Saturday, 1 January 2022

யார் பிராமணன் :

யார் பிராமணன் :
^^^^^^^^^^^^^^^^^^^^^^
நான் ஜபல்பூர் எனப்படும் ஊரில்
இருபது வருடங்கள் தங்கி இருந்தேன். அதன் பழைய பெயர் ஜபலாபுர். அது மிகப் பெரிய ஞானிகளில் ஒருவரும், உபநிஷதத்தை எழுதியவருள் ஒருவருமான சத்யகம் ஜபால் என்ற ஞானியின் பெயரால் அழைக்கப்பட்டது. இந்த கதை சத்யகம் ஜபால் தெடர்புடையது.
சத்யகம் குழந்தையாய் இருக்கும்
போதே மிகவும் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார். அவர் அனுபவிக்காதவரை அவர் எதையும்
நம்புவதில்லை. அவர் இளைஞனாக ஆன போது – அவருக்கு பன்னிரெண்டு வயதானபோது – அவர் தனது தாயிடம், “இந்த நாட்டின் இளவரசன் காட்டில் இருக்கும் குருகுலம் செல்கிறான். அவனுக்கும் எனது வயதுதான். நானும் போக விரும்புகிறேன், நானும் வாழ்க்கை என்றால் என்னவென்று கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு இதுதான் நேரம்.” என்றார்.
தாய், “அது மிகவும் கஷ்டம், சத்யகம். ஆனால் எனக்குத் தெரியும், நீ பிறவியிலேயே தேடுதல் ஆர்வமுடையவன். நீ உன்னை ஒருநாள் ஒரு குருவிடம் அனுப்பச் சொல்லிக் கேட்பாய் என்று நான் பயந்து கொண்டேதான் இருந்தேன். நான் ஒரு ஏழைபெண். ஆனால் அது பிரச்னையல்ல. பிரச்னை என்னவென்றால் நான் இளமையாக இருந்தபோது பல வீடுகளில் வேலை செய்துகொண்டிருந்தேன். நான் ஏழை, ஆனால் அழகானவளாக இருந்தேன். அதனால் உனது தந்தை யாரென்று தெரியாது. நான் உன்னை ஒரு குருவிடம் அனுப்பினால் அவர்கள் உன் தந்தை யாரென்று கேட்பார்கள். உன் தந்தை யாரென்று தெரியாது என்று சொன்னால் அவர்கள் உன்னை ஏற்றுக் கொள்ளாமல் போகக் கூடும்.
ஆனால் முயற்சி செய்வதில் எதுவும் தப்பில்லை. நீ போய் நான் உன்னிடம் இப்போது சொன்னது போலவே உண்மையை அப்படியே சொல். நான் ஏழையாக இருந்ததால் பலர் என்னுடைய உடலை உபயோகித்திருக்கின்றனர். என்னுடைய தந்தை யாரென்று எனக்குத் தெரியாது என்பதை சொல். உன்னுடைய பெயர் சத்யகம் என்றும் உன் தாய் பெயர் ஜபாலா என்றும் சொல். அப்போது அவர்கள் உன்னை சத்யகம் ஜபால் என்று அழைக்கட்டும். உண்மையை பொறுத்தவரை உனது தந்தை யாரென்பது ஒரு பிரச்னையல்ல.”
சத்யகம் காட்டில் உள்ள ஒரு வயதான
குருவிடம் சென்றான். நிச்சயமாக முதல் கேள்வி, உன்னுடைய பெயர் என்ன? உன்னுடைய தந்தை பெயர் என்ன? என்று கேட்பார்கள் என்று தெரிந்தே போனான். அவர்கள் கேட்டவுடன் அவன் தன் தாய் சொன்னதை அப்படியே சொன்னான்.
அங்கு பல இளவரசர்கள், பணக்காரர்களின் புதல்வர்கள் ஆகியோர் சீடர்களாக இருந்தனர். அவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர்.
ஆனால் அந்த வயதான குரு, “நான் உன்னை என் சீடனாக ஏற்றுக் கொள்கிறேன். உனது தந்தை யாரென்பது பொருட்டல்ல. நீ ஆணித்தரமாகவும், நேர்மையாகவும்,
பயமில்லாமலும் இருப்பது தான் இங்கு முக்கியமான விஷயம். எந்தவிதமான தர்மசங்கடமும் இல்லாமல் உண்மையை சொல்லும் நேர்மை உன்னிடம் இருப்பதுதான் சிறப்பு. உன் தாய் உனக்கு சரியான பெயர்தான் கொடுத்திருக்கிறாள் சத்யகம் சத்யகம் என்றால் உண்மையை அடைவது மட்டுமே தேடுதலாக கொண்டவன் என்று பொருள். உனக்கு மிக அழகான தாய் கிடைத்திருக்கிறாள், நீ இன்றிலிருந்து சத்யகம் ஜபால் என்று அழைக்கப்படுவாய்.
இங்கு பிராமணர்கள் மட்டுமே சீடர்களாக ஏற்றுக்கொள்ளப் படுவது தான் சம்பிரதாயம். நான் உன்னை ஒரு பிராமணன் என்று பிரகடனப்படுத்துகிறேன். ஏனெனில் பிராமணர்களுக்கு மட்டுமே இந்த உண்மையை ஒத்துக் கொள்ளும் தைரியம் இருக்கும்.” என்றார்.
அவை மிக அழகான நாட்கள். அந்த வயதான குருவின் பெயர் உதாலக்.
சத்யகம் அவருடைய மிக நெருங்கிய அன்பான சீடனாக ஆனான். அவருக்கு தகுதி இருந்தது. அவர் மிகவும் தூய்மையானவராகவும் மிகவும் நிர்மலமானவராகவும் இருந்தார்.
ஆனால் உதாலக்கு சில வரையறைகள் இருந்தன. அவர் கற்றுக் கொடுப்பதில் மிகச் சிறந்தவராக இருந்த போதிலும் அவர் ஞானமடையவில்லை. அதனால் அவர் சத்யகமுக்கு எல்லா சமயநூல்களையும் கற்றுக் கொடுத்தார், அவருக்கு தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தார், ஆனால் அவர் எல்லோரையும் நம்பவைப்பது போல சத்யகம்மை நம்பவைக்கவில்லை. சத்யகம் கேள்வி கேட்பார் என்பதற்காக அல்ல. அவருடைய நிர்மலமான தன்மை அந்த அளவு உண்மையானதாக இருந்தது.
அவர், “நான் உனக்கு சொல்லிக் கொடுத்தது எல்லாமே நான் நூல்களில் இருந்து படித்ததுதான். அவை எனக்கு சொந்தமானவை அல்ல. நான் அவற்றை அனுபவப்படவில்லை. அதை நான் வாழ்ந்து பார்த்ததில்லை. இன்னும் உள்ளே காட்டிற்க்குள் வாழும் ஒரு மனிதரை எனக்குத் தெரியும். அவர் மிகவும் அன்பானவர், கருணையானவர், உண்மையே வடிவானவர். நீ அவரிடம் போ.” என்று கூறி சத்யகம்மை அவரிடம் அனுப்பி வைத்தார்.
உதாலக் அவரைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாரே தவிர அவரை நேரில் பார்த்ததில்லை. உதாலக் மிகப் பிரபலமானவர், சிறந்த பண்டிதர்…….
சத்யகம் அந்த இன்னொருவரிடம் சென்றார். அவர் சத்யகம்முக்கு பல புதிய சமய நூல்களையும், எல்லா வேதங்களையும், இந்த உலகத்தின் பழைமையான நூல்களையும் கற்பித்தார். பல வருடங்களுக்கு பிறகு, “இப்போது உனக்கு அனைத்தும் தெரியும், இனி கற்பதற்கு எதுவும் இல்லை. நீ திரும்பி வீட்டுக்குப் போகலாம்.” என்றார்.
முதலில் சத்யகம் உதாலக்கை காண சென்றார். உதாலக் ஜன்னல் வழியே காட்டிக்குள்ளிலிருந்து வரும் ஒத்தையடிப் பாதையின் வழியே சத்யகம் வருவதை பார்த்தார். அவர் அதிர்ச்சியடைந்தார். சத்யகம்மின் நிர்மலமான தன்மை காணாமல் போயிருந்தது. அதற்கு பதிலாக பெருமை குடியிருந்தது – எல்லோருக்கும் ஆவது போலவே, அவருக்கு இப்போது இந்த உலகத்திலுள்ள தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் தெரியும் என்ற நினைப்பே ஆணவத்தை கொடுத்திருந்தது.
அவர் உள்ளே வந்தார். அவர் உதாலக்கின் பாதங்களை தொட குனியும்போது உதாலக், “எனது பாதங்களில் விழாதே. முதலில் நீ உன்னுடைய நிர்மலமான தன்மையை எங்கே தொலைத்தாய் என எனக்குத் தெரிய வேண்டும். நான் உன்னை தவறான மனிதரிடம் அனுப்பி விட்டேன் போலத் தெரிகிறது” என்றார்.
சத்யகம், “தவறான மனிதரிடமா, அவர் அறிய வேண்டிய அனைத்தையும் எனக்கு கற்றுக் கொடுத்தார் .“ என்று கூறினார்.
உதாலக், “நீ எனது பாதங்களில் விழுவதற்கு முன் நான் உன்னை ஒன்று கேட்க விரும்புகிறேன் – நீ எதையாவது அனுபவப்பட்டாயா அல்லது எல்லாமே வெறும் தகவல்கள் மட்டும்தானா? ஏதாவது நிலைமாற்றம் நிகழ்ந்ததா? உனக்கு தெரிந்திருப்பவை அனைத்தும்
உன்னுடையவை என்று கூற முடியுமா?” என்று கேட்டார்.
சத்யகம், “அப்படி எதையும் கூற முடியாது. நான் அறிந்திருப்பவை அனைத்தும் நூல்களில் உள்ளவை மட்டுமே. நான் எதையும் அனுபவப்படவில்லை” என்று கூறினார்.
அப்போது உதாலக், “நீ போன பிறகு வேறொரு மனிதரைப் பற்றி நான்
கேள்விப்பட்டேன். நீ அவரிடம் போ. உனக்கு அனுபவப்படாத வரை திரும்பி வராதே. நான் உன்னை அனுப்பும் போது இருந்ததை விட மதிப்பு குறைந்தவனாக திரும்பி வந்திருக்கிறாய். மதிப்பிட முடியாத ஒன்றை நீ இழந்து விட்டாய். அறிவு என்று நீ அழைப்பது கடன் வாங்கப்பட்டதாக இருந்தால் அது உனது அறியாமையை மூடி மறைப்பதாக மட்டுமே இருக்கும். அது உன்னை அறிந்தவனாக ஆக்காது. நான் சொல்லும் இந்த மனிதரிடம் செல், அவரிடம், உண்மையை பற்றி, கடவுளைப் பற்றி, அன்பைப் பற்றி மேலும் அதிக விவரங்கள் பெறுவதற்காக வரவில்லை என்று கூறு. நீ கடவுளை, அன்பை, உண்மையை தெரிந்து கொள்வதற்காக வந்திருக்கிறாய் என்று சொல். உங்களால் இதை செய்ய முடியுமென்றால் நான் இங்கே இருக்கிறேன். இல்லையென்றால் நான் நேரத்தை வீணாக்காமல் வேறு ஒரு குருவை தேடிப் போகிறேன் என்று சொல்” என்று கூறினார்.
சத்யகம் சென்று அப்படியே கூறினார்.
அந்த குரு ஒரு மரத்தடியில் தனது சில சீடர்களுடன் உட்கார்ந்திருந்தார். இந்த கோரிக்கையை கேட்டவுடன் அவர், “அது சாத்தியமானதுதான், ஆனால் நீ வித்தியாசமான ஒன்றை கேட்கிறாய். இங்கே பல சீடர்கள் உள்ளனர். அவர்கள் இன்னும் அதிக விவரமான தகவல்கள் கேட்கின்றனர். இதைப் பற்றி, அதைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். ஆனால் உனக்கு தகவல்கள் சேகரிக்க விருப்பம் இல்லையென்றால், நீ உண்மையை தெரிந்து கொள்வதற்காக எதையும் செய்ய தயார் என்றால் சத்தியத்திற்கான உனது தேடுதல் உன்னையே நீ அர்ப்பணித்துக்கொள்ள தயாராக இருக்குமானால் நான் உனக்காக ஒரு வழி கண்டுபிடிக்கிறேன்”. என்றார்.
சத்யகம், “நான் எனது வாழ்க்கையை அர்ப்பணிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் உண்மையறியாமல் திரும்பி செல்ல என்னால் முடியாது. எனக்கு சதயகம் என்று பெயரிட்ட எனது தாயிடமோ, அல்லது நான் உண்மையை கூறிய ஒரே காரணத்தினாலேயே நான் பிராமணனா இல்லையா என்று கவலைப் படாமல் என்னை ஏற்றுக் கொண்ட எனது குருவிடமோ திரும்பி போக முடியாது. என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.” என்று கேட்டான்.
குரு, “இங்கே நீ பார்க்கும் இந்த பசுக்களை கூட்டிக்கொண்டு உள்ளே காட்டிற்க்குள் சென்று விடு. எந்த மனிதருடனும் தொடர்பு கொள்ள முடியாத வண்ணம் எவ்வளவு அடர்ந்த காட்டிற்க்குள் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் உள்ளே சென்று விடு. நீ மொழியை, வார்த்தைகளை மறக்கவேண்டும் என்பதுதான் காரணம். பசுக்களுடன் வாழ்,
அவற்றை பாதுகாத்து வா, உனது குழலுடன் விளையாடு, நடனமாடு – ஆனால் வார்த்தைகளை மறந்துவிடு. இந்த பசுக்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆனவுடன் திரும்பி வா.” என்றார்.
இங்கே இருந்த மற்ற சீடர்களுக்கு
என்ன நிகழ்கிறதென்றே புரியவில்லை – ஏனெனில் அங்கு இருந்தது ஒரு டஜன் அல்லது இரண்டு டஜன் பசுக்கள்தான். அவை எப்போது ஆயிரம் பசுக்கள் ஆவது ?
ஆனால் சத்யகம் பசுக்களை கூட்டிக்
கொண்டு அடர்ந்த காட்டுக்குள், மனித சஞ்சாரமற்ற இடத்துக்கு, மனித வாடையற்ற இடத்துக்கு சென்றார். முதல் சில தினங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. பசுக்கள் மட்டுமே அவரது தோழமையாக இருந்தன. அவை மிக அமைதியான மக்கள். அவன் தனது புல்லாங்குழலை வாசிப்பான், காட்டில் தனியாக நடனமாடுவான், மரத்தடியில் படுத்து ஓய்வெடுப்பான்.
முதல் சில வருடங்கள் தொடர்ந்து
பசுக்களை கணக்கெடுத்து வந்தான். பின் மெது மெதுவாக அதை விட்டு விட்டான். ஏனெனில் அவை ஆயிரமாக மாறுவது இயலாததாக தோன்றியது. மேலும் எப்படி கணக்கெடுப்பது என்பதையும் அவன் மறந்துவிட்டான். மொழி மறைந்துவிட்டது. வார்த்தைகள் மறைந்துவிட்டன. கணக்கு எடுக்க இயலவில்லை.
இந்த கதை மிகவும் அழகானது.
பசுக்களின் எண்ணிக்கை ஆயிரம்
அடைந்தவுடன் பசுக்கள் கவலைப்பட ஆரம்பித்தன. ஏனெனில் அவைகள் வீடு செல்ல விரும்பின. இவனுக்கு எப்படி எண்ணுவது என்பது மறந்து போய் விட்டது. இறுதியில் பசுக்கள், “நாம் இவனுக்கு சொல்லியாக வேண்டும். இல்லாவிடில் இந்த தனிமையான வனமே நமது கல்லறையாகிவிடும்.” என்று முடிவெடுத்தன.
அதனால் ஒருநாள் பசுக்கள்
சத்யகம்மை பிடித்து நிறுத்தி, “இங்கே பார், சத்யகம், நாங்கள் இப்போது ஆயிரம் பசுக்களாகி விட்டோம். நாம் இப்போது வீடு திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்றன.
சத்யகம், “உங்களுக்கு மிகவும் நன்றி. நீங்கள் இப்போது என்னிடம் இதை சொல்லியிராவிட்டால்…….. நான் வீட்டை பற்றியும் திரும்பி போவது பற்றியும் மறந்து விட்டேன். ஒவ்வொரு கணமும் மிகவும் அழகானதாக….. பரவசமாக இருக்கிறது. இந்த மௌனத்தில் மலர்கள் பூச்சொரிகின்றன. நான் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். நான் யார் என்பதையும் நான் எதற்காக இங்கே வந்தேன் என்பதையும் நான் மறந்து விட்டேன். இங்கே எல்லாமும் முடிவடைந்துவிட்டது. புல்லாங்குழல் வாசிப்பது மட்டுமே போதும். மரத்தடியில் ஓய்வெடுப்பது மட்டுமே போதும், இந்த அழகான பசுக்கள் சுற்றிலும் அமைதியாக இருப்பதை பார்ப்பது மட்டுமே மிக அருமையானது. ஆனால் நீங்கள் வற்புறுத்தினால், நாம் திரும்பிப் போவோம்.” என்றான்.
அந்த குருவின் சீடர்கள் சத்யகம்
ஆயிரம் பசுக்களோடு திரும்பி வருவதை பார்த்தனர். அவர்கள் குருவிடம், “அவன் ஆயிரம் பசுக்களோடு திரும்பி வருவான் என நாங்கள் நினைக்கவேயில்லை. அவன் வந்து விட்டான். நாங்கள் எண்ணி விட்டோம் அவை மிகச் சரியாக ஆயிரம் பசுக்கள் உள்ளன. அவன் வருகிறான்.” என்றனர்.
அவன் வந்து நின்றான்…….. பசுக் கூட்டத்தின் நடுவே நின்றான்.
குரு தனது சீடர்களிடம், “நீங்கள் தவறாக எண்ணியிருக்கிறீர்கள். அங்கே ஆயிரத்தோரு பசுக்கள் உள்ளன. நீங்கள் சத்யகம்மை எண்ண மறந்து விட்டீர்கள். அவன் உங்களது உலகத்தை விட்டு தாண்டி போய் விட்டான். அவன் நிர்மலமான தன்மையினுள், மௌனத்தினுள், அறிவுக்கெட்டாதனுள் நுழைந்து விட்டான். அவன் பசுக்கள் எப்படி நிற்கிறதோ அங்கேயே நிற்கிறான் பாருங்கள்.” என்றார்.
குரு, “சத்யகம், நீ வெளியே வரலாம். இப்போது நீ உன்னை இங்கே அனுப்பிய உனது குருவிடம் செல்லலாம். அவர் மிகவும் வயதானவர், அவர் உன் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கக் கூடும். உன் தாய் உனக்காக காத்துக் கொண்டிருப்பாள்.” என்றார்.
சத்யகம் தனது முதல் ஆசிரியரிடம் –
சத்யகம் ஒரு தகவல் களஞ்சியமாக மட்டுமே மாறியதால் தனது வெகுளித்தனத்தை தொலைத்து, தனது நிலையிலிருந்து கீழிறங்கி ஒரு பிராமணனாக இல்லாமல் போய் விட்டார் எனக் கூறி தனது பாதத்தில் விழக் கூடாது என தடுத்த உதாலக்கிடம் – திரும்பி வந்தார். இவர் வருவதை ஜன்னல் வழியாக பார்த்த உதாலக் பின் வாசல் வழியாக ஓடிப் போய் விட்டார். ஏனெனில் இப்போது சத்யகம் தனது பாதங்களில் விழ அனுமதிக்க கூடாது. தான்தான் அவர் பாதங்களில் விழ வேண்டும். ஏனெனில் உதாலக் இப்போது வெறும் பண்டிட் மட்டுமே, ஆனால் சத்யகம் இப்போது விழிப்புணர்வு பெற்று அறிந்தவராகி விட்டார்.
உதாலக் வீட்டிலிருந்து தப்பிப் போய் விட்டார். “என்னால் அவரை சந்திக்க முடியாது. நான் வெட்கமடைகிறேன். உதாலக் இறந்து போய்விட்டார். அவர் உன்னை நினைத்துக் கொண்டே
இறந்தார் என சத்யகம்மிடம் சொல்லி விடு. அவரை அவருடைய தாயிடம் போக சொல்” என தனது மனைவியிடம் சொல்ல சொல்லிவிட்டு போய் விட்டார். வெவ்வேறு விதமான மக்கள் இருக்கிறார்கள். சத்யகம் வீடு திரும்பினார்.
தாய்க்கு மிகவும் வயதாகி விட்டிருந்தது. ஆனால் அவள் காத்துக் கொண்டே……….. இருந்தாள். “உண்மை எப்போதும் ஜெயிக்கும் என்பதை நீ நிரூபித்துவிட்டாய், சத்யகம். பிராமணன் என்பவன் பிறப்பது இல்லை, பிராமணன் என்பது அடையவேண்டிய ஒரு குணாதிசியம் என்பதை நீ நிரூபித்துவிட்டாய்.
ஒவ்வெருவரும் பிறப்பால் சூத்திரர்தான், ஏனெனில் ஒவ்வொருவரும் பிறப்பில் ஒன்றானவரே. ஒருவன் தன்னை தூய்மைப் படுத்திக் கொள்வதனாலும், ஒருமை படுத்திக் கொள்வதனாலும், மையம் மற்றும் ஞானத்தை அடைவதனாலும், தான் ஒரு பிராமணன் என்பதை நிரூபிக்க வேண்டும். பிராமண குடும்பத்தில் பிறப்பதால் மட்டுமே அவன் பிராமணன் ஆவதில்லை.” என்றாள்.
Source :
BEYOND ENLIGHTENMENT,

che –25 

மன்னாரில் யாழ் பல்கலைக்கழக மீன்பிடி வளாகத்தை நிர்மானிக்க வேண்டும்

 மன்னாரில் யாழ் பல்கலைக்கழக மீன்பிடி வளாகத்தை நிர்மானிக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற கோரி ஐனாதிபதிக்கு மடல்

(பிராந்திய செய்தியாளர்) 17.11.2016
மன்னார் மாவட்டத்தில் உயர் கல்விக்கான எந்த வசதியும் இங்குள்ள இளைஞர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படாமல் இருப்பதாலும் மன்னார் மாவட்டத்தில் பெரும்பாலான சமூகமாக மீனவர்களாக இருப்பதால் மன்னாரில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மீன்பிடி வளாகம் ஒன்றை நிர்மானிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி மன்னார் மாவட்டத்தில் கல்விமான்களில் ஒருவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் முன்னாள் செயலாளருமான அ.கீதபொன்கலன் ஐனாதிபதிக்கு சகல விபரங்கள் அடங்கிய மடல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 82 வயதுடைய அரசாங்க ஓய்வூதியரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் முன்னாள் செயலாளருமான விடத்தல்தீவைச் சார்ந்த அ.கீதபொன்கலன் இலங்கை ஐனாதிபதிக்கு மன்னாரில் மீன்பிடி வளாகம் அமைக்கும் சம்பந்தமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள மடலில்
மன்னார்pல் யாழ்பல்கலைக் கழகத்தின் மீன்பிடி வளாகம் ஒன்றை நிர்மானிக்கப்பட வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் 2004, 2005 ஆம் ஆண்டுகளில் பல தடவைகள் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருக்கின்றார்.
அத்துடன் இவ்விடயம் தொடர்பான அமைச்சர், பல்கலைக்கழக ஆணைக்குழு மற்றும் இதன் தொடர்பான அரச அதிகாரிகளுக்குமிடையே கடிதத் தொடர்புகளையும் மேற்கொண்டிருந்தார்.
மேற்படி இந்த விடயம் தங்களது தற்போதைய அரசாங்கத்தின் முதலாவது பாதீட்டில் வெளிக்கொணரப்படலாமென இவ் வாழ் புத்திஐPவிகள் படித்த இளம் சமூகம் எதிர்பார்த்திருந்தபோதும் அது ஏமாற்றமாக காணப்பட்டதைத் தொடர்ந்தே இவ் மடலை இவ்வாழ் புத்தி ஐPவிகள் இளம் சமூகத்தின் சார்பாக உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகின்றேன் என தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டம் 2002 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டது. இவ் மாவட்டம் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளைக் கொண்டதாகும். 2013 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி 42,169 குடும்பங்கள் மன்னார் மாவட்டம் முழுதும் வாழ்ந்து வருகின்றனர்.
இதில் மடுப் பிரதேச செயலகப் பிரிவை தவிர்த்து மற்றைய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மீனவ குடும்பங்களே கூடுதலாக வாழ்ந்து வருகின்றனர். இதைக் கவனத்தில் கொண்டே மன்னார் மாவட்டத்தில் மேற்படி மீன்பிடி வளாகம் நிர்மானிக்கப்பட வேண்டும் என வேண்டி நிற்கின்றோம்.
அன்றைய யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உப வேந்தராய் இருந்த பேராசிரியர் பி.பாலசுந்தரம்பிள்ளை பல்கலைக்கழக ஆணைக்குழு மேலதிக செயலாளருக்கு 2002.05.24 ந் திகதிய கடிதத்தில் யாழ் பல்கலைக்கழகத்துக்கு மீன்பிடித் திணைக்களம் கேட்டு 1992ம் ஆண்டில் விண்ணப்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இதேக் கடிதத்தில் 1993ம் ஆண்டில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு மீன்பிடி வளாகம் அமைக்க அனுமதி கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின் யாழ் பல்கலைக்கழக உப வேந்தராகக் கடமையாற்றிய பேராசிரியர் ஏ.மோகனதாஸ் அன்றைய மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த வி.விஸ்வலிங்கம் அவர்களுக்கு இது தொடர்பாக எழுதிய 29.09.2004 திகதிய கடிதத்தில் யாழ் பல்கலைக் கழகத்திற்கென மீன்பிடி வளாகத்தை அமைப்பதற்கு பல்கலைக் கழக ஆணைக்குழுவிடம் 2002ம் ஆண்டில் அனுமதி கோரப்பட்டதைத் தெரிவித்ததோடு மன்னார் அரசு அதிபரிடம் இதுவிடயமாக தகுந்த தேவையான நடவடிக்கையை அவரிடமிருந்து எதிர்பார்த்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இதற்கான பிரதி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
மேலும் 2004.08.17 திகதி இது தொடர்பான கடிதம் அன்றைய அரசியல் பிரதிக் கல்வி அமைச்சராக இருந்த டினேஸ் குணவர்த்தனாவிடம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேரில் சென்று கையளித்ததைத் தொடர்ந்து இவரால் 2005.10.01 திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றை அப்போதைய பல்கழலக்கழக ஆணைக்குழுத் தலைவருக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இதே பிரதிக் கல்வி அமைச்சருக்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் 2005.02.03 திகதிய கடிதத்தின் மூலம் மன்னார் மாவட்டத்தையும் மற்றைய மாவட்டங்களையும் ஒப்பிட்டுக்காட்டி மன்னார் மாவட்டத்தில் உயர் கல்விக்கான எந்த வசதிகளும் இங்குள்ள இளைஞர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்பதையும் எடுத்துக்காட்டி யாழ் பல்கலைக் கழகத்துக்கான மீன்பிடி வளாகத்தை மன்னாரில் அமைப்பதன் மூலம் இங்குள்ள இளைஞர் சமூதாயத்தை ஊக்குவிக்க முடியும் என்ற கோரிக்கையையும் விட்டிருந்தார்.
பின் 2005 ஆம் வருடத்தில் நாட்டில் சமாதான சூழ்நிலை ஏற்பட்டபின் இவ் சமாதான சூழ்நிலையை சுட்டிக்காட்டி யாழ் பல்கலைக்கழகத்துக்கு மீன்பிடி வளாகத்தை அமைப்பதற்கு அனுமதி வழங்குமாறும் அத்துடன் இவ் வளாகத்தை மன்னாரிலே அமைக்கும்படியும் தனது 2005.04.19ந் திகிதி கடிதத்தின் மூலம் தனது இதே பிரதி கல்வி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மன்னார் தள்ளாடிக்கும் வங்காலைக்கும் இடைப்பட்ட கரையோர நிலப்பரப்பு மன்னார் அரசாங்க அதிபரால் ஒதுக்கப்பட்டிருப்பதையும் அவர் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆகவே மன்னார் மாவட்டம் விசாலமான கடற்கரை இத்துடன் அநேக மீன்பிடிக் கிராமங்களை கொண்ட ஓர் பிரதேசமாகும். இங்குள்ள அநேக இளைஞர்கள் மீன்பிடி தொடர்பாக மிகவும் ஆர்வமுள்ளவர்களாக இருந்தும் கூட தங்களது கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் பிற்பாடு மீன்பிடி தொடர்பிலான பலதரப்பட்ட மேற்படிப்புக்கள் இருக்கின்றதென்பதை அறியாதவர்களாக பல்கலைக் கழக கல்வி மூலம் அவற்றில் மேன்மை அடையக்கூடிய வாய்ப்ப்புக்களை தவறவிட்டு உயர் கல்விக்கான வேறு பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
ஆகவே மன்னார் மாவட்டம் ஒரு மீன்பிடி மாவட்டமாகவும் மன்னாரில் யாழ் பல்கலைக் கழகத்தின் மீன்பிடி வளாகத்தை நிர்மானிக்கப்பட வேண்டும் என நீண்டகால கோரிக்கையாக இருப்பதாலும் யுத்தத்தால் பாதிப்பு அடைந்த வன்னி மாவட்டத்தை அனுதாபத்துடன் கண்ணோக்கி இளம் சமூதாயம் இத்துறையில் முன்னேற்றம் காண ஆவண செய்ய வேண்டும் என தனது மடலில் தெரிவித்துள்ளார்.
(வாஸ் கூஞ்ஞ)

எந்த மனிதனும், தன் உண்மை சொரூபத்தை வெளியேக் காட்டுவதில்லை

 ' ஒரு மனிதன் கடவுளிடம் பிரார்த்தனை செய்தான்.

அவன் அவ்வப்போது துயரத்திலும், கஷ்ட்டத்திலும் வாழ்ந்து வந்ததால், அவனது வாழ்க்கை மட்டும்,
மற்றவர்கள் வாழ்க்கையை விட, கடினமானதாக இருப்பதாக நினைத்தான்.
' இறைவா, நான் மிகத் துயரமுடையவனாக இருக்கிறேன்.
எனது வாழ்க்கை கடினமானதாக உள்ளது.
என்னைத்தவிர, உலகில் வாழும் அனைவரும் இன்பமாக வாழ்வதை நான் பார்க்கிறேன்.
மற்றவர்கள் எவரும், என்னைப்போல அதிகமான துயரங்களை சுமப்பவர்களாக எனக்குத் தோன்றவில்லை.
நான் உங்களிடம் அதிகமாக எதையும்
கேட்க வில்லை.
என்னுடைய துயரத்தை
வேறு எவரிடமாவது தந்து விட்டு,
அவரது துயரங்களை எனக்கு மாற்றித் தாருங்கள்.
நான் அதை சுலபமாக சமாளித்து விடுவேன்.
மற்றவர்களது மகிழ்வான முகத்திலிருந்தே,
அவர்களது துயரத்தின் சுமைகள் என்னைவிட மிகக் குறைவு என்பதை
நான் உணர்கிறேன்.' என்றான்.
அன்றிரவே அவன் ஒரு கனவுக் கண்டான்.
வானத்திலிருந்து,
அனைவருக்கும் பொதுவாக,
உரத்தக் குரலில் கடவுள் பேசினார்.
' என் அருமை பிள்ளைகளே,
நீங்கள் அனைவரும் இதுவரை அனுபவித்த துயரங்களையும்,
இனிமேல் அனுபவிக்கும் போகும் துயரங்களையும் ஒரே
மூட்டையாகக் கட்டி, உங்கள் அருகில்
சில நாழிகைகள் வைக்கிறேன்.
அதற்குள், அந்த துயர மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு உங்கள் அருகில் இருக்கும் கோயிலுக்கு வாருங்கள்.
உங்கள் மூட்டையை கோயிலில்,
கீழே தரையில் வைத்து விடுங்கள்.
'என்னுடைய மூட்டை பெரியது ' என்று நினைப்பவர்கள்,
அங்கிருக்கும் சின்ன மூட்டையை மாற்றிக் கொள்ளுங்கள்.
எப்படி மாற்றிக் கொள்வது என்று,
நீங்கள் கோவிலுக்குள் வந்த பின்னர் சொல்கிறேன்.
மூட்டையை மாற்றிக் கொண்டப் பிறகு, இனிவரும் காலங்களில்,
உங்கள் துயரங்களின் அளவு
குறைந்து போய்விடும் ' என்றார்.
அனைவரும் மகிழ்ந்தனர்.
சிறிது நேரத்தில், அனைவரின்
துயர மூட்டைகளும், அருகிலிருக்கும் கோயிலுக்குள் வந்தன.
ஆனால் ஒரு ஆச்சர்யம்.
இறைவன் சொல்லியபடி யாரும் மூட்டையை கீழே வைக்காமல், அவரவர் துயர மூட்டைகளை கை யிலேயே பிடித்திருந்தனர்.
கடவுளிடம் வேண்டிய மனிதனின் மூட்டை,
மற்றவர்களின் துயர மூட்டையைவிட,
சின்னதாக இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது.
பலர் பெரிய மூட்டையை வைத்துக்கொண்டு,
அவர்களது இயற்கையான
சிரிப்பு முகம் மாறாமல் நின்றிருந்தனர்.
' இறைவா... எனது மூட்டையே சின்னதாகத்தான் உள்ளது.
நான் எனது மூட்டையுடனேயே எனது வீட்டிற்கு சென்று விட்டால்,
உனக்கு நன்றி சொல்வேன் ' என்று வேண்டினான், கடவுளை முதலில் பிரார்த்தனை செய்த, அந்த மனிதன்.
இருப்பினும், அவனுக்கு ஒரு விஷயம் புரிய வில்லை.
பெரிய மூட்டையை வைத்திருப்பவர்கள்,
மூட்டையை சின்னதாக
மாற்றிக் கொள்ள விரும்பாமல்
ஏன் கையிலேயே வைத்திருக்கிறார்கள் ?
அவன் அருகில் நின்றிருந்த,
பெரிய மூட்டையை வைத்திருந்தவரிடம் அதற்கானக் காரணத்தைக் கேட்டான்.
அவர் அமைதியாக சொன்னார்.
' நமது துயரங்கள், கவலைகளும் பற்றி நமக்கு ஓரளவிற்காவது தெரியும்.
ஆனால் அடுத்தவர்கள் படுகிற துயரங்கள் நமக்கு பழக்கமில்லாத வை.
மேலும், அடுத்தவரின் துயரத்தின் தாக்கம் எப்படிப் பட்டது,
அதன் பாதிப்பு வேகம் எப்படி இருக்கும் ? என்றுத் தெரியாமல்,
துயரத்தின் அளவை,
எண்ணிக்கையை மட்டும் குறைத்துக் கொள்ளவதால் என்ன பயன் ?
அது ஆபத்தானது.' என்றார்.
கடவுளின் உத்தரவு கிடைத்ததும்,
அங்கு வந்தவர்கள், தங்களது சொந்த துயர மூட்டையுடனேயே, ( வேறு எதையும் மாற்றிக் கொள்ள மனமில்லாமல் ) அவரவர்கள் வீட்டிற்கு சென்றனர்.
கனவு கலைந்து எழுந்தவன்,
மீண்டும் ஆண்டவனை மிகுந்த பக்தியுடனும், நன்றியுடனும் பிரார்த்தித்தான்.
' நீங்கள் மிகவும் கருணை உள்ளவர்.
என்னை பெரிய சகதியிலிருந்து காப்பாற்றி இருக்கிறீர்கள்.
மக்கள் எவ்வாறு தங்கள் துயரங்களை மறைத்துக் கொண்டு,
மகிழ்ச்சி மிக்கவர்கள் போல
வெளித் தோற்றமளிக்கிறார்கள்
என்பதை என் கனவின் மூலம் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.'
****. ****.
ஓஷோ அவர்களின் இந்த கதை மூலமாக, அவரது சிந்தனை :-
" உலகில் எந்த மனிதனும்,
தன் உண்மை சொரூபத்தை
வெளியேக் காட்டுவதில்லை. "

கடவுளே அனுப்பி வைத்தாரா?

 கடவுளே அனுப்பி வைத்தாரா?

ஓர் ஊருக்கு புதிய மனிதன் ஒருவன் வந்தான்.
‘‘எங்கே இருந்து வருகிறாய்?’’ என்று கேட்டார்கள்.
‘‘தேவலோகத்திலிருந்து வருகிறேன்’’ என்றான். கேட்டவர்கள் சிரித்தார்கள்.
‘‘உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?’’
‘‘கடவுள்தான் அனுப்பி வைத்தார்.’’
கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு. புத்தி சரியில்லாதவன் என்பதாகப் புரிந்து கொண்டு அவனை கோயிலுக்குக் கூட்டிச் சென்றார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய வைக்கிற கோயில் அது. அங்கே இருந்த கல்மண்டபத் தூணில் இவனைக் கட்டிப்போட்டு விட்டார்கள்.
இப்போது அவன் சிரித்தான்.
‘‘ஏன் சிரிக்கிறாய்?’’
‘‘என்னை அனுப்பி வைக்கிறபோது கடவுளே சொன்னார், இப்படி எல்லாம் நடக்கும் என்று!’’
‘‘உன்னைக் கட்டிப் போடுவார்கள்... கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று சொன்னார் கடவுள். அவர் சொன்னபடியே நடக்கிறது. ஆகவே, நான் அவருடைய தூதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன நிரூபணம் வேண்டும்?’’
மக்கள் யோசித்தார்கள்.
‘‘சரி. நீ என்னதான் சொல்ல வருகிறாய்?’’
‘‘நம்புங்கள்... நான் ஒரு தீர்க்கதரிசி. கடவுளால் இங்கே அனுப்பப்பட்டவன். உங்களுக்கு வழிகாட்டவே இங்கே வந்திருக்கிறேன்.’’
இப்போது இன்னொரு சிரிப்புச் சத்தம்.
இவனைவிட பலமாகச் சிரிப்பது கேட்டது.
அந்தச் சத்தம் எங்கே இருந்து வருகிறது?
அவனுக்குப் பின்னால், அதே மண்டபத்தில்! அங்கே இன்னொரு மனிதன் தூணில் கட்டப்பட்டிருக்கிறான்.
‘‘நீ ஏன் சிரிக்கிறாய்?’’
‘‘நீ பொய் சொல்கிறாய்... அதனால் சிரிக்கிறேன்!’’
‘‘எது பொய் என்கிறாய்?’’
‘‘கடவுள் உன்னை அனுப்பி வைத்ததாகச் சொல்வது பொய்!’’
‘‘அது எப்படி உனக்குத் தெரியும்?’’
‘‘நான் உன்னை அனுப்பி வைக்கவே இல்லையே!’’
இவன் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.
அவன் சொன்னான் பரிதாபமாக... ‘‘நான்தான் கடவுள் என்று சொல்லிக்கொண்டு இங்கே வந்தவன்.ஒரு மாதமாகக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்கள்.’’
நண்பர்களே!
நானே கடவுளின் தூதன் என்கிறார்கள் சிலர்.
நானே கடவுள் என்கிறார்கள் சிலர்.
உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்?
ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான். ‘‘நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்!’’ என்றான்.
அவர் ‘பளார்’ என்று இவன் கன்னத்தில் அறைந்து விட்டார்.
- தென்கச்சி கோ.சுவாமிநாதன்
இவன் பயந்து ஓடிப் போனான்.
பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ‘‘அவனை ஏன் அறைந்தீர்கள்?’’
‘‘அவன் ஒரு பைத்தியக்காரன்!’’
‘‘அப்படியா?’’
‘‘ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!’’
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் இன் கார்ட்டூனாக இருக்கக்கூடும்
169
7 கருத்துகள்
விரும்பு
கருத்துத் தெரிவி

"கலாபூஷனம் கலைவாதி கலீல் ஓர் ஆளுமை."

 "கலாபூஷனம் கலைவாதி கலீல் ஓர்

ஆளுமை."
இவரொரு சிறந்த கலைஞன், கவிஞன், இலக்கிய கர்த்தா, மொழியாற்றல் , பேச்சாளன், நடிப்பில் திறமை, எழுத்தாளன், ஊடகவியலாளன், ஓவியன், பாடகன் இவ்வாறு நீண்டு சென்றாலும் ஒருங்கே புலமையுள்ள சுவாரஸ்யமான புகழ் பூத்த ஓர் ஆல விருட்சம்.
கலைவாதி கலீல் அட்டுளுகம தர்ஹா டவுன் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றி ஓய்வு நிலையில் நவமணி பத்திரிகை ஆசிரிய பீடத்தில் பணியாற்றி வருகின்றார்.
இவர் வடமாகாணம் மன்னார் மாவட்டத்தில் அவர் குடும்பத்தில் இரட்டையர்களில் ஒருவராகப் பிறந்தவர். இவரோடு கூடப் பிறந்த சகோதரர் காதர் . அவரும் ஒரு கலை இலக்கியத்துறையில் ஈடுபட்ட ஒருவர்.
இவர் இரண்டொரு வருடங்களுக்கு முன்பதாக வபாத்தானார். அல்லாஹ் ஜன்னதுல் பிர்தவ்ஸ் சுவனத்தை கொடுப்பானாக பிரார்த்திப்போம்.
கலைவாதி கலீல் போர் காலத்தில் இடம் பெயர்ந்தவர். மேல் மாகாணம் பாணந்துறை எலுவில பிரதேசத்தில் குடிபுகுந்து வாழ்ந்து கொண்டிருக்கும் கலைக்கு 78 தாண்டுகிறது.
இன்னும் சுறுசுறுப்பாக கலாதியாக கலை வல்லுனராக பண்பாளராக இளமைத் தோற்றத்தில் இதயத்தோடு கலையின் இதயமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்றால் அவரின் பணி மகத்தானது.
உண்மையிலேயே இவர் ஒரு கலைவாதி. கலையில் இவர் ஓர் அமைதியான வாதிதான்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் உருவாகிய காலம் முதல் கலைவாதியும் நானும் (மௌலவி எஸ்எம்எம் முஸ்தபா) கால் நூற்றாண்டுக்கு மேலாக இன்று வரை சகோதரர்களாக நெருங்கிப் பழகி வருவதென்பது அதுவும் கலையின் ஒரு சிறப்பம்சம்.
காத்தான்குடிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் சார்பாகவோ, தனிப்பட்ட முறையிலோ வருவதாக இருந்தாலும் எனதில்லத்தில் தான் தஙகியிருப்பார்.
கலைவாதி கலீல் பல சிறப்புப் பட்டங்களுக்கு சொந்தக்காரர். மட்டுமல்ல பல நூல்களுக்கும் அதன் முகப்போவியங்களுக்கும் உரிமையாளர்.
முஸ்லிம் சமய கலாசார இராஜாங்க முன்னாள் அமைச்சர் மர்ஹூம் AHM அஸ்வர் அக்கால கட்டத்தில் சிறப்பாக பணியாற்றி சமூக நட்சத்திரமாக திகழ்ந்தார். அல்லாஹ் அவரது சகல பணிகளையும் கபூல் செய்வானாக. ஜன்னதுல் பிர்தவ்ஸ் சுவனத்தை கொடுப்பானாக என பிரார்த்திப்போம்.
மர்ஹூம் அஸ்வரின் பாசறையில் கலைஞர்கள் இந்நாட்டில் ஊக்குவிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு பொற்கிழி வழங்கி பொன்னாடை போர்த்தி நூல் ஆவணப்படுத்தி கலைக்கு உயிரோட்டம் கொடுத்த பெருமை புகழ் அன்னாரையே சாரும்.
மர்ஹூம் அஸ்வர் ஹாஜியார் அவரும் ஒரு கலைப் படைப்பாளி. அர்த்தமுள்ள மொழிப் புலமை. மும்மொழிகளிலும் சரளமாக பேசும் திறன்.
இவருடைய காலத்தில் சமய விவகாரங்கள் சீராக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கலைவாதி கலீலின் கலையின் திறமைகளை பாராட்டுவதுடன் உங்கள் கலை வாரிசுகளாக உங்களிடம் கலாசாலையில் கல்வி பயின்ற மாணாக்களை உருவாக்கி இருப்பீர்கள்.
அதே போன்று நவமணி பத்திரிகையிலும் , மாணவர்களின் பயிற்சி செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளில் நீங்கள் பங்கு பற்றி கலை இலக்கியத்துறையை நிறையவே கற்றுக் கொடுத்திருக்கின்றீகள்.
எதிர் காலத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கும் இதில் ஆர்வம் கொண்டவர்களுக்கும் நீங்கள் சொல்லும் செய்தி என்ன?
இறுதியாக, உங்கள் மனைவியின் சுகவீனத்துக்கு மத்தியிலும் நீங்கள் ஒரு ஆளுமையாக இயங்கி செயற்படுகிறீகள். மேலும் இப்பணியில் நீங்கள் சிறந்தோங்கி பல சமூக பணிகள் செய்யவும் உங்கள் ஆரோக்கியமான வாழ்வுக்கும் வல்லவன் அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.
حسبنالله ونعم الوكيل نعم المولى ونعم النصير.
جزاك الله خيرا شكرا.
மௌலவி எஸ்எம்எம் முஸ்தபா,
ஊடகவியலாளர்,
காத்தான்குடி.
22.12.2020.
குறிப்பு :- நான் இதனை எழுதக் காரணம் எனக்கு மிக நீண்ட நாள் ஆசையும் எண்ணமும்.
இன்றுதான் அவகாசம் கிடைத்தது. ஏனென்றால் இன்று காத்தான்குடியில் என்ன? கிழக்கில் அதி கூடிய மழை பெய்து கொண்டிருக்கிறது. மாஷாஅல்லாஹ்.
போதும் என நினைக்கிறேன் அல்ஹம்துலில்லாஹ்.

நெஞ்சம் மறப்பதில்லை -

நெஞ்சம் மறப்பதில்லை - இக்கட்டுரை எழுதிய பா. கவிதா குமார் அவர்களுக்கு நன்றி
மதுரை கருப்பாயூரணி அருகே உள்ள நடிகை தேவிகா வீடு குறித்து அண்ணன் Dhanaraj Sathiah எழுதிய பதிவைப் படித்தவுடன் சட்டென இசையரசி பி.சுசீலா தான் ஞாபகத்திற்கு வந்தார். அவர் பிறந்த நாளுக்காக எழுதப்பட்ட பதிவு இது.
மழைக்காலத்தில் வானவில்லை போலவே கருமேகங்களை ரசிப்பவன் நான்.
எத்தனை வண்ணப்படங்கள் வந்தாலும், கருப்பு வெள்ளை காலப்படங்களின் ரசிகன் நான். தொலைக்காட்சியில் பழைய படமோ, பாடல்களோ ஒளிபரப்பானால் பார்ப்பது வாடிக்கை. இன்று அப்படி ஒரு பாடல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
தமிழ் சினிமாவில் என்றும் எனக்குப் பிடித்த பாடல்கள் என்ற பட்டியலில் இப்பாடலுக்கு எப்போதும் முதலிடம் உண்டு. ஏனெனில், அந்த பாடல் மட்டுமின்றி அந்த பாடலில் தோன்றி நடித்த கதாநாயகியை எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஆண்டவன் கட்டளை படத்தில் இடம் பெற்ற
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா.
பாடல் தான் அது. அந்த காலத்திலேயே நவநாகரீக உடையெனச் சொல்லப்படுகிற சுடிதாரில் தேவிகா மிக அழகாகத் தோன்றியதுடன், இப்பாடலுக்கு அவர் காட்டும் பாவம் என்றென்றும் மறக்க முடியாது.
இந்தப் பாடல் இசையரசி பி.சுசீலாவின் மகத்தான ஹிட்பாடல்களில் ஒன்று.
ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டு விட்டேன்
நான் கேட்டதை எங்கே போட்டு விட்டாய்
என்ன தேடுகின்றாய் எங்கே ஓடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
என்ற கவியரசு கண்ணதாசன் வரிகளை மெல்லிசைமன்னர்கள் இசையில் இசையரசி, உன் தேவைகளை ஏன் மூடுகிறாய் என கேள்வியாய் கேட்கும் போதெல்லாம், அப்படியே ஜிவ்வென்றிருக்கும்.
பி.சுசீலாவின் குரல் அனைத்து நடிகைகளுக்கும் பொருத்தமானதாக இருந்தாலும், எனக்கு தேவிகாவின் குரலுக்கு மிகப் பொருத்தமாகத் தோன்றியது.
ஏனெனில், தேவிகாவிற்கு இசையரசி பி.சுசீலா பாடிய அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்டானவை.
இசையரசியின் பிறந்த நாள் அன்று எனக்குப் பிடித்த அவரது குரலில் தேவிகாவின் பாடல்களைப் பற்றி இந்த பதிவைச் சமர்பிக்கலாம் என நினைக்கிறேன்.
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தேவிகாவிற்கு 200க்கும் மேற்பட்ட பாடல்களை பி.சுசீலா பாடியுள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் நிறைய படங்கள் நடித்த தேவிகா, எம்ஜிஆருடன் ஆனந்தஜோதி படத்தில் மட்டும் தான் நடித்தார்.
அன்றைய கால கட்டத்தில் கதையம்சத்துடன் இணைந்த பாடல்கள், பார்வையாளர்களின் சுக, துக்கங்களுக்கு மாமருந்தாக இருந்தது. இதன் காரணமாகவே இசையரசி சொல்வது போல, பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை.
தேவிகாவிற்கு முதல் முதலாக அன்பு எங்கே படத்திற்காக பி.சுசீலா பாடினார். "எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே" என்ற முதல் பாடலே முத்தான பாடலாக அமைந்தது.
கங்கை கரைத்தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம் பாடல் இலங்கை வானொலியில் ஒலிக்காத நாளுண்டா? திரையிசை திலகம் கேவி.மகாதேவன் இசையில் டிஎம்.சௌந்தராஜனுடன், பி.சுசீலா பாடிய இந்தப் போட்டிப்பாடல் மிகுந்த கவிநயம் கொண்டது.
ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக - நீ அறிந்தவற்றை மறைந்து நின்று சபையினிலே தருக
என்று டிஎம்எஸ் பாட, அதற்கு பி.சுசீலா பதில் அளித்து விட்டு அவர் கேள்வி எழுப்புவது போல இப்படி வரி வரும்..
தாதி தூது தீது தத்தும் தத்தை சொல்லாது
தூதி துது ஒத்தித்தது தூது செல்லாது
தேது தித்தித் தொத்து தீது தெய்வம் வராது
இங்கு துத்தி தத்தும் தத்தை வாழ தித்தித்ததோது..
இப்படி வித்தியாசமான நடையில் பி.சுசீலா பாடிய பாடல் புதிய அனுபவம்.
தேவிகாவிற்காக அவர் தனித்தும், டிஎம்.சௌந்தராஜனுடன் இணைந்து எண்ணற்ற பாடல்களைப் பாடியுள்ளார்.
நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடலை கேட்கும் போதெல்லாம் பெரும் பாரம் மனதிற்குள் ஏறும். சொன்னது நீ தானா சொல் சொல் என அவர் கேட்க கேட்க விக்கித்து நிற்போம். பாலிருக்கும் பழமிருக்கும் என்று பாடும் போது உறக்கம் வராது தவிப்போம். வாழ நினைத்தால் வாழலாம் பாடும் போது தன்னம்பிக்கை பெறலாம். நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாத எனப் பாடும் போது முடியாது என்கிறோம். முத்தான முத்தல்லவோ பாடும் போது குழந்தையாகிறோம்.
மடி மீது தலை வைத்து விடியும் வரை பாடும் போது நிலவை அருகில் வைத்து வேடிக்கை பார்க்கிறோம். கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே என்ற போது தேடியலைகிறோம். அமைதியான நதியினிலே ஓடத்தை இமைக்காமல் ரசிக்கிறோம். இரவும் நிலவும் வளரட்டுமே என்ற போது விடியக் கூடாது என வேண்டுகிறோம். ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே பாடலைக் கேட்டும் போது பறவையாகிறோம். நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் கேட்கும் போது ஆட்டோகிராப் வாங்க நினைக்கிறோம். காகித ஓடம் கடல் அலை மீது கேட்கும் போது துயரில் மூழ்குகிறோம். செந்தூர் முருகன் கோவிலிலே பாடலைக் கேட்கும் போது கோயில்மணி நாமாகிறோம்.
ஊமைப் பெண்ணொரு கனவு கண்டதை அறிய நினைக்கிறோம். கல்யாண ஊர்வலம் பாரு எனப் பாடும் போது பன்னீர் தெளிக்க விரும்புகிறோம். சொல்லடா வாய் திறந்து அம்மா என்று கேட்கும் போது மடி சாய்கிறோம். ஆயிரம் பெண் கேட்கும் ரசிக்கட்டுமே கேட்கும் போது உத்தரவு என்கிறோம். இன்னும் எத்தனையோ பாடல்களை தேவிகாவிற்காக பி.சுசீலா பாடியுள்ளார்.
நடிகை தேவிகாவை நினைக்கும் போதெல்லலாம், இசையரசி பி.சுசீலாவை நினைக்காமல் இருக்க முடியாது. இந்த பாடல்கள் தான் அதற்கு சான்று.

- ப.கவிதா குமார்