Saturday 1 January 2022

சமூக நீதி....

 சமூக நீதி.... சுயமரியாதை.... பகுத்தறிவு... பெண்விடுதலை.... சாதி ஒழிப்பு... என்ற பலதையும் கையில் எடுத்த பெரியார். இன்று தமிழகத்தில் சமூக நீதியை நிலைநாட்டும் சமூக வளர்ச்சியை நோக்கிய பணயத்திற்கு வித்திட்டவர். இவரின் போராட்டங்களை மறுத்தவர்கள் தமிழ் நாட்டில் பொதுவாழ்வில் இருக்க முடியாது என்றளவிற்கு தனது போராட்ங்களுக்கான நியாதிக்கங்களை நிறுவிச் சென்றவர் அவரின் பிறந்த மாதத்தை நாம் கடந்து வந்துள்ளோம்... அது செப்ரெம்பர் மாதம்.

பாராசக்தியை அழைத்து காக்கை குருவிகளுக்கு இரை போட்டு புதுமைப் பெண்ணை அறிமுகப்படுத்திய பாரதியார். மிகச் சிறிய வயதில் 39 வயதில் அவரின் மரணம் சம்பவித்தாலும் இந்த குறுகிய காலத்தில். தமிழ் கூறும் நல்லுலகம் தமிழ் வாழும் வரை போற்றப்படும் கவிஞராக போராளியாக பத்திரிகையாளராக என்று பன்முகத் தன்மையை காட்டிச் சென்றுள்ளார் அவர்.
'வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்வோம்' என அப்போதே நதிநீர் இணைப்பால் (இந்திய)நாடு வளம்பெறும் எனக் கனவு கண்டார். 'சேது(சமுத்திரம்)வை மேடுறுத்தி வீதி சமைப்போம்' எனக் கூறி இன்றைய சேது சமுத்திர திட்டத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தார். தனது சிந்தனையை நிறுத்திக் கொண்டநாள் கடந்த மாதத்தம்தான். அது செப்ரெம்பர் மாதம்.
தம்மிடம் இருக்கும் வளங்களைக் கொண்டு மக்களை அணிதிரட்டி உலகின் மிகப் பெரிய வல்லரசுக்கு எதிராக போராடி தனது மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தவர். தமது போராட்டதிற்கான நியாயதிகத்தை எந்த நாடு தனது விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக ஓடுக்கு முறையை பிரயோகித்ததோ அதே நாட்டு மக்களைக் கொண்டே அமெரிக்கப் படைகளை விலகிக் கொள்ளுங்கள் மனித அவலங்களை செய்யாதீர்கள் என்று அரசியல் பலத்தை உலகின் ஊடகங்கள் மூலம் செய்து வெற்றியை நிலைநாட்டியவர். அவர் தோர் ஹோ சி மின். அவரின் இயற்கை மரணமும் கடந்த மாத்தில்தான் இடம்பெற்றது. அது செப்ரெம்பர் மாதம்.
மக்கள் சீனம் என்று தந்திரோபாய அடிப்படையில் வலிமை மிக்க ஜப்பான எதிர்த்து போராட சீனத் தேசிய முதலாளிகளையும் இணைத்து போராடி ஜப்பானை வெற்றி கொண்டார் முதலில் இதன் பின்பு தனது நாட்டில் வாழும் உழைக்கும் மக்களுக்கான அரசை அமைக்க இந்த தேசிய முதலாளிகளுக்கு எதிராக இதன் பின்பு போராடியவர்.
கலாச்சாரப் புரட்சியின் அடையாளமாக சீனத்தின் உடை மொழி ஏனைய கலாச்சார விழுமியங்களை அனைத்து சீன மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிதான தடம் ஒன்றை உருவாக்கி அதனை பலரும் ஏற்புடமையாக்கி செயற்பட உழைத்த மக்கள் தலைவன். மக்கள் விடுதலைப் படையின் உண்மையான அர்த்தத்தை செயற்பாட்டில் காட்டிய சீனத்தின் சிற்பி. தோழர் மா ஓ சேதுங். அவர் எம்மை விட்டு பிரிந்ததும் இதே மாதத்தில்தான். அது செப்ரெம்பர் மாதம்.
அறிஞர் அண்ணாவின் பிறந்த தினம். பெரியார் பேசிய சமூக நீதியை ஆட்சி அதிகாரத்தை உருவாக்கி தமிழக மக்களின் பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சென்றவர். கர்ம வீரர்; காமராசரின் இலவசக் கல்வியை தமிழ் நாட்டில் தொடர்ந்தும் வேரூன்ற வைத்த தலைவர். அவர் இட்ட விதையே இன்றவரை விருட்சமாக வளர்ந்து இருக்கின்றது. அவர் பிறந்த மாதத்தை நாம் கடந்து வந்திருக்கின்றோம். அது செப்பரம்பர் 15.
மாக்ஸ் உம் ஏங்கல்ஸ் உம் எழுதிய கப்யூனிச் சித்தாந்தத்தை லெனின் எவ்வாறு செய்முறைப்படுத்த சோவியத் ஒன்றியத்தை உருவாக்கினாரோ அது போல தமிழ் நாட்டில் புரையோடிப் போய் இருக்கும் சாதியத்தை சமூக நீதி மறுப்பை பெண் அடிமைத்தனத்தை உடைத் தெறிவதற்கு பெரியாரின் பகுத்தறிவு, சுயமரியாதை கொள்கைகள் தமிழ் நாட்டில் தேதவையாக இருந்தது தேவையாகவும் இன்றும் இருக்கின்றது.
பல்வேறு சூழலில் அவர் தெரிவித்த கருத்துகளின் ;ஒரு பாதழ சர்சையை கிளப்பி இருந்தாலும் அவரின் சுயமரியாதை இயக்கமும் பகுத்தறிவுச் செயற்பாடுகளும் மனித குலத்தை முன்னேற்றத்திற்கு தேவையானவை.
90-வது வயதில் 180 கூட்டம்.
91-வது வயதில் 150 கூட்டம்.
93-வது வயதில் 249 கூட்டம்.
94-வது வயதில் 229 கூட்டம்.
வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில்
(95-வது வயதில்) 42 கூட்டம்.
இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன்.
குடல் இறக்க பிரச்னையினால் சரிந்து விழும் குடலைப் பெல்ட் வைத்துக் கட்டிக் கொண்டு கூட்டங்களில் பேசச் சென்றார்.....
சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப் போட்டு குழாய் செருகப்பட்டிருக்கும்.....
இதையெல்லாம் எந்த ஆட்சியைப் பிடிக்கச் செய்தார்?
எத்தனை தலைமுறைக்கு சொத்து
சேர்க்கச் செய்தார் ?
அவருக்கும் கடவுளுக்கும் வாய்க்கால்
தகராறா?
மதங்களுக்கும் அவருக்கும் முன்
விரோதமா?
நான் சொல்வதைக் கேட்டால் தான்
உனக்கு சொர்க்கம்
என்னை வணங்கா விட்டால் நரகம்
என்று கூறும் கடவுள்கள், சாமியார்களுக்கிடையில்............
நான் தலைவன்... நான் தவறே செய்தாலும் எனக்கு நீ முட்டுக் கொடுத்தே ஆக வேண்டும் என்று கட்டளையிடும் தலைவர்கள் மத்தியில்.....
யார் சொன்னாலும், 'நானே சொன்னாலும் உன் அறிவைக் கொண்டு, அனுபவத்தைக் கொண்டு, படிப்பினையைக் கொண்டு ஆராய்ந்து உன் அறிவு ஏற்றுக் கொண்டால் ஏற்றுக் கொள், இல்லையென்றால் விட்டுவிடு என்று சொன்ன ஒரே தலைவர் இவர் மட்டுமே........
அதுதான் அவரின் பகுத்தறிவுக் கொள்கை
பெரியார் இல்லை என்றால் தமிழன் இல்லை என்று சொல்லும் அளவிற்கு தமிழ்நாட்டை 'உயரத்திற்கு" கொண்டு வந்தவர்...
இதனையே தமிழ்நாட்டின் பெரியார் கொள்கையின் பிடிப்புள்ளவர்கள் கூறும் கருத்தியலாக நான் அவர்களின் எழுத்தில் படித்திருக்கின்றேன்.
மாறாக பொற்கிளிக்காக மேடையில் சங்கீதம் பாடியவர்கள்களை சகட்டு மேனியிற்கு புகழும் கூட்டங்களை திருத்தி எடுக்க ஒரு பெரியார் எம் மத்தியிலும் உருவாக வேண்டும்.
எனது சகா 'கற்சுறா" கூறுவதைப் போல்....
'எங்களோடு இருந்த இருக்கிற புலவர்களில் அதிகமானவர்கள் பிணங்கள் மீது ஏறிநின்று பாட்டெழுதியவர்களாகத் தான் இருந்தார்கள். இருக்கிறார்கள்.
மண்ணின் பாடல்கள் என்றும் விடுதலை கீதங்கள் என்றும் எழுதிய பாடல்கள்அவையாகத் தான் இருக்கின்றன.
நம்மோடு வாழ்ந்த பல இசை வித்துவான்களும் அவற்றையே தேர்ந்தெடுத்துப்பாடிப் பாடி ஒரு பக்கத்தில் குழந்தைகளைக் கொன்றார்கள்.
இவர்களது இசையிலும் பாடல்களிலும் ஒரு கரையில் சரிந்து மடிந்தன குழந்தைகள்.
மேப்பிள் மர நிழலில் நின்று மண்ணின் வாசத்தைப் பாடிப்பாடி விருதுகளையும் பணங்களையும் பெற்றபோதும் மண்ணில் குழந்தைகள் சரிந்தனர்.
ஆனால் வெட்கமேயற்று இன்னமும் தொடர்ந்து பாடுகிறார்கள் அதனை. நமது வித்துவான்கள் குறித்து நாம் அதிகம் இன்னமும் எழுத வேண்டும்.
பெருமை என்ற பெயரில் அறிவை மயக்கி அழுகுரலால் இந்தச் சமூகத்தைச் சீரழித்தவர்கள் பலர் உள்ளார்கள். இந்த மயக்கத்தை நாம் முதலில் உடைக்க வேண்டும்."
தனது நியாயமான ஆதங்கங்களை வெளிப்படுத்துகின்றார் இதில் எனக்கு முழுவதும் உடன்பாடும் உண்டு.
இந்த மயக்கத்தை நாம் உடைத்தெறிய அதற்கான பகுத்தறிவை வளர்த்தெடுக்க எமக்கு ஒரு பெரியார் வேண்டும்.
(நன்றி வரைபடங்கள்: சௌந்தர்)
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இன் கருப்பு-வெள்ளை படமாக இருக்கக்கூடும்
Siva Murugupillai, Pathmanathan Nadarajah மற்றும் 126 பேர்
62 கருத்துகள்
16 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

No comments:

Post a Comment