முறையான கல்வியைப் பெறாமல் ஒரு மகத்தான கணித மேதையாக ராமானுஜனை மாற்றியது எது? தேவியின் வழியாக பிரபஞ்சத்தின் இரகசியங்களை அவர் எப்படி அறிந்தார் ?என்பதையும் தெரிந்துக்கொள்ள மேலும் படியுங்கள்.
இந்தியாவில் மக்கள் தேவியின் முன் அமரும்போது, வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய அபாரமான நுண்ணறிவு கொண்டவர்களாக பல தேவி பக்தர்கள் இருந்தனர்.
.ஆனால், அவர்கள் அங்கிருந்து வெளிவந்துவிட்டால், சிறிது நேரத்திற்கு முன்பு கூறியது பற்றி ஏதும் அறியாதவர்களாக இருக்கிறார்கள். இதற்கு ஒரு பிரபலமான உதாரணம் ராமானுஜன்.
ராமானுஜன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சிறந்த கணிதவியலாளர். அவர் முறையான கல்வியை மிகக் குறைவாகவே பெற்றிருந்தார். அவர் சுயமாகவே பெரும்பாலும் கற்றுக்கொண்டார். ஆனால், அவர் கேம்பிரிட்ஜ் சென்று அங்கு பல்வேறு கணிதவியலாளர்களுடன் பணியாற்றினார். பல கணித கோட்பாடுகளை எழுதிய அவர், அவற்றை தனது தெய்வமான 'நாமகிரி' வழங்கியதாகக் கூறினார். உலகின் சிறந்த கணிதவியலாளர்கள் அவருடைய சூத்திரங்களையும் தேற்றங்களையும் புரிந்துகொள்ள பல ஆண்டுகள் ஆனது. அவர் ஆரம்பத்தில் இந்தியாவிற்கு வெளியே பயணம் செய்ய மறுத்துவிட்டார். ஆனால், பின்னர் அவரது தாயாரின் கனவில், அவர் இங்கிலாந்து செல்வதற்கு நாமகிரி தேவி அனுமதி வழங்கியபோது, அதற்கு ஒப்புக்கொண்டார்.
1920ல் ராமானுஜன் மரணப் படுக்கையில் இருந்தபோது, தனது வழிகாட்டியான ஆங்கிலக் கணிதவியலாளர் GH ஹார்டிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், இதுவரை கேள்விப்பட்டிராத பல புதிய கணிதக் கோட்பாடுகளை குறிப்பிட்டிருந்தார். அவரது வார்த்தைகளில் சொன்னால் - "தூங்கும்போது எனக்கு ஒரு அசாதாரண அனுபவம் ஏற்பட்டது. வழிந்தோடும் இரத்தத்தில் ஒரு சிவப்புத் திரை உருவானது. அதை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு கை திரையில் எழுதத் தொடங்கியது. நான் முழுமையாக கவனம் செலுத்தினேன். அந்த கை பல நீள்வட்ட தொகையீடு கோட்பாடுகளை எழுதியது. அவை என் மனதில் பதிந்துவிட்டன. நான் எழுந்தவுடன், அவற்றை எழுதிவிட்டேன்.”
இந்த 90 ஆண்டுகளில் அவரது கணித கோட்பாடுகள் என்னவென்று யாருக்கும் புரியவில்லை. ஆனால், அது மகத்தான ஒன்று என்று அவர்கள் அறிந்திருந்தனர். இந்த கோட்பாடுகள் கருந்துளையின் பல்வேறு செயல்பாடுகளை விவரிக்கிறது என்பதை 2010ல் தான் கண்டுபிடித்தனர். 90 ஆண்டுகளுக்கு முன்பு, கருந்துளைகள் பற்றி யாரும் பேசவில்லை - அந்தச் சொல் கூட புழக்கத்தில் இல்லை - ஆனால் ராமானுஜன் தனது மரணப் படுக்கையில் அதற்கு ஒரு கணித கோட்பாட்டை உருவாக்கினார். மேலும் அவர், "என் தேவி தான் அதை எனக்கு கொடுத்தார்" என்று கூறினார். "தேவி எனக்கு கொடுத்தாள்" என்று ராமானுஜன் கூறும்போது, அவருக்கு தேவிதான் வாசலாக இருந்திருக்கிறாள்.
படித்ததில் பகிர்ந்தது
No comments:
Post a Comment