Sunday 23 January 2022

"lanuwa"

"lanuwa"

 “Wait and see” என நீங்கள் சொன்னது உண்மைதான் பிரதமரே! (MR அவர்களே )!

நண்பரும், அரசியலாளருமான மனோ கணேசனின், ஆங்கிலப்பதிவை வாசித்த போது, நினைவில் வந்தவை!
தெற்கின் இன்றைய நிலைக்கு அத்திவாரமிட்டவர் சந்திரிக்கா (CBK). ரணிலின் (RW) அரசாங்கத்தை கலைத்தும், சமாதானப் பேச்சுவாரத்தையை குழப்பியும்- தன்னுடைய தலையில் தானே மண்ணை அள்ளிக் கொட்டிக்கொண்டார்.
விமல் வீரவன்சவின் கயிற்றை விழுங்கி, தன் சகோதரி இந்த முட்டாள்தனமான வேலையை செய்ததாக சுனேத்திரா பண்டாரநாயக்கா ஏசியதாகவும் மனோ குறிப்பிட்டு இருந்தார்.
(Sunethra pointing fingers at CBK said "she ate the "lanuwa" of Wimal Weerawansa (WW) kinds and dissolved RW govt. She is responsible for all the carnage we face now. She is responsible for the coming of Mahinda.". )
சந்திரிக்காவுக்கு காலம் கடந்து இப்போ ஞானம் வந்திருக்கிறது.
இவ்வாறே ரணிலின் (RW) மீதான கோபம் தலைக்கேறி, 2005 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்களிக்கும் உரிமையை -பலாத்காரமாக புலிகள் தடுத்தனர். இதன் மூலம் மகிந்த ராஜபக்ஸவின் (MR) வெற்றிக்கு வழிவகுத்து, புலிளும், தலைமையும் (VP) தமது தோல்வியை தாமே நிரிணயித்துக்கொண்டனர்.
இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டாம் என, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான, மறைந்த பெரியசாமி சந்திரசேகரனும், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கனேசனும் புலிகளிடம் மன்றாடியதும், கிளிநொச்சியில் காத்திருந்த சந்திரசேகரனை, சந்திப்பதை புலிகள் தவிர்த்ததும் என் நினைவை உறுத்துகின்றன. (இதனை உயிருடன் இருக்கும் தயா மாஸ்ரர் நன்கு அறிவார்.)
சந்திரிக்காவினாலும், புலிகளாலும் மேற்கொள்ளப்பட்ட இந்த இரண்டு நடவடிக்கைகளுமே ரணிலை (RW) முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்டவை.
ரணிலும் எல்லேரையும் பிரித்தள முற்பட்டு, தன் அரசியலில் தானே தோற்றுப் போனார். 70 வருடத்திற்கு மேலாக பலம் பொருந்திய கட்சியாக இருந்த ஐக்கியதேசியக் கட்சியையும் அழித்து, தனது அரை நூற்றாண்டுகால அரசியலையும் அழித்து தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
அதுபோலவே, சந்திரிக்காவும் (CBK) தந்தையால் உருவாக்கப்பட்டு தான் தலைமை வகித்த கட்சியாலேயே தூக்கி வீசப்பட்டு இன்று குரலற்றவராக புலம்பித் திரிகிறார்.
இவர்கள் தங்களது அரசியல் இருப்பையும், நிலைபேற்றையும் மட்டும் சூனியமாக்கவில்லை. மக்ளையும் நாட்டையும், தம்மை நம்பியவர்களையும் சூனியமாக்கினார்கள்.
ஆனால் இவர்கள் எல்லோருக்கும் கயிறு "lanuwa" கொடுத்துள்ளார் MR. இரும்பு மனிதன் என்று சொல்லப்படும் தன் தம்பிக்கும் (GR) இடையிட்டு குட்டுப் போட்டு சிரித்துக்கொண்டே நகர்கிறார் MR என்ற பிரதமர் மகிந்தராஜபக்ஸ.
அவர் (MR) நாட்டையும், மக்களையும் சூனியமாக்கி, பூச்சியத்திற்கு இட்டுச் சென்றார் என அவரை ஆதரித்தவர்களே கூறுகிறார்கள். ஆனால் குறைந்தது தனது பரம்பரை அரசிலையாவது அவர் தக்கவைத்துக்கொண்டார்.
சுதந்திரத்திற்கு பின் இலங்கையில் நிலவிய இருவழிப்பட்ட அரசியலை தகர்த்தார். டி.எஸ் சேனநாயக்கா வழிவந்த ஐக்கியதேசியக் கட்சி அரசியலையும், எஸ். டபிள்யூ ஆர்.டி பண்டாரநாயக்கா வழிவந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசியலையும் முடிவுக்கு கொண்டுவந்தார்.
அந்த முடிவின் தொடக்கமாக மெதமுலன ராஜபக்ஸ என்ற பலமான ராஜபக்ஸக்களின், ஒரு அரசியல் சகாப்தத்தை கட்டமைத்துள்ளார்.
இங்கே, இந்து பத்திரிகைக் குழுமத்தின் ஊடகரும், முக்கியஸ்த்தரும், என் நண்பருமான VS சம்பந்தன், ஒருநாள் கொழும்பில் சென்னது, எனக்கு ஞாபகம் வருகிறது.
அதிகாரத்தில் இருந்த சந்திரிக்காவுக்கும் மகிந்தவுக்கும், கடுமையாக முரண்பாடு நிலவிய 2004 – 2005 காலப்பகுதியில் மகிந்தவின் (MR) ஒரு தேனீர் விருந்திற்கு VS. சம்பந்தனும் சென்றிருக்கிறார். அங்கு இந்த மோதல் குறித்து இடம்பெற்ற சினேகபூர்வ உரையாடலில்,
சுவாரஸ்யமான பலவிடயங்களைக் கூறிய மகிந்த, சாம் “Wait and see” என சிரித்துக்கொண்டே கூறினாராம்.
நீங்கள் சொன்ன ”Wait and see” ஐ இந்து சம்பந்தன் மட்டும் அல்ல MR அவர்களே, நாட்டு மக்களும் நன்றாகவே உணர்கிறார்கள்! #ஞாபகங்கள்.
My political experiences with CBK & RW and some glimpses of , MahindaR, GotaR & VelupillaiPraba. "...Mahinda had the last laugh over RW, CBK & VP.." Some thoughts might interest you.
(
Nadarajah Kuruparan மற்றும் 61 பேர்
6 கருத்துகள்
20 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

No comments:

Post a Comment