Thursday, 14 May 2026

சீமான்03

 ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் அண்ணாமலை ஆற்றிய உரையை நேற்று பார்த்தேன்.


சர்வதேச அளவில் படித்த அறிஞர்களுக்கு மத்தியில் இந்தியாவின் சவால்களை அவர் விளக்கிய விதம், உலகளாவிய பார்வையும் உள்ளூர் புரிதலும் கொண்ட ஒரு தேர்ந்த ஆளுமை அவர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.


உலகின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்கள் ஒருவருக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது என்றால், அவர் முன்வைக்கும் அரசியல் வெறும் சத்தமல்ல, அது காத்திரமான அறிவுசார் வாதம் என்று அர்த்தம்.


அண்ணாமலை என்ற ஒற்றைப் பெயர் இன்று வெறும் அரசியலல்ல, அது ஒரு மாபெரும் எதிர்பார்ப்பு. ஆரோக்கியமான அரசியலின் ஒற்றை நம்பிக்கை.


இத்தனை ஆண்டுகாலம் ஆபாச வார்த்தைகளும், தரம் தாழ்ந்த தனிமனித விமர்சனங்களும் மட்டுமே அரசியல் என்று சுழன்று கொண்டிருந்த மரபை முதலில் உடைத்தெறிந்தவர் அண்ணாமலை.


அரசியலைத் தெளிவான புள்ளிவிவரங்களோடும், தர்க்கரீதியான வாதங்களோடும் அணுகிய அவரது பாணி, தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு அறிவுசார் புரட்சி.


எத்தனையோ தலைவர்கள் வந்து சென்றிருக்கலாம், ஆனால் அரசியலை ஒரு சாக்கடை என்று ஒதுங்கி நின்ற படித்த இளைஞர்களை, வாருங்கள் நாட்டை மாற்றுவோம்" என்று களத்திற்கு இழுத்து வந்த காந்தசக்தி அண்ணாமலை. அவர் முன்னெடுத்த அந்த சமரசமற்ற போர்க்குணமும், தெளிவான அரசியலும் தமிழ்நாட்டில் வேறு எந்த அரசியல்வாதியிடமும் நான் கண்டதில்லை.  


தமிழக பாஜகவின் ஐம்பதாண்டு கால வரலாற்றை, அண்ணாமலைக்கு முன் அண்ணாமலைக்கு பின் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.


டெல்லி அதிகார மையத்தின் பார்வையைத் தமிழகத்தின் பக்கம் திருப்பியவர் அவர். தமிழக அரசியலின் நாடித் துடிப்பை தேசியத் தலைவர்கள் துல்லியமாக உணரச் செய்ததில் அண்ணாமலையின் பங்கு முக்கியமானது.


ரங்கராஜ் பாண்டேயின் சமீபத்திய ஒரு நேர்காணலில், தமிழ்நாட்டின் அடுத்த எதிர்க்கட்சி திமுக அல்ல, பிஜெபி தான். அடுத்தகட்ட அரசியல் விஜய் Vs உதயநிதி' அல்ல, 'விஜய் Vs அண்ணாமலை என்று தான் மாறும். பாஜக சரியாக, முறையாக பயன்படுத்திக்கொண்டால் இது நிச்சயம் நடக்கும் என்றார்.


உண்மை தான்.


உதயநிதியின் அரசியல் வியர்வை சிந்திப் பெற்ற வெற்றியல்ல. அது விளம்பரங்களால் மட்டுமே ஊதிப் பெரிதாக்கப்பட்ட வெற்று பலூன். பதவி, அதிகாரம் என அனைத்தும் அவருக்குத் தங்கத் தட்டில் வைத்து வழங்கப்பட்ட இலவசங்கள். எத்தனையோ பில்டப்புகள் கொடுக்கப்பட்டாலும், நிஜத்தில் உதயநிதி என்பவர் ஆளுமையே இல்லாத ஒரு வெறும் அட்டைக் கத்தி.


ஆனால்,


நான் யாரையும் குறைத்து மதிப்பிடப் போவதில்லை. உதயநிதியும் தன் குறைகளை சரி செய்து, தன்னை மெருகூட்டி ஒரு சிறந்த அரசியல்வாதியாக எதிர்காலத்தில் மாறலாம். ஆனால் அதற்கு அவர் இன்னும் நிறைய உழைக்க வேண்டியுள்ளது. நிறைய தன்னை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. இதெல்லாம் எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


ஆனால் விஜய் முதலமைச்சராகத் தன் பணிகளைத் தொடரும்போது, ஒவ்வொரு நிலையிலும் அவரைத் தரம் பார்க்கவும், குறைகளை அறிவுபூர்வமாக சுட்டிக்காட்டவும் அண்ணாமலை என்கிற ஒரு ஆளுமைமிக்க எதிர்க்கட்சித் தலைவர் அவசியம்.


விஜய்யின் அரசியல் என்பது பெரும்பாலும் உணர்ச்சிகளைச் சார்ந்தது, ஆனால் அண்ணாமலையின் அரசியல் தரவுகளைச் சார்ந்தது.


வரும் காலங்களில் நிர்வாக ரீதியான குளறுபடிகளை விஜய் அரசு சந்திக்கும்போது, அதைத் தட்டிக்கேட்கும் முதல் ஆளாக அண்ணாமலை உருவெடுத்தால், நிச்சயம் 2031-ம் ஆண்டு அவருக்கானதாக இருக்கும்.


அண்ணாமலையின் பலமே அவரது Disruptive Politics தான். எஸ்டாபிளிஷ்மென்ட் அரசியலை உடைத்தெறிந்து, ஆளுங்கட்சியின் ஊழல்களைத் தரவுகளுடன் 'வாட்ச்' முதல் 'ஃபைல்கள்' வரை அம்பலப்படுத்திய அவரது வேகம், திராவிடக் கட்சிகளுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக இருந்தது.


அவர் மீண்டும் முழுநேர அரசியலில் களம் இறங்கினால், அதே அதிரடி தவெக அரசுக்கும் தொடரலாம். பழைய அரசியலைத் துவம்சம் செய்த அதே 'டேட்டா' பவர், புதிய அரசுக்கும் ஒரு தலைவலியாக மாறலாம். 70 வருட கால திராவிடக் கட்சிகளையே திணறடித்த அந்த வேகம், மீண்டும் முழு வீச்சில் வெளிப்பட்டால் தவெக அரசின் ஒவ்வொரு நகர்வும் அண்ணாமலையினால் மிகக் கடுமையாகச் சோதிக்கப்படலாம்!


ஆனால் இது எல்லாம் நடக்குமா….?


இந்தக் கேள்விக்கான பதில் அண்ணாமலை விட்டுச் சென்ற அந்த வெற்றிடத்திலேயே ஒளிந்திருக்கிறது.


அண்ணாமலை என்கிற ஒற்றை மனிதனைச் சுற்றித்தான் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமிழக பாஜகவின் ஒட்டுமொத்த அரசியலும் சுழன்றது. முன்பெல்லாம் டிஜிட்டல் திரையில் இருந்து தெருமுனை வரை அதிரடி காட்டிய கட்சி, இன்று தன் அடையாளத்தையே தொலைத்து, மேய்ப்பன் இல்லாத மந்தையைப் போல சிதறிக் கிடக்கிறது


அண்ணாமலையைப் போலத் தார்மீகத் தலைவன் இன்று அந்தக் கட்சியில் இல்லை. டெல்லி தலைமையின் நேரடித் தொடர்பும், தமிழக இளைஞர்களைத் தன்பக்கம் இழுக்கும் காந்தசக்தியும் அண்ணாமலைக்கு மட்டுமே கைவந்த கலை. ஒருவேளை அவர் நிரந்தமாக  ஒதுக்கப்பட்டால் அல்லது ஓரங்கட்டப்பட்டால், தமிழகத்தில் பாஜக 'நோட்டா'வுடன் போட்டி போடும் கட்சியாக மாறும் காலம் வெகுதூரத்தில் இல்லை.


என்னிடம் சில உபி நண்பர்கள் கேட்பார்கள், அப்படியென்றால் உங்கள் அண்ணாமலையின் அரசியல் இனி அவ்வளவு தானா? என்று..


No. Never.


அண்ணாமலையின் அமைதி என்பது வெறும் மௌனம் அல்ல, அது ஒரு மகா புயலுக்கான மிரட்டலான காத்திருப்பு! களம் காணப் பிறந்த ஒரு பிறவித் தலைவன் ஒருபோதும் அடங்கிப் போவதில்லை.


சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவையாய், பழைய கணக்குகளைத் தீர்க்கவும் புதிய வரலாற்றைப் படைக்கவும் அவர் முன்னைவிட அதீத வீரியத்தோடு விஸ்வரூபம் எடுப்பார். அப்போது தமிழக அரசியல் களம் இதுவரை பார்த்திராத ஒரு பிரம்மாண்ட அதிர்வைச் சந்திக்கும்.


அண்ணாமலைக்கு முன்னால் இப்போது இரண்டு பாதைகள் உள்ளன.


ஒன்று, டெல்லியின் அதிகார மையத்தில் ஒரு முக்கியப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, தமிழக அரசியலைத் தூரத்திலிருந்து இயக்குவது.


மற்றொன்று, தமிழகத்திலேயே தங்கி, அரசின் மீதான நேர்மையான, ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்து, தன்னை ஒரு மாற்று சக்தியாக நிலைநிறுத்துவது.


அவர் தமிழகத்திற்கு கிடைத்த வரமா அல்லது இந்தியாவிற்கே வழிகாட்டப் போகும் பேராளுமையா என்பதை காலம் முடிவு பண்ணும்.


எது எப்படி அமைந்தாலும்,


அடுத்த பத்து ஆண்டுகளில் இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிக்கும் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக அண்ணாமலை உருவெடுப்பார் என்பது மட்டும் சர்வ நிச்சயம்.!


அவரின் கோடானு கோடி ரசிகர்களைப் போல நானும் அந்த பொன்னான நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

No comments:

Post a Comment