Saturday 29 July 2023

அன்பின் உறவுகளே!

 அன்பின் உறவுகளே! தேன் தமிழ் ஓசை என்ற இந்த செய்தி ஊடகத்தின் உரிமையாளரும் கட்டுப்பாட்டாளரும் நானேதான். இதன் நீட்சியாக தேன் தமிழ் தடாகம் என்ற இணைய தொலைக்காட்சி சேவையையும் நிறுவி இருந்தேன். நிதி முடக்கம், தொழில்நுட்பவியளார் பற்றாக்குறை இவைகளினால் அதனை தற்காலி கமாக நிறுத்திவிட்டு, யூடூப் சனலையும். அத்தோடு இணைய வானொலியையும் நடத்தி வருகின்றேன். மன்னாரில் அதுவும் பேசாலையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு, பேசாலையில் கலையகம் கொண்டு இயங்கிவந்தது தேன் தமிழ் ஓசை. பேசாலை மீனவர்கள் பயன் அடையவேண்டும் என்ற உன்னத குறிக்கோளு டன், என் ஆரம்பகால அரசியல் நண்பனான அமைச்சர் டக்ளஸின் உதவியல் பேசாலையில் படகு பாதுகாப்பு துறையை, டின்மீன் தொழிற்சாலை மீளுருவாக்கம் மற்றும் இந்திய மீனவ ஆக்கிரமிப்பு இவைகளில் கவனம் செலுத்த பேசாலைக்கு அவரை அழைத்துவந்து எனது வானொலி மூலமாக பரப்புரை வழங்கினேன்.

போலியான தமிழ் தேசியவாத பேசாலை நபர்களினால் எனது வானொலி பேசாலையில் இயங்க நெருக்கடிகள் நடந்தன, இறுதியில் நடந்தது என்ன? ஊரின் பணத்தில், தமிழ் தேசியவாத உணர்வில் அரசியலுக்கு வந்த பேசாலை மகனே கோவில் காணியை அட்டை போட்டு மறைமுகமாக சிங்களவ னுக்கு விற்றதுமல்லாமல், இப்போ கம்பரெலியா பணத்தில் சொகுசு ஜீப்பில், காணி பூமியில் பவணி வருகின்றார்கள்! கொஞ்சம் யோசித்து பாருங்கள்? ஐக்கிய தேசிய கட்சியின் , ஐக்கியதேசிய அரசின் ஆதரவில், மாவட்ட நீதிபதியாக இருந்த, கயுஸ் அவர்களை மிஞ்சும் அளவுக்கு, இவர்கள் வளர்ந்தது எப்படி? இவர்கள் என்னை மட்டும் தமிழ் தேசிய எதிப்பாளர் என முத்திரை குத்தலாமா?

இது எல்லாம் போகட்டும்! பேசாலையில் உள்ள இளம் பெண்களும், ஆண்களும் ஊடகதுறையில் அனுபவம், அறிவு இல்லாதலால், அதனை பயிற்றுவிப்பதற்கு, ஊடக அனுபவம் பெற்ற ஒரு மலையாக் முஸ்லிம் மகனை ஊருக்கு அழைத்துவந்து அவர்களுக்கு பயிற்ச்சி அளிக்க முற்பட்டேன், முஸ்லிம் ஆதரவு மீடியாக என மேற்குறிக்கப்பட்டவர்களினால் முத்திரை குத்தப்பட்டு எதிர்ப்புகளை சந்தித்தேன். என்னைப் பொறுத்தவரை மன்னாருக்கென, அதிலும் குறிப்பாக பேசாலை மக்களுக்கு ஒரு காத்திரமான ஊடகமும் அது பற்றிய ஒரு விழிப்புணர்வும் தேவை!

பேசாலை மீன்வளம் கொண்டது, காலுக்கடியில் இல்மனைட் படலம் உள்ளது, எண்ணைய்வளம் உள்ளது, இது போன்ற இயற்கை அரண்கள் கொண்டது, சர்வதேசமே மன்னார் தீவை அபகரிக்கபார்க்கின்றது, மன்னரை விற்று அரசியல் இலாபம் பெற சிங்களம் துடிக்கின்றது. இந்தியா இதற்கு முன்னணியில் உள்ளது. இதனை எல்லாம் வெளிச்சம் போட்டு காட்ட நமக்கான ஓர் ஊடகம் தேவை! பேசாலை சொந்தங்களே இது பற்றிய உங்கள் கருத்து என்ன? ஒன்றாக இணைந்து நமது மன்னார் மண்ணை, காடுகளை, கரையோரங்களை, எமது இருப்பை காப்பாற்றுவதில் உங்கள் கருத்து என்ன? செயல்பாடு என்ன? என்னோடு இணைந்து செயலாற்ற வாருங்கள். முதலில் மன்னாரை போலி தமிழ் தேசியவாத அரசியல்வாதிகளிடமும் சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்தும் காப்பாற்றுவோம்! இல்லை எனில் திரும்பி போகும்போது மன்னார் பேசாலை நமக்கற்றதாக காட்சிதரும் நன்றி பேசாலைதாஸ் 004792278528

Like
Comment

No comments:

Post a Comment