Wednesday 21 November 2018

சர்வதேச_மீனவர் #தினத்திற்காக#எழுதப்பட்ட_வரிகள்_

நானோ சிறியோன் எதுவுமே அறியேன்
காணும் காட்சி எல்லாம் விதியோ
முத்தென்பார் இலங்கையை மூத்தோர்
முத்துமே விலையாமே முன்னாளிலே முத்தரிப்புதுறையிலே
வெள்ளைக்காரன் சுரண்டினானாம்
கொள்ளையழகுத் திருநாட்டினை
நக்கலாச் சொன்னாளே எங்கள்
வீட்டுப் பாட்டியம்மா
இன்னாளும் மண்ணாகிப் போகுதே
அந்நிய அதிகாரத்தினாலே
கடலிலே மீன் பிடிக்கச் சொன்ன அரசாங்கமே
கடல் எல்லையைத் தாண்டியும்
பிடிக்கச் சொல்லிக் கொடுத்தாயோ
அலையாடும் கடலிலே பலியாக
எம் மக்களும் பல நாளும் வலை
தொலைத்தே கரை சேர்ந்தனரே
பெரிய பெரிய இழுவைப் படகாம்
அய்யோ அம்மா பயமம்மா
விடிய விடிய இழுக்குறானாம்
மீன் வளத்தையம்மா
விரட்டியும் மிரட்டியும் பார்த்து விட்டோம்
விடிந்த பின்னும் ஊரு போய் அவர்கள் சேரவில்லையம்மா
எதிர்த்து நின்றால் வாள் எடுத்து வீசுகின்றான்
படகெதிரே வந்து எங்களையே
மூழ்கடிக்க முனைகின்றான்
உள்நாடும் வெளிநாடும் கைகோர்த்து
விரட்டியடித்தே
விடியும் முன் மடிதல்தான் எங்களின்
வரலாறோ
என்ன வளம் இல்லை எம் ஈழத்திலே
எண்ணை வளமும் இருக்குதெம்
கடலோரத்திலே
பனைமரமும் முடி கவிழ்ந்து முடிவின்
தேடலிலே
மண்வளமும் கெட்டுதானே போகுதே
நாட்டினிலே
பெற்றோலியத்தைத் தோண்டிட
முழுமூச்சாய் முதலீடும்
முண்டியடித்து முற் பணமும் தருகின்றார்களே
அரபு தேசத்து வாழ் மனிதனாக எம்மவரையும் அரவணைத்தே
பணக்காரனாய் மாற்றுவாயெனில்
தாராளமாய் வரவேற்போம்
ஐனநாயக நாடென்றார்களே
முன்னாளில் நாடாளும் மாமனிதர்கள்
மனங்களிலே நியாயம் இன்றி
அத்துமீறும் சகோதர மீனவர்களே
படைப்பிலே இறைவன் பங்கிட்டுதான்
பாடுகளையும் கொடுத்துள்ளானே
தன் கை இருக்க பிறர் கையை நோக்குவதுமேனோ
பாராபட்சம் இன்றி பாவத்தையும்
தேடிக்கொண்டு
திறந்த வீட்டில் அதுவாக உள்ளே நுழைவதைத்தான்
ஜனநாயகம் சமவுரிமை சமாதானம்
என்பீர்களோ
இருப்பதைக் கொண்டு வாழ் இல்லை
இரந்து வாழ்
இயற்கை அன்னை அளித்த துறைமுகம்
உள்ளதெங்கள் நாட்டினிலே
செயற்கையாக மானிடரும் மறைமுகமாய் உருவாக்கமேனே எங்கள் ஊரினிலே
பாடுபட்டு நாங்கள் உழைக்கும் எங்கள்
பாடு எமக்கு வேண்டும்
காலாகாலமாய் தாயெனத் தாங்கும்
கடற்கலங்களும்
காலத்தாலே அழியாமலே காத்திட
துறைமுகமும் வேண்டும்
நன்மையுமுண்டு தீமையும் உண்டு
துறைமுகத்தினாலே
நல் மனதோடு முடிவெடுங்கள் கடலோடும் மீனவர்களே
வெள்ளம் வரும் முன் அணைகட்டல்
தொல்லையில்லையாம்
வெள்ளம் மேவிய பின் மணல் மேடு
அமைத்தல் சிறுபிள்ளைத்தனமாம்
சிந்தித்தே செயல்படுங்கள்
அடிக்கல் நாட்டு முன்
அடுத்து வரும் அழிவினையே
எதிர்த்திடு மனத் தைரியத்துடனே
கரையோரம் தீண்டாமை சிறப்பாமே
கண்டல் தாவரங்களை அழித்தலும்
கருணையற்ற செயலாமே மறவாதே
கன்னமரம்,கண்டல்,கிண்ணை எனப்
பலவுண்டு
உணவு,விறகு,எரிபொருள்,மருந்தென
பலனுமுண்டு
மண்ணரிப்பைத் தடுத்து வடிகட்டியாக
பௌதீகத் தடையாமே
வற்றுப் பெருக்குக் காலமதில் பத்திரமாய் காத்திடுமே
உத்தமனாமிந்த செயற்கைக் கண்டல்
தாவரமாம்
வங்காலை,அரிப்பு,மன்னார்,கல்லடியில்
கட்டுக்கட்டாக கொட்டிக்கிடக்குதாம் கண்டலுமே
நல்லவற்றை பலவுரைத்தேன் நியாயங்களும் எடுத்துரைதேன்
கேட்கச் செவியுடையோன் கேட்கட்டுமே
பார்க்க விழியுடையோன் பார்க்கட்டுமே
எமது நிலம் எமக்கு வேண்டும்
எங்கள் நிழலும் எங்கள் மணலிலே
பின் தொடர்ந்திட வேண்டும்...

No comments:

Post a Comment