Tuesday 4 June 2019

முஸ்லிம் அரசியல்வாதிகளின் அரசியல் சாணக்கியமும் மார்க்கப்பற்றும் பேசாலைதாஸ்

முஸ்லிம் அரசியல்வாதிகளின் அரசியல் சாணக்கியமும் மார்க்கப்பற்றும் பேசாலைதாஸ்

                                                        அன்மையில் நடந்த உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பை முன்னிட்டு, ஏர்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில், முஸ்லிம் அரசியல்வாதிகள் மொத்தமாக பதவி துறந்து, அரசாங்கத்தின் ஸ்ரத்த ன்மைக்கும், பேர்னவாதிக்ளின் அச்சுருத்தலுக்கும் ஒன்றாக இணைந்து சவால் விட்டுள்ளனர். அரசாங்கத்தில் இணைந்த ரவூப் ஹக்கீம்,  ரிசாத் பதியுதின், கபீர் ஹஷீம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகிய அமைச்சர்களும், பைசல் ஹாசீம், எச்.எம்.எம்.ஹாரிஸ், அமீர் அலி, அலி சஹீர் மௌலானா ஆகிய இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சரான அப்துல்லா மஹரூப் ஆகியோர் நேற்று தங்கள் பதவிகளை இராஜினாமா செய்தனர். முதலில் இவர்களின் இந்த துணிகரமான செயலுக்கு பாரட்டுக்கள்! 

                                                       இவர்களின் அரசியல் நடவடிக்கையில் இருந்து தமிழ்  அரசியல்வாதிகள் நிறைய கற்றுக்கொள்ளவேண்டியுள்ளது,  சொற்ப பாராளமன்ற உறுபிணர்கள் இருந்தாலும், அவர்களை வைத்துக் கொண்டு அரசியல் பேரம்பேசி, அமைச்சு பதவிகளையும் ஆள்னர் பதவி களையும் பெற்றுக்கொண்டு தமது சமூகத்துக்கும், தமக்கும் நிறைய வசதி வாய்ப்புகள், பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொண்டு, வலிமை படத்த சமூகமாக உருவாகுகின்றார்கள். அதேவேளை தமது முஸ்லிம் மார்க்கத்துக்கு எதிராக அரசாஙகம், பேரினவாதிகள் போரில் குதிக்கும் போது ஒற்றுமையாக எதித்து போராடுகின்றார்கள்! வாழத் தெரிந்தவர்கள் என எடுத்துக்காடுகின்றார்கள்.

                                                             தமிழ் அரசியல்வாதிகள் எப்படி அரசியல் நடத்துகின்றார்கள்? அவர்களின் அரசியல் நடவடிக்கையில் அரசியல் சாணக்கியமோ, பேரம் பேசுதலோ எதுவும் இல்லை, த்த்தமது சின்ன சலுகையில் மட்டும் குறியாக இருக்கின்றார்கள். தமிழர்களுக்கு எத்த னியோ பிரச்சனைகள் உண்டு, காணி அபகரிப்பு, காணமல் ஆக்கப் பட்ட வர்கள்; போராளி குடும்பகளீன் அவலம், ஊணமுற்றவர்களின் வாழ்வா தாராம், விதைவகளின் எதிர்காலம், தமிழ் இளையோரின் வேலை இன்மை, வரட்சி, மீன்பிடியி வளங்கள் சுரண்டல், காடுகள் அளிப்பு, மணல் கொள்ளை, போதை வஸ்துகளின் வியாபாரம் இப்படி ஏராளமன பிரச்சனைகள் உண்டு, 

                                             அதில் ஏதாவது ஒன்றுக்கு உடனடி தீர்வு காணுங்கள் என காலகெடு கொடுத்து நிபந்தனை ஏது கொடுக்காமல், எப்பொழுதும் அரசங்கத்துக்கு வாக்கெடுப்புகளில் ஆதரவு தெரிவித்து தமது பலத்தையும் தமிழர்களின் பலத்தையும் ஒற்றுமையையும் அடகுவைத்து அதை சீரழிக்கின்றார்கள்! யாரும் தட்டிக்கேடால் தமிழ் தேசிய தீவுக்கு குந்தகம் விளைவிக்கும் என சாடுப்போக்கு சொல்கின்றார்கள்!. தமிழ் தேசிய தீர்வுக்கு ஜனநாயக ரீதிய்ல் தீர்வுகாண முடியாது, ஒறுமையாக எதிர்ப்பை காடும் அதேவேளை எமது பொருளாதார நலனிலும் அக்கறைகட்டி எதிர்வரும் காலங்களில் ஒற்றுமையாக செயல்பட்டு அமைச்சு பதவிகளை பொறுப்பெடுத்து அதன் அதிகாரத்தின் மூலமாக எமது பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும், ஆரோக்கியமான , ஸ்திரமான, பொருளதாரவளம் கொண்ட ஒரு சமூகமாக தமிழ் சமூகத்தை மாற்றவேண்டிய்து இவர்கள்து கடமையாகும், அதனையே எதிர்வரும் தேதல்களில் தமி ழ் சமூகம் எதிர்பார்த்து இருக்கின்றது உங்களால் அது முடியாவிட்டால் எங்களைப்போன்றவர்களுக்கு வழிவிடுங்கள்... அன்புடன் பேசாலைதாஸ்

No comments:

Post a Comment