Thursday 23 September 2021

மிர்தாதின் புத்தகம்

 


ஒரு வண்டோ, ஈயோ; ஓர் ஆந்தையோ, குருவியோ; ஒரு நெருஞ்சி முள்ளோ, அல்லது ஒரு சுள்ளிக் குச்சியோ; ஒரு கூழாங்கல்லோ, அல்லது சிப்பியோ; ஒரு பனித்துளியோ, அல்லது ஒரு சிறு குளமோ; ஒரு பிச்சைக்காரனோ, அல்லது ஒரு திருடனோ சமாதத்தின் பணிவிடை பெறாமல் போவதுண்டோ? உலகம் தனது பணியைச் செய்வதன் மூலம் உங்கள் பணிகளையும் செய்து விடுகின்றது. உங்கள் பணியை நீங்கள் செய்வதன் மூலம், உலகின் பணியையும் நீங்கள் செய்துவிடுகிறீர்கள்.

எப்போதும், வயிற்றின் எசமானன் தலைதான். அதே சமயம், வயிறும் தலையின் எசமானனாகத் நிகழ்கிறது.

பணிவிடையால் பணிவிடை செய்தே ஆகவேண்டுமென்றால், எதுவுமே பணிவிடையைக் காப்பாற்றாது.

பணிவிடை செய்கிறவனுக்குப் பணிவிடை செய்தாலொழிய, எதற்குமே பணிவிடை செய்துவிட முடியாது.

சமாதம், உங்களுக்கும், எல்லாருக்கும், நான் சொல்வது இதுதான்:

வேலைக்காரன், எசமானனின் எசமான். தலைவனாகிய எசமானனோ, வேலைக்காரனின் வேலைக்காரன். வேலைக்காரன் தலை குனிய வேண்டியதில்லை. தலைவன் தலை நிமிர வேண்டியதும் இல்லை. தலைவனின் ஆபத்தான ஆணவம், அடித்து நொறுக்கப்பட வேண்டும். வேலைக்காரனின் அவமானகரமான அவமானம் ஒழிக்கப்பட வேண்டும்.

சொல் ஒன்றுதான் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் அந்தச் சொல்லில் உள்ள ஆசை. ஆனால், எல்லாம் ஒன்றுதான். சொல்லின் எந்த ஒரு சிறுபகுதியான அசையும், மற்றதைவிட மேலானதன்று; மற்றதைவிட முக்கியமானதன்று. எல்லா அசைகளும் ஒன்றே. சொல்லும் அப்படியே. அவ்வாறு ஓரசைச் சொல்லாக நீங்கள் மாறிவிடும்போது, சொல்லுக்கடங்காத சுய நேசத்தின் பரவச உணர்வு கடந்து செல்வதை உணர்வீர்கள். அந்த நேசம் எல்லாருக்கு மான, எல்லாவற்றிற்குமான நேசம்.

சமாதம், நான் உங்களிடம், ஒரு வேலைக்காரனின் தலைவனா சுவோ, ஒரு தலைவனின் வேலைக்காரனாகவோ இங்கே பேச வில்லை. ஒரு சகோதரன், தன் சகோதரனிடம் பேசுவது போலப் பேசுகிறேன். அப்படியிருக்க, நீங்கள் ஏன் என் சொற்களால் கலவரமடைகிறீர்கள்?

முடிந்தால் என்னை மறுக்கலாம். ஆனால், நான் உங்களை மறுக்க மாட்டேன். என் முதுகின் மேல் உள்ள தசைதான் உங்கள் முதுகின் மேலும் இருக்கிறது என்று சற்று முன்னால் நான் குறிப்பிடவில்லையா? எனக்கு இரத்தம் வரும் என்பதால் உங்களைக் குத்தமாட்டேன். உங்களது இரத்தம் சிந்தாமலிருக்க உங்கள் நாவை உறையிலிடுங்கள். எல்லா வேதனைகளிலிருந்தும் தப்ப, உங்கள் இதயத்தைப் பூட்டியிருந்தால், அதை எனக்குத் திறந்து வையுங்கள்.

உங்கள் சொற்கள் மாயவலையாகவும், முளகளாகவும் இருப்பதைவிட, நாக்கே இல்லாமலிருப்பது மேல். புனித புரிதலால்

நாக்கை சுத்தப்படுத்தாதவரை, உமது சொற்கள் மாயவலைகளாக வும், காயம் பட்டவையாகவுமே இருக்கும். துறவிகளே, உங்களில் தேடிப் பாருங்கள். எல்லாத் தடைகளையும்

நான் அகற்றி விடுகிறேன். உங்களது 'நான்' கட்டுண்டு புதைந்து

கிடக்கும் பொதியை நான் கட்டவிழ்த்து விடுகிறேன். அப்போது

நீங்கள், கடவுளின் சொல்லும், உங்கள் 'நானும்’ ஒன்றுதான் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். அது ஆதியந்தமற்ற அமைதியில் திகழ்வது. எல்லா உலகங்களும் அதிலிருந்தே பிறந்தன. இப்படித்தான் நான் நோவாவுக்கு உபதேசித்தேன். அப்படியே உங்களுக்கும் உபதேசிக்கிறேன்.

நரோண்டா: அதன் பிறகு மிர்தாத், எங்களை எல்லையற்ற திகைப்பில் ஆழ்த்தித் தாழ்த்திவிட்டுத் தன் அறைக்குத் திரும்பிச் சென்றுவிட்டார். சகிக்க முடியாத அமைதி, சற்று நேரம் அங்கே நிலவியது. பிறகு நாங்கள் கலைந்து செல்ல ஆரம்பித்தோம்.

கலைந்து செல்லுமுன், ஒவ்வொருவரும் மிர்தாத் பற்றிய மதிப்பீட்டைத் தெரிவித்தார்கள்.

சமாதம்: மணிமுடிக்கு ஆசைப்பட்டுக் கனவு காணும் பிச்சைக்காரன், மிக்காயன்: அவன் ஒரு தலைமறைவு ஆள். 'நோவாவுக்குக்

கற்பித்தேன்,' என்று குறிப்பிட்டானல்லவா?

அபிமார்: சிக்கலடைந்த நூல்கண்டு.

மிகாஸ்டர்: வேறொரு அண்டவெளியின் நட்சத்திரம்.

பென்னூன்: சக்திவாய்ந்த மூளைதான், ஆனால், முரண் பாட்டில் மாட்டிக் கொண்டுவிட்டது.

சமோரா: அற்புதமான யாழ்தான். ஆனால், அது எழுப்பிய சுரம்தான் என்னவென்று தெரியவில்லை.

ஹிம்பல்: நட்புள்ள காதைத் தேடும் நாடோடிச் சொல், அவன்..!

மிர்தாதின் புத்தகம் தேன் தமிழ் ஓசைக்காக பேசாலை

No comments:

Post a Comment