Wednesday 17 May 2023

 இடைவிடா சகயமாதா என்று அழைக்கப்படும் இந்த திரு உருவப்படம் நற்செய்தியாளர் லூக்கா வரைந்ததாக பாரம்பரிய வரலாறு கூருகின்றது. ஆனால் இதில் இடம் பெற்றுள்ள தூய மிக்கேல் அதிதூதர்,  கபிரியேல் தூதர் மற்றும் பைசான்டியா கிரேக்க எழுத்துக்கள் புனித லூக்கா வரந்த ஓவியத்தில் இல்லாததால், இந்த ஓவியம் கீழ்த்திசை ஓவிய மரபில் இருந்து வந்திருக்காலம் என ஊகிக்கப்படுகின்றது. இந்த ஓவியம் கிரிட் தீவில் இருந்து 1325- 1480 இடைப்பட்ட காலத்தில், ரோமாபுரிக்கு கொண்டுவரப்பட்டது.

 அன்னையின் வேண்டுதலுக்கு ஏற்ப இந்த ஓவியம், ரோமாபுரியில் உள்ள மரியன்னை ஆலையத்துக்கும், புனித யோவான் ஆலையத்திற்கும் நடுவில் அமைந்துள்ள புனித மத்தேயு ஆலையத்தில் வைக்கப்பட்டது. 1798 இல் பிரெஞ்சு படை ரோமாபுரியை தாக்கியதால் இந்த படம் அங்கிருந்து அகற்றப்பட்டு, மீண்டும் புனித பாப்பரசர் ஒன்பதாம் பத்தினாதர். 1866 ஏப்ரல் 29 திகதி ஊர்வலமாக புனித அல்போன்சா ஆலையத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்ௐஎ ஸ்தாபிக்கப்பட்டது.   

 அன்னையை நம்பி வரும் அநேக பிள்ளைகளுக்கு, வேண்டும் வரம் அருளும் அன்னையின் இந்த திரு உருவப்படம், இடைவிடாமல் ஏராளமான புதுமைகளை புரிந்துவருகின்றது. இந்த ஓவியத்தின் அதி அற்புத சக்தி எதுவெனில், எத்திசையில், எந்தபக்கம் இருந்து நோக்கினாலும், அன்னையின் கனிந்த இரக்கமான பார்வை நம்மை பார்த்தவண்ணமாக இருப்பதே இந்த அற்புத ஓவியத்தின் மகிமையாகும். அன்னையின் உதவி கேட்டு, அன்னையால் கைவிடப்பட்டவர்கள் உலகிலே யாருமே இதுவரை இல்லை. தாயாம் திருச்சபையானது ஒவ்வொரு புதன் கிழமையை இடைவிடா சகாய தாய்க்கு அர்ப்பணித்துள்ளது. அன்னைக்கென விசேடாமான இந்த வைகாசி மாதத்தில், வையகம் வாழும் மாந்தர் யாவரும், நவநாள் பக்தி முயற்ச்சியில் ஈடுபட்டால், சகல கஸ்தி வாதைகள், துன்பங்கள் நீங்கி, அண்டிவரும் அடியவர்கள் அமைதிபெறுவர். அன்னையிடம் வேன்டுதல் செய்து, அன்னையால் கைவிடப்பட்டதாக உலகில் யாரும் சொல்ல, இதுவரை கேள்விப்பட்டதில்லை, என்பதே உண்மையாகும்!

                                                                                                    இப்படிக்கு அன்னையின் தாஸ்                                              

No comments:

Post a Comment