Saturday 2 February 2019

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்  பேசாலைதாஸ்
ஒரு ஊரில் மக்கள் மத்தியில் புத்தர் பேசத் தொடங்கினார்
ஒரு குரல் அவர் பேசுவதை இடைமறித்தது
தொடர்ந்து புத்தரை நோக்கி
“புத்தரே நாங்கள் உங்களைப் போன்ற எத்தனையோ ஞானிகளைச் சந்தித்தும், அவர்களது பிரசங்கங்களை கேட்டும் விட்டோம்
ஆனால் எங்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை
இப்போதும் எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது
எங்களுக்கு மட்டுமல்ல இவ்வுலகில் உள்ள அனைவருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது
அதனால் எல்லோருடைய சிக்கலும் தீரும்படியாக
அனைத்து மனிதர்களுடைய வாழ்விலும் பிரகாசம் தெரியும்படி மந்திரங்களைச் சொல்லித் தாருங்கள்
தேவையற்ற பிரசங்கம் வேண்டாம்
நாங்கள் மனப்பாடம் செய்து எல்லோருக்கும் சொல்லத்தக்க அளவில் சிறியதாக இருக்க வேண்டும்
நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான மந்திரத்தை சொல்லுங்கள்
உங்களைக் குருவாக ஏற்றுக்கொள்கிறோம்”
என்றது அக்குரல்
மௌனமாக சிரித்த புத்தர்
“இதுவும் கடந்து போகும்”
என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்
அந்த கணமே அக்கூட்டம் ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்தது
புத்தரின் மந்திரத்தை மனசுக்குள் அசைபோட்டது
நன்றாகப் படித்திருந்தும்
பணம் சம்பாதிக்க முடியாமல் தாழ்வு மனப்பான்மையால் உழன்று கொண்டிருந்த இளைஞனுக்கு
தன்னம்பிக்கையைத் தந்தது அந்த வார்த்தை
“இதுவும் கடந்து போகும்” என்ற வார்த்தையால்
என்னுடைய நிலை கண்டிப்பாக மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது
இம்மந்திரத்தைத் தினந்தோறும் உச்சரித்து
இன்னமும் எனக்கு வேண்டிய பலம் பெற்றுக்கொள்வேன்”
என்று உரக்கச் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்
“இம்மந்திரத்தால் என்னுடைய நீண்ட கால நோய் கண்டிப்பாகத் தீர்ந்துவிடும்
இனிமேலும் எனக்கு இந்நிலை தொடராது
இது மிகவும் நல்ல மந்திரம் என்று கூறிச் சென்றான்”
நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தவன்
“இந்த பணம் தொடர்ந்து என்னுடன் இருக்காது என்பதைப் புத்தர் எனக்கு இம்மந்திரத்தின் மூலம் புரிய வைத்துவிட்டார்
இனி இந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன்”
என்று கூறிச் சென்றான் பணக்காரனாக இருந்தவன்
அடுத்து இருந்த அழகான பெண்
“என்னுடைய அழகு எப்போதும் என்னுடன் வராது என்பதை இம்மந்திரம் எனக்குப் புரிய வைத்துவிட்டது” என்று கிளம்பினாள்
கடைசியாக, தினந்தோறும் உழைத்து ஓடாய்த் தேய்ந்த பெண்மணி கிளம்பும் போது
“இத்தனை நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்
மரணம் வரையிலும் உழைக்கத்தான் வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன்
ஆனால் இந்த மந்திரத்தின் மூலம் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது
என்னுடைய நிலையும் மாறிவிடும்” என்று நம்பிக்கையுடன் சென்றார்
ஆம்,நண்பர்களே.,
தோல்விகள் தழுவும்போது
“இதுவும் கடந்து போகும்”
என்பதை நினைவில் கொள்ளுங்கள்
சோர்ந்துவிட மாட்டீர்கள்
நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்வில் வரும்போது
‘இதுவும் கடந்து போகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்
அவர்கள் இருக்கும்போது அவர்களை கொளரவிப்பீர்கள்
அவர்கள் விலகும்போது பாதிப்படைய மாட்டீர்கள்
எத்தனையோ மனிதர்களை மாற்றிய இந்த உன்னத சொல்
உங்கள் வாழ்விலும் இனி ஒளி ஏற்றும்
“இதுவும் கடந்து போகும்” என்பதை உறுதியுடன் நம்புங்கள்
கண்டிப்பாக மாறிவிடும்
தோல்வியைச் சந்திப்பவர்கள்,
நோயில் இருப்பவர்கள், சிக்கலில் மாட்டியவர்கள்,
திசை தெரியாமல் இருப்பவர்கள்
அனைவரும் தினமும் இதை மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள்
வெற்றி நிச்சயம்


நேசிப்பதற்காகவே நேசி
நீ ஒருவரை நேசித்தால்
நீ அவரை எல்லா
குற்றங்குறைகளுடனும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறாய்
ஏனெனில்
அவை அவரின் பாகங்கள்
ஆனால்
அவை மாற ஆரம்பிக்கும்
நினைவில் கொள்
அன்பு ஒருபோதும் மாற்ற முயற்சி செய்யாது
ஆனால் அது மாற்றிவிடும்
நீ நேசித்தால் அது புரட்சியை கொண்டுவரும்
ஆனால் அது காலடிசப்தம் கூட கேட்காத அளவு
மிக அமைதியான முறையில் அந்த மாறுதலை கொண்டு வரும்
யாருக்கும் என்ன நிகழ்கிறது என்று கூட தெரியாது
ஆனாலும் எல்லாமும், மிகவும் அமைதியாக
மொட்டு மலர்ந்து மலராவது எப்படி யாருக்கும் தெரியாமல்
சப்தமில்லாமல் நிகழ்கிறதோ
அது போல மாறிவிடுவது நிகழும்
நீ நேசிக்கும் மனிதரை மாற்ற ஒருபோதும் முயற்சி செய்யாதே
ஏனெனில்
அந்த முயற்சியே உன்னுடைய நேசம் முழுமையானதாக இல்லை
நீ அந்த மனிதரின் ஒரு பகுதியைத்தான் நேசிக்கிறாய்
மற்றொரு பகுதியை நேசிக்கவில்லை என்பதை காட்டிவிடுகிறது
நான் உன்னை நேசிக்கிறேன்
ஆனால்
உன்னுடைய மூக்கு எனக்குப் பிடிக்கவில்லை
உன்னை எனக்குப் பிடிக்கும்
ஆனால்
உன்னுடைய முகம் எனக்குப் பிடிக்கவில்லை
என்று சொல்வது போல இருக்கும்
ஒரு மிகவும் குண்டான பெண் என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் போது
இதுவரை ஒரே ஒருவர்தான் என்னை நேசிப்பதாக சொன்னார்
ஆனால்
அவரும் நான் உன்னுடைய ஆன்மாவை நேசிக்கிறேன்
உன்னுடைய உடலை அல்ல என்று கூறினாள்
நீ நேசிக்கும்போது வெறுமனே
நேசி
அந்த நேசம் மாறுதலை கொண்டு வந்தால் சரி
அப்படி அது மாறுதலை கொண்டு
வரவில்லையென்றாலும் சரிதான்
நீ நேசிப்பதற்காகவே நேசி போதும்


கேள்வி : - புலன் ஆசைகளை அடக்கலாமா....???
முக்கியமாகப் பெண் ஆசையை...???
பதில் : - புலன் ஆசைகளை - முக்கியமாக பெண் ஆசையை ஒருக்காலும் அடக்கக்கூடாது
அந்த அடக்கப்பட்ட ஆசை பிரக்ஞை மனதிலிருந்து பிரக்ஞையற்ற மனதிற்குச் சென்று ஆழமாகப் பதுங்கிவிடும்
அது மெல்ல மெல்ல நாளமில்லாச் சுரப்பிகளைத் தாக்கும்
இதனால் பல உடல் கோளாறுகள் ஏற்படும்
மேலும் இந்த அடக்கப்பட்ட உணர்வு சந்தர்ப்பம் பார்த்து இருக்கும்
சமயம் வாய்த்தால்
பாம்பு போல சீறிப்பாயும்
அப்பொழுது அவன் தன்னிலை மறந்து ஒரு பைத்தியம்போலச் செயல்படுவான்
அல்லது மிருகம்போல செயல்படுவான்
பெரும்பாலான போலிச்சாமியார்கள் அடக்கப்பட்ட பாலுணர்வு கொண்டவர்கள்தான்
இவர்களிடம் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
எந்தப் புலன் உணர்வையும் அனுபவித்துத்தான் கடந்து செல்ல முடியும்
அதற்கு அதை அனுபவிக்கும் பொழுது நீங்கள் அதிலேயே பிரக்ஞையாக இருக்க வேண்டும்
உங்கள் மனம் அதிலேயே லயிக்க வேண்டும்
நீங்கள் உடலுறவில் ஈடுபட்டால்
உங்கள் மனமும் உடலும் நிகழ்காலத்திலேயே ஐக்கியமாகி இருக்க வேண்டும்
இது மிக முக்கியம்
இதற்கு ' தந்திராயோகம் ' என்று பெயர்
இப்படி லயித்து அனுபவித்த மனம்
ஒரு கட்டத்தில் திருப்தியுற்று அதை விட்டுவிடும்
அப்பொழுதுதான் மனம் பிரம்மச்சரிய நிலையை உண்மையாக அடையும்
அதற்கு முன்பு நடக்காது
இது எல்லா பழக்க - வழக்கங்களுக்கும் பொருந்தும்
முக்கியமாக குடிப்பழக்கம் புகைப்பழக்கதுக்குப் பொருந்தும்
இவற்றை மனம் வெறுக்கச் செய்ய
முதலில் மனத்தை அதனால் நிரப்ப வேண்டும்
அதற்கு ஒரே வழி அவற்றை பிரக்ஞையாக அனுபவித்து விடவேண்டும்
மற்ற முயற்சிகள் எல்லாம் தற்காலிகமானதுதான்
நிரந்தரமானது அல்ல
கேள்வி : - ஆசைகளை விட வேண்டும் என்று சொல்லுவதுகூட ஒரு ஆசை இல்லையா...???
அதைப்போலவே கடவுளை அடைய வேண்டும் என்று ஆசைப்படுவதும் ஒரு ஆசைதானே...???
பதில் : - கிருஷணன் கீதையில் சொன்னது
'பலனை எதிர்பார்த்து ஒரு காரியத்தைச் செய்தால்
அந்தச் செயல் முழுமையாக இருக்காது
முழுமையற்ற செயலினால் ஏற்படும் பலனும் முழுமையாக இருக்காது'
இதற்கு என்ன அர்த்தம்..???
நீங்கள் கடவுளை அடைய வேண்டும் என்று ஒரு பலனை எதிர்பார்த்து தியானம் செய்தால்
அது முழுமையாக ஆகாது
தியானத்தை தியானத்திற்காகவே செய்யவும்
அப்பொழுது பலன் தானே வரும்
ஆனால் தியானம் செய்வதில் மட்டும் வைராக்கியமாக உறுதியாக இருக்கவும்
மற்றவை தானேவரும்"
ஒரு சீடன் : " ஓஷோ , உண்மையிலேயே நீங்கள் யார்..???
ஓஷோ : " எனக்குத் தெரியாத விஷயம் இதுதான்
உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்கள்
சீடன் : " நீங்கள் சிருஷ்டிகர்த்தா எனப்படும் கடவுளா..???
ஓஷோ : "நான் அந்தப் பைத்தியக்காரன் இல்லை"
சீடன் : "நீங்கள் உலக மகா ஜெகத்குருவா..???"
ஓஷோ : " அதற்கு என்று சில பைத்தியக்காரர்கள் இருக்கிறார்கள்"
சீடன் : " நீங்கள் உங்களையே அடிக்கடி 'நான் ஒரு பைத்தியக்காரன் ' என்று கூறிக்கொள்ளுகிறீர்களே...!!! ஏன்..???
ஓஷோ : " வேறு எப்படிச் சொல்ல..???
நான் ஒரு ஆன்மீகப் பைத்தியக்காரன்தான்"
சீடன் : " சுருக்கமாக உங்களுடைய செய்தி என்ன....???"
ஓஷோ : "எல்லாம் நன்மைக்கே"
சீடன் : "உங்களை இந்த நாட்டு பிரதமமந்திரியாக ஆக்கினால்..???"
ஓஷோ : "உடனே ராஜினாமா செய்துவிடுவேன்" 


No comments:

Post a Comment