Sunday 23 January 2022

பாசி வளர்ப்பு:

 பாசி வளர்ப்பு:

============
உயிரியல் ஊடுருவல் இதன் மிகப்பெரிய அபாயம்.
-பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின்-
Kappaphycus alwarezii என்கிற இந்த அயல்நாட்டுக் கடல் பாசி வளர்ப்பு 2005இல் இராமேஸ்வரம் பகுதியில் பெப்சி நிறுவனத்தால் அறிமுகமானது. தோழர் தமயந்தி குறிப்பிடுவது போலவே மீனவர்களுக்கு மாற்றுத்தொழிலாக முன்வைக்கப்பட்டது. பிறகு தமிழ் நாடு அரசால் தடை செய்யப்பட்டது.
நாட்டுப்பாசிகளில் இதே பொருட்கள் உள்ளன.
உயிரியல் ஊடுருவல் இதன் மிகப்பெரிய அபாயம். நாட்டுப்பாசிகளையும் பவளப்பாறை இனங்களையும் அழித்துவிடும்.
பார்க்க: கடற்கரையைக் காவுகேட்கும் கப்பாஃபைகஸ்.
நூல்: அணியம். வறீதையா கான்ஸ்தந்தின். தமிழினி பதிப்பகம், சென்னை. 2009.
தொடர்ந்து வாசிக்க, தமயந்தியின் குறிப்பு மீள்பதிவு.
-பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின்-
----------------------
பன்னாட்டு நிறுவனமான 'பெப்சி"யின் கடற்பாசி வளர்க்கும் திட்டம்.
இது மிகக் கேடான திட்டமாகும்.
கடலில் இயற்கையாக விளைந்து, கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் ஆதாரமாகத் திகழும் கடற்தாவரங்களை இந்த வளர்ப்புப் பாசி உற்பத்தியானது நிர்மூலமாக்கி விடும்.
இவர்களின் வளர்ப்புப் பாசியில் உருவாகும் ஒருவகை வெண்குஷ்டமானது இயற்கைத் தாவரங்களுக்குத் தொற்றுவதால் அவை அழுகி அழிந்து விடும்.
இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை எனச் சொல்லப்படும் எம்.எஸ்.சுவாமிநாதனின் செயற்கை விவசாயம் எப்படியெல்லாம் பாரம்பரிய விவசாயத்தை அழித்தது மட்டுமல்லாம, விளைநிலங்களையும் நாசப் படுத்தியதோ அதேபோன்றதோர் நடவடிக்கைதான் இது.
கடற்பாசியில் இருந்து பெறப்படும், "ஏகார்" மற்றும் 'அல்ஜினிக்" அமிலம் போன்ற காபோவைதிரேற் பதார்த்தங்கள் எடுக்கப்படுகிறது. இவ்விரு பதார்த்தங்களும் கடற்பாசியைத் தவிர, இதுவரை வேறு எந்தத் தாவரங்களிலிருந்தும் பெறமுடியாதுள்ளது.
கிடைத்தற்கரிய பதார்த்தங்களைத் தயாரிக்க உதவும் இவை, உலகமயமாதல் சந்கைக்கான பல மறைமுக வியாபாரத் தேவைகளை உள்ளடக்கிய பகற்கொள்ளைத் திட்டமாகும்.
வடக்குமாகாண மீன்பிடித்துறை அமைச்சர் கந்தையா சிவநேசனின் இந்த மோசமான திட்டத்தை வடக்கு மக்கள் அனுமதிக்கக் கூடாது.
"ஏகார்" எனப்படுகின்ற பதார்த்தம் சென்நிறக் கடற் பாசியிலும், "அல்ஜினிக்" அமிலம் கபிலநிறப் பாசியிலும் இருந்து பெறப்படுகிறது.
ஏகாருக்கான "கஞ்சிப் பாசி" என்றழைக்கப்படும் செந்நிறக் கடற்பாசி, கொட்டியாற்றுக் குடாவிலும், மூதூரிலும் ஏராளமாகக் கிடைக்கிறது. இங்கு இவை வைகாசி முதல் ஐப்பசி வரையும் தாராளமாக வளர்ந்து வருகிறது. இதில் முதல்தரமான கஞ்சிப்பாசி புத்தளம், கல்பிட்டி, மன்னார், மண்டைதீவு போன்ற பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. புத்தளத்தில் இது தைமாதம் முதல் வைகாசி வரையும் பெறவும் முடிகிறது.
உயர்ந்த வெப்பநிலையில் திரவமாகவும், தாழ்ந்த வெப்பநிலையில் திண்மமாகவும் இருக்கக்கூடிய ஒரு பதார்த்தமாக 'ஏகார்" இருக்கிறது. இவை ஐஸ்கிரீம், மிட்டாய், ஜாம், புடிங், ஜெலி, யோக்கட் போன்ற பெரும் தயாரிப்புக்களில் தடிப்பாக்கியாகப் பயன்படுகிறது. இதைவிட மதுபான உற்பத்தியில் தெளிவாக்கியாகவும், கடதாசி உற்பத்தியில் பளபளப்பாக்கியாகவும் திரவநிலையிலும் பயன்பாடாகிறது. மருத்துவத்துறையில், வயிற்றை இளக்கிவிடும் மருந்துப் பதார்த்தமாகவும், பல் கட்டுதலுக்கான அச்சுச்செய்கையின் கலவையாகவும், நாம் உண்ணும் மாத்திரைகளில் மேலுறைகளாகவும் (கவசமாகவும்) இதுவே பயன்படுகிறது.
'அல்ஜினிக்" அமிலப் பதார்த்தத்தைக் கொண்ட கபிலநிறப் பாசிகள், அதிகளவில் பரம்பலடைந்து படர்கின்ற ஒரு பாசியினமாகும். இது புடவைக் கைத்தறி குடிசைத்தொழிலில் பருத்தித் துணி அச்சிடுவதற்கும், செயற்கை நார் தயாரிப்பில் தடிப்பாக்கியாகவும், "வார்னிஸ்" பூச்சுக்கள், மற்றும் ஒட்டும் - மினுக்கும் பதார்த்தமாவும் பாவிக்கப்பட்டும் வருகிறது. இந்த வியாபார உத்திகளின் பெரும் இலாபத்தை இலக்குவைத்தே இப் பன்நாட்டு நிறுவனங்களான ('பெப்சி')யும் தனது முதலீட்டுச் செல்வாக்கில், இதைத் தொண்டாக்கி இயங்கி வருகிறது.
வேலைவாய்ப்பு என்ற பெயரில் கொள்ளை இலாபமடிக்க இது நினைக்கின்றதே ஒழிய, மக்களின் வறுமையைச் சீராகப் போக்கவோ மக்களுக்கு புரத உணவை பெற்றுக் கொடுக்கிற நல்ல எண்ணங்களிலோ இவர்களுக்கு நாட்டம் கிடையாது. இப்பொழுது கடற்பாசியில் இருந்து "பயோ" எரிபொருளை உருவாக்கலாம் என்பதைக் கண்டறிந்தபோதும் இவ்வுண்மையை மக்களுக்குச் சொல்லுவதும் கிடையாது. 50ஆம் ஆண்டிலிருந்து 60 மடங்கு பாசியுற்பத்தியை இத்தொண்டு நிறுவனங்களை வைத்தும் இவர்கள் சாதித்தும் உள்ளனர். கடற்பாசி உற்பத்தியானது ஆசிய, பசுபிக் கடல்களில் இருந்து 91 சதவீதம் கிடைக்கிறது. இது ஆண்டொன்றுக்கு 8 கோடி தொன்னாகவும் இருக்கிறது.
வடக்குமாகாண மீன்பிடித்துறை அமைச்சர் கந்தையா சிவநேசனின் இந்த மோசமான திட்டத்தை வடக்கு மக்கள் அனுமதிக்கக் கூடாது.
எவன் கொண்டுவந்து காசைக் கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு கடலையும், நிலத்தையும் தாரை வார்ப்பதிலேயே இந்தத் தமிழ் அரசியல்வாதிகள் கண்ணும் கருத்த்மாக இருக்கிறார்கள்.
சமூக அரசியல் அக்கறை கொண்டவர்களும், சமூகத்தின் மீதான தார்மீகப் பொறுப்புள்ள ஊடகங்களும், சுற்றுச்சூழல், கடல்வளம் சார்ந்த அறிஞர்களும், புத்திஜீவிகளும் இத்தகைய மோசடித் திட்டங்களைச் சரியாக இனங்கண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதனூடாக அரசியல்வாதிகளின் இத்தகைய கொள்ளைகளை நிறுத்தப்பண்ண வேண்டும்.
(இன்னும் சில பிற்குறிப்பு:- இலங்கை இந்திய மீனவர் பிரச்சனைகளுக்குத் தீர்வெதுவும் காணாமல் திசை திருப்பும் நடவடிக்கையாகவும் இதனை நான் பார்க்கிறேன். இந்திய இழுவைப்படகு முதலாளிகளுக்கு எமது கடலைத் தாரைவார்க்கும் திட்டம் இது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
வடக்கு மீனவர்களை மீன் பிடிப்பதை விட்டுவிட்டு பன்னாட்டு நிறுவனங்களின் பாசி வளர்ப்போராக மாற்றும் நடவடிக்கையல்லவா இது?
ஏற்கனவே வடக்கில் நிலவும் கடலுணவுப் பற்றாக்குறையை நீக்க ஏனைய ஆசிய நாடுகளிலிருந்து மாதாமாதம் பல்லாயிரம் டன் ரின்மீன் இறக்குமதி செய்யப் பட்டுக் கொண்டிருக்கின்றது. போசாக்குக் குறைவால் குழந்தைகளும், கற்பிணித் தாய்மாரும் படும் அவலங்களை வடக்கு வைத்தியர்களைக் கேட்டால் சொல்வார்கள். தவிரவும் 40வயதைத் தாண்டியவர்களுக்கு கல்சியம் பற்றாக்குறை பெருமளவில் தோன்றியுள்ளது.
எல்லாப் பக்கமும் அரசியல்வாதிகளும் பெருமுதலாளிகளும் தமது லாபத்தை நோக்காகக் கொண்டு மக்களை வஞ்சித்து வருகிறார்கள் என்பதற்கு இப்படி பல்லாயிரம் எடுத்துக்காட்டுக்கள் நடக்கின்றன.
25 November 2017
------------------
வாழ்வாதாரம் எண்ட பேரில கண்ட பாசியளயும் கொண்டுவந்து கடலுக்க கொட்டி, இருக்கிற ஆதாரங்களையும் நாசம் பண்ணாமல் இருதால் அதுவே பெரிய புண்ணியம் தமிழ் அரசியல்வாதீஸ்.
Bm Dl மற்றும் 14 பேர்
1 கருத்து
3 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

1 கருத்து

மிகவும் தொடர்புடையது


No comments:

Post a Comment