காதலை சொல்லாமல் சொன்ன த்ரிஷா! விஜய் பதவியேற்பு விழா சம்பவம்..இதை பார்த்தீங்களா?
தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வருபவர், த்ரிஷா. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் ஹாட் டாப்பிக்குகளுள் ஒருவராக இருக்கிறார்..
காரணம், இவருக்கும் விஜய்க்குமான உறவு பேசு பொருளாகி இருப்பதுதான். இதையடுத்து, அவரது சமீபத்திய பதிவு அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.
விஜய்யின் பதவியேற்பு விழாவிற்கு வந்த த்ரிஷா!
நடிகராக மட்டும் இருந்த விஜய், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக உயர்ந்திருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் எனும் கட்சியை தொடங்கிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக பாேட்டியிட்டார். 233 தொகுதிகளில் போட்டியிட்ட தவெக, 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட விஜய் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து, மே 10ஆம் தேதியான நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்..
இந்த விழாவில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபனா, நண்பர்கள் சஞ்சீவ், ஜெய், கிரிஷ்-சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், முக்கிய நபராக நடிகை த்ரிஷாவும் கலந்து கொண்டார். அவருக்கு முன் வரிசையில் இருக்கை வைக்கப்பட்டிருந்தது. விழா நடக்கும் போது, நிகழ்விடத்திற்கு வந்த த்ரிஷா, தனக்கு தெரிந்தவர்களை பார்த்ததும் ஆறத்தழுவி ஹாய் சொன்னார். பின்பு, விஜய்யின் தாயாரான ஷோபாவை கட்டிப்பிடித்தார்.
அதே சேலையில் வெளியிட்ட பதிவு..
விஜய்யின் முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்கு த்ரிஷா வந்தது குறித்து பலரும் பலவாரான கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்த விழாவிற்கு த்ரிஷா, ஒரு நீல நிற புடவையும், கொண்டையில் மல்லிப்பூ சுற்றியும் வருகை தந்தார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதே கெட்-அப்பில் சில போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அதில் கேப்ஷனில், "காதல் எப்போதும் சத்தமானதாக இருக்கும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதையடுத்து, இந்த பதிவானது வைரலாகி வருகிறது. ஏற்கனவே த்ரிஷாவிற்கும் விஜய்க்கும் இருக்கும் உறவு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், த்ரிஷா இப்படிப்பட்ட பதிவை வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணீர் வடித்த த்ரிஷா..
விஜய், நேற்று "ஜோசப் விஜய் எனும் நான்" என்று கூறி முதலமைச்சராக பதவியேற்ற போது, கீழே அமர்ந்திருந்த த்ரிஷா கொடுத்த ரியாக்ஷன் வைரலாகிறது. விஜய் பதவியேற்கும் போது, த்ரிஷா ரொம்பவும் எமோஷனலாகி கண் கலங்கினார். இந்த ரியாக்ஷன் குறித்து பலரும் பேசி வருகின்றனர்..
இருவருக்கும் என்ன உறவு?
விஜய்க்கும் த்ரிஷாவிற்கும் என்ன உறவு என்பது குறித்து பலருக்கும் கேள்விகள் இருக்கிறது. இருவரும் 'கில்லி படத்தில் முதலில் ஒன்றாக நடித்தனர். இந்த ஜோடி நன்றாக இருக்கவே தொடர்ந்து ஆதி, திருப்பாச்சி, குருவி உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்தனர். அதன் பிறகு எந்த காரணத்தினாலோ இருவரும் ஒன்றாக சேர்ந்து நடிக்கவே இல்லை. 15 ஆண்டுகளுக்கு பிறகு லியோ திரைப்படத்தில்தான் இருவரும் ஜோடியாக நடித்தனர். அந்த படத்திலும் இருவருக்கும் இருந்த லிப் லாக் சீன், சர்ச்சையை ஏற்படுத்தியது. ஐட்டம் டான்ஸே ஆட மாட்டேன் என்று சாெல்லியிருந்த த்ரிஷா, திடீரென விஜய்யின் கோட் படத்தில் 'மட்ட' பாடலுக்கு மஞ்ச புடவையில் நடனமாடியது வைரலானது.
இதற்கிடையில், விஜய்யின் மனைவி சங்கீதா, தனக்கு விஜய்யிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று கூறி மனு கொடுத்திருந்தார். அதில் அவர் விஜய் மீது வைத்திருந்த குற்றச்சாட்டுகள் பலவித சர்ச்சைகளை கிளப்பியது. விஜய்க்கும் வேறு ஒரு பிரபல நடிகைக்கும் உறவு இருப்பதாகவும், இதை கைவிட்டுவிடுமாறு கூறிய போது, அதற்கு ஒப்புக்கொண்டு அதிலேயே அவர் தொடர்ந்து இருந்ததால், அவை விட்டு பிரிந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
அந்த நடிகையுடன் விஜய் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ததோடு,பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதாகவும் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதால் தனக்கு தொடர் அவமானங்கள் ஏற்பட்டதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார்.
சங்கீதாவுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி வசதிகளை விஜய் குறைத்ததோடு அவருடைய தனிப்பட்ட சுதந்திரத்தையும் அவர் கட்டுப்படுத்தியதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது, இருவருக்கும் இடையிலான திருமண உறவு வெறும் காகித அளவில் மட்டும் இருப்பதாகவும், கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.
திருமணத்தை மீறி உறவு நார்மலைஸ் செய்யப்படுகிறதா?
விஜய்யும் த்ரிஷாவும் தங்களது உறவு குறித்து எங்கும் வெளியில் சொன்னதில்லை. தவெக ஆதரவாளர்கள் பலர், த்ரிஷாவுடனான விஜய்யின் உறவு குறித்து பிறர் விமர்சனங்களை முன் வைக்கும் போது, அவரை 'அண்ணி' என்று குறிப்பிட்டு பேசி வருகின்றனர். நேற்றைய விழாவில் கூட விஜய்யின் மனைவியான சங்கீதாவோ, அவரது பிள்ளைகளான ஜேசன் சஞ்சையோ, திவ்யா சாஷாவோ வரவில்லை. அவர்கள் இல்லாதது குறித்து விஜய்யோ அவரது குடும்பத்தினரோ பேசவில்லை. ஆனால், த்ரிஷா வந்த போது அவருக்கு அறிந்தே அறியாமலோ பல பேர் வரவேற்பு அளிக்கின்றனர். பல ஆண்டுகளாக சிங்கிளாக இருக்கும் த்ரிஷா, இப்படி இன்னொருவருடைய கணவனுக்கு ஆதரவாக இருப்பதும், தன் மனைவியை விட்டுவிட்டு தனக்கு தேவையான பிறரை விஜய் தனது பதவியேற்பு விழாவிற்கு அழைத்ததும் பலரால் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. பலரும், "இது போன்ற உறவுகள் இன்றைய காலத்தில் நார்மலைஸ் செய்யப்படுகிறதா?" என்கிற கேள்வியும் எழுகிறது. சில தவெக ஆதரவாளர்களும் கூட, இது குறித்து அதிருப்தி தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment