Saturday 22 June 2019

கல்முனை கற்றுத்தரும் பாடம்! பேசாலைதாஸ்

கல்முனை கற்றுத்தரும் பாடம்! 
பேசாலைதாஸ்
                                                கல்முனை பிரதேச சபையை தரம் உயர்த்தகோரி பிக்குகள் நடத்திய போராட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனையாகி ன்றது! முதலில் நான் இதை மனோகனேசன் அவர்களின் கூற்றுடன் ஆர ம்பிக்கின்றேன் அவர் ஊடகங்களுக்கு சொல்வது இதுவே! "ஞானசார தேரர், தற்போது கல்முனை தமிழர் தரப்பு உண்ணாவிரதத்தை முதற்கட் டமாக கருதி முடித்து வைக்கிறேன் என எனக்கு தொலைபேசியில் தெரி வித்தார்"நல்லது, நன்றி, செய்யுங்கள்" என்றேன். அம்பாறை மாவட்ட, முஸ்லிம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் தரப்பின் பிடிவாத மும், தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தரப்பின் இயலா மையும் இந்த பிரச்சினையை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது என்ற உண்மையை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

                                                   வேறு ஒரு தளம் என அமைச்சர் குறிப்பிடுவது பெள்த்த பிக்குகள் மட்டம்! அவர் அதை ஒரு வேண்டாத கோணத்தில் நோக்கலாம், ஆனால் எனது பார்வை வேறு ஒரு கோணத்தில் நகர்கி ன்றது. தேச ஒருமைப்பாடு, நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில் இந்த நகர்வு, அவரது அமைச்சைப்பொறுத்தவரை நல்லதே என நினைக்கி ன்றேன். ஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப்பின்னர், பெளத்த பிக்குகளிடம், தமிழ்ர் மீதான பார்வை கொஞ்சம் மாறுதல் அடைந்துள்ளது, அதாவது முஸ்லிம் மக்களைவிட, தமிழர்கள் ஆபத்தானவர்கள் அல்ல என்பதே அந்த சிந்தனை நகர்வு!

                                                               தமிழர்களுக்கு பல பிரச்சனை உள்ளது அது தீர்த்துவைக்கப்படவேண்டிய ஒரு விடயம் என்பது பலதரப்பாலும் ஆமோ திக்கப்பட்ட விடயம், ஆனால் அந்த பிரச்சனையை வைத்துக்கொண்டு, சிங்கள அரசியல்வாதிக,ள் மலிமான அரசியல் விளம்பரங்களை நடத்தி அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற துடித்ததின் விளைவே, தமிழர் விடு தலை போராட்டாம் எழுச்சிபெற காரனம் ஆகியது. அந்த போராட்டம் கூர்ப்படைந்து தனி நாட்டு கோரிக்கைக்கு வழி சமைத்தது. தற்கால உலகமயமாதல் கோட்பாட்டுக்கு சற்றும் ஒத்துவராத இந்த தனி நாட்டு போராட்டம் சர்வதேச அரங்கில் சந்தேக கண்கொண்டு பார்க்கப்பட்ட தோடு, அதனை அழிக்கவும்  வழிகாட்டியது, இறுதியில் முள்ளிவாய்க் கால் துய‌ரத்துடன் முடிவைந்தது!

                                                       தமிழ் விடுதலை ஆயுதபோராட்டம் முடிவடை ந்து, ஜனநாயகவழிமுறைக்குள் தீர்வுகாணஅது தள்ளப்பட்டுள்ளது! ஆனால் தற்போதுள்ள முஸ்லிம் பயங்கரவாதம் இந்த புலிகளின் போரா ட்டத்தைவிட பயங்கரமானது, அதாவது விடுதலைபுலிகளின் போராட்டம் தமிழர் சுயபாதுகாப்பு அல்லது தமிழர் தாமே தமது பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு தனி நாடு என்ற எல்லைக்குள் சுருக்கப்பட ஒரு விடயம்! ஆனால் முஸ்லிம் பயங்கரவாதம் என்பது சர்வதேச ஒழுங்கமைவில் ஒரு சர்வதேச இஸ்லாம சாம்ராட்சியத்தை ஸ்தாபிப்பதே ISIS அமைப்பின் முக்கிய நோக்கம்! இது சர்வேதசத்திற்கே ஒரு அச்சுருத்தலான விடயம் என்பதோடு, இலங்கையின் இறைமைக்கே ஆபத்தானது என்று இப்போது சிங்களம் உணரதளைப்பட்டுள்ளது

                                                        இதில் ஒரு விடயம் குறிப்பிட்டாகவேண்டும், அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் நகர்வு, அதாவது ஒற் றையாட்சிக்குள் சுமூகமான தீர்வு என்பது சிங்கள மக்களையும், ஆட்சிb யாளர்களையும், பிக்குமார்களையும் சந்தோசப்படவைத்துள்ளது என்றே கூறவேண்டியுள்ளது, எனவேதான் அத்ரலி தேரோ மற்றும் ஞானசார தேரர் போன்றவர்கள், பிரபாகரன் இருந்திருந்தால், இலங்கையின் இறமைக்கு சர்வதேச மட்டத்தில் இருந்து அச்சுருத்தல் வந்திருக்காது என வெளிப்படையாக கூறுகின்றார்கள். இன்னும் தொடரும்,,,,,,                                                                                                                                  பேசாலைதாஸ்
                                                      இன்னொரு விடயத்தையும் இங்கே அவதானிக்க முடிகின்றது, அதாவது தமது இனத்தின் அரசியல்வாதிகளின் சுயநல மும், அதிகாரவேட்கையும், கிழக்கு முஸ்லிம் மக்களுக்கு ஆயுதம் கொடு த்து, அவர்களின் தீவிரவாதத்துக்கு துணைபோனார்கள், என்ற விடயமும் பெளத்த பிக்குகள் உணரத்தலைப்பட்டுள்ளனர், ஞானசார தேரர் இப்ப டிச் சொல்கின்றார், அதாவது தமிழரும் சிங்களவரும் ஒருமித்து பயணம் செய்யவேண்டியுள்ளது என்கின்றார், இதில் ஒரு சூட்சுமம் இருக்கின்றது, அதாவது முஸ்லிம் மக்களை அரசியலில் இருந்து மெல்ல கழற்றிவிடு வதே இக்கூற்றின்  அடிஆழம்!

                                                      இதுவரை காலமும் தமிழ் தேசியவாதத்தையும், தாயக கோட்பாட்டையும் பலவீனப்படுத்த, முஸ்லிம் மக்களையும், கிழ க்கு பிராந்திய பிரதேசவேறுபாடையும், முஸ்லிம் மக்களைக்கொண்டு சிங்களம், அதனை நிறைவேற்றியது, அதன் எதிர்வினையாக, கிணறு வெட்ட, பூதம் கிழம்பிய கதையாக சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத பூதம், கிழக்கில் இருந்து உதயமாகியுள்ளது:

                                                      இப்போது பெளத்த பிக்குகளுக்குள் எழுந்துள்ள விழிப்புணர்வு, சிங்கள இனத்தை காப்பாற்றவேண்டுமானால், இலங்கை என்ற நாட்டுபற்றை வளர்க்கவேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது, இது இனவாதத்தை சற்று பின்தள்ளி, நாட்டுப்பற்றை முன்வைக்கின்றது, இந்த செல்நெறி இலங்கையில் புதிய அரசியல் கலாச்சாரத்திற்கான தோற்றமாக உணரமுடிகின்றது, இந்த அடிப்படையில், மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு இந்த சொல்லாடல்கள் இப்போது அதிகமாக புரள்கின்றது, இதுவரவேற்கவேண்டியவிடயம்!

                                                     மதந‌ல்லிணக்கம் என்று பேசும் போது, இந்துவும் பெளத்தமும், ஒரே அடிமட்டத்தில் இருந்து வந்தவை, புத்தர் ஒரு இந்து!எனவே பெளத்தமும் இந்துவும் ஒரே பார்வையில் பார்க்கப்படலாம், தமிழ ர்கள் பெளத்தத்தை வழிபடுவ்தில் தவ்று ஏதும் இல்லை. உண்மையை சொல்லப்போனால், பெளத்தம் பிறந்தது இந்தியாவில்! அசோக சக்கர வர்த்தியால் தமிழர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற இந்த பெளத்தம்,  பார்ப்பணர்களின் இந்துத்துவ கடும் எதிர்ப்பினால், சாதுவான தார்மீக சிந்தனை கொண்ட பெளத்த மதம் இந்தியாவில் இருந்துவிரட்டப்பட்டு, தென்கிழக்கு ஆசியா, சீனாவுக்குள் புகுந்து, அங்குள்ள மக்களை தெய்வ ங்களாக மாற்றி, சீனா,சிங்கப்பூர்,கொங்கொங், கொரியா,யப்பான் போன்ற வளமான நாடுகள் உதயமாக இந்த பெளத்தம் துணை நின்று ள்ளது என்பதே வரலாற்று உண்மை! இன்னும் தொடரும்  பேசாலைதாஸ்

Friday 21 June 2019

மூக்கு கண்ணாடி

ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின்
மூக்கு கண்ணாடியை தவறுதலாக கீழே போட்டு உடைத்து விட்டது.
அவள் அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி விட்டார்....
அன்று இரவு முழுவதும் அந்த பெண் தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார் செய்து, அடுத்த நாள் தன் தந்தையிடம்
கொடுத்தாள். அதை பிரித்து பார்த்த அவர் அதில் ஒன்றும்
இல்லாததை பார்த்து மீண்டும் கோபமுற்றார்.
யாருக்காவது பரிசு கொடுக்கணும்னா அதில் எதாவது பொருள் வைத்து கொடுக்கனும்மா நீ வெறும் பெட்டியை கொடுப்பது தவறு என்று கண்டித்தார்.
அந்த குழந்தை சிரித்து கொண்டே ஆர்வத்துடன் சொன்னது நான் இரவு முழுவதும் 1000 முத்தங்களை அந்த பெட்டிக்குள்ள கொடுத்து, மூடி தான் உங்களிடம் தந்தேன் என்றாள்.
அதைக் கேட்ட அவரது தந்தை அந்த குழந்தையை இறுக்கி அணைத்து மன்னிச்சிக்கோமா உன் அன்பு புரியாமல்
உன்னை திட்டிட்டேன் என்றார்.
அவர் தன் தலையனை அடியில் அந்த பெட்டியை வைத்து கொண்டார். எப்போது எல்லாம் அவர் மனம் வருத்தமடைகிறதோ அப்போது எல்லாம் தன் மகளின் அன்பு முத்தத்தை அந்த பெட்டியை திறந்து எடுத்து கொண்டார்.
பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு.

Sunday 16 June 2019

பேசாலை உதயன் ஆசிரியரின் பாராளமன்ற உறுப்பிணர் ரிசாட் பற்றிய காணொளி மீதான ஒரு விமர்சனம்!  பேசாலைதாஸ்

                                                              உதயன் அவர்கள் அன்மையில் பாராளமன்ற உறுப்பிணர் ரிசாட் பற்றி ஒரு காணொளி பதிவில், ரிசாட் பற்றிய அவ ரது தனிமனித நற்பண்பு பற்றி சிலாகித்து இருந்தார், அதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது, மன்னார் புலம் பெயர் மக்களின் சங் கம் தொடர்பாக, வெளிநாட்டில் இருந்து உதவி தொகை அனுப்புவ தில் பரிய சிக்கல் எழுந்த போது, அமைச்சராக இருந்த அவரை தாராபுர த்தில் சந்தித்து, வெளிநாட்டில் இருந்து வறிய பல்கலைக்கழக மாணவர்களு க்கு உதவிப்பணம் அனுப்புவ தில் எழுந்த சிக்கல்பற்றி விபரித்த போது, அவர் எனக்கு அந்த சிக்கலை தீர்ப் பதாக வாக்குறுதி தந்தார் அவரும் எனது நண்பர்தான்! பிரச்சனை என்ன வென்றால் அவரின் மீதான குற்ற சாட்டு அவரது அரசியல் நடவடிக்கை பற்றியதாகும

                                                                        அவரது அரசியல் மாற்றுக்கருத்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கிம் மீது அவர் மேற்கொண்ட தனி மனித பழிவாங்கலை சொல்லலாம், குமாரி என்ற சிங்கள பெண்ணின் தற்கொலை ஹக்கிமுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையில் இருந்த தகாத உறவில் எழுந்தது என்று அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார், அதனைவிட அவர் தமிழ் தேசியவாத சிந்தனையை சிதறடிக்கும் வடக்கு கிழக்கு இணைப்பை கடுமையாக எதிர்த்தவர், கிழக்கிலே துரிதமாக தனது கட்சியை வளர்க்கும் நோக்கில் அவரால் வகுக்கப்பட்ட வியுகம் இது! கிழக்கிலே அம்பாரை காத்தான்குடி போன்ற பகுதியில் தனது அர சியல் செல்வாக்கிற்காக முஸ்லிம் இளைஞர்களின் தீவிரவாத்த்தை தமக்கு சாதகமாக்கிக்கொண்டவ்ர்களில் ஹிஸ்புல்லாவுக்கு நிகராக இவரும் இருந்துள்ளார். கிழக்கிலே முஸ்லிம் ஊர்காவல் படை மற்றும் ஜிஹாத் போன்ற இராணுவ ஆயுதகுழுவைன் செயல்பாடுகளை மனமார வரவேற்றவர்கள் இவர்கள்!

                                                    அவரது அரசியல் மாற்றுக்கருத்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கிம் மீது அவர் மேற்கொண்ட தனிமனித பழிவாங்கலை சொல்லலாம், குமாரி என்ற சிங்கள பெண்ணின் தற் கொலை ஹக்கிமுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையில் இருந்த தகாத உறவில் எழுந்தது என்று அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார், அதனை விட அவர் தமிழ் தேசியவாத சிந்தனையை சிதறடிக்கும் வடக்கு கிழக்கு இணைப்பை கடுமையாக எதிர்த்தவர், கிழக்கிலே துரிதமாக தனது கட்சியை வளர்க்கும் நோக்கில் அவரால் வகுக்கப்பட்ட வியுகம் இது! கிழக்கிலே அம்பாரை காத்தான்குடி போன்ற பகுதியில் தனது அரசியல் செல்வாக்கிற்காக முஸ்லிம் இளைஞர்களின் தீவிரவாத்த்தை தமக்கு சாதகமாக்கிக்கொண்டவ்ர்களில் ஹிஸ்புல்லாவுக்கு நிகராக இவரும் இருந்துள்ளார். கிழக்கிலே முஸ்லிம் ஊர்காவல் படை மற்றும் ஜிஹாத் போன்ற இராணுவ ஆயுதகுழுவைன் செயல்பாடுகளை மனமார வரவேற் றவர்கள் இவர்கள்!
முஸ்லிம் ஊர்காவல்படை, ஜிஹாத் இராணுவ கூலிப்படையால் ஆயிர மாயிரம் எம் தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்! கொலை செய்ய ப்பட்டனர், அந்த ஆயுத கும்பல்களுக்கு அடைக்கலமாக இருந்த இடம் காத்தான்குடி பள்ளி வாசல்! ஆயுதங்கள், கொலைவால்கள் மறைத்து வைக்கப்பட்ட இடங்கள் புனித பள்ளி வாசல்கள்! இதற்கு ஹிஸ்புல்லா வின் காணொளி சாட்சியாக இருக்கின்றது!

                                                 இவர்களது அடாவடிதனத்தை அடக்குவதற்காகவே புலிகள் காத்தான்குடி பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தினார்கள் அதனை தொடர்ந்து வடக்கில் உள்ள முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கு தமிழ் இராணுவ துணைக்குழு மூலமாக பேராபத்து ஏற்பட்டு தமிழ் முஸ் லிம் இனமுறுகள் உச்சகட்டம் அடையும் என்ற நோக்கில் தான் முற்பாது காப்பாக முஸ்லிம்கள் வடக்கில் இருந்து அகற்றப்பட்டனர்! இந்த வெளி யேற்றத்தை தமது அரசியல் பரபுரை கையில் எடுத்தவ்ர்தான் இந்த ரிசாட் என்ற அரசியல்வாதி, இவரது அரசியல் பரபுரையில் தமிழ் விரோ தமே சிங்கள வெறுப்பைவிட மோசமாக இருந்தது, மன்னாரிலும் தனது வாக்கு வங்கியை பலப்படுத்த பெருந்தொகை காணிகளை கையகப் படுத்தி, முஸ்லிம் மக்களுக்கு வீட்டுதிட்டம் கொடுத்தது உதயனுக்கு தெரி ந்திருக்கும்! மன்னார் மாவட்டம் முழுவதுமே ரிசாட்டுக்கும் ஹிஸ்புல்லா வுக்கும் சொந்தமான தீவு என்றால் அது மிகையாகது!

                                   இந்த கானி விவ‌காரமாக, மன்னார் ஆயர் இராயப்பு விடம் ரிசாட் முரண்பட்ட விடையம் யாவ்ரும் அறிந்ததே! வில்பத்துகாட் டில் கைவைத்து சிங்கள பிக்குளிடம் முரண்பட்டவிடைய்மும் யாவரும் அறிந்ததே! அவர் அமைச்சராக மாறிய போது, அதனால் வேலைவாய்ப் புகள் பெற்றது மன்னார் முஸ்லிம்களே! ஏதோ எழும்பு துண்டை வீசி எறிவது போல, சம்பளம் குறைந்த சதோசா, சமூர்த்தி, இரயில் தண்டாவ ளையம் செப்பணிடும் வேலைகள்தான் ஒரு சில தமிழர்களுக்கு கண் துடைப்பாக கொடுக்கப்பட்டது! படிப்பறிவிலாத முஸ்லிம்கள் அவரது திணைக்களத்தில், கோட்டும் சூட்டுமாக திரிவைத நீங்கள் அவதானி க்கலாம்! எட்டாம் வகுப்பு கூட படிக்கத ஒரு முஸ்லிம் நபரை அரசாங்க கூட்டுத்தாபன தலைவராக்கிய பெருமை ரிசாட்டையே சாரும்!

                                     அரசியல் பரப்புரைகளில் புலிகளுக்கு எதிராக சொல் லும்போது, தான் சொப்பிங் பையோடு அகதியாக கல்பிட்டிக்கு சென்ற தாக அவரே சாட்சியம் அளித்துள்ளார்! அகதியாக சொபிங் பையோடு வந்தவர் எப்படி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரனா உருவாகினார், அதுவும் இந்த பத்து பதினைந்து ஆண்டுகளுக்குள்? சூது, வட்டி இதனால் வரும் பணம் முஸ்லிம் மதத்தை பொறுத்தவரை ஹராம்! அப்படியானல் ரிசாட் வெளிநாட்டில் வேலை செய்துன் உழைத்தவரா? அப்படி உழத் தாலும் நினைத்து பார்க்கமுடியாத பணம் சேகரிக்க முடியாது! இவரது பணம், சொத்து, காணி எல்லாமே ஊழலாலும், அராபிய சேக்குகளாலும், சவுதி மன்னராலும் வந்த பணமே! இதுவே பெளத்த பிக்குகளின் கண் ணை குடைந்தவிடயம்! இவர் மீது பொலிஸ் புலன்விசாரனை நடத்தி இருக்கவேண்டும்! ஆனால் அரசாங்கம் இவரை காப்பாற்றும் வித‌த்தில் பாராளமன்ற தெரிவு குழுவை அமைத்து கண்கட்டி வித்தை செய்துள்ளது!

                                                                   நான் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவன் அல்ல ஆனால் முஸ்லிம் அரசியல் தலைமகள் இனியாவது தமிழ் விரோத அரசியல் பரப்புகளை கைவிட்டு, சிறுபான்மை இனம் யாவும் ஒன்றாக இனைந்து ஒரே பலமாக திகழும் போது, அந்த பலம் இல்லாமல் தெற்கிலே எந்த சிங்கள கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத ஒரு அரசி யல் செல்நெறியை இலங்க சிறுபான்மை இனம் முன்வரவேண்டும், அமைச்சுகளுக்கும் சலுகைகளுக்கும் விலை போனால், முஸ்லிம் இருப்பு இலங்கையில் கேள்விக்குறியாக அமையும் எனவே ரிசாட் அவர்கள் செய்யவேண்டியது, வடக்கும் கிழக்கும் இணைந்தே இருக்கவேண்டும், தமிழ் தேசிய கூட்டமைப்போடு தம்மையும் இணைத்து சிறுபன்மையின் அரசுர பலத்தை நிரூபிக்கவேண்டும்! அதற்கு ஏற்றவாறு முஸ்லிம் தலை மகள் பொறுப்போடு, இன் முரண்பாடுகளை உருவாக்கக் கூடுய பேச்சு கள், அரசியல் கொள்கை பரப்புகள், தேர்தல்கள விளம்பரங்களை முஸ் லிம் தமிழ் மக்கள் என்ற சிந்தனையோடு, சிங்கள பெரும்பான்மையை சீண்டாத அதேவேளை மதி நுட்பத்துடன் சிறுபான்மை பலத்தோடு பெரும்பான்மையின் அகங்காரத்தை அடக்க முயலவேண்டும் இதற்கு உதாரனமாக ஹக்கீம் அவர்கள்து உரையை கீழே தருகின்றேன்.  சிறுபான்மை காடெருமைகள் ஒன்றாக திரண்டால்,,,சீறும் சிங்கங்களை அடக்கிவைக்கலாம்! இதுவே எனது எண்ணம் அன்புடன் பேசாலைதாஸ்

Wednesday 12 June 2019

வஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்?


வஹாபிஸம் என்றால் என்ன?  

                                                             பேசாலைதாஸ்

                                                                 அன்மையில் இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் குண்டுவெடிப்புகளுக்கு பிறகு இஸ்லாத்தின் மார்க்கம் என்ன சொல்கின்றது, அதற்குள் இருக்கும் பல பிரிவுகள், உள் முரண்பாடுகள் பற்றியும் பயங்கர வாதாம், அடிப்படைவாதம் இப்படி பல வாதப்பிரதி வாதங்கள் இஸ்லாத்துக் குள்ளும் வெளியிலும் அலசப்பட்டது, அதில் ஒரு இஸ்லாமிய வழிமுறைதான் வஹாபிஸம் எனும் ஒரு பிரிவு, இந்த வஹா பிஸம் பற்றி எனக்கு தெரிந்த சில தகவல்களை இப்போது சிலாகிப்பது ஒரு புதிய புரிதலுக்கு வழிவகுக்கும் என நான் நினைக்கின்றேன்! வஹா பிஸம் என்றால் என்ன என்பதை நாம் விளங் கிக்கொள்வோம்! வஹா பிஸம் யார் இந்த வஹ்ஹாபிகள்?

                                                                      குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்று வோம் என்று சொல்லுகிறவர்களைப் பார்த்து  அல்லது தவ்ஹீத்வாதிகள் என்று பேசுபவர்களைப் பார்த்து வஹ்ஹாபிகள் என்று கூறப்படும் போது இந்த பெயர் எப்படி வந்தது இதன் அர்த்தமென்ன என நாம் தெரிந்திருப் பது மிகவும் அவசியமாகும். இந்த பெயரின் அர்த்தமென்ன?  இந்தப் பெயர் அல்லாஹ்வுடைய நாமங்களில் ஒன்றாகும். வஹ்ஹாப் (வள்ளல்)  (குர்ஆன் 3:8,38:9,38:35) 'வஹ்ஹாபி' என்றால்  'அல்வஹ்ஹாப்' என்ற அல்லாஹ்வின் பெயருடன் இணைக்கப்பட்டு அல்லாஹ்வைச் சேர்ந்த வன் என்று பொருள் படும்.  இந்த பெயர் எப்படி தவ்ஹீத்வாதிகளை குறிக்கும் சொல்லாக மாறிb யது? முஹம்மது பின் அப்துல் வஹ்ஹா ப்(ரஹ்) (அப்துல் வஹ்ஹாபுடைய மகன் முஹம்மத்) என்பவர் மிகப் பெரிய அறிஞர். சவூதியில் ரியாத்தை சேர்ந்தவர். இந்த காலப்பகுதியில் இமாம் அவர்கள் தோன்றிய காலப்பகு தியாகும். இவர்தான்இஸ்லாமிய உலகில் அடிப்படைக் கொள்கையில் மிகப் பெரிய சரியான மாற்றத்தை ஏற் படுத்தியவர்.  இதுவே எனது புரிதலாக உள்ளது. 

                                                                  காலம் செல்ல செல்ல மக்கள் சரியான கொள்கைகளிலிருந்து மாற்ற மடைந்துக் கொண்டே இருப்பார்கள். ஆக முஹம்மது நபி (ஸல்) அவர்களோடு இறைத்தூதுத்துவோம்  முற்றுப் பெற் றால் வரலாற்றிலே அவர்களுக்குப் பின்னால் ஏற்ப்படுகின்ற சீர் கேடுகளை யார் சீர்ப்படுத்துவது யார் சமூகத்தை வழிநடத்துவது அல்லாஹ் ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஏதோ அடி ப்படையில் ஒரு சீர்த்திருத்தவாதியை ஏற்ப் படுத்திக் கொண்டே தான் இருக்கிறான் என்பது சில முஸ்லிம்களின் கொள்கையாகின்றது.

                                             இது இஸ்லாமிய வரலாற்று ரீதியான உண்மை.  இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் அவர்களுடைய காலத்தில் இஸ்லாத் தின் தூணாக விளங்கினார்கள். அவர்களின் காலப்பகுதியில் அடிப் படைக் கொள்கை சம்பந்தமாக நிறைய குழப்பங்கள் தோன்றிய போது இமாமவர்கள் அதற்கு முகம் கொடுத்து  சரியான இஸ்லாத்தை நிறு வினார்கள்.  அதற்கு முன்பு முஹம்மது நபி (ஸல்) மரணத்திற்குப் பின்னால் அபுபக்கர் (ரலி) அவர்கள் இந்த இஸ்லாத்தில் பல மாற்றங் களை புகுத்தினார். இந்த அடிப்படையில் இவரை ஒரு சீர்த்திருத்தவா தியாக இறைவன் உருவாக்கினான் என்பது இஸ்லாமியரின் கருத்து. இது இமாம் அவர்களின் ஏற்பாடாகும். இமாவர்கள் பிறந்தது ஹிஜ்ரி 1115ல் நஜ்தியிலே(இன்றைய புதிய பெயர் ரியாத்) உள்ள அல் உயைனா என்ற ஊரில் பிறந்தார். அது இப்போது ரியாத்திலிருந்து வடமேற்கில் 70 கிலோ மீட்டர்க்கு அப்பால் இருக்கிறது. அவர்கள் பிறந்த காலப்பகுதி எப்படி இருந்தது என்றால், இருளான காலப்பகுதியாக இருந்தது. 


                                மக்களிடம் பழைய அறியாமைக் கால பழக்கவழக்க ங்களைப் பின்பற்றிக் கொண்டிருந்தனர். குறிப்பாக ஹிஜ்ரி 900க்குப் பிறகு உலகளாவிய இஸ்லாமிய உலகம் உறங் கிக் கொண்டு இருந்தது. எல்லா விஷயங்களிலும் அறிவுத்துறையில், அரசியல்துறையில், பொரு ளதாரத்துறையில் ஏனைய மார்க்கத்துறையில் அனைத்திலும் விழ்ச்சி யில் இருந்த சமூகத்தை தட்டி எழுப்பியவர் ஒருவர் இருப்பாரெ ன்றால் அவர்தான் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப்(ரஹ்) அவர்கள் தான். வெறும்(இணைவைப்பை) ஷிர்க்கை மட்டும் விமர்சிக்கவில்லை அனை த்து துறைகளிலும் தனது கவனத்தை செலுத்தினார்கள்.


                                                                                        கப்றுகளை,குகைகளை, மரங்களை வணங்கக்கூடியவர்களாக அக்கால மக்கள் இருந்தனர். அதே போன்றுசூனியம் தலைதூக்கியிருந்தது போதை வஸ்துக்களின் பிடியில் மக்கள் இருந்தனர். இக்காலக்கட்டத்தில்பிறந்த இமாமவர்கள் சிறுவயதி லேயே ஒரு தேர்ச்சியுள்ள நுணுக்கமான ஆற்றல் உள்ளவராக வளர்கி றார் சிறுவயதிலேயே குர்ஆனை மனனம் செய்திருந்தார் அவருடைய தந்தையும் ஒரு பெரிய காரி(நீதிபதி) குர்ஆனைமனனம் செய்துயிருந்த மார்க்க அறிஞர். முதலில் இமாமவர்கள் தனது தந்தையிடம் கல்வி பயின்றார்கள். சிறுவயதி லேயே நிறைய விஷயங்களைதந்தையிடம் கற்றுக் கொண்டார்கள் இந்த சூழலில் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் அவர்கள் தனது 13 ஆம் வயதில் ஹஜ் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். அவர்களுடைய தந்தை யும் அனுமதிஅளித்து ஹஜ்க்கு அனுப்பி வைக்கிறார். அக்காலங்களில் ஹஜ் செய்வதென்றால் மிகவும் சிரமான காரியம்.நீண்டபயணம் செய்ய வேண் டும். ஆனால் இமாமவர்கள் இதுபோன்ற பயணங்களின் ஊடாக சரியான இஸ்லா த்தை கற்றுக் கொண்டார்கள். 


                         அக்காலத்தில் மக்காவிலே நான்கு மிகாரபுகள் (தொழுகைக் காக இமாம் நிற்கும் இடம்) கஃபாதுல்லாவை வளைத்து இருந்தது. எந்த அளவுக்கு அந்த சமகால மக்களிடம் மார்க்கத்தைப்பற்றிய தெளிவி ல்லை யென்றால் நான்கு மத்ஹபுகளுக்கும் தனிதனியாக தொழகை இடங்கள் இருந்தன. ஒரு வக்து தொழகையை நான்கு தடவை நிறை வேற் றப்படும். அதாவது ஹஜ் வந்த ஹாஜிகளை ஹனபி,ஷாபி, மாலிக்கி, ஹம்பலி என்று நான்கு பிரிவுகளாக பிரித்து தனி தனி பிரிவினரின் இமாம்களோடு தொழுகை நடக்கும். 


                                         இந்த சூழலில் இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் 13ம் வயதில் ஹஜ்க்கு வந்திருந்த போது மக்காவில் காஃபாவில் ஒரு உலமா இஸ்லாமிய பயான்(சொற்பொழிவு) நடத்திக் கொண்டி ருந்தார்.ஆழமானஅறிவுள்ள அழைப்பாளரான அவர் சிறந்த முறையில் ஹதீஸ் குர்ஆன் அடிப்படையில் பயான் செய்து கொண்டி ருந்தார். அந்த சொற்பொழிவாள் ஈர்க்கப்பட்டு முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் முழுபயானை யும் கேட்கிறார்கள். அழகான பேச்சாக இருக்கிறது ஆனால் பேச்சை முடித்து விட்டுஎழுந்திருக்கும் போது யா காஃபதுல்லாஹ் என்று எழுந்திரிக்கிறார்.  ஹதீஸ் குர்ஆன் அடிப்படையில் பேசிய அவர்கூட சரியான இஸ்லாத்தை விளங்காமல் யாஅல்லாஹ் என்றுஅழைப்பதற்கு பதில் யா காஃபதுல்லாஹ் என்று அழைக்கிறார். 

                                        இதனைக் கண்ட அப்துல் வஹ்ஹாப்அவர்கள் மிக நுணுக்கமாக இவர் பெரிய அறிஞராக இருக்கிறாரே இவரிடம் எப்படி அவர் செய்த தவறைசுட்டிக்காட்டுவது என்று யோசித்துக் கொண்டே அவரிடம் சென்று உங்களிடத்தில் நான் எனக்கு தெரிந்தசின்ன சின்ன அல்குர்ஆன் வசனங்களை ஓதி காட்டுகிறேன் நான் சரியாக ஓதுகி றேனா என்பதை நீங்கள் சரிபார்த்துச் சொல்லுங்கள் என்று சொன்னா ர்கள். ஏனென்றால் அப்துல் வஹ்ஹாப் அவர்கள் அப்போது சிறுவர்.  உடனே அந்த அழைப்பாளர் தாராளமாக நான் சரிபார்த்து சொல்கிறேன் என்றவுடன் சரி நான் குல் அவூதுபி(B)ரப்பி(B)ன்னாஸ்  சூரத்துன்னாஸி ருந்து தொடங்கி ஒவ்வொன்றாக ஓதி காண்பிக்கிறேன் நீங்கள் தவறு இருந்தால் சரி பண்ணுங்கள் என்றார். அவரும் சரி ஒதுங்கள் என்றார் உடனே இமாமவர்கள் சூரத்துன்னாஸ், சூரத்துல் ஃபலக்,இக்லாஸ், தப்பத், அந்நஸ்ர், இப்படி ஒவ்வொன்றாக ஓத தொடங்கி இந்த சூரத்துல் குரைஷ்என்ற சூரா வந்தவுடன் நாம் எப்படி ஓதுவோம்


                                                     லிஈலா(F)பி குரைஷ் ஈலா(F)பிஹிம் ரிஹ்ல(த்) தஷ் ஷி(த்)தாயி வஸ்ஸை(F)ப் (F)பல்யஃ(B)புதூ ர(B)ப்ப ஹாதல்(B)பைத் என்றுதான் தொடராக ஓதுவோம் அவர்கள் எப்படி ஓதினார்கள் என்றால்

ர(B)ப்ப ஹாத என்பதை விட்டுவிட்டு  (F)பல்யஃ(B)புதூ (B)பைத் என்று ஓதினார்கள் உடனே அதனை  உலமா சுட்டி காட்டீனார்கள் (F)பல்யஃ (B)புதூ (B)பைத் என்றால் என்ன அந்த வீட்டை அவர்கள் வணங்கட்டும் என்று பொருள். (F)பல்யஃ(B)புதூ ர(B)ப்ப ஹாதல்(B)பைத் என்றால் இந்த வீட்டின் இரட்சகன் எவனோ அவனை வணங்கட்டும் என்று பொருள். அல்லாஹ் இந்த வசனத்தில் என்ன சொல்கிறான் காஃபாவை யாரும் வணங்க வேண்டாம் அதை எவன் படைத்தானோ அவனை வணங் கட்டும் என்று சூரத்துல் குரைஸில் அல்லாஹ் சொல்லுகிறான். எனவே தான் இஸ்லாத்தை விளங்கிய எந்த முஸ்லிமும் காஃபாவை வணங்குவ தில்லை இமாமவர்கள் (F)பல்யஃ (B)புதூ (B)பைத் இந்த வீட்டை வணங்க ட்டும் என்று வேண்டுமென்றே ஓதி னார் உடனே அந்த உலமா தவறாக ஓதுகிறாய் அது எப்படி வீட்டை வணங் குவது காஃபாவை வணங்கக் கூடாது என்கிறார். உடனே இமாமவர்கள் உங்களுடைய செயலில் அப்ப டித்தானே பார்த்தேன் நீங்கள் எழுந்திருக்கும் போது யா காஃபதுல்லாஹ் என்று எழுந்தீர்களே அதுமட்டும் சரியா என்று கேட்டார்கள். உடனே அவர் அன்றுதான் அவர் தன்னுடைய தவறை உணர்ந்து சரியாக விளங்கிக் கொண்டார்.

                                                                                முஹம்மது இப்னு அப்துல் வஹாப் அவர்கள் ஒரு சாதாரண அறிஞர் அல்ல. இமாமவர்கள் குர்ஆன் தப்ஸீரில்எராளமான விளக்கங்கள் எழுதியுள்ளார்கள் .கல்வி கற்பதற்காக மக்காவை அடுத்து மதீனாவுக்குசென்றார்கள். மதீனாவில் சில வருடங்கள் கல்வி கற்றார்கள். பிறகு (பஷார) ஈராக் நாட்டிற்கு சென்று கல்விகற்றார்கள். அக்காலங்களில் பண்பாட்டில் கல்வியில் ஈராக் சிறந்து விளங்கியது ஈராக்கில் கல்வி கற்றுமுடித்து விட்டு லக்‌ஷா  (இன்றைய பாலஸ்தீனின் உள்ள காஸா) சென்று அங்குள்ள மார்க்க அறிஞர்களிடமும் கல்வி கற்றாப் ர்கள்.இவ்வாறு பல நாடுகளில் சுற்றுப் பயணங்களில் வாயிலாக இமாமவர்கள் நிறைய விஷயங்களை கற்றுக்கொண் டார்கள். மார்க்கத்திற்கு விரோதமான பல நாடுகளில் நிவவிய நூதனபழக்கவழக்கங்களையும் தெரிந்துக் கொண் டார்கள். இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையிருந்து விலகிவாழ்ந்ததை அனுபவப் பூர்வமாக கண்கூடாக பார்த்து தெரிந்துக் கொண்டார்கள். தனது 25ஆவது வயதில்கல்வி சுற்றுலா முடித்துக் கொண்டு தன்னுடைய தந்தையிடத்தில் வந்தார்கள். ஆனால் அவருடைய தந்தைஉயைனா என்ற இடத்திலிருந்து ஹிஜ்ரத்(நாடு துறந்து) செய்து ஹுரைனிலா என்கிற ஊரில் இருந்தார்கள். ஏனென்றால் உயைனா பகுதியில் இருந்த அதிகார வர்க்கத்திடம் மார்க்க விஷயமாக முரண்பட்டுசென்றிருந்தார். ஹுரைனிலா என்ற பகுதியில் இருந்து கொண்டு தான் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் தனது முதல் அழைப்புப் பணியை தொடங்கினார்கள்.



                                                                          சரியான இஸ்லாத்தை சொன்னவுடன் பிரச்சனை ஆரம்பிக்கிறது. நபிமார்கள் வரலாற்றிலேயே இதனை நாம் பார்க்கலாம். ஆரம்பத்தில் தவ்ஹீதை சொல்லும்போது பிரச்சனைகள் ஏற்ப்பட்டன. அதே போல இமாமவர்கள் பிரச்சாரம் செய்த ஹீரைனிலா பகுதியில் பிரச்சனை ஆரம்பிக்கிறது. உடனடியாக அந்த பகுதியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் அவர்களுக்கு ஏற்ப்படுகிறது மறுபடியும் ஹுரைனிலா என்ற ஊரிலிரு ந்து தனது சொந்த ஊரான உயைனாவிற்கு வந்தார்கள். உயைனாவிலுள்ள அமீர் (ஆட்சியாளர்) அவர்களோடு இமாமவ ர்களுக்கு நல்ல நெருக்கம் ஏற்படுகிறது. அமீரின் உதவியோடு தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்தார்கள்.


                                       அந்த பகுதியில் (ரியாத்தில்) ஒரு மரம் இருந்தது அது பிள்ளை தரும் மரம்,என்று நம்பிக் கொண்டிருந்தனர். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் அந்த மரத்திடம் வந்து பிரார்திப்பார்கள். அதேபோன்று ஸயித் இப்னு கத்தாப் என்ற பெயருள்ள சஹாபி, உமர் (ரலி) அவர்களின் சகோதரர் ஆவார் யமாமா யுத்தம் நடந்தபோது(யமாமா என்பது ரியாத்திற்கு அருகிலிருந்த ஒரு ஊர்) அதிலே கலந்து கொண்டு இறைவழியில் ஸாயித் இப்னு கத்தாப் அவர்கள் வீரமரணம் அடைந்தார்கள். இவர்களை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அப்பகுதி மக்கள் தர்ஹா கட்டி பெரிய மினராவை எழுப்பி வணங்கிக் கொண்டிருந்தனர். அதேபோன்று மிரர் இப்னு அஸ்வர் என்ற பெயருடைய சஹாபிக்கும் கப்ர் கட்டி வைத்திருந்தனர். இமாமவர்கள் தொடர் பிரச்சாரத்தின் மூலமாக மனமாற்றத்தை ஏற்ப்படுத்தி அமீரிடம், இந்த தர்ஹாக்களை உடைக்க வேண்டும் ஆதரவு தாருங்கள் என்று கேட்டார்கள். ஆனால் அமீர் (அப்பகுதி ஆட்சியாளர்) மறுத்துவிட்டார். அல்ஜீபைலா என்கிற அந்த தர்ஹாவுக்கு அருகில் இருக்கின்ற மக்கள் என்னை சும்மா விடமாட்டார்கள் அதனால் வேண்டாம் என்றார். 


                                                            இமாமவர்கள் நான் இன்னும் அவர்களிடம் பிரச்சாரம் செய்து சரியான இஸ்லாத்தை சொல்லி சம்மதிக்க வைக்கிறேன் என்று சொன்னார்கள். ஷிர்க்கினால் ஏற்படும் பாரதூரமான கேடுகளை விளக்கி அமீர் அவர்களையும் சம்மதிக்க வைத்து, அமீருடைய 600 படைவீரர் களோடு இமாமவர்கள் அந்த தர்ஹாவை உடைக்க சென்றபோது, ஜீபைலா பகுதியில் அறியாமை பழக்க வழக்கங்களில் பிடிவாதமாக இருந்த மக்கள் ஒடி வந்து இமாமவர்களை தாக்க வந்தபோது, அமீரின் படையைக் கண்டு பின்வாங்கினார்கள். இப்போது யார் உடைப்பது எல்லோரும் தயங்கினார்கள் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் ஆழமான பிராச்சரம் செய்தி ரந்தும் மக்களிடம் ஊசலாட்டம் இருந்தது. யாரும் உடைக்க தயாராகவில்லை கப்ரிலே கைவைத்தால் ஏதாவது நடந்து விடுமொ என்று பயந்தார்கள். 


                                              முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய சொந்த மறுமகன் அலி (ரலி) அவர்களை அனுப்பினார்கள். மண்ணை விட்டு ஒரு ஜான் அளவுக்கு உயரமாக எங்கு கப்ர் கட்டப்பட்டு இருந்தாலும் உடைத்து விட்டு வாருங்கள் என்று அவர்களுடைய காலத்தில் கட்டளை பிறப்பித்தா ர்கள். அலி(ரலி) அவர்களும் அனைத்து கப்ர்களையும் உடைத்தெறிந்தார்கள். இந்த முன்மாதிரியை இமாம் அவர்கள் சொல்லிக் காட்டிவிட்டு, சரி நான் உடைக்கிறேன். நான் முதலில் ஆரம்பிக்கிறேன் என்று சொல்லிவிட்டு உடைத்தார்கள். அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதை கவனித்த மக்கள் அனைவரும் சேர்ந்து உடைத்தார்கள். 


                                                            இமாமவர்கள் இதோடு முடங்கி விடாமல் அந்த பிள்ளை தரும் மரத்தையும் வெட்டிச் சாய்த்தார்கள். இவர்கள் செய்த சீர்திருத்த பணி மற்ற பகுதிகளுக்கும் பரவியது. ஆனால் இமாமவர்களால் உயைனாவிலும் இருக்க முடியவில்லை. ஏனென்றால் உயைனா பகுதியை அட்சி செய்த அமீர் அல் அக்ஸாவில் இருக்கின்ற அமீரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தார். அக்ஸா பகுதியிலுள்ள அமீர் இவருக்கு செய்தி ஒன்று அனுப்பி னார். முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவர் நமது பகுதியில் புதிய விஷயங்களை சொல்லிக் கொண்டு திரிகிறார் கப்ர்களையெல்லாம் உடைக்குமாறு சொல்கிறார் எனவே இவரை கொன்றுவிடுங்கள் என்று கட்டளை இடுகிறார். உயைனா பகுதி அமீர் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களை கூப்பிட்டு சொன்னார்கள், எனக்கு உங்களை கொன்றுவிடுமாறு கட்டளை வந்திருக்கிறது ஆனால் உங்களை கொல்ல விரும்பவில்லை. உங்களுடைய சீர்திருத்த பணிகளைப் பற்றி எனக்குத் தெரியும் நீங்கள் தயவுசெய்து இந்த ஊரைவிட்டு சென்று விடுங்கள் என்றார். 


                                              இமாமவர்கள் அவரை பார்த்து கேட்டார்கள் நீங்கள் யாருக்கு பயப்படுகிறீர்கள் நான் கொண்டு வந்திருக்கிற இந்த கொள்கை லாஇலாஹ இல்லல்லாஹ்வின் அசல் தன்மையாகும். அது சொல்லுகிற கொள்கையாகும் இந்த கொள்கையை நான் சொல்வதற்கு நீங்கள் எனக்கு உதவி செய்தால் உங்களின் ஆட்சியை அல்லாஹ் திடப்படுத்துவான். உங்க ளுக்கு கண்ணியத்தை தருவான். சகல வசதிகளையும் தருவான். அல்லாஹ் bவுக்கு மட்டும் பயப்படுங்கள் எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டா ர்கள். ஆனால் அமீர் அவர்களோ முடியாது பாலஸ்தீன பெரிய அமீர் படை யோடு வந்தால் என்னால் சமாளிக்க முடியாது  போராட முடியாது தயவு செய்து போய்விடுங்கள் என்றார். தனது சொந்த ஊரைவிட்டே இமாமவர்கள் ஹிஜ்ரத் போக வேண்டிய சூழல்.



                                                                                     என்னதான் அந்த ஆட்சியாளர், இமாமை ஊரைவிட்டு வெளியேற்ற முற்பட்டபோதும், இமாமவர்களின் சத்தி யப் பணியைக் கண்டதன் விளைவாக, அவரைப் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, பக்கத்து ஊரான அஃத்திரையா என்கிற பகுதிக்கு அனுப்பி வைக்கிறார். அஃத்தி ரையா என்பதும் ரியாத்தை சேர்ந்தது தான். அக்காலத்தில் சவூதி பல குட்டி பிரதேசங்களாக பிரிந்து கிடந்தது. முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் அஃத்திரையாவுக்குள் முதன்முறையாக நுழைகிறார்கள். இமாம வர்களுக்கு எதிரிகள் இருந்த அளவுக்கு ஆதரவாளர்களும் இருந்தனர். அஃத்திரையா பகுதியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் இமாமவர்களுக்கு அடை க்கலம் கொடுத்தனர். அஃத்திரையா பகுதியை முஹம்மத் இப்னு சவூத் என்பவர் ஆட்சி செய்து கொண்டு இருந்தார். இவருடைய பரம்பரையை சேர்ந்தவர்களைத்தான் சவூதியா என்று சொல்கிறோம். சவூதி நாட்டையும் இவர்களுடைய பெயரைச் சொல்லித்தான் அழைக்கிறோம்.


                                                                                    முஹம்மது இப்னு சவூதிடம் இமாமவர்களின் ஆதரவளர்கள் குழு ஒன்று சென்று, உயைனாவில் இமாம் அவர்கள் ஏற்படுத்திய ஏகத்துவ எழுச்சியை எடுத்துரைத்து, நமது பகுதியில் இவர் பிரச்சாரம் செய்தால் இறைவனின் உதவி கொண்டு சீர்திருத்தம் ஏற்படலாம். எனவே இமாமுக்கு நீங்கள் அடைக்கலம் கொடுத்து ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர். முஹம்மது இப்னு சவூத் அவர்களும் இந்த பணியின் அவசியத்தை உணர்ந்திருந்ததால் இமாமுடைய ஆதரவா ளர்களின் கோரிக்கையை ஏற்று, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களை நேரடியாக அழைத்துப் பேசி இருவரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.  முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் மன்னரிடம், நான் கொண்டு வந்திருக்கிற இந்த கொள்கையை சரியான முறையில் பிரச்சாரம் செய்ய நீங்கள் உதவி செய்யுங்கள். அல்லாஹ் உங்களுடைய ஆட்சியை உறுதிப்படுத்துவான், உங்களுக்கு  வெற்றியைத் தருவான், உங்களுடைய ஆட்சியை அல்லாஹ் விரிவாக்கி தருவான், உங்களை கண்ணியப்படுத்துவான் என்றார்கள். 


                                மன்னரும் அதற்கு சரி நான் உங்களுடைய பணிகளுக்கு தோள் கொடுக்கிறேன். நான் உங்களோடு இருக்கிறேன், உங்களுக்கு முழு உதவியும் செய்கிறேன். ஆனால் அல்லாஹ் ஏகத்துவ மாற்றத்தை இந்த பகுதியில் உருவாக்கி நீங்கள் பெரிய அந்தஸ்த்தை அடைந்தால் இந்த ஊரை விட்டும் செல்லக்கூடாது. இதற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும் என்று நிபந்தனையிட்டார். இமாமவர்களும் அதனை ஏற்றுக் கொண்டார்கள்.


                                                                         இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு மன்னர் இமாமவர்களை அரசாங்க பிரதிநிதியாக்கி தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இஸ்லாமிய பிராச்சரத்தை முழுவீச்சில் செய்ய  அனுமதி கொடு த்து முழு ஒத்துழைப்பையும் பூரண சுதந்திரத்தையும் வழங்கினார். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், நான்கு கலீஃபாக்கள் ஆட்சிக்காலத்திலும் எவ்வாறு ஆன்மீக தலைமையும் அரசியல் தலைமையும் ஒன்றாக இருந்து இணைந்து செயல்பட்டதோ அதே சூழல் மறுபடியும் ஏற்பட் டது. ஆன்மீக தலைமையும் அரசியல் தலைமையும் ஒன்றிணைந்ததால் இமாமவர்களின் பிரச்சாரம் சூடுபிடித்து முழு வீச்சில் நடக்கிறது. முஹம்மது இப்னு சவூத் அவர்களின் ஆட்சியும் விரிவடைந்து கொண்டே சென்றது. மன்னர் சவூத் மக்கா, மதீனா மற்றும் சிதறிக்கிடந்த மற்ற சிற்றரசுகளையும் கைப்பற்றி இன்றைய சவூதி நிலப்பரப்பைக் கடந்து ஈராக் வரை வெற்றி பெற்றுக்கொண்டே செல்கிறார். இமாமவர்களும் மன்னருக்கு ஈடு கொடுத்து, அழைப்புப் பணி மட்டும் செய்யாமல் மன்னரின் சிறந்த போர்ப்படை தளபதியாகவும் இருந்தார்கள். படைவீரர்களுக்கு பயிற்சியளிப்பது, வெற்றி பெற்ற பகுதிகளில் கவர்னர்களை நியமிப்பது, மக்களை எகத்துவ கொள்கை யின் மூலம் ஒரே குடையின் கீழ் ஒன்று படுத்துவது, ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்குமிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி இஸ்லாமிய ஆட்சியை பலப்படுத்துவது என்று பம்பரமாக சுழன்று முழு அரேபியாவிலும் இஸ்லா மிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.


                                                   இதனைக் கண்ட அன்றைய வல்லரசுகளான பிரித்தானியா மற்றும் பிரெஞ்சு ஆட்சியாளர்கள், கஃலீபாக்கள் காலத்திய தூய இஸ்லாமிய அரசியல் முறைப்படி நடக்கின்ற ஆட்சியை பரவவிட்டால் நமக்குதான் முதல் ஆபத்து என்பதை உணர்ந்து, பிரான்ஸின் மறைமுக அடிமையாக கிடந்த உஸ்மானிய சம்ராஜ்ஜியத்தின் 2 வது சுல்தானிடம், முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் பிராச்சரத்தையும் அதற்கு துணைபுரிகின்ற ஆட்சியாளர்களையும்   இப்படியே  விட்டு வைத்தீர்கள் என்றால்  உஸ்மானிய சாம்ராஜ்ஜியம் அவர்களால் வீழ்த்தப்படும், துருக் கியை வஹ்ஹாபிகள் கைப்பற்றி விடுவார்கள். அதனால் நீங்கள் முந்திக் கொண்டு சவூதியை கைப்பற்றுங்கள் என்று கட்டளையிட்டார்கள்.  துருக்கிய ஆட்சியாளரும் அதனை வேதவாக்காக ஏற்றுக்கொண்டு சவூதியின் மீது படையெடுத்தார். சவூதியில் நடந்த பல போர்களுக்கு பிறகு ஹிஜ்ரி 1240ல் இமாமவர்கள் உருவாக்கி வைத்திருந்த இஸ்லாமிய அரசமைப்பு முற்றாக அழிக்கப்பட்டது. ஆனால் இமாமவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஏகத்துவ புரட்சியை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பின்னாட்களில் வாளால் சாதிக்கமுடியாததை இந்த கொள்கை சாதித்தது. ஆம், சூஃபிஸ கொள்கை கொண்ட துருக்கியர்கள் தோற்கடிக்கப்பட்டு விரட்டிய டிக்கப்பட்டனர்.


                                                     இமாமவர்களை பெருங்கூட்டம் ஒன்று எவ்வாறு ஆதரித்ததோ அவ்வாறே பெருங்கூட்டம் ஒன்று அவர்களை எதிர்க்கவும் செய்தது. இதை இமாமவர்கள் வாழ்ந்த சமகாலத்தின் வரலாற்றுப் புத்தக ங்களை படித்தால் இன்னும் உங்களுக்கு தெளிவாக விளங்கும்.  அவர்கள் காலத்து இஸ்லாமிய சமூகம் ஷிர்க்கிலும் மூடநம்பி க்கையிலும் மூழ்கி போய் இருந்தது. சவூதியில் மாத்திரமல்ல முழு இஸ்லாமிய உலகமும் இதே நிலையில்தான் இருந்தது.  அரபு நாடுகளை ஆய்வு செய்த மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய அறிஞர்கள்  அனைவரும் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தை மிக மிக மோசமான கால கட்டம் என்றே குறிப்பிடுகி ன்றனர். அந்தளவுக்கு முஸ்லிம்கள் மாற்றுக் கலாச்சாரத்தை பின்பற்றி வாழ்ந்திருக்கிறார்கள்.


சமகாலத்தில் வாழ்ந்த மாற்று மத அறிஞர் ஒருவர்  - ‘சூஃபிசத்தை பின்பற்றிய உஸ்மானிய சாம்ராஜ்யம் மட்டும் இடையூறு செய்யாமல் இருந்திருந்தால், இமாமவர்கள் விட்டுச்சென்ற புரட்சிகர சமூகப் பணி தொடர்ந்து சீராக நடந்து இன்று அசைக்க முடியாத பெரிய வல்லரசாக இஸ்லாமிய சமூகத்தின் கட்டமைப்பு இருந்திருக்கும்’  என்று எழுதுகிறார். துருக்கியரினால் பின்பற்றப்பட்ட சூபிஸிச இஸ்லாம் கோட்பாடு கடவுளை, இருத்தல்வாத கண்கொண்டு நோக்கியது அந்த சூபிஸ கோட்பாடானது என்னைப்பொறுத்தவரிஅ என்னை கவர்ந்த ஓருர் கோட்பாடு, ஆனால் இமாம அவர்கள் ஏற்படுத்திய ஏகத்துவ கோட்பாடான வஹாபிஸ்சத்துக்கு எதிராக இருக்கின்றது. வஹாபிசம் அல்லாஹாக ஒருவனே ஏக கடவுள் என்பதையும், அதை பின்பற்றும் ஒரு இஸ்லாம் அரசு உருவாகவேண்டும் அதற்கு தற்போதுள்ள சவுதி அரசு வாய்ப்பற்றது என கருதி இஸ்லாமிய தனி அரசை உருவாக்க வஹாபிஸம் தூண்டுவதினால் இந்த வஹாபிஸமும்  வஹாபிஸ் கொட்பாடுகளை கடைப்பிடிகும், தெவ்ஹித்கள் மீண்டும் இஸ்லாமிய ஆட்சியை இமாம் காடிய வழியில் நிறுவ முற்படுகின்றனர் தவறு என்னவென்றால் அதனை கிறிஸ்தவ அமெரிக்க எதிர்ப்புணர்வாக மக்களிடையே பரப்பி இஸ்லாமியத்தில் அடிப்படைவாதத்தி தீவிரமாக்கி பின்னர் பயங்க சேயல் மூலமாக இஸ்லாம் அரசையும் இஸ்லாமியத்தை பரப்ப நினைப்பதே இந்த வஹாஆபிஸம் என்று தம்மை அழைத்துக்கொள்பவர்கள் செய்யும் செயலாகும் எனவே இஸ்லாம் ம்று சீர்திருத்தம் செய்யவேண்டிய அவசியம் அதற்கு உண்டு, அந்த அந்த நாட்டின் அரசியல் க்லாச்சாரங்களுக்கு ஈடு கொடுத்து தனது தனித்துவத்தை விட்டு கொடுத்து இஸ்லாம் இயங்க வேண்டும் அதைத்தான் இலன்கையில் உள்ள அனைவரும் எதிர்பார்க்கின்றனர் 

                                                        அன்புடன் பேசாலைதாஸ்

Hisbullah

2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் ஊரைவிட்டு சஹ்ரான் ஓடிவிட்டார். அதன் பின்னர்தான் சஹ்ரான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து தீவிரவாதியானார் என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.</p><p>தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,</p><p>நாங்கள் பதவிகளிலிருந்து விலகினோம், ஆனால் பதவிகளில் இருந்து விலக்கப்பட்டோம் என்றே சொல்ல வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் பதவிகளில் இருந்து விலகும் எண்ணம் எங்களுக்கு இருக்கவில்லை.</p><p>எனினும் அடுத்த நாள் காலையில் இருந்து இடம்பெற்ற சம்பவங்கள் எங்களை பதவி விலக வைத்தது. இன்றைய நிலைமையில் இதனை செய்யாவிடின் பாரிய விளைவை நாங்கள் எதிர்நோக்க நேரிடும் என முஸ்லிம் தலைவர்களுடன் கலந்துரையாடும்போது நாங்கள் தீர்மானித்தோம்.</p><p>ஞானசார தேரரை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்தும் நாங்கள் இராஜினாமா செய்த அன்று கண்டியில் வைத்து எங்களது சமூகத்தை அழிப்பேன் ஒவ்வொரு வீட்டையும் மரண வீடாக்குவேன் என அவர் கூறி செயற்பட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அவரை கைது செய்வதற்கான எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.</p><p>மேலும், அன்றையதினம் எங்களது சமூகம் இருக்கின்ற கிராமங்களுக்கு, எங்களது மக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படவில்லை.</p><p>இந்நிலையில் எங்களால் எமது சமூகம் அழிந்து விடக்கூடாது, குறிப்பாக என்னால் எனது சமூகத்திற்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக கூட்டாக சேர்ந்து முடிவெடுத்து எங்களது பதவிகளைத் துறந்தோம்.</p><p>நாங்கள் இராஜினாமா செய்வதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து நிலைமைகளை தெளிவுப்படுத்தினேன். எனினும் நான் உங்களை பதவியில் இருந்த விலக்க மாட்டேன் நீங்கள் வேண்டுமானால் இராஜினாமா செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்.</p><p>மேலும், நாளைய தினம் நீங்கள் இராஜினாமா செய்யாவிட்டாலும் பாரிய விளைவுகள் ஏற்படும் எனவும் ஜனாதிபதி என்னிடம் தெரிவித்திருந்தார்.</p><p>பாதுகாப்பு விடயங்களில் ஜனாதிபதியின் நடவடிக்கைகள் எங்களுக்கு திருப்திகரமானதாக இல்லை. உண்மையில் அந்த இக்கட்டான சூழலில் எங்களை பதவி விலக விடாமல் எவ்வாறு சூழ்நிலையை சமாளிக்கலாம். கலவரங்களை கட்டுப்படுத்தலாம் என சிந்தித்து அதனை ஜனாதிபதி முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்ய தவறிவிட்டார்.ஆளுநராக பதவி வகிக்கும்போது என்னால் பேச முடியாமல் போய்விட்டது. எனக்கு எதிராக நிறைய முறைப்பாடுகள் வந்தன. இவ்வாறான முறைப்பாடுகள் வரும்போது நான் ஒரு ஆளுநர் என்ற அடிப்படையில் பதில் அளிக்க முடியாத சூழல் எனக்கு இருந்தது. இப்போது பதவி இல்லை. மிகவும் சந்தோசமாக இருக்கின்றேன்.</p><p>இஸ்லாத்தில் வஹாபிசம் என்பது அடிப்படைவாதம் அல்ல. அது ஒரு பிழையான கருத்து. இஸ்லாத்தில் அடிப்படைவாதமும் கிடையாது.</p><p>அதேபோல தௌஹீத் என்பது ஒரு மார்க்கம். கட்டாயம் தௌஹீத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும். அல்லாஹ் ஒருவன் மாத்திரமே என்பதுதான் தௌஹீத். அது ஒரு கொள்கை. குண்டு வைப்பது தௌஹீத் அல்ல. யாராவது ஒருவர் தௌஹீத்தை மறுத்தால் அவர் முஸ்லிம் அல்ல.</p><p>தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினை சஹ்ரான்தான் உருவாக்கினார். எனினும் தற்போது அந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டிற்கு பிறகு சஹ்ரான் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பில் இருந்து வெளியேறி சென்றுவிட்டார்.</p><p>எனக்கு தெரிந்தவரையில் 2017ஆம் ஆண்டின் பின்னர் அந்த அமைப்பில் சஹ்ரான் இல்லை. வெளியில் சென்று அவர் சிலரை சேர்த்துக்கொண்டு தனியான குழுவொன்றை அமைத்து அதன் ஊடாகவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.</p><p>சஹ்ரான் ஆரம்பத்தில் இருந்தே பிரச்சினை செய்து கொண்டுதான் இருந்தார். உண்மையில் அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. 2017ஆம் ஆண்டு வரையில் மார்க்கத்தில் கடுமையான தீவிரமாக சஹ்ரான் செயற்பட்டார்.</p><p>எதாவது குழபத்தை சஹ்ரான் உண்டுபன்னிக்கொண்டே இருந்தார். மாதத்திற்கு ஒன்றை சொல்லுவார். 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் ஊரைவிட்டு சஹ்ரான் ஓடிவிட்டார்.</p><p>அதன் பின்னர்தான் சஹ்ரான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து தீவிரவாதியானார்.</p><p>பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என அப்பாவி பொதுமக்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறையில் பல கொடுமைகள் நடத்தப்படுகின்றன.</p><p>கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் ஒரு லட்சம் தா, ஐம்பதாயிரம் ரூபா தா என பணம் கேட்டு தொல்லை செய்கின்றனர். இல்லாவிட்டால் அடிப்போம் என கூறுகின்றனர். எனக்கு இது தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்

Saturday 8 June 2019

உலகில் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6809 இதன் விபரம்.

உலகில் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6809 இதன் விபரம்.


1)700 க்கு குறைவான மொழிகள் மட்டுமே பேசவும் எழுதவும் முடிவும்
2)சொந்த வரி வடிவம் கொண்ட மொழிகள் 100
3)எல்லாவற்றிக்கும் மூல மொழியாக விளங்குபவை 6
4)கிரேக்கம், ஆரேபியம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு பேச்சு வழக்கு கிடையாது
5) பல மொழிகளுக்கு  தாய்மொழியாக விளங்குவது தமிழ்மொழி மட்டுமே
 
   மொழிகளின் தன்மை

1)தொண்மை 2) முன்மை 3) உண்மை 4)ஒண்மை 5) இளமை 6)வளமை 7)தாய்மை 8)தூய்மை 9)செம்மை 10)முன்மை 11) இனிமை 12) தனிமை 13) நுண்மை  14)திருமை 15) இயன்மை 
16) வியன்மை      இந்த 16 சிறப்பியியல் புகழொடு தனித்திருக்கும் ஒரே மொழி தமிழ் மட்டுமே!
   
    உலக நாடுகளின் கல்வி அமைப்பு (யுனெஸ்கோ) தமிழ், கிரேக்கம், இலத்தீன், சீனம், சமஸ்கிருதம், எபிரேயம் ஆகிய ஆறு மொழிகளை மட்டுமே செம்மொழியாக தேர்வு செய்துள்ளது.
1)தொன்மை 2) தாய்மை 3)தனித்தன்மை
4)நடுவுநிலைமை 5)பிறமொழி கலப்பின்றி தனித்தியங்கும் ஆற்றல் 
6)பண்பாடு கலை பட்டறிவு அதன் வெளிப்பாடு 7) இலக்கிய வளம் 
8) உயர் சிந்தனை 9) பொதுமைப் பண்பு
10) கலை இலக்கியத்தில் தனித்தன்மை
11) மொழிக் கோட்பாடு  ஆகிய பதினொரு கூறுகளே செம்மொழிக்குறிய தகுதிகளாகவும் வரையறை செய்யப்பட்டுள்ளது,  இந்த வகையில் இலத்தீன், கிரேக்கம், ஆகிய மொழிகளுக்கு 9 தகுதிப்பாடுகளும்,  சீன மொழிக்கு 8 தகுதிப்பாடுகளும்,  சமஸ்கிருதத்திற்கு 7 தகுதிப்பாடுகளும்,  எபிரேய மொழிக்கு 6 தகுதிப்பாடுகளும் உள்ளன.

 
     ஆனால் தமிழ் மொழிக்கு மட்டுமே 11 தகுதிப்பாடுகளும் உள்ளன என்று மொழியியல் ஆய்வாளர்கள் வறையறை செய்துள்ளனர். 

இப்படி பட்ட மொழியை இந்த நாட்டின் தேசிய மொழியாக கொண்டு வராமல், வந்தேறி ஆரிய பிராமணன் தடுத்து வருகிறான்,  இதை இந்த நாட்டின் பூர்வகுடி மக்கள் ஏன் என்று கேட்காமல், பிராமணனுக்கு அடிமையாக வாழ்வதே போதும் என்று இருக்கிறீர்களே....உலகின் பழமையானவர்கள் என்று பெருமை கொள்வதில் உங்களுக்கு உடன்பாடு இல்லையா?  என்று  உங்கள் மூத்த இனம் வருத்தம் தான் கொள்ள முடியும்!  ஆனால் அதை  உணர்ந்தால் உலகில் தலைநிமிர்ந்து நிற்க முடியும் ...நாம் அனைவரும் ....!
*நன்றி ரவி ராஜாளி

Wednesday 5 June 2019

ரிசாட் ஹிஸ்புல்ல ஆசாத் அலி இவர்கள் மீது விசாரனை நடத்தவேண்டும், பதவி விலகவேண்டும் என்று பிக்குமாரும் ஏனைய அரசியல்வாதிகளும் ஏன் கணைதொடுக்கின்றார்கள்?

ரிசாட் ஹிஸ்புல்ல ஆசாத் அலி இவர்கள் மீது விசாரனை நடத்தவேண்டும், பதவி விலக வேண்டும் என்று பிக்குமாரும் ஏனைய அரசியல் வாதிகளும் ஏன் கணைதொடுக்கின்றார்கள்?


                                                        ஈஸ்டர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, முஸ்லிம் பயங்கரவாதத்திற்கும் ரிசாட் ஹிஸ்புல்லா மற்றும் அலி இவர்கள் மீது விசாரனை நடத்தவேன்டும் இவர்கள் பதவிவிலகவேண்டும் என்று பிக்கு மாரும் அரசியல்வாதிகளும் போராட்டம் நடத்துகின்றார்கள், குறிப்பாக ரிசாட்டை கைதுசெய்யவேண் டும் என்று மீண்டும் போராட்டம் தொடங்க ப்பட்டுள்ளது. இதற்கான பின்னனி என்ன என்பதை சற்று அலசுவது தற் போது உள்ள சூழ் நிலைக்கு உகந்தது என நினைக்கின்றேன். உண்மை யில் மகிந்தா கருணா குழுவினரே இதற்கு மறை முகமாக உள்ளார்கள் என்பது தெளிவு, இது ஒரு அரசியல் பழிவாங்குதலுக்கு அப்பால் இன்னும் சற்று உற்று நோக்க வேண்டியுள்ளது

                                                    பத‌வி இழந்த ரிசாட்டை எடுத்துக்கொள்வோம், இவரது அரசியல் பரப்புரை (political lobbying) விமர்சனத்துக்கும் கண்டண த்துக்கும் உரியவை, இவர் கட்சி ஆரம்பித்தவுடன், முஸ்லிம் காங்கிரசை மிஞ்சிவிட வேண்டும் அல்லது வீழ்த்தவேண்டும் என்ற நோக்கிலும், தமிழ ர்களின் வாக்கு வங்கியில் தனக்கு கணிசமான அளவு பெறவேண்டும் என்பதற்காக வெறுப்பு அரசியலை முஸ்லிம் இளைஞர்களுக்கு இடை யில் வளர்த்துள்ளார், புலிகளின் முஸ்லிம் வெளியேற்றத்தை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு, கிழக் கிலே தமிழர் மீதான வெறுப்புண ர்வை இவர் வளர்த்தது தெளிவாக தெரிகின் றது, முஸ்லிம் மக்கள் வெளி யேற்றப்பட்டது வடக்கில் இருந்து, அதற்கு புலிகள் சொன்ன விளக்கம், கிழக்கிலே முஸ்லிம் ஆயுதக்குழுக்களும், ஜிஹாத் அமைப்பும் இராணு வத்துடன் இணைந்து கற்பழிப்பு கொலைகள் என்பனவற்றை நடத்திய தால், அதன் எதிர்விளைவு முஸ்லிம் மக்களுக்கு வட்க்கிலே ஆபத்தாக முடியும், அவ்வாறு நடந்தால், புலிகளின் நிர்வாகம் ஒழுங்கு என்பன சர்வ தேச அளவில் பேசப்படும் அது போராட்டத்துக்கு பின்னடவை கொடுக் கும் என்பதினால் அவர்களைன் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டா ர்கள் என புலிகள் தரப்பில் சொல்லப்பட்டது,

                                               

                                       ஹிஸ்புல்லாவினதும் ரிசாட்டினதும் இந்தவகை அரசியல் பரப்புரையே அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதம் பக்கம் தள்ளிவிட்டது என்பது எனது வாதம் ஆகின்றது. இலங்கை அரசியலில் முஸ்லிம் சமூகத்துக்கும் தமிழ் சமூகத்துக்கும் சிங்கள சமூகத்துக்கும் சேவைகள் செய்த முஸ்லிம் தலைவர்கள் உண்டு. டி,பி,ஜாயா, அஸ்ரப், அலாவி மெளலானா இப்படியான முஸ்லிம்தலைவர்கள் இருந்துள்ளார்கள், ஏன் ஹக்கீம் அவர்களும் கிட்டதட்ட ஐம்பது வருட அரசியலில் இருக்கின்றார், இவர்களின் காலத்தில், அராபி ஷேக்குகள், சவுதி மன்னர்கள் தமிழ் பகுதிக்கு வந்து முஸ்லிம் இனத்துக்கு மட்டும் தமிழ் பிரதேசங்களில் வீட்டுகள் கட்டி கொடுப்பதும், பாடசாலை கட்டிகொடுக்கும் திருவிழாக்களை ரிசாட் மட்டும் எப்படி பெற்றார்? தனது கைத்தொழில் அமைச்சை வைத்துக்கொண்டு, அமைச்சுக்கு புறம்பான தனது கைக்காரிய‌த்தை தனது சொந்த நலனுக்காக செய்துள்ளார், சர்வதேச அரசியல் உறவை, அரபு உலக உறவை தனக்கு மட்டும் சாதமாக்கிகொள்ளும் போது, கையாலாகத நல்லாட்சி அரசாங்கம் சும்மா பார்த்துக்கொண்டு இருக்கலாம், ஆனால் தேச பக்தி கொண்ட பிக்குகள் ஏனைய அரசியல்வாதிகள் சும்மா இருப்பர்களா?, வந்த சந்தர்ப்பத்தை அவர்கள் நழுவவிடவில்லை சாதிக்கின்றார்கள்! 

                                            அப்படியானல் முஸ்லிம்கள் குறிக்கப்பட்ட பணத்தை மட்டுமே தம்மோடு எடுத்து செல்ல புலிகள் அனுமதிக்கவேண்டும், என் றொரு கேள்வி எழுகின்றது, அந்த பணம் சொத்து எல்லாமே ஈழ மண் ணில் பெறப்பட்டது எனவே அது விடுதலைக்கே பாவிக்கவேண்டும் என்ற நோக்கம் இருந்திருக்கலாம், விடுதலைக்கு பின்னர் மீண்டும் முஸ்லிம் கள் திருப்பி அழைகப்படும் போது அது அவர்களின் புணர்வாழ்வுக்கு உதவியாக இருக்கும் என புலிகள் கருதி இருக்கலாம், ஆனாலும் ஒன்று மட்டும் உறுதி, தமிழர்கள் எனற வட்டத்தில், முஸ்லிம் மக்கள், தமிழர்க ளினாலும் புலிகளினாலும்  தமது இனம் என்றே கருதினார்கள். ஆனால் இதனை எல்லாம் பாழாக்கியவர் ரிசாடுக் ஹிஸ்புல்லாவுமே இதற்கு ஆதாரமாக அவர்களே பாராளமன்றத்தில், தேர்தல் மேடைகளில் பேசிய காணொளி நிறைய உண்டு.

                             ,,,,,,,இன்னும் தொடரும் அடுத்த மடலில்,, பேசாலைதாஸ்
                                       
   

ரிசாட் ஹிஸ்புல்ல ஆசாத் அலி இவர்கள் மீது விசாரனை நடத்தவேண்டும், பதவி விலக வேண்டும் என்று பிக்குமாரும் ஏனைய அரசியல் வாதிகளும் ஏன் கணைதொடுக்கின்றார்கள்?

                             

                                     சென்ற பதிவில் ரிசாட்டும் அரபு உலக தொடர்போடு விட்டுச்சென்றேன், மீண்டும் அதே புள்ளியில் தொடர்கின்றேன். மத்திஅ கிழக்கிற்கு கூலிவேலை செய்ய ஏழை இலங்கையர் ஐம்பது வருடங்களு க்கு மேலாக சென்றுவருகின்றார்கள், ஆனால் ஆபயாவையை அல்லது அரபு முஸ்லீம் உடைகளை அவர்கள் இங்கு கொண்டு வரவில்லை, அண்மைக்காலாமாகத்தான் அதுவும் பத்து வருடத்துக்குள்தான், இந்த அரபு கலாச்சார உடைகள் புகுந்துள்ளன, கூடவே சன்னி, ஸியா, வாஹா ப்பிஸம், தவ்ஹீத் போன்ற மாற்று இஸ்லாமிய கருத்துக்களும் இலங்கை க்குள் புகுந்தன , இது அரபு உலகத்தின் நேரடித்தாக்கம்! இதற்கு வழி சமைத்தவர் யார்? அண்மையில் விமல் வீரவம்ச பாராளமன்றத்தில் வாதிடும் போது, இலங்கை ஏன் ஆசிய கலாச்சரத்துக்கு ஒத்துவராத அரபு கலாசார உடை இலங்கக்கு தேவை இல்லை என்று வாதிட்டார், அது உண்மை தானே! எமது முஸ்லிம் சகோதரிகள் அரபு உலக ஆடை அணி யும் போது, சேலைகட்டிய எமது பெண்களை அரைகுறை ஆடைஅணியும் பெண்கள் என்ற எண்ணப்பாட்டை முஸ்லிம் சகோதர்ங்கள் எண்ண தலைப்படுகின்றார்கள், அதன் வழியாக  தமிழ் சிங்க பெண்களை தமது பாலியல் நடவடிக்கைகளுக்கு உள்ளாகுக்கின்றார்கள், இந்த முறைப் பாடு பரவலாக முன்வைக்கப்படுகின்றது, அதுவும் இல்லாமல் எமது பெண்களை தவறான வழிக்கு இட்டு செல்கின்றார்கள் உதாரணத்துக்கு சஹிரான் செய்தது நல்லதோர் உதாரணம்! தமிழ் ஆண்கள் முஸ்லிம் பெண்களை தவறான வழிநடத்தலுக்கு இட்டு சென்றதாக ஆதாரம் இல்லை.

                                                               இன்னுமோர் சர்ச்சைக்குறிய விடயத்துகு வருகின்றேன். இலங்கையில் இரண்டு மொழிக்கே இடமுண்டு அதுதான் அரசியல் சாசன சட்டம் ,இது இவ்வாறு இருக்க, முஸ்லிம் தனித்துவம் என்று சொல்லி, அரபு மொழியை இலங்கைக்குள் திணிப்பது எவ்வகை யில் நியாயம்? இது சிங்கள பெளத்த சிங்கள மொழி காவலர்க ளான பிக்குமாரை சினம் கொள்ளவைக்கும் என்பது நியாயம் தானே! இறையி யல் அடிப்படையில்  சற்று நோக்குவோம் அல்லாவுக்ல்கு அரபு மொழி மட்டுமா விளங்கும்? தமிழில் ஓதினால் புரியாதோ! ஓதுதல் என்ற தூய தமிழ் இருக்க துவா ச்ன்று ஏன் அரபு மொழியை திணிக்கின்றீர்கள்? எங்கள் தெருக்களுக்கு ஏன் அரபு பெயர்ப்பலகைகள்? இது எல்லாம் இஸ்லாமிய த்னித்துவம் என்று சொல்லவருகின்றார்களா? அனைத்து மதங்களையும் மதிக்கவேண்டுமுண்மைதான் ஆனால் மற்ற மொழி க்கோ கலச்சாரத்துக்கோ இடையூறாக அமையக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டும், இலங்கை மக்களின் வாழ்வாதாரத்துடன் இணைந்தே முஸ்லிம்களின் வாழ்கை முறை இருக்கவேண்டும், இலங்கை முஸ்லிம்களுக்கு என்று தூய வழியை இலங்கை முஸ்லிம்கள் கைக்கொள்ளவேண்டும்,  அப்படித்தான் அவர்கள் இருந்தார்கள் கடந்த இருபது வருடத்துக்குள் அரபு வாசனை, அரபு ஆப்யாகாள், கியாப்புகள், சேலையும் சரமுமாக திரிந்த முஸ்லிம் சகோதர்ங்களுக்குள் இத்தனை மாற்றம் அவசியம்தானா?

                                                     எனக்கு நினைவு தெரிந்த காலத்தில், எங்கள் ஆலையங்களில் லத்தின் மொழியில்தான் ஆராதனைகள் நடக்கும், 1964 பின்னர் அவரவர் சொந்த மொழியில் ஆண்டவனை தொடர்பு கொள்ள லாம் என்ற எண்ணப்பாடு தோற்றுவிக்கப்பட்டபோது, தமிழ் எல்லா ஆரதனைகளும் தொடங்கப்பட்டது, கிறிஸ்தவர்கள் இயேசு பேசிய அராமி மொழியை,ஹீப்புறு மொழியை, உரோமருக்கு சொந்தமான லத்தின் மொழியை தூக்கி நிறுத்தவில்லை, தமிழிழால் துதிபாடி இறைவனை தொழுகின்றொம் ஓதுகின்றோம்1 இறைவனை த்ழுதாலும் தமிழாலே தொழுதுகொள்வோம், ஆனால் முஸ்லிம்களுக்கு தமிழ் பற் றும் இல்லை எதுவுமே இல்லை, ஆனால் நாம் தமிழர் என்று உரிமை மட்டும் கொண்டாட முன்வருகின்றார்கள் இது என்ன நியாயம்?
,,,,,,,இன்னும் தொடரும் அடுத்த மடலில்,, பேசாலைதாஸ்


ரிசாட் ஹிஸ்புல்ல ஆசாத் அலி இவர்கள் மீது விசாரனை நடத்தவேண்டும், பதவி விலக வேண்டும் என்று பிக்குமாரும் ஏனைய அரசியல் வாதிகளும் ஏன் கணைதொடுக்கின்றார்கள்?

                                                                             சென்ற பதிவிலே சிங்களவர்களுக்கு வெறுப்பூட்டும் அரபு மொழி பிர்யோகம் பற்றி சிலாகித்து வருகின்றேன். முஸ்லிம்கள் அல்குரானை அரபு மொழியில் விளங்கிக்கொள்ள வேண் டும், அரபு மொழியில் துவா செய்வதும், அல்குரானை வாசிப்பதும் இஸ் லாத்தின் தனித்துவம் என தவறான ஒரு கண்ணோட்டத்தில் முஸ்லிம் மார்க்கம் வளர்க்கப்பட்டுள்ளதால், அரபு மொழி தவிர்ப்பை ஏற்றுக்கொ ள்வது முஸ்லிம் மக்களுக்கு கடினமான விடயமாகவே இருக் கப்போகி ன்றது, காத்தான்குடி ஒரு அரபு நாடாக காட்சி அளிக்கின்றது எங்கும் எதிலும் அரபு மொழி பலகைகள் இது சிங்கள மொழி பாதுகாவ லருக்கு எரிச்சல் ஊட்டும் என்பதில் நியாயம் இல்லாமல் இல்லை, தேசிய அந்த ந்து, அரச கரும மொழியாக்கப்பட்ட தமிழ் பிரயோகம் கூட சிங்கள கடும் போக்காளர்களுக்கு கோபத்தை ஊட்டுகின்றது. சிங்கள பெரும்பான் மையோடு அனுசரித்து போகாவிட்டால் அது இனச்சிக்கலையே வகுத் துவிடும், அனுகூல‌ அரசியலை கைக்கொண்டு, மந்திரி பதவிகள், ஆளு னர் பதவிகளை பெற்றுக்கொண்டு, சலுகைகள் சிறப்புடன் வாழ்ந்த முஸ்லிம் சமூகம் சிங்கள இனத்தோடு ஒத்து போகவேண்டும் என்றால்,  மதம் சார்ந்த சில விடயங்களில் விட்டுக்கொடுப்புகளை செய்தே ஆக வேண்டும் இதற்கு முஸ்லிம் மக்கள் தயாரா இருக்கின்றார்களா? முஸ்லிம் தீவிரவாதத்தில் குளிர் காயும் ரிசாட் ஹிஸ்புல்லா இதனை உணர்வார்களா?

                                                     மொழிபிரயோகத்தில் முஸ்லிம் மக்களுக்கு சிக்கல் இருப்பதுபோல ஆடையிலும் இப்போது சிக்கல் எழுந்துள்ளன, இதுதேவையற்ற ஒருவிடயமாக நாம் கருதவேண்டியுள்ளது, ஆபாயா, ஹியாப் போன்ற ஆடைகள் கடந்த இருபது வருடத்தில்தான் இலங்கை நாட்டில் அறிமுகமாக உள்ளது, இதற்கு முன்னர் இலங்கை முஸ்லிம் பெண்கள் சேலை அணிந்து முக்காடு போடுவார்கள், அரசியலில் முக்கிய இடம் பிடித்த அஸ்ராப் அவர்களின் பாரியார் கூட சேலை அணிந்து முக்காடு போட்டுத்தான், அரசியல் நடத்தியுள்ளார், ஆபாய, ஹியாப் முற்றிலும் அரபு கலாச்சாரத்தை பிரதிபலிப்பது, அதற்கும் இலங்கை ஆடை கலாச்சாரத்துக்கும் சற்றும் பொருத்த மில்லை,  ஆடையில் மட்டும் இஸ்லாம் தெரிவதில்லை, தற்போது இலங்கை அரசாங்கம் அரச உத்தியோகத்தர் அணியும் ஆடையில் கடும் சட்டத்தை புகுத்தியுள்ளது அதில் முஸ்லிம்களின் தனித்துவ்மான ஆடைக்கு தடை எழுந்துள்ளது, எனவே பிரச்சனையை சுமூகமாக தீர்க்கவேண்டுமானால் முஸ்லிம் பெண்கள் அவர்களது பாரம்பரியமான சேலை முக்காடு போன்ற ஆடைகளுக்கு வரவேற்பு கொடுக்கவேண்டும்

                                                  தமிழ் முஸ்லிம் பிரிவினைகளை பெரிதாக்கும் ஆவேசப்பேச்சுக்கள், மதம் சார்ந்த தீவிரமான பேச்சுக்கள் இஸ்லாம் இளைஞர்களை ஒரு இறுகிய மனோநிலைக்குள் வைத்திருக்கும் ஒரு விதமான் போக்கையே ரிசாட்டும் ஹிஸ்புல்லாவும் அவ்வப்போது பேசி வந்துள்ளார்கள், குறிப்பாக ரிசாட் அவர்கள் புலிகளை பயங்கரவாதி என்றும், முஸ்லிம்களின் விரோதியாகவும் சித்தரிப்பதோடு நிற்காமல், ஹாக்கிம் போன்ற முஸ்லிம் தலைவர்களை புலிகளோடு இணைந்து போகும் துரோகியாக ரிசாட் அவர்கள் கூறுவதும், இஸ்லாமியம் தீவிர வாத்துடன் இருக்கவேண்டும் என்பதில் அவர் குறியாக இருந்தார். அது போலவே ஹிஸ்புல்லா பிர்தேசவாதம் பேசிப் பேசி, கிழக்கு முஸ்லிம்க ளின் தாயகமாக‌, அங்கு ஒரு இஸ்லாமிய அதிகாரம், ஆட்சி வரவேண்டும் என்பதுதான் ஹிஸ்புல்லாவின் கனவாக இருந்தது.   தமிழர்களின் தாயக கோட்பாட்டை சிதைப்பதில் ஹிஸ்புல்லா மிக கவனமாக இருந்தார். ரிசாட் ஹிஸ்புல்லா இவர்களின் காணொளியே இதற்கு சாட்ச்சியமாக விளங்குகின்றது


 ,,,,,,,இன்னும் தொடரும் அடுத்த மடலில்,, பேசாலைதாஸ்

Tuesday 4 June 2019

முஸ்லிம் அரசியல்வாதிகளின் அரசியல் சாணக்கியமும் மார்க்கப்பற்றும் பேசாலைதாஸ்

முஸ்லிம் அரசியல்வாதிகளின் அரசியல் சாணக்கியமும் மார்க்கப்பற்றும் பேசாலைதாஸ்

                                                        அன்மையில் நடந்த உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பை முன்னிட்டு, ஏர்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில், முஸ்லிம் அரசியல்வாதிகள் மொத்தமாக பதவி துறந்து, அரசாங்கத்தின் ஸ்ரத்த ன்மைக்கும், பேர்னவாதிக்ளின் அச்சுருத்தலுக்கும் ஒன்றாக இணைந்து சவால் விட்டுள்ளனர். அரசாங்கத்தில் இணைந்த ரவூப் ஹக்கீம்,  ரிசாத் பதியுதின், கபீர் ஹஷீம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகிய அமைச்சர்களும், பைசல் ஹாசீம், எச்.எம்.எம்.ஹாரிஸ், அமீர் அலி, அலி சஹீர் மௌலானா ஆகிய இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சரான அப்துல்லா மஹரூப் ஆகியோர் நேற்று தங்கள் பதவிகளை இராஜினாமா செய்தனர். முதலில் இவர்களின் இந்த துணிகரமான செயலுக்கு பாரட்டுக்கள்! 

                                                       இவர்களின் அரசியல் நடவடிக்கையில் இருந்து தமிழ்  அரசியல்வாதிகள் நிறைய கற்றுக்கொள்ளவேண்டியுள்ளது,  சொற்ப பாராளமன்ற உறுபிணர்கள் இருந்தாலும், அவர்களை வைத்துக் கொண்டு அரசியல் பேரம்பேசி, அமைச்சு பதவிகளையும் ஆள்னர் பதவி களையும் பெற்றுக்கொண்டு தமது சமூகத்துக்கும், தமக்கும் நிறைய வசதி வாய்ப்புகள், பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொண்டு, வலிமை படத்த சமூகமாக உருவாகுகின்றார்கள். அதேவேளை தமது முஸ்லிம் மார்க்கத்துக்கு எதிராக அரசாஙகம், பேரினவாதிகள் போரில் குதிக்கும் போது ஒற்றுமையாக எதித்து போராடுகின்றார்கள்! வாழத் தெரிந்தவர்கள் என எடுத்துக்காடுகின்றார்கள்.

                                                             தமிழ் அரசியல்வாதிகள் எப்படி அரசியல் நடத்துகின்றார்கள்? அவர்களின் அரசியல் நடவடிக்கையில் அரசியல் சாணக்கியமோ, பேரம் பேசுதலோ எதுவும் இல்லை, த்த்தமது சின்ன சலுகையில் மட்டும் குறியாக இருக்கின்றார்கள். தமிழர்களுக்கு எத்த னியோ பிரச்சனைகள் உண்டு, காணி அபகரிப்பு, காணமல் ஆக்கப் பட்ட வர்கள்; போராளி குடும்பகளீன் அவலம், ஊணமுற்றவர்களின் வாழ்வா தாராம், விதைவகளின் எதிர்காலம், தமிழ் இளையோரின் வேலை இன்மை, வரட்சி, மீன்பிடியி வளங்கள் சுரண்டல், காடுகள் அளிப்பு, மணல் கொள்ளை, போதை வஸ்துகளின் வியாபாரம் இப்படி ஏராளமன பிரச்சனைகள் உண்டு, 

                                             அதில் ஏதாவது ஒன்றுக்கு உடனடி தீர்வு காணுங்கள் என காலகெடு கொடுத்து நிபந்தனை ஏது கொடுக்காமல், எப்பொழுதும் அரசங்கத்துக்கு வாக்கெடுப்புகளில் ஆதரவு தெரிவித்து தமது பலத்தையும் தமிழர்களின் பலத்தையும் ஒற்றுமையையும் அடகுவைத்து அதை சீரழிக்கின்றார்கள்! யாரும் தட்டிக்கேடால் தமிழ் தேசிய தீவுக்கு குந்தகம் விளைவிக்கும் என சாடுப்போக்கு சொல்கின்றார்கள்!. தமிழ் தேசிய தீர்வுக்கு ஜனநாயக ரீதிய்ல் தீர்வுகாண முடியாது, ஒறுமையாக எதிர்ப்பை காடும் அதேவேளை எமது பொருளாதார நலனிலும் அக்கறைகட்டி எதிர்வரும் காலங்களில் ஒற்றுமையாக செயல்பட்டு அமைச்சு பதவிகளை பொறுப்பெடுத்து அதன் அதிகாரத்தின் மூலமாக எமது பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும், ஆரோக்கியமான , ஸ்திரமான, பொருளதாரவளம் கொண்ட ஒரு சமூகமாக தமிழ் சமூகத்தை மாற்றவேண்டிய்து இவர்கள்து கடமையாகும், அதனையே எதிர்வரும் தேதல்களில் தமி ழ் சமூகம் எதிர்பார்த்து இருக்கின்றது உங்களால் அது முடியாவிட்டால் எங்களைப்போன்றவர்களுக்கு வழிவிடுங்கள்... அன்புடன் பேசாலைதாஸ்