Wednesday 5 June 2019

ரிசாட் ஹிஸ்புல்ல ஆசாத் அலி இவர்கள் மீது விசாரனை நடத்தவேண்டும், பதவி விலகவேண்டும் என்று பிக்குமாரும் ஏனைய அரசியல்வாதிகளும் ஏன் கணைதொடுக்கின்றார்கள்?

ரிசாட் ஹிஸ்புல்ல ஆசாத் அலி இவர்கள் மீது விசாரனை நடத்தவேண்டும், பதவி விலக வேண்டும் என்று பிக்குமாரும் ஏனைய அரசியல் வாதிகளும் ஏன் கணைதொடுக்கின்றார்கள்?


                                                        ஈஸ்டர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, முஸ்லிம் பயங்கரவாதத்திற்கும் ரிசாட் ஹிஸ்புல்லா மற்றும் அலி இவர்கள் மீது விசாரனை நடத்தவேன்டும் இவர்கள் பதவிவிலகவேண்டும் என்று பிக்கு மாரும் அரசியல்வாதிகளும் போராட்டம் நடத்துகின்றார்கள், குறிப்பாக ரிசாட்டை கைதுசெய்யவேண் டும் என்று மீண்டும் போராட்டம் தொடங்க ப்பட்டுள்ளது. இதற்கான பின்னனி என்ன என்பதை சற்று அலசுவது தற் போது உள்ள சூழ் நிலைக்கு உகந்தது என நினைக்கின்றேன். உண்மை யில் மகிந்தா கருணா குழுவினரே இதற்கு மறை முகமாக உள்ளார்கள் என்பது தெளிவு, இது ஒரு அரசியல் பழிவாங்குதலுக்கு அப்பால் இன்னும் சற்று உற்று நோக்க வேண்டியுள்ளது

                                                    பத‌வி இழந்த ரிசாட்டை எடுத்துக்கொள்வோம், இவரது அரசியல் பரப்புரை (political lobbying) விமர்சனத்துக்கும் கண்டண த்துக்கும் உரியவை, இவர் கட்சி ஆரம்பித்தவுடன், முஸ்லிம் காங்கிரசை மிஞ்சிவிட வேண்டும் அல்லது வீழ்த்தவேண்டும் என்ற நோக்கிலும், தமிழ ர்களின் வாக்கு வங்கியில் தனக்கு கணிசமான அளவு பெறவேண்டும் என்பதற்காக வெறுப்பு அரசியலை முஸ்லிம் இளைஞர்களுக்கு இடை யில் வளர்த்துள்ளார், புலிகளின் முஸ்லிம் வெளியேற்றத்தை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு, கிழக் கிலே தமிழர் மீதான வெறுப்புண ர்வை இவர் வளர்த்தது தெளிவாக தெரிகின் றது, முஸ்லிம் மக்கள் வெளி யேற்றப்பட்டது வடக்கில் இருந்து, அதற்கு புலிகள் சொன்ன விளக்கம், கிழக்கிலே முஸ்லிம் ஆயுதக்குழுக்களும், ஜிஹாத் அமைப்பும் இராணு வத்துடன் இணைந்து கற்பழிப்பு கொலைகள் என்பனவற்றை நடத்திய தால், அதன் எதிர்விளைவு முஸ்லிம் மக்களுக்கு வட்க்கிலே ஆபத்தாக முடியும், அவ்வாறு நடந்தால், புலிகளின் நிர்வாகம் ஒழுங்கு என்பன சர்வ தேச அளவில் பேசப்படும் அது போராட்டத்துக்கு பின்னடவை கொடுக் கும் என்பதினால் அவர்களைன் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டா ர்கள் என புலிகள் தரப்பில் சொல்லப்பட்டது,

                                               

                                       ஹிஸ்புல்லாவினதும் ரிசாட்டினதும் இந்தவகை அரசியல் பரப்புரையே அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதம் பக்கம் தள்ளிவிட்டது என்பது எனது வாதம் ஆகின்றது. இலங்கை அரசியலில் முஸ்லிம் சமூகத்துக்கும் தமிழ் சமூகத்துக்கும் சிங்கள சமூகத்துக்கும் சேவைகள் செய்த முஸ்லிம் தலைவர்கள் உண்டு. டி,பி,ஜாயா, அஸ்ரப், அலாவி மெளலானா இப்படியான முஸ்லிம்தலைவர்கள் இருந்துள்ளார்கள், ஏன் ஹக்கீம் அவர்களும் கிட்டதட்ட ஐம்பது வருட அரசியலில் இருக்கின்றார், இவர்களின் காலத்தில், அராபி ஷேக்குகள், சவுதி மன்னர்கள் தமிழ் பகுதிக்கு வந்து முஸ்லிம் இனத்துக்கு மட்டும் தமிழ் பிரதேசங்களில் வீட்டுகள் கட்டி கொடுப்பதும், பாடசாலை கட்டிகொடுக்கும் திருவிழாக்களை ரிசாட் மட்டும் எப்படி பெற்றார்? தனது கைத்தொழில் அமைச்சை வைத்துக்கொண்டு, அமைச்சுக்கு புறம்பான தனது கைக்காரிய‌த்தை தனது சொந்த நலனுக்காக செய்துள்ளார், சர்வதேச அரசியல் உறவை, அரபு உலக உறவை தனக்கு மட்டும் சாதமாக்கிகொள்ளும் போது, கையாலாகத நல்லாட்சி அரசாங்கம் சும்மா பார்த்துக்கொண்டு இருக்கலாம், ஆனால் தேச பக்தி கொண்ட பிக்குகள் ஏனைய அரசியல்வாதிகள் சும்மா இருப்பர்களா?, வந்த சந்தர்ப்பத்தை அவர்கள் நழுவவிடவில்லை சாதிக்கின்றார்கள்! 

                                            அப்படியானல் முஸ்லிம்கள் குறிக்கப்பட்ட பணத்தை மட்டுமே தம்மோடு எடுத்து செல்ல புலிகள் அனுமதிக்கவேண்டும், என் றொரு கேள்வி எழுகின்றது, அந்த பணம் சொத்து எல்லாமே ஈழ மண் ணில் பெறப்பட்டது எனவே அது விடுதலைக்கே பாவிக்கவேண்டும் என்ற நோக்கம் இருந்திருக்கலாம், விடுதலைக்கு பின்னர் மீண்டும் முஸ்லிம் கள் திருப்பி அழைகப்படும் போது அது அவர்களின் புணர்வாழ்வுக்கு உதவியாக இருக்கும் என புலிகள் கருதி இருக்கலாம், ஆனாலும் ஒன்று மட்டும் உறுதி, தமிழர்கள் எனற வட்டத்தில், முஸ்லிம் மக்கள், தமிழர்க ளினாலும் புலிகளினாலும்  தமது இனம் என்றே கருதினார்கள். ஆனால் இதனை எல்லாம் பாழாக்கியவர் ரிசாடுக் ஹிஸ்புல்லாவுமே இதற்கு ஆதாரமாக அவர்களே பாராளமன்றத்தில், தேர்தல் மேடைகளில் பேசிய காணொளி நிறைய உண்டு.

                             ,,,,,,,இன்னும் தொடரும் அடுத்த மடலில்,, பேசாலைதாஸ்
                                       
   

ரிசாட் ஹிஸ்புல்ல ஆசாத் அலி இவர்கள் மீது விசாரனை நடத்தவேண்டும், பதவி விலக வேண்டும் என்று பிக்குமாரும் ஏனைய அரசியல் வாதிகளும் ஏன் கணைதொடுக்கின்றார்கள்?

                             

                                     சென்ற பதிவில் ரிசாட்டும் அரபு உலக தொடர்போடு விட்டுச்சென்றேன், மீண்டும் அதே புள்ளியில் தொடர்கின்றேன். மத்திஅ கிழக்கிற்கு கூலிவேலை செய்ய ஏழை இலங்கையர் ஐம்பது வருடங்களு க்கு மேலாக சென்றுவருகின்றார்கள், ஆனால் ஆபயாவையை அல்லது அரபு முஸ்லீம் உடைகளை அவர்கள் இங்கு கொண்டு வரவில்லை, அண்மைக்காலாமாகத்தான் அதுவும் பத்து வருடத்துக்குள்தான், இந்த அரபு கலாச்சார உடைகள் புகுந்துள்ளன, கூடவே சன்னி, ஸியா, வாஹா ப்பிஸம், தவ்ஹீத் போன்ற மாற்று இஸ்லாமிய கருத்துக்களும் இலங்கை க்குள் புகுந்தன , இது அரபு உலகத்தின் நேரடித்தாக்கம்! இதற்கு வழி சமைத்தவர் யார்? அண்மையில் விமல் வீரவம்ச பாராளமன்றத்தில் வாதிடும் போது, இலங்கை ஏன் ஆசிய கலாச்சரத்துக்கு ஒத்துவராத அரபு கலாசார உடை இலங்கக்கு தேவை இல்லை என்று வாதிட்டார், அது உண்மை தானே! எமது முஸ்லிம் சகோதரிகள் அரபு உலக ஆடை அணி யும் போது, சேலைகட்டிய எமது பெண்களை அரைகுறை ஆடைஅணியும் பெண்கள் என்ற எண்ணப்பாட்டை முஸ்லிம் சகோதர்ங்கள் எண்ண தலைப்படுகின்றார்கள், அதன் வழியாக  தமிழ் சிங்க பெண்களை தமது பாலியல் நடவடிக்கைகளுக்கு உள்ளாகுக்கின்றார்கள், இந்த முறைப் பாடு பரவலாக முன்வைக்கப்படுகின்றது, அதுவும் இல்லாமல் எமது பெண்களை தவறான வழிக்கு இட்டு செல்கின்றார்கள் உதாரணத்துக்கு சஹிரான் செய்தது நல்லதோர் உதாரணம்! தமிழ் ஆண்கள் முஸ்லிம் பெண்களை தவறான வழிநடத்தலுக்கு இட்டு சென்றதாக ஆதாரம் இல்லை.

                                                               இன்னுமோர் சர்ச்சைக்குறிய விடயத்துகு வருகின்றேன். இலங்கையில் இரண்டு மொழிக்கே இடமுண்டு அதுதான் அரசியல் சாசன சட்டம் ,இது இவ்வாறு இருக்க, முஸ்லிம் தனித்துவம் என்று சொல்லி, அரபு மொழியை இலங்கைக்குள் திணிப்பது எவ்வகை யில் நியாயம்? இது சிங்கள பெளத்த சிங்கள மொழி காவலர்க ளான பிக்குமாரை சினம் கொள்ளவைக்கும் என்பது நியாயம் தானே! இறையி யல் அடிப்படையில்  சற்று நோக்குவோம் அல்லாவுக்ல்கு அரபு மொழி மட்டுமா விளங்கும்? தமிழில் ஓதினால் புரியாதோ! ஓதுதல் என்ற தூய தமிழ் இருக்க துவா ச்ன்று ஏன் அரபு மொழியை திணிக்கின்றீர்கள்? எங்கள் தெருக்களுக்கு ஏன் அரபு பெயர்ப்பலகைகள்? இது எல்லாம் இஸ்லாமிய த்னித்துவம் என்று சொல்லவருகின்றார்களா? அனைத்து மதங்களையும் மதிக்கவேண்டுமுண்மைதான் ஆனால் மற்ற மொழி க்கோ கலச்சாரத்துக்கோ இடையூறாக அமையக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டும், இலங்கை மக்களின் வாழ்வாதாரத்துடன் இணைந்தே முஸ்லிம்களின் வாழ்கை முறை இருக்கவேண்டும், இலங்கை முஸ்லிம்களுக்கு என்று தூய வழியை இலங்கை முஸ்லிம்கள் கைக்கொள்ளவேண்டும்,  அப்படித்தான் அவர்கள் இருந்தார்கள் கடந்த இருபது வருடத்துக்குள் அரபு வாசனை, அரபு ஆப்யாகாள், கியாப்புகள், சேலையும் சரமுமாக திரிந்த முஸ்லிம் சகோதர்ங்களுக்குள் இத்தனை மாற்றம் அவசியம்தானா?

                                                     எனக்கு நினைவு தெரிந்த காலத்தில், எங்கள் ஆலையங்களில் லத்தின் மொழியில்தான் ஆராதனைகள் நடக்கும், 1964 பின்னர் அவரவர் சொந்த மொழியில் ஆண்டவனை தொடர்பு கொள்ள லாம் என்ற எண்ணப்பாடு தோற்றுவிக்கப்பட்டபோது, தமிழ் எல்லா ஆரதனைகளும் தொடங்கப்பட்டது, கிறிஸ்தவர்கள் இயேசு பேசிய அராமி மொழியை,ஹீப்புறு மொழியை, உரோமருக்கு சொந்தமான லத்தின் மொழியை தூக்கி நிறுத்தவில்லை, தமிழிழால் துதிபாடி இறைவனை தொழுகின்றொம் ஓதுகின்றோம்1 இறைவனை த்ழுதாலும் தமிழாலே தொழுதுகொள்வோம், ஆனால் முஸ்லிம்களுக்கு தமிழ் பற் றும் இல்லை எதுவுமே இல்லை, ஆனால் நாம் தமிழர் என்று உரிமை மட்டும் கொண்டாட முன்வருகின்றார்கள் இது என்ன நியாயம்?
,,,,,,,இன்னும் தொடரும் அடுத்த மடலில்,, பேசாலைதாஸ்


ரிசாட் ஹிஸ்புல்ல ஆசாத் அலி இவர்கள் மீது விசாரனை நடத்தவேண்டும், பதவி விலக வேண்டும் என்று பிக்குமாரும் ஏனைய அரசியல் வாதிகளும் ஏன் கணைதொடுக்கின்றார்கள்?

                                                                             சென்ற பதிவிலே சிங்களவர்களுக்கு வெறுப்பூட்டும் அரபு மொழி பிர்யோகம் பற்றி சிலாகித்து வருகின்றேன். முஸ்லிம்கள் அல்குரானை அரபு மொழியில் விளங்கிக்கொள்ள வேண் டும், அரபு மொழியில் துவா செய்வதும், அல்குரானை வாசிப்பதும் இஸ் லாத்தின் தனித்துவம் என தவறான ஒரு கண்ணோட்டத்தில் முஸ்லிம் மார்க்கம் வளர்க்கப்பட்டுள்ளதால், அரபு மொழி தவிர்ப்பை ஏற்றுக்கொ ள்வது முஸ்லிம் மக்களுக்கு கடினமான விடயமாகவே இருக் கப்போகி ன்றது, காத்தான்குடி ஒரு அரபு நாடாக காட்சி அளிக்கின்றது எங்கும் எதிலும் அரபு மொழி பலகைகள் இது சிங்கள மொழி பாதுகாவ லருக்கு எரிச்சல் ஊட்டும் என்பதில் நியாயம் இல்லாமல் இல்லை, தேசிய அந்த ந்து, அரச கரும மொழியாக்கப்பட்ட தமிழ் பிரயோகம் கூட சிங்கள கடும் போக்காளர்களுக்கு கோபத்தை ஊட்டுகின்றது. சிங்கள பெரும்பான் மையோடு அனுசரித்து போகாவிட்டால் அது இனச்சிக்கலையே வகுத் துவிடும், அனுகூல‌ அரசியலை கைக்கொண்டு, மந்திரி பதவிகள், ஆளு னர் பதவிகளை பெற்றுக்கொண்டு, சலுகைகள் சிறப்புடன் வாழ்ந்த முஸ்லிம் சமூகம் சிங்கள இனத்தோடு ஒத்து போகவேண்டும் என்றால்,  மதம் சார்ந்த சில விடயங்களில் விட்டுக்கொடுப்புகளை செய்தே ஆக வேண்டும் இதற்கு முஸ்லிம் மக்கள் தயாரா இருக்கின்றார்களா? முஸ்லிம் தீவிரவாதத்தில் குளிர் காயும் ரிசாட் ஹிஸ்புல்லா இதனை உணர்வார்களா?

                                                     மொழிபிரயோகத்தில் முஸ்லிம் மக்களுக்கு சிக்கல் இருப்பதுபோல ஆடையிலும் இப்போது சிக்கல் எழுந்துள்ளன, இதுதேவையற்ற ஒருவிடயமாக நாம் கருதவேண்டியுள்ளது, ஆபாயா, ஹியாப் போன்ற ஆடைகள் கடந்த இருபது வருடத்தில்தான் இலங்கை நாட்டில் அறிமுகமாக உள்ளது, இதற்கு முன்னர் இலங்கை முஸ்லிம் பெண்கள் சேலை அணிந்து முக்காடு போடுவார்கள், அரசியலில் முக்கிய இடம் பிடித்த அஸ்ராப் அவர்களின் பாரியார் கூட சேலை அணிந்து முக்காடு போட்டுத்தான், அரசியல் நடத்தியுள்ளார், ஆபாய, ஹியாப் முற்றிலும் அரபு கலாச்சாரத்தை பிரதிபலிப்பது, அதற்கும் இலங்கை ஆடை கலாச்சாரத்துக்கும் சற்றும் பொருத்த மில்லை,  ஆடையில் மட்டும் இஸ்லாம் தெரிவதில்லை, தற்போது இலங்கை அரசாங்கம் அரச உத்தியோகத்தர் அணியும் ஆடையில் கடும் சட்டத்தை புகுத்தியுள்ளது அதில் முஸ்லிம்களின் தனித்துவ்மான ஆடைக்கு தடை எழுந்துள்ளது, எனவே பிரச்சனையை சுமூகமாக தீர்க்கவேண்டுமானால் முஸ்லிம் பெண்கள் அவர்களது பாரம்பரியமான சேலை முக்காடு போன்ற ஆடைகளுக்கு வரவேற்பு கொடுக்கவேண்டும்

                                                  தமிழ் முஸ்லிம் பிரிவினைகளை பெரிதாக்கும் ஆவேசப்பேச்சுக்கள், மதம் சார்ந்த தீவிரமான பேச்சுக்கள் இஸ்லாம் இளைஞர்களை ஒரு இறுகிய மனோநிலைக்குள் வைத்திருக்கும் ஒரு விதமான் போக்கையே ரிசாட்டும் ஹிஸ்புல்லாவும் அவ்வப்போது பேசி வந்துள்ளார்கள், குறிப்பாக ரிசாட் அவர்கள் புலிகளை பயங்கரவாதி என்றும், முஸ்லிம்களின் விரோதியாகவும் சித்தரிப்பதோடு நிற்காமல், ஹாக்கிம் போன்ற முஸ்லிம் தலைவர்களை புலிகளோடு இணைந்து போகும் துரோகியாக ரிசாட் அவர்கள் கூறுவதும், இஸ்லாமியம் தீவிர வாத்துடன் இருக்கவேண்டும் என்பதில் அவர் குறியாக இருந்தார். அது போலவே ஹிஸ்புல்லா பிர்தேசவாதம் பேசிப் பேசி, கிழக்கு முஸ்லிம்க ளின் தாயகமாக‌, அங்கு ஒரு இஸ்லாமிய அதிகாரம், ஆட்சி வரவேண்டும் என்பதுதான் ஹிஸ்புல்லாவின் கனவாக இருந்தது.   தமிழர்களின் தாயக கோட்பாட்டை சிதைப்பதில் ஹிஸ்புல்லா மிக கவனமாக இருந்தார். ரிசாட் ஹிஸ்புல்லா இவர்களின் காணொளியே இதற்கு சாட்ச்சியமாக விளங்குகின்றது


 ,,,,,,,இன்னும் தொடரும் அடுத்த மடலில்,, பேசாலைதாஸ்

No comments:

Post a Comment