Friday, 30 October 2020

வாலி

 கிருஷ்ண கான சபா .பெயரெல்லாம் பெரிதாகத் தான் இருக்கிறது.அப்போதைய சென்னையில் அது கீற்றுக்கொட்டகை தான்.பனகல் பார்க் அருகே ஒரு ஓரத்தில் ஒளிந்துகொண்டிருந்த அந்த நாடக அரங்கம் அன்று பரபரப்பானது.காரணம் ஒரு பிரபலம் நாடகம் பார்க்க ஒப்புதல் தந்திருக்கிறது.நாடகத்தின் பெயர் கவிஞனின் காதலி.ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருப்பது மக்கள் திலகத்தை.அன்று அவர் புரட்சி நடிகர்.நாடகத்தின் ஹீரோ பிற்காலத்தில் அமைச்சராக இருந்த திருச்சி சௌந்தரராஜன்.அவர் தான் மெனக்கெட்டு எம்.ஜி.ஆரை அழைத்திருந்தார்.

மனைவிக்கு சுகமில்லாத நேரம்.அருகிலிருந்து கவனிக்க ஓடிக்கொண்டிருக்கிறார்.இருக்கிற இடைவெளியில் வந்து தலைகாட்டிவிட்டு அப்படியே ஓடிவிடுவேன்.சம்மதமா?. ஆகட்டுங்க.நீண்ட நேரம் உங்களை காக்க வெக்கமாட்டேன் என்ற உறுதிமொழியை வாங்கிக்கொண்டு தான் வர சம்மதித்தார்.ஆனால் மூன்று மணி நேரம் சோகத்தை மறந்து அப்படியே அவர் ஒன்றிவிட்டார்.காரணம் அந்த நாடக வசனங்கள் அவரை அப்படியே ஈர்த்திருந்தது.முடிவில் மைக்கைப் பிடித்து அதை அப்படியே கொட்டியும்விட்டார்.யாரப்பா ரைட்டர்.?. முடிவில் சௌந்தரராஜனிடம் கேட்டேவிட்டார்.எங்க ஊர்க்காரர் தாங்க .வாலின்னு பேரு.அந்தப் பெயரை அப்போது தான் முதன் முறையாக கேள்விப்பட்டார் எம்.ஜி.ஆர்.
பாரதிதாசனின் கவிதையைப் படிப்பது போல் இருக்கிறது நாடக வசனங்கள்.மைக்கைப் பிடித்த எம்.ஜி.ஆருக்கு வாலியைப் பிடிக்கக் காரணம் அவரது தமிழ் என்று புரிந்தது.தமிழ் மீது எனக்கு அளவில்லாத காதலால் தான் எனது மனைவியின் உடல் நிலையையும் மறந்து மூன்று மணி நேரம் பிரமித்துப் போய் உட்கார்ந்துவிட்டேன்.விசாரித்தேன்.வாலி என்றார்கள்.ஸ்ரீரங்கத்தில் இருக்கிறாராம்.அவர் எப்போது மெட்ராஸ் வந்தாலும் என்னை வந்து பார்க்கலாம்.கொட்டை எழுத்துக்களில் மறுநாள் தென்றல் திரை ஏட்டில் அவரது முழு பேச்சும் வந்தது.வாங்கிப் படிக்கிறார் வாலி.சொல்லி வெச்ச மாதிரி மூன்றாம் நாள் எம்.ஜி.ஆர்.அலுவலகத்திலிருந்து ஒரு லெட்டர்.அதே தான் சென்னை வந்தால் சந்திக்கவும்.ஆனால் மெட்ராஸ் போக வாலியிடம் சில்லரையில்லை.திசை தெரியாமல் சுற்றிக்கொண்டிருந்த அந்த இளைஞனிடம் இருந்தது தமிழ் மட்டும் தான்.வாலியின் பிறந்த நாளில் அந்த மகத்தான கவிஞனை கொஞ்சம் நினைவு கூறலாமே.
வாலி என்ற ஸ்ரீரங்கத்து ரங்கராஜனை நிறையத் தடவை பேசி விட்டோம்.இருந்தாலும் அந்த மகத்தான மனிதன் தமிழ்த் திரையுலகிற்கு நிறையவே செய்துவிட்டுப் போயிருக்கிறார்.திருவரங்கத்து திருப்பராயத்துறை தான் வாலியை நமக்கு அடையாளம் காட்டிய மண்.காவிரியின் தென்கரையும் கொள்ளிடத்தின் வடகரையும் சங்கமிக்கும் செழிப்பான மண்.எங்கு திரும்பினாலும் இயற்கை எழில் கொஞ்சும் பூமி.சாப்பாட்டிற்குப் பஞ்சமில்லை.அப்பா வாங்கல் ஸ்ரீனிவாச ஐயங்காருக்கு கரூர் தான் சொந்த ஊர்.அம்மா பொன்னம்மாள்.அன்பான இல்லத்தரசி.பையன் படிக்காமல் கொள்ளிடக் கரை கழுதை மண்டபத்தில் சதா பொழுதைக் கழிக்கிறானே என சங்கடம்.கூடப் படிக்கும் ரங்கராஜன் புத்தகமும் கையுமாக இருக்க எனக்கு வாய்த்தது பேப்பரை வைத்துக்கொண்டு எதையோ கிறுக்கிக்கொண்டிருக்கிறதே என்ற சங்கடம்.வாலிக்கு படிப்பை விட வரைவதில் இஷ்டம்.அப்படித்தான் எட்டாம் வகுப்புப் படிக்கும்போது நண்பன் பாபு அவரை முதன் முதலாக வாலி என்று அழைத்தான்.அப்போதெல்லாம் விகடனில் மாலியின் கார்ட்டூன் பிரசித்தம்.அங்கொரு மாலி என்றால் இங்கொரு வாலி.நண்பர் கூட்டம் அவரை வாலி என்றே அழைக்க எங்க ஊரு ஆட்டுக்குட்டிக்குக் கூட அந்தப் பெயர் தெரியும் என பிற்காலத்தில் எழுதினார் வாலி.
வரைந்து தள்ளிக்கொண்டே கழுதை மண்டபத்தில் அமர்ந்துகொண்டு கவிதை புணைவதிலும் ஆர்வம்.அந்த மண்டபத்தில் தான் கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் பிறந்தது.ஒரு கார்டில் எழுதிப்போட்ட பாடல் டி.எம்.எஸ்ஸைக் கவர்ந்தது.தண்ணீலே இருந்தா எருமை எப்படி விலை போகும்.மெட்ராஸ் வாய்யா.ரயிலடியில் டி.எம்.எஸ்.அழைத்தது ஞாபகத்திற்கு வந்தது.இப்படி பிரபலங்கள் அழைத்த சென்னை பிற்காலத்தில் அவரை கடுப்பேற்றியது வேறு விஷயம்.அன்னைத் தமிழ் என்னை வாழ வைக்கும் என்ற இறுமாப்போடு வண்டியேறிய வாலிக்கு வலிகள் தான் மிஞ்சியது.முட்டி மோதிய வாழ்க்கையில் சோகத்தின் சுவடுகள் தான் மிச்சம்.இளமையில் நேதாஜி என்ற கையெழுத்துப் பத்திரிகை போக நாடகங்கள் நடத்த வானொலி அழைப்புகள்.ஆனால் திரைத் துறை மட்டும் கதவை பலமாக அடைத்துக்கொண்டது.தி.நகர் க்ளப் ஹவுஸில் நான்காண்டு கால நரக வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் கிடைத்தது தான் ஒரே ஆறுதல்.58 ல் அழகர் மலைக் கள்ளனில் அத்தி பூத்தாற்போல் ஒரு வாய்ப்பு.தேவராஜ் அர்ஸின் தம்பி கெம்பராஜ் படமிது.ஜெயலலிதா அம்மா சந்தியாவை அவர் தான் சினி ஃபீல்டுக்கு கொண்டு வந்தவர்.நிலவும் தாரையும் நீயம்மா உலகம் ஒரு நாள் உனதம்மா.தனக்காக போட்ட பல்லவி.அந்த உலகம் எப்போது வாய்க்கும்.?. சுத்தமாகத் தெரியாது.61 ல் தான் மீண்டும் எம்.ஜி.ஆரை சந்தித்தார்.அது நல்லவன் வாழ்வான் படத்திற்காக.
படத்திற்கு பாடல் எழுதும் திறமை அவரிடம் கொட்டிக் கிடப்பதை ஆரம்பத்தில் கண்டறிந்தவர்கள் இரு பாடகர்கள் தான்.ஐயா டி.எம்.எஸ்ஸூம் ஐயா பி.பி.எஸ்ஸூம்.திருச்சி வானொலி நிலையத்திற்கு மெல்லிசை நிகழ்ச்சிகளுக்கு ஏகப்பட்ட வாலியின் பாடல்களை அவர்கள் பாடியிருக்கிறார்கள்.அப்போதும் அதே பல்லவி தான் .வாய்யா மெட்ராஸூக்கு.படத்துறை தான் அவரை பாடாய்படுத்தியது.இதே மெல்லிசை மன்னர் நண்பர் கோபியிடம் காதோரம் இவரை ஊரைப் பார்த்து போகச் சொல்லுங்க என்ற வரலாறும் வாலிக்கு உண்டு.அதே மன்னர் தான் அடடா!.. எங்க இருந்தீங்க இவ்வளவு நாளும் என்ற கதையும் நடந்தது.பூ வரையும் பூங்கொடியே பூ மாலை சூடவா பாடலோடு வாலியின் பாமாலை பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பக் காரணமும் இதே மன்னர் தான்.ஒரு பாட்டுத் தான் தருவேன்.ஆரம்பத்தில் கன்டிஷன் போட்ட இயக்குநர் திலகம் மொத்த பாட்டும் அவரே எழுதட்டும் என பச்சைக்கொடி காட்ட வாலியின் காடெல்லாம் பச்சை பசேலென மாறிப் போன வரலாறு உலகறியும்.மக்கள் திலகத்தின் கடைக்கண் பார்வை பட்டதும் வாலி விண்ணைத் தொட்ட வரலாறும் நமக்கெல்லாம் தெரிந்தது தான்.
கவிஞர்கள் எப்போதுமே கற்பனையில் மிதப்பவர்கள்.இப்படிச் சொல்லலாமா அப்படிச் சொல்லலாமா என யோசிக்கும் கவிஞர்களுக்கு மத்தியில் அருவியாய் கொண்டும் கவியரசு கோலோச்சிய காலத்தில் தான் வாலியின் திரைப் பிரவேசம்.உடுமலையார் தஞ்சையார் பட்டுக்கோட்டையார் காலம் முடிந்து கவியரசு தான் என்றிருந்த நேரத்தில் வந்து நின்றவர் வாலி.கப்பலுக்கு நடுவே கட்டு மரமாக வந்து நின்றேன் என அவரே ஒரு முறை சொல்லியிருக்கிறார்.அப்படிப்பட்ட கவிஞரே குழம்பிப்போய் இதை நான் எப்பய்யா எழுதினேன் என யோசித்த நேரங்களும் உண்டு.கவிஞரே இது வாலி எழுதிய பாட்டு.அதானே பார்த்தேன்.என்னமா யோசிச்சிருக்காரு.போகப்போக அது அதிகமானதே தவிர குறையவே இல்லை.வாலி!.. உம் பாட்டை கேட்டேன்யா அருமையா எழுதியிருக்கே.உனக்குப் புடிச்ச வாட் 69 அனுப்பியிருக்கேன். எதிரே கடை விரித்தாலும் எப்போதுமே அந்த நெஞ்சில் குரோதமில்லை.இப்படித்தான் பட்டுக்கோட்டையை உச்சி முகர்ந்திருக்கிறார் கவிஞர்.அப்படிப்பட்ட கவிஞரோடு எத்தனை ஆண்டுகள் போட்டி போட்டு எழுதித் தள்ளினார் வாலி.
வற்றாத அருவியாய் கொட்டும் வார்த்தைகள்.காலம் மாற மாற கற்பனையில் மாற்றமில்லை.மூன்று தலை முறைகள் கடந்தபோதும் புத்தம் புதிதாக புத்துணர்வோடு வந்து நின்றார் வாலி.அன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் கடிதம் கைகளில் எழுதவில்லை கண்ணீரில் எழுதுகிறேன்.எவ்வளவு காலத்திற்கு முன்பு எழுதியது.இறப்பதற்கு ஓராண்டு முன்பு அதே கற்பனை.ஆனால் இன்றைய தலைமுறைக்காக.
விழியல்ல விரலது ஓர் மடல் தான் வரைந்தது
உயிரல்ல உயிலது உனக்குத் தான் உரியது.
இமைகளின் இடையில் நீ
இமையாது நான் தவிக்கிறேன்.
லீலைக்காக ஷ்ரேயா கோஷல் பாடியது.ஏன் வாலியை வாலிபக் கவிஞர் என அழைக்கிறோம் என்றால் இதற்காகத் தான்.80 வயது உடலில் 18 வயது மனதோடு அவரால் மட்டுமே வலம் வர முடிந்தது.லேசா லேசா பாடலில் ஒரு வரி வரும்.தனிமையில் இருக்கையில் எரிகிறதே பனி இரவும் அனல் மழையாய் பொழிகிறதே.கற்பனையில் எப்போதும் அவர் புத்தம் புது மலராகவே வந்து நின்றார்.மாணிக்கம் என்ற மீனவனின் மனதில் குடி புகுந்த முத்தழகி காணிக்கையாக தன்னைத் தர நாணத்தோடு ஓடி வருகிறாள்.கேரளக் கரையோரம் அந்த தென்னை மரத் தோப்பில் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் என சுத்த தன்யாசியில் வந்த சத்தான வரிகளை இப்போதும் இளைஞர் கூட்டம் அசை போடக் காரணம் காதல் எப்போதுமே கொண்டாடப்படுவதால் தான்.அம்பிகாபதி காலத்து அதே காதல் அஜீத் காலத்திலும் வாலியிடம் வதைபட்டது மறுக்க முடியாத உண்மை.
பாவலன் மறந்த பாடலில் ஒன்று பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று.இப்போது கூட
அருமையான
கவிதையிது.பூரண நிலவையும் புன்னகை மலரையும் இப்போதும் ரசிக்கலாம்.காய் பழுத்து கனிந்துவிட்டால் கிளையில் தங்குமா? . கைகளிலே விழுந்திடாமல் பசியடங்குமா?. வார்த்தைகளின் கோர்வையில் ஒரு ஓஹோ போடத் தோன்றும்.அறுபதுகளின் வாலி.அப்படியே கொஞ்சம் 80களில் அதே கற்பனை துள்ளாட்டம் போட்டிருக்கும்.தேயிலைத் தோட்டம் நீ தேவதையாட்டம் துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்ன.?. நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியம் ஆடும் அழகை அப்படியே அள்ளித் தந்திருப்பார்.சோகத்திலும் சுகமான வரிகள் வாலியின் சொத்து.விதியே உன் கை நீட்டி வலை வீசலாம் ஊரார்கள் எனைப் பார்த்து விலை பேசலாம்.வலையும் விலையும் அலங்காரமல்ல.அந்த அபலையின் அழு குரல்.இளம் பெண்ணின் கண்ணீரை யார் மாற்றுவார் எரிகின்ற நெஞ்சத்தை யார் தேற்றுவார்.ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா என அழைத்த பாடல் இப்போதும் சாகா வரத்தோடு அப்படியே நிற்கிறது.
ஆன்மீகத்தை அப்படியே கரைத்துக் குடித்தவர் வாலி.வெறும் கவிஞரல்ல.சங்கீத சுர ஞானம் உள்ளவர்.எழுதும்போதே இது இந்த ராகத்தில் இருந்தால் எடுப்பாக இருக்கும் என்பதை முன் கூட்டியே கணிப்பவர்.பெரும்பாலும் அந்தப் பாடல் அதே ராகத்தில் தான் அமையப்பெற்றிருக்கும்.காது கொடுத்துக் கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம்.ஆனந்த பைரவியை அப்படியே தந்தது.சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ செந்தாமரை இரு கண்ணானனதோ அழகான பெஹாக்கில் வரும்படி எழுதினார்.மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ.சாருகேசியில் அம்சமாக வந்து உட்கார்ந்த வரிகள்.எப்போதுமே அவரது எழுத்துக்களில் எளிமையோடு கலந்த இலக்கியம் இருக்கும்.அஞ்சு விரல் பட்டால் என்ன அஞ்சுகத்தை தொட்டால் என்ன?. கொத்து மலர் செண்டா என்ன கொஞ்சும் மன்னன் வண்டா என்ன?. வெக்கம் வரும் வந்தால் என்ன வேண்டியதை தந்தால் என்ன?. வியக்க வைக்கும் அவரது வரிகள்.மக்களுக்கான மெஸ்ஸேஜை அப்படியே உள்ளே இறக்கிவிடுவார்.
உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?. இந்த கொரோனா நேரத்தில் பாடிப் பாருங்கள் கச்சிதமாக பொருந்தும்.நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம் நாம் நேர்வழியில் நடந்து சென்றால் நன்மையடையலாம் .எந்த நாடு என்ற கேள்வியில்லை எந்த ஜாதி என்ற பேதமில்லை மனிதர்கள் அன்பின் வழி தேடி இயற்கையை வணங்குகிறார்.எப்போதுமே பொருந்தும் வரிகள்.இல்லாமை நீக்க வேண்டும் தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு எல்லோரும் வாழ வேண்டும் என்ற வரிகளில் இன்றும் வாழ்கிறார் வாலி.முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர் உழைப்பதனாலே கடமைகளை புரிவதெல்லாம் விடுதலை வேண்டுவதாலே.ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை.நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என்கிறார் வாலி.
மனத்தாலே மனித குலம் மேம்பாடெய்தும் நல்ல மனங்கெட்டால் மாநுடம் தான் மெல்லச் சாகும்.திரைக்கு வெளியிலும் அவர் மாநுடம் பேசினார்.விலங்கு மனம் கொண்டிருந்தான் இலங்கை வேந்தன் அந்த விலங்கு இனம் தன்னாலே வீழ்ச்சியுற்றான்.ராமாயணம் அவரது கவிதை வழியே அழகாகப் புரிந்தது.கேரக்டர்களை அவ்வளவு அழகாக உள் வாங்குவார்.இலங்கை வேந்தனை இவ்வளவு அழகாக எடுத்துப் போடும் வாலி தனது பாண்டவர் பூமியிலும் பட்டையைக் கிளப்பியிருப்பார்.திரையிலும் அந்த வித்தையில் அவர் கெட்டிக்காரர்.ஸ்ரீதரின் இளமை ஊஞ்சலாடுகிறது.அதில் கமலின் காதல் கை கூடாத சோகம்.மேடையின் எதிரே காதலி.வெறுத்துப் போய் அவன் பாரதியை துணைக்கழைக்கிறான்.வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா.அந்த ஆணுக்காக வாலி வரிந்துகட்டுகிறார்.அடிக்கடி மனம் மாறும் வஞ்சியின் நெஞ்சத்தை வாலி வார்த்தையால் குதறுகிறார்.ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல் போன்றதடி நாளும் மாறுகின்ற உன் மனம்.எனக்கின்று தெரிந்தது.நெஞ்சம் துடித்திடும் நாழி நீயோ அடுத்தவன் தோழி.அப்படியே பின்னோக்கிப் போனால் உறவு என்றொரு சொல்லியிருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும் என எழுதியிருப்பார்.இதயம் என்றொரு இடமிருந்தால் ஏக்கம் என்றொரு நிலையிருக்கும்.அவ்வளவு அசத்தலான வரிகள்.
கவிஞரின் சாயலில் தோன்றினாலும் சில இடங்களில் வாலியின் குறும்பு அழகாக வெளிப்பட்டு நம்மை அட போட வைக்கும்.புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே என தன்னையே அந்த பாத்திரத்தில் கொண்டு போய் வைத்திருப்பார்.நித்தமும் நாடகம் நினைவெல்லாம் காவியம் கடமையும் வந்தது கவலையும் வந்தது.அந்த நாள் ஞாபகம் அத்தனையும் அவருக்கானது.ஆனால் காதலென்று வந்துவிட்டால் வாலிபம் அங்கே விளையாடும்.அலை போல் குழலசைய சிலை போல் நடை பயில வளையோசை இசை கொடுக்க வாகாக வந்து நிற்பார்.புருவம் வில்லாக பார்வை கணையாக பவளமென விரல் நகம் பசுந்தளிர் போல் வளைக்கரம் என பட்டையைக் கிளப்புவார்.தாளக்கட்டில் அவரது வரிகள் எப்போதுமே தளிர் நடம் புரியும்.தத்தை போல தாவும் பாவை பாதம் நோகுமென்று மெத்தை போல பூவைத் தூவும் வாடைக் காற்றும் உண்டு.மீட்டருக்குள் மேட்டரை கச்சிதமாக கொண்டு வருவார்.நான் அள்ளி கொள்ள அவள் பள்ளி கொள்ள சுகம் மெல்லவே புரியும்.பூவை என்பதோர் பூவைக் கண்டதும் தேவை தேவை என வருவாள் என புளகாங்கிதம் அடைய வைப்பார்.
எப்போதோ எழுதிய வரிகளை காலம் கடந்தும் பயன்படுத்தியிருக்கிறார்.58 ல் எழுதிய வரிகளை எம்.பி.சீனிவாசனிடம் சான்ஸ் கேட்டுப் போகும்போது காட்டினார்.நல்லாயிருக்கு ஆனா சிச்சுவேஷனுக்கு சூட்டாகாதே என ரிஜெக்ட் ஆன பாடல் 67 ல் அழகாக சூட்டானது.அது தான் கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்.?. அவரது வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல் போட்ட உடனே சூடாக விற்ற பாடல்.அறிஞர் அண்ணாவிற்கு பிடித்தமான பாடல்.என்ன எதிர் நீச்சல் சௌக்கியமா என கேட்கிற அளவிற்கு அவரை பாதித்த பாடல்.கே.பிக்குப் பிடித்தது அந்த கொத்து மலர்க் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ.நண்பர் குமார்
அருமையாக
மெட்டமைக்க கே.பி.அனுபவித்து எடுத்த பாடல்.ஆலிலை மேலொரு கண்ணனைப் போல் இவன் வந்தவனோ நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ சுமை கொண்ட பூங்கொடி என ஜெயந்தியை அட்டகாசம் செய்திருப்பார்.சுவை கொண்ட தேன் கனி உடை கொண்டு மூடும்போது உறங்குமோ உன்னழகு.அடடா!.. கலக்கலான கற்பனையில் வந்து விழுந்த வார்த்தைகள்.
வாலி தனது துணையை மனதில் வைத்து வரைந்த கவிதை தான் நான் பாடிய முதல் பாட்டு அவள் பேசிய தமிழ் கேட்டு.69 ல் அவர் எழுதியது.இவள் காலடி நிழல் படும் நேரம் மலர் போல முள்ளும் மாறும்.சுப்பையா நாயுடு
அருமையாக
மெட்டுப் போட்டிருப்பார்.ரமண திலகத்தை அவர் நாடகத்தில் தான் சந்தித்தார்.ஏ.வி.எம்.ராஜனுக்கு நாயகியாக வந்தவரை தனது நாயகியாக மாற்ற அவர் படாத பாடுபட்டார்.பத்மினியும் ஈ.வி.சரோஜாவும் தைரியம் தர திருப்பதிக்கு இழுத்துக்கொண்டு ஓடினார்.வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் பயின்ற காலத்து பழக்கம் அந்த நடிகைகளோடு.எம்.ஜி.ஆருக்குக் கூட சொல்லாமல் ஒரு அவசரத் திருமணம்.கண்ணனின் சந்நிதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனி மேல் காலங்கள் உள்ளவரை எந்தன் பொண்மணிக்கென்ன குறை என அழகானதொரு குடும்ப வாழ்க்கையில் ஒரு ஆண் வாரிசு.தாலாட்டச் சொன்னால் பாட்டொன்று சொல்வேன் பாலூட்டச் சொன்னால் நானெங்கு போவேன் என பம்பரமாக வாலி சுழன்ற காலங்கள்.மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டியதிலிருந்து தொடங்கிய ஓட்டம்.அன்றோர் கோயிலை தூக்கி வைத்தேன் அதில் அம்பிகையாய் உனை ஆக்கி வைத்தேன் என ஆடிப் பாடிய காலங்கள் சட்டென மறைந்தபோது கவிஞர் தளர்ந்து தான் போனார்.ஆயிரம் அழகியர் பார்த்ததுண்டு ஆனால் அவள் போல் பார்த்ததில்லையே.ஆதரவான வார்த்தையைப் பேசி அருமை மிகுந்த மனைவியை நேசி என பலருக்கும் பாடமெடுத்த வாலியின் வாழ்வில் வசந்தம் தொலைந்தது.அப்படியே அதிகம் பொது வாழ்வில் தன்னைக் கரைத்தார்.
இயல் இசை நாடக மன்றத்தின் சேர்மனாக வாலி இருந்திருக்கிறார்.ராஜீவ் காந்தி தொடங்கிய சௌத் ஜோன் கல்ச்சரல் சென்ட்ரலில் உறுப்பினராக இருந்திருக்கிறார்.அதன் பொருட்டு பல மாநிலங்களுக்கும் பறந்திருக்கிறார்.66ல் மணி மகுடம் ஷூட்டிங்கில் எஸ்.எஸ்.ஆர்.தான் கலைஞரை அவருக்கு அறிமுகப்படுத்தினார்.அன்று முதல் கலைஞரோடு அவ்வளவு நெருக்கம்.இருவரையும் இணைத்தது தமிழன்னை.மாநிலத்தில் கவியரங்கம் எங்கு நடந்தாலும் வாலி நீங்களும் உண்டு என வலிய இழுத்துப்போட்டது கலைஞர் தான்.ஆரம்பத்தில் தடுமாறினாலும் போகப்போக வாலியின் இலக்கிய விருந்தை எல்லோரும் பருகக் காரணம் கலைஞர் தான்.எம்.ஜி.ஆரோடு நெருக்கத்தில் இருந்தாலும் கலைஞரை அவர் விட்டுத் தந்ததில்லை.மூன்று தமிழ் தோன்றியது அவன்கிட்டேயா?. மக்கள் திலகம் கிண்டலடித்தாலும் வாலி முத்துவிற்காக
அருமையான
பாடல்களைத் தந்தார்.எவ்வளவு ஆண்டுகள் கடந்தும் அந்த கவிக்குயில் பாட்டுக் கோட்டைகளை கட்டிக்கொண்டேயிருந்தது.ஹீரோக்களை தூக்கிப் பிடிக்க அனைவரும் வாலியிடம் தான் வந்தார்கள்.பண விஷயத்தில் அவர் நண்பர் நாகேஷ்.தசாவதாரத்திற்கு பாட்டு ரெடியாண்ணே?. கேஷூ ரெடியாண்ணே.?. அதெல்லாம் கரெக்டா இருக்கு.ஐம்பதாயிரம் வாங்கி பாக்கெட்டில் போட்டு விட்டு அப்படியே எழுதியதைத் தர லட்ச ரூபாய் தரலாமே என ஆனந்தமானார் கமல்.அஷ்ட அட்சரம் ஏற்கும் நெஞ்சு பஞ்ச அட்சரம் பார்க்காது.சைவத்தை விட வைணவம் பிரமாண்டம் எனக் காட்ட வைணவ வாலிபர் வரைந்த வரிகளில் அவரது மேதமை தெரிந்தது.கதைப்படி முக்கியமான பாடல்.கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லைத் தெரியாது.அதே கற்சிலை என்றாலும் கற்பனை என்றாலும் தான்.ஆனால் வளர்ந்து நின்ற வாலி இப்போது வானளாவ நின்றிருந்தார்.சின்னச் சின்ன கம்பெனிகளுக்கு கண்டு கொள்ளவேமாட்டார்.பெரிய பட்ஜெட் என்றால் விடவும் மாட்டார்.ஹீரோக்களை எங்கேயோ கொண்டு செல்வார்.இதே பாடலில் கமலை அவர் அழகாக காட்டியிருப்பார்.அவரது பெற்றோரை அட்டகாசமாக கொண்டு வந்து ஒட்ட வைத்திருப்பார்.ராஜலட்சுமி நாயகன் சீனிவாசன் தான்.சீனிவாசன் சேய் இந்த விஷ்ணு தாஸன் தான்.சைவம் என்று பார்த்தால் தெய்வம் கிடையாது தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது.அது தான் வாலி.அவரது புகழ் என்றென்றும் நீடூழி வாழி.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்
130
110 கருத்துக்கள்
விரும்பு
கருத்துத் தெரிவி

கருத்துகள்

18 கூடுதல் கருத்துக்களைக் காட்டு

Wednesday, 28 October 2020

கம்பன் வீட்டு கட்டுத்தறி

 Extraordinary Film Actor...!

நடிக்கும் போது எதாவது ஒரு பொருளை கையில் கொடுங்கப்பா... என்பாராம் நடிகர் திலகம்..!
காரணம் அந்த பொருள்களையும் தன்னுடன் நடிக்க வைத்து.. பார்வையாளர்களை பிரமிக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.. தோளில் போட்டிருக்கும் அங்கவஸ்திரம் முதற்கொண்டு கையில் பிடித்திருக்கும் வாக்கிங் ஸ்டிக் வரை அவருடன் நடித்திருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம்... எந்த ஒரு நடிகருக்கும் அமைந்திடாத ஒரு சிறப்பு அது...!
பல படங்களில் யூத் கெட் அப்... ஓல்டு கெட் அப் என்று டபுள் பர்ஃபாமென்ஸ் பண்ணியிருப்பார்... ஆனால் ஒரே ரோல்தான்.. பாபு, உயர்ந்த மனிதன், அந்தமான் காதலி போன்று ஏராளமான படங்கள் இருக்கிறது..!
உதாரணத்திற்கு அவரது உடமைகளுடன் நடித்த வாக்கிங் ஸ்டிக்கை எடுத்துக் கொள்வோம்... எத்தனையோ நடிகர்கள் வாக்கிங் ஸ்டிக்கை கையில் வைத்திருப்பார்கள்.. ஆனால் அந்த வாக்கிங் ஸ்டிக் நடிகர் திலகம் கைகளுக்கு வந்தபோது அது ஊன்று கோல் போல் இல்லாது நடிகர்திலகத்தின் எக்ஸ்ட்ராடினரி சப்போர்ட்டிங் கேரக்டர் போல் ஆகி விடுகிறது...!
இதுதான் சிவாஜி ஸ்பெஷல்... உயர்ந்த மனிதன் படத்தின் ஓல்டு கெட்அப் சிவாஜிக்கு பக்கத்துணையாக வந்த ஊன்று கோலுக்கும் ஓல்டு கெட் அப் போட்டுக் கொள்ளும்... எங்க ஊர் ராஜா... சிவாஜி கையில் வைத்திருக்கும் ஊன்று கோலுக்கு ஒரு ஜமீன் அந்தஸ்து கிடைத்திருக்கும்... அவன்தான் மனிதன் படத்தில் யூத் கெட்அப்பிலும் சில காட்சிகளில் ஸ்டிக் வைத்திருப்பார்.. அது ஒருவகை ஸ்டைல் லுக்... ராமன் எத்தனை ராமனடியில் அது ஊன்றுகோலாக இல்லாமல் ஒரு சவுக்குக் குச்சியாக ஒருவித பரிமாணத்தில் இருக்கும்
திரிசூலம் படத்தில் கூட மூன்றாம் சிவாஜி... ப்யூர் வொய்ட் ட்ரெஸ்ஸில் ஒரு வெள்ளை ஸ்டிக் உடன் வருவார்.. ஒரு பத்து நிமிட காட்சி அது... அந்த கைத்தடி அவர் கையில் சுழன்றாடும் லாவகம் "கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்" என்ற முதுமொழிக்கேற்ப.. "சிவாஜி கையில் ஸ்டிக்கும் கூடசதிராடும்"...!
ஊன்று கோல் மட்டுமா? அவன்தான் மனிதனில் தோளில் அமர்ந்த வெண்புறா... உனக்காக நானில் அவர் அமர்ந்து பாடல் பாடிய குதிரை... தங்கமலை ரகசியத்தில் அமர்ந்து வந்த யானை... முதல் மரியாதையில் அவர் கூடவே நடித்துப் பழகிய சிட்டுக் குருவிகள்... இப்படி எத்தனையோ ஜீவன்கள்.. ஜீவனோடு நடிகர் திலகத்தை பார்த்து நடிப்பை கற்றுக் கொண்டன... அதற்கென தனியே ஒரு கட்டுரை எழுதலாம்...!
நான் ஊன்று கோலோடு மட்டுமே சுழல்கிறேன்.. வியட்நாம் வீடு படத்தில் அவர் ஊன்றுகோல் பிடித்திருக்கும் பாங்கு... வெரி ஸ்பெஷல்.. ஒரு ஓய்வுபெற்ற தனியார் நிறுவன அதிகாரி தனது தனது அறுபதை நெருங்கும் வயதில் தனது மூன்றாம் கால் என சொல்லப்படும் ஊன்று கோலை எப்படி பயன்படுத்துவார் என்பற்கு இந்தப்படம் ஒரு சாட்சி... ஒரு பணக்கார கப்பல் முதலாளி ஊன்றுகோலை எப்படி பயன்படுத்துவார் என்பற்கு ராஜபார்ட் ரங்கதுரையில் வரும் ஒரு காட்சி சாட்சி..
சிறந்த உதாரணங்கள்... ஆலயமணியில் சட்டி சுட்டதடா பாடலில் இரண்டு ஸ்டிக்களுடன் பாடல்... பாலும் பழமும் படத்தில் போனால் போகட்டும் போடா பாடலில் ஒரு ஸ்டிக்.. இப்படி பாடல் காட்சிகளில் கூட அவர் ஸோலோவாக இல்லாமல் ஸ்டிக்குடன் நடித்திருப்பார்.. தன் கையில் உள்ள ஸ்டிக்கையும் நடிக்க வைத்திருப்பார்...!
அவர்தான் சிவாஜி...! அவர்தான் ஒரு எக்ஸ்ட்ராடினரி நடிகர்...!!

Tuesday, 27 October 2020

காலங்களில் அவள் வசந்தம்!

காலங்களில் அவள் வசந்தம்!        பேசாலைதாஸ்

                                         

சுடரொளி அதுதான் அவளின் பெயர், ஆனால் சுடர், சுடர் என்று பள்ளித் தோழிகள் அன்போடு அழைத்ததால் அதுவே அவளது வழமையான பெயராகி விட்டது. பெயர் மட்டுமல்ல சுடொ ரொளி, அவள் அழகே பெரும் சுடொரொளி தான்! கிரேக்கம் மற்றும் ரோமானிய இதிகாச கதைகளில், வசந்தகால தெய்வ மாகவும், பாதாள உலக ராணியாகவும், மறுமலர்ச்சி யின் தேவதையாகவும் வர்ணிக்கப்படும்,  பிராஸர்பீனா(Proserpine) என்ற பேரழகு மங்கை யை போல,  சுடர் அந்த ஊரெல்லாம் பவணி வந்தாள். ஆமாம் சர்பீனா என்று அவளை நான் என் மனதுக்குள்ளே ஓதிக்கொள்வேன். பிராஸர்பீனா என்ற கிரேக்க பெயரைத் தான், நான் சர்பீனா என சுருக்கிக்கொண்டேன்.

                                           கண்கவர் பேரழகியாக என் சர்பீனா, அதுதான் சுடரொளி, அவள் பேரழகி யாக இருந்தாளும், அவளுக்கு, தான் பேரழகி என்ற கர்வம், கொஞ்சம் கூட கிடையாது, பணக்கார வீட்டுபிள்ளைகள், சாம்மாட்டியார் பிள்ளைகள், வாத்தியார் வீட்டு பெண்பிள்ளைகள், அழகற்றவர்களாக இருந்தாலும், ஆடை அலங்காரத்தால் தம்மைத்தாமே அலங்கரித்து, காகம் அன்னநடை  நடக்கப்போய், தன்நடையும் கெடுத்துக்கொணடது போல ,   ஏதோ ஒரு பக்கமாக, தங்கள் பின்புறத்தை அசைத்தாட்டிக்கொண்டு, செருக் கோடு செல்லும் சிருங்காரங்களுக்கு மத்தியில், சுடர் சுடர் தான்! அவள் சுண்டு விரல் அழகுக்கே எந்த அழகியும் சமம் இல்லை.

                                          எனக்கும் அவள் மீது கொள்ளை ஆசை, ஆனாலும் என் ஆவலை, என் உள்ளக்கிடைக்களை, எனக்குள்ளே அடக்கி வாசித்தேன், ஒரு பக்கத்தாளம் போல, சுடர் தன் தோழிகளுடன், மாந்தோப்பு, நல்லதண்ணி கிணறு இப்படியே அந்த கிராமம் முழுவது சுற்றித்திரிந்தாள், ஒரு அழகு வண்ணத்தேர்போல, அந்த சுடரொளி தேவதை யாருக்கு மயங்கப்போகி ன்றாளோ? என்று கிராமத்து இளவட்டங்கள் ஏங்கி நின்றபோது தான், அந்த சம்பவம் நடந்தது, பிராஸர்பீனா என்ற கிரேக்கத்து அழகு தேவதைக்கு நடந்தது போல அவளுக்கும் அது நடந்தது.

                                           

அதற்கு முன், பிராஸர்பீனா கதையில் வரும் அந்த சம்பவம் இதுதான். கிரேக்கத்தின் காதல் தேவதை வீனஸ் ( Venus புதன்) அவள், பிராஸர்பீனா என்ற அழகுதேவதையின் அழகு மிது, பொறாமையும், எரிச்சலும் கொண்டாள், அவளை பழிவாங்க,  பாதாள உலகத்தின் கடவுளான புளுட்டோ மீது, காதல் இறைவியான புதன்(Venus) தன் மகன் குபிட்( Cubid அவர்தான், நம்ம மன்மதன்) அனுப்பி காதல் அம்பினை புளுட்டோ மீது எய்யச்சொல்கின்றாள். பிராஸர்பினா, சிசிலி என்ற இடத்தில் தன் தோழிகளோடு ஆனந்தமாக பூப் பறித்துக் கொண்டிருந்தாள். அதுசமயம் எட்னா எரிமலையிலிருந்து தனது நான்கு கருப்பு நிற குதிரைகளோடு வெளியே வந்தார் புளூட்டோ.

                                          மோக கணையால் எய்யப்பட்ட அவர், அழகான பாவை போன்ற பிரஸர்பீனாவை  கண்டதும் விரைந்து அவளை அபகரித்து தன்னை திருமணம் செய்துக் கொண்டு பாதாள உலகில் வாழுமாறு வற்புறுத்தினர். பாவை பிராஸர்பினா எவ்வளவு மறுத்தும் அவளை கட்டாய படுத்தி பாதாள உலகிற்கு தூக்கி சென்றார் பூளுட்டோ. கிரேக்க கதையில் வரும் சம்பவம் போல, சுடரையும், ரெலோ என்ற ஆயுத கும்பலின், ஒரு தளபதி கடத்தி சென்றுவிட்டான்.

                                         சுடரொளி கடத்தப்பட்டது யாரால், எங்கே இருக்கின்றாள், என்று யாருக்கும் விபரம் தெரியாது, சுடர் இல்லாத அந்த கிராமமே மயனமா கியது, அங்குள்ள இளம் பெண்களுக்கெல்லாம், ஏதோ ஒரு அச்சம் மனங்களில் கவ்விக்கொண்டது,  சுடரின் தாய், தன் மகளை தேடி, காடு வனாந்தரம் எல்லாம் தேடி அலைந்தாள், காணாமல் போன தன் பிள்ளைகளை எண்ணி, இன்றுவரை ஏங்கித்தவிக்கும் அம்மாக்கள் போல அவளும் இருந்தாள் அன்று, அவளின் துயரைகண்டு இயற்கையே விரக்தியுற்றது.

                                       


பிரஸ்பீனாவுக்கு நடந்தவற்றை அறியாத, அவள் தாய் சீரிஸ், பூமியின் ஒவ்வொரு மூலையிலும் சென்று தேடுகிறாள். பாதாள உலகத்தில் தன் மகள் கதறும் ஒலியை அவளால் கேட்க முடிய வில்லை. அங்கு பிராஸர்பினா அவள் அனுமதியை மீறி கற்பழிக்கப்பட் டாள். எங்கு தேடியும் மகளைக் காணவில்லை,  விரக்தியடைந்த பூமாதேவி கோபமடைந்து சாபமிட்டதால் சிசிலியில் காய்கறிகளும் பழங்களும் வளர்ச்சியடைவதை நிறுத்திவிட்டன. அவள் மீண்டும் ஒலிம்பஸ் மலைக்கு(Mount Olympus) செல்ல மறுத்து புவியெங்கும் நடக்க துவங்கினாள், அவள் பாதம் பட்ட இடமெல்லாம் பாலைவனமாக மாறி கொண்டே வந்தன.

                                         கிரேக்க கதையில் வருவதைப்போலவே, சுடரின் வாழ்விலும் நடந்தது. ரெலோ இயக்கத்தால் கடத்தப்பட்ட சுடர், அவளின் விருப்பத்துக்கு மாறாக, கடத்தி சென்ற இயக்க தளபதிக்கு, மணைவியாகி ஒரு குழந்தைக்கு தாயுமாகிவிட்டாள். இயக்கத்தின் முகாமில் அடைபட்டு கிடந்த சுடர் பலவித போராட்டங்கள் சிலரின் கோரிக்கையால், தன் தாயரை சந்திக்க அனுமதிக்கப்பட்டாள்.

                                         பிரஸபீனாவின் தாயான பூமிக்கடவுள் சீரிஸ்(Ceres)  தன் மகளின் பிரிவினால் சோகம் அடைவதினால் மரங்கள் பசுமை இழந்து, இலைகள் சொரிந்து கடுங்குளிரினால் உலகம் வாடத்தொடங்கியது, நடப்பதை கண்டு வருத்தமடைந்த வியாழன்(Jupiter) இதற்கெல்லாம் காரணமான தன் தம்பி புளூட்டோவின் அடாத்தான செயல்களை  நிறுத்த சொல்லி போராடினான்..வியாழபகவான் தன் தாய் மெர்குரி(Mercury) எனப்படும் வெள்ளியை அழைத்து புளூட்டோவை நிறுத்துமாறு சொன்னார். நிலைமையை புரிந்து கொண்ட புளுட்டோ அவளை விடுவிக்க ஏற்பாடு செய்தான்.

                                                    நிலைமையை புரிந்து கொண்ட புளுட்டோ அவளை விடுவிக்கும்


முன் ஒரு திட்டம் செய்தான். பிராஸர்பினாவை நெருங்கி ஆறு மாதுளை பழங்களை அளித்தான், அவளும் சாப்பிட்டாள். பாதாள உலகம் மரணித்தவர்களின் உலகம்.அதை சேர்ந்தவற்றை உட்கொண்டால் புவியின் பரப்பில் வாழ முடியாது.இதனால் அவள் ஆறு மாதம் பாதாள உலகில் வாழ வேண்டியது அவசியம் ஏற்பட்டது.

                                                     கிரேக்க கதயில் வருவதைப்போலவே, இயக்க சக போராளிகளின் ஹர்த்தால், மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தாய்மார்களின் போராட்டம், சமூக ஆர்வலர்களின் கண்டன கூக்குரல்கள், சமூக ஊடகங்களின் அழுத்தம் காரனமாக, பலவந்தமாக தன் மனைவியாக்கப்பட்ட சுடரை ஆறு மாதம் அவள் தன் தாயோடும், ஆறு மாதம் தன்னோடு வாழவேண்டும் என்ற ஒப்பந்த்த அடிப்படையில் சுடர் விடுவிக்கப்பட்டாள். சுடர் தன் தாயோடு வாழும் அந்த காலம் அவளுக்கு வசந்த காலமாக மாறியது. மக்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

                                                  பாதாள உலகிலிருந்து வெளியே வந்த பிராஸர்பினாவை பூமித்தாய் சீரிஸ் கண்டதும் அந்த தேசம் எங்கும் பூத்துக் குலுங்க ஆரம்பித்தது, மரங்களில் பச்சை இலைகள் செழிக்க துவங்கின,வயல்களில் தானியங்கள் வளம் பெற்றது. வசந்த கால காற்று அந்த நிலமெங்கும் வீசியது.இந்த நிகழ்விலிருந்து பிராஸர்பினா நிலத்தில் வாழும் ஆறு மாதங்களின் தொடக்கத்தில் வசந்த காலமும் தொடங்கும், இதனை புராண ரோமனியர்கள் விழாவாக கொண்டாடினர்.

                                                       யாவும் உண்மை கலந்த கற்பனையே!

                                                                                                       பேசாலைதாஸ்

 

ஆணும் பெண்ணும் சமம் அல்ல...

 ஆணும் பெண்ணும் சமம் அல்ல...


பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பலபணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது!
உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும், பிள்ளைகளுக்கு தேவையான பணிவிடையையும் செய்ய முடியும். ( உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.)
ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியைப பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது!
(அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும்
அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது!)
மொழி;
பெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக்கொள்ள
முடியும்! அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.
பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS);
ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆணகளின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது.
வாகனம் ஓட்டுதல்;
வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது,
தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை (சிக்னல்ஸ்) முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றபோல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும்.
ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த
கணிப்புக்களை மேற்கொள்ளும். இதற்கு காரணம், ஆண்களின் “ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறன்” ஆகும்.
உதாரணமாக வாகனம் செலுத்தும் போதுஇசையைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் ஆண்களின் கவணம் வாகனம்
செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள். (ஹெட் போனில் பாட்டு கேட்டுக் கொண்டு scooty ஓட்டும் பெண்கள் ஜாக்கிரதை).
பொய்ப்பேச்சு;
ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்துகொள்வார்கள்! ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணரமுடிவதில்லை. (என் மனைவி ஒன்றும் தெரியாத அப்பாவி என்று 99 சதவீதம் ஆண்கள் இன்றும்கூட தவறாக நம்பி கொண்டு இருப்பார்கள். ) எ காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20% உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை!
பிரச்சனைக்கான தீர்வுகள்:
பல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும்.
இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமையில்
தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள்.
ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு பெண்னின்
மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது…. யாராவது ஒருவரிடம் தமது முழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக
சொல்வதனூடாக திருப்தியடைந்துகொள்ளும்.
சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நின்மதியாக படுத்துறங்குவார்கள்.
தேவைகள்:
மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.
ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில்
பெண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.
மகிழ்ச்சியின்மை:
ஒரு பெண்ணிற்கு தனது காதல்/ உறவுகளிடையே பிரச்சனை அல்லது திருப்தியின்மை இருந்தால்…
அவர்களால், அவர்களின் வேலையில் கவணம்
செலுத்த முடியாது. ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/ உறவுகளில் கவணம் செலுத்த முடியாது.
உரையாடல்;
பெண்கள் உரையாடும் போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.
எண்களை ஆண்கள் அதிகம் நினைவில் வைத்து கொள்ள முடியாது. மனைவியின் பிள்ளைகளின் பிறந்த நாளை நினைவு வைத்து கொள்ள ஆண் சிரமம் படுவான். (காதலன் அல்லது கணவன் பிறந்த நாளை மறந்து விட்டால் பெண்கள் ஈசி யாக எடுத்து கொள்ள வேண்டும். ஏன் மறந்தாய என் டார்சர் தர கூடாது. ) பெண்கள் தனது முன்னாள் காதலன் பின்னால் காதலன் அம்மா அப்பா அண்ணன் தம்பி தங்கை பிள்ளைகள் என்று எல்லார் பிறந்த தினமும் மனதில வைத்துக்கொண்டு இருப்பாள். அது அவளுக்கு சுலபமானது.
நடவடிக்கை;
பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்!
ஆண்கள், பெண்களிடையேயான உறவுகளில்
ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான அறிவியல்
காரணத்தை தற்போது உணர்ந்திருப்பீர்கள்.

Monday, 26 October 2020

சர்வதேசம் கைவிட்ட மேற்கு சஹாரா மக்களின் சுயநிர்ணய உரிமை

 

சர்வதேசம் கைவிட்ட மேற்கு சஹாரா மக்களின் சுயநிர்ணய உரிமை


ஐ.நா. சபையும், சர்வதேச சமூகமும், கடந்த காலங்களில் சுயநிர்ணய உரிமைக்காக போராடிய, எத்தனையோ தேசிய இனங்களுக்கு துரோகம் இழைத்துள்ளன. பாலஸ்தீனம், காஷ்மீர், மேற்கு சஹாரா .... இவ்வாறு பல உதாரணங்களை குறிப்பிடலாம். இவர்கள் எல்லாம் தனி நாட்டுக்காக ஆயுதமெடுத்து போராடி விட்டு, சர்வதேச அங்கீகாரத்திற்காக மேற்கத்திய நாடுகளின் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கவில்லை. தொடக்கத்திலேயே ஐ.நா. தலையிட்டு, சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து விட்டிருந்தது. அதற்காக பொதுசன வாக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும் என்றும் அறிவித்திருந்தது. ஆனால், பல தசாப்தங்கள் கடந்து விட்ட பொழுதும், ஆக்கிரமிப்புப் படைகள் அகலவுமில்லை, சர்வதேச சமூகம் தலையிடவுமில்லை. 

மேற்கு சஹாரா,  ஸ்பெயினின் காலனியாக இருந்தது. மேற்கு சகாராவில், "சஹ்ராவி" இன மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் அரபி மொழி போன்ற ஒரு பிராந்திய மொழி பேசுகின்றனர். மொரோக்கோவின் அரேபியரை விட தோற்றத்தால் மாறுபட்டவர்கள். 1975 ம் ஆண்டு, ஸ்பானிய படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டு, மேற்கு சஹாராவுக்கு சுதந்திரம் வழங்கப் பட்டது. உடனே, அயல் நாடுகளான மொரோக்கோவும், மொரிட்டானியாவும் படையெடுத்து பல இடங்களை ஆக்கிரமித்தன. பொலிசாரியொ (POLISARIO) என்ற மேற்கு சஹாரா மக்களின் விடுதலைப் படை, 1979 ம் ஆண்டு மொரிட்டானிய படைகளை விரட்டியடித்து, அந்தப் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. ஆனால், மொரோக்கோ படைகள் ஆக்கிரமித்த இடங்களில் நிரந்தரமாக தங்கி விட்டன. அந்தப் பிரதேசங்கள் மொரோக்கோவுடன் இணைக்கப் பட்டன. 

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு சஹாரா பகுதிகளில் குடியேற வருமாறு, மொரோக்கோ பிரஜைகளுக்கு அழைப்பு விடப்பட்டது. இலட்சக் கணக்கான மொரோக்கோ பிரஜைகள், அரசு வழங்கிய சலுகைகளை பெற்றுக் கொள்வதற்காக அங்கே சென்று குடியேறினார்கள். அவர்களுக்கு இராணுவம் பாதுகாப்பு வழங்கியது. பொலிசாரியொ விடுதலைப் படைக்கும், மொரோக்கோ அரச படைகளுக்கும் இடையில் போர் நடந்து கொண்டிருந்தது. மொரிட்டானியாவிடமிருந்து விடுதலை செய்யப்பட்ட பகுதிகளில் தளம் அமைத்து, போராளிகள் தாக்குதல் தொடுத்தார்கள். 

மொரோக்கொவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியின்  எல்லையில், நீண்ட மதில் சுவர் கட்டப்பட்டது. பெர்லின் மதில் பற்றி உலகம் அறிந்த அளவுக்கு, "மேற்கு சஹாரா மதில்" பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவு. (Moroccan Wall) பொலிசாரியொவின்  தனிநாடு விடுதலைப் போராட்டத்தை தனிமைப் படுத்துவதற்கு மதில் உதவியது போல, ஐ.நா. தலையீடும் உதவியது. "நாங்கள் சர்வதேச சமூகத்திடம், ஐ.நா. விடம் முறையிட்டால், அவர்கள் வந்து காப்பாற்றி தமிழினத்திற்கு விடுதலை வாங்கித் தருவார்கள்..." என்று அரைவேக்காட்டுத்தனமாக அரசியல் பேசும் பலரை பார்த்திருப்போம். ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகத்தால் காட்டிக் கொடுக்கப்பட்ட, மேற்கு சஹாரா பிரச்சினையில் இருந்து, நாம் படிப்பதற்கு நிறைய உள்ளன. 

1991 ம் ஆண்டு, ஐ.நா. மத்தியஸ்தத்துடன் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், போர் நிறுத்தம் ஏற்பட்டது. அடுத்த ஆறு மாதங்களில், ஒரு மேற்கு சஹாரா மக்கள் மத்தியில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஒப்பந்தம் கைச் சாத்திடப் பட்டது. ஆனால், மாதங்கள், வருடங்களாகி, இன்று 2013 வரையில், எந்த வாக்கெடுப்பும் நடக்கவில்லை. மொரோக்கோ அரசு அது குறித்து அலட்டிக் கொள்ளாமல், தன பாட்டில் ஆக்கிரமிப்பை தொடர்கின்றது. மேற்கு சகாராவில் பொஸ்பேட் (phosphate) வளம் நிறைய உண்டு. மொரோக்கோ அரசு, மேற்கு சகாராவில் கொள்ளையடிக்கப்படும் பொஸ்பேட், மற்றும் மீன்களை ஏற்றுமதி செய்து வருகின்றது.  அங்கே வாழும் ஐந்து இலட்சம் மக்களுக்கு, ஒரு இலட்சம் இராணுவ வீரர்கள் நிறுத்தப் பட்டுள்ளனர். ஐ.நா. சபையும் அது குறித்து கவலைப் படவில்லை. குறைந்த பட்சம், அங்கே நடக்கும் மனித உரிமைகள் மீறலை விசாரிக்கக் கூட, ஐ.நா. அதிகாரிகளுக்கு பாதுகாப்புச் சபை அங்கீகாரம் வழங்கவில்லை! 

மேற்கு சஹாரா வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு தடை செய்யப்பட்ட பிரதேசமாகும். அதனால் அங்கு நடப்பது எதுவும் வெளியுலகை சென்றடைவதில்லை. சஹ்ராவி மக்களின் உரிமைகளுக்காக பாடுபடும் அமைப்புகள் தடை செய்யப் பட்டுள்ளன. பாடசாலைகள் கூட பொலிசாரின் கண்காணிப்பின் கீழ் உள்ளன. அரசுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகள் கடுமையாக அடக்கப் படுகின்றன. போலிஸ் தாக்குதலில் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் காயமடைவதும், மரணமடைவதும் நடக்கின்றது. 2010 ம் ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை சேர்ந்த மேற்பார்வையாளர் ஒருவரும் பொலிசாரால் தாக்கப் பட்டார். அந்த தாக்குதல் சம்பவம் ஆதாரங்களுடன் பதிவு செய்யப்பட்டும், குற்றவாளிகள் தண்டிக்கப் படவில்லை.

2010 ம் ஆண்டு நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பற்றிய தகவல்களுக்கு, நான் முன்னர் எழுதிய பதிவைப் பார்க்கவும்: "மேற்கு சஹாரா" மக்களின் போராட்டம் நசுக்கப் படுகின்றது  

இயேசுவின் தாகம் கம்யூனிச தாயகம்

 

இயேசுவின் தாகம் கம்யூனிச தாயகம்

"ஏழைகளான நீங்கள் இரட்சிக்கப் பட்டவர்கள். ஆண்டவரின் இராஜ்ஜியம் உங்களுக்காக காத்திருக்கிறது." (திரு விவிலியம், லூக்கா 6:20)

இங்கே குறிப்பிடப்படும் "ஆண்டவரின் இராஜ்ஜியம்" என்பது மனிதர்களால் பூமியில் உருவாக்கப்படும் புதிய அரசைக் குறித்தது. ஆனால், பிற்கால கிறிஸ்தவர்கள் அதனை "பரலோகத்தில் உள்ள ஆண்டவரின் ராஜ்ஜியம்" என்று வேண்டுமென்றே தவறாக மொழிபெயர்த்தார்கள்.

உலகிலேயே மிகவும் பழமையான கிறிஸ்தவர்கள் யார்? அநேகமானோர் கத்தோலிக்கர்ள் என்று பதில் சொல்வார்கள். கொஞ்சம் விஷயம் தெரிந்தவர் என்றால், கிரேக்க ஒர்தொடோக்ஸ் கிறிஸ்தவர்களை கைகாட்டுவார்கள். ஆனால், அவை இரண்டும் தவறானவை. வரலாற்றில் முதன் முறையாக இயேசு கிறிஸ்துவின் போதனைகளை ஏற்றுக் கொண்டு, அதன் படி வாழ்ந்தவர்கள் "எபியோனி" (Ebionites) என்றழைக்கப் பட்ட யூதர்கள். ஹீபுரு மொழியில் எபியோனி என்றால் ஏழைகள் என்று அர்த்தம். இயேசு கிறிஸ்து, தன்னை பின்பற்றுபவர்கள் ஏழ்மையான வாழ்க்கை வாழ வேண்டுமென போதித்ததாக, எபியோனி கிறிஸ்தவர்கள் நம்பினார்கள். உண்மையில், அது வரையில் கீழானவர்களாக இழிவு படுத்தப்பட்ட ஏழைகளை, இயேசுவின் போதனைகள் மகிமைப் படுத்தின. ஏழைகள் தமது நிலைமைக்காக வெட்கப் படத் தேவையில்லை. அவர்களே ஆண்டவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று இயேசு போதித்தார். "ஏழைகளான நீங்கள் இரட்சிக்கப் பட்டவர்கள். ஆண்டவரின் இராஜ்ஜியம் உங்களுக்காக காத்திருக்கிறது." என்று அவர்களை உற்சாகப் படுத்தினார்.

எபியோனி கிறிஸ்தவர்களின், சித்தாந்தத்தை புரிந்து கொள்ள முடியாத பிற யூதர்கள், அவர்களை "ஏழைகள்" என்று நினைத்து பரிதாபப் பட்டார்கள். அதனால், அந்தப் பெயரே சரித்திரத்தில் நிலைத்து விட்டது. அந்தக் காலத்தில், "கிறிஸ்தவர்" என்ற சொல் உருவாகி இருக்கவில்லை. அதனால், கிறிஸ்தவர்கள் எல்லோரும் "எபியோனிகள்" என்று அழைக்கப் பட்டனர். உண்மையில் ஆதி கிறிஸ்தவர்கள், ஒரு பொதுவுடைமை சமுதாயமாக வாழ்ந்தனர். பொருளாதார தேவைகளுக்காக பிறரிடம் தங்கியிராமல், தமக்கு தேவையான உணவை தாமே உற்பத்தி செய்து கொண்டனர். தம்மிடம் இருந்த சொத்துக்களை துறந்து, ஏழைகள் போன்று வாழ்ந்தார்கள். அது ஒரு கம்யூனிச சமுதாயமாக இருந்தது. சோவியத் யூனியன், செஞ் சீனாவில் உருவான நவீன கம்யூன் அமைப்பை பெருமளவு ஒத்திருந்தது.

லெனின் அல்லது ஸ்டாலின் காலத்தில், கூட்டுத்துவ (collective) சமூக அமைப்பின் கட்டுமானம் பற்றி அறிந்திருப்பீர்கள். தனித் தனியாக விவசாயம் செய்து வந்த மக்கள், தம்மிடமிருந்த மாடுகளையும், விவசாய உபகரணங்களையும் கூட்டுத்துவ பண்ணைகளிடம் ஒப்படைக்க நிர்ப்பந்திக்கப் பட்டார்கள் என்றும் படித்திருப்பீர்கள். உலகின் முதலாவது கிறிஸ்தவர்களும், அத்தகைய பொருளாதார அமைப்பை உருவாக்கினார்கள். ஒரு கிறிஸ்தவர் தன்னிடம் உள்ள சொத்துக்களை, கம்யூன் அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். அவை பின்னர், கம்யூன் உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவான சொத்துக்களாக மாற்றப்படும். வயல்களும், விவசாய உபகரணங்களும் கிறிஸ்தவ கம்யூனுக்கு பொதுவானவை. கம்யூன் உறுப்பினர்கள் வயலில் கூடி வேலை செய்து, விளைச்சலை சமமாக பகிர்ந்து கொண்டார்கள். ஆதி கிறிஸ்தவர்களின் கம்யூனிச சமுதாயம் பற்றி விபரமான தகவல்கள் கிடைக்கவில்லை. அவர்களுக்கு போட்டியாக உருவான, அப்போஸ்தலர் புனித பவுலை பின்பற்றிய கிறிஸ்தவர்கள், எபியோனி கிறிஸ்தவர்களை வேட்டையாடி கொன்றதுடன், அவர்களது நூல்களையும் ஒன்று விடாமல் எரித்து விட்டனர்.

எபியோனி கிறிஸ்தவர்கள் உண்மையில் யூதர்கள் ஆவர். இன்றைக்கும் யூதர்களில் ஒரு சிறு பிரிவினர், இயேசு கிறிஸ்துவை 'மேசியா'வாக ஏற்றுக் கொள்கின்றனர். அவர்கள் தம்மை பண்டைய எபியோனிகளின் வம்சாவளியினர் என அழைத்துக் கொள்கின்றனர். அதனை நிரூபிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இயேசு கிறிஸ்துவை, யூதர்கள் ஹீபுரு மொழியில் "யேஷுவா" என்று அழைப்பார்கள். இயேசு, அவரது தந்தை ஜோசெப், தாய் மரியாள் எல்லோரும் யூதர்கள் தான். இயேசுவும் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு யூதராகவே வாழ்ந்தார். அதனை எபியோனிகளும் வலியுறுத்தி வந்தனர். அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும், யூத பண்டிகை தினங்களை கொண்டாடினார்கள். இயேசுவை பின்பற்றி, தாமும் சுன்னத்து செய்து கொண்டார்கள். வேறு மதங்களில் இருந்து கிறிஸ்தவராக மாறியவர்களையும் அவ்வாறு வாழ நிர்ப்பந்தித்தார்கள்.

அனேகமாக, எபியோனி கிறிஸ்தவர்களின் நம்பிக்கை பெருமளவில் பரவாமைக்கு, அவர்களின் யூத கலாச்சாரம் ஒரு காரணமாக இருக்கலாம். யூத மதமானது, இந்து மதம் போன்று பிறப்பினால் மட்டுமே தீர்மானிக்கப் படுகின்றது. ஆனால், கிறிஸ்தவம் அப்படி அல்ல. எந்த மதத்தை சேர்ந்தவரும், எந்த இனத்தை சேர்ந்தவரும், எந்த மொழியை பேசுபவரும் கிறிஸ்தவராக மதம் மாற முடியும். எபியோனி கிறிஸ்தவர்கள் அந்தக் கொள்கை கொண்டவர்கள் தான். ஆனால், அவர்களால் அப்போஸ்தலர் பவுலின் குழுவினருடன் போட்டி போட முடியவில்லை.

அந்தக் காலத்தில், இன்றைக்கு நாங்கள் வைத்திருக்கும் விவிலிய நூல் தோன்றி இருக்கவில்லை. மார்க்கு, மாத்தேயுஸ், லூக்கா, பவுல் போன்ற பல அப்போஸ்தலர்கள் எழுதிய சுவிசேஷங்கள் தனித் தனியாக இருந்தன. எபியோனி கிறிஸ்தவர்கள், மாத்தேயுஸ், மார்க்கு ஆகியோரின் சுவிசேஷங்களை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், சித்தாந்த எதிரியான பவுலின் சுவிசேஷத்தை நிராகரித்தார்கள். மிகவும் சுவாரஸ்யமான விடயம் என்னவெனில், "இயேசு கடவுளின் குமாரராக மரியாள் என்ற கன்னித் தாய்க்கு பிறந்தார்..." என்பதை எபியோனி கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இயேசு எல்லா மனிதர்களையும் போல, சாதாரண தாய், தந்தைக்கு மகனாக பிறந்தார் என்று நம்பினார்கள். அவர் வளர்ந்த பின்னர், ஆண்டவரால் தத்தெடுக்கப் பட்டார் என்று விளக்கம் கொடுக்கிறார்கள். "இயேசு மரியாள் என்ற கன்னித் தாய்க்கு மகனாக பிறந்த கதை", இகாரியுஸ் ஹீபுரு மொழியில் எழுதிய சுவிசேஷத்தை, கிரேக்க மொழியில் தவறாக மொழிபெயர்த்தமையினால் ஏற்பட்ட தவறு என்று கூறுகின்றனர்.

அப்போஸ்தலர் பவுல் இன்றைய துருக்கி நாட்டில் பிறந்தவர். கிரேக்க மொழியை தாய் மொழியாக கொண்டவர். அவர் கிறிஸ்துவின் போதனைகளை கிரேக்கத்திற்கு எடுத்துச் சென்றார். கிரேக்க மக்களுக்கு அதனை போதித்தார். கிறிஸ்தவராக மதம் மாறுவோர், சுன்னத்து செய்வது போன்ற யூத கலாச்சாரங்களை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று போதித்தார். அதனால், அவர் பின்னால் பெருமளவு கிரேக்க மக்கள் சேர்ந்தனர். எபியோனி கிறிஸ்தவர்களின் கொள்கைக்கு மாறாக, பணக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்தார். இதனால், பவுலின் குழுவினருக்கு, கொரிந்தியாவில் வாழ்ந்த பெரிய வணிகர் போன்ற சில வர்த்தகர்களின் பணக் கொடை தாராளமாக கிடைத்தது.

புனித பவுல் தானாகவே பல சுவிஷேங்களை எழுதினார். அவற்றில் எபியோனிகளை சிறுமைப் படுத்தும் கருத்துக்களும், கூடவே சில பிற்போக்கான கருத்துக்களும் எழுதப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, பவுல் கொரிந்தியருக்கு எழுதிய கடிதத்தில், உயர்வு, தாழ்வான சமுதாய அமைப்பையும், பெண் அடக்குமுறையையும் ஏற்றுக் கொள்வது தெளிவாகும். "ஆண்டவர் கிறிஸ்துவின் தலைவராகவும், கிறிஸ்து ஆண்களின் தலைவராகவும், கணவன் மனைவின் தலைவனாகவும் இருக்கின்றான்..." என்று அந்தக் கடிதத்தில் எழுதப் பட்டிருந்தது. இஸ்ரேலில் வாழ்ந்த எபியோனி கிறிஸ்தவர்கள், இயேசுவின் பெயரால் வர்க்க பாகுபாடுகள் அற்ற, சமதர்ம சமுதாயத்தை உருவாக்கினார்கள். கிரேக்க நாட்டில் வாழ்ந்த, பவுலின் செயற்பாடு அதற்கு முற்றிலும் முரணாக அமைந்திருந்தது. கிரேக்க சமுதாயத்தில் நிலவிய வர்க்க ஏற்றத் தாழ்வை ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல, அடிமைகளின் விடுதலைக்காகவும் எதுவும் செய்யவில்லை.

உண்மையில் பிற்கால கிறிஸ்தவ சமூக-பொருளாதார கட்டமைப்பு பவுலின் காலத்திலேயே உருவாகி விட்டதெனலாம். பிஷப் என்ற பெயரைக் கொண்ட கிறிஸ்தவ மதகுருக்கள் அதிகார பலம் பெறத் தொங்கியதும் அந்தக் காலத்தில் தான். அந்தியோக்கியா நகர பிஷப் இக்னாத்தியுஸ் எழுதிய கடிதம் ஒன்றில், "கிறிஸ்தவர்களாக மாறிய அடிமைகள் எந்தவித சலுகையையும் எதிர்பார்க்கக் கூடாது, கிறிஸ்துவின் மகிமைக்குள் வாழ்வதை பெருமையாக நினைக்க வேண்டும்...." என்றெல்லாம் எழுதி இருக்கிறார். இயேசுவின் உதாரணத்தை பின்பற்றி, கிறிஸ்தவர்கள் எல்லோரும் சமபந்தி போஜனம் செய்ய வேண்டும் என பவுல் எதிர்பார்த்தார். ஆனால், வர்க்க வேறுபாடுகள் ஆழமாக வேரூன்றி இருந்த கிரேக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் அது எடுபடவில்லை.

நமது நாடுகளில், உயர் சாதியினர், தாழ்த்தப்பட்ட சாதியினருடன் சமமாக அமர்ந்து உணவருந்த மறுப்பதைப் போல, பணக்கார கிறிஸ்தவர்கள் தனியாக உணவருந்த சென்றார்கள். அப்போஸ்தலர் பவுலும், அவரது குழுவினரும், வழக்கத்தில் இருந்த சமூகக் கட்டமைப்பை மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக கருதவில்லை. அதற்கு அவர்கள் கூறிய காரணம்: "உலகம் விரைவில் அழிந்து விடும்...கிறிஸ்துவின் வருகையினால் புதிய உலகம் தோன்றும்." நமது காலத்திலும், பல கிறிஸ்தவ மத அடிப்படைவாத சபைகள், "உலகம் அழியப் போகின்றது" என்று பயமுறுத்திக் கொண்டு திரிவது எமக்குத் தெரியும். அடிப்படையில் இது ஒரு சமூகப் புரட்சிக்கு எதிரான பிரச்சார நடவடிக்கையாகவே அமைந்துள்ளது. அதனால் தான், இன்றைய முதலாளித்துவ ஊடகங்களும் உலகம் அழியப் போகின்றது என்ற கட்டுக்கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பரப்பி வருகின்றன.

கம்யூனிசம் என்ற சொல்லைக் கேட்டவுடன், இன்று பலர் ரஷ்யாவையும், சீனாவையும் நினைக்கும் அளவுக்கு, முதலாளித்துவம் எமது மக்களை மூளைச்சலவை செய்து வைத்துள்ளது. மார்க்ஸ், லெனின் அல்லது மாவோ நடைமுறைப் படுத்த எண்ணிய கம்யூனிசம், நவீன காலத்திற்கேற்ப இயங்கியல்-பொருள்முதல்வாத கோட்பாட்டின் வழியே உருவாக்கப்பட்ட சித்தாந்தம் ஆகும். அதாவது முதலாளித்துவ பொருளாதாரத்தின் வீழ்ச்சியில், சோஷலிச சமுதாயமும், அதன் வீழ்ச்சியில் கம்யூனிச சமுதாயமும் தோன்றும் என்பது அவர்களது தத்துவார்த்த முடிவுகள். கார்ல் மார்க்ஸ் பிறப்பதற்கு முன்னரே, 18 ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு தத்துவஞானி François-Noël Babeuf கம்யூனிச கொள்கையை முன்மொழிந்தார். மேலும் அன்னார்கிச அமைப்புகளின் தத்துவ ஆசிரியர்களான பகுனின், புரூடொன் போன்றோரும் கம்யூனிச சமுதாயத்தை மனித குலத்தின் விடிவுக்காக தெரிவு செய்தார்கள்.

கம்யூனிச சித்தாந்தம் பற்றிய அறிவு, திடீரென வானத்தில் இருந்து விழவில்லை. பண்டைய கால சமுதாய அமைப்புகளை ஆராய்ந்து தான் அத்தகைய முடிவுக்கு வந்தனர். அந்த அறிஞர்கள் திரட்டிய தகவல்களில், ஆதி கால கிறிஸ்தவர்களான எபியோனிகள் பற்றிய ஆய்வும் அடங்குகின்றது. இந்த தகவல்கள் எமக்கு புதுசாக இருப்பதற்கு காரணம், அப்போஸ்தலர் பவுல் தோற்றுவித்த வர்க்க அடிப்படையிலான  கிறிஸ்தவ சமுதாயம். வெற்றி பெற்றவர்கள்  வரலாற்றை மாற்றி எழுதினார்கள். ரோம சாம்ராஜ்யத்தால் அடக்கியொடுக்கப் பட்ட, இஸ்ரேல் என்ற மாகாணத்தை சேர்ந்த யூத சிறுபான்மை இனத்துடனான பகை, புதிய மதத்தில் எதிரொலித்தது. கிரேக்க கிறிஸ்தவர்கள், யூதர்களுடனான தொடர்பை முற்றாக அறுத்தெறிய விரும்பினார்கள். அவர்கள் தமது இரட்சகரை யேஷுவா (இயேசு) என்ற யூதப் பெயரில் அழைப்பதை தவிர்ப்பதற்காக, "கிறிஸ்து" என்ற புதிய பெயரை அடிக்கடி உச்சரித்தார்கள். கிறிஸ்து என்பது, மேசியா என்ற யூதச் சொல்லின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். மேலும் அந்தச் சொல் ch (க்) என்ற லத்தீன் உச்சரிப்பில் எழுதப் பட்டது. ரோம சாம்ராஜ்யம், தன்னால் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட ஒருவரின் மதத்தை தனது ஏகாதிபத்திய நலன்களுக்கு சார்பாக மாற்றிக் கொண்டது. "வரலாறு நெடுகிலும் இருந்த அனைத்து சமுதாயங்களிலும், வர்க்கப் போராட்டம் நடந்துள்ளது," என்ற கார்ல் மார்க்சின் கூற்றை, கிறிஸ்தவ மதத்தின் வரலாறும் மெய்ப்பிக்கின்றது.