Friday, 13 August 2021

அப்புக்காத்து

                         அப்புக்காத்து

திரைப்படம், நாவல் இவைகளில் தோன்றும் தலைப்பு போல இருக்கின்றதா? இருக்கலாம், இதுவும் ஒரு கதைபோலவே நீட்சி கொள்கின்றது. நாவாந்துறை எனும் யாழ் குடா நாட்டு, மீன்பிடி கிராமத்தின் ஒரு ஏழை மீனவனின் எண்ணத்தில் கருவானதே இந்த அப்புக்காத்து என்ற கற்பனைப்பாத்திரம். இந்த கற்பனைப் பாத்திரம் அந்த ஏழை மீனவன் இசிதோரின் எண்ணத்தில் ஏன் உதயமாகவேண்டும்? அதற்கும் ஒரு வரலாற்று பின்னணி இருக்கவே இருக்கின்றது.

ஏழை மீனவன் இசிதோர் நிலாக்கால இரவுகளில் குருசடி தீவு என்ற மாட்டிறக்க தீவிலே தங்கி மீன்பிடிப்பது வழக்கம், அவரைப் போல பல மீனவர்கள் அந்த தீவிலே தங்கி இளைப்பாறி மீன்பிடி ப்பது வழக்கம், அந்த தீவிலே இசிதோர் எனும் அந்த மனிதன் ஒரு குருசை நட்டி, தன் அதிகமாக ஆசை கொண்ட அந்தோனியாருக் கென்று ஓலைகுடிசையால் கோவில் கட்டி, கும்பிட்டு வழிபட்டு வந்தார், பின்னளிலே முருகை கற்களினால் சிறு கோவில் கட்டி னார், வந்தது வினை!  

வேலனை கிராமசபைக்கு சொத்தமான இந்துத் தீவிலே ஒரு கிறிஸ்தவ ஆலையமா? விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது, ஏழை மீனவன் இசிதோர் விடுவதாய் இல்லை, யாழில் பெயர் பெற்ற இரத்தின சபாபதி, பொன்னம்பலம் போன்ற வக்கீல்மாரை கொண்டு வாதாடி நாவாந்துறைக்கு சொந்தமான தீவாக குருசடித்தீவை வெற்றி கொண்டார். அன்றில் இருந்து தனது கடைசி ஆண் செல்லக்குட்டி வக்கீலா வரவேண்டும் என்று ஆசைப்பட்டு, மொன்மொலின் ஜெராட் என்றவனை அப்புக்காத்து என்று செல்லமாக கற்பனையோடு அழைத்தார், அந்த கற்பனை உலக பெயர் பெற்ற லண்டன் பல்கழைக்கழகங்களில் ஒன்றான லண்டன் பல்கலைக்கழகத்தில், சட்ட இளம்மானி LLB(Hones) , பின்னர் சட்ட முதுமானி LLM யாக பரிணமித்தது. பெருமாபலன தமிழர்கள் சட்டக்கல்லூரிக்கு சென்று ஒரு சொலிஸிட்டராகாவோ சட்டத்தரணியாகவோ வருவார்கள் ஆனால் பல்கலைக்கழகம் சென்று சட்டத்தில் பட்டம் பெற்று வழக்கறிஞராவது குறைவு. நாவாந்துறை வரலாற்றில் சட்டத்தில் பட்டம் பெற்ற முதல் நபர் அப்புக்காத்து என்று அழைக்கப்படும் மொன்மொலின் ஆவார்.

இந்த அப்புக்காத்தை நான் என் கல்லூரிக்காலத்தில் இருந்து அறிவேன், வழக்கறிஞராகவேண்டும் என்ற அப்பாவின் கனவு ஒரு புறம் இருக்க இவனுக்குள் சமூக சேவை என்ற எண்ணப்புயல் சூழ்ந்து கொண்டது, குருவாக வர ஆசைப்பட்டு குருமடம் வந்தான், ஆனால் குருவாகவரவேண்டும் என்ற எண்ணத்தைவிட, தன் ஊரின் மீது இருந்த தீராக்காதல் அவனை துறவற வாழ்வில் இருந்து ஓரம்கட்டியது, அன்றில் இருந்து அவனுக்கு ஒரே ஊரின் உயர்ச்சி பற்றி எண்ணமே அவனுக்குள் இருந்தது. எப்பொழுது பார்த்தாலும் ஊரின் எண்ணமே அவனுக்குள். 

தமிழர்கள் புலம் பெயரும் காலக்கொடுமைக்குள் அகப்பட்ட அப்புக்காத்து காலக்கொடுமைக்குள் அள்ளுப்பட்டு நோர்வே பேர்கன் வந்தான். அங்கும் வந்தும் அவன் சும்ம இருக்கவில்லை, புலம் பெயர் தமிழர்கள் நலம்பெறவேண்டும் என்று அவாக்கொண்டு, பேர்கனில் தமிழ் மாணவர் அமைப்பிலே தீவிரமாக உழைத்தவர். துருவக்குரல் என்ற கையெழுத்து சுவடு களை பேர்கனிலே ஆரம்பித்தார், பின்னர் மாணவர் அமைப்பு சகல் தமிழர்களை உள் வாங்கவேண்டும் என்ற நோக்கில் பேர்கன் தமிழ் சங்கம் உருவாகவேண்டும் என்பதில் முன்னோடியாக செயல்பட்டான் அப்புக்காத்து.

 தமிழ் சங்கம் ம்க கம்பீரமாக செயல்படத்தொடங்கியது, ஐக்கிய நாடுகள் சபையில் துணிந்து, தமிழரின் பிரச்சனைகளை முதன் முதலாக ஓங்கி ஒலிக்கச்செய்த வைகுந்தவாசனை அழைத்து கெளரவித்து பாட்டியது பேர்கன் தமிழ் சங்கம், அப்படிப்பட்ட பேர்கன் தமிழ் சங்கம் இப்போதும் இருக்கின்றதா? சென்று கேட் கும் அளவுக்கு தமிழ் சங்கத்தின் இன்றைய பரிதாப நிலை, அது இருக்கட்டும் அப்புக்காத்து என்ற அலைக்கு மீண்டும் வருகின் றேன்.

தமிழ் சங்கத்தில் தீவிரமாக உழைத்த அப்புக்காத்துகுள் ஒரு எண்ணம் உதயமானது, புலம் பெயர் தமிழருக்கு ஒரு சங்கம் இருப்பதுபோல நாவாந்துறையில் இருந்து உலகமெல்லாம் புலம் பெயர்ந்தவர்களுக்கென ஒரு சங்கம் இருக்கவேண்டும் என்று எண்ணி, நாவாந்துறை சென் மேரிஸ்  சர்வதேச சங்கம் என்ற ஒரு அமைப்பு உருவாக முதன்மை காரணியாக இருந்தான், இந்த கால கட்டங்களில் சங்கம் ஊடாக அன்றி தன் சொந்த முயற்ச்சியால் பல திட்டங்களை முன்னெடுத்தான், நெருக்கமாக பிணைபட்டு வாழும் தன் உறவுகள் வசதியாக வாழவேண்டும் என்ற நோக்கிலே சூரியவெளியில் காணிகளை கைப்பற்றி இருதயபுரம் என்ற ஒரு குடியேற்றத்தை ஆரம்பித்தான். 

பின்னர் நாவாந்துறை கடற்கரை பகுதிகள் அழகுற அமையவேண் டும் என்று எண்ணி, பூங்கா, விளையாட்டு திடல், ஓய்வாக இருக்க அழகிய கடற்கரை, அதோடு கலாசாரமண்டபம் என்பன எல்லாம் அமையவேண்டும் என எண்ணி, அழகிய வரைபடம் ஒன்றை தீட்டி எனக்கு காண்பித்தான் அப்புக்காத்து, ஆண்டிகள் கூடி மடம் கட்டு வதுபோல் உன் எண் ணங்க இருக்கின்றது என்று நான் கிண்டல டிப்பேன், அதனால் அவனுக்கும் எனக்கும் சிற்சில கோபங்கள் ஊடலைபோல. ஆனால் தன் கொண்ட சிந்தையில் தீவிரமானன் அப்புக்காத்து, கடற்கரையில் காலாச்சார மண்டபம், கன்விலும் பிதற்ற தொடங்கினான், தன் கறப்னைக்கு உருக்கொடுக்கொடு க்க செயல்பட தொடங்கினான் அப்புக்காத்து, அதன் விளைவாக வாடிப்பிரச்சனை பூதாகரமாக செயல்பட்டு, கலாச்சர மண்டபம் வேண்டாம் என்ற நிலக்கு தள்ளப்பட்டு, இன்றுவரை அந்த கலாச் சார மண்டம் கற்பனையாகவே இருக்கின்றது, இதற்கான பின்ன ணிகளை அலச எடுத்தால் அதுவே ஒரு மகாபார்தம் போல ஆகி விடும் அதை இதோடு விடுகின்றேன் மீண்டும் அப்புக்காத்தின் செயல்பாடு பற்றி சிலாகிக்க ஆசைப்படுகின்றேன்,,,,,,

Tuesday, 6 July 2021

தேன் தமிழ் ஓசையின் பேர்கன் கணனி ஒலிபரப்பு Bergen Tamil Digital DAB Service

  தேன் தமிழ் ஓசையின் பேர்கன் கணனி ஒலிபரப்பு                              Bergen Tamil Digital DAB Service

வணக்கம் பேர்கன் வாழ் தமிழ்  உறவுகளே! தினமும் மாலை ஆறு மணி தொடக்கம் நள்ளிரவு வரை எமது தேன் தமிழ் ஒசை நிகழ்ச்சிகளை நீங்கள் கேட்டுமகிழலாம். நாள் முழுவதும் தமிழ் ஒலிபரப்பினை நீங்கள் கேட்க விரும்பினால் www.Theantamilosai.com என்ற இணையத்தளத்திலும், பேர்கனுக்கான பிரத்தியேக டிஜிடல் ஒலிபரப்பினை டாப் வானொலியில் தமிழ் ஸ்டேசன் வழியாக அல்லது www.Finradio.no இணையவழியாகவும் கேட்டு மகிழாலாம்.  நிகழ்ச்சிகளை நாம் விடியலின் ஓசையோடு ஆரம்பிப்போம்.


விடியலின் ஓசையை தொடர்ந்து ஒருபடப்பாடல் தொடர்கின்றது. மிரசல் என்ற திரைப்படத்தின் பாடல்கள் ஒருபடப்பாடலாக ஒலிக்கின்றது.

தேன் தமிழ் ஓசையின் செய்தி நேரம்

செய்தி நேரத்டிற்கு பின்னர்  அறிவிப்பாளரின் தனி விருப்பபாடல்கள்.

பேர்கன் செய்திகள்


இப்படியே மாறி மாறி நிகழ்ச்சிகள் வ்ரலாம்


Thursday, 17 June 2021

Hon Minister Douglas

 

      Mr, Lawrence Thevethas Peiris                                                                                                        Thean Tamil Osai Fm&Tv                                                                                                                                 Gamel Kjokkelvik Veien 46,                                                                                                                   Bergen 5172, Norway.                                                                                             Theentamil@hotmail.com.                                                                                                                      Mobil  0047 92278528


    Hon Minister  Douglas Devananda                                                                                                Ministry of Fisheries Department                                                                                                                  Sri lanka

என் பாசத்திற்கும் மதிப்புக்கும் உரிய கெளரவ அமைச்சர் தோழர் டக்ளஸ் அவர்களுக்கு! நான் தங்களை மூன்று வருடத்திற்கு முன்னர் கொழும்புக்கு வருகை தந்த பொழுது சந்தித்தேன். அப்பொழுது வன்னியில் ஸ்திரமான கட்சி அமைப்பை உருவாக்கி வேலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன். கடந்த பொது தேர்தலில் மன்னார் தொகுதியில் தீவிரமாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கில், தேன் தமிழ் ஓசை என்ற வானொலி தொலைகாட்சி ஊடகத்தை உருவாக்கி மன்னாரில் செயல்பட தொடங்கி னேன். துர்ரதிஸ்டவசமாக கொரோனா நிலைமையால் நோர்வே நாட்டில் இருந்து வரமுடியாது போனது, இருந்தும் எனது தமையன் செலவம் பீரிஸ் அவர்கள் ஊடாக தங்களை பேசாலை கிராம மக்களை சந்தித்தீர்கள். நன்றி, பேசாலை மக்கள் தங்களுக்கு வாக்களிக்கவில்லை, அந்த தவறை தற்போது உணர்கின்றார்கள், என்வே எமது மீனவ மக்களை மறந்துவிட வேண்டாம்.

அமைச்சர் அவர்களே! எனக்கு தனிப்பட்ட ஒரு உதவி தேவை, எனக்கு கொழும்பு தெஹிவலையில் பெரிய வீடு கார் பார்க் வசதிகளுடன் உண்டு. அதை நான் ஒரு முஸ்லிம் வியாபாரிக்கு வாடகைக்கு விட்டேன். பின்பு அந்த வீட்டை விலைக்கு வாங்கப்போவதாக சொன்னார். நானும் பணத்தை ரெடிபண்ணிவிட்டு எனக்கு சொன்னால், விற்பனை பத்திரம் ஒழுங்கு செய்யலாம் என்ச்சொன்னேன். பணம் ஒழுங்குபண்ணூவதாக சொல்லி கிட்டதட்ட நான்கு வருடங்களாகின்றன, அவரால் நான் கேட்ட இரண்டு கோடி ரூபா பணம் திரட்டமுடியாது போய்விட்டது. வாங்குகிறேன் என காலம் கடத்துகின்றார். நான்கு வருடமாக 60,000 ரூபா மாத வாடகையும் தரவில்லை, வீட்டை விட்டு எழும்பமாட்டேன் என அடம்பிடிக்கின்றான். முன்னாள் அமைச்சரைவைத்து என்னை வெருட்டினார். ஒன்றும் செய்யமுடியாதுள்ளது.

                                                 தாங்கள் அந்த வீட்டை விட்டு அந்த முஸ்லிம் நபரை விரட்டிவிட்டு, உங்கள் பாவனைக்கு வைத்துக்கொள்ளுங்கள், அல்லது விருப்பம் என்றால் அந்த வீட்டை நீங்களே வாங்கிக்கொள்ளுங்கள், வீடு உங்களிடம் இருந்தால் கொழும்புக்கு வரும் தோழர்கள் தங்கி செல்லமுடியும். தயவு செய்து எனக்கு இந்த விடயத்தில் உதவி செய்யவும், வாடகை agreement எல்லாம் நான்கு வருடங்களுக்கு முன்னரே காலவதியாகிவிட்டது, தெஹிவலை பொலிசை வைத்து என்னை பயமுறுத்துகின்றார். தயவு செய்து இந்த விடயத்தில் உதவி செய்து வீட்டை நீங்களே வைத்திருங்கள். உங்கள் பதிலை ஆவலோடு எதிர் பார்க்கின்றேன். 

                                        நன்றி                       அன்புடன் பேசாலைதாஸ்   நோர்வே

வாடகைக்கு இருக்கும் முஸ்லிம் நபர் Hussain Mohamed Gullam (Riyas)  National ID 701004264V,   Mobil  0094 777875922,   My House Address  32/3E  Hill House Garden, Off Malwatha Road, Dehiwala  



           

Sunday, 14 February 2021

பாலேந்திராவின் மேடைப் பக்கம் -1

 

பாலேந்திராவின் மேடைப் பக்கம் -1

ஒரு பொம்மையின் வீடு 1
நாடகர் பாலேந்திரா
லண்டன் அவைக்காற்றுக் கலைக்கழகம்

நாடகர் பாலேந்திரா ஈழத்தமிழ் மேடை நாடகங்களில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றி வருபவர். கிராமிய, பாடசாலை சூழலில்களிலிருந்து தமிழ் நாடகக் கலையை வெளியே இழுத்துவந்து நவீனப்படுத்தி உலகத்தர விமர்சகர்களின் பார்வைகளுக்குச் சமர்ப்பித்தவர். அவரும், அவரது மனைவி ஆனந்தராணியும், இப்போது மகளும்கூடவே, லண்டந் மாநக்ரில், நிர்வகிக்கும் அவைக்காற்றுக் கலைக் கழகம் எமது அடுத்தடுத்த தலைமுறைகளிடம் இம் மாண்புமிகு கலையை ஒப்புவித்து வருகிறது. அவரது கலை அனுபவங்களை அவ்வப்போது சமூக வலைத் தளங்களிலும், இதர வழிகளிலும் பதிந்து வருகிறார். மறுமொழி வாசகர்களுக்காக அவரது அனுமதியோடு இக் கட்டுரை பிரசுரமாகிறது.


இன்று இணையத்தில் இப்ஸனின்  “ஒரு பொம்மையின் வீடு” (A Doll’s House) நாடகம்.பார்க்கும் சந்தர்ப்பம் உண்டு . லண்டன் நேரம் மாலை 2.30 இல் இருந்து இன்று இரவு வரை YOUTUBE இல் பார்க்கலாம். இது குறித்து முன்னர் ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

லண்டன் LYRIC அரங்கில் இந்த நாடகத்தை கலைஞர்கள் சத்தியமூர்த்தி , சாம்சன்,  மனைவி ஆனந்தராணி ஆகியோருடன்  கடந்த வருடம்பார்த்தேன்.இதில் நோறா பாத்திரத்தில் சிங்கப்பூரில் பிறந்த ஒரு தமிழ் பெண் அஞ்சனா வாசன் சிறப்பாக நடித்துள்ளார். இப்படி நிகழ்வது  லண்டன் mainstream அரங்கில் நான் அறிந்த வரையில் முதல் தடவையாகும்.

நாடகம் எழுதப்பட்ட காலத்தில் (1879)  இந்தியாவிற்கு  நாடகக்  களம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது . பிரதி ஆக்கம்: TANIKA GUPTA. இந்த நாடகம்  லண்டனில் நிலவும் இன, நிற வாதம் பற்றியும் பூடகமாக பேசும். இப்படிப் பல Classic நாடகங்கள் புதிய விளக்கங்களுடன் மீள் மேடையேற்றம் காண்கின்றன.

ஒரு பொம்மையின் வீடு
ஒரு பொம்மையின் வீடு

இந்த வருடம் Nora என்ற பெயரில் Young Vic அரங்கில் இந்த நாடகத்தின் வேறொரு வடிவம் மேடையேறியது. அரங்கில் சென்று பார்க்க திட்டம் இருந்தும், தற்போழுது நிலவும் அசாதாரண நிலைமையால் எனக்கு பார்க்க முடியவில்லை. வேற்றுமொழி  நாடகங்கள் ஆங்கிலத்தில் எப்போதும் மேடையேறிக்கொண்டு தான் உள்ளது.

தமிழில் நான் இலங்கையில் இந்த மொழி பெயர்ப்பு முயற்சிகள் செய்த போது எதிர்த்தவர்களும் தற்போது மாறியுள்ளதாக உணர்கிறேன்.  



திரு பி. விக்னேஸ்வரன் அவர்களது மொழிபெயர்ப்பு நெறியாள்கையில் கடந்த ஆண்டு கனடா நாட்டில் மிகவும் வெற்றிகரமாக மனவெளி அரங்காற்றுக்குழுவினால் 19வது அரங்காடலில் மேடையேற்றப்படடது இந்த நாடகம், கடந்த வருடம் ,லண்டனிலும் அண்மையில் இலங்கையிலும் வீடியோ பதிவாக காட்டப் பட்டது. 

உலக நாடக வரலாற்றில் நவீன நாடகத்தின் முன்னோடி என்று கருதப் படும் நோர்வேஜிய நாடகாசிரியர் ஹென்றிக் இப்ஸன் அவர்கள் 1879 இல் எழுதிய நாடகம் இது. 

இன்றும் சமகாலத்தன்மையுடன் உலகின் பல பாகங்களிலும் பல மொழிகளிலும் மேடையேறி வரும் நாடகம். உலகில் பல நாடுகளில் நாடகத்துறை மாணவர்களுக்கு பாடப் புத்தகமாக விளங்கும் இந்த நாடகம் ஈழத்தமிழருக்கும் முக்கியமான நாடகமாக விளங்குகிறது. இப்போது இலங்கையிலும் நாடகத்துறை மாணவர்களுக்கு பாடபுத்தகமாக உள்ளது.

நானறிந்த வரையில் நான்கு ஈழத்தமிழர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.( யாழ் தேவன், குழந்தை ம. சண்முகலிங்கம் , கா. சிவபாலன் , பி. விக்னேஸ்வரன் )

அரை நூற்றாண்டுக்கு முன்னரே யாழ்நகரில் மேடையேறியுள்ளது. யாழ் இந்துக்கல்லூரியில் நான் பயின்ற போது எனக்கும் ஆசிரியராக இருந்த யாழ் தேவன் அவர்களால் அப்போதிருந்த அரசாங்க அதிபர் அவர்களின் உதவியுடன் அப்போது மேடையேற்றப்பட்டது. இலங்கையின் நிகழும் நவீன மொழிபெயர்ப்பு நாடக முயற்சிகளுக்கு ஒரு முன்னோடி நாடகம் இது என்று கூறலாம்.



இப்ஸனின் An Enemy of the people  நாடகத்தை தழுவி “சமூக விரோதி” என்ற தலைப்பில் 2014 இல் லண்டனில் மேடையேற்றினேன்.  இவ் வருடம் யாழ்ப்பாணம் சென்ற போது அதனை அங்கு தயாரிக்க வேண்டும் என்றும் அங்கு உள்ள நீர் மாசடையும் பிரச்சினைக்கு நேரடி தொடர்பாக இருக்கும் என்றும், ஒரு  திட்டம் இருந்தது. அது இனி கைகூடுமோ தெரியாது. சுமார் 140 வருடங்களுக்கு முன்னர் இப்சன் எழுதிய நாடகம் இப்பொழுது மிகவும் சமூக பெறுமதி வாய்ந்ததாக காணப் படுகிறது.

சமூகத்தை பாதிக்கும் நுண் கிருமி பற்றிய உண்மையை வெளிப்படையாக சொல்ல வந்த விஞ்ஞானி எப்படி அதிகாரத்தால் “சமூக விரோதி ” ஆக்கப் படுகிறார் என்பதைக் கூறும்  உன்னதமான நாடகம் இது.

தற்பொழுது நிலவும் கொரோனா நெருக்கடியில், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதாரமா? பொது நலமா? என்ற  கேள்வி எழும் போது, அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை அன்றாடம்  நாம் எல்லா நாடுகளிலும் காண்கிறோம். “சமூக விரோதி”  நாடகம் இப்போதைய சூழலில்  எந்த நாட்டிலும்  மிகப் பொருத்தமாக அமையும்.  

Friday, 5 February 2021

Kim Tong Un

 Kim Tong Un

கிம் ஜாங் உன் மக்களைக் கொடுமைப்படுத்துவார். பிடிக்காதவர்களைக் கொல்வார். அண்டை நாடுகளை அச்சுறுத்துவார். தற்கால உலகத்தில் மிகவும் அதிகமாகக் கேலி செய்யப்பட்ட ஒரு நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன். கடந்த ஏழு ஆண்டுகளாக வடகொரியாவை ஆட்சி செய்து வருகிறார். இன்றைக்கு வட கொரியாவின் அனைத்து அதிகாரங்களும் இவரிடம் இருக்கின்றன. அவர் நினைத்தால் யாருடைய ஒப்புதலும் இல்லாமல் அணு ஆயுதப் போரைத் தொடங்க முடியும். அவர் விரும்பினால் அண்டை நாடுகளுடன் உறவை முறித்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் உறவை புதுப்பித்துக் கொள்ளலாம். வடகொரியாவை அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் கிம் பரம்பரையின் வாரிசு அவர். உலகில் மிகக் குறைந்த வயதில் அதிகாரங்களைப் பெற்ற தலைவர்களில் இவர் முக்கியமானவர். வலிமையான தலைவர்கள் பட்டியலிலும் இவர் இடம்பெற்றிருக்கிறார். வடகொரியாவை நிறுவிய தலைவரான கிம் இல் சுங், கிம் ஜாங் உன்னின் தாத்தா

கிம் ஜாங் உன்னின் இளமைக் காலம் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. எனினும் 1982-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி அவர் பிறந்ததாக அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது. ஆனால் தென்கொரியாவின் உளவுத்துறையினர் அவர் 1983-ஆம் ஆண்டில் பிறந்திருக்கலாம் என்று கருதுகிறார்கள். வடகொரியாவின் தலைவர்கள் பொதுவாக தங்களது குழந்தைகளை வெளிநாடுகளில் ரகசியமாக வளர்ப்பது வழக்கம். அதுவும் ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு நாடுகளில் பிரித்து வளர்க்கப்படுவார்கள். அந்த அடிப்படையில் பிறந்த சில ஆண்டுகளிலேயே சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகருக்கு அனுப்பப்பட்டார் கிம் ஜாங் உன். அங்கு தொடக்கக் கல்வி பயின்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அவருக்கு சோல் பாக் பாக் சோல் என பல்வேறு பெயர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் வாரிசு என்பதால் அடையாளம் தெரியாத வகையிலேயே அவர் வளர்க்கப்பட்டார். பாதுகாப்புக்காக உடன்படிக்கும் மாணவர் என்ற பெயரில் ஒரு பாதுகாவலரும் அவருடன் தங்கியிருந்தார். பெர்னில் உள்ள வடகொரியத் தூதரகத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியின் மகன் என்ற பெயரிலேயே கிம் ஜாங் உன் நீண்ட காலமாக வளர்க்கப்பட்டார். இப்போது கடும் சினம் கொண்டவராக அறியப்படும் கிம் ஜாங் உன் இளமைக் காலத்தில் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவராக இருந்திருக்கிறார். கூடைப் பந்து விளையாட்டில் அதிக நாட்டம் கொண்ட கிம் ஜாங் உன், மைக்கேல் ஜோர்டானின் தீவிரமான ரசிகர்

2010-ஆம் ஆண்டில்தான் கிம் ஜாங் உன்னைப் பற்றிய அடிப்படையான தகவல்கள் வெளிவரத் தொடங்கின. கிம் ஜாங் இல்லுக்குப் பிறகு நாட்டை ஆட்சி செய்யப் போகிறவர் என்றும் அடையாளப்படுத்தப்பாட்டார். 2011-ஆம் ஆண்டில் கிம் ஜாங் இல் இறந்த நாளிலேயே சுப்ரீம் லீடர் என்ற பெயரில் நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் தனதாக்கிக் கொண்டார் கிம் ஜாங் உன். அன்றைய நாள் முதல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். தந்தையின் வழியில் அடுத்தடுத்து அணு ஆயுதச் சோதனைகளைச் செய்தார். தேவைப்படும்போதெல்லாம் புதிய வகை ஏவுகணைகளைச் சோதனை செய்து அண்டை நாடுகளை அச்சுறுத்தினார். விண்வெளிக்குச் செல்லும் அளவுக்கு திறன் மிக்க ராக்கெட்டுகள் இவரது காலத்திலேயே உருவாக்கப்பட்டன.

அதே நேரத்தில் தனக்கு எதிரானவர்கள் என்ற தெரிந்தவர்களை ஒழிக்கும் நடவடிக்கைகளையும் கிம் ஜாங் உன் மேற்கொண்டு வந்தார். அவர்களில் ஒருவர் ஜாங் சுங்-தயீக். கிம் ஜாங் உன்னின் மாமா. கிம் ஜாங் உன் பதவிக்கு வருவதற்கு உதவியாக இருந்தவர். பெண்களுடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாகவும், கட்சியைப் பிளவுபடுத்த முயன்றதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 5 நாள்கள் கழித்து அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டது. இந்தக் கொலை தொடர்பாக பல தகவல்கள் உலா வருகின்றன. தயீக்கை ஒரு அறையில் அடைத்து, வேட்டை நாய்களைக் கொண்டு கடிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.

2007-ஆம் ஆண்டு ஒரு தொழிலதிபர் வெளிநாடுகளுக்குத் தொடர்ந்து தொலைபேசியில் பேசியதாகக் கண்டறியப்பட்டது. வடகொரிய அரசு இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு விளையாட்டு அரங்கத்தில் ஒன்றரை லட்சம்பேர் கூடியிருக்க அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பொது இடத்தில் இதுபோன்று தண்டனைகள் நிறைவேற்றப்படுவது, வட கொரியாவில் சர்வசாதாரணம். மரணதண்டனைகள் சாதாரணத் துப்பாக்கிகள் கொண்டு நிறைவேற்றப்படுவதில்லை. போர்களில் பயன்படுத்தப்படும் ராக்கெட் லாஞ்சர்களை இதற்காகவே வடகொரிய அதிகாரிகள் வைத்திருக்கிறார்கள்.

மனித உரிமை என்பதற்கு அதிபராகப் பார்த்து அளிக்கும் சலுகை என்பதுதான் கிம் ஜாங் உன் உள்பட வடகொரிய ஆட்சியாளர்களின் அகராதியில் பொருள். சிறைகள், வதை முகாம்கள், கொலைக்களங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையில் இந்தப் பொருள் புதைந்திருக்கிறது. சிறையை விட்டுத் தப்பிக்க நினைத்தவர்கள் எந்த விசாரணையும் இல்லாமல் கொல்லப்படுவார்கள். அதற்கு இன்னொரு ஆதாரம். அது கிம் ஜாங் நம்மின் கொடூரமான கொலை. இவர் கிம் ஜாங் உன்னின் சகோதரர். தந்தை கிம் ஜாங் இல்லின் முதல் மனைவிக்குப் பிறந்தவர். இவர்தான் வடகொரியாவின் அதிபராவார் என்று நினைத்திருந்தபோதுதான் அந்த இடம் கிம் ஜாங் உன்னுக்கு வந்து சேர்ந்தது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் காத்திருந்தார் கிம் ஜாங் நம். தகவல் அளிக்கும் இயந்திரத்தின் அருகே அவர் நின்று கொண்டிருந்தபோது ஒரு பெண் அவர் அருகே வந்து அவரது முகத்தில் ஒரு திரவத்தைப் பீய்ச்சி அடித்தார். மற்றொரு பெண் அவரது முகத்தில் ஈரமான ஒரு துணியை வைத்து மூடினார். பதறிப்போன கிம் ஜாங் நம், அருகேயிருந்த காவல்துறை அதிகாரிகளை உதவிக்கு அழைத்தார். என்ன நடந்தது என அவர்களிடம் விளக்கினார். சில நிமிடங்களில் அவருக்கு மயக்கம் வந்தது. அதன் பிறகு அவர் எழுந்திருக்கவே இல்லை. ஏனென்றால் அவர் முகத்தில் தெளிக்கப்பட்டது வி.எக்ஸ். எனப்படும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கச் செய்யும் கொடிய ரசாயனம். உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட இந்த ரசாயனம், தோல்வழியாக உடலுக்குள் ஊடுருவி சில நிமிடங்களில் உயிரைப் பறித்துவிடும். இதனைத் தயாரிப்பதும் பயன்படுத்துவதும் போர்க்குற்றத்துக்கு ஒப்பாகும். இத்தகைய கொடிய ரசாயனம் சாதாரணமாக யாருக்கும் கிடைக்காது. தற்போதிருக்கும் ஆதாரங்களின்படி பார்த்தால், 4 வடகொரிய உளவாளிகள், இரு பெண்களைப் பயன்படுத்தி கொலையை அரங்கேற்றியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இப்போது கிம் ஜாங் உன்னின் அரசியல் பிம்பம் சற்று மாறியிருக்கிறது. ட்ரம்புடன் சொற்போர் நடத்தும் அதே நேரத்தில் அண்டை நாடுகளுடன் நேசக் கரம் நீட்டுகிறார். சீனாவின் அதிபர் ஸீ ஜின்பிங்கையும், தென்கொரிய அதிபர் மூன் ஜேவையும் சந்தித்து உலக நாடுகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இப்போது அமெரிக்க அதிபருடனான சிங்கப்பூர் சந்திப்பை எதிர்நோக்கியிருக்கிறார். இந்தச் சந்திப்பு கிம் ஜாங் உன்னுக்கு புதிய கதவுகளைத் திறக்கக்கூடும்.


https://www.youtube.com/watch?v=kfpqKnaYy6k&ab_channel=WallStreetJournal

https://www.facebook.com/watch/?ref=saved&v=210741430784144

அதிபர் டிரம்ப்புடனும் உறவுகளை மேம்படுத்திக் கொள்ள கிம் முயற்சி மேற்கொண்டார். 2018 ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூரில் இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்தது. வட கொரியாவில் அணுசக்திப் பரிசோதனைகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு அந்த சந்திப்பு நடைபெற்றது.

டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் ஜோங்-உன் - பகைமை மாறி நட்பு
படக்குறிப்பு,

டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் ஜாங்-உன் - பகைமை மாறி நட்பு

அனைத்து ஏவுகணை சோதனைகளையும் நிறுத்தி வைப்பதாக அப்போது திரு. கிம் கூறினார். ``அணுகுண்டு தயாரிக்கும்'' முயற்சியில் வெற்றி அடைந்துவிட்டதால், அணுகுண்டு பரிசோதனை வளாகத்தை மூடிவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்புகளுக்கு சர்வதேச அளவில் வரவேற்புகள் இருந்தன. ஆனால் கைவசம் உள்ள அணு ஆயுதங்களை அழிப்பது என்ற உத்தரவாதத்தை வடகொரியா அளிக்கவில்லை என்று நிபுணர்கள் கூறினர். அணுசக்தி சோதனைகளை நிறுத்துவதாக ஏற்கெனவே வாக்குறுதிகள் அளித்தபோது அவற்றை கடைபிடிக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அதற்கு அடுத்த ஆண்டில் இந்த இரு தலைவர்களும், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் உடன் சேர்ந்து சாதாரண முறையில் - ஆனால் பெரிதும் முக்கியத்துவமான - வகையில் சந்தித்தனர். வடக்கு மற்றும் தென் கொரியா இடையில் ராணுவம் இல்லாத இடைநிலப் பகுதியில் அந்தச் சந்திப்பு நடைபெற்றது.

கிம் ஜாங்-உன்னும் மூன் ஜேவும்

இருந்தபோதிலும், அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான உறவு பின்னர் மோசமானது. வட கொரியா தன் அணுசக்தித் திட்டங்களை முழுமையாகக் கைவிடாத வரையில், தடைகளை நீக்க முடியாது என டிரம்ப் மறுத்ததை அடுத்து பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

பிறகு 2020 ஜனவரி மாதத்தில், அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது நீண்டதூர ஏவுகணை பரிசோதனைகளை நிறுத்தி வைப்பதாக வெளியிட்ட அறிவிப்பை வாபஸ் பெறுவதாக கிம் அறிவித்தார். ``இந்த உலகம் புதிய ராணுவ ஆயுதத்தைப் பார்க்கப் போகிறது'' என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.


ஆட்சி நிர்வாகத்தில் பாதுகாப்பு அமைச்சர்களை கிம் அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தார். 2011ல் இருந்து ஆறு ஆண்கள் இந்தப் பதவியை வகித்துள்ளனர். ராணுவப் படைகளின் விசுவாசத்தின் மீது அவருடைய நம்பிக்கையின்மையைக் காட்டுவதாக இது உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கிம் -ன் சகோதரி கிம் யோ-ஜாங் கொரியா தொழிலாளர் கட்சியில் உயர் பொறுப்பில் இருக்கிறார்.

வட கொரியாவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு 2013ல் தீவிர முயற்சி நடைபெற்றதாகக் கூறப்பட்டது. அப்போது தான் தன் சகோதரியின் கணவர் சாங் சோங்-தயீக்கிற்கு அவர் மரண தண்டனை நிறைவேற்றினார். அவர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக அரசுத் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டில் தங்கியிருந்த பெரியம்மா மகன் கிம் ஜோங்-நாம் பிப்ரவரி 2017ல் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் கொல்லப்பட்டதற்கும், கிம் தான் காரணம் என்று பரவலாக நம்பப்படுகிறது.

கிம் ஜாங் உன்: "நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா" - யார் இவர்?

கிம் உடன் சில நிகழ்ச்சிகளில், முந்தைய அறிமுகம் இல்லாத ஒரு பெண் பங்கேற்ற காட்சிகளை தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யும் வரையில், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அதிகம் தெரியாமல் இருந்தது. திரு கிம் ``காம்ரேட் ரி சோல்-ஜு'' என்பவரை திருமணம் செய்து கொண்டிருப்பதாக 2012 ஜூலையில் அரசுத் தொலைக்காட்சி அறிவித்தது.

திரு. கிம் மற்றும் திருமதி ரி ஆகியோருக்கு 3 பிள்ளைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
படக்குறிப்பு,

திரு. கிம் மற்றும் திருமதி ரி ஆகியோருக்கு 3 பிள்ளைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கிம்- இன் மனைவி ரி பற்றி அதிகம் தகவல்கள் கிடையாது. ஆனால் அவருடைய மிடுக்கான தோற்றத்தைப் பார்த்து, அவர் உயர்ந்த அந்தஸ்துள்ள குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ரி ஒரு பாடகராக இருக்கலாம் என்றும், அதனால் கிம் கவனத்தை பெற்றிருக்கலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தத் தம்பதியினருக்கு 3 பிள்ளைகள் இருப்பதாக தென் கொரியா புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரிய தொழிலாளர் கட்சியில் உயர் பொறுப்பில் இருக்கும் கிம் யோ-ஜோங், தென் கொரியாவில் ஒலிம்பிக் போட்டியில் கிம் சார்பில் கலந்து கொண்ட போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கிம் -இன் மூத்த சகோதரர் கிம் ஜோங்-ச்சோல் அதிகாரப்பூர்வ பதவி எதிலும் இருக்கிறாரா என்பது தெரியவில்லை.

https://www.youtube.com/watch?v=NnG0HB5Jg3E&ab_channel=News7Tamil

https://www.youtube.com/watch?v=NnG0HB5Jg3E&ab_channel=News7Tamil

https://www.youtube.com/watch?v=33waoauq01w&ab_channel=criminalsandcrimefighters

https://www.facebook.com/watch/?ref=saved&v=210741430784144

https://www.facebook.com/watch/?ref=saved&v=210741430784144







Tuesday, 19 January 2021

அமெரிக்க அதிபர்கள்

அமெரிக்க ஐக்கிய இராட்சியத்தின் அதிபராக நாளைய தினம், ஜோ பைடன் அவர்கள் தனது பதவியை பொறுப்பேற்கின்றார். இந்த பின்னனியில் நடந்து முடிந்த அமெரிக்க நாட்டின் ஜனநாயகத்தேர்தலில் பல சிக்கல்கள் குளறுபடிகள் நடந்தன, அப்படி என்னதான் நடந்துவிட்டது என்பதை விபரிக்கும் ஒரு ஆவண செய்தியாக தேன் தமிழ் ஓசையின், தடாகம் தொலைக்காட்சி உங்களுக்காக அதனைகாட்சிப்படுத்துகின்றது. தேன் தமிழ் தடாகம் தொலைக்காட்சிக்காக ஆவணப்ப்டுத்துபவர் தேன் தமிழ் ஓசை தேவதாஸ்!

அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் படி, ஜனவரி 20ஆம் தேதி பிற்பகலில்தான் அதிகாரப்பூர்வமாகப் புதிய அதிபர் பொறுப்பேற்க முடியும். அதற்கு, தலைநகர் வாஷிங்டன் டி சி-யில் பதவியேற்பு விழா நடத்தப்படும், அதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, புதிய அதிபருக்கும், துணை அதிபருக்கும் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைப்பார். 

இதன்படி, 2021ஆம் ஆண்டு ஜனவரி 20 இன்று ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் பதவியேற்பார்கள். தேர்தல் முடிவுகள் வந்ததிலிருந்து, புதிய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடங்குவதற்கான நேரம், அதாவது ஜனவரி 20 வரையிலுமான காலம், ப்ரெசிடென்ஷியல் ட்ரான்சிஷன் என்று அழைக்கப்படுகிறது.

இந்த நேரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர், ஒரு இடைநிலைக் குழுவை உருவாக்குகிறார். இது பதவியேற்றவுடனேயே பணியைத் தொடங்க தேவையான ஏற்பாடுகளைச் செய்கிறது. அதன் படி ஜோ பைடன் புதிய ஜனாதிபதியாக பொறூப்பை ஏற்றுக்கொள்வார்.


புதிய அமெரிக்க அதிபர், ஜோ பைடன்: தன் சொந்த வாழ்வில் சோகங் களை சந்தித்த மனிதர், சோகங்கள் தாளாமல் தற்கொலைக்கு  துணிந்த ஒரு சோக மனிதன், நடத்திய அமெரிக்க அதிபர் தேர்தல் போராட்டம். மூன்று தடவைகள் அதிபராகும் போட்டியில் ஈடுபட்டு, இறுதியாக அவர் வென்று இன்று அதிபராக பதவி ஏற்கின்றார். அமெரிக்காவில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்டு டிரம்பை வீழ்த்தி, அதிபர் பதவியை பிடிக்கிறார் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன்.

ஜோ பைடனின் சொந்த வாழ்க்கை போலவே, தற்போது நடந்த, தேர்தல் களமும், மிக சிக்கல் வாய்த்ததும், போராட்டம் மிக்கதாகவும் அமைந்தது.

ஆனால், தமது தோல்வியை டிரம்ப் ஒப்புக்கொள்ளமாட்டார் என்பதை டிரம்ப் பிரசாரக் குழு குறிப்பாக உணர்த்தியது.

மில்லியன் கணக்கான வாக்குகள் எண்ணி முடிக்கப்படாத நிலையிலேயே தேர்தல் நாளன்று இரவே தாம் வெற்றி பெற்றுவிட்டதாக தவறாக கூறினார் அதிபர் டொனால்டு டிரம்ப். பிறகு, தேர்தலில் முறைகேடுகள் நடந்துவிட்டதாக ஆதாரம் ஏதுமில்லாமல் கூறினார் டிரம்ப்.

கொரோனா வைரசால் உலகிலேயே அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட நாடாக அமெரிக்கா ஆன நிலையில், புதிய தொற்றுகளும், மரணங்களும் அதிகரித்துக் கொண்டிருந்தபோது இந்த தேர்தல் நடந்தது. பைடன் அதிபரானால், பொது முடக்கங் களை அறிவிப்பார், இதனால், பொருளாதாரம் பாதிக்கப்படும் எனறு டிரம்ப் வாதிட்டார். மறுவலத்தில்,

கோவிட் 19 பரவாமல் தடுப்பதற்குத் தேவையான, போதுமான நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார் ஜோ பைடன். இவ்வாறான தேர்தல் பரப்புரைகளின் பின்னனியில் ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார்.

இந்த பவி ஏற்பு விடயத்தில் சட்டசிக்கல் வரக்கூடுமா என்று உங்களில் சிலர் நினைக்க கூடும். ஆம். நிச்சயமாக. எந்தெந்த மாகாணங்களில் பைடன் வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறதோ, அங்கெல்லாம் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். எனினும் அதற்கான ஆதாரங்கள் எதையும் அவர் முன்வைக்கவில்லை.

அவரின் ஆதரவு அதிகாரிகள் நாட்டின் மிகச் சிறந்த வழக்கறிஞர்களுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சில அஞ்சல் வாக்குகளை எண்ணிக்கைக்குள் கொண்டு வராமல் இருப்பதே இவரின் நோக்கம். இது முதலில் அந்தந்த மாகாணங்களின் நீதிமன்றங்களிலும் பின்னர் உச்ச நீதி மன்றத்திலும் விசாரணைக்கு வரும்.

ஆனால், இது போன்ற விவகாரங்களால் தேர்தல் முடிவுகள் பாதிக்கப்படாது என்று துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

டிரம்ப் தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க, சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் மேற்கொள்ளப்படலாம் என்றும், ஆனால் இது முடிவுகளைப் பாதிக்காது என்றும் கூறப்படுகிறது.

தேர்தல் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்தை நாடப்போவதாக டொனால்டு டிரம்ப் ஏற்கனவே கூறியுள்ளார். அவர் தனது முயற்சிகளில் வெற்றிபெறவில்லை என்றால், தோல்வியை ஏற்க அவருக்கு அழுத்தம் அதிகரிக்கும்.ஈது இவ்வாறு இருக்க,  டரம்பின் ஆதரவாளர்கள் ட்ரம்பின் தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் வாசிங்டன் னகரில் கலவரங்களை ஏற்படுத்தினார்கள், வாசிங்டனில் உள்ள ஹபிடல் ஹில்ல் என்ற அரச அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து க்லவரங்களில் ஈடுபட்டார்கள். இதனால் வரலாற்றில் ஒரு மோசமான ஜனாதிபதி என்ற வரலாற்று வடுவையும் ட்ரம் அவர்கள் பெற்றதோடு மட்டுமல்ல, அமெரிக்காவின் கரி நாளாகவும் இது வர்ணிக்கப்பட்டது;

ஒரு சிலர் இந்த கேள்வியை மனதுக்குள் எழுப்பக்கூடும் அதாவது டொனால்ட் ட்ரம் பதவி ஏற்பில் கலந்து கொள்வாரா என்பதே அது!  ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்கவோ அல்லது பைடெனின் பதவியேற்பு விழாவில் புன்னகையுடன் பங்கேற்கவோ எந்தக் கட்டாயமும் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அவருக்குச் சில சட்டப் பொறுப்புகள் உள்ளன. பைடெனின் குழு பொறுப்பை ஏற்கத் தொடங்க, அவர் தனது நிர்வாகத்துக்கு அனுமதியளிக்க வேண்டும். அதேவேளை தற்போதைய அதிபர் என்றவகையில் தனது பொறுப்பை அவர் கன்னியமாக னேராக கையளிக்கவேண்டும். இது கொஞ்சம் உணர்வு பூர்வமான னிலையும் சங்கடமான் னிலையுமாகும். எனவே அவர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு தன் தோவியை ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

இந்த வெற்றியின் மூலம் 1990க்குப் பிறகு ஒரே ஒருமுறை மட்டும் பதவி வகிக்கிற முதல் அதிபராகிறார் டிரம்ப்.

1900ம் ஆண்டுக்குப் பிறகு அதிக சதவீத வாக்காளர்கள் இந்த முறை வாக்களித்துள் ளனர். இதுவரை பைடன் 74 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளார். இது வரலாற் றில் இதுவரை எந்த அதிபர் தேர்தல் வேட்பாளரும் பெற்றிராத வாக்கு எண்ணிக்கை இது.

8 ஆண்டு காலம் அதிபர் பராக் ஒபாமாவின் துணை அதிபராக தாம் பணியாற்றிய வெள்ளை மாளிகைக்கு தற்போது அதிபராக திரும்பி வருக்கிறார் பைடன்.

78 வயதாகும் பைடன், அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயதான அதிபராகவும் இருக்கின்றார்.

ஜோ பைடன், அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் துணை அதிபரையும் தம்முடன் வெற்றிப்பாதையில் அழைத்து வந்திருக்கிறார்  பல்லின பின்புலம் குறிப்பாக இந்தியாவின் தமிழகத்தில் உள்ள ஒரு பெண்மணியை தாயாகவும், பிறேசில் நாட்டு குடிமகனை தந்தயாகவும் கொண்ட பெண்மனி உப ஜனாதிபதியாகின்றார். இவர் வேறு பலவகைகளில் முதலாவது என்று சொல்லத் தக்க பெருமைகளையும் தன்னோடு கொண்டுவருகிறார்

உபஜனாதிபதி தமிழ் பின்னனியை கொண்ட பெண் என்பதால், எமது ஈழத்து உறவு  களுக்கு மிகுந்த உட்சாகம். தமது இனப்பிரச்சினயில் கமலா ஹரிஸ் காத்திரமான சில நகர்வுகளை கையாளக்கூடும் என்பதே அந்த உட்சாகத்துக்கான காரனமாகும். ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவயில் இருந்து ட்ரம் நிர்வாகம் விலகிக் கொண்ட அதேவேளை பைடனின் நிர்வாகம் மனித உரிமை பேரவயில் இணன்ந்து கொள்ளும், அதேவேளை மார்ச் மாததில் நடக இருக்கும் மனித உரிமை பேரவிக்கு தலமை தாங்கும் நாடாக பிரித்தானிய அமைகின்றது என்பதானால் எமது இழத்து உறவுகளூகு இந்த பதவி ஏற்பு மகிழ்ச்சியாக்வே அமைகின்றது.

புதிய ஜனாதிபதியாகும் பைடன் அவர்கள்,  புதிய நிர்வாகத்தை கட்டமைக்கிற கடுமையான பணியை உடனடியாக  தொடங்கவேண்டும்,  சீர்குலைந்து போயுள்ள வெளியுறவு கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும். இதைவிட  மூன்று மாதங்களுக்கு உள்ளாக அவர் ஓர் அமைச்சரவையை அமைக்கவேண்டும், முன்னுரிமை கொள்கைகளை முடிவு செய்யவேண்டும், பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிற, கூர்மையாகப் பிளவுபட்டுள்ள நாட்டை ஆள்வதற்குத் தயாராக வேண்டும் இப்படியான பல்வேறுவிதமான அவசர அவசிய பொறுப்புகளை பைடன் அவர்கள் விரைந்து செயலாற்றவேண்டும்.

அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் படி, ஜனவரி 20ஆம் தேதி பிற்பகலில்தான் அதிகாரப்பூர்வமாகப் புதிய அதிபர் பொறுப்பேற்க முடியும். அதற்கு, தலைநகர் வாஷிங்டன் டி சி-யில் பதவியேற்பு விழா நடத்தப்படும், அதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, புதிய அதிபருக்கும், துணை அதிபருக்கும் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைப்பார். 

தேன் தமிழ் ஓசையின் தாடாகம் தொலைக்கட்சிக்காக தொகுத்து வழங்கியவர் தேன் தமிழஸோசை தேவதாஸ்