Tuesday 10 January 2023

எல்லாமே இருந்தும்

 எல்லாமே இருந்தும்

ஏதோ இல்லாத மாதிரி ஒரு கணம் தோணும் தெரியுமா?
நமக்கு வேண்டிய அத்தனையும் பக்கத்துல இருக்கும்.
எடுத்துக்க தோணாது.
எல்லாத்தையும் ஒதுக்கிட்டு கொஞ்சம் நேரம் தனியா இருந்தா என்ன ன்னு தோணும்.
ரொம்ப பிடிச்சவங்க பக்கத்துல இருந்தாலும்
ரொம்ப நேசிக்கறவங்க பேசிட்டே இருந்தாலும்
ஒரு சின்ன 'gap' நிச்சயம் தேவைப்படும்.
அந்த சமயத்துல எல்லோர் மீதும் வெறுப்பு எல்லாம் வராது.
கொஞ்சம் தனியா இருக்கேனே விடேன் என்ற மன்றாடல் தான் இருக்கும்.
அந்த 'தனிமை' யில் என்ன தான் இருக்கும் என்ற ஆராய்ச்சி தேவையற்றது.
யாரோ ஒருவர் மீதின் கோவமோ
யாரோ ஒருவர் செய்த துரோகமோ
யாரோ ஒருவர் தந்த வேதனையோ
இப்படி எதுவும் இருக்காது.
மனம் சோர்வாக இருக்கும்
அவ்வளவு தான்.
'Empty' ஆக இருக்கும்.
எதையும் யோசிக்காமல்
யாரையும் காயப்படுத்தாமல்
எவரையும் சாராமல்
எந்தவிதமான கட்டுப்பாடுகளுக்கும்
உட்கொள்ளாமல்
மனித மனம் அவ்வபோது
சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளும்
அவ்வளவு தான்.
அந்த நேரத்தில் அவர்கள் காட்டும் attitude பார்த்து
எரிச்சலை பார்த்து
மௌனத்தை பார்த்து
கத்தலை பார்த்து
இவர்கள் இப்படிதான் என்று முடிவுக்கு வந்துவிடாதீர்கள்.
ஏனெனில் அடுத்த சில நிமிடங்களிலியே அவர்களே வந்து என்ன ஏது என்று கேட்க ஆரம்பிப்பார்கள்.
அதுவரை நீங்களே அவர்களுக்காக கட்டமைத்த எண்ணங்களை மாற்ற வேண்டியிருக்கும்.
மனச்சிதறல்கள்
மனசிதைவுகள் சுகந்தமாக மாற அடிக்கடி அவர்கள் இது போல மாறி கொள்கின்றனர்.
மாற்றிக் கொள்கின்றனர்.
புத்துணர்வுடன் இருக்க விரும்புகிறார்கள்.
விடுங்களேன் சிறிது நேரம்..
'வந்துவிடுவார்கள்'.
1 நபர் இன் விளக்கப் படமாக இருக்கக்கூடும்
Verona Sharmila மற்றும் 50 பேர்
22 கருத்துகள்
விரும்பு
கருத்துத் தெரிவி

22 கருத்துகள்

மிகவும் தொடர்புடையவை


No comments:

Post a Comment