Saturday 5 February 2022

"ஆற்றில் தொலைத்ததை குளத்தில் தேடும் தமிழர்கள்"

"ஆற்றில் தொலைத்ததை
குளத்தில் தேடும் தமிழர்கள்"
கடந்த சில தினங்களுக்கு முன் யாழ் மாவட்டத்தில் மீனவர்கள் இருவர் கடலில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவதினத்திருந்து கடந்த நாள் வரை தனது பணிகள் அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் , மீண்டும் ஒரு முறை இவ்வாறான இழப்புக்கள் நடந்து விடக்கூடாது என்றும் அந்த மக்களோடு தோள் கொடுத்து நின்றவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா .
மக்கள் அவர் பின் அணி திரள்வதையும், அதனால் தங்கள் போலி தமிழ்தேசிய அரசியலுக்கு பாதிப்பு வரப்போவதை உணர்ந்த கூட்டம் தங்களின் கைபொம்மைகளாக செயல்படும் சிலரை போரட்டகளத்தில் மக்களோடு இறக்கி குழப்பத்தையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த மீது சேறு பூசும் கீழ்த்தரமான அரசியலை செய்ய முற்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில்பாடு இன்று நேற்று அல்ல காலங்காலமாக உள்ள பிரச்சனை இது இரண்டு நாடுகள் சம்பந்தப்பட்ட சர்வதேச பிரச்சனை இதை தனியெருவராக தீர்த்து விட முடியாது என்பதும் யாவரும் அறிந்த உண்மை.
போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும் அமைச்சரும் உங்கள் பக்கம் உள்ளார், அவர் தன்னால் முடிந்தளவு இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வருவதை தடுக்க முடியும் அல்லது கைது செய்வோம் என்ற வாக்குறுதியை மட்டுமே கொடுக்க முடியும் அதையும் தாண்டி மக்கள் இனி இந்தி மீனவர்கள் வரமாட்டார்கள் என்ற வாக்குறுதியை தரவேண்டும் என்று கேட்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.
இந்த வாக்குறுதியை மீனவர்கள் இந்திய தூதரகம் முன்பாக போராட்டத்தை மேற்கொண்டு அவர்களிடம் இருந்து இந்த வாக்குறுதியை பெற்றிருக்க வேண்டும். அதைவிடுத்து "ஆற்றில் தொலைத்ததை குளத்தில் தேடிய கதையாகவே" இது இருக்கும்.
இவ்வாறான செயற்பாடுகள் அன்றிருந்து இன்று வரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 13 வது திருத்தமே தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான ஆரம்ப புள்ளி என்று கூறிவருகிறார் அதையே இன்று 35 வருடங்கள் கழித்து போலி தமிழ் தேசியவாதிகள் கையில் எடுத்துள்ளார்கள் . இது நடைமுறைக்கு வருமானால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது மக்கள் அதிகப்படியான நம்பிக்கை கொள்வார்கள் இதனால் போலி தமிழ் தேசியவாதிகளின் அரசியல் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படும், இதனை தடுப்பதற்காகவும் டக்ளஸ் தேவானந்தாவை அரசியல் அரங்கில் இருந்து ஒதுக்கலாம் என்ற பகல் கனவுடன் இவ்வாறான கீழ்த்தரமான அரசியலை இவர்கள் கையில் எடுத்துள்ளார்கள்.
இவ்வாறான செயற்பாடுகள் ஒருபோதும் வெற்றி காணப்போவதில்லை என்பதை எதிர் வரும் காலங்களில் மக்கள் இவர்களுக்கு உணர்த்துவார்கள்.
மக்கள் மூலமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை உசுப்பேற்றி விட்டு, இந்தியாவிற்கு எதிரானவர் என்று காட்ட இவர்கள் எடுத்த முயற்சி தோல்வி கண்டுள்ளது என்பதே உண்மை .
முடிந்தால் இந்த போலி தமிழ் தேசியவாதிகள் இந்திய தூதரகம் முன்பாக போராட்டத்தை நடத்தி இனி இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வரமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை மக்களுக்கு பெற்று கொடுக்க முடியுமா ? ஏனென்றால் தனது நாட்டு மீனவர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் அவர்களுக்கு தானே உண்டு .
மீண்டும் மீண்டும் இவர்கள் மக்களை தவறான பாதையில் வழிநடத்தி அழிவு பாதைக்கு இட்டு செல்கிறார்கள். இறையாண்மை உள்ள நாட்டில் தனது நாட்டு பிரச்சனை இருந்தால் அதை ஆட்சியாளர்களுடன் பேசித்தான் தீர்க்கவேண்டும் அதை விடுத்து சர்வதேசம் வரும், மின்சார கதிரையில் ஏற்றுவோம் என்று மக்களை ஏமாற்றுவது போல் இந்திய மீனவர்கள் இனி எல்லை தாண்டி வரமாட்டார்கள் என்று எங்களுக்கு எழுதி தாருங்கள் என்று இலங்கை அமைச்சரிடம் கேட்பதில் இருந்து இவர்கள் மக்களை எவ்வளவு முட்டாள்கள் என்று நினைத்துள்ளார்கள் என்ற உண்மை புரிகின்றது.

" நன்றி" 

No comments:

Post a Comment