Saturday, 1 January 2022

மன்னாரில் யாழ் பல்கலைக்கழக மீன்பிடி வளாகத்தை நிர்மானிக்க வேண்டும்

 மன்னாரில் யாழ் பல்கலைக்கழக மீன்பிடி வளாகத்தை நிர்மானிக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற கோரி ஐனாதிபதிக்கு மடல்

(பிராந்திய செய்தியாளர்) 17.11.2016
மன்னார் மாவட்டத்தில் உயர் கல்விக்கான எந்த வசதியும் இங்குள்ள இளைஞர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படாமல் இருப்பதாலும் மன்னார் மாவட்டத்தில் பெரும்பாலான சமூகமாக மீனவர்களாக இருப்பதால் மன்னாரில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மீன்பிடி வளாகம் ஒன்றை நிர்மானிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி மன்னார் மாவட்டத்தில் கல்விமான்களில் ஒருவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் முன்னாள் செயலாளருமான அ.கீதபொன்கலன் ஐனாதிபதிக்கு சகல விபரங்கள் அடங்கிய மடல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 82 வயதுடைய அரசாங்க ஓய்வூதியரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் முன்னாள் செயலாளருமான விடத்தல்தீவைச் சார்ந்த அ.கீதபொன்கலன் இலங்கை ஐனாதிபதிக்கு மன்னாரில் மீன்பிடி வளாகம் அமைக்கும் சம்பந்தமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள மடலில்
மன்னார்pல் யாழ்பல்கலைக் கழகத்தின் மீன்பிடி வளாகம் ஒன்றை நிர்மானிக்கப்பட வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் 2004, 2005 ஆம் ஆண்டுகளில் பல தடவைகள் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருக்கின்றார்.
அத்துடன் இவ்விடயம் தொடர்பான அமைச்சர், பல்கலைக்கழக ஆணைக்குழு மற்றும் இதன் தொடர்பான அரச அதிகாரிகளுக்குமிடையே கடிதத் தொடர்புகளையும் மேற்கொண்டிருந்தார்.
மேற்படி இந்த விடயம் தங்களது தற்போதைய அரசாங்கத்தின் முதலாவது பாதீட்டில் வெளிக்கொணரப்படலாமென இவ் வாழ் புத்திஐPவிகள் படித்த இளம் சமூகம் எதிர்பார்த்திருந்தபோதும் அது ஏமாற்றமாக காணப்பட்டதைத் தொடர்ந்தே இவ் மடலை இவ்வாழ் புத்தி ஐPவிகள் இளம் சமூகத்தின் சார்பாக உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகின்றேன் என தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டம் 2002 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டது. இவ் மாவட்டம் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளைக் கொண்டதாகும். 2013 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி 42,169 குடும்பங்கள் மன்னார் மாவட்டம் முழுதும் வாழ்ந்து வருகின்றனர்.
இதில் மடுப் பிரதேச செயலகப் பிரிவை தவிர்த்து மற்றைய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மீனவ குடும்பங்களே கூடுதலாக வாழ்ந்து வருகின்றனர். இதைக் கவனத்தில் கொண்டே மன்னார் மாவட்டத்தில் மேற்படி மீன்பிடி வளாகம் நிர்மானிக்கப்பட வேண்டும் என வேண்டி நிற்கின்றோம்.
அன்றைய யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உப வேந்தராய் இருந்த பேராசிரியர் பி.பாலசுந்தரம்பிள்ளை பல்கலைக்கழக ஆணைக்குழு மேலதிக செயலாளருக்கு 2002.05.24 ந் திகதிய கடிதத்தில் யாழ் பல்கலைக்கழகத்துக்கு மீன்பிடித் திணைக்களம் கேட்டு 1992ம் ஆண்டில் விண்ணப்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இதேக் கடிதத்தில் 1993ம் ஆண்டில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு மீன்பிடி வளாகம் அமைக்க அனுமதி கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின் யாழ் பல்கலைக்கழக உப வேந்தராகக் கடமையாற்றிய பேராசிரியர் ஏ.மோகனதாஸ் அன்றைய மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த வி.விஸ்வலிங்கம் அவர்களுக்கு இது தொடர்பாக எழுதிய 29.09.2004 திகதிய கடிதத்தில் யாழ் பல்கலைக் கழகத்திற்கென மீன்பிடி வளாகத்தை அமைப்பதற்கு பல்கலைக் கழக ஆணைக்குழுவிடம் 2002ம் ஆண்டில் அனுமதி கோரப்பட்டதைத் தெரிவித்ததோடு மன்னார் அரசு அதிபரிடம் இதுவிடயமாக தகுந்த தேவையான நடவடிக்கையை அவரிடமிருந்து எதிர்பார்த்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இதற்கான பிரதி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
மேலும் 2004.08.17 திகதி இது தொடர்பான கடிதம் அன்றைய அரசியல் பிரதிக் கல்வி அமைச்சராக இருந்த டினேஸ் குணவர்த்தனாவிடம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேரில் சென்று கையளித்ததைத் தொடர்ந்து இவரால் 2005.10.01 திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றை அப்போதைய பல்கழலக்கழக ஆணைக்குழுத் தலைவருக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இதே பிரதிக் கல்வி அமைச்சருக்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் 2005.02.03 திகதிய கடிதத்தின் மூலம் மன்னார் மாவட்டத்தையும் மற்றைய மாவட்டங்களையும் ஒப்பிட்டுக்காட்டி மன்னார் மாவட்டத்தில் உயர் கல்விக்கான எந்த வசதிகளும் இங்குள்ள இளைஞர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்பதையும் எடுத்துக்காட்டி யாழ் பல்கலைக் கழகத்துக்கான மீன்பிடி வளாகத்தை மன்னாரில் அமைப்பதன் மூலம் இங்குள்ள இளைஞர் சமூதாயத்தை ஊக்குவிக்க முடியும் என்ற கோரிக்கையையும் விட்டிருந்தார்.
பின் 2005 ஆம் வருடத்தில் நாட்டில் சமாதான சூழ்நிலை ஏற்பட்டபின் இவ் சமாதான சூழ்நிலையை சுட்டிக்காட்டி யாழ் பல்கலைக்கழகத்துக்கு மீன்பிடி வளாகத்தை அமைப்பதற்கு அனுமதி வழங்குமாறும் அத்துடன் இவ் வளாகத்தை மன்னாரிலே அமைக்கும்படியும் தனது 2005.04.19ந் திகிதி கடிதத்தின் மூலம் தனது இதே பிரதி கல்வி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மன்னார் தள்ளாடிக்கும் வங்காலைக்கும் இடைப்பட்ட கரையோர நிலப்பரப்பு மன்னார் அரசாங்க அதிபரால் ஒதுக்கப்பட்டிருப்பதையும் அவர் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆகவே மன்னார் மாவட்டம் விசாலமான கடற்கரை இத்துடன் அநேக மீன்பிடிக் கிராமங்களை கொண்ட ஓர் பிரதேசமாகும். இங்குள்ள அநேக இளைஞர்கள் மீன்பிடி தொடர்பாக மிகவும் ஆர்வமுள்ளவர்களாக இருந்தும் கூட தங்களது கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் பிற்பாடு மீன்பிடி தொடர்பிலான பலதரப்பட்ட மேற்படிப்புக்கள் இருக்கின்றதென்பதை அறியாதவர்களாக பல்கலைக் கழக கல்வி மூலம் அவற்றில் மேன்மை அடையக்கூடிய வாய்ப்ப்புக்களை தவறவிட்டு உயர் கல்விக்கான வேறு பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
ஆகவே மன்னார் மாவட்டம் ஒரு மீன்பிடி மாவட்டமாகவும் மன்னாரில் யாழ் பல்கலைக் கழகத்தின் மீன்பிடி வளாகத்தை நிர்மானிக்கப்பட வேண்டும் என நீண்டகால கோரிக்கையாக இருப்பதாலும் யுத்தத்தால் பாதிப்பு அடைந்த வன்னி மாவட்டத்தை அனுதாபத்துடன் கண்ணோக்கி இளம் சமூதாயம் இத்துறையில் முன்னேற்றம் காண ஆவண செய்ய வேண்டும் என தனது மடலில் தெரிவித்துள்ளார்.
(வாஸ் கூஞ்ஞ)

No comments:

Post a Comment