Tuesday 10 January 2023

ஹெலன் ஜைராக் ரிச்சர்ட்சன் கான்

 

1960-1980 காலகட்டத்தில் பாலிவுட்டில் நடனத்தால் கொடிகட்டி பறந்தவர் ஹெலன் என்ற ஹெலன் ஜைராக் ரிச்சர்ட்சன் கான். 21.11.1938-இல் பிறந்தவர். ”காபரே குயின்” அழைக்கப்பட்டவர். அக்கால இந்தித் திரைப்படங்களில் இவரது காபரே டான்ஸால் பெரும் புகழடைந்தார். தமிழிலும் சங்கே முழங்கு [1971], பாக்தாத் திருடன், மர்ம வீரன் [1956], பக்த ராவணா [1958], மாய மனிதன் [1958], உத்தம புத்திரன் [1958], நான் சொல்லும் ரகசியம் [1959] போன்ற பல படங்களில் இவரது அதிரடி ஆட்டத்தைக் காணலாம். இவரது இந்திப்படங்களில் இவருக்குப் பின்னணி பாடியவர் ஆஷா போன்ஸ்லே.
ஒரு ஆங்கிலோ இந்தியன் தந்தைக்கும் பர்மாவைச் சேர்ந்த தாய்க்கும் பர்மாவில் பிறந்தவர். ரோஜர் என்ற சகோதரனும் ஜெனிபர் என்ற சகோதரியும் உண்டு. இரண்டாம் உலகப் போரின்போது இவர் தந்தை இறந்தபோது இவரது குடும்பம் 1943-ஆம் ஆண்டு பம்பாய்க்குக் குடிபெயர்ந்தது. பாலிவுட்டில் இவரது குடும்ப நண்பரான குக்கு என்பவரின் உதவியால் இவரது 19-ஆவது வயதில் 1951-இல் குரூப் டான்சராக “ஆவாரா, ”ஷபீஸ்டான்” போன்ற படங்களில் நடித்தார். இவருக்கு மிகப்பெரிய புகழைப் பெற்றுக்கொடுத்த படம் 1957-இல் வெளிவந்த “ஹௌரா பிரிட்ஜ்” என்ற படமாகும். இதன் பின்னர் மிகவும் பிரபலமடைந்தார். இதில் இடம்பெற்ற ‘மேரா நாம் சின் சின் சூ’ என்ற பாடல் மிக பிரபலம். எக்காலத்தவரும் போற்றும் மிகப் பிரபலம் பெற்ற ‘ஷோலே’ படத்திலும் இவர் நடனமாடியுள்ளார்.
1957 முதல் 1973 வரை இயக்குநர் பி.என்.அரோரா என்பவருடன் வாழ்ந்து வந்தார். எட்டு வருடத்திற்குப்பின் 1981-இல் சலீம் கான் என்பவரது இரண்டாம் தாரமானார். இவர் பிரபல இந்தி நடிகர்கள் சல்மான் கான், சொகைல் கான், அர்பாஸ் கான் ஆகியோரின் தந்தையாவார். சலீம் கான் – ஹெலன் தம்பதிகளுக்குக் குழந்தைகளில்லை. அதனால் அர்ப்பிதா பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இந்தித் திரைப்பட உலகம், ‘கேபரே’ நடன அமைப்புகளுக்குப் பெயர் பெற்றது.
கேபரே பாடல் காட்சிகளில் மட்டுமே நடித்து, கதாநாயகிகளுக்கு இணையாகப் பேசப்பட்ட ஒரே நடிகை ஹெலன் மட்டுமே. இந்த 2022நவம்பர் 21-ஆம் தேதி தனது 84-ஆவது வயதில் காலடி எடுத்து வைத்திருக்கும் அவர், தன் இளமைக் காலத்தில் பல ஆண்களின் கால்களைத் தாளம் போட வைத்தவர்.
‘ஹவ்ரா பிரிட்ஜ்’ படத்தில் ‘மேரா நாம் சின் சின் சூ’ என்ற பாட்டில் ஆரம்பித்த அவருடைய பயணம், ரசிகர்களுக்கு சந்தோஷத்தையும், தயாரிப்பாளர்களுக்கு வசூலையும் வாரி வழங்கியது என்று சொன்னால் அது மிகையில்லை. அவர் ஆடிய பாடல்கள் வெற்றியடையக் கைகொடுத்தவர், பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே. ‘பியா து அப் தோ ஆஜா’ (கேரவன்), ‘ஆஜ் கி ராத்’ (அனாமிகா), ‘யே மேரா தில்’ (டான்) உள்ளிட்ட பல வெற்றிப் பாடல்கள் இவர்களின் கூட்டணியில் உருவானவையே!

No comments:

Post a Comment