Thursday 23 September 2021

என்னதான் நடக்கின்றது ஆப்கானிஸ்தானில்...


 

என்னதான் நடக்கின்றது ஆப்கானிஸ்தானில்....(பகுதி 5)

ஆட்சியை தலிபான்களிடம் இழந்து ஓமானுக்கு தப்பிச் சென்ற முன்னாள் அதிபர் அதிபர் அஷ்ரப் கனி இருபது வரையிலான தீவிரவாதக் குழுக்கள் நாட்டில் இருப்பதாக பலமுறை கூறியுள்ளார். 

அவரின் பாதுகாப்புத் துறைகளின் கூற்றுப்படி, இந்தக் குழுக்கள் அதிகம் பாகிஸ்தானில் தளங்களைக் கொண்டுள்ளன.

இதில் சில தீவிரவாதக் குழுக்கள் ஆப்கானிஸ்தானில் தளம் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய எமிரேட்டை நிறுவுவது, அதனை ஏனைய இஸ்லாமிய நாடுகளுக்கு விரிவுபடுத்துவதும் தலிபான்களின் போராட்ட நடவடிக்கைகள் இந்த முயற்சிகளின் பின்னணியில் உள்ளது.

1996 தொடக்கம் 2001 ஆண்டு காலப்பகுதியில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களை அரசை நிறுவிய போது பாகிஸ்தான் உட்பட உலகின் மூன்று நாடுகள் மட்டுமே அந்த அரசை அங்கீகரித்தன. 

ஒரு நாட்டின் உருவாக்கம் அல்லது ஆட்சியைக் கைப்பற்றுதல் தொடருதல் என்பது அந்த நாட்டை உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகள் அங்கீகரிப்பது என்பதன் அடிப்படையில்தான் அதன் உயிர்வாழுதல் சாத்தியமாகும். இது எந்த ஒரு விடுதலைப் போராட்டத்திற்கும் பொருந்தி இருக்கும்... புதிதாக உருவாகும் நாடுகளுக்கும் பொருந்தும்.

இதற்கான அரசியல் வேலைகளை அல்லது சர்வதேச சமூகத்திடம் ஒரு போராட்டத்திற்கான தார்மீக ஆதரைவை பெறுதல் என்பது முக்கியமான அம்சமாக அமைகின்றது.

இது எமது நாட்டில் நடைபெற்ற தனிநாட்டுக் கோரிக்கையுடனான போராட்டதிற்கும் பொருந்தித்தான் இருக்கின்றது. ஈழத் தமிழர்களின் போராட்டத்ததிற்குரிய தார்மீக ஆதரவை புரிதலை நாம் பெற்றுக் கொண்டோமா அல்லது ஏதாவது ஒருவகையில் தனியாக ஒரு நாடு அமைக்கப்பட்டிருந்தால் அதனை அங்கீகரிப்பதற்குரிய நேச சக்திகளை நாம் அதிகளவில் வளர்த்துக் கொணடோமா என்பதில் பல நம்பிக்யீனங்களும் தோல்விகளும் உள்ளன.

மாறாக வெறுமனவே இராணுவ ரீதியிலான எண்ணிக்கையை காட்டும் எதிரி இராணுவத்தின் கொலைகள் மட்டும் விடுதலையைப் பெற்றுத் தந்துவிடாது வேணுமாயின் நிலப்பரப்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம் ஆனால் அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உலக ஒழுங்கில் தவிர்க்க முடியாமல் பின்னிப் பிணைந்து புதிய நிலமையில் தாக்குப் பிடிக்கலாமா என்றால் இல்லை என்பதே பதிலாக வரும்.

இதற்கு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஏலவே பெரும் நலப்பரப்பை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தாலும் அரசாக ஆட்சியாக நாடாக அங்கீகாரத்துடன் செயற்பட முடியவில்லை. இது ஈழத்தின் வடக்கு கிழக்கின் பெரு நிலப்பரப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த 2009 மே இற்கு முற்பட்ட காலத்துடனும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.

இதனைத்தான் முன்பு உருவான அரசை அரசாட்சியின் பலன்களை தலிபான்கள் தமது முதற் தவணையில் அனுபவித்தனர். அந்த அனுபவங்களை அவர்கள் பாடமாக கொண்டு இந்த இரண்டாவது ஆட்டத்தில் சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்தை பெறுவதற்குரிய செயற்பாட்டில் கவனம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியும். அதற்கான சில காய் நகர்த்தல்களை அவர்கள் செய்திருக்கின்றார்கள்.

ஆனால் அடிப்படை மதவாதக் கொள்கைகளை குறிப்பாக பெண்களை குழந்தைகைளை பெறும் இயந்திரங்களாகவும், பலவீனமானவர்களாக கருத்தும் அவர்களின் நம்பும் மார்க்கக் கொள்கையில் இருந்து அதிகம் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. இதற்கான அறிவிப்புகளும் வந்த வண்ணம் உள்ளன.

சோவியத் யூனியனை அனுப்பிவிட்டு அமெரிக்காவின் ஆசியுடன் ஆட்சியைப் பிடித்து முதலாவது ஆட்டத்தின் காலதில் இருந்து கடந்து வந்த இந்த 20 ஆண்டு காலத்தில் உலக அரசியல் ஒழங்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இன்று சோவியத் யூனியன்,  ரஷ்யா என்று இன்னொரு அமெரிக்க எதிர் முதலாளித்துவ நாடாக மாற்றம் அடைந்துள்ளது.

அதே வேளை சீனாவும் பொருளாதார வல்லரசாக வளர்ந்து சமூக ஏகாதிபத்தியமாகவும் அமெரிக்காவின் நட்பு நிலையில் இருந்து எதிர் நிலையிற்கும் சோவியத்தின் எதிர் நிலையில் இருந்து ரஷ்யாவின் ஆதரவு நிலையிற்கும் என்று மாற்றம் அடைந்து விட்டன. கூடவே அமெரிக்கா - சோவியத் என்று இருந்த பனிப் போர் இன்று அமெரிக்கா - சீனா என்று 'பட்டுப் பாதை'(Silk Road) என்று களம் காணும் நிலையில் உள்ளது.

இதற்கும் அப்பால் நேரு, இந்திரா காலத்து சோவியத்தின் மிக நெருங்கிய நட்பு சக்தியான இந்தியா இருந்த நிலை மாறி அமெரிக்காவின நட்பு சக்தியாகவும் பாகிஸ்தானை தள்ளி வைத்தும் வைக்காமலும் என்று நகரும் நிலமைகள் வளர்ந்துவிட்டன. பாகிஸ்தான் சீனாவின் நட்பு இந்தியாவின் விருப்பற்ற நாடுகளாக இரு நாடுகளையும் எல்லைப் பிரதேசம் எங்கும் பார்க்கும் நிலையில்தான் ஆப்கானிஸ்தானின் புதிய தலிபான ஆட்சியை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

தலிபான் ஆட்சியை அமெரிக்காவிடம் இருந்து பெறுவதற்கு முந்தைய அஷ்ரப் கனி ஆட்சி காலத்தில் இந்தியா அதிகம் வழங்கிய மனிதாபிமான நடவடிக்கை அது கல்வி, விளையாட்டு, கட்டுமானம் என்பன புதிய ஆப்கான தலிபான் அரசால் நன்றியுடன் பார்க்கப்படுமா அல்லது தனது இக் கட்டான காலம் எல்லாம் முகாம் அமைக்க பதுங்கு குழிகளை அமைக்கு பாதுகாத்துக் கொள்ள தப்பி ஓடி ஒழிய என்று பலவகையிலும் உதவிய பாகிஸ்தானின் விருபத்திற்கு இணங்க இந்தியாவின் காஸ்மீரில் பிரிவினைவாதத்தை... ஊக்கிவிக்க அண்மைக் காலங்களை விட அதிகம் வீச்சுடன் செயற்படுத்துவதற்கான அகண்ட இஸ்லாமிய எமிரேட்கைனவை செயற்படுத்தமா என்பதில் இரண்டாவது நிலமைகளே அதிகம் சாத்தியமாக உள்ளதாக உணரப்படுகின்றது.

ஆனால் அமெரிக்கா தமது படைகளை வெளியேற்றுவதற்கு முன்பு தலிபான்களுக்கு வைத்த முன் நிபந்தனையாக 'தீவிரவாதச் செயற்பாடுகளுக்கு ஆதரவாக இருக்கக் கூடாது...' என்ற மூக்கணாங் கயிற்றை அறுத்தெறிவார்களா....? ஏன் அமெரிக்காவே அதனைக் கழட்டி இந்தியாவை மேலும் தன் பக்கம் இழுக்க பாவிக்குமா என்பது இனிவரும் இந்திய அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கைகளில் அதிகம் தங்கியிருக்கும்.

இவை எல்லாவற்யையும் விட தலிபான்களை ஏற்காத ஏனைய ஆப்கானிஸ்தானில் செயற்படும் வடக்கு கூட்டணி மற்றும் ஏனைய ஆயுதக் குழுக்கள் தலிபானின் அரசிற்கு இடைஞ்சலாகவே தொடர்ந்தும் செயற்படுவதற்குரிய வாய்ப்புகளே அதிகம்.

இவர்கள் எல்லோரும் இணைந்து குறைந்த பட்ச ஐக்கிய முன்னணியிற்குள் செயற்படும் அரசை அமைப்பதுவும் அருகாமையில் இல்லை என்றே தோன்றுகின்றது. 

பல்வேறு சிறுபான்மை இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த குழுக்களின் அரசியல் அபிலாசைகள் தலிபான்களை அதிகம் பிரதிநிதித்துவப்படுத்தும் பஷ்தூன் இனத்தவரால் வழங்கப்படுமா என்பது மிகப் பெரிய கேள்வி குறிதான். 

இதனை ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள் மலையக மக்கள் முஸ்லீம்களை அவர்களின் தின அடையாளங்களை மறுத்து தமிழர் என்ற அடையாளத்திற்குள் கொண்டு வர முயன்ற மேலாண்மையுடன் ஓரளவு ஒப்பிட்டுப் பார்க்க முடியும். 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஐ.எஸ்.ஐ.எஸ்(கே) என்ற அமைப்பு இஸ்லாமிய நாடுகளில் மையம் கொண்டு தற்போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படை விலகல் போது குண்டு வெடிப்பை ஏற்படுத்தி தனது செயற்பாட்டின் போக்கை அறிவித்திருக்கின்றது. இந்த அமைப்பின் செயற்பாட்டை எவ்வாறு தலிபான்கள் கையாயளப் போகின்றார்கள் என்பதுவும் இங்கு பிரதான விடயமாக பார்க்கப்பட வேண்டும்.

இந்நிலையில் கடுமையான பொருளாதார சிக்கல் அரசியல் சிக்கலில் உள்ள நாடு எழுந்து நிற்குமா...? சீனாவின் நிபந்தனை அற்ற பொருளாதார வழங்கல்கள் தனது பட்டுப் பாதை(Silk Road)யை அமைப்பதற்கு ஏதுவாக புதிய ஆப்கானிஸ்தானை உருவாக்குமா என்பதை சற்றே பொறுத்திருந்து பார்ப்போம்.

(தொடரலாம்......)

***********************************************************************

மேலதிக விபரம் தேவையுள்ளோர் தொடர்ந்தும் வாசிக்கவும்.....

ஆப்கானிஸ்தானின் புவியியல், சிக்கலான இன அமைப்பு, மற்றும் மோதலின் வரலாறு மற்றும் உறுதியற்ற தன்மைக்கான இடத்தை உருவாக்கியுள்ளது ஏராளமான ஆயுதமேந்திய இஸ்லாமிய குழுக்கள், அவற்றில் சில உள்ளன. இவற்றில் சில நாடுகடந்த பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இது ஆப்கானிஸ்தானில் செயல்படும் முக்கிய பயங்கரவாத குழுக்களை கோடிட்டுக் காட்டுகிறது.

ஆப்கானிஸ்தானில் சண்டையிடும் தீவிரவாதக் குழுக்கள்:

1.ஹக்கானி நெட்வொர்க்: இந்த குழு வடக்கு வசிரிஸ்தானில் தளங்களைக் கொண்டுள்ளது மற்றும் பாதுகாப்புத் துறையின்படி, இந்தக் குழு பாகிஸ்தான் இராணுவத்துடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது.

2. அல்-காய்தா நெட்வொர்க்: இந்த நெட்வொர்க் பாகிஸ்தானில் தளங்களைக் கொண்டுள்ளது மற்றும் ஆப்கானிஸ்தானின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

3. டேஷ்: டேஷ், புதிய குழு, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு பெரிய அச்சுறுத்தலாக வளர்ந்து வருகிறது. இது நாட்டில் பெரும்பாலான கொடிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. டேஷ் பயிற்சி மையங்கள் பாகிஸ்தானில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 

4. "லஷ்கர்-இ-தொய்பா, லஷ்கர்-இ-ஜாங்வி, ஜெய்ஷ்-இ-முகமது, பாகிஸ்தான் தலிபான் மற்றும் பஞ்சாபி போராளிகள் தலிபான்களை ஆதரிக்கிறார்கள் மற்றும் அவர்கள் ஆப்கானிஸ்தானில் தீவிரமாக உள்ளனர்" என்று பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தவ்லத் வசிரி கூறினார்.

5. லஷ்கர்-இ-ஜாங்வி: இந்த குழுவின் பயிற்சி மையங்கள் பாகிஸ்தானில் வசிரிஸ்தானில் அமைந்துள்ளது. இந்த குழு ஆப்கானிஸ்தானில் ஷியா மக்களுக்கு எதிராக கொடிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.

6. லஷ்கர்-இ-தொய்பா: இந்த பயங்கரவாத குழு ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த குழு இதுவரை ஆப்கானிஸ்தானில் பல கொடிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.

7. ஜெய்ஷ்-இ-முகமது: இந்த பயங்கரவாதக் குழுவும் ஆப்கானிஸ்தான் மக்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

8. முஜாஹிதின் ஐக்கிய கவுன்சில் ({ரா-இ-இதேஹாத் முஜாஹிதீன்): இந்த பயங்கரவாதக் குழுவின் தளங்கள் மற்றும் பயிற்சி மையம் பாகிஸ்தானில் வசிரிஸ்தானிலும் அமைந்துள்ளது.

9. ம ஆயலவி நசீர் குழு: இந்த பயங்கரவாத குழுவின் பயிற்சி மையங்கள் தெற்கு வசிரிஸ்தானில் அமைந்துள்ளது.

10. தெரிக்-இ தாலிபான் பாகிஸ்தான் (டிடிபி): ஆப்கானிஸ்தானில் குழுத் தலைமை அமைந்திருப்பதாக பாகிஸ்தான் கூறிவரும் பயங்கரவாதக் குழுவானது டிடிபி ஆகும், ஆனால் குழுவின் தளங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் தெற்கு வசிரிஸ்தானில் அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

11. அம்ரே பா மரூஃப் மற்றும் மோமின் குழு ஆகியவை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடங்கும் மற்ற குழுக்கள். 

"தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத சித்தாந்தங்கள் பாகிஸ்தானிலிருந்து தோன்றியது மற்றும் ஆப்கானிஸ்தானை அழிப்பதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது" என்று உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் செடிக் சேடிகி கூறினார். 

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஜமாத் உத் தவா, லஷ்கர்-இ-இஸ்லாம், அன்சாருல் இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் இயக்கம் போன்ற பிற பக்ஷிதானி பயங்கரவாதக் குழுக்கள் உள்ளன.

செச்சென்ஸ், உய்குர் பயங்கரவாதக் குழு, தஜிக்ஸ், தெஹ்ரிக்-இ-உஸ்பெகிஸ்தான் மற்றும் அரேபியர்கள் மத்திய கிழக்கு பயங்கரவாதக் குழுக்கள், பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.

"பயங்கரவாத குழுக்கள் ஆப்கானிஸ்தானை தங்கள் தளங்களாக, ஆள்சேர்ப்பு மையங்களாக, தங்கள் போராளிகளுக்கு ஆதரவளித்து, ஏற்பாடு செய்வதாக பயன்படுத்துகின்றன" என்று இராணுவ ஆய்வாளர் ஜாவித் கோஹிஸ்தானி கூறினார்.

No comments:

Post a Comment