Wednesday 19 April 2023

தைப்பெண்கள் அமைப்பு

                      தைப்பெண்கள் அமைப்பு

ஆடை தைப்பதையே அடிப்படையாக, வாழ்வாதார தொழிலாக, எண்ணிப் பிழைக்கும், ஏழை விதைவைப்பெண்கள், கைவிடப்பட்ட ஏழை அபலைகள், ஏழை இளம் பெண்களின், வாழ்வாதரத்தை உயர்த்தும் எண்ணத்தில் உருவாக் கப்பட்டதே இந்த தைப்பெண்கள் அமைப்பாகும். நோர்வே நாட்டில் இருந்து செயல்படும், தேன் தமிழ் ஓசையின் இயக்குணர், பேசாலைதாஸின் அயரா முயற்ச்சியின் விளைவாக உருவாக்கப்பட்டதே இந்த தைப்பெண்கள் என்ற அமைப்பாகும். அவர் தன் எண்ணத்தை என்னிடம் எடுத்து சொன்னபோது, அதற்கு முழு ஆதாரமாக, அர்ப்பணமாக நானும், என் சேவையை இந்த தைப்பெண்கள் அமைப்புக்கு செய்வேன் என்ற உறுதிமொழி வழங்கினேன்.

                                                                    தற்பொழுது, தைப்பெண்கள் அமைப்பானது, புத்தளம் மாவட்டத்தில், சிறிய அளவில் தன் முயற்ச்சியை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக ஐந்து பெண் பிள்ளைகளை தெரிவு செய்து, அவர்களுக்கு தயல் பயிற்ச்சி வழங்கி வருகின்றோம். மிக தரமான, மலிவான நுளம்பு வலை உற்ப த் தியில் ஈடுபட்டுள்ளோம். இந்த திட்டம் தற்போது வெற்றியளித்து வருகின் றது. அதில் கிடைக்கும் வருமானம், அதை உற்பத்தி செய்யும் ஏழை பிள்ளக ளுக்கே வழங்குகின்றோம்.

                                                                   நுளம்புவலை உற்பத்தியோடு நின்றுவிடாமல், வேறு பல துணி உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றோம். உதாரணமாக, குழந்தைகளுக்கான அணைத்துணி, பெண்களு க்கான சுகாதார துணிவகை, வயோதிபருக்கான சுகாதர அணை துணிகள், படுக்கை துணி விரிப்பு, தலையனை உறைகள் இப்படி பல உற்பத்தி பொருட் களை உருவாக்கி, சந்தைப்படுத்தும் முயற்ச்சியில் இறங்கியுள்ளோம். எமது எண்ணங்களில் ஒன்றாக, ஏழை மக்களின் பொருளாதார கொள்வனவு சக்தி க்கு ஏற்ப மலிவாக சந்தைப்படுத்துவதை அடிப்படையாக கொண்டுள்ளோம்.

                                                               எமது தைப்பெண்கள் அமைப்பை வண்ணி, மலை யகம் இவைகளுக்கும் விஸ்தரிக்கும் நோக்கோடு,  ஐந்து பெரிய தையல் இயந்திரங் களை நாம் கொள்வனவு செய்துள்ளோம். இந்த முதலீடுகளுக்கும், தையல் பயிற்ச்சியாளரின் மாதாந்த வேதனம், மற்றும் மின்சாரகட்டணங் களை, தேன் தமிழ் ஓசையின் இயக்குணர் திரு பேசாலைதாஸ் அவர்களே பல சிரமங்க ளுக்கு மத்தியில் செய்து வருகின்றார்.

                                                              அன்பான புலம்பெயர் உறவுகளே! உங்கள் உறவினர்கள், யாராவது ஏழை விதவைகளாக, கைவிடப்பட்ட பெண்களாக இருந்து, அவர்களுக்கு ஒரு சுய தொழிலை உருவாக்கி கொடுக்க ஆசைப்படுகி ன்றீர்களா? தயங்காமல் எங்களொடு தொடர்புகொள்க, உங்கள் பயனாளி களின்  அங்கீகராத்தோடு நாம் செயலாற்ற தயாராக உள்ளோம். உங்கள் பயனாளிகள் மூலமாக எம்மோடு தொடர்புகளை பேணுவது உங்களுக்கான நம்பிக்கை ஆதாரமாகும். பண உதவி செய்வதைவிட, அவர்களே தம் சொந்த காலில் நின்று, உழைக்கும் நம்பிக்கையை ஊட்டுங்கள்!

                                                                எமது அமைப்பின் செயல்பாடுகள் பற்றி மேலதி கமாக அறிய விரும்பினால், தேன் தமிழ் ஓசையின் இணையத்தளத் தில், சமூக சேவை பக்கத்தில் சென்று நீங்கள் அறிந்து கொள்ளமுடியும். www.theantamilosai.com  சுயசார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தல் மூலமாக நமது தாயகத்தையும், ஏழை உறவுகளின் வாழ்வையும் உயர்த்து வோம் வாருங்கள்! கைகொடுங்கள்! 

                                                                           நன்றி

                                                                                                          Sister: Evon Felicia Fernando

                                                                                                            ஒருங்கிணைப்பாளர்

                                                                                                         தைப்பெண்கள் அமைப்பு 

 

No comments:

Post a Comment