைய துருக்கி நாட்டில், Kayseri எனும் நகரத்தில் இருந்து சிறிது தூரத்தில் அது உள்ளது.  கணேஷ் நகரம் பாபிலோனியருடன் வர்த்தக தொடர்பு கொண்டிருந்ததால், அதன் முக்கியத்துவம் வெளிநாடுகளிலும் உணரப் பட்டது. கணேஷ் நகரில் வாழ்ந்த மக்கள் வழிபட்ட தெய்வங்களுக்கு வாகனமாக விலங்கினங்கள் இருந்துள்ளன. எலி, மாடு, மயில் போன்ற விலங்கினங்களை வாகனங்களாக கொண்ட இந்து மத கடவுளரை இது நினைவுபடுத்துகின்றது. கணேஷ் நகரில் வாழ்ந்த மக்கள், ஹித்தித் அல்லது ஹத்தி இனத்தவர் எனத் தெரிகின்றது. ஏதோ காரணத்தால் கணேஷ் நகரம் கைவிடப் பட்டு, ஹதூசா என்ற புதிய நகரம் உதயமாகியது. அவர்கள் அங்கிருந்த படியே ஒரு சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டார்கள்.


இன்றைய துருக்கி பகுதிகளில் வாழ்ந்த வெள்ளயின ஹித்தித் மக்களுக்கும், இன்றைய ஈராக்கில் வாழ்ந்த அசிரியர்களுக்கும் இடையில் அடிக்கடி போர் மூண்டன. அவை எல்லாம் அரசியல் ஆதிக்கத்திற்கான போர்களே அன்றி, இன மேலாண்மைப் போர்களல்ல. அவர்களுக்கு சவாலாக விளங்கிய அசிரிய பேரரசன் ஒருவனின் பெயர் "நரம் சின்". இந்தப் பெயர், விஷ்ணு புராணத்தில் வரும் நரசிம்மன் என்ற மன்னனை நினைவு படுத்துகின்றது அல்லவா? அசிரியர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்களால் தோற்கடிக்கப் பட்ட நாடுகளில் பல அழிவுகளை உண்டாக்கினார்கள். அதனால், அவர்களால் பாதிக்கப்பட்ட பிற இனங்கள் அசிரியர்களை கொடியவர்களாக கருதியிருக்க வாய்ப்புண்டு. அனேகமாக, இந்து மத புராணங்களில் வில்லன்களாக சித்தரிக்கப்படும் "அசுரர்கள்" என்ற சொல் அங்கிருந்து தோன்றி இருக்கலாம். ஏனெனில், அசிரியர்களின் தலைநகரத்தின் பெயர் "அசுரா"! 


அசிரியர்களின் சாம்ராஜ்யத்தில் பல்லின மக்கள் வாழ்ந்தனர். அந்தக் காலத்திலேயே பிரஜைகள் மதித்து நடக்க வேண்டிய சட்டங்கள் உருவாக்கப் பட்டிருந்தன என்பது ஒரு சிறப்பம்சம். இருந்தாலும் சில சட்டங்கள் பிற்போக்கானவையாக இருந்தன. உதாரணத்திற்கு, பெண்கள் வெளியே போகும் பொழுது, உடலையும், முகத்தையும் மூடும் பர்தா (அல்லது பூர்க்கா) என்ற ஆடை அணிந்திருக்க வேண்டும். குறிப்பாக குடும்பப் பெண்களுக்கு அது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. விலை மாதுக்கள் மட்டுமே முகத்தை மூடாமல் ஆடை அணிந்திருக்க வேண்டும். (The Code of the Assyrians, http://www.fordham.edu/halsall/ancient/1075assyriancode.asp) இந்த வழக்கம் பிற்காலத்தில், பல இஸ்லாமிய நாடுகளில் பின்பற்றப் பட்டு வந்தமை அனைவரும் அறிந்ததே. ஆனால், 19 ம் நூற்றாண்டு வரையில் கூட, வட இந்தியாவை சேர்ந்த இந்துப் பெண்களும், கிரேக்கத்தை சேர்ந்த கிறிஸ்தவ பெண்களும், முகத்தை மூடி பர்தா அணிந்து தான் வெளியே சென்றனர்.


கற்பு என்ற ஒழுக்க நெறி கூட, மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்த கலாச்சாரம் தான். பெரியாரும், திராவிட இயக்க அறிஞர்களும் இதனை வலியுறுத்தி வந்தனர். நான் முன்பு ஒரு தடவை எழுதியது போல (பார்க்க: கோயிலில் பாலியல் தொழில்) தமிழர்களும் ஒரு காலத்தில் தாய்வழிச் சமுதாயமாக இருந்தனர். மத்திய கிழக்கில் மாறிக் கொண்டு வந்த ஆணாதிக்க சமுதாய அமைப்பு, தமிழர் மத்தியிலும் பரவியது. திராவிட கொள்கையாளர்கள், அதனை ஆரியர்கள் புகுத்தினார்கள் என்று நம்புகின்றனர். ஆனால் யார் அந்த ஆரியர்கள்? தமது கலாச்சாரம், மொழி என்பனவற்றை அவர்களால் எவ்வாறு எம்மீது திணிக்க முடிந்தது ?


உண்மையில், நாங்கள் தான் அந்த ஆரியர்கள்! அங்கிலேயரின் காலனிய ஆட்சிக் காலத்தில், நாங்கள் ஆங்கில மொழி பேசவும், ஆங்கிலேயரை போன்ற நடை, உடை, பாவனைகளை கற்றுக் கொள்ளவில்லையா? அதே போன்று,  நாங்களாகவே  ஆரியரின் மதத்தை, கலாச்சாரத்தை பின்பற்ற தொடங்கினோம்! அந்தக் கருதுகோளை நிரூபிக்கும் ஆதாரங்கள் சரித்திரத்தில் நிறைய உள்ளன. தமிழகத்தை ஆண்ட பல்லவர்கள், ஈரானில் இருந்து வந்த வெள்ளை இனத்தவர்கள். அவர்கள் தமது ஈரானிய (ஆரிய) கலாச்சாரத்தை கொண்டு வந்து புகுத்தி இருப்பார்கள். ராஜராஜ சோழன் காலத்தில் சைவ மதத்துடன், ஆரிய மயமாக்கலும் விரைவாக பரவியது.


பண்டைய காலத்து வரலாற்றை தேட வேண்டுமானால், அலெக்சாண்டரின் படையெடுப்புகளில் இருந்து ஆரம்பிக்கலாம். உலகம் முழுவதும் வென்ற அலெக்சாண்டர் இந்தியாவில் தோற்று திரும்பினான். இந்த வரலாறு ஒரு பாதி மட்டுமே உண்மை. இன்னொரு பாதிக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வட-மேற்கு இந்தியாவில் சில பகுதிகளை அலெக்சாண்டரின் படைகள் கைப்பற்றின. இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய பகுதிகளில், உள்ளூர் பெண்களை மணம் முடித்துக் கொண்டு, அலெக்சாண்டரின் கிரேக்க படையினர் தங்கி விட்டார்கள். பிற்காலத்தில் அங்கே பல வெள்ளையின ராஜ்ஜியங்கள் தோன்றின. அவர்கள் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் தமது ராஜ்ஜிய எல்லைகளை விஸ்தரித்தார்கள். அவர்கள் மூலம் கிரேக்கர்களின் கலாச்சாரம், இந்தியாவில் பரவி இருக்கலாம் அல்லவா? கிரேக்க கலாச்சாரம் என்றால் என்ன?


கிரேக்கர்களின் புராணக் கதைகளில், "மெடூசா" என்ற அரக்கி பற்றிய கதை பிரபலமானது. தலையில் பாம்புகள் நெளியும், விகாரமான தோற்றம் கொண்ட சூனியக் கிழவி போன்ற மெடூசாவின் கதையை, குழந்தைகளை பயமுறுத்த சொல்லப் படுவதுண்டு. அந்தக் கதையின் படி, மெடூசா ஒரு காலத்தில், கிரேக்க நாட்டின் பேரழகியாக இருந்தவள். அவளை மணம் முடிப்பதற்கு எத்தனையோ ஆண்கள் போட்டி போட்டார்கள். ஏதென்ஸ் நகர தேவதையான அதினாவின் கோயிலுக்கு, மெடூசா வழிபட செல்வது வழக்கம். ஒரு நாள், யாருமற்ற நேரத்தில் அங்கு வந்த பொசெய்டொன், மெடூசாவை கோயிலில் வைத்தே பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கினான். தனது கோயிலிலேயே இவ்வாறான அக்கிரமம் நடந்ததால், அதினா கோபமுற்றாள். ஆனால், பொசெய்டொன் கிரேக்கர்களின் சமுத்திரக் கடவுள். அதனால் அவனை தண்டிக்க முடியாது. பாதிக்கப்பட்ட பெண்ணான மெடூசா மீது பழி போடப்பட்டது. தெய்வ சந்நிதானத்தில் கற்பிழந்த மெடூசா, அந்தக் கணமே விகாரமான வயோதிப மாதுவாக மாற வேண்டுமென சபிக்கப் பட்டாள். 


"சேலையில் முள் விழுந்தாலும், முள்ளில் சேலை விழுந்தாலும் நஷ்டம் சேலைக்கு தான்..." என்று பெண்ணின் கற்பை பத்திரமாக பாதுகாக்கக் கோரும், பிற்போக்கான இந்தியக் கலாச்சாரம் உங்கள் மனக்கண்ணில் வரலாம். கிரேக்கர்கள் மத்தியிலும் அதே மாதிரியான கலாச்சாரம் இருந்ததை மெடூசா கதை மூலம் அறிய முடிகின்றது.  ஹோமர் எழுதிய காவியமான "ஒடிசி"யிலும், ஒரு திருமணமான பெண், கணவன் கடல் கடந்து சென்று வருடக் கணக்காக திரும்பி வரா விட்டாலும், சோரம் போகாமல் கற்பெனும் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று போதிக்கின்றது. ஹோமர் எழுதிய ஒடிசி எனும் காவியத்தில், பல இடங்கள் இராமாயணத்தை நினைவூட்டுகின்றன. ஒடிசி காவியத்தில்,  த்ரோய் நாட்டவரால் கடத்திச் செல்லப்பட்ட கிரேக்க அரசியை  மீட்பதற்காக பெரும் போர் நடந்தது. இராமாயணத்தில் இலங்காபுரியை சேர்ந்த இராவணனால் கடத்தப் பட்ட  சீதையை மீட்பதற்காக போர் நடந்தது.  "யாராலும் வளைக்க முடியாத வில்லை வளைத்த கதை", இராமாயணத்திலும், ஓடிசியிலும் ஒரே மாதிரி சொல்லப் படுகின்றது.


த்ரொய் நாட்டுடன் போருக்கு சென்ற ஓடிசியின் கப்பல், திரும்பி வரும் வழியில் திசை மாறி கடலில் தத்தளிக்கின்றது. பத்தாண்டுகளுக்கும் மேலாக பல புதிய நாடுகளை கண்டு, அங்கெல்லாம் தீரச் செயல்களை செய்து களைத்த ஒடிசி, இறுதியில் தாயகம் திரும்புகின்றான். வீடு வந்து சேர்ந்த பின்னர், தனது மனைவி இத்தனை வருடங்களாக கற்புடன் இருந்தவளா என்று சோதிப்பதற்காக ஒரு பரீட்சை வைக்கிறான். இது சீதையின் கற்பை சோதித்த இராமனின் கதையை நினைவுபடுத்துகின்றது. இதே நேரம், ஒடிசி கண்டுபிடித்த நாடுகளில் எல்லாம், பல பெண்களுடன் உறவு கொள்கிறான். இந்தக் காவியத்தை எழுதிய ஹோமருக்கு, அது தவறாக தெரியவில்லை. அதாவது, வெளிநாடு சென்ற  ஆண் எத்தனை பெண்களோடு உறவு வைத்துக் கொண்டாலும் அதில் தவறில்லை. ஆனால், கணவன் வெளிநாட்டுக்கு  சென்றதால் தொடர்புகள் அறுந்து விட்ட நிலையிலும், அவனை பல வருடங்களாக பிரிந்து வாழ்ந்தாலும்,  தனிமையில் வாடும் மனைவி, வேறெந்த ஆண்  மகனையும் மனத்தால் கூட தீண்டக் கூடாது. அதுவே பெண்களை மகிமைப் படுத்தும் கற்பெனும் ஒழுக்க நெறி.   கிரேக்க புராணக் கதைகள் போதிக்கும் நீதி நெறியும் அது தான்.இந்திய புராணங்களையும், கிரேக்க புராணங்களையும் ஒப்பிட்டால், இது போன்ற பல ஒற்றுமைகளை கண்டுபிடிக்கலாம். இவ்வாறு "கற்பின் சிறப்பை" எடுத்துக் கூறும் கிரேக்க கதைகள் பல உள்ளன.


கிரேக்கர்களின் ஒர்பெயுஸ் (Orpheus), எயுரிடிசே (Eurydice) என்ற புராணக்கதையும், இந்தியர்களின் சத்தியவான்-சாவித்திரி கதையும் ஒரே மாதிரி அமைந்துள்ளன. பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்த ஒபெயுஸ் ஒரு சிறந்த இசைக் கலைஞன். அவன் யாழ் இசைத்துப் பாடினால் மயங்காதவர் எவருமில்லை. ஒபெயுஸ், எயுரிடிசே என்ற அழகிய நங்கையை காதல் திருமணம் செய்து கொண்டான். துரதிர்ஷ்டவசமாக அவர்களது மணவாழ்க்கை அதிக காலம் நீடிக்கவில்லை. சத்தியவான், சாவித்திரி கதையிலும் அவர்களின் மணவாழ்க்கை சில வருடங்களே நீடித்தது. எயுரிடிசே காமுகன் ஒருவனால் கானகத்தில் விரட்டப்பட்டு, பாம்பு கடித்து இறந்து போகிறாள். அவளது உயிர் மாண்டவர் வாழும், (எமலோகமான) பாதாள லோகத்திற்கு செல்கின்றது. சத்தியவான் கானகத்தில் கனி பறிக்க சென்ற வேளை உயிர் பிரிகிறது. மனைவியின் இழப்பை தாங்க முடியாத ஒர்பெயுஸ், எமலோகத்திற்கு சென்று உயிரை மீட்டு வருவதாக சூளுரைக்கிறான். யாரும் துணியாத காரியமாக, பாதாள லோகம் நோக்கிச் செல்கிறான். 


கணவனின் இழப்பை ஏற்றுக் கொள்ளாத சாவித்திரி, சத்தியவானின் உயிரை கவர்ந்து செல்லும் எமதர்மனை பின்தொடர்ந்து செல்கிறாள். கிரேக்க பாதாள லோகத்தில், அதன் அதிபதியான ஹாடெஸின் (எமதர்மன்) காவல் நாய்கள் (எருமை வாகனம்?) ஒர்பெயுசை மேற்கொண்டு செல்ல விடாது தடுக்கின்றன. அதனால் வாசலில் உட்கார்ந்து கொள்ளும் ஒர்பெயுஸ், யாழ் எடுத்து கல்லும் கரையும் வண்ணம் சோக கானத்தை இசைக்கிறான். அவனது இசை காலனையும் கரைய வைக்கிறது. இசையினால் இளகிய ஹாடெஸ், எயுரிடிசேயை உயிருடன் மீட்டுச் செல்லலாம் என வரம் கொடுக்கிறான். ஆனால் ஒரு நிபந்தனை. ஒர்பெயுஸ் திரும்பிப் பாராமல் நடந்து செல்ல வேண்டும். அவன் மனைவி அவனைத் தொடர்ந்து வருவாள். ஒரு கணம் கூட திரும்பிப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால், அவன் மனைவி மீண்டும் எமலோகத்திற்கே திரும்பி விடுவாள். நிபந்தனைக்கு சம்மதிக்கும் ஒர்பெயுஸ், தனது மனைவியை கூட்டிச் செல்கிறாள். வழி நெடுகிலும், அவள் தன்னை பின்தொடர்ந்து வருகின்றாளா என்ற சந்தேகம் வருகின்றது. ஒர்பெயுஸ் பூலோகத்தை வந்தடையும் நேரத்தில், சந்தேகம் வலுக்கவே திரும்பிப் பார்க்கிறான். அந்த நிமிடமே எயுரிடிசே மீண்டும் எமலோகத்திற்கு திரும்பிச் சென்று விடுகிறாள். கடும்பிரயத்தனத்திற்கு மத்தியில் மனைவியின் உயிரை மீட்டு வந்து பறிகொடுத்த ஒர்பெயுஸ், எமலோகம் சென்று திரும்பிய அனுபவத்தை பாடி பொழுதைப் போக்கினான். கிரேக்க மக்கள் மத்தியில் ஒர்பெயுஸ் - எயுரிடிசே கதை காலத்தால் அழியாத காவியமாகி விட்டது.


"சத்தியவான்-சாவித்திரி-எமதர்மன்" கதை, வட இந்தியர்களுடையது. வட இந்தியர்களும், ஈரானியர்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கும் ஐரோப்பிய இனமான கிரேக்கர்களுக்கும் பொதுவான மூதாதையர் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் ஒரே மாதிரியான புராணக் கதைகளை கேள்விப்பட முடிகின்றது. இந்த மக்கள் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வாழ்ந்தாலும், ஒருவருக்கொருவர் புரியாத மொழிகளைப் பேசினாலும், சில பாரம்பரிய பிணைப்புகள் அவர்களை பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதனை இந்த கதையில் இருந்து புரிந்து கொள்ளலாம். இது நவீன கால தேசியவாத கற்பிதங்களை தகர்க்கின்றது. மனிதர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுவதால், வெவ்வேறு இனங்களை சேர்ந்தவர்கள் என்று அர்த்தம் இல்லை. ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் காலத்திற்கு, இடத்திற்கு ஏற்றவாறு வேறு வேறு மொழிகளை பேசி வருகின்றனர். அது தான் உலக நியதி.


இந்து மத கடவுளரும், இந்திய புராணக் கதைகளும், அசுரர்கள் பற்றிய கதைகளும், சமஸ்கிருதத்திற்கு முந்திய புராதன இந்திய மொழியும்; ஈராக், துருக்கி போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் தோன்றியிருக்கலாம் என்பதை பார்த்தோம். நாங்கள் இன்னும் கொஞ்சம் கிட்ட வந்தால், அதாவது இந்தியாவுக்கு அருகாமையில் உள்ள ஈரானுக்குள் நுழைந்தால், இதை விட ஆச்சரியமான தகவல்கள் கிடைக்கும்.  இந்திய இந்துக்கள் எம தர்மனை கடவுள் ஸ்தானத்தில் வைத்து மதிப்பதில்லை. எமனை அச்சத்திற்குரிய மரண தேவதையாக உருவகிக்கின்றனர். இது அனேகமாக, கிரேக்க கலாச்சாரத்தின் பாதிப்பின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம். கிரேக்கர்களின் மரண தேவதையான ஹாடெஸ், எமனைப் போன்ற பாதாள லோகத்தின் அதிபதி ஆகும். ஆனால், எம தர்மனுக்கு ஒரு வரலாறு உண்டு. ஈரானில், எம தர்மன்  ஒரு தேசத்தை ஸ்தாபித்த அரசனாக போற்றப் படுகிறான். ஆதி கால ஈரானிய அரசர்கள், எமனின் பெயர் வருமாறு பதவிப் பெயரை சூட்டிக் கொள்வது வழக்கமாக இருந்தது. அது மட்டுமல்ல, ஈரானியரின் புராதன தலைநகரமும் எமனின் பெயரால் சிறப்புற்று விளங்கியது. சில நேரம், கற்பனையை விட நிஜம் எம்மை ஆச்சரியக் கடலுக்குள் மூழ்கடித்து விடும். 

கியூபிட்

 ஆபத்தில் தள்ளிய அழகு:முன்னொரு காலத்தில் ரோமின் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆண்டு வந்த ராஜாவுக்கு 3 மிகவும் அழகான மகள்கள், அவர்களில் பேரழகியாக இருந்தவள் சைக் (Psyche). சைக் என்பதற்குத் தமிழில் ஆன்மா எனப் பொருள். இவளை அனைவரும் அழகின் கடவுளான வீனஸின் மறு உருவமாகவே பார்த்தனர். காலப் போக்கில் பலரும் வீனஸை மறந்து வாழும் கடவுளாகவே சைக்கை வழிப்பட்டனர். இதனால் ஆத்திரமும், பொறாமையும் அடைந்த வீனஸ், அவள் அழகைக் கண்டு வியக்கும் எவருக்கும் அவள் மீது காதல் வராதபடி செய்து விடுகிறார். தனது மற்ற இரு மகள்களுக்கும் திருமணம் ஆன பிறகும் மூன்றாவது மகளுக்கு மட்டும் திருமண வரன் ஏதும் வராததால் கவலையடைந்த சைக்கின் தந்தை ஒளியின் கடவுளான புளூடோவிடம் சென்று வேண்ட, “உன் மகளை மலையின் உச்சியில் தனியாக விட்டு விட்டு வா” என்று கடவுள் உத்தரவிட்டதைக் கேட்டு சைக்கின் தந்தையும் வலுக்கட்டாயமாக அவளை அழைத்துச் சென்று மலையின் விளிம்பில் நிக்க வைத்து விட்டு வருகிறார்.இந்தச் சந்தர்ப்பத்தை பயன் படுத்த நினைத்த வினஸ் தனது மகன் கியூபிட்டை அழைத்து இந்த உலகிலேயே மிகவும் கொடூரமான, பார்க்கவே பயங்கரமாக இருக்கும் பாம்பு உடல் கொண்ட ஒரு அரக்கனுக்கு இவள் மேல் காதல் வரும்படி செய்துவிடு என்று உத்தரவிடுகிறார். தாயின் கட்டளையை ஏற்று கியூபிட்டும் சைக் தனியாக நின்று கொண்டிருக்கும் மலையின் விளிம்பிற்குச் செல்கிறான். திடீரென்று மேற்கில் இருந்து வீசிய தென்றல் சைக்கை அப்படியே காற்றில் தூக்கிச் செல்கிறது. காற்றில் மிதந்தவாறே சில தூரம் பயணித்த பிறகு ஒரு பிரம்மாண்டமான கோட்டையின் வாசலில் அவளைக் கீழே இறக்குகிறது. அந்தக் கோட்டையை பார்த்து வியந்தபடியே நின்று கொண்டிருந்த சைக்கிற்கு ஒரு அசரீரி கேட்கிறது, “இனி இதுதான் உன் வீடு, உள்ளே செல்” என்று அந்தக் குரல் சொல்லியது.மர்ம காதலன்:அந்தக் கோட்டை முழுவதும் விலை மதிக்க முடியாத போருட்களால் உருவாகி இருப்பதைக் கண்டு சைக் வியந்து போகிறாள். நடக்கும் தரை முழுவதும் தங்கத்தால் இழைக்கப்பட்டு, சுவர்கள் எல்லாம் வைரம், வைடூரியம், ரூபி, எமரால்ட் போன்ற விலையுர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. அப்போது ஒரு அறை அவள் கண்ணில் படுகிறது, மீண்டும் அசரீரி ஒலிக்கிறது, உள்ளே செல் என்று. அதைக் கேட்டு சைக்கும் உள்ளே சென்றால் அறை முழுவதும் இருள் சூழ்ந்து துளி வெளிச்சம் கூட இல்லாமல் இருந்தது. அந்த இருளில் யாரோ தன்னை தொடுவதை சைக் உணர்கிறாள். அந்த உணர்வை வைத்தே தன்னை தொடுவது ஒரு ஆண் என்பது அவளுக்குத் தெரிகிறது, அந்த ஆண் அவளிடம் “நான் உன்னை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறேன், உனக்கு எந்தக் குறையும் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாகப் பார்த்து கோள்வேன் உனக்கு என் மேல் நம்பிக்கை இருந்தால் நான் சொல்வதை நம்பு, அதே சமயம் என்றுமே நான் யார் என்பதை நீ தெரிந்து கொள்ள முயலக் கூடாது, மேலும் என் முகத்தைப் பார்க்கவும் நீ என்றுமே ஆசைப் படக்கூடாது” என்று மிகவும் கவர்ச்சிகரமான அந்தக் குரலுக்கு சைக்கும் சற்றும் யோசிக்காமல் ஒப்புக் கொள்கிறாள். தினமும் இரவில் மட்டும் சைக்குடன் நேரத்தை அந்த இருட்டு அறையிலேயே கழித்துவிட்டு காலைச் சூரியன் உதயமாகுவதற்கு முன்பே ஜன்னலின் வழியாக வெளியே செல்வதே சைக்கின் காதலனது வழக்கம். இப்படியே பல நாட்கள் கழிகிறது பின்பு ஒரு நாள் சைக் கர்ப்பமாகிறாள், தனது கணவன் யார் என்றே தெரியாத நிலையில் எப்படி ஒரு குழந்தைக்கு தாய் ஆவது என்ற கவலையில் அவளை அந்தக் கர்ப்ப செய்தி ஆழ்த்துகிறது. சைக்கின் இந்தப் பிரம்மாண்டமான வாழ்க்கையைப் பார்த்து பொறாமை அடைந்த அவள் சகோதரிகள் இருவரும் ஏற்கனவே குழப்பத்தில் உள்ள சைக்கை மேலும் பயமுறுத்துகிறார்கள். “ஒரு வேளை நீ யாருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாயோ அவர் மிகவும் பயங்கரமான ஒரு பாம்பாக இருந்தால் என்ன செய்வாய் நீ?” என்று அவளை தங்களது பேச்சால் தூண்டி தனது கணவனின் பேச்சை மீறிச் செயல்பட தூண்டுகிறார்கள்.சத்தியத்தை மீறியதால் கணவனைப் பிரியும் சைக்:தனது சகோதரிகளின் பேச்சைக் கேட்ட சைக்கும் அடுத்த நாள் விடிவதற்கு முன் கையில் ஒரு விளக்கை எடுத்துக் கொண்டு ஒரு வேளை அவர்கள் சொன்னது போல் கொடூரமான ஒரு அரக்கனாக இருந்தால் என்ன செய்வது என்கிற பயத்தோடு அறையினுள் நுழைகிறாள். விளக்கை உயர்த்தி தனது கணவனின் முகத்தை வெளிச்சத்தில் பார்த்து உறைகிறாள். இந்த உலகிலேயே மிகவும் அழகான ஆண் என்று சொல்லும் அளவிற்கு கியூபிட் படுத்திருப்பதை பார்க்கிறாள். அந்த மகிழ்ச்சியில் கை நழுவ, அந்த விளக்கில் இருந்த எண்ணெய் கியூபிட்டின் மேல் பட்டு காயத்தை ஏற்படுத்துகிறது. அதனால் தூக்கத்தில் இருந்து விழித்த கியூபிட் “நீ என் வார்த்தையை மீறிவிட்டாய், இனி என்னால் உன்னுடன் வாழ முடியாது” என்று கோவத்துடன் ஜன்னல் வழியாகப் பறந்து செல்கிறான். தனது தாயின் பேச்சைக் கேட்டு சைக்கிற்கு ஒரு அரக்கன் மீது காதல் வரச் செய்ய சென்ற கியூபிட் அவளது அழகில் மயங்கி அந்த அம்பில் தன்னை தானே குத்தி சைக்கின் மீது காதல் வயப்படுகிறான்.தனது கணவனிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் அவருடன் சேர்ந்து விட வேண்டும் என்ற முடிவு எடுத்து சைக், கியூபிட்டை தேடி செல்கிறாள். வழியில் கியூபிட்டின் தாய் அவளைத் தடுத்து “உனக்கு என் மகனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் நான் வைக்கும் சில சோதனைகளில் நீ தேர்ச்சி பெற வேண்டும்” என்று நிபந்தனை போடுகிறார். அதற்கு சைக்கும் ஒப்புக் கொள்கிறாள்.காதலை நிரூபிக்க 3 பரீட்சைகள்:முதலாவதாக ஒரு பல வகையான விதைகள் ஒன்றாகக் கலந்து மலை போல் உயர்ந்திருக்கும் ஒரு குவியலை காட்டி இன்று இரவுக்குள் இதில் இருக்கும் ஐந்து வகையான விதைகளையும் தனி தனியே பிரிக்க வேண்டும் என்று சொல்கிறார், சற்றும் சாத்தியம் இல்லாத அந்த முயற்சியில் சைக் படும் கஷ்டத்தைப் பார்த்த ஒரு எறும்பு கூட்டம் அதை அவளுக்குப் பிரித்து தருகிறது. இதனால் முதல் பரீட்சையில் சைக் வெற்றி பெறுகிறாள். அடுத்ததாக மிகவும் முரட்டுத் தனமான தங்க ரோமங்களை உடைய ஆட்டின் உடலில் இருந்து அந்தத் தங்கத்தை எடுத்து வருமாறு சொல்கிறார். அங்கும் ஆற்றின் கடவுள் அவளுக்கு உதவி செய்து ஆட்டின் தங்க ரோமங்களை அவளுக்குத் தருகிறார், இதனால் இரண்டாவது பரீட்சையிலும் சைக் தேருகிறாள்.இறுதியாக மரண உலகம் என்று சொல்லப்படும் பாதாளத்திற்குச் சென்று இறப்பின் ராணியிடமிருந்து சிறிது அழகை ஒரு பெட்டியில் வாங்கி வர வேண்டும் என்று வீனஸ் சொல்கிறார். எப்படி அங்குச் செல்வது என்று சைக் தவித்து நிற்கும் நிலையில் மீண்டும் அசரீரி ஒலிக்கிறது, சில கேக் துண்டுகளையும், வெள்ளி நாணயங்களையும் எடுத்துக் கொண்டு இந்தத் திசையில் செல் என்கிறது. அதன்படி சைக்கும் செல்ல மரண உலகமான பாதாள உலகத்தின் நுழைவாயிலைப் பாதுகாக்கும் மூன்று தலை நாய்களுக்கு கேக் துண்டை கொடுத்து அதைக் கடந்து உள்ளே செல்கிறாள். பின்னர் அங்கிருக்கும் ஆற்றைக் கடக்க படகோட்டியிடம் வெள்ளி நாணயங்களைக் கொடுத்து மரணத்தின் ராணியிடமிருந்து அழகைப் பெட்டிக்குள் வைத்து மிகவும் பத்திரமாக கொண்டு வருகிறாள்.முடிவில்லா உறக்கம்:வினஸின் கோட்டை அருகே வந்த சைக் அந்தப் பெட்டிக்குள் இருக்கும் அழகைத் தானும் கொஞ்சம் எடுத்துக் கொள்வோம் என்கிற ஆசையோடு பெட்டியை திறக்கிறாள், ஆனால் அந்தப் பெட்டிக்குள் முடிவில்லா தூக்கம் மட்டுமே இருக்கிறது, அதனால் மயங்கி விழுந்த சைக் ஆழ்ந்த உறக்கம் செல்கிறாள். அந்த நேரத்தில் காயங்கள் குணமடைந்து தான் செய்தது தவறு என்பதை உணர்ந்த கியூபிட் மீண்டும் தனது மனைவியான சைக்குடன் சேர்ந்து வாழ முடிவு செய்து அங்கு வந்த கியூபிட் கர்ப்பவதியான தனது மனைவி மயங்கி விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். பின்னர் கடவுள்களின் அமரத்துவத்திற்குக் காரணமான அமிழ்தத்தை சைக்கிற்கு கொடுத்து அவளைத் தூக்கத்தில் இருந்து மீட்கிறான். பின்னர் அனைத்துக் கடவுள்களின் ஆசியுடன் இவர்கள் இருவரது திருமணம் மிகப் பிரம்மாண்டமாக நடக்கிறது.இவர்கள் இருவருக்கும் அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது, அதற்கு ‘பிளெஷர்’ (Pleasure)  எனப் பெயரிடுகிறார்கள். கியூபிட் அன்பு மற்றும் ஆசையின் வடிவமாக, சைக் ஆன்மாவின் வடிவமாக, இவர்களின் மகள் பிளேஷர் அதனால் கிடைக்கும் இன்பத்தின் வடிவமாகப் பார்க்கப்பட்டு, இந்த மூன்றும் சேர்ந்ததே காதலாகி உலகில் உள்ள அனைவரது காதல் வாழ்க்கைக்கும் காரணமாக அமைந்துள்ளது."

யுவதி பிராஸர்பினாவும் பாதாள கடவுளும்

 பிராஸர்பினா என்பவள் ரோமானிய புராண கதைகளில் வசந்த கால தெய்வமாகவும் பாதாள உலக ராணியாகவும் வணங்கப்படுகிறார்.


பிராஸர்பினாவை பாதாள கடவுள் கடத்தி செல்லும் பிரபல புராணக்கதை அங்கு இன்னும் மைய கருவாக பல ஆக்கபூர்வமான கலைகளில் பயன்படுத்தப்படுகிறது. அந்த கதையில் வரும் கால மாற்றத்தால் அவள் மறுமலர்ச்சியின் தேவியாகவும் கருதப்படுகிறார்.


Dante_Gabriel_Rossetti_-_Proserpine

இவள் கதை கிரேக்க புராணங்களில் வரும் பூமி கடவுளான டிமிடெரின் மகளான பெரிசிஃபோனை(Persephone) தழுவியது. கிரேக்கத்திலிருந்து தழுவிய இந்த இறைவி பின்னாளில் ரோமானிய கலை இலக்கியத்தில் முக்கிய மறுமலர்ச்சியை தோற்றுவித்தாள்.


கி.பி.205 ஆம் ஆண்டில் தான் பிராஸர்பினா கடவுள் ரோமானியருக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அவளுக்கு தாயாக ஏற்கனவே கிரேக்கத்தில் இருக்கும் டிமிட்டெரிக்கு இணையான ரோமனின் புவிக்கடவுளான சீரிஸ்(Ceres) இருந்தார்.


விவசாய துவக்கத்தின் போதும் பிராஸர்பினா வணங்குவதால் விளைச்சல் பெரும் என்பது அவர்களிடம் இன்றளவும் நிலவும் நம்பிக்கை.



பிராஸர்பினாவின் கோவில் புராதன நகரமான மால்டா என்ற இடத்தில் இருந்தது. 1613-ல் இக்கோவிலின் மிச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது சில மிதமிஞ்சிய பளிங்கு பொறிக்கப்பட்ட கற்துண்டுகள் மட்டுமே அங்கு உள்ளன.


யுவதி பிராஸர்பினாவின் கடத்தல்

பாதாள உலகத்தின் கடவுளான புளுட்டோ மீது காதல் இறைவியான புதன்(Venus) தன் மகன் குபிட்(Amor இந்து புராணங்களில் மன்மதன்) ஐ அனுப்பி காதல் அம்பினை பாய செய்கிறார்.


பிராஸர்பினா சிசிலி என்ற இடத்தில் தன் தோழிகளோடு ஆனந்தமாக பூப்பறித்துக் கொண்டிருந்தாள். அதுசமயம் எட்னா எரிமலையிலிருந்து தனது நான்கு கருப்பு நிற குதிரைகளோடு வெளியே வந்தார்.


மோக கணை ஏந்திய அவர் அழகான பாவை போன்ற பெண்ணை கண்டதும் விரைந்து அவளை அபகரித்து தன்னை திருமணம் செய்துக் கொண்டு பாதாள உலகில் வாழுமாறு வற்புறுத்தினர். பாவை பிராஸர்பினா எவ்வளவு மறுத்தும் அவளை கட்டாய படுத்தி பாதாள உலகிற்கு தூக்கி சென்றார்.


Aachen_Raub_von_Proserpina.jpg

நடந்தவற்றை அறியாத அவள் தாய் சீரிஸ் வீணான முறையில் பூமியின் ஒவ்வொரு மூலையிலும் சென்று தேடுகிறாள். பாதாள உலகத்தில் தன் மகள் கதறும் ஒலியை அவளால் கேட்க முடியவில்லை. அங்கு பிராஸர்பினா அவள் அனுமதியை மீறி கற்பழிக்கப்பட்டாள்.


546px-El_rapto_de_Proserpina

எங்கு தேடியும் மகளைக் காணவில்லை, இறுதியில் சீரிஸ்க்கு தென்பட்டது ஒரு வளையம், அந்த வளையம் பிராஸர்பினாவின் தோழிகளின் கண்ணீரால் உருவாகியிருந்தது.


விரக்தியடைந்த பூமாதேவி கோபமடைந்து சாபமிட்டதால் சிசிலியில் காய்கறிகளும் பழங்களும் வளர்ச்சியடைவதை நிறுத்திவிட்டன.


அவள் மீண்டும் ஒலிம்பஸ் மலைக்கு(Mount Olympus) செல்ல மறுத்து புவியெங்கும் நடக்க துவங்கினாள், அவள் பாதம் பட்ட இடமெல்லாம் பாலைவனமாக மாறி கொண்டே வந்தன.


நடப்பதை கண்டு வருத்தமடைந்த வியாழன்(Jupiter) இதற்கெல்லாம் காரணமான தன் தம்பி புளூட்டோவை நிறுத்த எண்ணினான்.


Abbate_-_Rape_of_Proserpine_hi-res.jpg

உடனே அவர்கள் தாய் மெர்குரி(Mercury) எனப்படும் வெள்ளியை அழைத்து புளூட்டோவை நிறுத்துமாறு சொன்னார். நிலைமையை புரிந்து கொண்ட புளுட்டோ அவளை விடுவிக்கும் முன் ஒரு திட்டம் செய்தான். பிராஸர்பினாவை நெருங்கி ஆறு மாதுளை பழங்களை அளித்தான், அவளும் சாப்பிட்டாள்.


பாதாள உலகம் மரணித்தவர்களின் உலகம்.அதை சேர்ந்தவற்றை உட்கொண்டால் புவியின் பரப்பில் வாழ முடியாது.இதனால் அவள் ஆறு மாதம் பாதாள உலகில் வாழ வேண்டியது அவசியம்.


பாதாள உலகிலிருந்து வெளியே வந்த பிராஸர்பினாவை பூமித்தாய் சீரிஸ் கண்டதும் அந்த தேசம் எங்கும் பூத்துக் குலுங்க ஆரம்பித்தது, மரங்களில் பச்சை இலைகள் செழிக்க துவங்கின,வயல்களில் தானியங்கள் வளம் பெற்றது.


FredericLeighton-TheReturnofPerspephone(1891).jpg

வசந்த கால காற்று அந்த நிலமெங்கும் வீசியது.இந்த நிகழ்விலிருந்து பிராஸர்பினா நிலத்தில் வாழும் ஆறு மாதங்களின் தொடக்கத்தில் வசந்த காலமும் தொடங்கும், இதனை புராண ரோமனியர்கள் விழாவாக கொண்டாடினர்.அவள் தாய் இல்லாத இடத்தில் தன் மகளை தேடியதே முட்டாள்கள் தினமாக கொண்டப்படுகிறது என்றொரு கூற்றும் உண்டு.


முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவது ஏன்?


இந்தியாவில் மன்மதனை சிவன் நெற்றி கண்ணால் எரித்த தினத்தை இதற்கு ஒப்பிடலாம், ஹோலி பண்டிகையாகவும் சித்திரை விழாவாகவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.அதாவது இங்கு வசந்த கால துவக்கத்தின் அடையாளம்.


பிராஸர்பினா திரும்ப பாதாள உலகம் நோக்கி செல்வது குளிர் காலத்தின் துவக்கமாகிறது.அப்போது நிலங்கள் தரிசாகும்,இலைகள் வெளிர்க்கும்.அந்த ஆறு மாதம் அவள் பாதாள உலகின் ராணியாக வாழ்வாள்.


1024px-Luca_Giordano_016.jpg

சில சமயம் அவளுக்கு மூன்று பழங்கள் மட்டுமே அளிக்கப்பட்டன எனவும் சொல்லப்படுகிறது, அவள் பூமியில் மூன்று மாதங்கள் மட்டுமே வசிப்பாள்.


வசந்த காலமான அப்போது பயிர்கள் நல்ல விளைச்சலைத் தரும், பாதாளம் சென்றதும் பனிக்காலம் தொடங்கி விளைநிலங்கள் வெறித்துவிடும்.


ஆர்ஃபியஸ் அவனின் ஆசை மனைவி யூரிடைஸ் உயிரிழந்ததும் பாதாளம் வந்து மீட்டு செல்லும் கதையிலும் பிராஸர்பினா பங்கு இருக்கும்,அவளே அப்போது பாதாள உலக தேவியாக இருப்பாள்.


ரோமானிய மரபுப்படி திருமணம் ஆகாத கன்னி பெண்கள் பிராஸர்பினாவின் கற்பு நெறியை போற்றி வணங்க வேண்டும்.அதே சமயம் திருமணம் ஆன பெண்கள் சீரிஸின் தாய்மையையும் அர்ப்பணிப்பையும் வாழ்வாக அமைத்து அருள் பெறவேண்டும்.


கலைப்பணி

பிராஸர்பினா கடத்தல் பல ஒவியங்களாவும் சிலை வடிவங்களாகவும் ரோம நாகரிக்கத்தில் புத்துணர்வை தந்தது. எண்ணற்ற இலக்கிய படைப்புகளும் கவிதைகளும் இச்சூழ்லை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.


ஒரு கவிஞர் பிராஸர்பினாவின் கதை மோசமான சம்பவத்திற்க்கு பின்னான மலர்ச்சியான வாழ்வை எடுத்து கூறுவதாக சொன்னார்.பெர்னினி என்ற சிலை வடிவமைப்பாளரின் பிராஸர்பினாவின் கற்பழிப்பு சிலை புகஸ் வாய்ந்தது.


அச்சிலையின் வடிவமும் நுணுக்கமும் பலவாறு விமர்சனங்களை பெற்றது. முக்கியமாக அவள் தொடையில் அழுத்தமாக விரல் பதிந்திருப்பது போன்ற வேலைப்பாடு அக்கதையின் சாராம்சத்தை வெளிப்படுத்தியது.இதை அவர் உருவாக்கிய போது அவருக்கு 23 வயதே.


Pomarancio-வின் சுவரோவியம், D.G.Rossetti, J.Heintz, Rubens,A. Dürer,Dell’Abbate,Parrish போன்ற பல நாட்டு புகழ் வாய்ந்த ஓவியர்கள் பிராஸர்பினா கடத்தல் சம்பவத்தை ஓவியமாக தீட்டியுள்ளனர்.


Frescoes on ceiling in Hall of Pluto and Proserpina.jpg

Goethe இன் பிராஸர்பினா,Swinburne இன் பிராஸர்பினா கீர்த்தனை மற்றும் பிராஸர்பினா தோட்டம் போன்ற கவிதை இலக்கியங்கள் எழுதப்பட்டுள்ளது. கனடா பாடகி கேட் மெக்கரிகில்(Kate McGarrigle) தான் சாகும் முன் இவரை பற்றிய பாடலை தன இறுதியாக எழுதினார்.


Pluto and Proserpina

Pluto and Proserpina

அன்றைய கிரேக்கர்களின் விண்ணியல் முறைகளால் அவர்கள் அப்போதே கிரகங்களை பற்றி அறிந்து வைத்திருந்தார்கள். இப்போது விண்ணில் இருக்கும் கோள்களுக்கு கிரேக்க கடவுள்களின் பெயர்களே வைக்கப்பட்டுள்ளன.


உதாரணமாக பக்கத்து கிரகமான மார்ஸ் என்பது கிரேக்க போர் கடவுளின் பெயர்.அதுபோல வீனஸ்(புதன்) காதல் கடவுளின் பெயர்,ஜூபிடர் வானத்தின் கடவுள்.


1853 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறுகோள் அல்லது விண்கல்லுக்கு 26 பிராஸர்பினா என்ற பெயர் சூட்டப்பட்டது.


ஜெர்மனியில் உள்ள கிராண்ட் கார்டன் என்னும் பூங்காவில் உள்ள பிராஸர்பினா சிலை அழிவு காலத்தின் அழகாக(Time Ravages Beauty) கருதப்படுகிறது.

Saturday, 20 June 2020

vaddaara valakku

செவ்வல் , செக்கல்,தெம்மாடு,லோமிய, சித்தாசு, மாடி, மெலிஞ்சியார், கப்பித்தான்,கப்பு,அடிகட்டை,
லெம்பவம், உசோன்,ஆசந்தி, கிரில்,பொலப்பெட்டி, பணியாரம், கொண்டல், வெள்ளாப்பு, புருவை, கொப்பிடி, அறியதரம், மண்டாடி, அணியம், மாரிசா, அம்மாடி,கொல்லையிலபோவான், காலங்காத்தால, பேதியிலபோவான், தூமைச்சேலை, மசிறு,பயல், பயபுள்ள, கம்பான், மசக்கை, சித்தா, உமியவிடு, கட்டளைக்காரன், காவுதடி, புனைக்கட்டை, சலவாய், மருக்கு, கணியம், பாடு, பக்கம்,திமிலன், கடையர், அத்தக்கூலி, வளையன், கூறல், கம்புவைத்தல், மெழுகுபடுதல், கடுக்காய், அவதிப்பனங்காய், வடலி, பூரான், கூந்தல், கோம்பை, சீக்காய், அளவாய்க்கரை, இடியன், கூனி, நாசுவக்காரல், சவாலை, காத்தாளை, அயலை, கும்பலா, பேய்ச்சாலை, கழுதைப்பால், கழுதை மனத்தால், செடி, புள்ளைகொடுத்தான். கொக்குசுடுதல், மடிச்சீலை, தாச்சிகாசு, குறைப்பாய், ஆசினித்தோணி,பொருத்தி, புழுக்கைகல். சொக்கிறா, பொறாமைண்டை, சேர்க்குண்டி, மையினி, அத்தார், பூவம்மா பூவையாய் சீனி ஐய்யா , சினியாம்மா,

 கூவை,ஒன்தான்,  வாட்டி அங்கிட்டு இங்கிட்டு, வெஞ்செசு வாளா , காவா, புல்லுக்கஜிசு பஜார் வாழ பூலா உண்ணிகுடுத்திரு,குட்டி, மடி, உடுவழி, ஊழாவளை, தாவரம், சேதத்தை, குசினி, குழுமாடு, கரையைசான்  வெங்கிடாய், தெமட்ட

Sunday, 2 February 2020

காமத்தில் இருந்து கடவுளுக்கு

காமத்தில் இருந்து கடவுளுக்கு 
அன்புள்ள ஓஷோ...
என்னுடை செக்ஸ் ஆசையை என்ன செய்வது ?
ஓஷோ கூறுகிறார்....
எப்பொழுதெல்லாம் செக்ஸ் ஆசை எழுவதை நீங்கள் உணர்கிறீர்களோ, அங்கு மூன்று விதமான வாய்ப்புக்கள் இருக்கின்றன...
ஓன்று - அதை இயல்பாக அனுபவிப்பது.
எல்லோரும் இதைத் தான் செய்கிறார்கள்.
இரண்டு - அதை கட்டுப்படுத்தி அடக்கி வைத்தல். அதனால் அது உங்கள் விழிப்புணர்விலிருந்து இருண்ட பகுதியான விழிப்புணர்வற்ற கீழ் நிலைக்கு செல்லுகிறது.
அது வாழ்வின் அடி நிலைக்கு தூக்கி வீசியெறியப்படுகிறது.
அதைத் தான் அசாதராணமனிதர்கள் என்று உங்களால் அழைக்கப்படும் மாகாத்மாக்கள், ஞானிகள் மற்றும் துறவிகள் செய்கிறார்கள்.
ஆனால் மேற்சொன்ன இருவரும் இயற்கைக்கு எதிரானவர்கள்.
இருவருமே உள்ளார்ந்த அறிவியல் மாற்றத்திற்கு எதிரானவர்கள்.
மூன்றாமவர்கள் - குறைந்த அளவில் வெகுசிலர் மட்டுமே இதை முயற்சிகிறார்கள்....
செக்ஸ் ஆசை தோன்றும்போது கண்களை மூடிக்கொள்ளுங்கள். இது ஒரு மதிப்பு மிக்க கணப்பொழுது.
ஆசை தோன்றுவது என்பது சக்தி தோன்றுவதாகும்.
அது காலைப்பொழுதில் தோன்றும் கதிரவனைப் போன்றது.
கண்களை மூடிக்கொள்ளுங்கள்; தியானம் செய்ய இது தான் சரியான தருணம்.
கீழ் நோக்கி செக்ஸ் மையத்தில் எங்கு உங்கள் கிளர்ச்சியை தூண்டுகின்ற, கிக்கை தருகின்ற பகுதி உள்ளதோ அங்கு ஒரு பார்வையாளரைப் போல் உங்கள் கவனத்தை வைத்து ஆழ்ந்த அமைதியில் கவனியுங்கள்.
சாட்சிபாவமாக இருங்கள்.
அதை கண்டனம் செய்யாதீர்கள். நீங்கள் அதை கண்டனம் செய்தீர்களானால், அந்த சக்தியிலிருந்து வெகு தொலைவில் சென்றுவிடுவீர்கள்.
அதேவேளையில் அந்த சக்தி நிலையை அனுபவிக்காதீர்கள். காரணம் அதை அனுபவிக்க ஆரம்பித்த அந்த நொடியே நீங்கள் விழிப்புணர்வற்ற நிலைக்கு சென்றுவிடுவீர்கள்.
இருட்டுவேளையில் எரிகின்ற விளக்கை எப்படி எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் பார்கின்றோமோ அப்படி். உங்கள் விழிப்புணர்வால் நடுங்காமல், சலனமற்று கவனியுங்கள்.
உங்கள் செக்ஸ் மையத்தில் என்ன நடக்கிறதென்று கவனியுங்கள்.
இது என்ன விதமான சக்தி ?
இதற்கு பெயரிடாதீர்கள். ஏனெனில் எல்லா வார்த்தைகளுமே கண்டனம் தெரிவிப்பதாக மாறியுள்ளது.
நீங்கள் அதை செக்ஸ் என்று கூறினால் கூட, உடனடியாக நீங்களே அதனை கண்டனம் செய்யத் துவங்கிவிடுவீர்கள். பெயரிட்டவுடன் அது உடனடியாக கண்டனம் செய்யப்படுகிறது. அல்லது நீங்கள் புதிய ஜெனரேசனைச் சார்ந்தவர்களாக இருந்தால், அந்த புதிய பெயர் பயமுறுத்தும்படி இருக்கும்.
தண்ணுனர்வுப்பாதையில் செல்பவர் அந்த வார்த்தையை உணர்ச்சி கலந்த பெயராக மாறிவிடுவார்கள்.
அதற்கு எந்தப் பெயரும் சூட்டவேண்டாம்.
செக்ஸ் மையத்திற்கு அருகில் ஒரு சக்தி உருவாகும் அந்த உண்மையை கவனியுங்கள். அங்கு கிளர்ச்சி உண்டாவதை கவனியுங்கள். மேலும் கவனித்துக் கொண்டே இருங்கள், முழுமையான ஒரு தரமான புதிய சக்தியை உணருவீர்கள்.
கவனித்துக் கொண்டே இருங்கள், அந்த சக்தி மேல் நோக்கி செல்வதை... அது உனக்குள்ளேயே ஒரு பாதையை கண்டுபிடிப்பதை...
மேலும், அந்த சக்தி மேல் நோக்கி செல்ல ஆரம்பித்ததும், ஒரு குளுமை உங்கள் மீது படர்வதை உணர்வீர்கள், ஒரு அமைதி உங்களை சூழும். ஒரு கருணை, ஒரு அழகு...ஒரு ஆசிர்வாதம், உன்னைச் சுற்றி இருக்கும்.
இனிமேல் எந்த விதமான வலியும் வேதனையும் அங்கிருக்காது.
இனிமேல் அது காயப்படாது, இனி அது உள்ளங்கையை போன்று இனிமையானது.
மேலும் விழிப்புடன் இருக்கையில், அந்த சக்தி உள்ளே மேல்நோக்கி நகரும். அப்படி மேல் நோக்கி இதயம் வரை வரும். அது ஒன்றும் பெரிய கடினமானதல்ல.
தொடர்ந்து விழிப்புணர்வில் கவனித்தாயானால் அது இதயத்தை வந்தடைகிறதை பார்க்க முடியும்.
அந்த சக்தி இதயத்திற்கு வந்தால் தான் அன்பு என்றால் என்னவென்று முதல் முறையாக உன்னால் பார்க்கமுடியும்.
அன்பு என்ற பெயரில் இதுவரைக்கும் போலியான ஒன்றைத் தான் சுமந்து வந்தீர்கள் என்று புரிய ஆரம்பிக்கும்.
சக்தியானது இதய சக்கரத்தை வந்தடைந்ததும், அது அன்பாக உருமாற்றம் அடைகிறது.
ஒரு முறை சக்தியானது அன்பாக உருமாறிவிட்டால், ஒருமுறை நீங்கள் அதை உணர்ந்துவிட்டால், ஒரு முறை உன்னுள் ஊடுருவிவிட்டால், உன்னுடைய முழு இருப்பும் சுத்தமாகியதாக உணரும்.
உன் கன்னித்தன்மையை உணரமுடியும், நீ பரிசுத்தமானவனாக, புனிதமானவனாக உணருவாய்.
சொர்க்கம் வேறெங்கும் இல்லை, உனக்குள்ளேயே உள்ளது என்று உணருவாய், அது உன் இதயத்தில் உள்ளது.
~~ ஓஷோ ~~

Friday, 16 August 2019

மூச்சடக்கி முத்தமிட்டு

மூச்சடக்கி
முத்தமிட்டு
மார்பை கசக்கி
எச்சில் பட்டு
ஊடல் பிடியில்
தொப்புள் தொட்டு
உசுப்பும் கடியில்
முனகல் இட்டு
யோனி நுழைத்து
இன்பம் கொண்டு
கசியும் திரவம்
பிசிறியடித்து
நீட்டி நிமிர்ந்து
அயர்ந்து உறங்கினால்
முடிந்து போகும்
ஆணின் மோகம் ஆனால்..
உன் உணர்வு கடியில்
உதடு வலித்து
முரட்டு பிடியில்
மார்பு வலித்து
உருட்டும் அசைவில்
வயிறு வலித்து
சொருகும் அதிர்வில்
கருப்பை வலித்து
சுமக்கும் கனத்தில்
உடல் வலித்து
உணரும் வலியை
வெளியே சொல்லாமல்
வேண்டும் நேரமெல்லாம்
உடல்பசிக்கு விருந்தாகி
புணரும் சலுகையாக
பிள்ளை வலியும் பெறுக்கிறாளே
அவளுக்காக என்ன
செய்ய இயலும் உன்னால்..
வேறொன்றும் செய்யாதே
பெண்ணும் உயிரென்று மதி..
உயிர் கொண்டு நேசி......
உள்ளார்ந்து யாசி...
பெண்மையை கையாளும்
மென்மை உனக்கே புரிந்துவிடும்
பெண் என்பவள் பூவானவள்
அதை கசக்கி எறிந்து விடாதே
அதை நுகர்ந்துவிட்டு
அரவணைத்துக்கொள்
தேவதையாக
இருப்பாள் அவள்
உன் மனதில்!!!

ஒரு ஆணோடு பாலியல்

ஒரு ஆணோடு பாலியல் ரீதியாக உரையாடியிருந்து, அதைத் தவறு என்று
உணரும் தருணத்தில் அதிலிருந்து
முழுமையாக விலகி விடலாம்.

ஆனால், பெண்கள் அதற்குப் பின்தான்
பெரிய தவறு செய்கின்றனர்.

இந்தக் குறுஞ்செய்திகள் அல்லது அலைபேசி உரையாடல்களை வைத்து ஆண்கள் மிரட்டும் பொழுது அதற்கு பயந்து அவர்கள் அழைக்கும் இடத்திற்குச் செல்வது, அவர்கள் என்ன சொன்னாலும் செய்வது என்ற நிலைக்குச் சென்று விடுகின்றனர்.

பாலியல் மிரட்டல்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை. எந்தச் சூழலிலும் பதட்டமடையத் தேவையில்லை.

முகநூல், யு டியூப், கூகுள் ஆகியவற்றில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை தவறாகப் பதிவிட்டு இருந்தால் அதை நீக்குவதற்கு பல வழிகள் இருக்கின்றன.
IMAGE REMOVAL PREOCESSING மூலமாக ஆபாசமாகப் பதிவிட்டுள்ள
புகைப்படங்களை நீக்கி விட முடியும்.

கூகுள் வலைத்தளத்தில் REVERSE IMAGE PROCESSER பயன்படுத்தி எந்தெந்த வலைப்பகுதிகளில் புகைப்படங்கள்
பகிரப்பட்டுள்ளது என்பதனை அறிந்து
அதை நீக்கி விட இயலும்.

யூ ட்யூப் -ல் காப்பி ரைட் படிவத்தினை சமர்ப்பித்தால் வீடியோ அகற்றப்படும்.
XXX வீடியோஸ் என்று சொல்லக் கூடிய
ஆபாச வலைத்தளத்தில்
ABUSE REPORTING FORM என்று ஒரு படிவம் உள்ளது.அந்தப் படிவத்தில் ,
இது என்னுடைய அனுமதி இல்லாமல்
என்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் பதிவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தால் அந்தக் காணொளியை
நீக்கி விடுவார்கள்.

இதனைத் தனியாக செய்யத் தெரியவில்லை என்றால் , அதற்கென்று சைபர் கிரைம் பிரிவு உள்ளது அல்லது இதை செய்து கொடுக்க தனியார் ஏஜன்சிகள் இருக்கின்றன.

உடலை வெளிப்படுத்துவதால் நமது புனிதம் கெட்டுவிட்டது, கற்பு போய்விட்டது என்றெல்லாம் நினைத்துப் பதறாமல் ,பாலியல் அச்சறுத்தல்களுக்கு அடிபணியாமல் நிதானமாக இந்தச் சிக்கல்களில் இருந்து வெளியேறும் வழிகளைப் பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர வாழ்க்கையே முடிந்து விட்டது என்ற மனநிலைக்கு சென்றுவிடக் கூடாது .

------------------------------------------------

பெண்ணுரிமை செயற்பாட்டாளர்
எழுத்தாளர் பத்மாவதி

BBC தமிழ்

கடலோரத்தில் புதர்

கடலோரத்தில் புதர் ஒன்று இரண்டு குருவிகள் கூடு
அமைத்து, குடித்தனம் செய்தன. இரண்டு முட்டைகள்
இட்டன். கருத்தோடு பேணி வந்தன.
ஒரு நாள் கடல் பொங்கி ஆடியது, இரண்டு முட்டை
களும் நீருக்குள் போய்விட்டன. குருவிகள் பதறித் தவித்தது.
ஒரு குருவி விசும்பி அழ, மறு குருவி சொல்லிற்று.
''எதற்கு அழுகிறாய்? உனக்கு அந்த முட்டைகள்
வேண்டும். அவ்வளவுதான். நான் எடுத்து தருகிறேன்''
என்று வீரம் பேசியது.
'எப்படி முடியும்?' மறு குருவி கேட்டது.
உழைத்தால் முடியும். முட்டைகள் கடலுக்குள் தானே
இருக்க வேண்டும். கடல் நீரை மறுபக்கம் இறைத்து விட்டால்
முட்டைகள் தெரியும் அல்லவா! அப்போது அவற்றை நாம்
எடுத்துக் கொள்ளலாம் அல்லவா!'' உறுதியாக பேசியது.
'முடியுமா?'மறு குருவி சந்தேகம் எழுப்பியது.முயற்ச்சித்தால் முடியும்!' இறுமாப்புடன் அந்தக் குருவி பேசியது.
இரண்டு குருவிகளும் உயரக் கிளம்பின. தங்கள் அழகால் கடல்நீரை
முகர்ந்து மறுபுறம் கொட்டின. இரவு பகல் பாராமல் அலைந்தன, முட்டைகள் கிடைத்தே ஆக வேண்டும் என்ற வெறியில் உழைத்தன. பசி, தூக்கம், நோவு எல்லாம் மறந்து நீரை அலகால் முகர்ந்து மறு கரையில் ஊற்றி:
கொண்டிருந்தன.
கடற்கரை வழியே ஒரு முனிவன் நடந்து வந்தான்
இடஒம் வலதுமாய் இந்த குருவிகள் அலைவதை
பார்த்தார், தன் மனோசக்தியை அவற்றுக்கு செலுத்தி
அவற்றின் நோக்கம் அறிந்து கொண்டான். சிரித்தான்.
அதே மனோசக்தியால் அந்த முட்டைகளைக் கண்டுபிடித்து
நீரிலிருந்து அவற்றை மிருதுவாய் எடுத்து கரையில்
வைத்தான். தன் வழியை நடந்து போனான். குருவிகள்
முட்டையைப் பார்த்துத் திகைத்தன, துள்ளிப்பறந்தன.
'நான் சொன்னது நடந்துவிட்டது பார். உழைத்தால் !
உயரலாம். முயற்சித்தால் முடியலாம். நாம் நீர் முகர்ந்து அந்த
கரை சேர்த்து கடல் வற்றி முட்டைகள் வெளியே வந்து
என்றுமுதல் குருவி கூவிற்று,
மறு குருவி 'ஆமாம், ஆமாம் என்றது.
"மீனாட்சி, அந்தக் குருவிகள் முயற்சி செய்திருக்காவிடில்
முட்டைகள் கிடைத்திருக்காது. முட்டைகள் கிடைத்ததற்கு
முயற்சி மட்டுமே காரணமில்லை.
- இது ரொம்ப சூட்சுமமான கதை மீனாட்சி. யோசி
போசிக்க எத்தனையோ விஷயங்களை இதிலிருந்து புரியும்
கண்மூடி இந்த கதைக்குள்ளேயே இரு."
மாதவன் அப்பா மீனாட்சியின் தலையில் கை கை
அழுத்தினார். நெற்றியில் புறங்கையால் வருடினார்.

இரண்டு நாய்க் குட்டிகள்

இரண்டு நாய்க் குட்டிகள் விளையாடிக் கொண்டு இருக்கும் போது தவறுதலாக ஒரு கிணற்றில்
விழுந்துவிட்டன.
அதைப் பார்த்த தாய் நாய் தன்னுடைய முதலாளியை வர வைப்பதற்காக கிணற்றின் அருகில் நின்று குரைத்துக் கொண்டே இருந்தது.
சத்தம் கேட்டுக்
கிணற்றை எட்டிப்
பார்த்த
முதலாளிக்கு ஒரே அதிர்ச்சி.
தான் ஆசையாக வளர்த்த நாய்
குட்டிகள்
கிணற்றில்
விழுந்து கிடக்கின்றன அதன்
அருகில் பெரிய ராஜநாகம்
படம்
எடுத்து ஆடிக்
கொண்டு இருந்தது.
கிணற்றில்
ஒரு பகுதி கரையும்
மறு பகுதி தண்ணீரும்
இருந்தது.ராஜநாகம் நாய்
குட்டிகளை ஒன்றும்
செய்யவில்லை,நாய ்
குட்டிகள் தண்ணீரில்
இறங்காதவாறு காவல்
காத்து கொண்டு இருந்தது.
ராஜநாகம் மற்றும் நாய்
குட்டிகள் 48
மணி நேரம் கிணற்றில்
ஒன்றாக இருந்தன.இந்த 48
மணி நேரமும் நாய்
குட்டிகள் தண்ணீரில்
விழாதவாறு ராஜநாகம்
அமைதியாக
காவல்
காத்து கொண்டு இருந்தது.
பிறகு வனத்துறையினர்
கிணற்றுக்குள்
இறங்கிய போது ராஜநாகம்
மறு கரைக்கு சென்றது.நாய்
குட்டிகளை காப்பாற்றிய
வனத்துறையினர் அந்த
ராஜநாகத்தையும்
காப்பாற்றி காட்டில்
விட்டனர்.
”அதிகம் விஷம் உடைய
ஒரு ராஜநாகம்
இரண்டு சிறிய
உயிரனத்துக்கு தீங்கு விளைவிக்காமல்
பாதுகாப்பு கொடுக்கும்
இந்த பூமியில் தான்,
சின்னஞ்சிறு குழந்தைகளையும்
சிறுமிகளையும் பாலியல்
பலாத்காரம்
செய்யும் மனித மிருகங்கள்
வாழ்ந்து கொண்டு இருக்கிறது”
இதுபோன்ற உயிர்களிடத்தில்
இருந்தாவது நல்ல
பண்புகளை கற்று கொள்ளுங்கள்...!!

மனதை அனுபவி



மனதை அனுபவி
நான் எனது மனதுடன் சலித்து போய் விட்டேன். தியானம் செய்வதற்கும், விழிப்புணர்வுடன் இருப்பதற்கும் எல்லாமும் செய்து பார்த்து விட்டேன். ஆனால் அதை என்னால் உணரவே முடிய வில்லை.
முதல்படி – மனதை நிறுத்த முயற்சி செய்யாதே. சலனம் அதன் இயல்பு. அதை நிறுத்த முயற்சி செய்தால் உனக்கு பைத்தியம் பிடித்து விடும்.
ஒரு மரம் இலை விடுவதை நிறுத்துவதைப் போன்றது இது.. மரத்துக்கு பைத்தியம் பிடித்துவிடும். மரத்துக்கு இலைதான் இயல்பு. நீ மனவயப்பட்ட ஒருவன், நீ இதயப்பூர்வமான மனிதனாக மாற முயற்சி செய்தால் தேவையில்லாமல் உனக்கு நீயே தொந்தரவுகளை உருவாக்கிக் கொள்வாய். ஏனெனில் மனதிலிருந்து நகர்ந்து செல்வதற்கு வழிகள் உள்ளன. உன்னை இதயபூர்வமான ஒருவனாக கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையில்லை. அது உன்னுடைய இயல்புக்கு மாறானது.
உனது இயல்புடன் ஒன்றிவிடுவதற்கு, உனது இயல்பை பின்பற்றுவதற்கு கற்றுக் கொள். இயல்பாக இருப்பதுதான் மத்தன்மை. உனது இயல்புடன் லயப்படுவதுதான் மிக முக்கியமானதேவை. அதனால் உனது சிந்தனையை நிறுத்த முயற்சி செய்யாதே. அது மிகவும் சரியானதே.
இரண்டாவது படி – மனம் தனது வேலையை செய்வதை அனுபவி. மனது வேலை செய்வதை நிறுத்துவதற்கு முயலாதே. அதை அனுபவி. அதனுடன் விளையாடு. அது மிக அழகான விளையாட்டு. அதனுடன் விளையாடு, அதை அனுபவி, அதை விரும்பு, அதைப் பற்றி விழிப்புடன் இரு, அதை பற்றி கவனம் கொள்.
மனதின் எண்ண ஓட்டத்தை பார். அவை எப்படி ஓடுகிறது, எப்படி ஒன்று ஒன்றுக்கு அழைத்துச் செல்கிறது என்று பார். ஒன்று ஒன்றை எப்படி இழுக்கிறது என்று பார். அது ஒரு அதிசயம். ஒரு சிறிய எண்ணம் எங்கோ இழுத்துச் செல்வதை கவனி. ஆரம்பித்த இடத்துக்கும், முடியும் இடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததை பார்.
ஒரு நாய் குரைக்கும், உனது எண்ண ஓட்டம் தூண்டப்படுகிறது. நாய் மறக்கப்பட்டு விடுகிறது, அழகான நாய் ஒன்றை வைத்திருக்கும் உனது நண்பனின் ஞாபகம் வருகிறது. பின் நீ அங்கு இல்லை. நண்பன்
மறந்து போய் அவனின் அழகான மனைவி நினைவுக்கு வருகிறாள், பின் வேறொரு பெண்……. நீ எங்கே போய் முடியப் போகிறாய் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அது ஒரு நாய் குரைப்பதில் ஆரம்பிக்கிறது. கவனி, எண்ணங்களின் தொடர்பை பார். எண்ணங்களின் சங்கிலியை பார்.
எளிதாக எடுத்துக் கொள், ஓய்வாக இரு. விழிப்புணர்வு உன்னுள் வரும், அது மறைமுகமாக வரும். விழிப்புடன் இருப்பது ஒரு முயற்சி அல்ல. அதைத்தான் நீ செய்து கொண்டிருக்கிறாய். விழிப்புணர்வு அடைய முயற்சி செய்து கொண்டிருக்கிறாய். உனது மனம் உன்னை திசை திருப்புகிறது, அதனால் உனக்கு கோபம் வருகிறது. இந்த கேடுகெட்ட மனம் தொடர்ந்து உளறிக் கொண்டேயிருப்பதை நீ உணர்கிறாய். நீ அமைதியாக இருக்க முயற்சி செய்கிறாய், ஆனால் இந்த மனம் அதற்கு அனுமதிப்பதேயில்லை. அதனால் நீ மனதிடம் ஆத்திரம் கொள்கிறாய். அது நல்லதல்ல. இது உன்னை இரண்டாக பிரித்துவிடும். நீயும் உன் மனமும் என இரண்டாக பிரிந்து இருப்பீர்கள்.
எல்லா பிளவுகளும் தற்கொலைக்கான முயற்சியே. ஏனெனில் உனது சக்தி தேவையின்றி வீணாகிறது. நம்முடன் நாமே சண்டையிட்டுக் கொள்ளும் அளவு நம்மிடம் சக்தி இல்லை. அதே சக்தியை நாம் சந்தோஷத்துக்கு செலவிட வேண்டும்.
சண்டையிடுதல் உன்னை அழித்துவிடும். சண்டையிட வேண்டிய அவசியம் இல்லை – அன்பு செய். எல்லா அழிவு சக்திகளும் அன்பு சக்தியாக மாற வேண்டும். அனுபவித்துப்பார் விரைவில் எல்லா விஷயங்களும் மாற ஆரம்பிக்கும்.
ஓஷோ

விலை உயர்ந்த பொருளை சமாதியில் புதைக்கலாமா..?!

விலை உயர்ந்த பொருளை சமாதியில் புதைக்கலாமா..?!
பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான பத்து லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளாம்பரப்படுத்தினார் , அதற்கு அவர் சொன்ன காரணம் இறப்புக்கு பின்னர் இந்த கார் பயன்படும் என்று .
இதைக்கேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன , பைத்தியக்காரன் பத்துலட்சம் டாலரை வீணடிக்கிறானே முட்டாள் என்றெல்லாம் திட்டி எழுதினார்கள் .
பொதுமக்கள் திட்டி தீர்த்தார்கள் . புதைப்பதாக சொன்ன தேதியும் வந்தது எல்லோரும் ஆவலாக என்னதான் நடக்குது என்று பார்க்க கூடினர் .
பெண்ட்லே காரை புதைக்கும் அளவுக்கு பெரிய பள்ளம் வெட்டப்பட்டு புத்தம் புதிய அந்த காரும் நிறுத்தப்பட்டிருந்தது. எல்லோரும் பொறாமையாக பார்த்துகொண்டிருந்தனர்.
பணக்காரர் வந்தார் காரை புதைக்கும் ஏற்பாடுகள் துவங்கியது.சிலர் நேரிலேயே அவரின் பைத்தியக்காரத்தனத்தை திட்டிதீர்த்தனர்.
விலை உயர்ந்த பொருளை இப்படி வீணடிக்கிறீர்களே இது எப்படி உங்கள் மரணத்திற்கு பிறகு பயன்படும் அதற்கு பதில் யாருக்காவது தானமாக கொடுத்தால் அவர்களுக்காவது பயன்படுமே என்று கோபத்துடன் கேட்டனர்.
அப்போது திடீரென அந்த பணக்காரர் சொன்னார்.நான் காரை புதைக்கவில்லை யாராவது அந்த முட்டாள் தனத்தை செய்வார்களா , உங்கள் எல்லோருக்கும் ஒரு உண்மையை உணர்த்தவே இப்படி வித்யாசமாக விளம்பரப்படுத்தினேன் என்றார் .
என்ன உண்மை என்றனர் அனைவரும். இந்த கார் பத்து லட்சம் யூஎஸ் டாலர்தான் இதை புதைக்கிறேன் என்றவுடன் கோபப்பட்டு கேள்வி கேட்கிறீர்களே நான் உங்களை ஒன்று கேட்கிறேன் இதைவிட விலை மதிப்பில்லாதது மனித உடல் உறுப்புகள் . இதயம் , கண் , நுரையீரல் , கிட்னி, தோல், என மனித குலத்துக்கு பயன்படும் மதிப்புமிக்க உடல் உறுப்புகளை புதைப்பதால் என்ன லாபம், யாருக்காவது தானமாக தரலாமே,
லட்சக்கணக்கானவர்கள் உடல் உறுப்பு தானத்தை நம்பி வாழ்கிறார்கள் அவர்களுக்கு உங்கள் உடல் உறுப்புகள் பயன்படட்டுமே உடலுறுப்பு தானம் செய்யுங்கள் , அதை உணர்த்தவே இந்த நாடகம் என்றாராம் .
படித்ததில் பிடித்தது . ....

லாவோட்

லாவோட் சூ தன் சீடர்களோடு போய்க் கொண்டிருந்தபோது ஒரு
காட்டு வழியாகப் போனார். ஒரு பெரிய அரண்மனை வேலை நடந்து
கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கானோர் மரங்களை வெட்டி
கொண்டிருந்தனர். காடு முழுக்க வெட்டியாகிவிட்டது. ஒரு பிரம்மாண்ட
மான மரம் மட்டும் அப்படியே இருந்தது. பத்தாயிரம் பேர் அதன் நிழலில்
உட்காரலாம். அவ்வளவு பிரம்மாண்டமான மரம். தன் சீடர்களை அனுப்பித்
காடு முழுவதும் மொட்டையடித்த பின் அந்த ஒரு மரத்தை மட்டும் யாரும்
வெட்டாமல் விட்டு வைத்திருக்கும் காரணத்தைத் தெரிந்துவரச் சொன்னார்.
அவர்களும் போய், "இந்த மரத்தை மட்டும் ஏன் விட்டு
வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
அருமையான பதில் வந்தது. 'அதுவா? இது பிரயோசனமில்லாத
மரம், ஒவ்வொரு கிளையிலும் ஏகப்பட்ட முண்டும் முடிச்சும். என்ன!
செய்வது இதை வைத்துக்கொண்டு? நேராயிருந்தாலாவது தூண்கள்
செய்யலாம். அதுவுமில்லை. தட்டுமுட்டுச் சாமான்கள் செய்யலாம்.
என்றாலும் முடியாது. வெட்டி எரிக்கலாம் என்றாலோ கிளப்புகிற புகையின் விஷத்தில் கண்கெட்டுப் போகும். எந்தப் பிரயோசனமும் இல்லை.
அதனால்தான்" என்றார்கள்.
திரும்பிப் போய்ச் சொன்னார்கள். லாவோட் சூ சிரித்தார். "இந்த
மரத்தைப் போலத்தான் இருக்க வேண்டும். பிழைத்திருக்க வேண்டுமானால்
இந்த மரத்தைப் போலத்தான் இருக்கவேண்டும். எந்தப் பிரயோசனமும்
இல்லாமல் இருக்கவேண்டும். யாரும் எந்தத் தீங்கும் செய்யமாட்டார்கள்.
நேராக இருந்தால் வெட்டி எடுத்துப்போய்த் தூணோ தட்டுமுட்டுச்
சாமானோ செய்துவிடுவார்கள். அழகாக இருந்தால் சந்தையில்
விற்கப்படும் பண்டமாகிப் போவாய். இந்த மரத்தைப்போல
பிரயோசனமும் இல்லாமல் இருந்து விடு. யாரும் எந்தத் தொந்திரவும்
செய்ய மாட்டார்கள். செளகரியத்துக்கு வளரலாம்.ஆயிரக்கணக்கானோர்
உன் நிழலில் இளைப்பாறலாம்" என்றார்.
ஒஷோ