Saturday 2 February 2019

ஒப்பிடுதல்:

ஒப்பிடுதல்:
மக்கள் எப்போதும் தம்மைப் பிறருடன் ஒப்பிடுவது வழக்கம். இந்த ஒப்பீடுகளால்தான் அவர்கள் மகழ்ச்சியாகவோ, துக்கமாகவோ இருக்கிறார்கள். புகழ் பெற்ற மகான் ஒருவரை நான் சந்தித்தேன். எனக்கும் அவருக்கும் இடையில் என்ன வேறுபாடு என்பதை அவர் சொன்னார். "துக்கப்படுகிறவர்களைப் பார்ப்பதில்தான் மகிழ்ச்சியின் மர்மமே இருக்கிறது. ஊனமானவனைப் பார்க்கும்போது, நீ ஊனமில்லாமல் இருப்பதற்காக மகிழ்வு தோன்றும். கண்ணற்றவனைப் பார்க்கும்போது, நீ அப்படி இல்லை என்பதில் மகிழ்ச்சி பிறக்கும். ஏழையைப் பார்த்தால் நாம் ஏழை இல்லை என்பதில் ஆனந்தம் தோன்றும்", என்றார் அவர்.
மேலே உளறாமல் இருக்க, நான் அவரைக் குறுக்கிட்டுத் தடுக்க வேண்டி வந்தது.
"உங்களுக்கு ஒரு சிறிய விஷயம் புரியவில்லை. ஒப்பிட ஆரம்பித்தால் அதற்க்கு முடிவே இல்லை. பரிதாபத்திற்குரியவர்களோடு மட்டுமே ஒருவன் தன்னை ஒப்பிட்டுக் கொள்ள மாட்டான். தன்னை விட வலிமை படைத்தவனோடும், மதிப்பு மரியாதை கொண்டவனோடும் ஒப்பிட ஆரம்பிப்பான். அதனால், துக்கமே உண்டாகும். நீங்கள் ஆனந்த இரகசியத்தைச் சொல்லவில்லை. துக்கத்தின் இரகசியத்தையே சொல்கிறீர்கள்!" என்றேன்.
ஆனால், இப்படித்தான் காலம் காலமாக நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள், வெவ்வேறு வார்த்தைகளில். ஆனால், அடிப்படை என்னவோ ஒன்றுதான். பல மத நுல்களும் இதைத்தான் சொல்கின்றன. மக்கள் துக்கப்படுகிறவர்களைப் பார்த்து நிறைவடைகிறார்கள். தாம் அப்படித் துன்பப் படவில்லையே என்று கடவுளுக்கு நன்றி சொல்கிறார்கள். இது ஒரு பக்கச் சார்புடையதாகத் தொடர்ந்து இருந்து வரக் கூடாது. பிறரோடு உங்களை ஒப்பிட ஆரம்பிக்கும்போது உங்களை விடத் தாழ்ந்தவர்களோடு மட்டுமல்லாமல்,உயர்ந்தவர்களோடும் ஒப்பிடவே தோன்றும். மிஞ்சுவது நீங்காத கவலைதான். ஒப்பிடுதலே சரியில்லை. நீங்கள் நீங்களேதான். வேறு யாரும் அல்ல. ஒப்பற்றவர் நீங்கள். மற்றவரும் அப்படியே. அதனால்தான், ஒப்பிடாதீர்கள்.ஒப்பிடுவது உலகத்தோடு உங்களை விலங்கு மாட்டி விடுவது. அது போட்டி பொறாமைகளை ஏற்படுத்திவிடுகிறது. அது தனியாக வருவதில்லை. துணையுடனே வருகிறது.ஒப்பிடுவதற்கு முடிவே இல்லை.ஆனால், நீங்கள் முடிந்துவிடுவீர்கள்!அதை ஏற்றுக் கொள்வது, வாழ்வின் தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பதாகும்.
ஓஷோ

 ஓஷோ...... இந்த உலகம் ஆரோக்கியமற்று, மனநோய் பிடித்திருப்பதாக காணுகிறேன்
இது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் போகிறது
இதிலிருந்து தப்பிக்க என்ன வழி...???
‪பதில்‬ : " இதற்கு முக்கிய காரணம்
பழங்காலந்தொட்டே இந்த மனித இனத்தை ஆக்கிரமித்த மூடக்கொள்கைகளும் பிரக்ஞையற்ற செயல்களும்தான்
இதற்கு எல்லா மதங்களும் பொறுப்பேற்க வேண்டும்
இந்த மதங்களெல்லாம்
இந்த உலகத்தை கடவுள் என்ற ஒரு நபர்தான் ஏற்படுத்தினார் என்று கூறுகின்றன
அவர் எங்கும் நிறைந்தவர்
எல்லாம் தெரிந்தவர் என்று அவை கூறுகின்றன
இதனால் , மனிதன் நாம் கடவுளைவிட புத்திசாலி இல்லை என்று நம்பி
ஏதோ வாழ்ந்து மடிகிறான்
தன்னுடைய பகுத்தறிவு, சுயசிந்தனை எல்லாம் இழந்து
இயந்திரம்போல வாழ்கிறான்
இதுதான் இந்த உலகத்து துன்ப - துயரங்களுக்குக் காரணம்
என்னுடைய பார்வையில்
இந்த உலகத்தை எந்த ஒரு தனிநபரும்
ஏதோ ஒரு காரணம் கருதி படைத்திருக்க முடியாது
இந்த மிகப்பெரிய பொறுப்பை இல்லாத ஒரு தனிநபரிடம் ஒப்படைக்காதீர்கள்
நாம் இந்த பூமியில் இருக்கிறோம்
இதன் அழகிற்கும், ஆனந்தத்திற்கும், அழிவிற்கும் நாம்தான் காரணம்
நாம்தான் பொறுப்பேற்க வேண்டும்
நாம் இங்குள்ள ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் மிகத் திறமையாகப் பயன்படுத்த வேண்டும்
ஆகவே கடவுளை அகற்றிவிட்டு
அங்கு மனிதனை அமரச்செய்யுங்கள்
நீங்கள் எந்த அளவுக்கு இந்த உலகத்து பொறுப்புகளை தைரியமாக ஏற்றுக்கொள்கிறீர்களோ
அந்த அளவுக்கு இந்த உலகத்து துன்பங்கள் மறையும்
ஆனால்
எல்லா மதங்களும் என்ன சொல்கின்றன...???
" பொறுப்பை கடவுளிடம் விட்டுவிடுங்கள் " என்று கூறுகின்றன
இது உங்களிடம் ஒரு ஆழமான தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது
உங்களை ஒரு சோம்பேறியாக்குகிறது
நீங்கள் உங்கள் சக்தியை முழுமையாகப் பயன்படுத்துவது இல்லை
எது நடக்குமோ அதுதான் நடக்கும் என்றும்
எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான்
என்றும் பேசித் திரியாதீர்கள்
உங்கள் தோல்விக்கு மூலகாரணம் உங்கள் சக்தியை நீங்கள் முழுமையாக உபயோகிக்கவில்லை என்பதுதான்
என்னுடைய அணுகுமுறை என்னவென்றால்
நீங்கள் ஒரு படைப்பாளியாக வேண்டும் என்பதே
ஏனெனில்
உங்கள் ஒவ்வொருவரிடமும் அந்த சக்தி இருக்கிறது
நீங்கள் அதை வெளிப்படுத்த வேண்டும்
அதற்கு ஒரே வழி
நீங்கள் உங்கள் பழைய கடவுள்களை தைரியமாகத் தூக்கி எறியவேண்டும்
அவற்றை உங்கள் வாழ்விலிருந்து துடைத்து எறிய வேண்டும்
இதற்கு உங்களுக்கு மிகுந்த தைரியமும் சுயசிந்தனையும் தேவை
ஏனெனில்
பிறகு நீங்கள் வெறுமையை உணருவீர்கள்
ஒருவித பயம் உங்களிடம் ஏற்படலாம்
ஆனால் அதுதான் உண்மை
நீங்கள் இதுவரை நம்பிவந்த அனைத்தும் பொய், கற்பனை

வீரமும் அச்சமும் வெவ்வேறு அல்ல, அவை இரண்டும் மனிதன் வாழ்ந்திருக்க மிகவும் அவசியம், வீரமுடன் இருக்க வேண்டிய இடத்தில் அச்சப்படுவதும் தவறு, அச்சப்படும் இடத்தில் குருட்டு தைரியத்துடன் இருப்பதும் தவறு, மனிதன் எதற்க்காக அச்சப்படவில்லை என்றாலும் ஆசையிடம் மிகுந்த கவனத்துடனும் அச்சத்துடனும் இருக்க வேண்டும், ஆசைக்கு கண்களும் இல்லை செவிகளும் இல்லை, ஆசை தோன்றிவிட்டால் அதை கட்டுப்படுத்துவது பெரும்பாலும் நம் கையில் இல்லை, அது நம்மை எங்கு கொண்டு செல்கிறதோ அங்கே போக வேண்டும், ஆசையின் இயல்பே நம் அறிவினை மயக்கி சிந்தனையை மறைத்துவிடுவது தான். எனவே அவ்வாறு நம்மை வஞ்சித்து கெடுதியை கொடுக்கும் ஆசையிடம் அச்சத்துடனும் விழிப்புணர்வுடனும் இருப்பது தான் சிறந்த அறமாகும்
இனிய காலை வணக்கம் 🙏
The Valor and Fear are not different,
They are both essential for man to live.
It is wrong to be afraid of where to stay with Valor. blind beaveness is also wrong in the place where the fear needed
Man should not afraid of anything
Anyway he should be Taking great care of desire with fear.
There is no eye and no ear for desire
When it comes to desire, it is not often in our hands to control it, we will be going according to desire where it goes
Nature of the Desire is it fully covers our mind and hides our thinking
Hence we should be fear about our Desires which deceive us and gives bad reputation

புத்தர் கூறுகிறார் :
வேதங்களிலும் உபநிடதங்களிலும் எந்த உண்மையும் இல்லை
அழகிய வார்த்தைகளை கேட்கும் போது கவனமாயிருங்கள்
தத்துவார்த்தமான வாதங்களை கவனமாக கேளுங்கள்
மோனத்தை கைக் கொள்ளுங்கள்
எதுவெல்லாம் பொய் எனக் கண்டு கொள்ளும்போது
உன்னுடைய உணர்வுகளில் ஒரு மாற்றம் வருகிறது
மெய்யென்பது இருப்பது இருத்தல்
அது ஒரு எதார்த்தம் ஏற்கனவே இருப்பது
மெய் என்பது ஏற்கனவே இருந்து கொண்டே இருப்பது
மெய்யாலுமே ஆன்மீகவாதியாக இருப்பது என்பது ஒரு
மறுபிறப்பெடுப்பது
இன்னொரு முறை குழந்தையாகி விடுவது
நீ அறிந்ததை அழித்து விடு களங்கம் இல்லாதவனாகி விடு
மெய்யைப் பொய்யென்றும்
பொய்யை மெய்யென்றும்
கொள்பவன்
இழப்பது தன் நெஞ்சுதான்
அவன் ஆசையால் தன்னை நிரப்பிக் கொள்பவன்
மனம் என்பது ஆசையன்றி வேறில்லை
இந்தக் கணத்துக்காகவே இதயம் துடிக்கிறது
மனம் மட்டும் இந்தக் கணத்தில் இருப்பதே இல்லை
அது கடந்த கால அனுபவங்களை அசை போட்டுக் கொண்டு இருக்கிறது
அல்லது எதிர் கால கற்பனையில் திளைக்கிறது
மனம் நிகழ் காலத்தில் இருப்பதே இல்லை
ஆனால் நிகழ் காலம்தான் உண்மையில் இருப்பது
உன்னுடைய இதயத்திலிருந்து அன்பைக் காட்டு
கடவுளோடு உன்னை இணைப்பது உன் இதயமே 🌷
🌸 ஓஷோ
தம்ம பதம் I
மெய்யா பொய்யா

ஜென்னும்
Sufiம் (சூபி )
ஓஷோ
சிந்தனையில்,,,
ஜென்னும் சுபிசமும் இரு துருவங்கள்.
சுபிகள் மிகவும் அன்புடையவர்கள். மிகவும் அன்பு செலுத்துபவர்கள்.
மனித விழிப்புத் தன்மையின் வரலாற்றில் சுபிகள் போல தைரியமாக, முழுமையாக அன்பைப் பரிமாறிக் கொள்ளுபவர்கள் வேறு யாருமில்லை
அவர்கள் கடவுள் தன்மையை அல்லது கடவுளை காதலியாய் பாவித்து, உள்ளம் முழுக்க காதலாகி கசிந்து உருகுவார்கள்.
சொல்லப்போனால் பெண் தன்மைக்கு ஏற்ற சுபிசம்.(Sufism).
ஜென் நேர்மாறுதல். ஆண் தன்மைக்கு ஏற்றது.
ஜென் சூன்யத்தை வலியுறுத்துகிறது.
பெளத்தத்தில் கடவுள் கொள்கை என்று ஏதும் இல்லை.. அதற்கு தேவையும் இல்லை.
மதங்களின் முக்கிய அம்சம் பிரார்த்தனை.
புத்த மதத்தில் ( ஜென்) பிரார்த்தனையோ, மந்திர ஜபமோ எதுவும் கிடையாது.
நீங்கள் வெறுமையாக சூன்யமாக இருக்க வேண்டும்.
இந்த சூன்யத்தன்மைக்கு உங்கள் கடவுள் எண்ணமோ, பிரார்த்தனையோ, ஜபமோ தடையாக இருக்கும் என்று கருதுகிறது.
புத்த மதத்தின் சாரமே நீங்கள் சூன்யத்தில் இருப்பதுதான்."நீங்கள் "இல்லாத நிலையில் இருங்கள் என்று கூறுகிறது.
புத்தர் தன் மனித மனம் என்ற தன்மையில் ஆழமாக சென்று பார்க்கும் போது, அங்கு ஒன்றுமே இல்லை, வெற்றிடமாக உள்ளது என்று கண்டறிந்தார்.
புத்தர் மனத்தின் உள்நோக்கி பயணம் செய்தார்.
அவர் மேலும் மேலும் மன ஆழத்திற்கு செல்லும் பொழுது, அந்த வெற்றிடம் அல்லது சூன்யம் மிகவும் பரந்து விரிவதைக் கண்டார்.
அந்த சூன்யத்தின் மையமே உங்கள் உயிர்த்தன்மைதான்.
அது ஒரு மகா வெற்றிடம். அவ்வளவுதான்.
அது தன் உணர்வாய், தன் அறிவாய், உன் விழிப்பாய் உள்ளது.
அது ஒரு புரியாத புதிர். நம் மனதிற்கு அப்பால் செயல்படுவது. அந்தத் தன்மையை இதுவரை யாரும் அறிந்ததில்லை.
இந்தியாவில் உள்ளத்தின் மையத்தை ஆத்மா என்று அழைத்தார்கள். ஆனால் யாரும் அதன் பரிமாணத்தை கண்டறியவில்லை.
புத்தர்தான் முதன் முதலில் உணர்ந்தார்.
ஆத்மா என்றும் உள்ளம் என்றும் உள்ளே எதுவும் கிடையாது. ஏன் அங்கே ஒன்றுமே இல்லை.
ஆகவே அதற்கு "அனாதா" என்று பெயரிட்டார்.
இதன் பொருள் "ஆத்மா இல்லை" என்பதே
அங்கு நீ இல்லை. ஆனால் இருப்பது போல் தோற்றமளிக்கிறது.
ஓஷோ
புல் தானாகவே வளர்கிறது,,

ஜென் தனி மனித விழிப்புணர்வையே வலியுறுத்துகிறது
நாம் ஒரே பயிற்சியை திரும்பத் திரும்ப செய்யும்போது அது
பழக்கமாகி இயந்திரத் தன்மையாகி விடுகிறது
அதில் பிறகு எந்த விழிப்புணர்வும் இருக்காது
பிரபஞ்ச மனம் எப்பொழதும் நிகழ் காலத்திலேயே இயங்கக் கூடியது
உங்கள் மனதை ஒன்றுமற்றதாக ஆக்குங்கள்
பிரபஞ்ச மனம் ஆகுங்கள் ஞானம் பெறுங்கள்
பிரபஞ்ச மனத்தில் காலம் இடம் மறைந்து விடுகின்றன
பக்தி என்பது அன்பின் வெளிப்பாடு பயத்தின் வெளிப்பாடு அல்ல
நமது முகம் அன்பால் மகிழ்ச்சியாக மலர்ந்து இருக்கட்டும்
கருணையோடு காதலோடு இருக்கட்டும்
எந்த வித பயமோ குற்ற உணர்வோ இருக்க வேண்டாம்
கடவுளைப் பற்றிய பலவகை எண்ணங்களே கடவுளை அடைய தடையாய் உள்ளன
பிரபஞ்ச மனம் தன்னறிவாய் தன்னுணர்வாய் செயல் படுகிறது
சூன்யம்தான் உருவமாகி வந்துள்ளது
உருவம் திரும்பவும் சூன்யம் ஆகும்
உடல் எப்பொழதும் நிகழ் காலத்திலேயே இருக்கும்
மனம்தான் இறந்த காலத்திலேயோ அல்லது எதிர் காலத்திலேயோ இருக்கும்
மனத்தை நிகழ் காலத்தில் வைக்கும் பயிற்சிதான் ஜாஜென் 🏵
💐 ஓஷோ
ஜென் 💐

சிலைகளைக் கும்பிடுவது
சரியா..???
மஹரிஷி ரமணரின் பதில்
முஸ்லீம் அன்பரின் சந்தேகம்
திருவண்ணாமலையில் அருளாட்சி செய்து கொண்டிருந்த ரமண மஹரிஷியை அணுகி
தங்கள் சந்தேகங்களைப் போக்கிக் கொண்ட அன்பர்கள் ஏராளம்
பெரும்பாலும் மௌனத்தையே பாஷையாகக் கொண்டு வந்திருந்தோரின்
மனதில் சந்தேக விளக்கம் தானாகவே கிடைக்கும் படி அருள் பாலிப்பது அவர் வழக்கம்
சில சமயம் வந்திருந்திருப்பவரின் பக்குவத்திற்கேற்ப பதிலை அருள்வதும் உண்டு
ஒரு நாள் இரண்டு முஸ்லீம் அன்பர்கள் அவரை நாடி வந்தனர்
அவர்களுக்கு உருவ வழிபாடு பற்றி சந்தேகம் இருந்தது
பக்தர்: கடவுளுக்கு உருவம் உண்டா....???
மஹரிஷி: அப்படி என்று யார் சொன்னது..???
பக்தர்: அப்படி என்றால், கடவுளுக்கு உருவம் இல்லை என்றால், சிலைகளைக் கும்பிடுவது சரியா..???
மஹரிஷி: கடவுளை விட்டு விடுவோம்
ஏனென்றால் அவர் யாருக்கும் பிடிபடாதவர்
உங்களை எடுத்துக் கொள்வோம்
உங்களுக்கு உருவம் உண்டா...???
பக்தர்: ஆம், எனக்கு உருவம் உண்டு; பெயர் உண்டு
மஹரிஷி: அப்படி என்றால் உடல் அங்கங்களைக் கொண்ட ஒரு மனிதர் நீங்கள்
ஆறடி உயரம், தாடி கொண்டவர். சரி தானே...!!!
பக்தர்: நிச்சயமாக அப்படித்தான்
மஹரிஷி: சரி, அப்படியானால் தூங்கும் போது உங்களை நீங்கள் காண்கிறீர்களா...???
பக்தர்: விழித்து எழுந்தவுடன் நான் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது தெரிகிறது
ஆகவே, அநுமானத்தின் மூலமாக நான் இப்படி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறேன் என்பது தெரிய வருகிறது
மஹரிஷி: நீங்கள் உடல் தான் என்றால்
இறந்த பிறகு சவத்தை ஏன் புதைக்க வேண்டும்...???
உடல் தன்னைப் புதைப்பதை எதிர்க்க அல்லவா வேண்டும்..???
பக்தர்: இல்லை, நான் பரு உடலில் உள்ளே இருக்கின்ற உள்ளுறை ஜீவன்
மஹரிஷி: ஓ...!!!
அப்படி என்றால்,
உண்மையிலேயே நீங்கள் உருவம் இல்லாதவர் என்றாகிறது
ஆனால் இப்போது உடல் மூலமாக உங்களை அடையாளம் கண்டு சொல்கிறீர்கள்
இப்படி உடலுடன் இருக்கும் போது அடையாளம் காணும் நீங்கள்,
உருவம் இல்லாத கடவுளை உருவமாகக் காண்பதில் என்ன தவறு இருக்கிறது..???
கேள்வி கேட்டவர் திகைத்து விட்டார் 

சிறந்த பொய் 🎈
🎁 ஒரு அரசன் நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும் ஒருவருக்கு
ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்
நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர்
ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை
ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒரு ஏழை
அரச சபைக்கு வந்து
தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்
அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார்
அந்த ஏழை சொன்னான்
''அரசே, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா..???
நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது
அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்
''அரசனுக்கு கோபம் வந்து விட்டது
''நீ பொய் சொல்கிறாய்
நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது..???' என்று கத்தினான்
உடனே ஏழை சொன்னான்
"அரசே, நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள்
நான் சரியான பொய் சொன்னேன் என்று
எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்
''அரசன், தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான்
உடனே சொன்னான்
''இல்லை, இல்லை
நீ பொய் சொல்லவில்லை'' என்று அவசரமாக மறுத்தான்
ஏழை சொன்னான்
'நல்லது அரசே
நான் சொன்னது பொய் இல்லை
உண்மைதான் என்றால்
எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்
''அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று
ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்

கடவுள் இருக்கிறாரா..???
"கடவுள் ஏன் அவர் இருப்பதை வெளிப்படுத்துவதில்லை...????'' சீடன் கேட்டான்
குரு ஒரு கதை சொன்னார்
"கடவுள் இருக்கிறார்" என்று நம்பிய ஒரு மனிதன் மெல்ல சொன்னான்
'கடவுளே...!!! என்னோடு பேசுங்களேன்....!!!'
அப்போது குயில் ஒன்று பாடியது
அதைக் காதில் வாங்காத அவன், உரத்த குரலில் கத்தினான்
'கடவுளே, என்னோடு பேசுங்களேன்..!?!'
உடனே உரத்த இடியோசை, எழுந்தது
அதையும் பொருட்படுத்தாத அவன்
'பேசாவிட்டாலும், உன் தரிசனமாவது தரக்கூடாதா..???' என்று இறைவனிடம் கேட்டான்
சுடர்விட்டுப் பிரகாசித்த படி
வானில் ஒரு நட்சத்திரம் உதித்தது
அதைக் கவனிக்காமல் அவன் கேட்டான்
'ஏதாவது ஓர் அற்புதம் நிகழ்த்த மாட்டாயா..???'
கடவுள் மெல்ல கீழே இறங்கி, பட்டாம்பூச்சியாக அவனைத் தீண்டினார்
அவனோ தன் மேல் அமர்ந்த பட்டாம்பூச்சியை கைகளால் தட்டிவிட்டு
நடந்தபடி சொன்னான்
'கடவுள் இல்லை..!!!
இருந்திருந்தால் என்னோடு பேசி இருக்கலாம்
பார்க்க முடிந்திருக்கும்
அற்புதமாவது நிகழ்ந்திருக்கும் எதுவுமே நடக்க-வில்லையே..!!!''
கதையைக் கேட்ட சீடன் சொன்னான்
"புரிந்தது குருவே..!!!
கடவுள், தான் இருப்பதை வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்
நாம் தான் புரிந்து கொள்வதில்லை..!!!''
என்றான்
உண்மை தானே 

No comments:

Post a Comment