Friday, 15 February 2019

தாரா வளர்ப்பில் சாதிக்கும் இளம்பெண்

தாரா வளர்ப்பில் சாதிக்கும் இளம்பெண்
                                                 யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பை சேர்ந்த இளம் பெண்ணான ஸ்ராலினி ராஜேந்திரம் இன்று ஒரு வெற்றிகரமான தொழில் முயற்சியாளராக விளங்குகிறார். இதன்மூலம் எம் பெண்க ளுக்கே ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். வியாபார முகாமைத்துவம் படித்துள்ள இவர் இன்று சுவடிகள் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஆக பணியாற்றுகிறார். அதேவேளை, சீர் பயோ (ளுநநச டீழை) என்கிற நிறுவனத்தை நிறுவி அதனூடாக தாரா வளர்ப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார்.

இன்று 300 க்கும் மேற்பட்டதாராக்களைவளர்ந்துவரும் ஸ்ராலினியுடன் பேசியபோத
2016 ஆம் ஆண்டு சித்திரை மாதம் மலேசியப் பயணத்தின் போது தான் என் தொழில் முயற்சிக்கான முதல் விதை நாட்டப்பட்டது. அங்கு பல புதிய வர்த்தக முயற்சிகள் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. வெற்றிகரமான முதலீட்டாளர்களையும் சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தது. இங்கே எப்படி பரவலாக கோழி இறைச்சி விற்கப்படுகிறதோ அதே போல் அங்கே உள்ள பெரும்பாலான கடைகளில் தாரா இறைச்சி விற்கப் படுகிறது. தாரா இறைச்சியின் சுவையும், போசணைப் பெறுமானமும் நன்றாகவே இருந்தன. தாரா இறைச்சி ஏன் எங்கள் பகுதிகளில் இல்லை என எனக்குள்ளே கேள்வி தோன்றியது. அதனை ஏன் சிறு தொழில் முயற் சியாக ஆரம்பிக்கக் கூடாது என்று யோசித்தேன்.
எனக்கு சுவடிகள் நிறுவனத்தை சேர்ந்த வைத்தியர் நடராஜா பிரபுவும், கணேசமூர்த்தி ஸ்ரீபவனும் சரியானதொரு வழிகாட்டிகளாக இருந்தா ர்கள். அவர்களின் ஆலோசனையின் பேரில் 2016 ஆனி மாதம் ஐந்து சோடி தாராக்களுடன் தாராப் பண்ணையை கொக்குவில் பொற்பதி பிரதேசத்தில் ஆரம்பித்தேன். எனக்கு இந்த தொழில் முயற்சி பெரும் சவால் நிறைந்ததாகவும் இருந்தது. ஏனெனில், எமது மக்கள் தாரா இறை ச்சி, முட்டைகளை பெரும்பாலும் உணவுத் தேவைக்கு பயன்படுத்தாத சூழலே இருந்தது. மக்களுக்கு தாரா இறைச்சி மற்றும் முட்டை நல்ல போசனைப் பெறுமானங்கள் நிறைந்தது என விழிப்பூட்ட துண்டுப் பிரசு ரங்கள் மூலம் முயற்சித்தோம். அது நல்ல பலனை அளித்தது. கிட்டுப் பூங்காவில் நடந்த சிறுகைத்தொழில் கண்காட்சியிலும் காட்சிக் கூட மொன்றை அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்ட முடிந்தது.
இப்போது ஓரளவு தாரா இறைச்சி நுகர்வு எம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. தாரா முட்டைகளை அழகுசாதன தேவைக்காக இங்கே அதிகம் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக தாராக்கள் குறித்து எம்மக்களிடையே சில கருத்துக்கள் உண்டு. ஒன்று, தாரா முட்டை சரியான வெடுக்கு என்று சொல்வார்கள். அவர்கள் சொல்கிற அளவுக்கு தாரா முட்டை வெடுக்கு கிடையாது.
இரண்டாவது, தாராக்கள் வளர்ப்பதற்கு குளம் அல்லது நீர்நிலை ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும் என்பது. நான் கோழிக் கூடுகள் போன்ற நிலக் கூடுகளுக்குள் வைத்து தான் கடந்த ஒன்றரை வருடங்களாக தாரா வளர்த்து வருகிறேன். எந்த பிரச்சினையும் இல்லாமல் வளர்ந்து வருகிறது. நீர்நிலை அவசியமல்ல. இருந்தால் நல்லது.
மூன்றாவது தாராக்களுக்கு சாப்பாட்டு செலவு கூடுதலாக இருக்கும் என்பது. நான் பெரிதாக எந்த செலவும் இல்லாமல் தான் தாரா வளர்த்து வருகிறேன். மூன்று திருமண மண்டபங்களில் ஓடர் கொடுத்துள்ளேன். அங்கே வீணாகும் சாப்பாடுகளை வாங்கி வந்து தான் தாராக்களுக்கு உணவாக கொடுக்கிறேன். இது தவிர அசோலாக்களையும், மண்புழுக்களையும் வளர்த்து தாராக்களுக்கு உணவாக்கி வருகிறேன்.
தாராக்களை மூன்று நிலைகளில் விற்பனை செய்து வருகிறேன். தாராக் குஞ்சு ஒருசோடி 450 ரூபாய்க்கும், 3 மாதம் நிரம்பிய தாராக்கள் ஒரு சோடி - 1400 ரூபாய்க்கும், பெரிய தாராக்கள் 3500 ரூபாய்க்கும் விற்று வருகிறேன். என் போன்ற தாரா வளர்க்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு தாரா வளர்ப்பு முறைகளை சொல்லிக் கொடுக்கவும் ஆர்வமாக இருக்கிறேன். ஏற்கனவே சில இடங்களில் என்னிடம் தாரா வாங்கி வளர்ப்பை சிலர் ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கும் சந்தை வாய்ப்பை நானே ஏற்படுத்திக் கொடுக்கிறேன்.
தாரா வளர்ப்பு மட்டுமல்ல தாரா முட்டை மா என்கிற சத்து மாவையும் உற்பத்தி செய்து வருகிறேன். வல்லாரையும் வளர்த்து விற்பனை செய்து வருகிறேன். அத்தோடு கத்தாழை நாற்றுக்களையும் விற்பனை செய்கிறேன். முருங்கை கன்றுகளை வளர்க்கும் நோக்கமும் எதிர்காலத்தில் இருக்கிறது. இவையெல்லாவற்றையும் தாண்டி சுவடி அமைப்பின் கல்வி நிறுவனமூடாக சின்னம் சிறார்களுக்கு ஆங்கில மொழியையும் கற்பித்து வருகிறேன், என்றார்.
இன்று வேலையில்லா பட்டதாரிகள் பலர் அரசாங்க வேலைக்கு மட்டுமே விண்ணப்பித்துவிட்டு காத்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் முற்றுமுழுதாக தன் உழைப்பை நம்பி புதிய முயற்சிகளை செய்யும் இளையோரை ஊக்குவிக்க வேண்டியது அனைவரதும் கடமையாகும். வறுமையான தச்சுத் தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்த ஸ்ராலினி இன்று இளம் வயதிலேயே இந்த நிலைக்கு முன்னேறி இருப்பது ஏனையவர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.

Saturday, 9 February 2019

மன்னார் நலன்புரிச்சங்க கலந்துறையாடல்!

மன்னார் நலன்புரிச்சங்க கலந்துறையாடல்!

                                                                        மன்னார் நலன்புரிச்சங்கத்தின் அவசர கலந்துறையாடல் 2019 மாசி 9 திகதி மாலை 06.00 மணியளவில், Shultun மியுஸியத்தில் செயலாளரினால் கூட்டப்பட்டது, அண்மைக்காலமாக மன்னார் நலன் புரிச்சங்க அங்கத்தவர்கள், நிர்வாகிகள்  செயல்திறன் அற்று செயல்படுவது குறித்து ஆராய்வதற்காக கூட்டப்படது, ஆரம் பத்தில் சிறிய செபத்துடன் ஆரம்பமான இக்கலந்துறையாடலில், கடந்த வாரம் விளையாட்டு கழகம் நடாத்திய போட்டியில், உணவகம் நடத்துவ தில் பாரிய சிக்கல் ஏன் உருவானது என சபையில் அதிருப்திகள் தெரிவி க்கப்பட்டது, 

                                                 அதற்கான பின்னடைவுக்கு குணா தானே காரனம் என்பதை ஒத்துக்கொண்டு, வருத்தம் தெரிவித்தார், பின்னர் பொருளா ளர் வங்கி கணக்கை ஆய்வு செய்து,  பணவரவு ஏதாவது வந்ததா? அமல்ராஜ் கேள்வி கேட்டு, பொருளாள்ர் தன் கடமையில் இருந்து தவறுகி ன்றார் என சுட்டிக்காடினார், சென்ற விளையாடு போடியில் நடத்தப்பட்ட உணவகத்தில் இருந்து, 1000 குரோணர் கிடைக்கப்படது எனவும், விளை யாட்டு போட்டியில் வென்ற பரிசு தொகை 500 குரோணரும்  மன்னார் நலன்புரிக்கு கொடுக்கப்பட்டது என அவர் கூறினார்.எதிர்காலத்தில் கணக்கில் அதிக சிரத்தை எடுக்கும் படி, கண்டிப்பாக எடுத்து கூறப்ப ட்டது. 

                                                  ஏன் செயலாளர் அறிக்கை கொண்டுவரவில்லை என அமல்ராஜ் காரசாரமாக கேள்வி, எழுப்பினார், அத்ற்கு செயலாளர் இது கூட்டம் அல்ல எனவும், நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலைபற்றி ஆய்வு செய்வதற்கான ஒரு அவசர கலந்துறையாடல் என செயலாளரினல் விளக்கம் அளிக்கப்பட்டது, தொடர்ந்து நாம் இயங்கு வதா இல்லையா என இன்று முடிவு எடுக்கவேண்டும் என அமல்ராஜ் வாதிட்டபொழுது மீண்டும் புத்துணர்வுடன் செயல்படுவோம் 

                                                                    பொருளாளர், செயலாளர்கள் தனிப்பட்ட ரீதியில் பொறுப்புடையவர்கள் என்றாலும், நிர்வாகிகள் ஒன்றிணைந்து பொறுப்புகளை பகிர்ந்து செய்வதி னால், திறம்பட இயங்கமுடியும் என வும் எல்லோரும் எல்லாத்திற்கும் பொறுப்புடையவர்கள் என்ற கூட்டு பொறுப்பு தத்துவத்துடன் செயல்படுவோம் என ஜெயந்தன் சிறந்த கரு த்தை முன்வைத்தார், 

                                                       அது ஏற்றுக்கொள்லப்பட்டது, விரைவில் பொது கூட்டம்  எதிர்வரும் 27 திகதி ஏப்ரல் நடத்துவது எனவும், அதில், பதவிகள், பொறுப்புகள் பற்றி விவாதிக்கவேண்டும் எனவும், ஆவணி 24 திகதி அல்லது 31 திகதி ஒன்று கூடல் நடத்துவது பறிய முடிவுகள் எடுக்கபடவே ண்டும் என தெரிவிக்கப்பட்டது,  Whatsup குழு ஒன்று உருவாக்கி அதன் மூலம் தொடர்புகளை விரவு படுத்தவேண்டும் என்ற அறிவுரை செயலா ளருக்கு வழங்கப்பட்டது! 

                                         மன்னாரில் எமது அமைப்பின் வழியாக பயணைந்த பயணாளிகளிடம் இருந்து, ஒத்துழைப்பு கோரவேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்படது, அது தொடர்பாக மன்னாருக்கு உடனடியாக அழைப்பு விடுவிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது! கடந்தவருடம் நானாட்டான் பாடசாலை கட்டிடத்துக்கு தனிப்பட்ட ரீதியில் பணம் சேகரித்து கொடுக் கவேண்டும் என முடிவு செய்யப்பட்டது அதனை அதனை அனுப்பிவை க்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அத்துடன் கலந்துறையாடல் இனிதே கலைந்தது 

Friday, 8 February 2019

இருக்குமிடத்தில் இருந்து கொண்டால், எல்லாம் செளக்கியமே!

இருக்குமிடத்தில் இருந்து கொண்டால், எல்லாம் செளக்கியமே! பேசாலைதாஸ்

வாழ்வில் சலித்துக்கொண்டவர்கள் நிறையப்பேரை நான் பார்த்திருக்கின்றேன், என்னடா வாழ்க்கை என்று நானும் கூட சலித்துக்கொண்டதுண்டு, இந்த சலிப்புத்தன்மை ஏற்படுவதற்கு அடிப்படைக்காரனம், நமது எண்ணத்தில் உண்டாகும் அதிருப்தி அற்றதன்மை தான். எமது எதிர்பார்ப்புகள் ஏக்கங்களாக மாறுகின்றபோது, வாழ்வில் சலிப்பு தன்மை ஏற்படுகின்றது,  கிடைக்கின்ற வாழ்வில் நிறைவுகண்டு, திருப்தியுடன் வாழப்பழகிவிட்டால், எந்தவித சலிப்புத்தன்மையும் வாழ்வில் ஏற்படாது, ஒரு காட்டில், காட்டு லீலிப்புஸ்பங்கள் அழகாக மலர்ந்தது, காடு முழுவதும் நறுமணமாய் கமழ்ந்தது,  இந்த காட்டு லீலிப்புஸ்பங்களுடன், காகம் ஒன்று, தவறான எண்ணங்களையும், சிந்தனைகளையும் விதைத்தது, காகம் அந்த அழகான காட்டு லீல்லிகளுக்கு சொன்னது, நீங்கள் எவ்வளவு அழகாக பூத்துக்குழுங்கி, நறுமணம் வீசுகின்றீர்கள், இருந்தும் அதனால் என்ன பயன்? வெறும் காட்டுக்குள்ளேயே உங்கள் அழகும், வாசமும் வீணாகிப்போகின்றது, காட்டில் பூத்து குழுங்குவதைவிட, இளவரசியின் தோட்டத்தில் நீங்கள் இருந்தால், உங்களின் செல்வாக்கும், மகிமையும் நாடே போற்றும் என்று சொன்னது அந்த காகம்,  அதுவரையும், மனதில் மகிழ்ச்சியோடு மலர்ந்த லீலி மலர்கள், மனம் வாடத்தோடங்கியது, சீக்கிரமாக மலர் வதனம் கெட்டு, கருகி, வெறும் குப்பை மேடாகிவிட்டது,  கொஞ்ச நாட்களித்து, அதே காகம் அந்த லீலி மலர்களிடம் கேட்டது,  உங்களுக்கு என்ன நடந்தது? ஏன் கருகி குப்பைமேடாகிவிட்டீர்கள் என்று கேட்டது, அதற்கு அந்த மலர்கள், சலிப்போடு சொன்னது, காட்டில் மலர்ந்து என்ன பயன்? அரசியின் அந்தப்புரத்தில் மலர்ந்தாளவு, மாட்சிமையோடும், மன மகிழ்வாய் வாழ்ந்து மலர்ந்திருக்கலாம், எல்லாம் விதிப்பயன் என சலிப்போடு சொன்ன மலர்கள், காகத்திடம் ஒரு உதவிகேட்டது, எங்கள் வாழ்வுமலர, மகிழ்சியாக வாழ, எங்களை உன் அலகினால் காவிக்கொண்டு, அரண்மனையின் அந்தபுரத்துக்கொள் போட்டுவிடு, நாங்கள் எப்படியோ பிழத்துக்கொள்வோம் என மன்றாட்டமாக கேட்டது, காகமும் அதற்கு ஒத்துக்கொண்டு, தன் அலகினால் அவைகள கொத்திக்கொண்டு, நீண்டதூரம், மலைகளை, கற்பாறைகளை கடந்து உயரப்பறந்தது. திடீரென்று காற்று உரமாக வீசவே, அதைசமாளிக்க முடியாத காகம், தன் அலகில், கொத்தியிருந்த, அந்த லீலிகிழங்குகளைகீழே வீசி எறிந்தது.அந்தோ பாவம்,அந்த லீலிக்கிழங்கள் ஒரு பாறையின் மீது விழுந்து நொருங்கியது! லீலிமலர்களின் நினைப்பே அதன் பிழைப்பைக்கெடுத்து, அன்பின் பேசாலைதாஸ்øøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøø

Thursday, 7 February 2019

யாழ் உதைபந்தாட்ட வரலாற்றில் சிறப்பு மிக்க ஒரு வீரரை பற்றிய பதிவு


யாழ் உதைபந்தாட்ட வரலாற்றில் சிறப்பு மிக்க ஒரு வீரரை பற்றிய பதிவு
கட்டுரை: பாலசிங்கம் பிரான்சிஸ்
1943 இல் யாழப்பாணம் உதைபந்தாட்ட சங்கம் (லீக்) ஆரம்பிக்ப்பட்ட காலம் தொட்டு இன்று வரை உதைபந்தாட்டத்தில் பங்கு கொள்ளும் கழகங்களில் இரண்டு கழகங்களே உள்ளன. அதல் ஒன்று நாவாந்துறை சென் நீக்கிலஸ் உதைபந்தாட்ட கழகம். மற்றொண்டு பாசையு+ர் சென் அன்ரனிஸ் உதைபந்தாட்ட கழகமாகும். இக்கழகத்தில் நாவாந்துறை சென் நீக்கிலஸ் விளையாட்டு கழகத்தில் எனக்கு தெரிந்த காலத்தில் சிறந்த விளையாட்டு வீரராக விளங்கிய மதிப்புக்குரிய திரு. முத்துராசா ஜெயரெட்ணம் அவர்களைப்பற்றிய கட்டுரையை எழுதுவதில் பெருமை கொள்ளுகின்றேன்.
எனக்கு உதைபந்தாட்ட அறிவு தெரிய வந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் மிகச்சிறந்த கழகங்களாக நாவாந்துறை சென் நீக்கிலஸ் உதைபந்தாட்ட கழகம், நாவாந்துறை சென் மேரிஸ் உதைபந்தாட்ட கழகம், பாசையு+ர் சென் அன்ரனிஸ் உதைபந்தாட்ட கழகம மற்றும் குருநகர் பாடும் மீன் விளையாட்டு கழகம் ஆகியன சிறந்த கழகங்களாக விளங்கியமையை யாவரும் அறிவார்கள். இதில் திரு ஜெயரெட்ணம் அவர்கள் சென் நீக்கிலஸ் உதைபந்தாட்ட கழகத்தில் மிகச்சிறந்த வீரராக திகழ்தமையை நான் கண்டும், கேட்டும் மகிழ்ந்துள்ளேன். அவ்வேளையில் என் வயதும், அதற்கு குறைந்த வயதுடைய இளைஞர்களும் உதைபந்தாட்டத்தில் ஆவல் கொள்வதற்கு திரு. ஜெயரெட்ணம் அவர்களின் விளையாட்டு வடிவமும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது.
திரு. ஜெயரெட்ணம் அவர்கள் மைதானத்துக்குள் விளையாட இறங்கினால் அவர் எந்த நிலையில் (Pழளைளழn) நின்று விளையாடுவார் என்பதனை எதிர்த்தரப்பு வீரர்களால் ஊகிக்க முடியாது, அப்படி அவரின் விளையாட்டு ஆளுமை முழு மைதானத்தையும் ஆக்கிரமித்தாக இருப்பதனை கண்டு வியந்துள்ளேன். அதே போல் திரு.nஜேயரெட்ணம் அவர்களிடம் என்னை கவர்ந்த இன்னுமொரு திறமை என்னவென்றால் அவரின் கால்கள் இரண்டுமே பந்தை கட்டுப்பாட்டுக்குள் (டீயடட ஊழவெசழட) வைத்திருக்கும் திறமையும், அந்த கட்டுப்பாட்டோடு எதிரணியின் பின் கழ வீரர்களை லாவகமாக தாண்டி சென்று பந்தை கோல்களாக்கும் அழகும் தான்.
இதே காலப்பகுதியில் யாழ் முஸ்லிம மக்களிடையில் அதி வேகமாக இரண்டு கழகங்கள் தங்களுக்;;குள் வளர்ந்து கொண்டிருந்தது. அதில் ஒன்று டைகர். வி.கழகம் மற்றொண்று சம்சுங் விளையாட்டு கழகம். இந்த இரண்டு கழகங்களுக்கிடையிலும் யாழ் ஓஸ்மேனியா கல்லுரியின் ஜின்னா மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் டைகர் விளையாட்டு கழகத்தில் சென் நீக்கிலஸ் கழகத்தை சேர்ந்த சில வீரர்களும், சம்சுங் வி. கழகத்தில் சென் நீக்கிலஸ் கழகத்தை சேர்ந்த திரு. ஜெயரெட்ணம் அவர்களும் விளையாடுவர்கள்.
இதில் டைகர் வி. கழகத்தில் மதிப்புக்குரிய ஜேக்கப் இளம்சிங்கம் அவர்களும் விளையாடினார்.திரு. ஜேக்கப் இளஞ்சிங்கம் அவர்களுக்கும், திரு. ஜெயரெட்ணம் அவர்களுக்கும் கடும் போட்டியும், இரண்டு வீரர்களின் இரசிகர்கள் எழுப்பும் குரலொலி அந்த மைதானத்திலிருந்து அதிக துhரம் கேட்டுக்கொண்டிருப்பதை மறக்கவே முடியாது. பிற்காலத்தில் இந்த இரண்டு கழகங்களும் ஒன்றாக இணைந்து யாழ் முஸ்லிம் உதைபந்தாட்ட கழகமாக மாற்றம் பெற்று மிகச்சிறந்து விளங்கிய மேற் சொல்லப்பட்ட நாலு கழகங்களுக்கும் பெரும் சவாலாக விளங்கியமையை உதைபந்தாட்ட இரசிகர்களுக்கு தெரிந்திருக்கும்.
திரு. முத்துராசா ஜெயரெட்ணம் அவர்களிடம் ஒரு விளையாட்டு வீரனுக்கான பண்புகள் நிறைந்திருந்தமையும், அந்த பண்புகளை அவர் கடைப்பிடித்த தன்மையும் அவரை அதிக இரசிகர்கள் விரும்பியமைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். ஆரம்ப உதைபந்தாட்ட விதிமுறைக்கு எல்லா வீரர்களும் பாதணிகள் (டீழழவள) அணியவேண்டிய தேவை இருக்கவில்லை. இந்த சட்டத்தை தனக்கு சாதகமா பயன் படுத்தி திரு. ஜெரெட்ணம் அவர்கள் பாதணிகள் பாவிக்காமல் விளையாடியமை குறிப்பிட தக்கது. அவர் உதைபந்தாட்ட போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் காலப்பகுதி வந்த வேளையில் முழு வீரர்களும் பாதணிகள் உபயோகப்படுத்த வேண்டுமென்ற கட்டாய சட்டம் ஏற்பட்டபோது பாதணிகளை அணிந்து என்னாலும் சிறப்பாக விளையாட முடியும் என்று நிருபித்து ஓய்வு பெற்ற வீரர் திரு. ஜெயரெட்ணம் அவர்கள் என்பதனையும் பதிவு செய்வதில் பெருமிதம் கொள்ளுகின்றேன்.
மேற்கூறியவைகளையும் கடந்து நான் விளையாடிய காலத்தில் திரு. ஜேக்கப் இளஞ்சிகம் மாமா (நான் மாமா என்றே அழைப்பது வழக்கம்;)
திரு. ஜேயரெட்ணம், இருவரும் என் தந்தையாருடன் சேர்ந்து என்
சிறப்பான விளையாட்டை பாராட்டுவதும், அதே வேளை என் தவறுகளை சுட்டிக்காட்டுவதும் அவர்களின் விளையாட்டு பண்புகளின் மகுடமாக இன்றும் எண்ணிக்கொள்வேன். இந்த வழிநடத்தல் என் விளையாட்டின் சிறப்புக்கு காரணங்களாக அமைந்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி பாராட்டி இன்னுமொரு வீரரின் கட்டுரையுடன் சந்திக்கும் வரை விடைபெறுகின்றேன்.
நன்றிகள்.