Thursday 29 November 2018

பேர்கன் தமிழ் கலைஞர்கள் சங்கம் யாப்பு யாப்பு

பேர்கன் தமிழ் கலைஞர்கள் சங்கம்   
                                                                 
                                                                                  யாப்பு
1) நோக்கம்
    1) பேர்கன் வாழ் தமிழ் மக்களிடையே கலைஞர்களை உருவாக்குதல்

     2) கலை இலக்கியங்களை வளர்ப்பது

     3) தாயகத்தில் உள்ள கலைஞர்களுக்கு உதவுதல்

     4) நாம் வாழும் நோர்வே சமூகத்தில் உள்ள கலை இலக்கியக்கிய
         கலாச்சாரத்தில் பிணைப்பை ஊக்கப்படுத்துவது
2) அமைப்பு முறை : மூன்று கட்டமைப்பாக இது செயல்படும், பொதுச்சபை, மூத்தோர் அவை, நிர்வாக சபை
      பொதுச்சபை
    1) பொதுச்சபையில் கலை இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் இதில்
        அங்கத்தவர்களாக இருக்கலாம், தமிழர்கள் அல்லாதவர்களும் இதில்
        கலந்து கொள்ளலாம்
   2) வருடம் ஒரு முறை பொது அமர்வு இடம் பெறும் தேவை ஏற்படின்
       பலதடவை இந்த அம்ர்வு இடம் பெறலாம்
      மூத்தோர் அவை
    1) இந்த அவையில்  கலை இலக்கியத்தில் அனுபவமிக்கவர்கள் அல்லது
        ஆர்வமுள்ள ஓய்வு நிலையில் இருப்பவர்கள் அங்கத்தவர்களாக‌
        இருப்பார்கள்,

    2) தமிழர் அல்லது நோர்வே நாட்டவர் யாராகவும் இந்த அவையில்
        இடம்பெறலாம்

    3)இவர்கள் நிரந்தர உறுப்பிணர்கள் ஆவார்கள்.

   4)ஆலோசனை வழங்குதல் மட்டுமே இவர்கள்து கடமையாகும்

நிர்வாக சபை

1) இந்த நிர்வாக சபை ஒன்பது உறுப்பிணர்களை கொண ஒரு குழு ஆகும், தலைவர், உபதலைவர், செயலாளர், உப செயலாளர், தனாதிகாரி ஆகியோர் இதில் அடங்குவார்கள்

2) நிர்வாக கூட்டம் வருடத்தில் நான்குதடவை கட்டாயம் கூட்டப்படவேண்டும், அவரசரமான நிலையிலும் தலைவர்  நிர்வாக கூட்டத்துக்கு அழைப்பு விடலாம்

3) நிர்வாகிகள் பொதுக்கூட்டத்தில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்.இத்தேர்தலை மூத்தோர் அவை செயல்படுத்தும்,

4) நிர்வாக சபையின் ஆயுள் காலம் மூன்றுவருடம் ஆகும்

5) முதல் இரண்டு வருடம் பூர்த்தியானதும், தலைவர், செயலாளர் தனாதிகாரி ஆகியோர் விலகிச்செல்ல உபதலைவர், உப செயலாளர் அப்பதவிகளை பொறுப்பெடுப்பார்கள்,தனாதிகாரிக்கு ஏற்கனவே இருந்த நான்கு நிர்வாக உறுப்பிணரில் ஒருவரை பொதுச்சபை தெரிவு செய்யும்
                                                                                                                                           
                                                                           

Tuesday 27 November 2018

பேர்கன் தமிழ் கலைஞர்கள் சங்கம்

                      பேர்கன் தமிழ் கலைஞர்கள் சங்கம்                                      Bergen Tamil Kunstnere Forening                                                      Bergen Tamil Artists  Forum


  பேர்கன் வாழ் தமிழ் உறவுகளே! எமது மத்தியில் தமிழ் கலை இலக்கிய த்தை வளர்க்கவும், ஊக்குவிக்கவும், பொருத்தமான ஒரு பொதுவான அமைப்பு எம்மிடையே இல்லை,  சங்கீத நடன அமைப்புகள் எம்மிடையேஇருக்கின்றன, கலையை தமிழ் அறிவை ஊட்ட தமிழ் பாடசாலைகள் இயங்கிவருகின்றன, இந்து சபா, தமிழ் சங்கம், கிறிஸ்தவ அமைப்புகள் எம்மிடையே இயங்கி வருகின்றன, இப்படிப்பட்ட அமைப்புகள் ஊடாக தமிழ் கலைஞர்களை இனம் கண்டு, அவர்களை ஒன்றினைத்து செயல் பட நமக்குள் ஒரு கலைஞர்கள் அமைப்பு தேவை என்பது அவசியமாகி ன்றது, இருக்கின்ற கலைஞர்களை ஊக்குவிப்பதும், புதிய கலைஞர் களை உருவாக்குவதிலும் இந்த அமைப்பு செயல்படவேண்டும் என விரும்புகின்றோம், நோர்வே கலை கலாச்சரத்துடனும், நோர்வே கலை ஞர்களின் உதவியுடனும் ஒன்றாக பயணிப்பதால், நோர்வே தமிழ் கலை, கலாச்சார பரிமாற்றத்துடன் கூடிய ஒரு இளம் சந்ததியினரை உருவா க்கலாம் என்பது எமது பொதுவான எண்ணம்! இந்த எத்தனிப்பானது நோர்வே சமூகத்தோடு எம்மை இறுக பிணைப்பதோடு மட்டுமல்லாமல், தமிழின் கலை கலாச்சார பாரம்பரியங்களை நோர்வே மக்களிடையே கொண்டு செல்லும் ஒரு பாலமாக இந்த சங்கம் அமையும் என்பது எமது நோக்கத்தில் ஒன்றாகும். இது தொடர்பான ஒரு கலந்துரையாடலுக்கு தங்களை அழைக்கின்றோம்! நன்றி

இடம்
காலம்
நேரம்                                                                                                                                                                                                                                                                          இவ்வண்ணம்

                                                                                                                                                                                                                                                                பூர்வாங்க குழு சார்பில்

மேலதிக தொடர்புகளுக்கு: தேவதாஸ்  92278528                                                              btkf@hotmail.com

Wednesday 21 November 2018

எங்கள் கேள்விக்குப் பதில் ஏதையா ?

எங்கள் கேள்விக்குப் பதில் ஏதையா ? பகுதி-2 கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

லகம் அதிரும் வண்ணம்,
இலங்கையின் அரசியற்களம் சூடுபிடித்துக்கொண்டேயிருக்கிறது.
தமிழ்நாட்டில் 'சர்க்கார்" ஏற்படுத்திய பரபரப்பைவிட,
நம்நாட்டின் 'சர்க்கார்" ஏற்படுத்தும் பரபரப்பு அதிகமாய் இருக்கிறது.
நாளுக்குநாள் அரங்கேறும் புதிய புதிய காட்சிகளால்,
மக்கள் அதிர்ந்து பிளவுபட்டுக் கிடக்கிறார்கள்.
இலங்கை அன்னையை தமிழர்கள் சிதைக்கப்பார்க்கிறார்கள் என்று,
ஒருகாலத்தில் குற்றம் சாட்டியவர்கள் இன்று,
தாமே அக்கைங்கரியத்தைச் சிறப்புறச் செய்து வருகிறார்கள்.
அவைபற்றி நிறைய எழுதவேண்டும்.
அதற்கு முன்பாக சென்றவாரத் தொடர்ச்சியாய்,
வடக்கின் முக்கிய தலைவர்களை நோக்கி,
மக்கள் எழுப்பும் கேள்விகளைப் பார்ப்போம்.

◆◆◆

எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தரிடம்...


  1. உங்களுடன் ஒன்றிணைந்த கட்சிகளை உதாசீனம் செய்ததும், கூட்டுக்கட்சிகளின் தலைவராய் இருந்துகொண்டு தன்னிச்சையாய் முடிவுகள் எடுத்ததும்தான், இன்றைய கூட்டமைப்பின் வீழ்ச்சிக்குக் காரணம் என்பதை உணர்கிறீர்களா? 
  2. நீங்கள் வலிந்து அழைத்துக்கொண்டு வந்த மு.முதலமைச்சர் கட்சிக்கு மாறாக நடக்கத்தொடங்கியபோதும், அவர் உங்களைப் புறக்கணித்து தமிழ்ப் பேரவையின் தலைமையை ஏற்றபோதும், வேற்றுக் கட்சிகளைப் பாராட்டிப் பகிரங்கமாய் உங்கள் அணியைக் குற்றஞ்சாட்டிய போதும் துணிந்து அவர்மீது நடவடிக்கை எடுக்காததன் காரணம் என்ன?
  3. மு.முதலமைச்சரின்மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவுஸ்திரேலியாவில் வைத்து சுமந்திரன் அறிவித்த செய்தி சர்ச்சையாகி ஊடகங்களில் அடிபட்டபோது ஏதும் தெரியாதவர் போல் இருந்துவிட்டு பின்னர், அது சுமந்திரனின் தனிப்பட்ட கருத்து என்று அறிவித்ததில் உண்மையில்லை என்பதை ஒத்துக்;கொள்கிறீர்களா?
  4. மு.முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை உங்களுக்குத் தெரியாமல்த்தான் கொண்டுவரப்பட்டது என்ற கூற்றை இன்னும் மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறீர்களா?
  5. தங்களுக்குத் தெரியாமல் அப்பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்தால் தன்னிச்சையாய், அச்செயலைச் செய்த கட்சிக்காரர்களின்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
  6. மு.முதலமைச்சர் முரண்பட்ட நிலையில், அவரை தனியாய்; சந்தித்து நீங்கள் பேசியது என்ன?
  7. உங்களால் வலிந்து அழைத்துவரப்பட்ட மு.முதலமைச்சரால் இன்று கட்சியும், இனமும் பிளவுபட்டிருக்கும் நிலையில் அதற்கான பொறுப்பையேற்று கூட்டமைப்பின் மாற்றணியினரிடம் மன்னிப்புக்கோரும் கடமை உங்களுக்கு இல்லையா?
  8. மு.முதலமைச்சரின் இத்தனை கோளாறுகளையும் சகித்து இருந்த நீங்கள் அந்த சகிப்புத்தன்மையை ஆனந்தசங்கரியிடமும், கஜேந்திரக்குமாரிடமும், சுரேஷ் பிரேமச்சந்திரனிடமும் காட்டத் தவறியதன் காரணம் என்ன?
  9. இவர்களை விட மு.முதலமைச்சர் இனத்திற்காய் அதிகம் தியாகம் செய்தாரா?
  10. பலதரம் உங்கள் ஆதரவால் கூட்டாட்சி அரசாங்கத்தை காத்த நீங்கள் அரசியல்கைதிகளின் விடுதலையில் கூட அதிகாரம் செலுத்த முடியாமல் போனதன் காரணம் என்ன?
  11. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றதன் மூலம் அரசில் அங்கம் வகிக்கத் தயாரான நீங்கள் ஏன் ஒருசில முக்கிய அமைச்சுப்பதவிகளைக் கோரி தமிழ்மக்களுக்கு உதவியிருக்கக்கூடாது? 
  12. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றதன் மூலம் இனத்திற்காய் நீங்கள் சாதித்தவை எவை?
  13. உங்களின் தலைமைச் செயற்பாடுகள் உங்களால் தீர்மானிக்கப்படுகின்றனவா? அல்லது வெளியிலிருக்கும் பலமிக்க வேற்றுச்சக்திகள் உங்களை இயக்குகின்றனவா?
  14. தனது பதவியை சரிவர நிர்வகிக்காது, திரும்பத்திரும்ப உங்களை குற்றம் சாட்டிய, மு.முதலமைச்சரை கடைசிவரை என்ன காரணத்தினாலோ  பதவியிலிருக்க அனுமதித்த நீங்கள் பிரிந்து சென்ற ஆனந்தசங்கரி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றோரை இனநன்மை நோக்கி மீண்டும் ஒன்றிணைத்து தமிழ்த்தலைமையை ஒரே குடைக்கீழ் கொண்டுவர முயலக்கூடாதா? 
  15. கட்சியின் ஒற்றுமையை குலைக்கப்பார்த்தார்கள் என்று மற்றவர்கள்மேல் கோபம் கொண்ட நீங்கள், உங்களால் அழைத்துவரப்பட்டவர் கட்சியின் ஒற்றுமையைக் குலைத்தபோது மௌனம் சாதித்ததன் மர்மம் என்ன? மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பது இதனைத்தானா?
  16. இன்று மத்திய அரசில் ஏற்பட்டிருக்கும் பெருங்குழப்பத்தில் ஐக்கிய தேசிக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறீர்கள். கூட்டமைப்பின் மாற்றணியினரோடு கலந்து பேசித்தான் இம்முடிவை எடுத்தீர்களா?
  17. ரணிலை ஆதரிப்பதாய் முடிவெடுத்திருக்கிறீர்கள். ஒருவேளை ரணில் தோற்றால் மஹிந்தவால் தமிழினம் பாதிக்கப்படாதா? நடுநிலைமை வகித்தல் என்பது தங்கள் சார்பான சிறந்த தீர்வாய் இருந்திருக்கும் என்று நீங்கள் கருதவில்லையா?
  18. ரணிலை ஆதரிக்கவில்லை. ஜனநாயகத்தை ஆதரிக்கிறோம் என்கிறீர்கள். அங்ஙனமாயின் வங்கி ஊழல் பிரச்சினை வந்தபோது ஓர் எதிர்க்கட்சித் தலைவராய் தேசத்தின் நன்மை கருதி குரல் கொடுக்காததன் மர்மம் என்ன?
  19. அடுத்த முதலமைச்சராய் யாரை நியமிப்பதாய் முடிவு செய்திருக்கிறீர்கள்? உங்கள் தேர்வு முழுத்தோல்வி அடைந்து விட்டதால், அடுத்த முதலமைச்சர் தேர்வை மாற்றணியினர் செய்ய அனுமதிப்பீர்களா? அல்லது அவர்கள் கருத்துக்கேனும் மதிப்பளிப்பீர்களா?
  20. நீங்கள் முதுமையின் எல்லையில் நின்று கொண்டும் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்? என இன்றுவரை இனங்காட்டாமல் இருப்பது சரியா?
  21. பாராளுமன்றத் தேர்தலில் என்ன அடிப்படையில் உறுப்பினர்களுக்கான இட ஒதுக்கீடுகள் செய்கிறீர்கள்? 
  22. திரும்பத் திரும்ப ஒருவருக்கே பதவி கொடுத்து, பதவிகளைக் குடும்பச் சொத்தாக்க அனுமதிப்பது ஏன்?
  23. தகுதியும் விசுவாசமும் இனப்பற்றும் அற்ற கட்சிக் கட்டுப்பாடுகளை மீறுகிற தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களை அடுத்த தேர்தலில் நீக்குவீர்களா? 
  24. உங்கள் தலைமையின் இறுக்கமின்மைதான் கட்சி உறுப்பினர்களைத் தன்னிச்சையாய் நடக்கச்செய்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?
  25. உங்கள் நம்பிக்கை முழுவதும் சுமந்திரனின்மேல்த்தான் என்பது உலகறிந்த ரகசியம். அதைத்தானும் நீங்கள் வெளிப்படையாய்ச் சொல்லத் தயங்குவது ஏன்?


மு.முதலமைச்சர் கௌரவ சி.வி. விக்னேஸ்வரனிடம்...


  1. அன்றைய நிலையில் மக்கள் செல்வாக்கு இல்லாதிருந்த உங்களைத் தேர்தலில் நிற்கவைத்து உலகெல்லாம் சென்று பணம் திரட்டி பெருவெற்றி பெறவைத்த கூட்டமைப்புடன் ஓர் ஆண்டுக்குள் பகைவரக் காரணம் என்ன?
  2. பகை வந்தவுடன் அதை மக்கள்மன்றில் வெளிப்படச்சொல்லி விலகாமல் உடனிருந்துகொண்டு இடைத்தேர்தலில் வேற்றணியினரை மறைமுகமாய் ஆதரித்ததன் காரணம் என்ன?
  3. தமிழ்மக்கள் பேரவையை அமைத்தபோது பல கட்சிகளையும் அழைத்த நீங்கள் உங்களை அரசியலுக்கு அழைத்து வந்த தமிழரசுக்கட்சியின் தலைமைக்கு அழைப்பு விடாதது ஏன்?
  4. ஆரம்பத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரனின் தம்பிக்கு அமைச்சர் பதவி தர கடுமையாய் மறுத்தீர்கள். அதனால் அவர்கள் கூட்டமைப்போடு முரண்பட்டு வெளியேறிய நிலையில் கூட்டமைப்புடனான உங்களது பகையைச் சாதிக்க பின்னர் அதே நபருக்கு பிடிவாதம் பிடித்து பதவி கொடுத்தீர்கள். இதை வைத்து உங்களை சுயநலமியாய் குற்றம் சாட்டினால் என்ன பதில் சொல்வீர்கள்?
  5. ஆயுதக்குழுக்களுடன் என்னால் இயங்கமுடியாது என்று முன்பு பேசிய நீங்கள் இன்று அதே நபர்களுக்காக கஜேந்திரகுமாருடன் முரண்பட்டு நிற்பதன் ரகசியம் என்ன?
  6. மஹிந்தவின்முன் சத்தியப்பிரமாணம் செய்யமாட்டேன் என்று மற்றவர்களை நம்பச் செய்து நீங்கள் உங்கள் குடும்பத்தாருடன் அவர் முன்னே சென்று சத்தியப்பிரமாணம் செய்ததன் நியாயம் என்ன?
  7. உங்களது அமைச்சர்கள் மீதான ஊழல்க் குற்றச்சாட்டில், நீங்களே அமைத்த விசாரணைக்குழுவின் தீர்ப்பு உங்களது கையாட்களுக்கு எதிராக வந்தபோது, அதனை மறுத்ததன் நோக்கம் என்ன?
  8. 'என்னை பொம்மையாய் பயன்படுத்த நினைத்தார்கள்." என்று, இன்று பதவி முடிந்ததும் குற்றம் சாட்டும் நீங்கள், அவ் உண்மை தெரிந்ததும் பதவியை உதறிவிட்டு வெளிவராமல் கடைசி நாள்வரை பதவியில் ஒட்டியிருந்து பயன்பெற்றுவிட்டு பதவி முடிந்தபின் புதிய கட்சி தொடங்கியது நியாயமா?
  9. அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இன்று முதலைக்கண்ணீர் வடிக்கும் நீங்கள் இந்தியப் பிரதமரின் யாழ் வருகையின் போது சிறைகளிலிருக்கும் ஈழத்தவர்களுக்காக அன்றி கொலைச்சாமியார் பிரேமானந்தாவின் சீடர்களின் விடுதலைக்காக விண்ணப்பித்த அசிங்கத்தின் அடிப்படை என்ன?
  10. உரிமைக்காகத்தான் போராடுவேன் சலுகைகளுக்கு அடிபணியமாட்டேன் என்ற நீங்கள் பதவி முடியும் நிலையில் உங்களுக்கான வாகனச்சலுகை கேட்டு விண்ணப்பித்தது கேவலம் இல்லையா?
  11. மத்தியஅரசில் குழப்பம் ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில் தமிழ்த்தலைவர்கள் என்ன செய்யவேண்டும் என்பது பற்றியோ அல்லது எனது நிலைப்பாடு  இதுதான் என்பது பற்றியோ நீங்களும் உங்களைச் சார்ந்த தமிழ்மக்கள் பேரவையும் இதுவரை வாய்திறக்காமல் இருப்பதன் அர்த்தம் என்ன?
  12. அகதிகளுக்கு வழங்கப்படவிருந்த பொருத்துவீடுகளை வேண்டாம் என்று உதறிய நீங்கள் அவ் அகதிகளுக்கு இன்றுவரை வீட்டு வசதிக்காய் செய்த உபகாரம் என்ன?
  13. பெரும்பான்மை பெறுவதற்காக மாற்றணி உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் செயலை உங்கள் சம்பந்தி வாசுதேவ நாணயக்கார நியாயப்படுத்தி பேசியிருக்கிறார். அதுபற்றி ஒருதமிழ்த்தலைவராய் பொது அரங்கில் வாய் திறப்பீர்களா?
  14. கட்சிக்கட்டுப்பாட்டை மீறுகிறார் என தமிழரசுக்கட்சி குற்றம் சாட்டியபோது நான் கட்சி உறுப்பினன் அல்லன். சுதந்திரமானவன் என்று பகிரங்கமாய்ச் சொன்னவர் நீங்கள். இன்று தமிழரசுக்கட்சியிலிருந்து விலகுவதாய் அதன் தலைவருக்குக் கடிதம் எழுதியிருக்கிறீர்கள். முன்னைநாள் நீதியரசர் இங்ஙனமாய் மக்கள் மன்றில் பொய்யுரைக்கலாமா?


◆◆◆

மேற் கேள்விகளால் நம் தலைவர்கள் சிலவேளை கோபப்படலாம்.
அவர்கள் கோபப்படுகிறார்களோ இல்லையோ,
அவர்தம் 'வால்பிடிகள்" நிச்சயம் கோபப்படுவார்கள்.
அதுபற்றி நாம் ஏன் கவலைப்படவேண்டும்?
தலைவர்களின் புகழும் பதவியும் மக்களால் கொடுக்கப்பட்டவை.
எனவே அவர்கள் எவ்வளவு உச்சத்தில் இருந்தாலும்,
மக்கள் மன்றுக்கு தலைசாய்த்துத்தான் ஆகவேண்டும்.
மக்களின் முட்டாள்தனந்தான் தங்கள் மூலதனம் என நினைந்து,
நம் தலைவர்கள் இதுவரை செய்த பொய்மைகள் போதும்.
மிக விரைவில் மக்கள் புத்திசாலிகளாகப் போகிறார்கள்.
தொடர்ந்தும் அவர்களை மூடர்களாக்கி முன்னேறலாம் எனும்,
இவர்களின் எண்ணம் கனவாகப் போவது நிஜம்.
அதற்கான ஓர் முன்னோட்டமாகத்தான் இக் கேள்விகள்.
யதார்த்த வெளியிலிருந்து வீசப்படும் கற்களாய்,
மேற்கேள்விகள் தொடுக்கப்படுகின்றன.
சமூகத்திற்குப் பதில் சொல்லாவிட்டாலும்,
இக்கேள்விகளுக்கான பதில்கள் தங்களிடம் உண்டா? என,
தலைவர்கள் தம் நெஞ்சைக் கேட்டுக் கொள்வது நல்லது.
தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன் நெஞ்சே தன்னைச் சுடும்.
தொடரும் சம்பவப்பதிவுகளோடு,
அடுத்தவாரம் சந்திப்போம்.
◆◆◆◆◆◆◆◆◆

கெடும்.


Kirupakaran KaranFollow
எது கெடும் ?!?
01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.
21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும் கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.
41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.
51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.
கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு

இதயத்தில் ஆப்பரேஷன்

மிகவும் சிந்திக்க வைத்த பதிவு.
||| 80 வயதுடைய ஒரு மனிதரின் 💝இதயத்தில் ஆப்பரேஷன் நடந்தது.
நல்லபடியாக நடந்து முடிந்த பின்...
+ அவரிடம் ரூபாய் 8 லட்சத்திற்க்கான பில்லை மருத்துவமனை அதிகாரிகள் கொடுத்தனர்......
+ அந்த பில்லை பார்த்ததும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை....😭
+ அப்பெரியவரின் பரிதாபகரமான அழுகையைப் பார்த்த.....
மருத்துவர் கூறுகிறார்....
அழாதீர்கள் தாங்களுக்கு என்னால் முடிந்த
அளவு பில்லை குறைத்துவிடுகிறேன் என்றனர்....😎🤓
+ அதற்கு பெரியவரின் பதிலை என்னவென்று பாருங்கள்.....
+ எனக்கு அது பிரச்சினையில்லை,
பில் 10 லட்சமாக இருந்தாலும் என்னால் தர முடியும்.....
+ ஆனால் 80 வருடமாக என் இதயத்தை பாதுகாத்த இறைவன் ஒரு ரூபாய்கூட பில் கேட்கவில்லையே🤗.....
இவ்வளவு நாள், இதனை உணர்ந்ததே இல்லை, இப்போது உணர்ந்தபோது,
கண்ணீர் வழிகிறது,
+ மூன்று மணி நேரம் மட்டும் நீங்கள் பாதுகாத்ததற்கு எட்டு லட்சத்திற்க்கு பில்....
+ எல்லாம் வல்ல கடவுள்
கருணையையும் அன்பையும் நினைத்து அழுதுவிட்டேன் என்றார்......
+ இறைவனின்
அருட்கொடைக்கு
நிகர் இறைவனே.....
- நாம் தான் நன்றி கெட்டவர்களாக
இந்த மண்ணில் வாழ்கிறோம்.....
+ எந்த எதிர் பார்ப்புமே இல்லாமல் எப்போழுதும் நம்மை கண்ணும் கருத்துமாக பத்திரமாக பாதுகாப்பவர் அன்பே உருவானவர் இறைவன் மட்டுமே....
நமக்கு கிடைத்த வாழ்கை எத்தனை பேருக்கு கிடைக்க வில்லை என உணர்ந்தால், நாம் தினமும் இறைவனுக்கு நன்றி சொல்ல மட்டுமே ஆலயத்திற்கு செல்வோம்.
இறை நம்பிக்கை
உள்ள என் அனைத்து
நண்பர்களுக்காகவும் இந்த பதிவு

கடவுள்: கழுதை

கடவுள்: கழுதையைப்
படைத்து அதனிடம் சொன்னார். நீ
கழுதையாகப் பிறந்து, நாள் முழுவதும்
பொதி சுமப்பாய். உனக்கு சிந்திக்கும் திறனே கிடையாது. புல்லைத்
தின்று 50 ஆண்டுகள் வாழ்வாய்.
கழுதை: கழுதையாகப் பிறந்து 50 ஆண்டுகள் வாழ விருப்பமில்லை. 20 ஆண்டுகளே போதும்.
கடவுள்: அப்படியே ஆகட்டும்
கடவுள்: நாயைப் படைத்து அதனிடம்
சொன்னார். நீ மனிதனின்
வீட்டை பாதுகாத்து அவனுக்கு நல்ல
நண்பனாய் இருப்பாய். மனிதன் தரும்
மிச்ச மீதிகளை உண்டு 30 ஆண்டுகள் வாழ்வாய்.
நாய்: 30 ஆண்டுகள் எனக்கு அதிகம். 15 ஆண்டுகளே போதும்.
கடவுள்: அப்படியே ஆகட்டும்.
கடவுள்: குரங்கைப் படைத்து அதனிடம்
சொன்னார். நீ மரங்களில்
கிளைக்கு கிளை தாவி குழந்தைகளை மகிழ்விப்பாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்.
குரங்கு: எனக்கு 10
வருடங்களே போதும் சாமி.
கடவுள்: அப்படியே ஆகட்டும்.
கடவுள்: மனிதனைப் படைத்தார். நீ
சிந்திக்கும் ஆற்றலுடன் பிறப்பாய். உன்
அறிவைப் பயன்படுத்தி எல்லா உயிர்களையும் உன் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவருவாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்.
மனிதன்: சாமி. 20 வருடம் எனக்கு ரொம்ப குறைவு.
கழுதை வேண்டாமென்று சொன்ன 30 வருடங்களையும், நாயின் 15 வருடங்களையும், குரங்கின் 10 வருடங்களையும் எனக்குத் தாருங்கள்.
கடவுள்: அப்படியே ஆகட்டும்.
அன்றிலிருந்து மனிதன் 20 வருடங்கள்
மனிதனாகவும், பின் திருமணம்
செய்து 30 ஆண்டுகள் கழுதையைப்
போல குடும்பப் பாரம் சுமந்தும்,
குழந்தைகள் வளர்ந்த பின் 15 ஆண்டுகள்
நாயைப் போல வீட்டைப் பாதுகாத்தும்,
கடைசிப் பத்து வருடங்கள் குரங்கைப்
போல தன் ஒவ்வொரு மகன் அல்லது மகள் வீடு சென்று பேரக் குழந்தைகளை மகிழ்விக்கிறான் .
படித்ததில் பிடித்தது.

சர்வதேச_மீனவர் #தினத்திற்காக#எழுதப்பட்ட_வரிகள்_

நானோ சிறியோன் எதுவுமே அறியேன்
காணும் காட்சி எல்லாம் விதியோ
முத்தென்பார் இலங்கையை மூத்தோர்
முத்துமே விலையாமே முன்னாளிலே முத்தரிப்புதுறையிலே
வெள்ளைக்காரன் சுரண்டினானாம்
கொள்ளையழகுத் திருநாட்டினை
நக்கலாச் சொன்னாளே எங்கள்
வீட்டுப் பாட்டியம்மா
இன்னாளும் மண்ணாகிப் போகுதே
அந்நிய அதிகாரத்தினாலே
கடலிலே மீன் பிடிக்கச் சொன்ன அரசாங்கமே
கடல் எல்லையைத் தாண்டியும்
பிடிக்கச் சொல்லிக் கொடுத்தாயோ
அலையாடும் கடலிலே பலியாக
எம் மக்களும் பல நாளும் வலை
தொலைத்தே கரை சேர்ந்தனரே
பெரிய பெரிய இழுவைப் படகாம்
அய்யோ அம்மா பயமம்மா
விடிய விடிய இழுக்குறானாம்
மீன் வளத்தையம்மா
விரட்டியும் மிரட்டியும் பார்த்து விட்டோம்
விடிந்த பின்னும் ஊரு போய் அவர்கள் சேரவில்லையம்மா
எதிர்த்து நின்றால் வாள் எடுத்து வீசுகின்றான்
படகெதிரே வந்து எங்களையே
மூழ்கடிக்க முனைகின்றான்
உள்நாடும் வெளிநாடும் கைகோர்த்து
விரட்டியடித்தே
விடியும் முன் மடிதல்தான் எங்களின்
வரலாறோ
என்ன வளம் இல்லை எம் ஈழத்திலே
எண்ணை வளமும் இருக்குதெம்
கடலோரத்திலே
பனைமரமும் முடி கவிழ்ந்து முடிவின்
தேடலிலே
மண்வளமும் கெட்டுதானே போகுதே
நாட்டினிலே
பெற்றோலியத்தைத் தோண்டிட
முழுமூச்சாய் முதலீடும்
முண்டியடித்து முற் பணமும் தருகின்றார்களே
அரபு தேசத்து வாழ் மனிதனாக எம்மவரையும் அரவணைத்தே
பணக்காரனாய் மாற்றுவாயெனில்
தாராளமாய் வரவேற்போம்
ஐனநாயக நாடென்றார்களே
முன்னாளில் நாடாளும் மாமனிதர்கள்
மனங்களிலே நியாயம் இன்றி
அத்துமீறும் சகோதர மீனவர்களே
படைப்பிலே இறைவன் பங்கிட்டுதான்
பாடுகளையும் கொடுத்துள்ளானே
தன் கை இருக்க பிறர் கையை நோக்குவதுமேனோ
பாராபட்சம் இன்றி பாவத்தையும்
தேடிக்கொண்டு
திறந்த வீட்டில் அதுவாக உள்ளே நுழைவதைத்தான்
ஜனநாயகம் சமவுரிமை சமாதானம்
என்பீர்களோ
இருப்பதைக் கொண்டு வாழ் இல்லை
இரந்து வாழ்
இயற்கை அன்னை அளித்த துறைமுகம்
உள்ளதெங்கள் நாட்டினிலே
செயற்கையாக மானிடரும் மறைமுகமாய் உருவாக்கமேனே எங்கள் ஊரினிலே
பாடுபட்டு நாங்கள் உழைக்கும் எங்கள்
பாடு எமக்கு வேண்டும்
காலாகாலமாய் தாயெனத் தாங்கும்
கடற்கலங்களும்
காலத்தாலே அழியாமலே காத்திட
துறைமுகமும் வேண்டும்
நன்மையுமுண்டு தீமையும் உண்டு
துறைமுகத்தினாலே
நல் மனதோடு முடிவெடுங்கள் கடலோடும் மீனவர்களே
வெள்ளம் வரும் முன் அணைகட்டல்
தொல்லையில்லையாம்
வெள்ளம் மேவிய பின் மணல் மேடு
அமைத்தல் சிறுபிள்ளைத்தனமாம்
சிந்தித்தே செயல்படுங்கள்
அடிக்கல் நாட்டு முன்
அடுத்து வரும் அழிவினையே
எதிர்த்திடு மனத் தைரியத்துடனே
கரையோரம் தீண்டாமை சிறப்பாமே
கண்டல் தாவரங்களை அழித்தலும்
கருணையற்ற செயலாமே மறவாதே
கன்னமரம்,கண்டல்,கிண்ணை எனப்
பலவுண்டு
உணவு,விறகு,எரிபொருள்,மருந்தென
பலனுமுண்டு
மண்ணரிப்பைத் தடுத்து வடிகட்டியாக
பௌதீகத் தடையாமே
வற்றுப் பெருக்குக் காலமதில் பத்திரமாய் காத்திடுமே
உத்தமனாமிந்த செயற்கைக் கண்டல்
தாவரமாம்
வங்காலை,அரிப்பு,மன்னார்,கல்லடியில்
கட்டுக்கட்டாக கொட்டிக்கிடக்குதாம் கண்டலுமே
நல்லவற்றை பலவுரைத்தேன் நியாயங்களும் எடுத்துரைதேன்
கேட்கச் செவியுடையோன் கேட்கட்டுமே
பார்க்க விழியுடையோன் பார்க்கட்டுமே
எமது நிலம் எமக்கு வேண்டும்
எங்கள் நிழலும் எங்கள் மணலிலே
பின் தொடர்ந்திட வேண்டும்...

ஒரு சொல் சரித்திரம் அப்பா!

ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் பதிவு. மகனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை.
பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய், ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை, பேனாவை ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார். இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.
நேற்று வரை வீட்டில் இருந்ததால் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி இருந்தது. இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது.
”வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்பாவின் நச்சரிப்பு குறையும்” என்று எண்ணிக் கொண்டான்.
நேர்காணலுக்கு கிளம்பினான்.
“கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமாக பதில் சொல்” தெரியவில்லை என்றாலும் தைரியமாக எதிர்கொள், என்று செலவுக்கு கூடுதலாக பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா.
நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன்.
கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை.
கதவு சற்றே திறந்திருந்த தாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடுவது போல் இருந்தது. அதை சரி செய்து கதவை சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.
நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன. தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற் காக குழாயை அப்படியே போட்டுவிட்டுப் போயிருந்தான். தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக் கொண்டிருந்தது.
குழாயை கையில் எடுத்தவன் செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான்.
வரவேற்பறையில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார்கள். மெதுவாக மாடிப்படியில் ஏறினான். நேற்று இரவில் போடப்பட்ட விளக்கு காலை பத்து மணியாகியும் எரிந்து கொண்டிருந்தது.
“விளக்கை அணைக்காமல் செல்கிறாயே?” என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான்.
மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர் கள் இருக்கையில் அமர்ந்திருந்தார் கள். கூட்டத்தைப் பார்த்த மகனுக்கு ஒரே திகைப்பு. “நமக்கு இங்கு வேலை கிடைக்குமா?” என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது.
பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ’வெல்கம்’ என்ற எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான். அதையும் வருத்தத்துடனேயே அதை காலால் சரி செய்துவிட்டு உள்ளே நுழைந்தான்.
அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு நிறைய இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் சும்மா சுற்றிக் கொண்டிருந்தன. ”யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி ஓடுகிறது?” என்ற அம்மாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின் விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர்களுடன் சென்று அமர்ந்தான்.
இளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர்.
இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது மகனுக்கு தெரியவில்லை.
கலக்கத்துடனே நேர்காணல் அதிகாரி முன்புபோய் நின்றான்.
சர்டிபிகேட்டுகளை வாங்கிப் பார்த்த அதிகாரி, அதைப் பிரித்து பார்க்காமலே “நீங்கள் எப்போது வேலைக்கு சேருகிறீர்கள்?” என்று கேட்டார்.
“இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக் கூர்மை கேள்வியா, இல்லை வேலை கிடைத்து விட்டதற்கான அறிகுறியா? என்று தெரியாமல்” குழம்பி நின்றான் மகன்.
”என்ன யோசிக்கிறீர்கள்? என்று பாஸ் கேட்டார்,
நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை.
கேள்வி பதிலில் ஒருவனின் மேலாண்மையை தெரிந்து கொள்வது கடினம்.
அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா மூலம் கண்காணித்தோம்.
இங்கு வந்த எந்த இளைஞனுமே தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள் ஒருவர் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு உள்ளே வந்தீர்கள்.
நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கி றோம்” என்றார்.
அப்பாவின் கண்டிஷன்கள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும். அந்த ஒழுங்கு முறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்த போது நெகிழ்ச்சியாக இருந்தது.
அப்பாவின் மீதுள்ள எரிச்சல் சுத்தமாக தணிந்தது.வேலைக்குச் செல்லும் இடத்திற்கு அப்பாவையும் அழைத்துச் செல்லும் முடிவுடன் சந்தோஷமாக வீடு திரும்பினான் மகன்.
அப்பா நமக்காக எது செய்தாலும் சொன்னாலும் ஒரு சிறந்த எதிர்காலத்திறாக மட்டுமே இருக்கும்!
உளி விழுகையில் வலி என நினைக்கும் எந்த பாறையும் சிலையாவதில்லை, வலி பொறுத்த சில பாறைகளே சிலையாகி ஒளி கூட்டுகின்றன.
நாம் அழகிய சிலையாக உருவாக நமக்குள் இருக்கும் வேண்டாத சில தீய குணங்களை கண்டிப்பால், தண்டிப்பால், சில நேரம் வில்லனாக நமக்கு தெரியும் தந்தை, உளி போன்று வார்த்தைகளால், கட்டுப்படுத்துவதால் தான், நாம் காலரை தூக்கிக்கொண்டுகண்ணாடி முன் நின்று, அவர்கள் உருவாக்கிய சிலையாகிய நம்மை அழகனாக, அழகியாக பார்த்துக் கொள்வது அந்த தந்தை என்ற உளி செதுக்கிய கைங்கர்யமே.
தாய் தன் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு தான் பாலூட்டுவாள், தாலாட்டுவாள், கதை சொல்லி தூங்க வைப்பாள்.
" ஆனால் தந்தை அப்படி அல்ல "
தான் காணாத உலகையும், தன் மகன் காணவேண்டும் என தோள் மீது அமரவைத்து தூக்கி காட்டிக் கொண்டு போவார்.
ஒரு சொல் கவிதை அம்மா!
அதே ஒரு சொல் சரித்திரம் அப்பா!
தாய் கஷ்டப்படுவதை கண்டுபிடித்து விடலாம்.
தந்தை கஷ்டபடுவதை பிறர் சொல்லி தான் கண்டுபிடிக்க முடியும்.
நமக்கு ஐந்து வயதில் ஆசானாகவும், இருபது வயதில் வில்லனாகவும், தெரியும் தந்தை இறந்தவுடன் மட்டுமே நல்ல நண்பனாக பாதுக்காவலராக தெரிகிறார்.
தாய் முதுமையில் மகனிடமோ, மகளிடமோ புகுந்து காலத்தை கடத்தி விடுவாள்.
அந்த வித்தை தந்தைக்கு தெரியாது. கடைசி வரை தனி மனிதன் தான்.
எனவே தாயோ, தந்தையோ உயிருடன் இருக்கும் போது உதாசினப்படுத்திவிட்டு, இறந்தபின் அழுவதால் அவர்களுக்கு எந்த பலனுமில்லைல்லை, பிரயோஜனமுமில்லை.
பிடித்திருந்தால் பகிருங்கள்!

விவாகரத்து

#கணவன்_மனைவி_விவாகரத்து_ வழக்கு....
#நீதிபதி; நீங்கள் இருவரும்
காதலித்துதானே திருமணம்
செய்து கொன்டீர்கள்....
#மனைவி; ஆமா! பெரிய காதல்! நான்
ஏமாந்துவிட்டேன் அய்யா! இவர்
வாயை திறந்தாலே பொய், எதிலும்
உண்மை கிடையாது, தயவுசெய்து
எனக்கு விவாகரத்து
கொடுத்துவிடுங்கள்......
#கணவன்; இவள் பயங்கரமான
ஹிட்லர் பேத்தி அய்யா!
எல்லாவற்றிற்க்கும் கேள்வி
கேட்கிறாள்,அடிக்கடி சந்தேகம்
கொள்கிறாள்....
#நீதிபதி; சைலன்ஸ்,சைலன்ஸ்
சரி உங்கள் விருப்பபடி விவாகரத்து
கொடுத்து விட்டால் உங்கள்
குழந்தையை யார்
வைத்துக்கொள்வீர்கள்...
#கணவன்; இது என்ன கேள்வி
குழந்தை என்னிடம்தான் வளர
வேண்டும் அதுதான் நியாமும்கூட...
#மனைவி; ஹான்! அது எப்படி பத்து
மாதம் கஷ்டபட்டு பெத்தவ நான்
உடனே இவருக்கு
தூக்கிக் கொடுத்திடனும்மா..!!
#நீதிபதி; இதற்கு நீங்கள் என்ன
சொல்கிறீர்கள்.Mr_??
#கணவன்; அய்யா உங்களிடம் ஒரு
கேள்வி கேட்கலாம.?
#நீதிபதி; ம்ம்.கேளுங்க..
#கணவன்; அய்யா! ATMமெஷின்ல
கார்டு சொருகி பணம் வெளியே எடுத்த
பிறகு அந்த பணம் ATMமெஷினுக்கு
சொந்தமா..??
#மனைவி; அடப்பாவி.!!
ஒரே கேள்வியில் தலை
சுற்றி சுருண்டு கீழே விழுந்தார்
நீதிபதி..!!