Friday 21 July 2023

APHA (Action for Perfection Humanity Ahead)

APHA (Action for Perfection Humanity Ahead

                                                   மேற்படி  இந்த தன்னார்வ தொண்டு நிறுவணமானது, யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதி குறிப்பாக பாசையூர், கரையூர், நாவாந்துறை இடங்களில் உள்ள, விசேட தேவை கொண்ட பிள்ளைகளுக்கு, அதாவது சாதாரண பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியாத பிள்ளைகளு க்கு விசேட கல்வி வழங்க ( Special Need Education) முன்வந்துள்ளார்கள். அதாற் கான பாடசாலை இடம், எல்லாம் தெரிவு செய்யப்பட்டுள்ளது, விசேட தேவை கொண்ட பிள்ளைக ளையும் சந்தித்து விபரங்கள் சேகரித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

                                                  இந்த கல்வி நிலையத்தை கொண்டு நடத்த  APHA நிதி உதவிகளை வழங்குகின்றபோதும், வெளிநாடுகளில் உள்ள பாசையூர், கரையூர், நாவாந்துறை மக்களிடம் இருந்தும், நிதி உதவிகளை எதிர்பார்க்கின் றார்கள். விடேச தேவை கொண்ட பிள்ளைகளுக்கான தளபாடங்கள்.கல்வி உபகரணங் கள் கொள்வணவு செய்ய நான்கு இலட்சம் ரூபா உடனடியாக எதிர் பார்க்கின்றார்கள், அதைத் தொடர்ந்து மாதாமாதம் 40,000ரூபா விசேட தகைமை கொண்ட ஆசிரியர்களுக்கு சிறு உதவியையும் எதிர் பார்க்கின் றார்கள்.

                                                  இந்த தொண்டு நிறுவணத்தின் உள்ளூர் தொடர்பாள ராக பாசையூரைச் சார்ந்த திருமதி மதிவதனி அவர்கள் இருக்கின்றார்கள். கல்வி நிறுவணமும் பாசையூரை அண்டி அமைய இருப்பதால், வெளிஊரில் வதியும் பாசையூர் மக்களிடம், அதிலும் குறிப்பாக உங்கள் அப்பா மற்றும் அவர்களின் அமரரான சகோதரங்கள் பெயரிலும், ஓர் நினைவு நிலையமாக இதனை கொண்டு நடத்தலாம் என நான் யோசிக்கின்றேன். முதல் கட்டமாக நான்கு இலட்சமும் பின்னர் மாதாமாதம் 40.000 ரூபாவும் நீங்கள் அனுப்பினால் மிகுதி செலவுகளை  APHA நிறுவணம் பொறுப்பெடுத்துகொள்ளும்.

                                             அமரரான ஸ்டீபன் அலெக்சாந்தர் மற்றும் அமரர்களான  அவரது சகோதரங்களின் நினைவு நிலையாமாக இது செயல்படும் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன். மற்றது அவர்களின் உருவப்படங்களும் அங்குள்ள ஹோலில் வைக்கப்படும். இது தொடர்பாக மதிவதனி அவர்களை தொடர்பு கொள்ளலாம். நான் நினைக்கின்றேன் திருமதி மதிவதனி அவர்கள் ஒருவகையில் டண்சனின் அண்டியாக இருக்கலாம் என நினைக்கின்றேன்.

                                            கீத் இது தொடர்பாக உங்கள் சகோதரங்களையும், றோபட், பயஸ், லீன் மற்றும் அலோசியஸ் அண்ணன் மகனுடனும் கருத்துக் களை பரிமாறிக்கொண்டு எனக்கு தெரியப்படுத்துங்கள் 

                                                                                                    நன்றி

                                                                                                   அன்புடன் தேவதாஸ்

எமக்கு கிடைக்கப்பட்ட பிள்ளைகளின் புகைப்படங்கள் இன்னமும் பல எமக்கு வந்து , இந்த நிறுவணத்தின் வெளிநாட்டு முகவர்களில் ஒருவனாக நானும் செயல்படுகின்றேன். நீங்களும் இன்னும் ஆர்வமுள்ள பாசையூர் கரையூர் நாவாந்துறை அன்பர்களும் இணைந்து கொள்ளலாம்.









No comments:

Post a Comment