Tuesday 10 January 2023

வி. குமார் இந்தியாவின் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்

 


இசையுலக ஜாம்பவான்களான கே.வி.மகாதேவன், எம்எஸ்.விஸ்வநாதன் என்ற சிகரங்கள் உச்சத்தில் இருந்த நேரத்தில்' நீர்க்குமிழி' படத்தில் அறிமுகமான மெல்லிசை சக்ரவர்த்தி” என அறியப்பட்ட வி. குமார் இந்தியாவின் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் அவர்களின் பிறந்த தினம். (ஜுலை 28, 1934 ) இவரது பெற்றோர் வரதராஜு-தனபாக்கியம் ஆவார்கள்

.
திரைத்துறைக்கு வருவதற்கு முன் தொலைபேசி இலாகாவில் பணியாற்றிய இவர் இங்கு பணிபுரிந்து கொண்டிருக்கும்போதே இசைக்குழு அமைத்து இசைக்கச்சேரிகள் நடத்திவந்ததோடு நாடகங்களுக்கும் இசை அமைத்து வந்தார். இவர் இசை அமைத்த முதல் நாடகம் ‘கண் திறக்குமா”. பிறகு ஓ.எம்.ஐ.ஏ, விவேகா ஃபைன் ஆர்ட்ஸ், மற்றும் மணக்கால் மணி குழுவினரின் நாடகங்களுக்கு இசை அமைத்து வந்தார்.
மாநில கணக்காயர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த அனந்த சயனம் என்ற நண்பர் மூலமாக ராகினி ரிக்ரியேசன்ஸ்-இல் கே.பாலசந்தரின் அறிமுகம் கிடைத்தது. ராகினி கிரியேசன்ஸின் ”வினோத ஒப்பந்தம்” என்ற நாடகத்திற்கு முதன்முதலாக இசை அமைத்தார். ராகினி ரிக்ரியேசன்ஸில் தொடர்ந்து இசை அமைத்து வந்தபோது, அதன் இயக்குநர் கே.பாலசந்தருக்குத் திரைப்படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. அப்படம் “நீர்க்குமிழி”.
டிஎம்.சௌந்தராஜன், யேசுதாஸ், ஜெயச்சந்திரன், எஸ்பி. பாலசுப்பிரமணியம், பி.சுசீலா, எல்ஆர்.ஈஸ்வரி உள்ளிட்ட பலரின் சூப்பர் ஹிட் பாடல்கள் குமாரின் இசையில் வெளிவந்துள்ளன.
மெல்லிசை மன்னரின் இசையில் இருந்து வேறுபட்ட தளத்தில் குமாரின் பாடல்கள் ஒலித்தன..
மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் பிஸியாக இருந்த காலத்திலேயே அவரை வி.குமார் பாட வைத்தார். 'வெள்ளி விழா' படத்தில் ' உனக்கென்ன குறைச்சல், நீயொரு ராஜா, வந்தால் வரட்டும் முதுமை' என்ற அப்பாடலுக்கான குரல் தேர்வில் அவருக்கு இருந்த இசைஞானம் புரியும். கேள்வி பாணியில் பாடல்களை வடிவமைப்பதில் குமார் வல்லவராக இருந்துள்ளார்.
'மண்ணுக்கு மேலாடை' என்ற பாடலில் பத்துக்கு மேலாடை என கேள்வி எழுப்பி பதினோன்றேயாகும் என சுரதாவின் கிண்டல் தொனிக்கும் வரிகளுக்கு இசை தந்தார் குமார். இதே போன்று ' நல்ல பெண்மணி' படத்தில் அப்படியொரு பாடல்.
இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்
கே.ஜே.யேசுதாஸீம், சுவர்ணாவும் இணைந்து இப்பாடலைப் பாடியிருந்தனர்.
ஜெயச்சந்திரனோடு ஸ்வர்ணா இணைந்து 'தூண்டில் மீன்' படத்தில் பாடிய இப்பாடல் மிக மிக அரிதான பாடலாகும்.
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ
அச்சம் தடுக்கின்றதோ ....
இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள். ஸ்வர்ணாவின் குரலுக்கு ரசிகையாகிப் போவீர்கள். இதே படத்தில் பி.சுசீலா, எஸ்பி.பாலசுப்ரமணியம் பாடிய சூப்பர் ஹிட் பாடலான 'வாழ்வில் சௌபாக்கியம் வந்தது' பாடலும் இடம் பெற்றுள்ளது.
இன்றளவும் யேசுதாஸ் சூப்பர்ஹிட் பாடல் என சொல்லப்படுவதில் இப்பாடலுக்கு முக்கிய இடமுண்டு. அவர் காதல் கைகூட இந்த பாடலும் துணைபுரிந்ததாக யேசுதாஸ் கூறியுள்ளார்.
இப்பாடல் இசை ரசிகர்களுக்கு அவர் வழங்கிய பரிசு என்றே சொல்லலாம். 'தேன் சிந்துதே வானம்' படத்தில் இடம் பெற்ற இப்பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். அப்படியான ஒரு இசைக்கோர்ப்பு. யேசுதாஸ் மிகவும் ரசித்துப்பாடிய இப்பாடல் வாலியின் வளமிக்க சொற்களால் கட்டப்பட்டது.
வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்
வண்ண விழிப் பார்வையெல்லாம் தெய்வீகம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்
இன்பங்கள் உருவாகக் காண்போம்
குரலோசை குயிலோசையென்று
மொழிபேசு அழகே நீ இன்று
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன் . . . .
. மிக ஆர்ப்பாட்டமாக பாடக்கூடிய எல்ஆர்.ஈஸ்வரியை 'காதோடு தான் நான் பாடுவேன்' என ஆர்ப்பாட்டமின்றி பாட வைத்து விட்டு, மிக அமைதியாக பாடக்கூடிய பி.சுசீலாவை ' நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்' என பாடவைத்து வித்தியாசம் காட்டினார்.
'இருகோடுகள்' படத்தில் இடம் பெற்ற பி.சுசீலா, ஜமுனா குரலில் ஒலித்த 'புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்' பாடல் நவராத்திரி நாட்களை ஞாபகப்படுத்துகிறது. ஆனால், இப்பாடல் இரண்டு மனைவிகள் பாடுவது போல் அமைக்கப்பட்டது.
கே.ஜே.யேசுதாஸ் பாடியதிலேயே மிக வேகமான பாடல் 'ஏழைக்கும் காலம் வரும்' படத்தில் இடம் பெற்றுள்ளது. 'மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு '. அழகான சந்தக்கட்டுடன் அமைந்த இப்பாடல் அவரின் இளமைக்கால குரலை ரசிக்க வைக்கும். அதே போல எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இனிய குரலில் 'ஓராயிரம் கற்பனை', ' படைத்தானே பிரம்மதேவன்', ' பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு', 'பொன்னை நான் பார்த்ததில்லை' உள்ளிட்ட பல இனிய பாடல்கள் நமது ஞாபகத்தொட்டிலை ஆட்டி விடும்.
'நவக்கிரகம்' படத்தில் இரண்டு பாடல்களை ஏ.எல்.ராகவன் பாடியுள்ளார். அதில் 'எல்லாமே வயித்துக்குத் தாண்டா' பாடல் ராகவனின் ஹிட் ரகம். ஆச்சி மனோராமா பாடிய “வா வாத்யாரே ஊட்டாண்ட” பாடலுக்கு இசை வி.குமார் தான். இப்பாடலைத் தொடர்ந்தே அவருக்கு சென்னை பாஷையில் பாடவும், நடிக்கவும் நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.
'ஆயிரம் பொய்' படத்தில் எல்ஆர்.ஈஸ்வரி இணைந்து மனோராமா பாடிய 'காவேரி தண்ணியில் குளிச்சவடி' பாடலாகட்டும், தாராபுரம் சுந்தராஜனுடன் மனோரமா பாடிய 'தமிழ் விடு தூது ' பாடலாகட்டும், 'பொன்வண்டு' படத்தில் பி.சுசீலா, எல்ஆர்.ஈஸ்வரி, ஸ்வர்ணா கூட்டணியில் 'அடி வாடியம்மா' பாடலாகட்டும் அவர் எத்தனை பாடகர்களின் கூட்டணியில் வெற்றிப்பாடல்களை உருவாக்கினார் என அறிய முடிகிறது.
'சதுரங்கம்' படத்தில் வாணி ஜெயராம் பாடிய 'மதனோற்சவம் ரதியோடு தான்' , ' நாடகமே உலகம்' படத்தில் இடம் பெற்ற 'சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்', கஸ்தூரி விஜயம் படத்தில் இடம் பெற்ற 'மழைக்கால மேகம்' ஆகிய பாடல்கள் இன்றளவும் வாணியின் ரசிகர்களால் நேசிக்கப்படுகிறது.
'சிவப்புகல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான்குட்டி', 'நேற்று நீ சின்ன பப்பா', 'கல்யாண சாப்பாடு போடவா?', 'நித்தம் நித்தமொரு', 'எங்கெல்லாம் வளையோசை' போன்ற ஏராளமான பாடல்களை வி.குமார் இசையில் டிஎம்.செளந்தராஜன் பாடியுள்ளார்.
குமார் இசையில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மூன்று படங்கள் அரங்கேற்றம், ராஜநாகம், நூற்றுக்கு நூறு. இப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள் காலத்தால் மறக்க முடியாதவை. ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது, நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன், தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஆகிய 3 பாடல்கள் வி.குமாரின் இசைக்கு சான்றாக உள்ளது.
பாடகி சுவர்ணாவை காதலித்த மணந்த வி.குமாருக்குப் பிடித்த பாடகி பி.சுசீலா தான். ஏனெனில் அவரது இசையில் அதிகப்பாடல்களைப் பாடியவர் சுசீலா தான். இந்த பட்டியலைப் பாருங்கள் உங்களுக்கே அது புரியும்.
'ஒரு நாள் யாரோ', 'கன்னி நதியோரம்', 'அடுத்தாத்து அம்புஜத்தை',' உன்னை தொட்ட காற்று', 'மூத்தவள் நீ கொடுத்தாய்', 'ஆயிரமாயிரம் ஆண்டின்', 'மயக்கத்தை தந்தவன்', ' கண்ணனுக்கு கோபமென்ன',' நீ நினைத்த நேரமெல்லாம்', 'புலவர் சொன்னதும்', 'தில்லையிலே சபாபதி', 'திருக்கோயில் தேடி', 'கண்களால் நான் வரைந்தேன்', 'அச்சம் விட்டு நாணம்', 'சேலை கட்டும் கடையை', 'காலம் நமக்கு தோழன்',' கை நிறைய சோழி',' பல்லாண்டு பல்லாண்டு' உள்ளிட்ட பல பாடல்களை பி.சுசீலா தனித்தும், பல பாடகர்களுடன் இணைந்தும் பாடியுள்ளார்
150 தமிழ்ப் படங்களுக்கும் 5 தெலுங்குத் திரைப்படங்களுக்கும் இசை அமைத்தார். இவரது மனைவி சொர்ணாவும் ஒரு பின்னணிப்பாடகி..
"மெல்லிசை மாமணி" என புகழப்பட்ட வி.குமாரின் பாடல்கள் இசைஞானி பாடல்களைப் போலவே நினைவில் உலவக் கூடியவை. பல பாடல்கள் நெஞ்சத்தை விட்டு நீங்காதவை.
இசையமைத்த திரைப்படங்கள்
1. நீர்க்குமிழி
2. நாணல்
3. அவளும் பெண்தானே
4. ஆயிரத்தில் ஒருத்தி
5. காரோட்டிக்கண்ணன்
6. கஸ்தூரி விஜயம்
7. மஞ்சள் முகமே வருக
8. தேன்சிந்துதே வானம்
9. ஏழைக்கும் காலம் வரும்
10. ஆசை 60 நாள்
11. இது இவர்களின் கதை
12. கணவன் மனைவி
13. மிட்டாய் மம்மி
14. நல்ல பெண்மணி
15. பணக்கார பெண்
16. அன்று சிந்திய ரத்தம்
17. முன்னூறு நாள்
18. ஒருவனுக்கு ஒருத்தி
19. சொன்னதைச் செய்வேன்
20. சொந்தமடி நீ எனக்கு
21. தூண்டில் மீன்
22. அன்னபூரணி
23. இவள் ஒரு சீதை
24. கண்ணாமூச்சி
25. மக்கள் குரல்
26. சங்கரி
27. காலம் ஒரு நாள் மாறும்
28. இணைந்த துருவங்கள்
29. மங்கல நாயகி
30. அலங்காரி
31. நாடகமே உலகம்
32. அவளுக்கு நிகர் அவளே
33. கலியுகக் கண்ணன்
34. ஒண்ணே ஒண்னு கண்ணே கண்ணு
35. ராஜ நாகம்
36. சுவாதி நட்சத்திரம்
37. தாய் பாசம்
38. அரங்கேற்றம்
39. கட்டிலா தொட்டிலா
40. மல்லிகைப் பூ
41. பெண்ணை நம்புங்கள்
42. பெத்த மனம் பித்து
43. பொன்வண்டு
44. மேஜர் சந்திரகாந்த்
45. ஜானகி சபதம்
46. நினைவில் நின்றவள்
47. புத்திசாலிகள்
48. பொம்மலாட்டம்
49. எதிர் நீச்சல்
50. ஆயிரம் பொய்
51. இரு கோடுகள்
52. நிறைகுடம்
53. நவகிரஹம்
54. பத்தாம் பசலி
55. பெண் தெய்வம்
56. நூற்றுக்கு நூறு
57. பாட்டொன்று கேட்டேன்
58. புதிய வாழ்க்கை
59. ரங்க ராட்டினம்
60. வெகுளிப்பெண்
61. டெல்லி டு மெட்ராஸ்
62. மாப்பிள்ளை அழைப்பு
63. உனக்கும் எனக்கும்
64. வெள்ளிவிழா
65. தெய்வகுழந்தைகள்
66. எல்லாரும் நல்லவரே
அவளுக்கு நிகர் அவளே [1974]
காரோட்டிக்கண்ணன் [1975]
ஜானகி சபதம் [1975]
ஆயிரத்தில் ஒருத்தி [1975]
எல்லோரும் நல்லவரே [1975]
தேன் சிந்துதே வானம் [1975]
அன்று சிந்திய ரத்தம் [1976]
கணவன் மனைவி [1976]
இவள் ஒரு சீதை [1978]
கலியுகக் கண்ணன்
மக்கள் குரல்
மீண்டும் மகான்
மங்கள நாயகி
தூண்டில் மீன்
நாடகமே உலகம்
நங்கூரம்
ஏழைக்கும் காலம் வரும்
மிட்டாய் மம்மி
நல்ல பெண்மணி
பணக்காரப்பெண்
கண்ணேமூச்சி
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு
அலங்காரி
பெண்ணை நம்புங்கள்
கட்டிலா தொட்டிலா
காலம் ஒரு நாள் மாறும்
அவரை இன்றைய நாளில் போற்றுவோம்
பாடல்... 6
கட்டுரை.. 1
படங்கள்.. 2
நன்றி
அன்புடன்
நிர்வாக குழு

No comments:

Post a Comment