"கலாபூஷனம் கலைவாதி கலீல் ஓர்
ஆளுமை."
இவரொரு சிறந்த கலைஞன், கவிஞன், இலக்கிய கர்த்தா, மொழியாற்றல் , பேச்சாளன், நடிப்பில் திறமை, எழுத்தாளன், ஊடகவியலாளன், ஓவியன், பாடகன் இவ்வாறு நீண்டு சென்றாலும் ஒருங்கே புலமையுள்ள சுவாரஸ்யமான புகழ் பூத்த ஓர் ஆல விருட்சம்.
கலைவாதி கலீல் அட்டுளுகம தர்ஹா டவுன் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றி ஓய்வு நிலையில் நவமணி பத்திரிகை ஆசிரிய பீடத்தில் பணியாற்றி வருகின்றார்.
இவர் வடமாகாணம் மன்னார் மாவட்டத்தில் அவர் குடும்பத்தில் இரட்டையர்களில் ஒருவராகப் பிறந்தவர். இவரோடு கூடப் பிறந்த சகோதரர் காதர் . அவரும் ஒரு கலை இலக்கியத்துறையில் ஈடுபட்ட ஒருவர்.
இவர் இரண்டொரு வருடங்களுக்கு முன்பதாக வபாத்தானார். அல்லாஹ் ஜன்னதுல் பிர்தவ்ஸ் சுவனத்தை கொடுப்பானாக பிரார்த்திப்போம்.
கலைவாதி கலீல் போர் காலத்தில் இடம் பெயர்ந்தவர். மேல் மாகாணம் பாணந்துறை எலுவில பிரதேசத்தில் குடிபுகுந்து வாழ்ந்து கொண்டிருக்கும் கலைக்கு 78 தாண்டுகிறது.
இன்னும் சுறுசுறுப்பாக கலாதியாக கலை வல்லுனராக பண்பாளராக இளமைத் தோற்றத்தில் இதயத்தோடு கலையின் இதயமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்றால் அவரின் பணி மகத்தானது.
உண்மையிலேயே இவர் ஒரு கலைவாதி. கலையில் இவர் ஓர் அமைதியான வாதிதான்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் உருவாகிய காலம் முதல் கலைவாதியும் நானும் (மௌலவி எஸ்எம்எம் முஸ்தபா) கால் நூற்றாண்டுக்கு மேலாக இன்று வரை சகோதரர்களாக நெருங்கிப் பழகி வருவதென்பது அதுவும் கலையின் ஒரு சிறப்பம்சம்.
காத்தான்குடிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் சார்பாகவோ, தனிப்பட்ட முறையிலோ வருவதாக இருந்தாலும் எனதில்லத்தில் தான் தஙகியிருப்பார்.
கலைவாதி கலீல் பல சிறப்புப் பட்டங்களுக்கு சொந்தக்காரர். மட்டுமல்ல பல நூல்களுக்கும் அதன் முகப்போவியங்களுக்கும் உரிமையாளர்.
முஸ்லிம் சமய கலாசார இராஜாங்க முன்னாள் அமைச்சர் மர்ஹூம் AHM அஸ்வர் அக்கால கட்டத்தில் சிறப்பாக பணியாற்றி சமூக நட்சத்திரமாக திகழ்ந்தார். அல்லாஹ் அவரது சகல பணிகளையும் கபூல் செய்வானாக. ஜன்னதுல் பிர்தவ்ஸ் சுவனத்தை கொடுப்பானாக என பிரார்த்திப்போம்.
மர்ஹூம் அஸ்வரின் பாசறையில் கலைஞர்கள் இந்நாட்டில் ஊக்குவிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு பொற்கிழி வழங்கி பொன்னாடை போர்த்தி நூல் ஆவணப்படுத்தி கலைக்கு உயிரோட்டம் கொடுத்த பெருமை புகழ் அன்னாரையே சாரும்.
மர்ஹூம் அஸ்வர் ஹாஜியார் அவரும் ஒரு கலைப் படைப்பாளி. அர்த்தமுள்ள மொழிப் புலமை. மும்மொழிகளிலும் சரளமாக பேசும் திறன்.
இவருடைய காலத்தில் சமய விவகாரங்கள் சீராக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கலைவாதி கலீலின் கலையின் திறமைகளை பாராட்டுவதுடன் உங்கள் கலை வாரிசுகளாக உங்களிடம் கலாசாலையில் கல்வி பயின்ற மாணாக்களை உருவாக்கி இருப்பீர்கள்.
அதே போன்று நவமணி பத்திரிகையிலும் , மாணவர்களின் பயிற்சி செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளில் நீங்கள் பங்கு பற்றி கலை இலக்கியத்துறையை நிறையவே கற்றுக் கொடுத்திருக்கின்றீகள்.
எதிர் காலத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கும் இதில் ஆர்வம் கொண்டவர்களுக்கும் நீங்கள் சொல்லும் செய்தி என்ன?
இறுதியாக, உங்கள் மனைவியின் சுகவீனத்துக்கு மத்தியிலும் நீங்கள் ஒரு ஆளுமையாக இயங்கி செயற்படுகிறீகள். மேலும் இப்பணியில் நீங்கள் சிறந்தோங்கி பல சமூக பணிகள் செய்யவும் உங்கள் ஆரோக்கியமான வாழ்வுக்கும் வல்லவன் அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.
حسبنالله ونعم الوكيل نعم المولى ونعم النصير.
جزاك الله خيرا شكرا.
மௌலவி எஸ்எம்எம் முஸ்தபா,
ஊடகவியலாளர்,
காத்தான்குடி.
22.12.2020.
குறிப்பு :- நான் இதனை எழுதக் காரணம் எனக்கு மிக நீண்ட நாள் ஆசையும் எண்ணமும்.
இன்றுதான் அவகாசம் கிடைத்தது. ஏனென்றால் இன்று காத்தான்குடியில் என்ன? கிழக்கில் அதி கூடிய மழை பெய்து கொண்டிருக்கிறது. மாஷாஅல்லாஹ்.
போதும் என நினைக்கிறேன் அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment